Posts Tagged ‘சைமன்’

அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது – சீமானின் பேச்சு, எதிர்ப்பு, கண்டனம் மற்றும் மிரட்டல் (2)

ஓகஸ்ட் 4, 2023

அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டதுசீமானின் பேச்சு, எதிர்ப்பு, கண்டனம் மற்றும் மிரட்டல் (2)

சீமான்இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் தி.மு.. செய்த ஒரு நன்மையைச் சொல்லுங்கள். நான் கட்சியை கலைத்துவிட்டுப் போகிறேன்: இதற்குப் பிறகு, சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தபோது பேசியதாவது: “தொடர்ச்சியாக 18% வாக்கை தி.மு.. காங்கிரசிற்குப் போடுகிறார்கள். பிறகு மாற்றம் எப்படி வரும்? எதிர்க்கட்சியாக இருக்கும்போது இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்வதாகச் சொல்வார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு செய்ய மாட்டார்கள். எங்களுக்கு உரிமை இருக்கிறது, ஆதங்கம் இருக்கிறது என்பதால் சொல்கிறோம். இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் தி.மு.. செய்த ஒரு நன்மையைச் சொல்லுங்கள். நான் கட்சியை கலைத்துவிட்டுப் போகிறேன். நான் எவ்வளவோ பேசியிருக்கிறேன், அதையெல்லாம் விட்டுவிட்டு, சாத்தானின் பிள்ளைகள் என்று பேசிவிட்டாரே என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள்,என்று குறிப்பிட்டார்.

சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தொடர்ந்து பேசியதாவது: மணிப்பூரில் இருந்து வந்து நமக்கு யாரும் ஓட்டு போடப்போவதும் இல்லை. அதை பற்றி நாம் ஏன் பேச வேண்டும். இங்கு இருக்கக்கூடிய கிறிஸ்துவர்களும் நமக்காக வாக்களிக்கப்போவது கிடையாது. நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம், இஸ்லாத்தையும் கிறிஸ்துவத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று. அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகளாகிவிட்டது, என்று கூறி இருந்தார். அதோடு நிற்காமல், சும்மா போய் தேவாலயத்தில் தேவரே வாரீர் வாரீர் என்று பாடிவிட்டு, கடைசியில் யார் யாருக்கோ நாட்டை கொடுத்து இருக்கிறார்கள். இந்த நாட்டில் நடந்திருக்கும் அநீதி அக்கிரமங்களுக்கு பெரிய பொறுப்பு,” என்றும் கூறி சர்ச்சையை கிளப்பி இருந்தார். அவரின் இந்த பேச்சு பெரிய சர்ச்சையான நிலையில் சீமானின் பேச்சுக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் விமர்சனங்களை வைத்தன. அதேபோல் சில இஸ்லாமிய அமைப்புகள் சீமானுக்கு எதிராக காவல் நிலையத்திலும் புகார் வைத்தன.

சீமான் மன்னிப்பு கேட்டால் என்ன ஓட்டா கிடைக்கும்?: இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம் செய்தியாளர்கள் இந்த பேச்சு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான், ”மன்னிப்பு கேட்டுவிட்டேன் என்றால் எனக்கு ஓட்டு போட்டுவிடுவார்களா? வருத்தம் தெரிவிக்க வேண்டியது எனது மக்கள்தான். என்னைப் போன்று நிற்போரை ஆதரிக்காமல் நடுத்தெருவில் போராட விட்டது யாரு? அநீதிக்கு எதிராக போராடிய ஒரே ஒருவர் பழனிபாபாதான். அவரையே நீங்கள் மதிப்பதில்லையே. அவரையே அநியாயமாக சாக விட்டவர்கள்தானே. மானமுள்ள தமிழன் திமுகவிற்கு ஓட்டு போடுவானா என கேட்டவர் பழனி பாபா. அதனால் அவரைப்பற்றி பேச மாட்டார்கள். அவரை விடவா நான் பேசிவிடப் போகிறேன். அவரே உங்களுக்கு ஒரு பொருட்டல்ல நானெல்லாம் ஒரு பொருட்டா? முதலில் அண்ணன் ஜவாஹிருல்லா கலைஞரைப் பற்றி பேசியதை கேட்டுள்ளீர்களா? முதுகில் குத்திய துரோகி எனக் கலைஞரை பேசியுள்ளார்[1]. ஆனால் இப்பொழுது அங்கு ஒரு சீட்டுக்காக நிற்கிறீர்கள்” என்றார். சீமானின் பேச்சு சர்ச்சையான நிலையில் மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திராவிட நட்பு கழகம் அமைப்பு சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது[2].

மதம், சாதியை விட எல்லா அடையாளங்களையும் விட மொழி இனம் தான் பெரியது: சீமான் தொடர்ந்து பேசியது ‛‛மதம், சாதியை விட எல்லா அடையாளங்களையும் விட மொழி இனம் தான் பெரியது. முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் தமிழன். பெரும்பான்மை தேசிய இனத்தின் மகன். வந்தவன், போனவன் எல்லாம் சிறுபான்மையினர்சிறுபான்மையினர்என சொல்பவர்களை செருப்பால் அடிப்பேன்,” என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்[3]. சென்னையில் நிருபர்களை சந்தித்த சீமான் கூறியதாவது[4]: முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களுக்கு காங்கிரஸ், தி.மு.க., ஏதாவது நல்லது செய்தது உண்டா? மதத்தை வைத்து மனித கூட்டத்தை கணக்கிட்டது எங்கேயாவது உள்ளதா? ஐரோப்பிய யூனியன் முழுவதும் கிறிஸ்தவர்கள் இருந்தாலும், பல நாடுகள் இருப்பதற்கு காரணம் மொழி வாரியாக தேசிய இனங்கள், நிலங்கள் உள்ளது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்ததற்கு காரணம் மதம். பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிந்ததற்கு காரணம் மொழி. மதம், சாதியை விட எல்லா அடையாளங்களையும் விட மொழி இனம் தான் பெரியது. இங்குள்ள கிறிஸ்தவனும், இஸ்லாமியனும் தமிழன்.. பெரும்பான்மையான தமிழ் தேசிய இனத்தின் மகன். வந்தவன், போனவன் எல்லாம் சிறுபான்மையினர்… சிறுபான்மையினர்… எனக்கூறினால் செருப்ப கழட்டி அடிப்பேன். வெறி கொண்டு இருக்கேன். மதத்தின் அடிப்படையில் மனிதர்களை பிரிப்பதை ஏற்க முடியாது. ஸ்டாலின் முதல்வர். உதயநிதி அமைச்சர். இன்பநிதிக்கு, அரசு விழாவில் என்ன வேலை. தலைதலைமுறையாக ஆட்சி செய்து கொண்டுள்ளீர்கள். உங்கள் குடும்பத்திற்கு என் நாடு பட்டா போட்டு கொடுக்கப்பட்டு உள்ளதா. மக்கள் உங்களுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்து உள்ளனரா? இவ்வாறு சீமான் கூறினார்.

சீமான் எழுப்பியுள்ள சில கேள்விகள்: ஊடகக்காரர்களைப் பார்த்டு நேரிடையாக சீமான் எழுப்பியுள்ள கேள்விகள்…தேசம், நாடு, மொழி, இனம், மதம், என்ற காரணிகளில் இந்த சித்தாந்திகளுக்கு எழுப்பப் பட்ட கேள்விகள்:

  1. காஷ்மீரில் இஸ்லிமிய பெரும்பான்மை தானே, ஆனால், ஒட்டுமொத்தமாக முஸ்லிம்களை சிறுபான்மையினர் என்று எப்படி சொல்ல முடியும்?
  2. மனிதன் தன்னுடைய மூலத்தை, மதம் மாற்றிக் கொள்ளக் கூடியது மொழியை, மொழி இனத்தை  மாற்றிக் கொள்ளமுடியாது.
  3. நேற்றைக்கு திலீப், இன்று ஏ.ஆர்.ரஹ்மான்; நேற்றைக்கு பெரும்பான்மை, இன்றைக்கு சிறுபான்மையா? கேவலமாக இல்லை.
  4. என்னுடைய அப்பா இளையராஜா பெருபான்மை, யுவன் ஷங்கர் ராஜா சிறுபான்மை;  போனவாரம் அவர் பெரும்பான்மை, இந்த வாரம் அவர் சிறுபான்மை;
  5. இந்த மாதிரியான உலக பைத்தியக்காரத்தனம் எங்கேயாவது இருக்கிறதா தம்பி?

ஒருவேளை, மதமாற்றத்தை எதிர்க்கிறாரா என்றும் யோசிக்க வேண்டியுள்ளது. இருப்பினும், சீமான் தமிழ்-தமிழர்-தமிழர் சயம் என்றால் எல்லாமே ஒன்று என்று விளக்கம் கொடுத்து விடுவார்.

கம்யூனிஸ்டுகளின் எதிர்ப்பு திகைப்பாக இருக்கிறது: சீமான் குறிப்பிட்டதைப் போலவே, அவர் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பேராசிரியர் அருணன், க. உதயகுமார் ஒருங்கிணைப்பில் ஹிந்து என். ராம், டி.எம். கிருஷ்ணா, பேராசிரியர் வசந்தி தேவி, திரைப்படக் கலைஞர் ரோஹிணி ஆகியோரை உள்ளடக்கிய தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சீமானின் இந்தப் பேச்சைக் கண்டித்துள்ளது[5]. “இவரின் நோக்கம் தெளிவானது. பா... எதிர்ப்பு வாக்குகள் சிதற வேண்டும். அதன் மூலம் பா... அணி வெற்றிபெற வேண்டும் என்பது. இந்தச் சதி வேலைக்கு இணங்காமல் சிறுபான்மையினர் தி.மு.. அணிக்கு வாக்களிப்பதே இவரது ஆத்திரத்திற்குக் காரணம். அதனால்தான் சாத்தானின் பிள்ளைகள் என்று படுமோசமான வசவு மொழியை உதிர்த்திருக்கிறார்,” என அந்த அமைப்புச் சுட்டிக்காட்டியுள்ளது[6]. மொழி,இனம், நாடு, தேசம், மொழி-இனம், தேசிய-இனம் போன்ற அவர்களது விருப்பமான விசயங்களை விடுத்து, அவற்றையும் மீறி சீமானை அரசியல் தேர்தல், ஓட்டு என்ற ரீதியில் விளக்கம் கொடுத்து எதிர்த்திருப்பது கவனிக்கத் தக்கது.

© வேதபிரகாஷ்

04-08-2023


[1] நக்கீரன், சீமான் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார், Published on 02/08/2023 (18:59) | Edited on 03/08/2023 (07:35)

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/complaint-against-seeman-police-commissioners-office

[3] தினமலர், சிறுபான்மையினர் என சொல்பவர்களை செருப்பால் அடிப்பேன்: சீமான், பதிவு செய்த நாள்: ஆக 03,2023 14:00

[4] https://m.dinamalar.com/detail.php?id=3394025

[5] பிபிசி, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை சாத்தானின் குழந்தைகள் எனக் கூறியது ஏன்? சீமான் விளக்கம், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர், 2 ஆகஸ்ட் 2023; புதுப்பிக்கப்பட்டது 3 ஆகஸ்ட் 2023; https://www.bbc.com/tamil/articles/clewz1d27nno

[6] https://www.bbc.com/tamil/articles/clewz1d27nno