Posts Tagged ‘போதைப் பொருட்கள்’

ஜாபர் சாதிக் விவகாரம் – சகோதரர்கள் தலைமறைவாக உள்ள நிலை, தொடரும் விசாரணை (7)

மார்ச் 25, 2024

ஜாபர் சாதிக் விவகாரம்சகோதரர்கள் தலைமறைவாக உள்ள நிலை, தொடரும் விசாரணை (7)

ஜாபர் சாதிக்கின் வீட்டின் சீல் நீக்க போட்ட மனு: முன்னர் நோட்டீஸ் ஒட்டியதை, சாத்தின் தாய் கிழித்துப் போட்டாள் என்ற செய்தி வந்தது[1]. அதே போல, இப்பொழுதும் ஏதாவது ஏற்படுமோ என்று தெரியவில்லை[2]. வீட்டில் சோதனை நடந்த போது, சாட்சிகளுடன் தான் அதிகாரிகள் நடத்துவர். பிறகு, அப்பொழுது யார் இருந்தது என்ற கேள்வி எழுகிறது. இதற்கிடையே, ஜாபர் சாதிக் வீட்டில் போடப்பட்டுள்ள சீலை அகற்றக்கோரி டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக்கின் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது[3].  முக்கியமான விசயத்தை விட்டு, எப்படியெல்லாம், இடையில் திசைத் திருப்பப் படுகிறது என்பதையும் கவனிக்கலாம். உண்மையில், இவ்வாறெல்லாம் சட்டமீறல் காரியங்கள் எல்லாம் செய்யாமல், தாய் தடுத்திருக்கலாம். ஆனால், இப்பொழுது, தெரிந்தும், சட்டத்தை மதிக்காமல், நோட்டீஸைக் கிழித்து எறிகிறாள் என்றால், அவர்கள் ஏதோ இந்திய சட்டங்கள் எல்லாம் தமக்கு அமூலாகாது என்று சொல்லுவது போல உள்ளது.

சதானந்தம் என்ற கூட்டாளி: இதற்கிடையில், சென்னையில் விசாரணை நடத்திய போது, ஜாபர் சாதிக் அளித்துள்ள வாக்குமூலம்: “சென்னை பெருங்குடியில், நானும் என் நண்பரான சதானந்தமும் நடத்தி வந்த, போதைப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலையில், வெளிநாடுகளுக்கு உணவு பொருட்கள் அனுப்பியது தொடர்பாக, ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ரசீதுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை உணவு பொருட்கள் அல்ல; போதை பொருள் கடத்தியதற்கான ரசீதுகள். எங்கள் கூட்டாளிகள், திருச்சி மற்றும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளை சேர்ந்த இவர்கள் தான், எங்கள் தொழிலை விரிவுபடுத்தியவர்கள். வெளிநாடுகளுக்கு போதை பொருள் கடத்தியதில், என்னை விட என் சகோதரர் முகமது சலீம் தான் மூளையாக செயல்பட்டு வந்தார். மலேஷியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா என, வெளிநாட்டு தொடர்புகள் அனைத்தையும், முகமது சலீமே கவனித்து வந்தார். வி.சி., நிர்வாகியாக இருந்த அவருக்கு, தமிழகத்தில் செயல்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. “

பேரீச்சம் பழமும், போதைப் பொருளும்: ஜாபர் சாதிக் தன்னுடைய வாக்குமூலத்தில் தொடர்ந்து கூறியது,  “அந்த வகையில், சென்னை அண்ணா நகரில் மிகவும் முக்கியமான நபர்களின் பின்னணியில் போதைப்பொருள் கடத்தல் நடக்கிறது. இவர்களுடன் என் தம்பிக்கு தொடர்பு உள்ளது. மற்றொரு தம்பி மைதீன், சினிமாவில் நடித்து வருகிறார். அவர் வாயிலாக, கோலிவுட்டில் போதை பொருள்சப்ளைசெய்துள்ளோம். எங்களின் வாடிக்கையாளர்களாக சில நடிகர், நடிகையர், கல்லுாரி மாணவர்கள், .டி., நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் உள்ளனர். அவர்களுக்கு எல்லாம் பேரீச்சம் பழத்தில் வைத்து போதை பொருட்களை விற்பனை செய்தோம்[4]. இதுபற்றி வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக, பேரீச்சம் பழம் இறக்குமதி தொழிலும் செய்து வந்தோம்[5]….”

கோலிவுட் தொடர்பு: ஜாபர் சாதிக் தன்னுடைய வாக்குமூலத்தில் தொடர்ந்து கூறியது,  ‘இதற்கு கோலிவுட்டில் எங்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்த முக்கிய நபர் தான், ‘ஐடியா’ கொடுத்தார். பேரீச்சம் பழம் வியாபாரத்திலும் நல்ல லாபம் கிடைத்தது. இவ்வாறு வாக்குமூலத்தில் ஜாபர் சாதிக் தெரிவித்துள்ளார். ஜாபர் சாதிக்கின் சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க, அவர்களுக்கு எதிராக, ‘லுக் அவுட்’ நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அடிக்கடி செல்லும் இடங்கள் குறித்து, அதிகாரிகளிடம் ஜாபர் சாதிக் தெரிவித்துள்ளார். இருவரும் விரைவில் சிக்குவர் என, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். பலமுறை வாக்குமூலம் கொடுத்து, தங்களை வற்புருத்தி அவ்வாறு வாங்கிக் கொண்டனர் என்று, மனு தாக்குதல் செய்வதும் உண்டு. இதெல்லாம், வழக்கமாக, வழக்கறிஞர்கள் செய்யும் வேலைகள் தான். அரசு அதிகாரிகள் எந்த அளவுக்கு கஷ்டப் பட்டு, வழக்கை நிலைநிறுத்த, ஆதாரங்களை சேகரித்து வலுசேர்க்கும் நிலையில், சிறிய விசயங்களை வைத்து, முக்கியமான விசயத்தையே மறக்கும் படி அல்லது ஓரங்கட்டும் முறையில், வேறு பிரச்சினையைக் கொண்டு வரும் சாதுர்யமும், வக்கீல்களில் உண்டு.

பேரீச்சம் பழம் மற்றும் போதை மருந்து வியாபாரம் சேர்ந்து நடந்தது: பேரீச்சம் பழம் வியாபாரம் மற்றும் அப்பழங்களில் போதை மருந்து வைத்து விற்பனை செய்யப்பட்டது எல்லாம் திகைப்பாக இருக்கிறது. பழங்கள் விற்ப்பது மற்றும் பழங்கள் உள்ளேன் போதை மருந்து விற்பனை, ஆக இரண்டு வகை முறைகளும் நடந்து வந்ததும் அதிர்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு, இவையெல்லாம் மக்களுக்கு சென்று அடைவது, அதைவிட மிக கொடுமையான சமூகத்தை பாதிக்கும் காரியம் என்று சொல்ல வேண்டி இருக்கிறது. மாணவர்கள் படிப்பது, முன்னேற மற்ற பரீட்சைகளை எழுதுவது போன்றவற்றில் எல்லாம் கவனம் செலுத்தாமல், இவ்வரான விவகாரங்களில் சிக்கிக் கொள்வது மிகவும் வருத்துவமாக உள்ளது. இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு இந்த போதை பொருள் விற்கும் காரியம் அதர்மம், தனிமனிதனை, குடும்பத்தை, சமூகத்தை சீரழிக்கும் கயமைத் தனம் என்றே அடையாளம் காணவேண்டியுள்ளது.

போதை மருந்து வியாபார யுக்தி என்ன?: போதை மருந்து மனிதனை, குடும்பத்தை, சமூகத்தை, ஏன் பல சமூகங்களை சீரழக்கிறது என்பது தெரிந்தும், அது ஏன் ஊக்குவிக்கப்படுகிறது, பல முறைகளில் மறைத்து வியாபாரம் செய்யப்படுகிறது, அத்தகைய முறைகளை கையாளுபவர்கள் எப்படி தொழில் நுட்பங்களை கூறுகின்றனர் என்பதெல்லாம் கூட கவனிக்க வேண்டிய விஷயங்களாக இருக்கின்றன. ஏனெனில் இக்காலத்தில் இவ்வாறு எந்த பொருளையும் விற்க்க வேண்டும் என்றால், அதற்கு ஏதோ ஒரு வகையில் விளம்பரம் தேவைப்படுகிறது. ஆனால் போதை மருந்து விவகாரம் என்பது, அவ்வாறு விளம்பரத்துடன் செய்யப்படும் வியாபாரம் அல்ல. மிகவும் ரகசியமாக அதனை உபயோகிப்பவர்கள் யார் என்று கண்டறிந்து அல்லது தொடர்ந்து அதன் உபயோகத்தில் கட்டுண்டுக் கிடக்கும் அடிமைகளை கண்டறிந்த வியாபாரம் செய்பவர்கள் தான் அதிகமாக உள்ளனர். ஏதோ ஒரு வகையில் பாதைக்கு உட்பவர்கள் தான் இதனை விற்பவர்களாகவும் மாறுகின்றனர். அனைவரும் கண்காணித்து, அவ்வாறான போதைப் பொருளை கையாள்கிறார்கள் என்றறிந்து, அவர்களையே ஏஜென்டுகளக்கி விடுகின்றனர். அதனால் அத்தகைய வியாபாரம் செய்யும் போதை மருந்துஜஏஜென்டுகளை, மிகவும் அக்கறையாக அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு வேண்டியவை எல்லாம் கொடுக்கிறார்கள். ஆகையால் தான் இவ்வியாபாரத்தை, மிகவும் ரகசியமாக செய்து வருகிறார்கள், அதே நேரத்தில் தீவிரமாகவும் நடைபெற்று வருகிறது.

இந்தியாவை குறிவைக்கும் போதை மருந்து சக்திகல்கூட்டங்கள்: இந்தியா 140 கோடி மக்கள் தொகையை கொண்ட நாடாகும் பலவித பொருளாதார பிரச்சனைகள் கொண்டிருக்கும் நாடு. இன்றைய அளவில் எல்லாவித பிரச்சனைகளையும் தாங்கிக் கொண்டுதான் தொடர்ந்து முன்னேறி வருகிறது. சுதந்திரத்திற்கு பிறகு எல்லைப் பகுதியில் அதிகமான ஊடுருவங்கள் குறிப்பாக பாகிஸ்தான் சைனா என்று ஆரம்பித்து இப்பொழுது பர்மாவிலிருந்து அகதிகள் போர்வையில் முஸ்லிம்கள் ஊடுருவி வருகிறார்கள். அதே போன்ற ஊடுருவல்கள் வடகிழக்கிலும் இருக்கின்றன. ஆனால் அவற்றுடன் போதைப் பொருளும் சேர்ந்து இருக்கிறது. அதுதான் பிரச்சினை. வடமேற்கில் இருந்து வரும் ஊடுருவல்கள் தான் மற்றும் வட பாகிஸ்தான் பகுதிகளில் போதை மருந்து உற்பத்தி, கடத்தல், விநியோகம், வியாபாரம், என்றெல்லாம் செய்து வரும் கூட்டங்களும் ஊடுருவல்கார்களுடன் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். இதனால் தான் பல விஷயங்கள் பொதுப்படையாக பேச முடிவதில்லை. நாட்டு நலன் கருதாமல், விரோதத்துடன் செயல்படுபவர்கள் இவ்விவகாரங்களில் ஒன்றாகிறார்கள். சமூகத்தைச் சீரழிப்பது என்பது தான் அவர்களது குறிக்கோளாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

20-03-2024


[1] குமுதம்,சென்னை வீட்டிற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக் மனுத்தாக்கல்,  Mar 19, 2024 – 20:10

[2] https://kumudam.com/Jaffer-Sadiq-Remanded-To-14-Days-Custody – google_vignette

[3]  https://www.maalaimalar.com/news/national/zafar-sadiq-remanded-to-14-days-court-custody-in-drug-trafficking-case-708748

[4] மாலைமலர், கோடி கோடியாக கொட்டிய பணத்தை ஓட்டல்சினிமாவில் முதலீடு செய்த ஜாபர் சாதிக், Byமாலை மலர்19 மார்ச் 2024 3:53 PM

[5] https://www.maalaimalar.com/news/state/jaffer-sadiq-invested-money-hotel-and-cinema-708725

ஜாபர் சாதிக் விவகாரம் – சகோதரர்கள் தலைமறைவாக உள்ள நிலை, தொடரும் விசாரணை (6)

மார்ச் 25, 2024

ஜாபர் சாதிக் விவகாரம்சகோதரர்கள் தலைமறைவாக உள்ள நிலை, தொடரும் விசாரணை (6)

04-02-2024 முதல் 20-03-2024 வரை நடந்தது என்ன?:  போதை மருந்து விவகாரங்களில் நடவடிக்கைகள் வேகமாக நடக்கின்றனவா அல்லது வேகம் குறைவா போன்றவை நடவடிக்கைகள் வைத்து தீர்மானிக்கலாம்.

04-02-2024 போதை மருந்து தில்லியில் 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

15-02-2024ல் தில்லியில் மூவர் கைது, ஜாபர் சாதிக் தலைமறைவு; லுக்-அவுட் நோட்டீஸ் கொடுக்கப் பட்டது.

22-02-2024 – படப்பிடிப்பு நிறுத்தப் பட்டது.

25-02-2024 – திமுகவில் இருந்து நீக்கப் பட்டது.

26-02-2024 – என்.சி.பி அலுவலத்தில் ஆஜராகும் படி ஆணை.

08-03-2024 – வெள்ளிக்கிழமை – ஜெய்பூர்

பிறகு 09-03-2024 சனிக்கிழமை அன்று ஜாபர் சாதிக் கைது செய்யப் பட்டான்.  ஒரு வாரம்காவல்.

சதானந்தன் கைது

16-03-2024 காவல் செவ்வாய்கிழமை வரை நீட்டிக்கப் பட்டது.

17-03-2024 ஞாயிறு – சென்னைக்கு கொண்டு செல்லுதல்

18-09-2024 திங்கட்கிழமை அன்று காலை விமானம் மூலம், சென்னைக்கு அழைத்து வரப்பட்டான்.

19-03-2024  செவ்வாய்கிழமை – தில்லிக்குத் திரும்ப அழைத்துச் செல்லப் பட்டான்.

20-03-2024  புதன் கிழமை– 14 நாட்கள் காவல்

ஜாபர் சாத்திக் சகோதரர்கள் தலைமறைவாக உள்ள நிலை; ஜாபர் சாதிக் காணாமல் இருந்தது போல, அவனது சகோதரர்களும் மறைந்து வாழ்கின்றனர். இந்த நவநாகரிக காலத்தில் எப்படி மறைந்து வாழ முடியும் என்பதே திகைப்பாக இருக்கிறது. பணம், பலம், ஆட்கள், இருக்க இடம் என்று பல இல்லாமல், ஒரு நாள் கூட இருந்துவிட முடியாது. அந்நிலையில் பல நாட்கள் மறைந்து வாழ்வது எப்படி சாத்தியம் ஆகும். அப்ப்டியென்றால், இவர்களுக்கு எல்லாம் உதவ பல இடங்களில் ஆட்கள் இருக்கிறார்க்ச்ௐ என்றே தெரிகிறது. இதெல்லாம் நேரத்தை பயன் படுத்தி, ஆதாரங்களை மறைக்கவா அல்லது நடவடிக்கை நேரத்தை விரயமாக்கவா என்று தெரியவில்லை. ஜாபர் சாதிக்கின் சகோதரரும், வி.சி., முன்னாள் நிர்வாகியுமான முகமது சலீம், 28, மற்றொரு சகோதரரும், அமீர் இயக்கி வரும், இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தின் நடிகருமான மைதீன், 23, ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வருகின்றனர். குடியுரிமை அதிகாரிகள் வாயிலாக இருவரும் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லவில்லை என, உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனினும், விமான நிலையங்களுக்கு, ‘லுக் அவுட்’ நோட்டீசும் வழங்கப்பட்டுள்ளது.

NCB அதிகாரிகள் சொல்லும் விவரங்கள்; NCB அதிகாரிகள் முகமது சலீம், மைதீன் ஆகியோர் பதுங்கி இருக்கும் இடங்கள் குறித்து ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன மற்றும் அவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன, என்கின்றனர். இவர்களுக்கு அடைக்கலம் தருவோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும். முகமது சலீம் நெருங்கிய நட்பு வட்டத்தில், சென்னையைச் சேர்ந்த வி.வி.ஐ.பி.,யின் மகன் இருப்பதும், அவரும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அதுபற்றியும் ரகசிய விசாரணை நடக்கிறது. முகமது சலீம், மைதீன் ஆகியோர் விரைவில் சிக்குவர். இவ்வாறு அவர்கள் கூறினர்[1]. திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் சகோதரர்களுக்கு அடைக்கலம் தருவோர் மீது, வழக்குப்பதிவு செய்யப்படும்’ என, போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்[2]. ‘வெளிநாடுகளுக்கு உணவு பொருட்கள் அனுப்புவது போல, போதைப்பொருள் கடத்தியதில், என் சகோதரர் முகமது சலீமுக்கு தான் முக்கிய பங்கு உள்ளது’ என, ஜாபர் சாதிக் வாக்குமூலம் அளித்துள்ளார். தி.மு.க., அயலக பிரிவு முன்னாள் நிர்வாகியும், சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனுமான ஜாபர் சாதிக், 35, டில்லியில் 09-03-2024 அன்று, கைதாகி, மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின், 10 நாள் காவலில் விசாரிக்கப்பட்டார்[3].

18-03-2024 – சென்னையில் விசாரணை: பின், அவரை 18-09-2024 அன்று காலை விமானம் மூலம், சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்த அதிகாரிகள் மீண்டும் டில்லியில், போதை பொருள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் 20-03-2024 அன்று ஆஜர்படுத்தினர்[4]. என்.சி.பி இவ்வளவு கஷ்டப் பட்டு சட்டரீதியில் செயல்பட வேண்டியுள்ளது. அதிலும், போதை மருந்து விவகாரங்களில் மிகவும் எச்சரிக்கையுடன், ஜாக்கிரதையாக செயல்பட வேண்டியுள்ளது. இந்த விசாரணையில் ஜாபர் சாதிக்கிற்கு யார் யாருடன் தொடர்பு, போதைப்பொருள் கடத்தலுக்கு உதவி செய்வது யார் என என்சிபி துருவிதுருவி விசாரணை நடத்தியது. மேலும் அவரிடம் கைப்பற்றப்பட்ட 7 செல்போன்களை ஆய்வு செய்யும் பணியும் நடக்கிறது[5]. யார் யாரிடம் பேசியுள்ளார் என்பது குறித்து சைபர் கிரைம் தடயவியல் நிபுணர்களின் உதவியும் நாடப்பட்டுள்ளது[6]. இக்காலத்தில், சைபர் தொழிற்நுட்பம் மூலம், பல விசயங்களைத் தெரிந்து கொள்ளலாம். ஆனால், சம்பந்தப் பட்டவர்கள் எந்த அளவுக்கு நாணயமாக நடந்து கொள்வர் என்று கவனிக்க வேண்டும்.

என்.சி.பி அலுவலகத்தில் விசாரணை; பின்னர் அயப்பாக்கத்தில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதெல்லாம் துறை முறையில், சட்டப் படி, நடத்தப் படும் விசாரணை ஆகும். சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீடு, பெருங்குடியில் உள்ள குடோன் ஆகியவற்றுக்கும் ஜாபர் சாதிக்கை அழைத்துச் சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்[7]. இங்கெல்லாம் என்ன நடந்தது, என்ன பேசினார்கள் என்பனவெல்லாம் அரசுமூறையில் காக்கப் படுகிறது எனலாம். எல்லாம் விசயங்களையும் பொதுவில் தெரியப் படுத்த முடியாது, செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. சுமார் 13 மணி நேர விசாரணைக்கு பிறகு ஜாபர் சாதிக் நேற்று இரவு சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்[8]. இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்[9]. ஜாபர் சாதிக்கை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி சுதீர் குமார் சிரோஹி உத்தரவிட்டார்[10]. இதையடுத்து, ஜாபர் சாதிக், திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்[11].

© வேதபிரகாஷ்

20-03-2024


[1] தினமலர், ஜாபர் சாதிக் தம்பிகளுக்கு அடைக்கலம் தந்தால் வழக்கு என்.சி.பி., அதிகாரிகள் எச்சரிக்கை, மாற்றம் செய்த நாள்: மார் 21,2024 03:24

[2] https://m.dinamalar.com/detail.php?id=3581149

[3] தினமலர், போதை கடத்தலில் தம்பி தான் மெயின் ரோல் :ஜாபர் சாதிக் அதிர்ச்சி வாக்குமூலம், பதிவு செய்த நாள்: மார் 19,2024 23:53; https://m.dinamalar.com/detail.php?id=3580226

[4] https://m.dinamalar.com/detail.php?id=3580226

[5] ஏசியாநெட்.நியூஸ், jaffer sadiq : சென்னைக்கு அழைத்து வரப்பட்ட ஜாபர் சாதிக்.. அடுத்து சிக்குப்போகுவது யார்?, vinoth kumar, First Published Mar 18, 2024, 9:18 AM IST; Last Updated Mar 18, 2024, 10:07 AM IST

[6] https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/jaffer-sadiq-brought-to-chennai-tvk-saiyks

[7] நக்கீரன், ஜாபர் சாதிக்கிற்கு நீதிமன்றக் காவல் விதிப்பு!,  நக்கீரன் செய்திப்பிரிவு,  Published on 19/03/2024 | Edited on 19/03/2024

[8] https://www.nakkheeran.in/24-by-7-news/india/jaber-sadiq-sentenced-court-custody

[9]தினகரன், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கிற்கு 14 நாள் நீதிமன்ற காவல்!, March 19, 2024, 5:03 pm

[10]  https://www.dinakaran.com/14dayscourtcustody-zafarsadiq-arrested-casedrugtrafficking/ – google_vignette

[11] மாலைமுரசு, போதைப் பொருள் கடத்தல் வழக்கு- ஜாபர் சாதிக்கிற்கு 14 நாள் நீதிமன்ற காவல், By மாலை மலர்19 மார்ச் 2024 5:48 PM

ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்தலில் மாட்டிக் கொண்டது – 15-02-2924 முதல் 09-03-2024  வரை எங்கிருந்தான்?இந்தியா போதை மருந்து கூட்டங்களினின்று விடுபடுமா? (5)

மார்ச் 11, 2024

ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்தலில் மாட்டிக் கொண்டது – 15-02-2924 முதல் 09-03-2024  வரை எங்கிருந்தான்? இந்தியா போதை மருந்து கூட்டங்களினின்று விடுபடுமா? (5)

15-02-2924 [வியாழக்கிழமை] முதல் 09-03-2024 [சனிக்கிழமை] வரை எங்கிருந்தான்?: சாதாரணமாக குற்றவாளிகளுக்கு ஒரு மணி நேரம் அவகாசம் கொடுத்தாலே அவர்கள் தமக்கு எதிராக உள்ள அத்தனை ஆதாரங்களையும் அழித்துவிட்டு தப்பித்துக் கொள்ளத் தான் மிக வேகமாக செயல்படுவர் என்பது பொதுவாக குற்றவியல் வல்லுநர்கள் தெரிந்த விஷயமாக எடுத்துக் காட்டுகின்றனர்ர். அந்நிலையில் இப்பொழுது இந்தியாவில் மின்னணு யுகத்தில் எல்லா உபகரணங்களும் வைத்துள்ள நிலையில். இத்தனை நாட்கள் இவன் ரகசியமாக இருந்துள்ளாரன் என்பது திகைப்பாகத்தான் இருக்கிறது. ஆகவே அந்த குறிப்பிட்ட இடங்களில் எல்லாமே இவனுக்கு உதவியாளர்கள் அல்லது அவ்வாறு ரகசியமாக தங்க வைத்து அனுப்பி வைக்கக்கூடிய நண்பர்கள் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. அதனால் தான் எத்தனை நாட்கள் அவன் தாராளமாக தங்கி இருந்து, தமிழகத்திலிருந்து ஜெய்பூர் வரைக்கும் சென்று இருக்கிறான். பிறகு தான் ஏதோ தகவல் கிடைத்த பிறகு, அவனை அங்கு சென்று பிடித்துள்ளனர்.

என்.சி.பி. அதிகாரி  கொடுத்த விவரங்கள்: இது குறித்து ஞானேஸ்வர்சிங் என்.சி.பி. அதிகாரி  நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு[1] : போதைப்பொருள் கடத்தலை தடுக்க முழு வீச்சில் நடவடிக்கை எடுத்துள்ளோம்[2]. திருவனந்தபுரம், மும்பை, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் பதுங்கி இருந்துள்ளார். பங்களா ஒன்றில் பதுங்கியிருந்த ஜாபர் சாதிக்கை டில்லியில் கைது செய்தோம். சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். டில்லி மற்றும் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் மலேசியாவுக்கு ஜாபர் சாதிக் கடத்தி வந்தார். சினிமா, கட்டுமானத்துறையில் முதலீடு: போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு சம்பாதித்த பணத்தை சினிமா, ரியல் எஸ்டேட், கட்டுமானத்துறையில் ஜாபர் சாதிக் முதலீடு செய்துள்ளார். போதைப் பொருள் சம்பந்தப்பட்ட பணம் எங்கெங்கு முதலீடு செய்யப்பட்டதோ அது குறித்து விசாரிக்கப்படும். 3,500 கிலோ வரையிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜாபர் சாதிக்கிற்கு முக்கிய பிரமுகர்கள் பலருடன் தொடர்பு உள்ளது. உணவுப்பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் போதைப்பொருட்களை பல்வேறு நாடுகளுக்கு ஜாபர் சாதிக் கடத்தி உள்ளார்.

தொடர்புடைய அரசியல்வாதிகள் யார்?: அரசியல் கட்சிகளுக்கு போதைப்பொருட்கள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தை வழங்கி உள்ளார். மங்கை என்ற பெயரில் தமிழ் திரைப்படம் ஒன்றை ஜாபர் சாதிக் தயாரித்துள்ளார். சென்னையில் ஓட்டல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். தமிழகத்தில் சில திரைப்பிரபலங்கள் உடன் தொடர்பு இருப்பதாக ஜாபர் சாதிக் வாக்குமூலம் அளித்துள்ளார். விசாரணைக்குப்பின் ஜாபருடன் தொடர்புடையவர்கள் பெயர்களை வெளியிடுவோம். கடந்த 25ம் தேதி கைது செய்யப்பட்ட போதை கடத்தல் நபர்கள் 3 பேர் கொடுத்த தகவலின் படி ஜாபர் சாதிக் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளில் 3,500 கிலோ சூடோபெட்ரின் போதைப்பொருட்களை ஜாபர் சாதிக் கடத்தியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

ஜாபர் சாதிக் நிரபராதி என்று வாதிடும் அவனது வக்கீல்: இந்நிலையில், ஜாபர் சாதிக்கின் வழக்கறிஞர்கள் தந்தி டிவி-க்கு அளித்த பேட்டியில், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் நிரபராதி என்றும், அவரது குடும்பத்தினர் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்[3]. ஜாபர் சாதிக்கின் வழக்கறிஞர் டி.ஆர். பிரபாகரன் தந்தி டிவி-க்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது[4]: “15.02.2024 அன்று கிட்டத்தட்ட 50 கிலோ சூடோபெட்ரைன் என்கிற போதை பொருளை டெல்லி என்.சி.பி பறிமுதல் செய்திருக்கிறார்கள். அது தொடர்பாக 3 பேர்களை கைது செய்து இருக்கிறார்கள். அந்த 3 பேரிடம் வாக்குமூலம் பெற்று அதன் அடிப்படையில் இன்று (09.03.2024) ஜாபர் சாதிக்கை கைது செய்திருக்கிறார்கள்[5]. அவரை பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினார்கள்[6]. அப்படி ஆஜர்படுத்தும் போது நாங்கள் அவருடைய வழக்கறிஞர்களாக நீதிபதியிடம் இந்த 50 கிலோ சூடோபெட்ரைன் என்.சி.பி சட்டத்தில் வரவில்லை, அது போதைப் பொருள் இல்லை என்று கூறி அவருக்கு உடனே ஜாமீன் கொடுக்க வேண்டும் என்று வாதிட்டோம். இதற்கு நீதிபதி, என்.சி.பி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார். இந்த வழக்கில் கைதானவர்களிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்திருக்கிறார்கள். ஜாபர் சாதிக்கிடம் இருந்து எந்த ஒரு போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்படவில்லை என்பதை நாங்கள் அழுத்தமாக கூறினோம்.”

என்.சி.பி 15 நாள் காவல் கேட்டதற்கு  7 நாட்கள் கொடுக்கப் பட்டது:என்.சி.பி நீதிபதி இல்லாததால், இந்த வாழ்க்கை விசாரித்த நீதிபதி பொறுப்பு நீதிபதி என்பதால், அவரை நாங்கள் இப்போதைக்கு நீதிமன்ற காவலில் வைக்கிறோம். நீங்கள் உங்களுடைய எந்த வாதமாக இருந்தாலும் ஜாமீன் கோரும்போது வாதிடுங்கள். அதற்குப் பிறகு நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் கொடுக்கலாமா வேண்டாமா என்று பரிசீலனை செய்யும் என்று கூறினார். அது இல்லாமல் என்.சி.பி தரப்பில் 15 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டார்கள். நாங்கள் அனுமதி அளிக்கக் கூடாது என்று கூறினோம். அவரிடம் விசாரிப்பதற்கு எதுவுமே இல்லை, அவர் நிரபராதி என்று நாங்கள் கூறினோம். அப்போது நீதிபதி, நீங்கள் ஏழு நாள் காவல் வைத்துக் கொள்ளலாம் என்று என்.சி.பி போலீசிடம் கூறி உத்தரவிட்டார். என்.சி.பி அதிகாரிகள், ஜாபர் சாதிக்கின் அடிப்படை உரிமைகளை மீறி இருக்கிறார்கள். அவருடைய குடும்பத்தினர் வயதான பாட்டி, அவருடைய மனைவி, அவருடைய 2 மைனர் மகள்கள், ஒரு மகன் என அனைவரையும் சட்டவிரோதமாக பிடித்து வைத்திருக்கிறார்கள்,” என்று ஜாபர் சாதிக்கின் வழக்கறிஞர் டி.ஆர். பிரபாகர் கூறினார்.

புதிர்களும், கேள்விகளும்: சாதாரணமான, இந்தியர்களுக்கு, இத்தனை புதிர்களும், மர்மங்களும் வேண்டாம். சமூகத்தை சீரழிக்கும் போதை மருந்து வேண்டாம். அத்தகைய சமூக தீவிரவாதிகளும் தேவையில்லை:

  1. தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் கைது – போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நடவடிக்கை, விவரம் அறிவிக்கப் படவில்லை!
  2. ஜெய்பூரில் கைதான ஜாபர் சாதிக் டில்லி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப் பட்டு, பிறகு சென்னைக்குக் கொண்டு வர உறைப்படி, நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
  3. ஞானேஸ்வர்சிங் என்.சி.பி. அதிகாரி பங்களா ஒன்றில் பதுங்கியிருந்த ஜாபர் சாதிக்கை டில்லியில் கைது செய்தோம்.
  4. திருவனந்தபுரம், மும்பை, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் பதுங்கி இருந்து, தில்லியில் மறைந்திருந்த போது கைது செய்யப் பட்டான்!
  5. தமிழகத்தின் சில திரைப்பிரபலங்கள் உடன் தொடர்பு இருப்பதாக ஜாபர் சாதிக் என்.சி.பியிடம் வாக்குமூலம் அளித்துள்ளாதாகத் தெரிகிறது.
  6. போதைப் பொருட் வருமானத்தை சினிமா, ஓட்டல், ரியல் எஸ்டேட், கட்டுமானத்துறைகளில் முதலீடு செய்யப் பட்டுள்ளது.
  7. இவனது போதை மருந்து வியாபாரம் தில்லி, தமிழகம் வழியாக மற்ற இடங்களுக்குப் பரவி, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா நாடுகளுக்குப் பாரவியது.
  8. திருவனந்தபுரம், மும்பை, புனே, ஹைதரபாத் சென்று ஜெய்ப்பூர் வந்துள்ளான். அங்கு பிடிக்கப் பட்டு, தில்லியில் கைது செய்யப்பட்டான்!
  9. ஆக, இவ்விடங்களில் இருந்த தொடர்புகள், எல்லாம் உதவி செய்தவர்கள் முதலியவர் மூலம் மேலும் விவரங்கள் வெளிவரலாம்.
  10. போதை சமுதாயத்தை சீரழிப்பது, நாசமாக்குவது, அத்தகையதை வியாபாரமாக்கிய இவர்கள்முறையாக தண்டிக்கப் படவேண்டும்.

© வேதபிரகாஷ்

10-03-2024


[1] தினமலர், ஜாபர் சாதிக் கைது ஆனது எப்படி?: அரசியல்வாதிகளும் சிக்குவர் ! என்.சி.பி. அதிகாரி பேட்டி, மாற்றம் செய்த நாள்: மார் 09,2024 15:57.

[2] https://m.dinamalar.com/detail.php?id=3571516

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், வேறொரு குற்றவாளி வாக்குமூலம் அடிப்படையில் ஜாபர் சாதிக் கைது: வழக்கறிஞர்கள் பேட்டி, WebDesk, 10 Mar 2024 03:39 IST

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/jaffer-sadiq-advocate-speech-on-drug-case-and-argument-in-patiala-court-4320228

[5] தினத்தந்தி, ஜாபர் சாதிக் ஒரு நிரபராதி..கோர்ட்டில் நடந்தது இதுதான்..” – வழக்கறிஞர் சொன்ன தகவல், By தந்தி டிவி 9 மார்ச் 2024 10:15 PM.

[6] https://www.thanthitv.com/News/India/jabarsadhik-advocate-speech-thanthitv-251339?infinitescroll=1

ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்தலில் மாட்டிக் கொண்டது – கைதில் உள்ள புதிர்கள் மர்மங்கள், விடுபடுமா, இந்தியா போதை மருந்து கூட்டங்களினின்று விடுபடுமா? (4)

மார்ச் 11, 2024

ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்தலில் மாட்டிக் கொண்டதுகைதில் உள்ள புதிர்கள் மர்மங்கள், விடுபடுமா, இந்தியா போதை மருந்து கூட்டங்களினின்று விடுபடுமா? (4)

15-02024 அன்று தில்லியில் சோதனை: ஜாபர் சாதிக்கின் போதை மருந்து விவகாரம் திகைப்பாக இருக்கிறது. இதுவரை கிடைத்துள்ள விவரங்களை வைத்து ஆராய்ந்தால், நிச்சயமாக அத்தகைய வேலைகளை, சாதாரணமாக செய்து விடமுடியாது. பலர் அதன் பின்னணியில், ஒருமித்து, தீவிரமாக வேலை செய்திருக்க வேண்டும். அனைத்துலக போதைதடுப்பு துறைகளின் கவனத்திற்கு சென்றிருக்கிறது என்றால், எல்லாவற்றையும் அறிந்து, அவற்றையும் மீறித்தான் இக்காரியங்கள் நடைபெற்று வருகின்றன. போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய பொருட்களை தேங்காய் பவுடர் மற்றும் சத்து மாவு பாக்கெட்களில் மறைத்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது[1]. இதையடுத்து, டெல்லி போலீஸ் மற்றும் போதைப் பொருள் தடுப்புபிரிவு அதிகாரிகள் மேற்கு டெல்லி உள்ள கைலாஸ் பார்க் பகுதியில் கடந்த மாதம் 15 ஆம் அதிரடி சோதனை நடத்தினர்[2].

15-02-2024ல் தில்லியில் மூவர் கைது: இதில் அங்குள்ள குடோன் ஒன்றில் இருந்த கடத்தல் கும்பல் கிலோ எடை கொண்ட சுமார் 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆபத்து மிக்க போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்[3]. மேலும் அந்த குடோனில் இருந்து தமிழகத்தை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர்[4]. இவர்கள், சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர் ரஹ்மான் மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக் குமார் என்பது தெரியவந்துள்ளது. ஜாஃபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர்கள்தான் இந்தக் கடத்தலுக்கு மூளையாக இருந்ததாகக் கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளார்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த போதை பொருள் கடத்தல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது சென்னையை சேர்ந்த ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது[5]. மேலும் அவர் தனது சகோதரர்கள் மைதீன் மற்றும் சலீம் ஆகியோருடன் சேர்ந்து இந்த போதை பொருள் கடத்தல் தொழிலை செய்து வந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது[6].

25-02-2024 – திமுகவிலிருந்து ஜாபர் சாதிக்கை நிரந்தரமாக நீக்கியது:  ஜாபர் சாதிக் சென்னையில் சினிமா தயாரிப்பாளராகவும் திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமாக இருந்து வந்துள்ளார்[7]. அவரது சகோதரர் மைதீன் நடிகராக உள்ளார்[8]. மற்றொரு சகோதரரான சலீம் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பதும் தெரியவந்தது[9]. போதைப் பொருள் விவகாரம் வெளியானதும் ஜாபர் சாதிக் திமுகவிலிருந்து நிரந்தமாக நீக்கப்பட்டார்[10]. இதையடுத்து ஜாபர் சாதிக் விசாரணைக்கு ஆஜராகுமாறு என்சிபி போலீசார் சம்மன் அனுப்பினர்[11]. சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் சம்மனை ஒட்டினர். ஆனால் ஜாபர் சாதிக் குடும்பத்துடன் தலைமறைவானார்[12]. ஜாபர் சாதிக்கின் வீட்டில் சம்மனை ஒட்டிய என்சிபி போலீசார், அவரது வீட்டின் பூட்டை உடைத்து முக்கிய ஆவணங்களை அள்ளிச்சென்றனர்[13]. அவரது வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய என்சிபி போலீசார், வீட்டிற்கும் சீல் வைத்தனர்[14]. இருப்பினும் ஜாபர் சாதிக் பற்றி எந்த துப்பும் கிடைக்காமல் இருந்தது.

22-02-2024 அன்று படப்பிடிப்பு நிறுத்தப் பட்டது – 26-02-2024 அன்று தனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்று அறிக்கை விட்டது: அமீர்[15], “கடந்த 22-ம் தேதி நான்இறைவன் மிகப் பெரியவன்திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்த போது, திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஏன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது? என்னைச் சுற்றி என்ன நடக்கிறது? என்பதை ஊடகங்கள் வாயிலாகவே நான் அறிந்து கொண்டேன். உண்மை எதுவென்று இப்போது வரை எனக்குத் தெரியவில்லை……. எதுவாயினும், செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமேயானால், அது கண்டிக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுமே.! அந்த வகையில், சட்டவிரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்…….” என்று அறிக்கை விட்டார்[16]. இவருக்கும் ஜாபர் சாதிக்கும் வியாபார ரீதியில் நிறைய தொடர்புகள் இருப்பதாக சொல்லப் படுகிறது.

15-02-2024 அன்றே என்.சி.பி, லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது: அவர் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும் ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் 15-02-2024 அன்றே கொடுக்கப்பட்டது[17]. அவரது 8 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன[18]. மேலும் அவரது சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோரையும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வருகின்றனர்[19]. இப்படியெல்லாம் செய்திகள் வந்தாலும், அவன் எங்கிருக்கிறான் என்று தெரியாமல் இருந்தது விசித்திரமான விசயம் தான். இந்தியாவில் அவ்வாறு ஒரு நபர் தலைமறைவாக எளிதில் இருக்கலாம், சுற்றி வரலாம் என்று தெரிகிறது. தன்னுடைய சொந்த பெயரில் பயணத்தில் தான், ரெயில் அல்லது விமானங்களில் தெரிந்து விடும். மற்றபடி பயணத்தால் யாராலும் கண்டுபிடிக்க முடியாது போலிருக்கிறது. ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவரது கூட்டாளிகள் கொடுத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ராஜஸ்தான் மாநில ஜெய்ப்பூரில் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஜாபர் சாதிக்கை இன்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்[20].

09-03-2024 அன்று ஜெய்ப்பூரில் பிடிக்கப் பட்டு, தில்லியில் கைது: 15-02-2924 [வியாழக்கிழமை] முதல் 09-03-2024 [சனிக்கிழமை] வரை எங்கிருந்தான் என்று தெரியாத நிலையில், 23 நாட்கள் கழித்து கண்டுபிடிக்கப் படுகிறான். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கை 7 நாட்களில் காவலில் வைத்து விசாரிக்க பாட்டியாலா உயர் நீதிமன்றம் என்.சி.பி-க்கு சனிக்கிழமை (09.03.2024) அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் ஏராளமானோர் சம்பந்தப்பட்டிருப்பதால் ஜாபர் சாதிக்கை போலீஸ் காவலில் விசாரிக்கவும் அனுமதி கோரினர். இதனை விசாரித்த நீதிபதி, ஜாபர் சாதிக்கை ஏழு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கிய நிலையில், அவரை என்.சி.பி அலுவலகத்திற்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, ஜாபர் சாதிக்கை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ள அதிகாரிகள், விரைவில் அவரை சென்னை அழைத்து வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

© வேதபிரகாஷ்

10-03-2024


[1] தமிழ்.இந்து, தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் கைதுபோதைப்பொருள் கடத்தல் வழக்கில் நடவடிக்கை, செய்திப்பிரிவு, Published : 09 Mar 2024 12:08 PM; Last Updated : 09 Mar 2024 12:08 PM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/1212770-drug-trafficking-absconding-jaffer-sadiq-arrested.html

[3] தினமலர், போதைப்பொருள் கடத்தல் விவகாரம்: ஜாபர் சாதிக் கைது!, மாற்றம் செய்த நாள்: மார் 09,2024 12:32,

[4] https://m.dinamalar.com/detail.php?id=3571503

[5] மாலைமலர், போதைப்பொருள் கடத்தல் வழக்குஜாபர் சாதிக் கைது, By மாலை மலர், 9 மார்ச் 2024 12:02 PM; (Updated: 9 மார்ச் 2024 12:38 PM),

[6] https://www.maalaimalar.com/news/state/tamil-news-jaffer-sadiq-arrested-707000

[7] தமிழ்.நியூஸ்.7, போதைப் பொருள் வழக்கில் தேடப்படு வந்த ஜாபர் சாதிக் கைது!, by Web EditorMarch 9, 2024,

[8] https://news7tamil.live/jaber-sadiq-who-was-wanted-in-a-drug-case-was-arrested.html

[9] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், போதைப் பொருள் கடத்தல் வழக்கு; முன்னாள் தி.மு.. நிர்வாகி ஜாபர் சாதிக் கைது, WebDesk, 09 Mar 2024 12:45 IST,

[10] https://tamil.indianexpress.com/tamilnadu/drug-case-former-dmk-functionary-jaffer-sadiq-arrested-by-ncb-tamil-news-4318592

[11] தமிழ்.ஒன்.இந்தியா, ரூ 2000 கோடி போதை பொருள் கடத்தல் வழக்கு.. ராஜஸ்தானில் ஜாபர் சாதிக் கைது, By Vishnupriya R Published: Saturday, March 9, 2024, 12:37 [IST]

[12] https://tamil.oneindia.com/news/delhi/drug-smuggler-jaffer-sadiq-arrested-at-jaipur-rajasthan-589585.html

[13] தினகரன், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக் கைது..!!, March 9, 2024, 12:07 pm,

[14] https://www.dinakaran.com/drug-smuggling-jaber-sadiq-arrested/

[15]  தினமணி, போதைப்பொருள் வழக்கில் தயாரிப்பாளர்.. அறிக்கை வெளியிட்ட அமீர்!, Published on:  27 பிப்ரவரி 2024, 12:56 pm; Updated on: 27 பிப்ரவரி 2024, 12:56 pm

[16] https://www.dinamani.com/cinema/cinema-news/2024/Feb/27/iraivan-migaperiyavan-ameer

[17] நக்கீரன், ‘ஜாபர் சாதிக் கைது‘- போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிரடி, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 09/03/2024 | Edited on 09/03/2024,

[18] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/jaber-sadiq-arrested-narcotics-unit-action

[19] சமயம், போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் கைது.. ஜெய்ப்பூரில் பதுங்கியிருந்தவை சுத்துப்போட்ட போலீஸ்!, Authored By பஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil | 9 Mar 2024, 12:29 pm,

[20] https://tamil.samayam.com/latest-news/crime/drugs-smuggler-jaffer-sadiq-aressted-in-jaipur-by-ncb-police/articleshow/108345319.cms

ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்தலில் மாட்டிக் கொண்டது–சகாக்கள் கைதானது, தமிழகம் எதிர்க்க வேண்டிய முக்கியமான குற்றம் (3)

மார்ச் 3, 2024

ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்தலில் மாட்டிக் கொண்டது சகாக்கள் கைதானது, தமிழகம் எதிர்க்க வேண்டிய முக்கியமான குற்றம் (3)

ஜாபர் சாதிக் குறித்து செய்தி சேகரிக்க சென்ற சேனல் ரிப்போர்ட்டர் கொடூர தாக்குதல்.. பிடிபட்ட கட்சி நிர்வாகி:. போதை பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவான ஜாபர் சாதிக் குறித்து, செய்தி சேகரிக்க சென்ற தனியார் செய்தி தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில், ஒருவரை போலீசார் கைது செய்தனர். இதில், திமுக நிர்வாகிகளான கலைச்செல்வன் மற்றும் பச்சையம்மாள் ஆகியோர் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரை தாக்கி, அறைக்குள் அடைத்து கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது[1]. புகாரின் அடிப்படையில் இது குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார், ஆபாசமாக பேசுதல், சிறை வைத்து காயம் விளைவித்தல் என இருவர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்த நிலையில், கலைச்செல்வனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்[2]. ஊடகத்தினர் மீது தாக்குதல், ஊடகத்தின் குரல்வளை நெறிப்பு, கருத்து சுதந்திரம் பறிபோதல் என்றெல்லாம் போன்ற பேச்சும் இல்லை, விவாதமும் இல்லை. அரசியல் கூட்டணி பற்றிதான் தினம்-தினம் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

வங்கி கணக்குகள் முடக்கம்: பொதுவாக இத்தகையோரிடம் பலவித பெயர்களுடன், வங்கிக் கணக்குகள் பலவித காரியங்களுக்கு உபயோகமாக, செயல்படுத்த இருக்கும். வீட்டில் யாருமில்லாததாலும், விவரங்களை சொல்வதற்கும் ஆட்கள் இல்லாததாலும், இருக்கின்ற ஆதாரங்களை வைத்து, நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஆகிறது. அதிகாரிகள், போலீஸார் முதலியோருடன் ஒத்துழைப்புக் கொடுக்காமல் சதாய்த்து வருவதும் தெரிந்தது. மேலும், காலம் தாழ்த்தினால், வங்கிகளில் இருக்கும் பணமும் எடுக்கப் பட்டு, வேறு விவகாரங்களுக்கு உபயோகப் படும். ஜாபர் சாதிக் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் நிலம் மற்றும் வங்கி கணக்குகள் தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன[3]. இந்த நிலையில், அவர் தொடர்புடைய 8 வங்கி கணக்குகள் இருப்பதும் தெரிந்தது[4]. இதனால், அவற்றை முடக்க தீர்மானம் எடுக்கப் பட்டது[5]. இப்பொழுது, கணக்குகளை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது[6].

திரையுலக நிழல் தாதா[7]: ஒரு கட்டத்தில், தொழில் ரீதியாக சிலருடன் பிரச்னை உருவாகி, கடும் நெருக்கடி ஏற்பட்டது. வழக்குகளை எதிர்கொண்ட அவரும், அவரது சகோதரரும் அவற்றில் இருந்து விடுபட்டு, கொஞ்ச நாட்கள் அமைதியாக இருந்தனர். பின், சென்னை பர்மா பஜார் தொடர்பு ஏற்பட, அங்கிருந்தபடியே வெளிநாட்டு பொருட்களை இறக்குமதி செய்து வியாபாரத்தில் ஈடுபட்டனர். கடந்த, 2010 வரை இப்படி சென்று கொண்டிருந்த ஜாபர் சாதிக், அதே பர்மா பஜார் தொடர்பை பயன்படுத்தி, நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான, ஜக்குபாய் படத்தை, திருட்டு வி.சி.டி.,யில் தயாரித்து புழக்கத்தில் விட்டார். இது தொடர்பான பிரச்னையில், ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது, அவருக்கு பின்புலமாக இருந்து உதவியது, தற்போது திரையுலகில் இருக்கும் பிரபலமான இயக்குனர் ஒருவர் தான். இதையடுத்து, ஜாபர் சாதிக்கும், அவரின் சகோதரரும் வெளிநாடுகளில் இருந்து சட்ட அனுமதி பெறாத பொருட்களை எடுத்து வரும் ‘குருவி’யாக செயல்பட துவங்கினர். அப்போது அவர்களுக்கு, சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தும் நபர்களோடு தொடர்பு ஏற்பட்டது. அந்த தொடர்புகளை வைத்து, தமிழகம் வாயிலாக போதைப்பொருட்களை கடத்தி வந்தனர். அந்த வருமானத்தை வைத்து, சினிமாக்காரர்கள், போலீஸ் அதிகாரிகள், அரசியல் முக்கியஸ்தர்கள் என, பல தமிழக வி.ஐ.பி.,க்களுடன் நெருக்கமாகி விட்டனர்.

ரேவ் பார்டிகள் நடத்தப் பட்டது[8]: பணத்தை தண்ணீராக வாரி இரைத்து பலரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ஜாபர் சாதிக், ஒரு கட்டத்தில் கோயம்புத்துார் பகுதியில் பிரமாதமாக நடந்து வரும், ‘ரேவ் பார்ட்டி’ எனப்படும், போதைப்பொருள் பார்டியை சென்னையிலும் அறிமுகம் செய்து வைத்தார். கிழக்கு கடற்கரை சாலையில், பண்ணை வீடுகளில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட, ‘ரேவ் பார்ட்டி’கள் அடிக்கடி நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளுக்கு, தமிழக அரசியல், சினிமா, தொழில் அதிபர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் என, பலரும் சென்று வந்துள்ளனர். இதன் வாயிலாக, ஆளும் கட்சியில் மிக மிக முக்கியமான புள்ளிகளுடன் தன் செல்வாக்கை வளர்த்துக் கொண்டார். பல ஆளும் கட்சி பிரமுகர்கள், போலீஸ் உயரதிகாரிகளுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. தன்னை தேடி மத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் வருவது தெரிந்ததும், ஜாபர் தலைமறைவாகி விட்டார். அவர் தலைமறைவாவதற்கு முன், யாருடன் போனில் பேசினார் என்ற தகவலை போலீசார் எடுத்துள்ளனர்.

செக்யூலரிஸ போர்வையில் அடிப்படைவாதம் முதலியன[9]: அதில், சினிமா பிரபலங்களும், போலீஸ் அதிகாரிகளும், ஆளும்கட்சி அரசியல் பிரமுகர்களும் தொடர்ச்சியாக, ஜாபரை தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்துள்ளது. குறிப்பாக, சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருந்து தொடர்ச்சியாக அழைப்புகள் வந்துள்ளதை, போலீசார் கண்டறிந்து உள்ளனர். ஜாபர் சாதிக், திரைப்பட இயக்குனர் அமீர் மற்றும் இஸ்லாமிய மார்க்க பேச்சாளர் அப்துல் பாஸித் புகாரி ஆகியோர் இணைந்து நடத்தி வரும், ‘லா கபே’ என்ற நிறுவனத்தை பற்றியும், பல தகவல்கள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பல்வேறு மட்டங்களில், பணத்தை வாரிக்கொடுத்து, தன் செல்வாக்கை வளர்த்துக்கொண்ட ஜாபர் சாதிக், மார்க்க போதகர்களிடமும் அணுக்கமாக இருந்தார். அவர்கள் வாயிலாக ஆயுத போராட்ட குழுக்களுக்கும், பண உதவி செய்திருக்கிறார் என்ற கோணத்தில் என்.ஐ.ஏ., விசாரிப்பதாக கூறப்படுகிறது. விசாரணையில் முன்னேற்றம் ஏற்படும் போது, மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லோருமே எதிர்க்க வேண்டிய போதை மருந்து: இன்று உலகம் முழுவதும் போதை மருந்துக்கு எதிராக எல்லா நாடுகளுமே மிகக்கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. மிகப்பெரிய குற்றம் என்பதனால், பைலில் வெளி வரமுடியாத குற்றம், உடனடியாக கைது, சிறை என்று கடினமான நிலைமை இதுதான் உலகமெங்கும் காணப்படுகிறது. ஏனெனில் இது மனிதனுடைய வாழ்க்கையை சீரழித்து, குடும்பங்களை சமூகங்களையும் சீரழித்து, இறுதியில் ஒட்டுமொத்த மனித இனத்தையே பாதிக்கின்ற ஒரு மிகப்பெரிய நோயாக அமைகிறது. கொரோனாவை பார்த்த பிறகு, அதைவிட இது மிகக் கொடுமையான நோய் என்று தோன்றுகிறது ஆகவே நிச்சயமாக எந்த சமூகமும் நாடும் இதனை எதிர்க்கும் என்பது நன்றாகவே புரிகிறது. ஆகவே, இத்தகைய காரியங்கள் தமிழகத்தில் நடப்பது என்பது மிகவும் வருத்தமான விஷயமாகும். ஆகவே எப்படியாவது இத்தகையை குற்றங்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட வேண்டும்

© வேதபிரகாஷ்

03-03-2024


[1] தினத்தந்தி, ஜாபர் சாதிக் குறித்து செய்தி சேகரிக்க சென்ற சேனல் ரிப்போர்ட்டர் மீது கொடூர தாக்குதல்.. பிடிபட்ட.., Thanthi TV,  Uploaded On 01.03.2024

[2] https://www.youtube.com/watch?v=vAAcb1uO5SE

[3] குமுதம், ஜாஃபர் சாதிக் வங்கி கணக்குள் முடக்கம்போதைப் பொருள் தடுப்பு பிரிவினரின் அடுத்த ஸ்கெச், Mar 2, 2024 – 17:13

[4] https://kumudam.com/Zafar-Sadiq-Bank-Account-Freeze-Next-Sketch-of-Narcotics-Squad

[5] தமிழ்.இந்து, போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக்கின் 8 வங்கி கணக்குகள் முடக்கம், செய்திப்பிரிவு, Published : 03 Mar 2024 05:38 AM; Last Updated : 03 Mar 2024 05:38 AM.

[6] https://www.hindutamil.in/news/tamilnadu/1209795-jafar-sadiq-8-bank-accounts-frozen.html?frm=rss_more_article

[7] தினமலர், குருவி முதல்ரேவ் பார்ட்டிவரைஜாபர் சாதிக் சேட்டைகள் ஏராளம், Added : மார்ச் 03, 2024 02:30…; https://www.dinamalar.com/news_detail.asp?id=3566085

[8] தினமலர், குருவி முதல்ரேவ் பார்ட்டிவரைஜாபர் சாதிக் சேட்டைகள் ஏராளம், Added : மார்ச் 03, 2024 02:30…; https://www.dinamalar.com/news_detail.asp?id=3566085

[9] தினமலர், குருவி முதல்ரேவ் பார்ட்டிவரைஜாபர் சாதிக் சேட்டைகள் ஏராளம், Added : மார்ச் 03, 2024 02:30…; https://www.dinamalar.com/news_detail.asp?id=3566085

ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்தலில் மாட்டிக் கொண்டது–சகாக்கள் கைதானது, இவன் தலை மறைவானது–தேடும் படலம் ஆரம்பித்தது (2)

மார்ச் 3, 2024

ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்தலில் மாட்டிக் கொண்டது சகாக்கள் கைதானது, இவன் தலைமறைவானது தேடும் படலம் ஆரம்பித்தது (2)

பதுங்கியது, பதுங்கியிருப்பது ஏன்?: ஒரு பிரபலமான மனிதர், அதிலும் ஆளும் கட்சியின் பிரமுகர், பெரிய பணக்காரர், சினிமா அதிபர், பலகோடி வியாபாரங்களின் அதிபர் என்றெல்லாம் இருக்கின்ற ஒரு நபர் திடீரென்று காணாமல் போய் விட முடியாது. ஆகவே நிச்சயமாக மாட்டிக் கொண்டு விடுவோம் என்ற நிலையில் தான், காணாமல் போய்விட்டார் என்றால், இந்தியாவிலேயே இருக்கிறார் என்றால், மறைந்து எங்கே ஒரு இடத்தில் வாழலாம். அல்லது நாட்டை விட்டு வெளியேறி விட்டார் என்றால்[1], நிச்சயமாக வேற எந்த நாட்டிலேயோ பதுங்கி இருக்கிறார் என்று தெரிகிறது[2]. எது எப்படி இருந்தும் சட்டப்படி,போதை கட்டுப்பாடு துறை லுக் அவுட் நோட்டீஸ்கள் அனுப்பி விட்டது என்பதால், நிச்சயமாக வெளிவந்தால் மாட்டிக் கொள்வார்[3]. இவ்வாறெல்லாம் மறைந்து வாழலாம் போன்ற விவகாரங்கள் எல்லாம் அசாதாரண விவகாரங்கள் ஆகும். இருப்பினும் அத்தகைய முடிவை மேற்கொண்டது ஏன் என்பது கவனிக்கத் தக்கது[4].

யார் இந்த ஜாபர் சாதிக்? – ஜாபர் சாதிக் பின்னணி: குற்றச்சாட்டுக்கு உள்ளான ஜாபர் சாதிக்கின் பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி.  பல ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்புக்காக சென்னை வந்தவர், சொந்தமாக தங்கும் விடுதி, ஓட்டல், ஏற்றுமதி நிறுவனம், உணவு பதப்படுத்தும் நிறுவனம் என குறுகிய காலத்தில் உச்சம் தொட்டார். இவர், சென்னை புரசைவாக்கத்தில் விடுதி வைத்து நடத்துகிறார். பிரபல அசைவ ஹோட்டல் ஒன்றின் புரசைவாக்கம் கிளையையும் எடுத்து நடத்தும் சாதிக், தி.மு.க., முக்கிய தலைவர்கள் பலருடன் நெருக்கமான நட்பில் இருந்தார். சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க.,வின் முக்கிய புள்ளி வாயிலாக, கட்சியின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளர் பதவியை பெற்ற சாதிக், கட்சி மேலிடத்தில் இருப்போர் பலருடனும் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். ஒரு கட்டத்தில் திரைத் துறையில் காலடி எடுத்து வைத்த சாதிக், அங்கிருக்கும் பிரபலமான நபர்களுடனும் நெருக்கமான நட்பை வளர்த்துக் கொண்டார்; திரைப்படம் தயாரிக்கும் பணியிலும் இறங்கினார். மங்கை என்ற திரைப்படம் எடுத்து வரும் அவர், படத்துக்கான முதல் பாடல் வெளியீட்டு விழாவுக்கு, இயக்குனர் கிருத்திகா உதயநிதி உள்ளிட்ட தி.மு.க., பிரபலங்களையும் அழைத்திருந்தார்[5]. கட்சிக்கும், ஆட்சிக்கும் பல கட்டங்களில் தாராளமாக நிதி வழங்கியதால், ஜாபர் சாதிக்குக்கு அனைத்து மட்டங்களிலும் தொடர் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது[6].

சட்டமீறல் செயல்களில் எப்படி முஸ்லீம்கள் தைரியமாக ஈடுபடுகின்றனர்?: பொதுவாக திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முஸ்லிம்களுக்கு அதிக சலுகைகள் கொடுக்கப்படும் என்பது தெரிந்த விஷயமாக இருக்கிறது. எல்லோரும் காலமாக சிறையில் இருப்பவர்களை விடுவிப்பது பிறகு ரம்ஜான் மாதத்திற்கு அரிசி கொடுப்பது, சந்தனக்கூடு பண்டிகைக்கு சந்தனம் கொடுப்பது, தாராளமாக நிதி உதவி அளிப்பது என்றெல்லாம் நடந்து வருகின்றன. இப்பொழுது கூட சமீபத்தில் அவர்களுக்கு பல சலுகைகள் கொடுப்பதாக திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆகவே ஆன்மீகம் என்று சொல்லிக் கொண்டு இந்து மதத்தினரை வசை படுவது, சமதர்மம், செக்யூலரிஸம், பெரியாரிஸம் என்று சொல்லிக்கொண்டு, முஸ்லிம்களுக்கு தாஜா செய்வது என்பது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் தான் அவர்கள் ஒருவேளை தைரியமாக இத்தகைய வேலைகளில் ஈடுபட்டு உள்ளனர் என்பது தெரிகிறது

போதை மருந்து கும்பல்களுடன் தொடர்பு, வேலை ஆரம்பம்: இன்றைக்கு அரசியல்-வியாபாரம் என்பதெல்லாம் பணம் சம்பாதிக்கத் தான். பொது மக்களின் பணத்தை எப்படியாவது கொள்ளையடிப்பது தான், இவர்களின் வேலை. அதற்கு, சினிமா, குடி, கிரிக்கெட், விபச்சாரம் முதலியவை உபயோக படுத்துவது போன்ற, போதை மருந்தும் சேர்ந்து விட்டது. இவ்விதமாக, ஜாபர் சாதிக் தனது வியாபாரங்களை விஸ்தரித்த போது, அரசியல் லாபமும் கிட்டியது. அப்போதுதான் அவருக்கு சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே ஹெராயின் வகை போதைப் பொருட்கள் கடத்தலில், வெளிநாட்டு கும்பல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த போதைப் பொருளுக்கு நிகராக போதை தரக்கூடியது மெத்தாம் பெட்டமைன் வகை போதைப் பொருள் ஆகும். இதற்கு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிக தேவை ஏற்பட்டுள்ளது. இந்த போதைப் பொருளைத் தயாரிக்க சூடோபெட்ரின் என்ற மூலப்பொருள் அவசியம். இதன் விலை ஒரு கிலோ ரூ.1.50 கோடி ஆகும். இந்த சூடோபெட்ரினை கடத்தியதாக ஜாபர் சாதிக் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

போலீஸார் மூலம் அறியப் படும் விவகாரங்கள்: 3,500 கிலோ சூடோபெட்ரின்: இவரது கூட்டாளிகள் 450 முறை, 3,500 கிலோவுக்கும் அதிகமான சூடோபெட்ரினை பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி, கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளனர். இதன்மூலம் கோடிகளில் புரண்ட ஜாபர் சாதிக், தனது செல்வாக்கை பயன்படுத்தி அரசியல் மற்றும் சினிமா துறைக்குள் நுழைந்துள்ளார். மேலும், அதிகாரிகளுடன் நட்பு கொண்டுள்ளார். இதுதவிர, ஹவாலா (ஆவணம் இல்லா பணம்) தொழிலையும் இவர் கையாண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல்களை போலீஸார் சேகரித்து வருகின்றனர். மேலும், ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் உள்ளவர்கள், அவரது பினாமிகள், அவரால் ஆதாயம் அடைந்தவர்கள் குறித்தும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் விவரங்களை சேகரித்து வருகின்றனர். விரைவில் அடுத்தடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15-02-2024-லிருந்து ஆள் இருப்பது தெரியவில்லை: இரண்டு வாரங்கள் ஆகியும் ஜாபர் சாதிக் இருக்கும் இடம் தெரியாதலால், விசாரணை தொடரும் நிலையில், “லுக்-அவுட்-நோட்டீஸ்” விடப் பட்டுள்ளது. போதை மருந்து கடத்தல்காரர்கள், எந்த நிலைக்கும் தயாராக இருப்பார்கள். ஆகவே, இத்தனை நாட்களில் என்கு சென்றிருப்பான் என்று தெரியவில்லை. இந்நிலையில், அவர் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்கும்வகையில், ஜாபர் சாதிக்குக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் போலீஸார் ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் கொடுத்துள்ளனர்[7]. இனி அவர் எந்த விமானநிலையத்துக்கு சென்றாலும், உடனடியாக அங்குள்ள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்படுவார்[8]. இதற்காக அனைத்து விமான நிலைய அதிகாரிகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கடல், தரை மார்க்கமாக அவர் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்கவும் போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்ச் இத்தனை சீரியஸான விசயத்தை ஏன் தமிழகத்தில் ஒன்றுமே நடக்காதது போல காட்டிக் கொள்கின்றனர் என்பதும் விசித்திரமாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

03-03-2024


[1] தமிழ்.ஒன்.இந்தியா, வெளிநாடு தப்ப முயலும் ஜாபர் சாதிக்? போதைப்பொருள் தடுப்புத்துறை வைத்த செக்.. லுக் அவுட்நோட்டீஸ், By Nantha Kumar R, Published: Friday, March 1, 2024, 22:37 [IST]

[2] https://tamil.oneindia.com/news/chennai/drug-smuggling-case-look-out-notice-issued-against-dmk-s-nri-wing-ex-functionary-jaffer-sadiq-587579.html

[3] இ.டிவி.பாரத், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ்!, By ETV Bharat Tamil Nadu Desk, Published : Mar 1, 2024, 6:21 PM IST.

[4] https://www.etvbharat.com/ta/!state/central-narcotics-control-unit-officials-issued-a-lookout-notice-to-jaffer-sadiq-regards-drug-smuggling-tns24030104898

[5] தினமலர், .யார் இந்த ஜாபர் சாதிக்?, பதிவு செய்த நாள்: பிப் 26,2024 02:22

[6] https://m.dinamalar.com/detail.php?id=3560719

[7] தமிழ்.இந்து, வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்க ஜாபர் சாதிக்குக்கு எதிராகலுக்அவுட்நோட்டீஸ், செய்திப்பிரிவு, Published : 02 Mar 2024 04:37 AM; Last Updated : 02 Mar 2024 04:37 AM.

[8] https://www.hindutamil.in/news/crime/1209268-look-out-notice-against-jaffer-sadiq-to-prevent-him-from-fleeing-abroad.html

ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்தலில் மாட்டிக் கொண்டது–சகாக்கள் கைதானது, இவன் தலைமறைவானது (1)

மார்ச் 3, 2024

ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்தலில் மாட்டிக் கொண்டது சகாக்கள் கைதானது, இவன் தலைமறைவானது (1)

போதை மருந்து கடத்தலில் இந்தியா வழியாகச் சிக்கிக் கொண்டிருத்தல்: உலக நாடுகளில் போதை மருந்து பிரச்சினை தீவிரமாக இருக்கிறது. இதில், இந்தியா சிக்கிக் கொண்டு தவிக்கிறது எனலாம். போதை மருந்து கடத்தலில், இந்தியா ஒரு பாதையாக அமைத்துக் கொண்டு, அந்த கடத்தல்காரர்கள் செயல்பட்டு வருவதால், அடிக்கடி அவை பிடிக்கப் படுகின்றன. ஆனால், பிடிபடாமல் தப்பிச் செல்லும்சரக்குகள் பற்றி தெரிவதில்லை. போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப் பொருட்களை (சூடோபெட்ரின்), தேங்காய் பவுடர் மற்றும் ஹெல்த் மிக்ஸ் (சத்து மாவு) பாக்கெட்களில் மறைத்து வைத்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. டெல்லியில் கடந்த சில நாட்களாக போதைப்பொருள் கும்பல்களை கைது செய்யும் நடவடிக்கையும் அது தொடர்பான சோதனைகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது[1]. கடந்த வாரம் தெற்கு டெல்லியில் இரண்டு போதைப் பொருள் குடோனை சோதனை நடத்தியதில் சுமார் 1700 கிலோ போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்[2].

எல்லைத் தாண்டி நடக்கும் தீவிரவாதங்களில் போதை மருந்தும் முக்கியப் பங்கு வகிக்கிறது: 40 கோடி ஜனத்தொகை கொண்ட இந்திய என்று உலக அளவில் ஒரு பொருளாதார ரீதியில் முன்னேறி வருகின்ற நாடாக அமைகிறது. இத்தனை ஜனத்தொகை இருந்தாலும் ஓரளவுக்கு அக்களுக்கு உணவு, சுகாதாரம், மருத்துவம், இருப்பிடம், போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு, மக்கள் திருப்தியாக இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. இது மற்ற நாடுகளை ஒப்பிட்டு பார்க்கும்போதும், இந்த உண்மை தெரிகிறது. கொரோனா காலத்தைய துன்பங்களையும் மீண்டு, பழைய நிலைக்கு வந்திருப்பது எல்லாருக்கும் மகிழ்ச்சிகரமான செய்தி. இருப்பினும் எல்லைகளில் ஆப்கானிஸ்தானம், பாகிஸ்தான், சைனா மற்றும் மியான்மர் போன்ற நாடுகள் வழியாக, நமக்கு எல்லை தாண்டிய பயங்கரவாதம், பொருளாதார தாக்குதல், ஊடுருவல், போதை மருந்து கடத்தல் என்றெல்லாம் நடந்து கொண்டு இருக்கின்றன. இதனால் அவை உள்ளூர் பிரச்சனையாகவும் மாறும்பொழுது பாதிப்பு அதிகம் ஆகிறது.

15-02-2024 அன்று தமிழக கும்பல் டில்லியில் சிக்கிக் கொண்டது: இதுதொடர்பாக, டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில், கடத்தல் கும்பல், மேற்கு டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள கிடங்கில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. கடந்த பிப்ரவரி 15-ம் தேதி 2024 அங்கு நுழைந்த போலீஸார், அங்கிருந்த சென்னை முகேஷ், முஜிபுர், விழுப்புரம் அசோக்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதைப் பொருட்கள் தயாரிக்க பயன்படும் 50 கிலோ வேதிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.2,000 கோடி.கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தமிழ் சினிமா திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் என்று குற்றம் சாட்டப்பட்டது. இதனால், பிரச்சினை தீவிரமாகியது. இடையில் சுமார் 10 நாட்கள் என்னவாயிற்று என்று தெரியவில்லை.

25-02-2024 – திமுகவிலிருந்து ஜாபர் சாதிக்கை நிரந்தரமாக நீக்கியது:  திமுகவில் ஸ்டாலின் முதல் மற்ற தலைவர்களுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வெளியாகி வருவதாலும், பிரச்சினை போதைமருந்து விவகாரமாக இருப்பதாலும், திமுக இவரை கைக்கழுவத் தீர்மானித்தது போலும். இதையடுத்து, திமுகவில் இருந்து அவர் நிரந்தமாக நீக்கப்பட்டார்[3]என்ற செய்தி வந்துள்ளது. கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால்[4], அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் அ.ஜாபர் சாதிக்கை நிரந்தரமாக நீக்கி திமுக பொதுச் செயலாளர்  துரைமுருகன் உத்தரவிட்டு இருந்தார்[5]. “அயலகம்,” என்ற ரீதியில், வெளிநாட்டு தொடர்புகள் இனி எதை வெளிகாட்டும் என்றும் கவனிக்கலாம்[6]. திமுக என்றாலே, பொதுவாக “சிறுபான்மையினர்” அதிலும் முஸ்லிம்களுக்கு சாதகமாக இருக்கும் கட்சி என்று அறியப் படுகிறது. கோயம்புத்தூர் காஸ்-சிலின்டர்-குண்டுவெடிப்பில் “விபத்து” என்று ஆரம்பத்தில் பாட்டுப் பாடியது. அதுபோல இல்லாமல், மருந்து என்பதால், நடவடிக்கை எடுத்திருப்பது புரிகிறது.

இறைவன் மிகப்பெரியன்தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் குறித்து அமீர் அறிக்கை: இறைவன் மிகப் பெரியவன் திரைப்படத்தின் ஜாபர் சாதிக் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமானால்[7], அது கண்டிக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுமே.! என இயக்குநர் அமீர் அறிக்கை வெளியிட்டுள்ளார்[8]. “ஜாபர் சாதிக் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமானால்,” என்றால், இவ்வளவு நடந்ததும் பொய்யா அல்லது இவர் நம்பவில்லையா என்று தெரியவில்லை. மேலும் தான் விசாரணைக்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்[9]. இதைப் பற்றி ஒரு வீடியோவையும் வெளியிட்டிருப்பது தெரிகிறது[10]. சினிமாவில் செக்யூலார் போர்வையில் இவர்கள் கம்யூனலாக வேலை செய்வதும், அரசியல் ஆதரவு இருப்பதும் தெரிகிறது. பொதுவாக ஊருக்கு உபதேசம் என்ற பெயரில், வன்முறைக் காட்சிகளை வைத்துக் கொண்டு தான், இவர்கள் படங்களை எடுத்து வருகிறார்கள்.

26-02-2024 நேரில் ஆஜராகும் படி ஜாபர் ஜாதிக்கு நோட்டீஸ்: இந்நிலையில், போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக, தங்கள் அலுவலகத்தில் பிப்ரவரி 26-ம் தேதி 2024 அன்று நேரில் ஆஜராகுமாறு டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார், கடந்த 23-ம் தேதி பிப்ரவரி, ஜாபர் சாதிக் சாந்தோம் அருளானந்தம் தெருவில் உள்ள வீட்டில் சம்மன் (அழைப்பாணை) ஒட்டினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவரையும், அவரது கூட்டாளிகளையும் பிடிக்கதனிப்படை அமைக்கப்பட்டது. அவர்களை தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். வீட்டில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வீட்டை பூட்டிவிட்டு ஜாபர் சாதிக் தலைமறைவாக இருக்கும் நிலையில் பூட்டை உடைத்துக் கொண்டு அதிகாரிகள் வீட்டுக்குள் புகுந்தனர்[11]. பின்னர் அங்கு சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினார்கள்[12]. நேற்று பகல் 12 மணி அளவில் தொடங்கிய இந்த சோதனை இரவு 8 மணி வரை நீடித்துள்ளது. இந்த சோதனையின்போது போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சோதனை முடிந்து வீட்டைவிட்டு வெளியேறிய அதிகாரிகள் அதிரடியாக வீட்டுக்கு சீல் வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்[13]. இதற்கிடையே தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக் எங்கிருக்கிறார்? என்பது தெரியவில்லை[14].

© வேதபிரகாஷ்

03-03-2024


[1] விகடன், ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கும் திமுகவிலிருந்து ஜாபர் சாதிக் நீக்கமும்!, எஸ்.மகேஷ், Published:25 Feb 2024 9 PM; Updated: 25 Feb 2024 9 PM

[2] https://www.vikatan.com/crime/drug-trafficking-case-zafar-sadiq-permanently-expelled-from-dmk

[3] ஜீ.நியூஸ், போதைப்பொருள் விவகாரம்: ஜாபர் சாதிக் திமுகவில் இருந்து டிஸ்மிஸ்துரைமுருகன் அதிரடி!, Written by – S.Karthikeyan | Last Updated : Feb 25, 2024, 04:41 PM IST.

[4] https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-expels-film-producer-jaffer-sadiq-over-drug-smuggling-allegations-490451

[5] நக்கீரன், ஜாபர் சாதிக் திமுகவில் இருந்து நீக்கம்‘-துரைமுருகன் அதிரடி நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 25/02/2024 | Edited on 25/02/2024

[6] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/removal-jaber-sadiq-dmk-duraimurugan-takes-action

[7] புதியதலைமுறை, தண்டிக்கப்பட வேண்டியதுதான்”-’இறைவன் மிகப்பெரியன்தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் குறித்து அமீர் அறிக்கை!, Angeshwar G, Published on: 26 Feb 2024, 11:11 pm

[8] https://www.puthiyathalaimurai.com/cinema/director-ameer-states-on-accused-jaffer-sadiq

[9] தந்திடிவி, வசமாய் சிக்கிய ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் விவகாரம்நான் விசாரணைக்கு தயார்..” இயக்குநர் அமீர் வெளியிட்ட வீடியோ, By தந்தி டிவி 1 மார்ச் 2024 10:45 AM

[10] https://www.thanthitv.com/News/TamilNadu/ameer-dirctor-249422

[11] மாலைமலர், ஜாபர் சாதிக் வீட்டுக்கு சீல் வைப்பு  By மாலை மலர், 29 பிப்ரவரி 2024 8:40 AM; (Updated: 29 பிப்ரவரி 2024 11:37 AM).

[12] https://www.maalaimalar.com/news/state/jaffer-sadiq-house-sealed-705520

[13] தமிழ்.இந்து, திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கின் சென்னை வீட்டுக்கு `சீல்வைப்பு, செய்திப்பிரிவு, Published : 01 Mar 2024 04:56 AM; Last Updated : 01 Mar 2024 04:56 AM

[14] https://www.hindutamil.in/news/crime/1208658-former-dmk-executive-jaffer-sadiq-s-chennai-house-sealed-by-delhi-police.html

மது, கஞ்சா, சிகெரெட், குட்கா முதலிய போதைகளிலிருந்து விடுபட தேவை மறுவாழ்வு இல்லங்களா, ஒழுக்கமா?

ஒக்ரோபர் 5, 2023

மது, கஞ்சா, சிகெரெட், குட்கா முதலிய போதைகளிலிருந்து விடுபட தேவை மறுவாழ்வு இல்லங்களா, ஒழுக்கமா?

மது, கஞ்சா, சிகெரெட், குட்கா இவ்விவகாரங்களில் முரண்பட்ட நிலை: புழல், கதிர்வேடில் உள்ள மதுபோதை மறுவாழ்வு மையத்தை, சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த சீமான் தமிழ்வேந்தன் என்பவர் நடத்தி வருகிறார். இங்கு 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மது, கஞ்சா, சிகெரெட், குட்கா உள்ளிட்ட பல்வேறு வகையிலான போதை பொருட்களுக்கு அடிமையானவர்கள் இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்[1]. இதில் பல்வேறு ஊர்களில் இருந்து வந்து தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்[2]. ஒரு பக்கம் மது, கஞ்சா, சிகெரெட், குட்கா போன்றவை கிடைப்பது என்பது, மறுபக்கம் அவற்றை உட்கொள்வதால்  தீங்கு விளையும் என்பதையும் அவையெல்லாம் குற்றம் என்பதை அறியாமல் செய்வது போன்ற தோற்றத்தையும் உருவாக்குகிறது. குடியைப் பொறுத்த வரையில், அரசே விற்று வருவது தான். பிரச்சினை. ஆனால், இதையும் பெரிதாக எடுத்துக் கொள்வதாக தெரியவில்லை. இக்கால நவீன காலத்தில் நல்லது-கெட்டது சேர்ந்து இருப்பது, செல்வது, செயல்படுவது முரண்ப்ட்டதாக இருக்கிறது.

இத்தகைய சீரழிவுகள் எருகுவது ஏன்?: போதை மருந்து உட்கொள்ளுதல், அதனால் பாதிப்பு போன்றவை முன்னர், பெரிய பணக்காரர்கள், மேனாட்டு நாகரிகம்-கலச்சாரம் கொண்ட சமூகத்தினரிடம் இருந்தது என்ற நிலை மாறி 1980களில் ஏழைகள், குறிப்பாக சேரிகள் போன்றவற்றில் பரவியது. அப்பொழுதெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை எனலாம். ஏதோ குடித்துவிட்டு கிடக்கிறான் போதையில் விழுந்து இடக்கிறான் என்று கடந்து சென்று விடுவர். 1990களில் போதை மருந்து மேனாட்டு முறைகளில் கிடைக்க ஆரம்பித்த்து. 2000களில் பள்ளிகள்-கல்லூரிகள் என்றும் பரவி விட்டது. பிறகு, “ரேவ் பார்ட்டி” என்ற ரீதியில், குறிப்பிட்டல் எலைட் / பெரிய பணக்கார ஆண்-பெண்களிடம் இருந்தது. இப்பொழுது, கீழ்தட்டு மக்களையும் அடையும் நிலைக்கு வந்து விட்டது. இதனால், போதை, போதை மருந்து-பொருள் விநியோகம், வியாபாரம் என்று ஒரு நிலையிலும், போதையால் எழும் குற்றங்கள், அவற்றைக் கட்டுப் படுத்தும் நிலை என்றும் மாறிவிட்டது.

புழல் மறுவாழ்வு மையத்தின் மீது புகார்: இவர் தமிழகத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையங்களின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். 135 மறுவாழ்வு மையங்கள் இவ்வமைப்பின் / சங்கத்தின் கீழ் உறுப்பினராக செயல்பட்டு வருகின்றன. இவர் நடத்தி வரும் மையத்தில் மது, போதை பழக்கத்துக்கு அடிமையானோருக்கு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவர், மனோதத்டுவ நிபுணர், ஆலோசனையாலர்கள், செவிலியர் என்று பலர் வேலை செய்வதாகத் தெரிகிறது. இந்நிலையில், ஒரு நோயாளியை துன்புருத்துவதாக புகார் எழுந்தது. இதனால், அவரது உறவினர் அங்கு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த மணலியைச் சேர்ந்த மதன் என்பவரை பார்க்க, அவரது குடும்பத்தினரை அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. சந்தேகத்தின் படி, அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்த போது, அங்கு சிகிச்சை பெறும் நபர்களை அடித்து, துன்புறுத்தி, சூடு வைப்பதாக தெரிவித்துள்ளனர். தொடந்து வற்புருத்தியும் ாார்க்க அனுமதி அளிக்கப் படவில்லை.

மறுவாழ்வு மையசோதனை, துன்புருத்தல் உறுதி, நடவடிக்கை எடுக்கப் படல்: இது குறித்து, போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. உரிய அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கப் பணிக்கப் பட்டனர். எம்.கே.பி நகரைச் சேர்ந்த சிவகுமார், 50 என்பவர், அங்கு சிகிச்சை பெற்ற போது கை, கால்களில் சூடு போட்டு சித்ரவதை செய்த வீடியோ, சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் பரவியது[3]. தொடர் புகார்களை அடுத்து, அந்த சிகிச்சை மையத்தில், ஓய்வு பெற்ற நீதிபதி மணிவாசகம் மற்றும் மனநல சுகாதார துறை அதிகாரிகள் சோதனையிட்டு, விசாரணை நடத்தினர்[4]. இதை முன்னிட்டு, அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டிருந்தனர்[5]. மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த 34 பேரிடமும் தனித்தனியே விசாரணை நடந்தது[6]. அங்கு போதை மறுவாழ்வு சிகிச்சைக்கு வருவோர் துன்புறுத்தப்படுவது உறுதியானதை அடுத்து, அங்கிருந்த குடிநோயாளிகள், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்[7].

சீமான் கைது, மறுவாழ்வு மையத்திற்கு சீல்: இதைத்தொடர்ந்து, சோதனைகள் முடிந்த பிறகு, நீதிபதி தலைமையிலான குழுவினர் அந்த போதை மறுவாழ்வு மையத்திற்கு சீல் வைத்து, உரிமையாளர் சீமான் தமிழ் வேந்தனை கைது செய்து விசாரிக்கின்றனர்[8]. அப்படியென்றால், எப்படி மருத்துவம், போதை-மது போன்றவற்றிலிருந்து மறுவாழ்வு கொடுக்கும் ஆலோசகர்கள் முறையாக செயல்படவில்லை என்றும் தெரிகிறது. 11-வருடங்களாக, இவரது இயக்கம் செயல்பட்டு வருகிறது என்றால், இம்மறுவாழ்வு முறைகளில் மேன்பட்டு சீரமைத்த நிலையில் சிறந்திருக்க வேண்டும். ஆனால், ஏதோ “மூன்றா-தர”துன்புருத்தும் வழிகள் பின்பற்றப் பட்டிருப்பது திகைப்பாக இருக்கிறது. ஆகவே, இது, மறுவாழ்வு மையத்தின் தலைவர் அனுமதி அல்லது ஒப்புதல் இல்லாமல் நடந்தேறி இருக்க முடியாது. பிறகு, இதற்கு யாரோ பொறுபேற்க வேண்டிய நிலை உள்ளது.

மறுவாழ்வு மையத்தில் குற்றங்கள் நடைபெறுவதில்லையா?: 135 மறுவாழ்வு மையங்கள் இவ்வமைப்பின் / சங்கத்தின் கீழ் உறுப்பினராக செயல்பட்டு வருகின்றன. உயர்நீதிமன்றம் 2008ல் அனுமதியற்ற மறுவாழ்வு மையம் நடத்த முடியாது என்று தீரிப்பு அளித்த நிலையில், இத்தகைய மறுவாழ்வு மையங்கள் சேர்ந்து சங்கம் அமைத்து, பதிவு செய்து கொள்ள ஆரம்பித்தன. இதைப் பற்றிய விவரங்களை அத்தலைவரே விவரித்துள்ள வீடியோவும் இருக்கிறது[9]. மறுவாழ்வு மையத்தில் அடிப்பார்கள்-உதைப்பார்கள் என்று ஒருவர் சொல்வதாக சீமானே குறிப்பிட்டுள்ளதை கவனிக்கலாம். நோயாளிகளிடம் அன்பாக இருக்க வேண்டும், அவர்களை அடிக்கக் கூடாது, துன்புருத்தக் கூடாது என்றெல்லாம் பேசுவதையும் கவனிக்கலாம். குற்றங்களை நோய் என்று குறிப்பிடும் போக்கும் திகைப்படைவதாக இருக்கிறது. ஏனெனில், அத்தகைய சமாளிப்பு, சமசரம் முதலியவை “பிடோபைல்” போன்ற கற்றங்களையும் மறைக்க “நோய்” என்று கூறுவதால், குற்றங்களை மறைக்க முடியாது.

சமூகம் சீரழிவுகளிலிருந்து மீள வழி என்ன?: இந்தியா போன்ற கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம் மிக்க சமுதாயம் சிறிது-சிறிதாக மேனாட்டு கலாச்சாரத் தாக்கம் மற்றும் தாக்குதல்களால் பாதிக்கப் பட்டு வருவதை கவனித்து வருகிறோம். தனிமனித ஒழுக்கம், குடும்பம்,  சமூகம் என்று பலநிலைகளில் பாதிப்புகள் இருந்து வருகின்றன. இப்பொழுது, ஐரோப்பிய நாடுகளின் கலாச்சார ஈர்ப்புகளைத் தாண்டி, அமெரிக்க கலாச்சார மோகங்களில் இந்திய இளைஞர்கள் சிக்கியுள்ளனர். சினிமா-கிரிக்கெட் என்று ஆரம்பித்து அவை இணைந்து பல்கோடி வியாபாரங்களாக மாறிவிட்டப் பிறகு, அக்கலவைகள் பல்வித சீரழிவுகளாக மாறி, ப்ரவ ஆரம்பித்து விட்டன. அதன் விளைவுதான்.. மது, கஞ்சா, சிகெரெட், குட்கா, போதை மருந்து, விபச்சாரம், ……..சீரழிவுகள்……போதாகுறைக்கு பல்வித குற்றச் செயல்களும் இவற்ருடன் கலந்து விட்டன. பள்ளி-கல்லூரி-பல்கலை வளாகங்களிலேயே தலை விரித்தாடி வருகின்றன. அந்நிலையில் குடும்பங்கள் காக்கப் படவேண்டும் என்றால், நிச்சயமாக, ஒழுக்கம், கட்டுப்பாடு, பெற்றோரை மதித்தல், ஆன்மீகம், மதநெறிமுறைகள் என்று பின்பற்ற வேண்டிய அத்தியாவசியம் எழுகின்றது. அவி போற்றப் படாமால், எல்லாவற்றிற்கும் ஆலோசககர்கள், மனோதத்துவ நிபுணர்கள் என்றெல்லாம் வந்து ஒன்றையும் செய்து விடமுடியாது.

© வேதபிரகாஷ்

05-19-2023


[1]  தமிழ்.கெட்.லோகல்.ஆப், போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்ட 30பேர் மீட்பு, By ஜீவன், Oct 01, 2023, 16:10 IST

[2] https://tamil.getlokalapp.com/tamilnadu-news/thiruvallur/madhavaram/recovery-of-30-people-admitted-to-drug-rehabilitation-center-11614781

[3] தினத்தந்திடிவி, போதை மறுவாழ்வு மையத்தில் …..நோயாளிகளை அடித்து சித்ரவதை………அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள், October 1, 2023. 02.04 PM.

[4] https://www.thanthitv.com/News/TamilNadu/in-drug-rehabilitation-center-beating-and-torturing-patients-officials-took-action-216237

[5] தினத்தந்தி, நோயாளிகளுக்கு சூடு வைத்து சித்ரவதை போதை மறுவாழ்வு மையத்துக்கு சீல்உரிமையாளர் கைது, October 1, 2023. 10.03 a.m.

[6] https://www.dailythanthi.com/News/State/torture-drug-rehabilitation-center-sealed-by-keeping-patients-warm-owner-arrested-1063921

[7] தினமலர், புழல் போதை மறுவாழ்வு மையத்தில் சித்ரவதைக்கு ஆளான 34 பேர் மீட்பு, பதிவு செய்த நாள்: அக் 01,2023 05:01.

[8] https://m.dinamalar.com/detail-amp.php?id=3445574

[9] குடி போதை நோய்யையாளிகளை சுலபமாக குணப்படுத்தலாம் Dr. சீமான் தமிழ்வேந்தன், Dec 21, 2018, https://www.youtube.com/watch?v=C868qrXay-Q

செங்கல்பட்டு குழந்தைகள் காப்பகம், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர், பெண்-குழந்தைகளைக் கற்ப்ழிப்பது, புகார் மற்றும் வழக்குகள் (2)

திசெம்பர் 25, 2020

செங்கல்பட்டு குழந்தைகள் காப்பகம்குழந்தைகள் நலக்குழு உறுப்பினர், பெண்குழந்தைகளைக் கற்ப்ழிப்பது, புகார் மற்றும் வழக்குகள் (2)

மணிகண்டனுக்கு நீதிமன்ற தண்டனை வழங்கியது (டிசம்பர் 2017): நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், செங்கல்பட்டு குழந்தைகள் நலக்குழுத் தலைவருக்கு, இரண்டு மாத சிறைதண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பரங்கிமலையில் புனித ஜோசப் பிரான்சிஸன் சகோதரிகள் அமைப்புக்கு சொந்தமான குழந்தைகள் காப்பகம், பதிவு செய்யப்படாததால் செங்கல்பட்டு குழந்தைகள் நலக் குழு, காப்பகத்தில் இருந்து ஐந்து சிறார்களை அழைத்துச் சென்று தனியார் மையத்தில் தங்கவைத்தது. ஐந்து குழந்தைகளையும் மீட்டுத் தரக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, உயர்நீதிமன்றம் ஐந்து சிறார்களையும் உடனடியாக மீண்டும் அதே இல்லத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தாததை அடுத்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி துரைசாமி, செங்கல்பட்டு குழந்தைகள் நலக்குழுத் தலைவர் மணிகண்டனுக்கு 2 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்[1]. நீதிமன்ற உத்தரவை பின்பற்றாதது மட்டுமல்லாமல், மன்னிப்பு கேட்க கூட அவர் முன் வரவில்லை. இது போன்ற நடவடிக்கைகளை அனுமதித்தால் ஒரு தவறான முன்னுதாரணம் ஆகி விடும் எனக் கூறி மணிகண்டனுக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்[2]. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற மணிகண்டன் தரப்பு கோரிக்கையை ஏற்ற நீதிபதி, தண்டனை 2 வாரங்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.

குழந்தைகளை சீரழிக்கும் காமுகர்கள்: குழந்தை என்றால் 18 வயதிற்கு கிழேயுள்ள சிறுமி அல்லது சிறுவன் ஆகும். இதில், 3 முதல் 17 வரையுள்ள சிருமிகள், டீன் ஏஜில் உள்ள, வயதுக்கு வந்த இளம்பெண்கள் ஆவர். ஆகவே, இவர்களைத்தான், காமுகர்கள், தங்களது இச்சைக்கு சதாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை, கிருத்துவ பிடோபல் / சிறுவர் கற்ப்பழிப்பாளிகள் பற்றிதான், அதிகமாக செய்திகள் வந்துள்ளன. எப்பொழுதுவது, கூலிக் காரன், கிழவன், சிறுமியர்களிடம் சில்மிஷம் செய்ததாக, செய்திகள் வந்ததுண்டு. அவர்கள் தண்டனை பெற்ற / பெறு செய்த செய்திகளும் வந்துள்ளன / வருகின்றன. ஆனால், இந்த அரசு காப்பக கற்பழிப்புகள், பாலியல் குற்றங்கள் பற்றி விவரங்கள் வெளி வராமல் இருக்கின்றன. ஆகவே, இது பற்றிய விழிப்புணர்வு தேவை என்று தெரிகிறது. அனாதை இல்லங்களில் நடக்கும் அக்கிரமங்களைக் கண்காணிக்கப் படவேண்டும். ஏற்கெனவே அக்குழந்தைகள் பெற்றோர் அறியாமல், மற்றவர்களின் ஆதரவுடன் வளர்ந்து வரும் நிலையில், அவர்களை பாலியல் ரீதியில் பலாத்காரம் செய்வது, கற்பழிப்பது என்பது நினைத்துப் பார்க்க முடியாத காரியமாக, குற்றமாகத் தெரிகிறது. அதை செய்யத் துணியும் மற்றும் செய்து வரும் கயவர்கள், எத்தகைய கொடிய அரக்கர்களாக இருப்பர் என்பதனை அறிந்து கொள்ளலாம். ஆகவே, அவர்களுக்குக் கடுமையான தண்டனை அளிக்கப் படவேண்டும்.

காப்பகங்களில் உள்ள அதிகாரி போதை மருந்து வியாபாரத்தில் ஈடுபட்டதால் சஸ்பெண்ட் செய்யப் பட்டது (2018)[3]: தாஸ் என்கின்ற துணை தலைமை அதிகாரி (Das, assistant superintendent at the special home for children at Chengalpet) போதை மருந்து வியாபாரத்தில் ஈடுபட்டதாதத் தெரிந்தது. காப்பகத்திற்கு குழந்தைகளைப் பார்க்க வருபவர்கள் மூலம் கஞ்சா/கன்னபீஸ் போன்ற போதைப் பொருட்களை கொண்டு வருவதாகத் தெரிந்தது. இதனால், சிவகுமார், சூப்பிரென்டென்டுக்கு ஒரு மெமோவும் அனுப்பப் பட்டது. ஒரு முறை அங்கிருக்கும் சிறுவர்கள், போதையில் சிறைக் காவலரைத் தாக்கிய போது, விவகாரம் தெரிய வந்தது. அப்பொழுது அவர்களிடமிருந்து, போதைப் பொட்டலங்கள், செல்போன், சிம்கள் முதலியன பறிமுதல் செய்யப் பட்டன. காப்பகத்தில், அவையெல்லாம் தடை செய்யப் பட்டவை ஆகும். காப்பகத்தில் இருக்கும் உயர் அதிகாரிகளே, வரும் பார்வையாளர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு, இத்தகைய வேலையை செய்து வருகின்றனர் என்று “டைம்ஸ் ஆப் இந்தியா,” செய்தி வெளியிட்டது. பார்வையாளர்கள், சாப்பாடு கொண்டு தரும் சாக்கில், உணவு டப்பாக்களில், இந்த போதைப் பொருட்களை, மறைத்து வைத்து, கொடுத்து விட்டுச் செல்வதாக, அங்குள்ளவர்கள் அறிவித்தனர். இதனால், நிலைமையை விசாரிக்க ஒரு குழு வந்து விவரங்களை அறிந்தது, ஒரு அறிக்கைக் கொடுத்தது. அதன் படி, சில குறிப்பிட்ட அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தது[4].

காப்பகங்களின் அவலநிலை (மார்ச்.2016): காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில், அரசு அனுமதியின்றி, ஏராளமான காப்பகங்கள் முளைத்து வருகின்றன; அவற்றில், ஏராளமான குழந்தைகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்[5]. அந்த, ‘காப்பகங்களில்’ எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி, மோசமான நிலை உள்ளது. அங்கு பராமரிக்கப்படும் குழந்தைகள், வேலைக்கு அனுப்பப்படுவதாகவும் கூறப்படுகிறது[6]. மேலும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்; அதற்கு, அரசு அனுமதியில்லை. எனினும், முறைகேடாக, பச்சிளம் குழந்தைகள் அங்கு பராமரிக்கப்படுகின்றன.கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் 2013ல், மாவட்டம் முழுவதும், 53 அனுமதியற்ற குழந்தைகள் காப்பகங்கள் மூடப்பட்டன. மாவட்ட நிர்வாகத்தின் கண்களை மறைத்து, சில அதிகாரிகள் துணையுடன், காப்பங்கங்கள் மீண்டும் முளைத்து வருகின்றன. அதாவது, அவ்வாறு காப்பகங்களை வைப்பதால், யாருக்கு லாபம் என்று கவனிக்க வேண்டும். காப்பகங்களை வைத்து, நிதியுதவி பெறுகின்றனர், மற்றும், செலவழித்தலும், அதிகமாக பணம் மிஞ்சுகிறது, அதனை, தமது விருப்பகங்களுக்கு ஏற்றபடி உபயோகப் படுத்துகின்றன என்று தெரிகிறது. இந்த காப்பகங்கள் மீது, மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்டு செயல்படும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

© வேதபிரகாஷ்

19-12-2020 / 25-12-2020


[1] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ். செங்கல்பட்டு குழந்தைகள் நலக்குழு தலைவருக்கு 2 மாத ஜெயில் : ஐகோர்ட் உத்தரவுBy: WebDesk, December 13, 2017, 7:14:17 PM.

[2]  https://tamil.indianexpress.com/tamilnadu/chengalpattu-children-welfare-officer-2-months-jail-chennai-high-court-order/

[3] An official from the state social defence department has been suspended for his alleged involvement in drug trade at a government juvenile home. Das, assistant superintendent at the special home for children at Chengalpet, allegedly colluded with visitors to smuggle ganja (cannabis) into the home, a senior official from the department told TOI. Another official, Selvakumar, who works as the superintendent, has received a memo seeking an explanation. Last week, a group of boys attacked a guard allegedly under the influence of ganja. Sachets of the contraband, beedis, mobile phones and SIM cards – all banned items at the correctional facility – were seized by authorities. TOI reported the incident on October 3. 2018.

Times of India, Official suspended for aiding drug trade at juvenile home, Ram Sundaram | TNN | Oct 9, 2018, 05:53 IST.

[4] Insiders said higher-ups at the home colluded with visitors – families and friends of inmates – to smuggle in ganja by concealing them in bread packets and lunch boxes. Ganja addiction was common among inmates, they said. Based on the news report, a team inspected the home on October 4 and submitted a report. Disciplinary proceedings have been initiated against two officials based on the team’s report which confirmed that ganja was sneaked into the home, the official said.

https://timesofindia.indiatimes.com/city/chennai/official-suspended-for-aiding-drug-trade-at-juvenile-home/articleshow/66127333.cms

[5] தினமலர்,குழந்தைகள் காப்பகங்களில் நடக்கும் முறைகேடுகள் அம்பலம்! நிர்வாகிகளின் பணத்தாசைக்கு இரையாகும் பிஞ்சுகள் , Added : மார் 02, 2016  05:35

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=1469508&Print=1

செங்கல்பட்டு குழந்தைகள் காப்பகம், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர், பெண்-குழந்தைகளைக் கற்ப்ழிப்பது, புகார் மற்றும் வழக்குகள் (1)

திசெம்பர் 25, 2020

செங்கல்பட்டு குழந்தைகள் காப்பகம்குழந்தைகள் நலக்குழு உறுப்பினர், பெண்குழந்தைகளைக் கற்ப்ழிப்பது, புகார் மற்றும் வழக்குகள் (1)

செங்கல்பட்டில் உள்ள குழந்தைகள் காப்பகம் தொடர்ந்து பாலியல் குற்றங்களில் சம்பந்தப் பட்டுள்ளது: செங்கல்பட்டில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில்[1] உள்ள சிறுமிகளைக் கற்பழிப்பது, கர்ப்பமாக்கியது போன்ற விவகாரங்கள் நீதிமன்றம் வரைச் சென்றுள்ளன[2].  14 வயதான டீன் ஏஜ் சிறுமியை, ஒருவன் கற்பழித்ததால், கர்ப்பமடைந்தால். அந்த கர்ப்பத்தைக் கலைப்பது பற்றி நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளார்கள்[3]. “இந்தியா டுடேவிலும்” இதைப் பற்றி விவரமாக அலசப் பட்டது[4]. காப்பகங்களில் பெண்-குழந்தைகள் தொடர்ந்து இவ்வாறான பாலியல், செக்ஸ் தொல்லைகளுக்கு உட்படுத்தப் பட்டுள்ளார்கள்[5]. காப்பகத்தைச் சேர்ந்தவர்கள், பாதுகாவலர்கள் தான் அத்தகைய வேலைகளை செய்துள்ளனர். ஆனால், அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது, தண்டனை கொடுக்கப் பட்டது போன்ற விவரங்கள் தெரியவில்லை. நீதிமன்றத் தீர்ப்புகள் இருந்தாலும், குற்றாவாளிகள் தண்டனையைப் பற்றி தெரியவில்லை, அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மற்றவர்கள் இவற்றில் ஈடுபட்டுள்ளதால், இத்தகைய விவரங்கள் பெரும்பாலும், மறைக்கப் பட்டு வருகின்றன. இந்நிலையில் தான், குழந்தைகள் நலக்குழுவில் உள்ள உறுப்பினர்கள், இன்னொரு உறுப்பினருக்கு எதிராக மனு/வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் தாமோதரனை நீக்க வழக்கு: செங்கல்பட்டு குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து, தாமோதரன் என்பவரை நீக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது[6]. மனுவுக்கு பதில் அளிக்க, அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[7]. செங்கல்பட்டு மாவட்ட சிறப்பு முகாம் உறுப்பினர்கள், செங்கல்பட்டு அரசு சிறப்பு முகாமில் உள்ள, குழந்தைகள் நல குழு உறுப்பினர்கள் குளோரி ஆனி, மணிகண்டன், முகமது சகாருதீன் ஆகியோர் உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்த மனுவில், ‘குழந்தைகள் நல குழுவில், உறுப்பினராக இருக்கும் தாமோதரன், சிறார் நீதி சட்டத்தை மீறி செயல்படுகிறார். ‘இவர், இந்த பொறுப்பில் தொடர்வது, காப்பகத்தில் உள்ள பெண் குழந்தைகளின் நலனுக்கு உகந்ததாக இல்லை[8]. எனவே, இவரை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும்’ என, கூறப்பட்டுள்ளது[9]. குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்களே, இன்னொரு குழு-உறுப்பினர் மீது குற்றஞ்சாட்டி வழக்குத் தொடர்ந்துள்ளாதால், இது முக்கியமாகிறது. இருப்பினும், சில ஊடகங்களே, இச்செய்தியை வெளியிட்டுள்ளன..

வேலியே பயிரை மேய்க்கும் வேலையில் ஈடுபட்டுள்ள தாமோதரன்: அவர்கள் தாக்கல் செய்த மனுவில், “குழந்தைகள் நலக் குழுவில் உறுப்பினராக இருக்கும் தாமோதரன், சிறார் நீதிச் சட்டத்தை மீறிச் செயல்படுகிறார். பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு சிரமங்களிலிருந்து மீட்கப்படும் குழந்தைகளை குழுவின் முன் ஆஜர்படுத்தாமல் மறைக்கிறார்[10]. இது குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பாக அமைந்துவிடும். குழுவால் விசாரிக்கப்பட்ட சிறுமியிடம் நூறு ரூபாயைக் காண்பித்து, தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி உறுப்பினர் தாமோதரன் வற்புறுத்தியுள்ளது ஆபத்தைத் தருகிறது[11]. ஆபாசப் படங்கள் பார்க்கும் பழக்கம் கொண்ட அவரால், காப்பகக் குழந்தைகளுக்கு ஆபத்தான சூழல் நிலவுகிறது. இதுகுறித்து அரசிடம் புகார் அளித்த எங்களைத் தாக்கினார். உறுப்பினர் தாமோதரனைப் பதவியிலிருந்து நீக்கும்படி தமிழக சமூக நலத்துறை செயலாளர் மற்றும் சமூகப் பாதுகாப்பு இயக்குனரக ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளனர். தாமோதரன் என்ற உறு[ப்பினர், உள்ளே இருந்து கொண்டு, இத்தனையும் செய்து வருவதே திகைப்பாக இருக்கிறது.

பிப்ரவரி 2021க்குத் தள்ளி வைக்கப் பட்ட வழக்கு: இம்மனு, நீதிபதி, புஷ்பா சத்தியநாராயணா முன் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்கும்படி, சமூக நலத்துறை மற்றும் சமூக பாதுகாப்பு இயக்குனரகத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை, 2021, பிப்., 2ம் தேதிக்கு, நீதிபதி தள்ளி வைத்தார். இப்பொழுது வந்துள்ள செய்திகளிலிருந்து இவ்வாளவு தான் தெரிய வந்துள்ளது. நாளிதழ்கள், மேலும் விவரங்கள் கொடுக்குமா, கடைசி வரையில் என்னவாயிற்று, என்று தெரிவிப்பார்களா அல்லது, மேற்குறிப்பிட்ட வழக்குகளைப் போல, மறைத்து விடுவார்களா என்று தெரியவில்லை.

கடந்த இரு ஆண்டுகளில் 1,345 ஆதரவற்ற குழந்தைகள் கண்டறியப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றனர்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளில் 1,345 ஆதரவற்ற குழந்தைகள் கண்டறியப்பட்டு அவா்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக மாவட்டக் குழந்தைகள் நலக் குழுமத்தின் தலைவா் என்.ராமச்சந்திரன் வியாழக்கிழமை தெரிவித்தார். இது குறித்து அவா் மேலும் கூறியது: “காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியாா் மற்றும் அரசு சாா்பில் 120 குழந்தைகள் காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. இக்காப்பகங்களில் பராமரிக்கப்பட்டு வந்த 817 குழந்தைகள் 18 வயதைக் கடந்த பிறகு அவா்களது பெற்றோர்கள், உறவினா்கள் அல்லது காப்பாளா்களிடம் உறுதிமொழியின் பேரில் ஒப்படைக்கப்பட்டு வருகின்றனா். ஆதரவற்ற குழந்தைகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகள் என பலரையும் கண்டறிந்து கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் 1,345 குழந்தைகள் காப்பகங்களில் சோ்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனா். தெருக்களில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 5 பெண் குழந்தைகள் பள்ளியில் சோ்க்கப்பட்டு படித்து வருகின்றனா். காணாமல் போனதாக தெரிய வந்த 15 குழந்தைகள் கண்டு பிடிக்கப்பட்டு அவா்களது பெற்றோா்களிடமும், காப்பாளா்களிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளனா். 8 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் பா.பொன்னையா தலைமையில் நடந்த மீளாய்வுக் கூட்டத்தில் இவ்விவரங்களைத் தெரிவித்திருக்கிறோம்”.

டிசம்பர் 2010ல் குழந்தைகள் பாதுகாப்பு, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி என்று விழிப்புணா்வு முகாம்களை நடத்தியது[12]: குழந்தைகள் நலக் குழுமத்தின் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி என விழிப்புணா்வு முகாம்களை நடத்தி வருவதாகவும் அவா் தெரிவித்தார். குழந்தைகள் நலக்குழு உறுப்பினா்கள் எஸ்.சக்திவேல், சா.நிர்மலா, குளோரி ஆனி, கே.தாமோதரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனா்[13]. இதில் தாமோதரனும் இருப்பது நோக்கத் தக்கது. இவ்வாறு ஒன்றாக வேலை செய்த குளோரி ஆனி தான், இப்பொழுது வழக்குத் தொடுத்துள்ள மூவரில் ஒருவர் என்று குறிப்பிடத் தக்கது. அதனால், ஒருவேளை, எல்லைகளை மீறி, தாமோதரன் செயல்பட்டிருக்கக் கூடும் என்று தெரிகிறது. ஒரு வருடத்தில், அத்தகைய பாலியல் தொந்தரவுகளை என்ன, எப்படி, ஏன் செய்தார் என்ற விவரங்கள் தெரியவில்லை. ஊடகங்களிலும் வரவில்லை போலும். செங்கல்பட்டு குழந்தைகள் நலக்குழுவில் இருப்பவர்கள் எல்லோருமே, ஒருமாதிரியாக நடந்து கொள்வதும் விசித்திரமாக உள்ளது.

© வேதபிரகாஷ்

19-12-2020 / 25-12-2020


[1] Govt Children Home for Boys, Taluk Office Compound, Chengalpettu, Kancheepuram  District,  Tamil Nadu – 603002. Phone – 27424458.

[2] IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS DATED : 28.04.2018, CORAM, THE HONOURABLE MR.JUSTICE T.RAJA, W.P.No.10155 of 2018

Child Welfare Committee,

represented by its

Chairperson and Members, Govt.Children Home for Boys, GST Road, Chengalpattu 603 002.

Kancheepuram District.                                                                                                                   …               Petitioner

vs-

1.The Principal Secretary,

   Health and Family Welfare Department,    Secretariat, Chennai 600 009.

2.The District Collector,    Collectorate Campus, Kancheepuram,    Kancheepuram District.

3.The Dean    Chengalpet Medical College Hosptial,    Chengalpet,    Kancheepuram District.

4.The HOD ,    Department of Obstetrics and Gynecology, Chengalpattu Medical College and Hospital,    Chengalpattu.

5.The Inspector of Police,    Uthiramerur Police Station,    Uthiramerur, Kancheepuram District.                                                                                                     …                Respondents

[3] https://indiankanoon.org/doc/2585106/

[4] India Today, Rape, abuse, torture: Why Tamil Nadu’s care homes for children are more like ‘scare’ homes, July 29, 2016, UPDATED: October 10, 2016 13:37 IST.

[5] https://www.indiatoday.in/india/story/tamil-nadu-care-homes-for-children-are-more-like-scare-homes-332042-2016-07-29

[6] தினகரன், செங்கல்பட்டு குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் தாமோதரனை பதவி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு, 2020-12-19@ 15:04:40.

[7] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=640175

[8] தினமலர், குழந்தைகள் நலக் குழு உறுப்பினரை நீக்க வழக்கு, Added : டிச 19, 2020 22:59.

[9]  https://www.dinamalar.com/news_detail.asp?id=2674337

[10] தமிழ்.இந்து,  பயிரை மேயும் வேலி; குழந்தைகள் நலக்குழு உறுப்பினரின் தவறான நடத்தை: நடவடிக்கை கோரிய வழக்கில் அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ், செய்திப்பிரிவு, Published : 19 Dec 2020 02:44 PM Last Updated : 19 Dec 2020 02:44 PM.

[11] https://www.hindutamil.in/news/tamilnadu/613420-crop-grazing-fence-misconduct-of-a-child-welfare-committee-member-high-court-notice-to-the-state-in-a-case-seeking-action.html

[12] தினமணி, இரு ஆண்டுகளில் 1,345 குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைப்பு, By DIN | Published on : 19th December 2019 11:32 PM.

[13]https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/dec/19/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1345-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3310408.html