Archive for the ‘நாட்டைச் சீர்குலைத்தல்’ Category

ஜாபர் சாதிக் விவகாரம் – சகோதரர்கள் தலைமறைவாக உள்ள நிலை, தொடரும் விசாரணை (7)

மார்ச் 25, 2024

ஜாபர் சாதிக் விவகாரம்சகோதரர்கள் தலைமறைவாக உள்ள நிலை, தொடரும் விசாரணை (7)

ஜாபர் சாதிக்கின் வீட்டின் சீல் நீக்க போட்ட மனு: முன்னர் நோட்டீஸ் ஒட்டியதை, சாத்தின் தாய் கிழித்துப் போட்டாள் என்ற செய்தி வந்தது[1]. அதே போல, இப்பொழுதும் ஏதாவது ஏற்படுமோ என்று தெரியவில்லை[2]. வீட்டில் சோதனை நடந்த போது, சாட்சிகளுடன் தான் அதிகாரிகள் நடத்துவர். பிறகு, அப்பொழுது யார் இருந்தது என்ற கேள்வி எழுகிறது. இதற்கிடையே, ஜாபர் சாதிக் வீட்டில் போடப்பட்டுள்ள சீலை அகற்றக்கோரி டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக்கின் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது[3].  முக்கியமான விசயத்தை விட்டு, எப்படியெல்லாம், இடையில் திசைத் திருப்பப் படுகிறது என்பதையும் கவனிக்கலாம். உண்மையில், இவ்வாறெல்லாம் சட்டமீறல் காரியங்கள் எல்லாம் செய்யாமல், தாய் தடுத்திருக்கலாம். ஆனால், இப்பொழுது, தெரிந்தும், சட்டத்தை மதிக்காமல், நோட்டீஸைக் கிழித்து எறிகிறாள் என்றால், அவர்கள் ஏதோ இந்திய சட்டங்கள் எல்லாம் தமக்கு அமூலாகாது என்று சொல்லுவது போல உள்ளது.

சதானந்தம் என்ற கூட்டாளி: இதற்கிடையில், சென்னையில் விசாரணை நடத்திய போது, ஜாபர் சாதிக் அளித்துள்ள வாக்குமூலம்: “சென்னை பெருங்குடியில், நானும் என் நண்பரான சதானந்தமும் நடத்தி வந்த, போதைப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலையில், வெளிநாடுகளுக்கு உணவு பொருட்கள் அனுப்பியது தொடர்பாக, ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ரசீதுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை உணவு பொருட்கள் அல்ல; போதை பொருள் கடத்தியதற்கான ரசீதுகள். எங்கள் கூட்டாளிகள், திருச்சி மற்றும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளை சேர்ந்த இவர்கள் தான், எங்கள் தொழிலை விரிவுபடுத்தியவர்கள். வெளிநாடுகளுக்கு போதை பொருள் கடத்தியதில், என்னை விட என் சகோதரர் முகமது சலீம் தான் மூளையாக செயல்பட்டு வந்தார். மலேஷியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா என, வெளிநாட்டு தொடர்புகள் அனைத்தையும், முகமது சலீமே கவனித்து வந்தார். வி.சி., நிர்வாகியாக இருந்த அவருக்கு, தமிழகத்தில் செயல்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. “

பேரீச்சம் பழமும், போதைப் பொருளும்: ஜாபர் சாதிக் தன்னுடைய வாக்குமூலத்தில் தொடர்ந்து கூறியது,  “அந்த வகையில், சென்னை அண்ணா நகரில் மிகவும் முக்கியமான நபர்களின் பின்னணியில் போதைப்பொருள் கடத்தல் நடக்கிறது. இவர்களுடன் என் தம்பிக்கு தொடர்பு உள்ளது. மற்றொரு தம்பி மைதீன், சினிமாவில் நடித்து வருகிறார். அவர் வாயிலாக, கோலிவுட்டில் போதை பொருள்சப்ளைசெய்துள்ளோம். எங்களின் வாடிக்கையாளர்களாக சில நடிகர், நடிகையர், கல்லுாரி மாணவர்கள், .டி., நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் உள்ளனர். அவர்களுக்கு எல்லாம் பேரீச்சம் பழத்தில் வைத்து போதை பொருட்களை விற்பனை செய்தோம்[4]. இதுபற்றி வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக, பேரீச்சம் பழம் இறக்குமதி தொழிலும் செய்து வந்தோம்[5]….”

கோலிவுட் தொடர்பு: ஜாபர் சாதிக் தன்னுடைய வாக்குமூலத்தில் தொடர்ந்து கூறியது,  ‘இதற்கு கோலிவுட்டில் எங்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்த முக்கிய நபர் தான், ‘ஐடியா’ கொடுத்தார். பேரீச்சம் பழம் வியாபாரத்திலும் நல்ல லாபம் கிடைத்தது. இவ்வாறு வாக்குமூலத்தில் ஜாபர் சாதிக் தெரிவித்துள்ளார். ஜாபர் சாதிக்கின் சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க, அவர்களுக்கு எதிராக, ‘லுக் அவுட்’ நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அடிக்கடி செல்லும் இடங்கள் குறித்து, அதிகாரிகளிடம் ஜாபர் சாதிக் தெரிவித்துள்ளார். இருவரும் விரைவில் சிக்குவர் என, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். பலமுறை வாக்குமூலம் கொடுத்து, தங்களை வற்புருத்தி அவ்வாறு வாங்கிக் கொண்டனர் என்று, மனு தாக்குதல் செய்வதும் உண்டு. இதெல்லாம், வழக்கமாக, வழக்கறிஞர்கள் செய்யும் வேலைகள் தான். அரசு அதிகாரிகள் எந்த அளவுக்கு கஷ்டப் பட்டு, வழக்கை நிலைநிறுத்த, ஆதாரங்களை சேகரித்து வலுசேர்க்கும் நிலையில், சிறிய விசயங்களை வைத்து, முக்கியமான விசயத்தையே மறக்கும் படி அல்லது ஓரங்கட்டும் முறையில், வேறு பிரச்சினையைக் கொண்டு வரும் சாதுர்யமும், வக்கீல்களில் உண்டு.

பேரீச்சம் பழம் மற்றும் போதை மருந்து வியாபாரம் சேர்ந்து நடந்தது: பேரீச்சம் பழம் வியாபாரம் மற்றும் அப்பழங்களில் போதை மருந்து வைத்து விற்பனை செய்யப்பட்டது எல்லாம் திகைப்பாக இருக்கிறது. பழங்கள் விற்ப்பது மற்றும் பழங்கள் உள்ளேன் போதை மருந்து விற்பனை, ஆக இரண்டு வகை முறைகளும் நடந்து வந்ததும் அதிர்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு, இவையெல்லாம் மக்களுக்கு சென்று அடைவது, அதைவிட மிக கொடுமையான சமூகத்தை பாதிக்கும் காரியம் என்று சொல்ல வேண்டி இருக்கிறது. மாணவர்கள் படிப்பது, முன்னேற மற்ற பரீட்சைகளை எழுதுவது போன்றவற்றில் எல்லாம் கவனம் செலுத்தாமல், இவ்வரான விவகாரங்களில் சிக்கிக் கொள்வது மிகவும் வருத்துவமாக உள்ளது. இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு இந்த போதை பொருள் விற்கும் காரியம் அதர்மம், தனிமனிதனை, குடும்பத்தை, சமூகத்தை சீரழிக்கும் கயமைத் தனம் என்றே அடையாளம் காணவேண்டியுள்ளது.

போதை மருந்து வியாபார யுக்தி என்ன?: போதை மருந்து மனிதனை, குடும்பத்தை, சமூகத்தை, ஏன் பல சமூகங்களை சீரழக்கிறது என்பது தெரிந்தும், அது ஏன் ஊக்குவிக்கப்படுகிறது, பல முறைகளில் மறைத்து வியாபாரம் செய்யப்படுகிறது, அத்தகைய முறைகளை கையாளுபவர்கள் எப்படி தொழில் நுட்பங்களை கூறுகின்றனர் என்பதெல்லாம் கூட கவனிக்க வேண்டிய விஷயங்களாக இருக்கின்றன. ஏனெனில் இக்காலத்தில் இவ்வாறு எந்த பொருளையும் விற்க்க வேண்டும் என்றால், அதற்கு ஏதோ ஒரு வகையில் விளம்பரம் தேவைப்படுகிறது. ஆனால் போதை மருந்து விவகாரம் என்பது, அவ்வாறு விளம்பரத்துடன் செய்யப்படும் வியாபாரம் அல்ல. மிகவும் ரகசியமாக அதனை உபயோகிப்பவர்கள் யார் என்று கண்டறிந்து அல்லது தொடர்ந்து அதன் உபயோகத்தில் கட்டுண்டுக் கிடக்கும் அடிமைகளை கண்டறிந்த வியாபாரம் செய்பவர்கள் தான் அதிகமாக உள்ளனர். ஏதோ ஒரு வகையில் பாதைக்கு உட்பவர்கள் தான் இதனை விற்பவர்களாகவும் மாறுகின்றனர். அனைவரும் கண்காணித்து, அவ்வாறான போதைப் பொருளை கையாள்கிறார்கள் என்றறிந்து, அவர்களையே ஏஜென்டுகளக்கி விடுகின்றனர். அதனால் அத்தகைய வியாபாரம் செய்யும் போதை மருந்துஜஏஜென்டுகளை, மிகவும் அக்கறையாக அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு வேண்டியவை எல்லாம் கொடுக்கிறார்கள். ஆகையால் தான் இவ்வியாபாரத்தை, மிகவும் ரகசியமாக செய்து வருகிறார்கள், அதே நேரத்தில் தீவிரமாகவும் நடைபெற்று வருகிறது.

இந்தியாவை குறிவைக்கும் போதை மருந்து சக்திகல்கூட்டங்கள்: இந்தியா 140 கோடி மக்கள் தொகையை கொண்ட நாடாகும் பலவித பொருளாதார பிரச்சனைகள் கொண்டிருக்கும் நாடு. இன்றைய அளவில் எல்லாவித பிரச்சனைகளையும் தாங்கிக் கொண்டுதான் தொடர்ந்து முன்னேறி வருகிறது. சுதந்திரத்திற்கு பிறகு எல்லைப் பகுதியில் அதிகமான ஊடுருவங்கள் குறிப்பாக பாகிஸ்தான் சைனா என்று ஆரம்பித்து இப்பொழுது பர்மாவிலிருந்து அகதிகள் போர்வையில் முஸ்லிம்கள் ஊடுருவி வருகிறார்கள். அதே போன்ற ஊடுருவல்கள் வடகிழக்கிலும் இருக்கின்றன. ஆனால் அவற்றுடன் போதைப் பொருளும் சேர்ந்து இருக்கிறது. அதுதான் பிரச்சினை. வடமேற்கில் இருந்து வரும் ஊடுருவல்கள் தான் மற்றும் வட பாகிஸ்தான் பகுதிகளில் போதை மருந்து உற்பத்தி, கடத்தல், விநியோகம், வியாபாரம், என்றெல்லாம் செய்து வரும் கூட்டங்களும் ஊடுருவல்கார்களுடன் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். இதனால் தான் பல விஷயங்கள் பொதுப்படையாக பேச முடிவதில்லை. நாட்டு நலன் கருதாமல், விரோதத்துடன் செயல்படுபவர்கள் இவ்விவகாரங்களில் ஒன்றாகிறார்கள். சமூகத்தைச் சீரழிப்பது என்பது தான் அவர்களது குறிக்கோளாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

20-03-2024


[1] குமுதம்,சென்னை வீட்டிற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக் மனுத்தாக்கல்,  Mar 19, 2024 – 20:10

[2] https://kumudam.com/Jaffer-Sadiq-Remanded-To-14-Days-Custody – google_vignette

[3]  https://www.maalaimalar.com/news/national/zafar-sadiq-remanded-to-14-days-court-custody-in-drug-trafficking-case-708748

[4] மாலைமலர், கோடி கோடியாக கொட்டிய பணத்தை ஓட்டல்சினிமாவில் முதலீடு செய்த ஜாபர் சாதிக், Byமாலை மலர்19 மார்ச் 2024 3:53 PM

[5] https://www.maalaimalar.com/news/state/jaffer-sadiq-invested-money-hotel-and-cinema-708725

ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்தலில் மாட்டிக் கொண்டது – 15-02-2924 முதல் 09-03-2024  வரை எங்கிருந்தான்?இந்தியா போதை மருந்து கூட்டங்களினின்று விடுபடுமா? (5)

மார்ச் 11, 2024

ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்தலில் மாட்டிக் கொண்டது – 15-02-2924 முதல் 09-03-2024  வரை எங்கிருந்தான்? இந்தியா போதை மருந்து கூட்டங்களினின்று விடுபடுமா? (5)

15-02-2924 [வியாழக்கிழமை] முதல் 09-03-2024 [சனிக்கிழமை] வரை எங்கிருந்தான்?: சாதாரணமாக குற்றவாளிகளுக்கு ஒரு மணி நேரம் அவகாசம் கொடுத்தாலே அவர்கள் தமக்கு எதிராக உள்ள அத்தனை ஆதாரங்களையும் அழித்துவிட்டு தப்பித்துக் கொள்ளத் தான் மிக வேகமாக செயல்படுவர் என்பது பொதுவாக குற்றவியல் வல்லுநர்கள் தெரிந்த விஷயமாக எடுத்துக் காட்டுகின்றனர்ர். அந்நிலையில் இப்பொழுது இந்தியாவில் மின்னணு யுகத்தில் எல்லா உபகரணங்களும் வைத்துள்ள நிலையில். இத்தனை நாட்கள் இவன் ரகசியமாக இருந்துள்ளாரன் என்பது திகைப்பாகத்தான் இருக்கிறது. ஆகவே அந்த குறிப்பிட்ட இடங்களில் எல்லாமே இவனுக்கு உதவியாளர்கள் அல்லது அவ்வாறு ரகசியமாக தங்க வைத்து அனுப்பி வைக்கக்கூடிய நண்பர்கள் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. அதனால் தான் எத்தனை நாட்கள் அவன் தாராளமாக தங்கி இருந்து, தமிழகத்திலிருந்து ஜெய்பூர் வரைக்கும் சென்று இருக்கிறான். பிறகு தான் ஏதோ தகவல் கிடைத்த பிறகு, அவனை அங்கு சென்று பிடித்துள்ளனர்.

என்.சி.பி. அதிகாரி  கொடுத்த விவரங்கள்: இது குறித்து ஞானேஸ்வர்சிங் என்.சி.பி. அதிகாரி  நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு[1] : போதைப்பொருள் கடத்தலை தடுக்க முழு வீச்சில் நடவடிக்கை எடுத்துள்ளோம்[2]. திருவனந்தபுரம், மும்பை, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் பதுங்கி இருந்துள்ளார். பங்களா ஒன்றில் பதுங்கியிருந்த ஜாபர் சாதிக்கை டில்லியில் கைது செய்தோம். சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். டில்லி மற்றும் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் மலேசியாவுக்கு ஜாபர் சாதிக் கடத்தி வந்தார். சினிமா, கட்டுமானத்துறையில் முதலீடு: போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு சம்பாதித்த பணத்தை சினிமா, ரியல் எஸ்டேட், கட்டுமானத்துறையில் ஜாபர் சாதிக் முதலீடு செய்துள்ளார். போதைப் பொருள் சம்பந்தப்பட்ட பணம் எங்கெங்கு முதலீடு செய்யப்பட்டதோ அது குறித்து விசாரிக்கப்படும். 3,500 கிலோ வரையிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜாபர் சாதிக்கிற்கு முக்கிய பிரமுகர்கள் பலருடன் தொடர்பு உள்ளது. உணவுப்பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் போதைப்பொருட்களை பல்வேறு நாடுகளுக்கு ஜாபர் சாதிக் கடத்தி உள்ளார்.

தொடர்புடைய அரசியல்வாதிகள் யார்?: அரசியல் கட்சிகளுக்கு போதைப்பொருட்கள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தை வழங்கி உள்ளார். மங்கை என்ற பெயரில் தமிழ் திரைப்படம் ஒன்றை ஜாபர் சாதிக் தயாரித்துள்ளார். சென்னையில் ஓட்டல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். தமிழகத்தில் சில திரைப்பிரபலங்கள் உடன் தொடர்பு இருப்பதாக ஜாபர் சாதிக் வாக்குமூலம் அளித்துள்ளார். விசாரணைக்குப்பின் ஜாபருடன் தொடர்புடையவர்கள் பெயர்களை வெளியிடுவோம். கடந்த 25ம் தேதி கைது செய்யப்பட்ட போதை கடத்தல் நபர்கள் 3 பேர் கொடுத்த தகவலின் படி ஜாபர் சாதிக் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளில் 3,500 கிலோ சூடோபெட்ரின் போதைப்பொருட்களை ஜாபர் சாதிக் கடத்தியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

ஜாபர் சாதிக் நிரபராதி என்று வாதிடும் அவனது வக்கீல்: இந்நிலையில், ஜாபர் சாதிக்கின் வழக்கறிஞர்கள் தந்தி டிவி-க்கு அளித்த பேட்டியில், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் நிரபராதி என்றும், அவரது குடும்பத்தினர் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்[3]. ஜாபர் சாதிக்கின் வழக்கறிஞர் டி.ஆர். பிரபாகரன் தந்தி டிவி-க்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது[4]: “15.02.2024 அன்று கிட்டத்தட்ட 50 கிலோ சூடோபெட்ரைன் என்கிற போதை பொருளை டெல்லி என்.சி.பி பறிமுதல் செய்திருக்கிறார்கள். அது தொடர்பாக 3 பேர்களை கைது செய்து இருக்கிறார்கள். அந்த 3 பேரிடம் வாக்குமூலம் பெற்று அதன் அடிப்படையில் இன்று (09.03.2024) ஜாபர் சாதிக்கை கைது செய்திருக்கிறார்கள்[5]. அவரை பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினார்கள்[6]. அப்படி ஆஜர்படுத்தும் போது நாங்கள் அவருடைய வழக்கறிஞர்களாக நீதிபதியிடம் இந்த 50 கிலோ சூடோபெட்ரைன் என்.சி.பி சட்டத்தில் வரவில்லை, அது போதைப் பொருள் இல்லை என்று கூறி அவருக்கு உடனே ஜாமீன் கொடுக்க வேண்டும் என்று வாதிட்டோம். இதற்கு நீதிபதி, என்.சி.பி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார். இந்த வழக்கில் கைதானவர்களிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்திருக்கிறார்கள். ஜாபர் சாதிக்கிடம் இருந்து எந்த ஒரு போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்படவில்லை என்பதை நாங்கள் அழுத்தமாக கூறினோம்.”

என்.சி.பி 15 நாள் காவல் கேட்டதற்கு  7 நாட்கள் கொடுக்கப் பட்டது:என்.சி.பி நீதிபதி இல்லாததால், இந்த வாழ்க்கை விசாரித்த நீதிபதி பொறுப்பு நீதிபதி என்பதால், அவரை நாங்கள் இப்போதைக்கு நீதிமன்ற காவலில் வைக்கிறோம். நீங்கள் உங்களுடைய எந்த வாதமாக இருந்தாலும் ஜாமீன் கோரும்போது வாதிடுங்கள். அதற்குப் பிறகு நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் கொடுக்கலாமா வேண்டாமா என்று பரிசீலனை செய்யும் என்று கூறினார். அது இல்லாமல் என்.சி.பி தரப்பில் 15 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டார்கள். நாங்கள் அனுமதி அளிக்கக் கூடாது என்று கூறினோம். அவரிடம் விசாரிப்பதற்கு எதுவுமே இல்லை, அவர் நிரபராதி என்று நாங்கள் கூறினோம். அப்போது நீதிபதி, நீங்கள் ஏழு நாள் காவல் வைத்துக் கொள்ளலாம் என்று என்.சி.பி போலீசிடம் கூறி உத்தரவிட்டார். என்.சி.பி அதிகாரிகள், ஜாபர் சாதிக்கின் அடிப்படை உரிமைகளை மீறி இருக்கிறார்கள். அவருடைய குடும்பத்தினர் வயதான பாட்டி, அவருடைய மனைவி, அவருடைய 2 மைனர் மகள்கள், ஒரு மகன் என அனைவரையும் சட்டவிரோதமாக பிடித்து வைத்திருக்கிறார்கள்,” என்று ஜாபர் சாதிக்கின் வழக்கறிஞர் டி.ஆர். பிரபாகர் கூறினார்.

புதிர்களும், கேள்விகளும்: சாதாரணமான, இந்தியர்களுக்கு, இத்தனை புதிர்களும், மர்மங்களும் வேண்டாம். சமூகத்தை சீரழிக்கும் போதை மருந்து வேண்டாம். அத்தகைய சமூக தீவிரவாதிகளும் தேவையில்லை:

  1. தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் கைது – போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நடவடிக்கை, விவரம் அறிவிக்கப் படவில்லை!
  2. ஜெய்பூரில் கைதான ஜாபர் சாதிக் டில்லி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப் பட்டு, பிறகு சென்னைக்குக் கொண்டு வர உறைப்படி, நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
  3. ஞானேஸ்வர்சிங் என்.சி.பி. அதிகாரி பங்களா ஒன்றில் பதுங்கியிருந்த ஜாபர் சாதிக்கை டில்லியில் கைது செய்தோம்.
  4. திருவனந்தபுரம், மும்பை, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் பதுங்கி இருந்து, தில்லியில் மறைந்திருந்த போது கைது செய்யப் பட்டான்!
  5. தமிழகத்தின் சில திரைப்பிரபலங்கள் உடன் தொடர்பு இருப்பதாக ஜாபர் சாதிக் என்.சி.பியிடம் வாக்குமூலம் அளித்துள்ளாதாகத் தெரிகிறது.
  6. போதைப் பொருட் வருமானத்தை சினிமா, ஓட்டல், ரியல் எஸ்டேட், கட்டுமானத்துறைகளில் முதலீடு செய்யப் பட்டுள்ளது.
  7. இவனது போதை மருந்து வியாபாரம் தில்லி, தமிழகம் வழியாக மற்ற இடங்களுக்குப் பரவி, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா நாடுகளுக்குப் பாரவியது.
  8. திருவனந்தபுரம், மும்பை, புனே, ஹைதரபாத் சென்று ஜெய்ப்பூர் வந்துள்ளான். அங்கு பிடிக்கப் பட்டு, தில்லியில் கைது செய்யப்பட்டான்!
  9. ஆக, இவ்விடங்களில் இருந்த தொடர்புகள், எல்லாம் உதவி செய்தவர்கள் முதலியவர் மூலம் மேலும் விவரங்கள் வெளிவரலாம்.
  10. போதை சமுதாயத்தை சீரழிப்பது, நாசமாக்குவது, அத்தகையதை வியாபாரமாக்கிய இவர்கள்முறையாக தண்டிக்கப் படவேண்டும்.

© வேதபிரகாஷ்

10-03-2024


[1] தினமலர், ஜாபர் சாதிக் கைது ஆனது எப்படி?: அரசியல்வாதிகளும் சிக்குவர் ! என்.சி.பி. அதிகாரி பேட்டி, மாற்றம் செய்த நாள்: மார் 09,2024 15:57.

[2] https://m.dinamalar.com/detail.php?id=3571516

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், வேறொரு குற்றவாளி வாக்குமூலம் அடிப்படையில் ஜாபர் சாதிக் கைது: வழக்கறிஞர்கள் பேட்டி, WebDesk, 10 Mar 2024 03:39 IST

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/jaffer-sadiq-advocate-speech-on-drug-case-and-argument-in-patiala-court-4320228

[5] தினத்தந்தி, ஜாபர் சாதிக் ஒரு நிரபராதி..கோர்ட்டில் நடந்தது இதுதான்..” – வழக்கறிஞர் சொன்ன தகவல், By தந்தி டிவி 9 மார்ச் 2024 10:15 PM.

[6] https://www.thanthitv.com/News/India/jabarsadhik-advocate-speech-thanthitv-251339?infinitescroll=1

ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்தலில் மாட்டிக் கொண்டது–சகாக்கள் கைதானது, இவன் தலை மறைவானது–தேடும் படலம் ஆரம்பித்தது (2)

மார்ச் 3, 2024

ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்தலில் மாட்டிக் கொண்டது சகாக்கள் கைதானது, இவன் தலைமறைவானது தேடும் படலம் ஆரம்பித்தது (2)

பதுங்கியது, பதுங்கியிருப்பது ஏன்?: ஒரு பிரபலமான மனிதர், அதிலும் ஆளும் கட்சியின் பிரமுகர், பெரிய பணக்காரர், சினிமா அதிபர், பலகோடி வியாபாரங்களின் அதிபர் என்றெல்லாம் இருக்கின்ற ஒரு நபர் திடீரென்று காணாமல் போய் விட முடியாது. ஆகவே நிச்சயமாக மாட்டிக் கொண்டு விடுவோம் என்ற நிலையில் தான், காணாமல் போய்விட்டார் என்றால், இந்தியாவிலேயே இருக்கிறார் என்றால், மறைந்து எங்கே ஒரு இடத்தில் வாழலாம். அல்லது நாட்டை விட்டு வெளியேறி விட்டார் என்றால்[1], நிச்சயமாக வேற எந்த நாட்டிலேயோ பதுங்கி இருக்கிறார் என்று தெரிகிறது[2]. எது எப்படி இருந்தும் சட்டப்படி,போதை கட்டுப்பாடு துறை லுக் அவுட் நோட்டீஸ்கள் அனுப்பி விட்டது என்பதால், நிச்சயமாக வெளிவந்தால் மாட்டிக் கொள்வார்[3]. இவ்வாறெல்லாம் மறைந்து வாழலாம் போன்ற விவகாரங்கள் எல்லாம் அசாதாரண விவகாரங்கள் ஆகும். இருப்பினும் அத்தகைய முடிவை மேற்கொண்டது ஏன் என்பது கவனிக்கத் தக்கது[4].

யார் இந்த ஜாபர் சாதிக்? – ஜாபர் சாதிக் பின்னணி: குற்றச்சாட்டுக்கு உள்ளான ஜாபர் சாதிக்கின் பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி.  பல ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்புக்காக சென்னை வந்தவர், சொந்தமாக தங்கும் விடுதி, ஓட்டல், ஏற்றுமதி நிறுவனம், உணவு பதப்படுத்தும் நிறுவனம் என குறுகிய காலத்தில் உச்சம் தொட்டார். இவர், சென்னை புரசைவாக்கத்தில் விடுதி வைத்து நடத்துகிறார். பிரபல அசைவ ஹோட்டல் ஒன்றின் புரசைவாக்கம் கிளையையும் எடுத்து நடத்தும் சாதிக், தி.மு.க., முக்கிய தலைவர்கள் பலருடன் நெருக்கமான நட்பில் இருந்தார். சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க.,வின் முக்கிய புள்ளி வாயிலாக, கட்சியின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளர் பதவியை பெற்ற சாதிக், கட்சி மேலிடத்தில் இருப்போர் பலருடனும் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். ஒரு கட்டத்தில் திரைத் துறையில் காலடி எடுத்து வைத்த சாதிக், அங்கிருக்கும் பிரபலமான நபர்களுடனும் நெருக்கமான நட்பை வளர்த்துக் கொண்டார்; திரைப்படம் தயாரிக்கும் பணியிலும் இறங்கினார். மங்கை என்ற திரைப்படம் எடுத்து வரும் அவர், படத்துக்கான முதல் பாடல் வெளியீட்டு விழாவுக்கு, இயக்குனர் கிருத்திகா உதயநிதி உள்ளிட்ட தி.மு.க., பிரபலங்களையும் அழைத்திருந்தார்[5]. கட்சிக்கும், ஆட்சிக்கும் பல கட்டங்களில் தாராளமாக நிதி வழங்கியதால், ஜாபர் சாதிக்குக்கு அனைத்து மட்டங்களிலும் தொடர் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது[6].

சட்டமீறல் செயல்களில் எப்படி முஸ்லீம்கள் தைரியமாக ஈடுபடுகின்றனர்?: பொதுவாக திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முஸ்லிம்களுக்கு அதிக சலுகைகள் கொடுக்கப்படும் என்பது தெரிந்த விஷயமாக இருக்கிறது. எல்லோரும் காலமாக சிறையில் இருப்பவர்களை விடுவிப்பது பிறகு ரம்ஜான் மாதத்திற்கு அரிசி கொடுப்பது, சந்தனக்கூடு பண்டிகைக்கு சந்தனம் கொடுப்பது, தாராளமாக நிதி உதவி அளிப்பது என்றெல்லாம் நடந்து வருகின்றன. இப்பொழுது கூட சமீபத்தில் அவர்களுக்கு பல சலுகைகள் கொடுப்பதாக திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆகவே ஆன்மீகம் என்று சொல்லிக் கொண்டு இந்து மதத்தினரை வசை படுவது, சமதர்மம், செக்யூலரிஸம், பெரியாரிஸம் என்று சொல்லிக்கொண்டு, முஸ்லிம்களுக்கு தாஜா செய்வது என்பது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் தான் அவர்கள் ஒருவேளை தைரியமாக இத்தகைய வேலைகளில் ஈடுபட்டு உள்ளனர் என்பது தெரிகிறது

போதை மருந்து கும்பல்களுடன் தொடர்பு, வேலை ஆரம்பம்: இன்றைக்கு அரசியல்-வியாபாரம் என்பதெல்லாம் பணம் சம்பாதிக்கத் தான். பொது மக்களின் பணத்தை எப்படியாவது கொள்ளையடிப்பது தான், இவர்களின் வேலை. அதற்கு, சினிமா, குடி, கிரிக்கெட், விபச்சாரம் முதலியவை உபயோக படுத்துவது போன்ற, போதை மருந்தும் சேர்ந்து விட்டது. இவ்விதமாக, ஜாபர் சாதிக் தனது வியாபாரங்களை விஸ்தரித்த போது, அரசியல் லாபமும் கிட்டியது. அப்போதுதான் அவருக்கு சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே ஹெராயின் வகை போதைப் பொருட்கள் கடத்தலில், வெளிநாட்டு கும்பல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த போதைப் பொருளுக்கு நிகராக போதை தரக்கூடியது மெத்தாம் பெட்டமைன் வகை போதைப் பொருள் ஆகும். இதற்கு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிக தேவை ஏற்பட்டுள்ளது. இந்த போதைப் பொருளைத் தயாரிக்க சூடோபெட்ரின் என்ற மூலப்பொருள் அவசியம். இதன் விலை ஒரு கிலோ ரூ.1.50 கோடி ஆகும். இந்த சூடோபெட்ரினை கடத்தியதாக ஜாபர் சாதிக் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

போலீஸார் மூலம் அறியப் படும் விவகாரங்கள்: 3,500 கிலோ சூடோபெட்ரின்: இவரது கூட்டாளிகள் 450 முறை, 3,500 கிலோவுக்கும் அதிகமான சூடோபெட்ரினை பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி, கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளனர். இதன்மூலம் கோடிகளில் புரண்ட ஜாபர் சாதிக், தனது செல்வாக்கை பயன்படுத்தி அரசியல் மற்றும் சினிமா துறைக்குள் நுழைந்துள்ளார். மேலும், அதிகாரிகளுடன் நட்பு கொண்டுள்ளார். இதுதவிர, ஹவாலா (ஆவணம் இல்லா பணம்) தொழிலையும் இவர் கையாண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல்களை போலீஸார் சேகரித்து வருகின்றனர். மேலும், ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் உள்ளவர்கள், அவரது பினாமிகள், அவரால் ஆதாயம் அடைந்தவர்கள் குறித்தும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் விவரங்களை சேகரித்து வருகின்றனர். விரைவில் அடுத்தடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15-02-2024-லிருந்து ஆள் இருப்பது தெரியவில்லை: இரண்டு வாரங்கள் ஆகியும் ஜாபர் சாதிக் இருக்கும் இடம் தெரியாதலால், விசாரணை தொடரும் நிலையில், “லுக்-அவுட்-நோட்டீஸ்” விடப் பட்டுள்ளது. போதை மருந்து கடத்தல்காரர்கள், எந்த நிலைக்கும் தயாராக இருப்பார்கள். ஆகவே, இத்தனை நாட்களில் என்கு சென்றிருப்பான் என்று தெரியவில்லை. இந்நிலையில், அவர் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்கும்வகையில், ஜாபர் சாதிக்குக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் போலீஸார் ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் கொடுத்துள்ளனர்[7]. இனி அவர் எந்த விமானநிலையத்துக்கு சென்றாலும், உடனடியாக அங்குள்ள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்படுவார்[8]. இதற்காக அனைத்து விமான நிலைய அதிகாரிகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கடல், தரை மார்க்கமாக அவர் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்கவும் போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்ச் இத்தனை சீரியஸான விசயத்தை ஏன் தமிழகத்தில் ஒன்றுமே நடக்காதது போல காட்டிக் கொள்கின்றனர் என்பதும் விசித்திரமாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

03-03-2024


[1] தமிழ்.ஒன்.இந்தியா, வெளிநாடு தப்ப முயலும் ஜாபர் சாதிக்? போதைப்பொருள் தடுப்புத்துறை வைத்த செக்.. லுக் அவுட்நோட்டீஸ், By Nantha Kumar R, Published: Friday, March 1, 2024, 22:37 [IST]

[2] https://tamil.oneindia.com/news/chennai/drug-smuggling-case-look-out-notice-issued-against-dmk-s-nri-wing-ex-functionary-jaffer-sadiq-587579.html

[3] இ.டிவி.பாரத், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ்!, By ETV Bharat Tamil Nadu Desk, Published : Mar 1, 2024, 6:21 PM IST.

[4] https://www.etvbharat.com/ta/!state/central-narcotics-control-unit-officials-issued-a-lookout-notice-to-jaffer-sadiq-regards-drug-smuggling-tns24030104898

[5] தினமலர், .யார் இந்த ஜாபர் சாதிக்?, பதிவு செய்த நாள்: பிப் 26,2024 02:22

[6] https://m.dinamalar.com/detail.php?id=3560719

[7] தமிழ்.இந்து, வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்க ஜாபர் சாதிக்குக்கு எதிராகலுக்அவுட்நோட்டீஸ், செய்திப்பிரிவு, Published : 02 Mar 2024 04:37 AM; Last Updated : 02 Mar 2024 04:37 AM.

[8] https://www.hindutamil.in/news/crime/1209268-look-out-notice-against-jaffer-sadiq-to-prevent-him-from-fleeing-abroad.html

முதியோர் இல்லம், ஆதரவற்றோர் காப்பகம் மற்றும் கால் சென்டர் இவற்றிற்கு என்ன சம்மந்தம்? (1)

ஜனவரி 26, 2024

முதியோர் இல்லம், ஆதரவற்றோர் காப்பகம் மற்றும் கால் சென்டர் இவற்றிற்கு என்ன சம்மந்தம்? (1)

ஹை-டெக் பிரச்சாரம் மூலம் நன்கொடை வசூலிக்கும் மோசடி: ஏமாற்றுகிறவர்கள் இப்பொழுது எல்லாம் புது புது வழிகளை யுக்திகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். மொபைல் போன், கம்ப்யூட்டர் முதலியவை வந்த பிறகு, அதற்கு ஏற்றபடி தங்களது தொழிலையும் நவீனப்படுத்துகிறார்கள். அதாவது ஒரு கவர்ச்சிகரமான ஆபீஸ் போன்றவை வைத்துக்கொண்டு, அதில் பெண்களை வேலைக்கு அமைத்து, அவர்கள் மூலம் கால் சென்டர் போன்ற வைத்து, அதன் மூலமாக பலரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, வங்கியில் இருந்து கடன் வாங்கி தருகிறேன், இன்சூரன்ஸ் பாலிசிக்கு உதவுகிறேன், அனாதை இல்லங்கள் முதியோர்களுக்கு நன்கொடை கொடுங்கள், உதவி செய்யுங்கள் என்றெல்லாம் பிரச்சாரம் செய்து, தினமும் நூற்றுக்கணக்கான ஏன் ஆயிரக்கணக்கான மக்களிடம் தொடர்பு கொண்டு, எப்படியாவது ஒரு ஐந்து-பத்து பேர்களை வலையில் விழ வைத்து விடுகிறார்கள். அவர்கள் தான் ஏமாறுகிறார்கள், ஏமாளிகளாகி விடுகிறார்கள். இவ்வாறு தான் இப்பொழுது எல்லாம் நவீன முறையில் பணம் ஏமாற்றப்படக் வருகிறது.

2019 – அம்மா அறக்கட்டளை மோசடி: “அம்மா அறக்கட்டளை” என்று ஆதரவற்றோர் இல்லம் போல் போலியாக நடத்தி பழைய துணிகள், பொருட்கள், பணம் உள்ளிட்டவற்றை சேகரித்து அமைப்பின் பெண் பணியாளர் ஒருவீட்டில் 11.5 லட்சம் ரூபாய் பணத்தை திருடிவிட்டு தலை மறைவானார். அவரை கைது செய்த போலீஸார் அதன் உரிமையாளரான போலி பத்திரிகையாளர் ஒருவரை தேடி வருகின்றனர். அம்மா அறக்கட்டளை அரவிந்தன் என்பவரின் பெயரில் பதிவு செய்யபட்டுள்ளதையும், அந்த நபர் மக்கள் நம்பிக்கை என்ற வாரஇதழை நடத்தி வருவதையும் போலீஸார் கண்டுபிடித்தனர். அரவிந்தன் ஆரம்பத்தில் ஒரு தொலைக்காட்சியில் விளம்பரப்பிரிவில் வேலைப்பார்த்ததும், அங்கு அவரது நடத்தைச் சரி இல்லாததால் வெளியேற்றப்பட்டதும், பின்னர் தானே பத்திரிகை ஆரம்பித்து காவல் ஆணையர் அலுவலகம், டிஜிபி அலுவலகம், தலைமைச் செயலகம் போன்ற இடங்களில் நுழைந்து பலரது அறிமுகத்தை பெற்றுள்ளார். காவல் ஆணையர் உள்ளிட்ட பிரபலங்களுடன் நெருக்கமாக இருப்பது போல் புகைப்படம் எடுத்து வைத்துகொண்டு போலி அறக்கட்டளை நடத்தி பண வசூலில் ஈடுபட்டு பொதுமக்களிடம் மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது. ஆதரவற்றோருக்கு உதவ வேண்டும் என்கிற பொதுமக்களின் நல்ல எண்ணத்தை மூலதனமாக்கி மோசடியில் ஈடுபட்ட அரவிந்தன் முக்கியமாக நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதியிலேயே தனது ஆட்களை அனுப்பி வசூலில் ஈடுபட்டு வந்துள்ளார்[1]. மகாலட்சுமியை கைது செய்த தேனாம்பேட்டை போலீஸார் பணம் ரூ. 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள போலி பத்திரிகையாளர் அரவிந்தனைத் தேடி வருகின்றனர்[2].

2020 – தனிநபர் கடன் பெற்று தருவதாக மோசடி: ஒரு கும்பல் போலியான கால் சென்டர் மூலம் அப்பாவி மக்களை குறிவைத்து, இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும், தனிநபர் கடன் பெற்று தருவதாகவும் கூறி முன்பணம் பெற்று ஏமாற்றி வருவதாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. விசாரணையில் குற்றவாளிகள் 3 பேரும் திருவான்மியூர், எல்.பி. சாலை மற்றும் பெருங்குடி ஆகிய 2 இடங்களில் போலியான கால் சென்டர் நடத்தி, பொதுமக்களிடம் இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும், எங்களது இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பாலிசி எடுத்தால் தங்களுக்கு தனிநபர் கடன் பெற்று தருவதாகவும் அதற்கு முன்பணமாக இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணம் செலுத்த வேண்டும் என பொதுமக்களை தங்கள் வங்கிக்கணக்கில் பணத்தை போட வைத்துள்ளனர். மத்திய குற்றப்பிரிவு தனிப்படையினர் மேற்படி புகார்கள் மீது தீவிர விசாரணை மேற்கொண்டதில் பொதுமக்களிடம் தனிநபர் கடன் பெற்றுத் தருவதாக கூறி வந்த கும்பல் திருவான்மியூர் மற்றும் பெருங்குடியில் செயல்பட்டு வந்தது தெரியவந்தது[3]. அதனடிப்படையில், தனிப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு மேற்படி குற்றச்செயலில் ஈடுபட்ட சேலத்தை தியாகராஜன் (38), சைதாப்பேட்டையை சேர்ந்த கோபிநாத், (28), விழுப்புரத்தைச் சேர்ந்த மணிபாலா (220 ஆகிய 3 பேரை நேற்று (09.7.2020) கைது செய்தனர்[4].

2020- குறைந்த வட்டிக்கு வங்கியில் கடன் வாங்கி தருவேன் என்ற மோசடி: வங்கிகளில் கடன் வாங்கி தருவதாகவும், வேலை வாங்கி தருவதாகவும் கவர்ச்சியாக பேசி பொது மக்களிடம் இருந்து பணத்தை மோசடி கும்பல் பறித்து உள்ளது. இதில் உயர் அதிகாரிகள் முதல் சாதாரண தொழிலாளிகள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணத்தை பறிகொடுத்து உள்ளனர். அவர்களில் 400-க்கும் மேற்பட்டவர்கள் இந்த மோசடி குறித்து புகார் அளித்தனர். அதன்அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த மோசடி கும்பல் ஒரு பெரிய நெட்வொர்க் அமைத்து கோடிக்கணக்கில் பணத்தை பறித்தது தெரியவந்தது. மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் இந்த இளைஞர்களை தங்களது போலியான கால் சென்டர்களில் வேலைக்கு சேர்த்துள்ளனர். இந்த இளைஞர்கள் பொதுமக்களின் செல்போன் எண்களை சேகரித்து அவர்களுக்கு போனில் பேசுவார்கள். குறைந்த வட்டிக்கு வங்கியில் கடன் வாங்கி தருவதாக இவர்கள் சொல்வார்கள். இவர்களின் இனிப்பான பேச்சுக்கு மயங்கி, வங்கியில் கடன் வாங்க ஆசைப்படுபவர்களிடம், அவர்களின் ஆதார் எண், வங்கி ஏ.டி.எம். ரகசிய குறியீட்டு எண், வங்கி கணக்கு விவரம், பான் கார்டு விவரம் போன்றவற்றை சேகரித்து, அதன் மூலம் மோசடி வலையை வீசுவார்கள். பின்னர் வங்கி கடன் தொகைக்கு ஏற்ப வங்கியில் முதலில் முன்பணம் கட்ட வேண்டும், என்று இவர்கள் சொல்லுவார்கள். அந்த முன்பணத்தை தங்களது வங்கிக்கணக்கில் போடச்சொல்லுவார்கள். அந்த பண த்தை சுருட்டுவார்கள். பின்னர் அவர்களது ஓ.டி.பி. எண்ணை வாங்கி, அதன் மூலம், அவர்களது வங்கி கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் ஆன்லைன் மூலம் எடுத்து ஏப்பம் போட்டு விடுவார்கள். இது ஒருவகையான மோசடி[5]. இந்த வழக்கில், சென்னை பென்ஸ் கிளப் உரிமையாளர் பென்ஸ் சரவணன்(வயது 42), பிரபல அரசியல் கட்சி பிரமுகர் செல்வா என்ற செல்வகுமார் மற்றும் வேளச்சேரியைச் சேர்ந்த குமரன் (44), ராயப்பேட்டையைச் சேர்ந்த மிதுன்ராயன் (41) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்[6].

2021 – போலியான கால்சென்டரில் வேலை பார்த்த அனுபவத்தை வைத்து, மோசடி: குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி தருவதாக சொல்லி ரூ.10 ஆயிரம் வரை என்னிடமிருந்து பணத்தை ஆன்லைன் மூலம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக தெரிய வந்தது[7]. இதுபற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகார் கொடுக்கப் பட்டது[8]. .இதுதொடர்பாக அடையாறு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது[9]. திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியில் போலியாக கால்சென்டர் ஒன்றை நடத்தி, அதில் சிலரை வேலைக்கு அமர்த்தி, அவர்கள் மூலம் பொதுமக்களை செல்போனில் தொடர்பு கொண்டு, கடன் வாங்கி தருவதாக கூறி, கடன் வாங்கிக்கொடுக்காமல் இதுபோல் பண மோசடியில் ஈடுபடுவது தெரியவந்தது[10]. போலி கால்சென்டரை நடத்தி பண மோசடியில் ஈடுபட்டதாக, சென்னை நங்கநல்லூரைச்சேர்ந்த சண்முகப்பிரியா (வயது 24), செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த பிரேம்நாத் (30) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்[11]. இவர்கள் இருவரும், இதுபோல போலியான கால்சென்டரில் வேலை பார்த்த அனுபவத்தை வைத்து, மோசடி லீலைகளில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது[12]

2023 – ரிலையன்ஸ் லைப் இன்சூரன்ஸ் பெயர் சொல்லி மோசடி: ரிலையன்ஸ் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகக் கூறி தொடர்பு கொண்டு, பணமோசடி செய்ததாக புகார் செய்யப் பட்டது[13]. விசாரித்ததில், போலி கால் சென்டர் தொலைபேசி அழைப்புகள் அனைத்தும், துரைப்பாக்கம் பகுதியில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது[14]. தொடர் விசாரணையில், பெரும்பாக்கம் சேரன் நகரைச் சேர்ந்த முகமது ஜாவித், 33, என்பவரை போலீசார் கைது செய்தனர்[15]. இவர், துரைப்பாக்கம் பகுதியில், போலியான ‘டெலிகாலர்’ அலுவலகம் நடத்தி வந்தது தெரிந்தது. மேலும் அங்கிருந்து, போலி முகவரியில் பெறப்பட்ட தொலைபேசி எண்களில் இருந்து, பாதிக்கப்பட்டவர்களை தொடர்பு கொண்டு, இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது[16]. அவரிடம் இருந்து மடிக்கணினி, 12 தெலைபேசிகள், 3 மொபைல் போன், 15 சிம் கார்டுகளை பறிமுதல் செய்தனர்.

© வேதபிரகாஷ்

26-01-2024


[1]  தமிழ்.இந்து, போலி ஆதரவற்றோர் இல்லம் நடத்தி ரூ.11.5 லட்சம் திருட்டு: பெண் கைது, போலி நிருபர் தலைமறைவு, செய்திப்பிரிவு, Published : 17 Jun 2019 03:20 PM, Last Updated : 17 Jun 2019 03:20 PM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/171129-11-5-5.html

[3]  தமிழ்.இந்து, சென்னையில் போலி கால் சென்டர் நடத்தி பல லட்சம் மோசடி: 3 பேர் கைது, செய்திப்பிரிவு, Published : 10 Jul 2020 11:03 PM; Last Updated : 10 Jul 2020 11:03 PM.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/563800-fraud-call-center-in-chennai-raided-1.html

[5] தினத்தந்தி, சென்னையில் போலி கால் சென்டர் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி, மார்ச் 12 2020, 4:00 am (Updated: மார்ச் 12, 3:49 am)

[6] https://www.dailythanthi.com/News/State/2020/03/12034942/Fraud-call-center-operating-in-Chennai.vpf

[7] புதியதலைமுறை, சென்னை: லோன் வாங்கி தருவதாகக் கூறி போலி கால்சென்டர் நடத்தி பண மோசடி – 2 பேர் கைது, Sinekadhara, Published on: , 10 Mar 2021, 6:25 pm

[8] https://www.puthiyathalaimurai.com/crime/2-arrested-for-running-fake-call-centre-in-chennai

[9] விகடன், சென்னை: லோன் தருவதாக போலி கால் சென்டர் நடத்தி மோசடிஆண் நண்பருடன் சிக்கிய பெண்!, எஸ்.மகேஷ், Published:10 Mar 2021 7 PM; Updated:10 Mar 2021 7 PM

[10] https://www.vikatan.com/crime/chennai-police-arrested-fake-call-centre-team

[11] தினத்தந்தி, போலி கால் சென்டர் நடத்தி மோசடி பெண் உள்பட 2 பேர் கைது, மார்ச் 11, 1:17 pm (Updated: மார்ச் 11, 1:17 pm)

[12] https://www.dailythanthi.com/News/Districts/2021/03/11131722/Fake-call-center-fraud-Two-people-including-a-woman.vpf

[13]  தினகரன், சென்னை துரைப்பாக்கத்தில் போலி கால் சென்டர் நடத்தி மோசடி செய்தவர் கைது..!!, August 1, 2023, 5:56 pm

[14] https://www.dinakaran.com/chennai-duraipakkam-fake-call-center-fraud-arrest/

[15] தினமலர், போலி கால் சென்டர் மோசடி பேர்வழி கைது, பதிவு செய்த நாள்: ஆக 02,2023 00:34.

[16] https://m.dinamalar.com/detail.php?id=3392450

அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது – சீமானின்பேச்சு, எதிர்ப்பு, கண்டனம் மற்றும் மிரட்டல் (3)

ஓகஸ்ட் 4, 2023

அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டதுசீமானின் பேச்சு, எதிர்ப்பு, கண்டனம் மற்றும் மிரட்டல் (3)

சீமானின் விளக்கம்சாத்தானின் குழந்தைகள் என்று அனைத்து இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களையும் நான் கூறவில்லை: “சாத்தானின் குழந்தைகள் என்று அனைத்து இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களையும் நான் கூறவில்லை” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்துள்ளார்[1]. இது தொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்[2], “இஸ்லாம், கிறிஸ்தவம் இரண்டும் அநீதிக்கு எதிராக பிறந்தவை[3]. அநீதிக்கு எதிரான புரட்சித் தீயை பற்ற வைக்கவே நான் வந்தேன் என்று இயேசு கூறினார்[4]. எங்கே அந்தத் தீ. இந்த நாட்டில் மாறி மாறி திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக ஆட்சி நடக்கிறது. இதை எப்படி சகித்து கொள்கிறீர்கள்? 58 நிமிடம் அக்கறையாக பேசினேன். 2 நிமிடம் பேசியது மட்டுமே தெரிகிறது. இதைப் பற்றி எல்லாம் கவலைப்பட முடியாது. என்னுடைய பேரன்பின் வெளிப்பாடுதான் இது. என்னுடைய பெரும் கோபத்தில் உள்ள பேரன்பினை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது? இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களுக்கு திமுக, காங்கிரஸ் செய்த ஒரு நன்மையை சொல்ல முடியுமா?

மதத்தை வைத்து மனிதர்களை கணக்கிடுவது என்பது உலக வரலாற்றில் இல்லை: தொடர்ந்து சீமான் பேசியது, “தவறு என்று தெரிந்தால், சுட்டிக்காட்டுவது எனது கடமை. சாத்தான் என்பது குர்ஆன் மற்றும் பைபிலில் உள்ளது. இதை நான் கூறவில்லை. நபிகள், இயேசு கூறியுள்ளனர். சாத்தானின் செயல்களை இந்த ஆட்சியாளர்கள் செய்கின்றனர். அநீதி இழைப்பவர்களுக்கு ஆதரவாக இருப்பது யார்? குர்ஆன் சாத்தானின் நண்பர்கள் என்று கூறுகிறது. நான் சாத்தானின் குழந்தைகள் என்று கூறிவிட்டேன். இதை வேண்டும் என்றால் தவறு என்று கூறலாம். மதத்தை வைத்து மனிதர்களை கணக்கிடுவது என்பது உலக வரலாற்றில் இல்லை. எல்லாவற்றையும் விட பெரியது மொழி, இனம்தான். இங்கு உள்ள கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தமிழர்கள். சிறுபான்மை என்று கூறினால் நான் வெறிகொண்டு விடுவேன். யார் சிறுபான்மை? சிறுபான்மை என்று எப்படி கூறுகிறார்கள். மதம் மாறிக் கொள்ளலாம். மொழி, இனத்தை மாற்றிக்கொள்ள முடியாது. அநீதிக்கு துணை நிற்பர்களை கூறினேன்[5]. மொத்தமாக அனைத்து இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களையும் கூறவில்லை[6]. அவர்கள் சாத்தானின் குழந்தைகள் என்று கூறவில்லை. சாத்தானின் குழந்தைகளாக மாறி வீட்டீர்களே என்று ஆதங்கப்படுகிறேன். அநீதிக்கு தொடர்ந்து துணை நின்று கொண்டுள்ளீர்கள். எனக்கு பதில் சொல்ல வேண்டாம். இறைவனுக்கு பதில் கூறியே ஆக வேண்டும்,” என்று சீமான் கூறினார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அண்மையில் இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்துவர்கள் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையானது. இந்த நிலையில், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சென்னை பத்திரிகையாளர் சங்கத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது சீமான் கருத்து தொடர்பாகப் பேசிய திருமுருகன் காந்தி[7], “நாம் தமிழர் கட்சி சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில், `இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் சாத்தானின் பிள்ளைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டனஎன்று சிறுபான்மை மக்களைக் கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார் சீமான். மேலும், `இந்த நாட்டில் நடைபெற்றிருக்கும் அநீதி அக்கிரமங்களுக்குப் பெரிய பொறுப்பேற்க வேண்டியது இஸ்லாமியகிறிஸ்துவ மக்கள்தான்என நாட்டில் நெருக்கடியைச் சந்தித்துவரும் சிறுபான்மை சமூகத்தவர்கள்மீது அபாண்டமாகக் குற்றம்சாட்டியிருக்கிறார். சீமானின் இந்தப் பேச்சு, நாட்டில் சிறுபான்மை சமூகத்தவர்களை ஒடுக்கிவரும் பாசிச பா..ஆர்.எஸ்.எஸ் குரலாக ஒலிக்கிறது. இதை மே 17 இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. தனக்கு வாக்கு செலுத்தாத இஸ்லாமியர்களையும் கிறிஸ்துவர்களையும் சாத்தானின் பிள்ளை எனக் கூறும் சீமான், தனக்கு வாக்களிக்காத இந்து மக்களை எதனின் பிள்ளை என்று அழைப்பார்?,” என்று கேள்வி எழுப்பினார்[8]. மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில்,  “மணிப்பூரில் சிறுபான்மை பழங்குடி கிறிஸ்துவர்கள் மீதும், ஹரியானாவில் சிறுபான்மை இஸ்லாமியர்கள் மீதும் ஆளும் ஒன்றியமாநில பா.. அரசுகளின் ஒத்துழைப்புடன் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் வன்முறைகளை நிகழ்த்தி வரும் இந்த வேளையில், ஒடுக்கும் பாசிச பயங்கரவாதிகளைக் கண்டித்தும் ஒடுக்கப்படும் சிறுபான்மை சமூகத்தவர்களுக்கு ஆதரவாகவும் பேசக்கூடிய நேரத்தில் பாதிக்கப்பட்ட சமூகங்களே குற்றவாளியாக்கிய சீமானின் பேச்சு அரசியல் நாகரிகமற்ற செயலாகும்,” என்றார்.

தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அதரித்தது: இந்து கடவுள்களை சாத்தான் என கூறும் போது வேடிக்கைப் பார்த்து விட்டு தற்போது சீமான் கூறியதைக் கண்டிப்பது நியாமற்ற, நேர்மையற்ற செயலாகும் என தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ’நாம் தமிழர்’ கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்[9]. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி[10], “இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் தமிழ்நாட்டில் இருப்பது மாதிரி சாத்தானுடைய அரங்கு கிடையாது. ஏன் தமிழ்நாட்டைக் குறிவைத்து சாத்தான் ஸ்டாக் பண்ணியிருக்கிறான்?” என்றும் தமிழகத்தில் உள்ள ஹிந்து கோவில்களை… சாத்தானுடைய அரங்கு என்றும், ஹிந்து கடவுள்களை சாத்தான் என்றும் மோகன் சி லாசரஸ் குறிப்பிட்ட போது இதே ஜவாஹிருல்லா எங்கு போயிருந்தார்? தொடர்ந்து ஹிந்து கடவுள்களை சாத்தான் என்று பல்வேறு இஸ்லாமிய பேச்சாளர்கள் பேசும் போதேல்லாம் என்ன செய்து கொண்டிருந்தார் ஜவாஹிருல்லா? ஹிந்து கடவுள்களை சாத்தான் என்று வர்ணிப்பது நாகரீகமானதா? அருவருப்பானது இல்லையா? ஹிந்து கடவுள்களை விமர்சித்த போதெல்லாம் அமைதியாக இருந்து விட்டு இப்போது கண்டிப்பது தானே நியாயமற்ற, நேர்மையற்ற செயலாகும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிஜேபிஎதிர் பிஜேபி என்றெல்லாம் சொல்வது: ஆர்எஸ்எஸின் முகமாக சீமான் இருக்கிறார் என திமுக கூட்டணி கட்சியினர் குற்றம்சாட்டி வரும் நிலையில், பாஜகவினர் சீமானின் கருத்தை ஆதரிப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாட்டை துரைமுருகன் என்பவரும், சீமான் சொல்லியதில் எந்த தவறும் இல்லை[11], ஆனால், மக்களுக்குப் புரியும் அகையில், தெளிவாக கூறியிருக்க வேண்டும் என்று கிட்டதட்ட இதே கருத்தை வெளியிட்டுள்ளார்[12]. கம்யூனிஸ்டுகளும் இதே கோணத்தில் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதை மேலே குற்ப்பிடப் பட்டது. இப்படி பிரச்சினைகளை பிஜேபி-எதிர் பிஜேபி என்றெல்லாம் விவரித்து, விவாதித்தாலும், அதிகமாக இந்துமதம் தாக்கப் பட்டு வந்த நிலையில், இப்பொழுது, கிறிஸ்தவர்-முஸ்லிம்கள் நேரிடையாக விமர்சிக்கப் பட்டுள்ளனர். விமர்சித்தவர் “செபாஸ்டியன் சைமன்” என்று சொல்லப் படுகின்ற சீமான் என்பதால், எதிர்ப்பு இந்த அளவில் இருக்கிறது. இதே, ஒரு இந்து சொல்லியிருந்தால் கைது செய்யப் பட்டிருப்பர்.

© வேதபிரகாஷ்

04-08-2023


[1] தமிழ்.இந்து, அனைத்து இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களையும் நான் அப்படிச் சொல்லவில்லை” – சீமான், செய்திப்பிரிவு, Published : 03 Aug 2023 01:21 PM; Last Updated : 03 Aug 2023 01:21 PM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/1079267-seeman-said-that-i-am-not-saying-that-all-muslim-and-christian.html

[3] கல்கி.ஆன்.லைன், கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் சாத்தான் என கூறியது ஏன்? சீமான் விளக்கம்!, விஜி, Published on : 03 Aug 2023, 6:05 pm

[4] https://kalkionline.com/news/politics/naam-tamilar-seeman-pressmeet-about-saathan-word-issue

[5] விகடன், `அநீதிக்குத் துணை நின்றவர்களைத்தான் சாத்தானின் குழந்தைகள் என்றேன்!’ – சீமான் VM மன்சூர் கைரி, Published: 03-08-2023 Yesterday at 2 PM; Updated:Yesterday at 3 PM.

[6] https://www.vikatan.com/government-and-politics/politics/ntk-chief-seeman-clarification-regarding-his-speech-about-minorities

[7] விகடன், சீமானின் இந்தப் பேச்சு, பாசிச பாஜகஆர்எஸ்எஸ் குரலாக ஒலிக்கிறது” – திருமுருகன் காந்தி காட்டம், சா.முஹம்மது முஸம்மில், Published: 03-08-2023 at 6 PM; Updated: August 3, 2023 at 6 PM.

[8] https://www.vikatan.com/government-and-politics/politics/may-17-organization-coordinator-thirumurugan-gandhi-slams-seeman

[9] காமதேனு, தமிழக அரசியலில் பரபரப்புசீமானுக்கு ஆதரவாக களமிறங்கிய பாஜக!, Updated on : 03 Aug 2023, 12:55 pm

[10] https://kamadenu.hindutamil.in/politics/bjp-came-out-in-support-of-seeman

[11] தமிழ்.ஏபிபிலைவ், சாத்தானின் பிள்ளைகள் என சீமான் கூறியதில் தவறு இல்லை.. சப்போர்டுக்கு வந்த சாட்டை துரைமுருகன், By: அப்ரின் | Updated at : 02 Aug 2023 05:19 PM (IST);   Published at : 02 Aug 2023 05:17 PM (IST) 

[12] https://tamil.abplive.com/news/tamil-nadu/seeman-controversy-saathan-speech-sattai-durai-murugan-support-to-him-132611

அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது – சீமானின் பேச்சு, எதிர்ப்பு, கண்டனம் மற்றும் மிரட்டல் (2)

ஓகஸ்ட் 4, 2023

அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டதுசீமானின் பேச்சு, எதிர்ப்பு, கண்டனம் மற்றும் மிரட்டல் (2)

சீமான்இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் தி.மு.. செய்த ஒரு நன்மையைச் சொல்லுங்கள். நான் கட்சியை கலைத்துவிட்டுப் போகிறேன்: இதற்குப் பிறகு, சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தபோது பேசியதாவது: “தொடர்ச்சியாக 18% வாக்கை தி.மு.. காங்கிரசிற்குப் போடுகிறார்கள். பிறகு மாற்றம் எப்படி வரும்? எதிர்க்கட்சியாக இருக்கும்போது இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்வதாகச் சொல்வார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு செய்ய மாட்டார்கள். எங்களுக்கு உரிமை இருக்கிறது, ஆதங்கம் இருக்கிறது என்பதால் சொல்கிறோம். இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் தி.மு.. செய்த ஒரு நன்மையைச் சொல்லுங்கள். நான் கட்சியை கலைத்துவிட்டுப் போகிறேன். நான் எவ்வளவோ பேசியிருக்கிறேன், அதையெல்லாம் விட்டுவிட்டு, சாத்தானின் பிள்ளைகள் என்று பேசிவிட்டாரே என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள்,என்று குறிப்பிட்டார்.

சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தொடர்ந்து பேசியதாவது: மணிப்பூரில் இருந்து வந்து நமக்கு யாரும் ஓட்டு போடப்போவதும் இல்லை. அதை பற்றி நாம் ஏன் பேச வேண்டும். இங்கு இருக்கக்கூடிய கிறிஸ்துவர்களும் நமக்காக வாக்களிக்கப்போவது கிடையாது. நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம், இஸ்லாத்தையும் கிறிஸ்துவத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று. அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகளாகிவிட்டது, என்று கூறி இருந்தார். அதோடு நிற்காமல், சும்மா போய் தேவாலயத்தில் தேவரே வாரீர் வாரீர் என்று பாடிவிட்டு, கடைசியில் யார் யாருக்கோ நாட்டை கொடுத்து இருக்கிறார்கள். இந்த நாட்டில் நடந்திருக்கும் அநீதி அக்கிரமங்களுக்கு பெரிய பொறுப்பு,” என்றும் கூறி சர்ச்சையை கிளப்பி இருந்தார். அவரின் இந்த பேச்சு பெரிய சர்ச்சையான நிலையில் சீமானின் பேச்சுக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் விமர்சனங்களை வைத்தன. அதேபோல் சில இஸ்லாமிய அமைப்புகள் சீமானுக்கு எதிராக காவல் நிலையத்திலும் புகார் வைத்தன.

சீமான் மன்னிப்பு கேட்டால் என்ன ஓட்டா கிடைக்கும்?: இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம் செய்தியாளர்கள் இந்த பேச்சு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான், ”மன்னிப்பு கேட்டுவிட்டேன் என்றால் எனக்கு ஓட்டு போட்டுவிடுவார்களா? வருத்தம் தெரிவிக்க வேண்டியது எனது மக்கள்தான். என்னைப் போன்று நிற்போரை ஆதரிக்காமல் நடுத்தெருவில் போராட விட்டது யாரு? அநீதிக்கு எதிராக போராடிய ஒரே ஒருவர் பழனிபாபாதான். அவரையே நீங்கள் மதிப்பதில்லையே. அவரையே அநியாயமாக சாக விட்டவர்கள்தானே. மானமுள்ள தமிழன் திமுகவிற்கு ஓட்டு போடுவானா என கேட்டவர் பழனி பாபா. அதனால் அவரைப்பற்றி பேச மாட்டார்கள். அவரை விடவா நான் பேசிவிடப் போகிறேன். அவரே உங்களுக்கு ஒரு பொருட்டல்ல நானெல்லாம் ஒரு பொருட்டா? முதலில் அண்ணன் ஜவாஹிருல்லா கலைஞரைப் பற்றி பேசியதை கேட்டுள்ளீர்களா? முதுகில் குத்திய துரோகி எனக் கலைஞரை பேசியுள்ளார்[1]. ஆனால் இப்பொழுது அங்கு ஒரு சீட்டுக்காக நிற்கிறீர்கள்” என்றார். சீமானின் பேச்சு சர்ச்சையான நிலையில் மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திராவிட நட்பு கழகம் அமைப்பு சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது[2].

மதம், சாதியை விட எல்லா அடையாளங்களையும் விட மொழி இனம் தான் பெரியது: சீமான் தொடர்ந்து பேசியது ‛‛மதம், சாதியை விட எல்லா அடையாளங்களையும் விட மொழி இனம் தான் பெரியது. முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் தமிழன். பெரும்பான்மை தேசிய இனத்தின் மகன். வந்தவன், போனவன் எல்லாம் சிறுபான்மையினர்சிறுபான்மையினர்என சொல்பவர்களை செருப்பால் அடிப்பேன்,” என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்[3]. சென்னையில் நிருபர்களை சந்தித்த சீமான் கூறியதாவது[4]: முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களுக்கு காங்கிரஸ், தி.மு.க., ஏதாவது நல்லது செய்தது உண்டா? மதத்தை வைத்து மனித கூட்டத்தை கணக்கிட்டது எங்கேயாவது உள்ளதா? ஐரோப்பிய யூனியன் முழுவதும் கிறிஸ்தவர்கள் இருந்தாலும், பல நாடுகள் இருப்பதற்கு காரணம் மொழி வாரியாக தேசிய இனங்கள், நிலங்கள் உள்ளது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்ததற்கு காரணம் மதம். பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிந்ததற்கு காரணம் மொழி. மதம், சாதியை விட எல்லா அடையாளங்களையும் விட மொழி இனம் தான் பெரியது. இங்குள்ள கிறிஸ்தவனும், இஸ்லாமியனும் தமிழன்.. பெரும்பான்மையான தமிழ் தேசிய இனத்தின் மகன். வந்தவன், போனவன் எல்லாம் சிறுபான்மையினர்… சிறுபான்மையினர்… எனக்கூறினால் செருப்ப கழட்டி அடிப்பேன். வெறி கொண்டு இருக்கேன். மதத்தின் அடிப்படையில் மனிதர்களை பிரிப்பதை ஏற்க முடியாது. ஸ்டாலின் முதல்வர். உதயநிதி அமைச்சர். இன்பநிதிக்கு, அரசு விழாவில் என்ன வேலை. தலைதலைமுறையாக ஆட்சி செய்து கொண்டுள்ளீர்கள். உங்கள் குடும்பத்திற்கு என் நாடு பட்டா போட்டு கொடுக்கப்பட்டு உள்ளதா. மக்கள் உங்களுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்து உள்ளனரா? இவ்வாறு சீமான் கூறினார்.

சீமான் எழுப்பியுள்ள சில கேள்விகள்: ஊடகக்காரர்களைப் பார்த்டு நேரிடையாக சீமான் எழுப்பியுள்ள கேள்விகள்…தேசம், நாடு, மொழி, இனம், மதம், என்ற காரணிகளில் இந்த சித்தாந்திகளுக்கு எழுப்பப் பட்ட கேள்விகள்:

  1. காஷ்மீரில் இஸ்லிமிய பெரும்பான்மை தானே, ஆனால், ஒட்டுமொத்தமாக முஸ்லிம்களை சிறுபான்மையினர் என்று எப்படி சொல்ல முடியும்?
  2. மனிதன் தன்னுடைய மூலத்தை, மதம் மாற்றிக் கொள்ளக் கூடியது மொழியை, மொழி இனத்தை  மாற்றிக் கொள்ளமுடியாது.
  3. நேற்றைக்கு திலீப், இன்று ஏ.ஆர்.ரஹ்மான்; நேற்றைக்கு பெரும்பான்மை, இன்றைக்கு சிறுபான்மையா? கேவலமாக இல்லை.
  4. என்னுடைய அப்பா இளையராஜா பெருபான்மை, யுவன் ஷங்கர் ராஜா சிறுபான்மை;  போனவாரம் அவர் பெரும்பான்மை, இந்த வாரம் அவர் சிறுபான்மை;
  5. இந்த மாதிரியான உலக பைத்தியக்காரத்தனம் எங்கேயாவது இருக்கிறதா தம்பி?

ஒருவேளை, மதமாற்றத்தை எதிர்க்கிறாரா என்றும் யோசிக்க வேண்டியுள்ளது. இருப்பினும், சீமான் தமிழ்-தமிழர்-தமிழர் சயம் என்றால் எல்லாமே ஒன்று என்று விளக்கம் கொடுத்து விடுவார்.

கம்யூனிஸ்டுகளின் எதிர்ப்பு திகைப்பாக இருக்கிறது: சீமான் குறிப்பிட்டதைப் போலவே, அவர் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பேராசிரியர் அருணன், க. உதயகுமார் ஒருங்கிணைப்பில் ஹிந்து என். ராம், டி.எம். கிருஷ்ணா, பேராசிரியர் வசந்தி தேவி, திரைப்படக் கலைஞர் ரோஹிணி ஆகியோரை உள்ளடக்கிய தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சீமானின் இந்தப் பேச்சைக் கண்டித்துள்ளது[5]. “இவரின் நோக்கம் தெளிவானது. பா... எதிர்ப்பு வாக்குகள் சிதற வேண்டும். அதன் மூலம் பா... அணி வெற்றிபெற வேண்டும் என்பது. இந்தச் சதி வேலைக்கு இணங்காமல் சிறுபான்மையினர் தி.மு.. அணிக்கு வாக்களிப்பதே இவரது ஆத்திரத்திற்குக் காரணம். அதனால்தான் சாத்தானின் பிள்ளைகள் என்று படுமோசமான வசவு மொழியை உதிர்த்திருக்கிறார்,” என அந்த அமைப்புச் சுட்டிக்காட்டியுள்ளது[6]. மொழி,இனம், நாடு, தேசம், மொழி-இனம், தேசிய-இனம் போன்ற அவர்களது விருப்பமான விசயங்களை விடுத்து, அவற்றையும் மீறி சீமானை அரசியல் தேர்தல், ஓட்டு என்ற ரீதியில் விளக்கம் கொடுத்து எதிர்த்திருப்பது கவனிக்கத் தக்கது.

© வேதபிரகாஷ்

04-08-2023


[1] நக்கீரன், சீமான் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார், Published on 02/08/2023 (18:59) | Edited on 03/08/2023 (07:35)

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/complaint-against-seeman-police-commissioners-office

[3] தினமலர், சிறுபான்மையினர் என சொல்பவர்களை செருப்பால் அடிப்பேன்: சீமான், பதிவு செய்த நாள்: ஆக 03,2023 14:00

[4] https://m.dinamalar.com/detail.php?id=3394025

[5] பிபிசி, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை சாத்தானின் குழந்தைகள் எனக் கூறியது ஏன்? சீமான் விளக்கம், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர், 2 ஆகஸ்ட் 2023; புதுப்பிக்கப்பட்டது 3 ஆகஸ்ட் 2023; https://www.bbc.com/tamil/articles/clewz1d27nno

[6] https://www.bbc.com/tamil/articles/clewz1d27nno

அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகி விட்டது – சீமானின் பேச்சு, எதிர்ப்பு, கண்டனம் மற்றும் மிரட்டல் (1)

ஓகஸ்ட் 4, 2023

அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டதுசீமானின் பேச்சு, எதிர்ப்பு, கண்டனம் மற்றும் மிரட்டல் (1)

தமிழக அரசியல்வாதிகளின் முரண்பட்ட சித்தாந்தங்கள்: தேர்தல் வருகின்றது என்றால் அரசியல்வாதிகள் என்னவேண்டுமாலும், எப்படி வேண்டுமானாலும் பேசுவார்கள். ஒரு கொள்கைப் பிடிப்பற்ற, ஏன் கொள்கையற்ற, சித்தாந்த உதறல்களாகக் கூட பேச்சுகள் இருக்கும். கூட்டணி மயக்கம், போதை, பேரம் என்றெல்லாம் வந்து விட்டால், இப்பேச்சுகள் இன்னும் அதிகமாகி விடும். தமிழக, திராவிட, திராவிடத்துவ அரசியலில் பிரிவினைவாதம், திராவிடஸ்தான், திராவிடநாடு, தமிழ்நாடு, மாநில சுயயாட்சி, தமிழ் தேசியம், திராவிட தேசியம், மொழிபேசும் தேசிய இனங்கள், ஆரியன்,திராவிடன், வடுகண், வந்தேறி, குந்தேறி என்று விரிந்து கொண்டே போகும். மேனாட்டு பிரஹஸ்பதிகள் அவ்வப்பொழுது தங்களது தேவைக்கு ஏற்ப, இத்தகைய சித்தாந்தங்களை கருத்தியல், கருதுகோள், மாதிரி, உத்தேச வடிவம் என்ற ரீதியில் முன்வைப்பர், மற்றவர் மூலம் கருத்து பெற முயற்சிப்பர். பிறகு அவை தமக்கு உபயோகப் படும், லாபம் கிடைக்கும் என்றால், விஞ்ஞான முறையில் மெய்ப்பிக்கப் பட்டது என்று முலாம் பேசி  சுற்றில் விட்டு ஒத்திகைப் பார்ப்பர்.

மதஆதரவும், ஓட்டு வங்கியும், அரசியலும்: மணிப்பூர் கலவரத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் ஜூலை 30-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய சீமான்[1], “ஒவ்வொரு கலவரத்தின் பின்னணியிலும் பண வேட்டை இருக்கும். மணிப்பூர் கலவரத்திற்கும் அது தான் காரணம். ஆழ்ந்து பார்த்தால், மலைகளில், காடுகளில் வாழ்கிற பழங்குடி மக்கள் கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பா..விற்கு வாக்கு செலுத்த மாட்டார்கள். தரை தளத்தில் வாழும் மெய்த்தி இன மக்கள், இந்துத்துவ கோட்பாட்டை ஏற்கும் மக்களாக இருக்கிறார்கள். அதனால், அங்கே பழங்குடி இன மக்கள் சாவதைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை. நமக்கும் இது நடந்துள்ளது. ஒகி புயலில் மீன் பிடிக்கச் சென்ற 200-க்கும் மேற்பட்டோர் இறந்து போய்விட்டனர். வலிமை மிக்க கடற்படையை வைத்திருக்கும் நம் நாடு, அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று எண்ணவே இல்லை. மக்கள் போராடியும் எந்த மதிப்பும் அதற்கு தரவில்லை. கடைசியாக, ‘உயிரற்ற உடலையாவது ஒப்படையுங்கள், மரியாதையான நல்லடக்கம் செய்கிறோம்என்று கூட போராடினார்கள். அப்போது கண்டுகொள்ளவில்லை. அதற்கு காரணம், அவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள், அவர்கள் வாக்கு நமக்கு வரப்போவதில்லை என்பதால் கண்டுகொள்ளவில்லை.

திராவிட அரசியல், தேசிய அரசியல், கலவரங்கள்: சீமான் தொடர்ந்து பேசியது[2],தேச ஒற்றுமையை பேச வக்கற்ற, தகுதியற்றவர்கள் தான் திரும்ப திரும்ப தேச ஒற்றுமை பற்றி பேசுகிறார்கள். திடீரென இவர்கள் புனிதர்களாகிவிடுவார்கள். அதை நாம் நம்ப வேண்டும். குஜராத் கலவரத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்து பேசியவர்கள் தி.மு..வினர். இவர்கள் மணிப்பூர் கலவரத்தைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? 76-வது நாளில் பேசுகிறீர்கள். 76 நாளில் என்ன செய்தீர்கள்? தேர்தல் வருகிறது, அதனால் பேசுகிறீர்கள். அங்கு பாதிக்கப்படும் கிறிஸ்தவர்களை வைத்து, இங்குள்ள கிறிஸ்தவர்களிடம்உனக்காக பேசுகிறோம்என்பதை காட்டுவதற்காக பேசுகிறார்கள். நான் ஈழத்தைப் பற்றி பேசிய போது, ‘அரசியலுக்காக பேசுகிறார்கள்என்று கூறியவர்கள் தான், இன்று மணிப்பூர் கலவரத்தைப் பற்றி பேசுகிறார்கள். தேர்தல் ஆதாயத்திற்காக இவர்கள் பேசுகிறார்கள். ஆஊனா கட்டுச்சோறு கட்டிக்கிட்டு நடைபயணம் கிளம்பிவிடுகிறார்கள். குஜராத் மாடல் மாதிரி, திராவிட மாடல் மாதிரி நடைபயணம் ஓல்டு மாடல். ராகுல் காந்தி, நடையா நடந்தார், ஒன்னும் நடக்கல போய்ட்டார். 9 ஆண்டுகள் ஆட்சி செய்துவிட்டு இப்ப தான் என்ன பிரச்னை என்று கேட்க வருகிறார்கள். பிரச்னையே நீங்க தானே!

மதரீதியிலான ஓட்டு வங்கி நிரந்தரமல்ல?: சீமான் தொடர்ந்து பேசியது, மணிப்பூர் விவகாரத்தை நாம் பேசுவதால், நமக்கு அங்குள்ள மக்கள் ஓட்டுப் போடப்போவதில்லை. இங்குள்ள கிறிஸ்தவர்களும் நமக்கு ஓட்டுப் போடப் போவதில்லை. நாம நினைத்துக் கொண்டிருக்கிறாமே், இஸ்லாமையும், கிறிஸ்துவத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று. ஆனால் அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது[3]. சும்மா தேவாலயத்திற்கு போய்தேவனே வாரீர்.. வாரீர்னு,’ பாடிட்டு, எவனிடமோ நாட்டை கொடுத்துவிட்டார்கள்[4]. இந்த நாட்டில் நடந்த அநீதிக்கு பெரிய பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தான். தொடர்ச்சியாக பல ஆண்டுகுள் 18 சதவீதம் வாக்குகளை தி.மு..வுக்கும், காங்கிரஸிற்கும் போட்டு போட்டு நாட்டை தெருவில் போட்டவர்கள் இவர்கள் தான். சலிக்க முடியாத ஊழல், லஞ்சம், சீர்கேடான நிர்வாகம், காரணம் இவர்கள் தான். இவர்கள் பாவம் கேட்கிறார்கள். பெரும்பாவமே அவர்கள் தான், அவர்களுக்கு எப்படி மன்னிப்பு கிடைக்கும். இன்னும் பாருங்கள், இவர்கள் தான் எங்களை பாதுகாப்பார்கள் என்று நம்புகிறார்கள். இஸ்லாமியர்களுக்கு தி.மு. தான் பாதுகாப்பு. ஆமாம், சிறையில் வைத்து பல ஆண்டுகளாக பாதுகாப்பது எவ்வளவு பெரிய பாதுகாப்பு? மீண்டும் இதே இஸ்லாமியர்களிடம் அவர்கள் ஓட்டு கேட்பார்கள். இந்த முறையும் அதே பொய்யை சொல்லி ஓட்டு கேட்பார்கள்[5]. நீங்கள் அவவர்களை விடுதலை செய்யுங்கள், நாம் தமிழர் கட்சியும் உங்களுக்கு வாக்களிக்கும்,என்று அந்த ஆர்பாட்டத்தில் சீமான் பேசினார்[6].

சீமான் பேசிற்கு ஊடகங்கள் இப்பொழுது அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது: சீமான் பேசும் பேச்சுகளில் பெரும்பாலாக லாஜிக், விசயம் இருக்கும் என்பது போல இருக்கும். இருப்பினும், சில நேரங்களில் தாராளமாக தமாஷான பேச்சு போல சிலவற்றை எடுத்து விடுவார். அந்த பேச்சுகளில் உள்நோக்கம் இருக்கிறதா-இல்லையா என்பது ஆராய வேண்டிய நிலையில் தான் உளளது. போதாகுறைக்கு யூ-டியூபாக மாறும் அல்லது சுற்றுக்கு வரும் பேச்சுகளில் உண்மைத் தன்மை 30-50% கூட இருப்பதில்லை. ஒரு சிறிய விசயம் கிடைத்தால், அதை ஊதி பெரிதாக்கி, தமக்குத் தான் எல்லாம் தெரியும் என்ற ரீதியில், வீடியோக்கள் தயாரித்து சுற்றில் விடுகின்றனர். பொழுது போக வேண்டும் என்று ஆயிரக்கணக்கில் மக்கள் பார்க்கின்றனர். அவர்களுக்கு உண்மை, உண்மைத் தன்மை, அதாரம் பற்றியெல்லாம் கவலையில்லை. சில நேரங்களில் அரசியல், வெறுப்புப் பேச்சு, காழ்ப்பு-வெறுப்பு போன்றவை சேரும் பொழுது விப்ரீதமாகிறது. எல்லா பேச்சுகளையும், எல்லோரும், ஒரே மாதிரியாக எடுத்துக் கொள்வ்தில்லை முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சமூக ஊடக பதிவுகளை வைத்து செய்திகளைத் தயாரிப்பது என்பது இக்கால செய்தி தயாரிப்பு முறையாக உள்ளது. அவ்விதத்தில், சீமான் பேசிற்கு ஊடகங்கள் இப்பொழுது அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளன என்று தெரிகிறது.

இஸ்லாமையும், கிறிஸ்துவத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள்  –ஜவாஹிருல்லா கண்டனம்: இந்த ஆர்ப்பட்டத்தில்,இஸ்லாமையும், கிறிஸ்துவத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று. ஆனால் அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது.” என்று சீமான் பேசியது தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையானது. .. பொதுச் செயலாளர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்ததோடு சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், “இந்த கயமைத்தனமான பேச்சு வன்மையான கண்டனத்துக்கு உரியது. தன் கட்சிக்கு வாக்களிக்காத காரணத்தினாலேயே கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் சாத்தானின் பிள்ளைகள் என்று வர்ணிப்பது அநாகரிகமானது, அருவருப்பானது, என்பதோடு அரசியல் நேர்மையற்ற செயலுமாகும். இதை வன்மையாக கண்டிக்கிறோம்,” என்று ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்தார்.

© வேதபிரகாஷ்

04-08-2023


[1] தமிழ்.ஒன்.இந்தியா, காலை காட்டி சொன்னஅந்தவார்த்தை.. சீமான் அரசியலுக்கு என்னாச்சு? கொதித்து போன இஸ்லாமியர்கள்! திடுக், By Shyamsundar I Published: Thursday, August 3, 2023, 14:20 [IST]

[2] https://tamil.oneindia.com/news/chennai/why-naam-tamilar-party-seeman-attack-muslims-and-christians-all-of-a-sudden-526569.html

[3] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Seeman Speech: ‘இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சாத்தானின் குழந்தைகள்சீமான் பகீர் பேச்சு!  , Stalin Navaneethakrishnan • HT Tamil, Jul 31, 2023 09:21 AM IST

[4] https://tamil.hindustantimes.com/tamilnadu/ntk-chief-coordinator-seeman-talks-about-muslims-and-christians-131690773683412.html

[5] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், சாத்தானின் குழந்தைகள் என பேசியது ஏன்? சீமான் விளக்கம், Written by WebDesk, August 3, 2023 01:18 IST.

[6] https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-electricity-employees-have-done-electricity-calculations-without-going-to-homes-734464/

கருப்புக் கொடி போராட்டமும் – வன்முறையும் – கவர்னரைக் கேவலமாகத் திட்டுவது, வார்த்தை-வன்முறைகளால் தாக்குவது, ஒருமையில் பேசித் திட்டுவது முதலியன வள்ளுவர் போற்றும் நெறிகள் ஆகுமா? தமிழ் கலாச்சாரத்திற்கு தகுமா? நடப்பது எதைக் காட்டுகிறது? (3)

ஏப்ரல் 28, 2022

கருப்புக் கொடி போராட்டமும் – வன்முறையும் – கவர்னரைக் கேவலமாகத் திட்டுவது, வார்த்தை-வன்முறைகளால் தாக்குவது, ஒருமையில் பேசித் திட்டுவது முதலியன வள்ளுவர் போற்றும் நெறிகள் ஆகுமா? தமிழ் கலாச்சாரத்திற்கு தகுமா? நடப்பது எதைக் காட்டுகிறது? (3)

1953ல் நேருவுக்கு எதிராக கருப்புக் கொடி காட்டியது[1]: இந்தி எதிர்ப்பு பற்றி கேள்வி பட்ட நேரு அது, “அர்த்தமற்றது,” என்று ஆங்கிலத்தில் சாடினார். இதனால், திமுக பொத்க் குழுவில் நேருவுக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடத்த வேண்டும் என்று தீர்மானம் போட்டது. 1953ல் ஜூலை 13 அன்று கூடிய திமுக செயற்குழு கூட்டத்தில் நேருவின் இந்தி திணிப்புக்கு எதிராக கருப்புக் கொடி காட்டுவது என முடிவானது. அதன் படி 15 ஆம் தேதி ரயில் மற்றும் விமானநிலையம் முற்றுகையிடப்பட்டது. அன்று டால்மியாபுரம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு கருணாநிதி கைதானார். “இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்திற்கு எதிரானவர்கள் இந்த நாட்டிற்கே எதிரானவர்கள்” என நேரு கண்டிக்கும் அளவுக்கு  விஷயம் விவகாரமானது. இதையொட்டி ராஜாஜி தமிழகம் வரும்போதெல்லாம் கருப்புக் கொடி மறியலுக்கு அவர் ஆளானார். இதே இந்தி திணிப்புக்கும் எதிராகவும் ‘வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது’ என்ற கருத்திற்கு வலுசேர்க்கும் விதத்தை காட்டவும் அண்ணாவும் மத்திய அமைச்சர்கள் வரும்போதெல்லாம் கருப்புக் கொடி போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார். அதனையொட்டி மத்திய தகவல் ஒலிப்பரப்புத்துறை அமைச்சர் ரங்கநாத் ராமச்சந்திர திவாகருக்கு எதிராக அண்ணா காலத்தில் கருப்புக் கொடிக் காட்டப்பட்டது.

1977ல் இந்திராவுக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் – வன்முறையில், கொலைமுயற்சியில் முடிந்தது: நேருக்கு கருப்புக் கொடி காட்டிய திமுக அவரது மகள் இந்திராவையும் திமுக விட்டு வைக்கவில்லை. 1977ல் அவர் சென்னை வந்தபோது அவருக்கு எதிராக ஒரு கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் அரங்கேற்றப்பட்டது. மிசாவை எதிர்த்தும் நெருக்கடி நிலை பிரகடணத்தை எதிர்த்தும் தங்களின் எதிர்ப்பை பதிய வைக்கவே இப்போராட்டம் நடத்தப்பட்டது. அன்றுதான் மதுரையில் இந்திரா திமுகவினரால் தாக்கப்பட்டார். அன்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த பழ நெடுமாறன் அந்த ஆபத்தில் இருந்து இந்திராவைக் காப்பாற்றி அனுப்பி வைத்தார். அந்தச் அம்பவம் நெடுமாறன் அரசியல் வரலாற்றில் அழியாத சுவடாக பதிவானது. கருப்புக் கொடி ஆர்பாட்டம், இவ்வாறு கொலைமுயற்சி வரை சென்றதும் நிதர்சனம் ஆனது. Indira Gandhi Priyadarshini Nehru vs M. Karunanidhi, M. Muthu & Ors வழக்கு உச்சநீதி மன்ற வரை சென்றது. பிறகு, காங்கிரஸ்-திமுககூட்டணி ஏற்பட்டவுடன் மறாக்கப் பட்டது.

அட்வொகேட், சட்டம் படித்த மேதை பிரதமருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டுவது, கவர்னரைக் கேவலமாகத் திட்டுவது எப்படி?: மதுரையை சேர்ந்தவர் வக்கீல் பசும்பொன் பாண்டியன். இவர் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளராக இருந்து வருகிறார்[2]. இவர் தமிழக கவர்னர் ஆர். எம். ரவி குறித்து அவதூறாக பேசியதாக போலீசார் 22-04-2022 அன்று இரவு வக்கீல் பசும்பொன் பாண்டியனை கைது செய்தனர்[3]. முன்னதாக அவரிடம் விசாரணை நடத்துவதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திடீர்நகர் காவல் நிலையத்திற்கு பசும்பொன் பாண்டியன் அழைத்துவரப்பட்டார் இந்த தகவலை அறிந்த அவரது ஆதரவாளர்கள் திடீர் நகர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. சென்ற ஜனவரி 2019ல் கூட, மோடிக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட திட்டமிட்டதற்கு கைது செய்யப் பட்டார்[4]. அப்பொழுதும், இதே போன்ற கலவர நிலவரம் ஏற்பட்டது[5].

தமிழகத்தில் இவை, ஏன், எப்படி நடக்கிறது, நடக்கவேண்டும், தூண்டுவது என்ன, தூண்டுகிறவர்கள், ஊக்குவிப்பவர்கள் யார்?:

  1. பிரதம மந்திரியை இழிவு படுத்துவது, படத்தை நீக்குவது, உடைப்பது முதலியன மிகவும் கேவலமான செயல்கள்.
  2. கவர்னரை கெட்ட வார்த்தைகள் கொண்டு திட்டுவது, அவமரியாதை செய்வது, அவற்றை வெளிப்படையாக டிவி-தொலைக்காட்சிகளில் காட்டி ஒலி-ஒளிபரப்புவது, அடிமட்ட ஒழுன்கீனமானது[6].

ஒரு அட்வொகேட் அவ்வாறு செய்வது, எத்தகைய கீழ்த்தரமான வேலைகளீலும் இறங்கத் தயயாராக இருக்கின்றனர் என்று தெரிகிறது.

தமிழகத்தில், அவொகேட், பி.எல், வழக்கறிஞர் என்றெல்லாம் சொல்லிக் ஒள்பவர்கள் பல குற்றங்கள், ஒழுங்கீனங்கள், சட்டமீறல்கள் முதல்யவற்றில் ஈடுபடுவதும் நோக்கத் தக்கது.

  • உள்துறை அமைச்சர் வரும் போது கருப்புக் கொடி காட்டுவது, “திரும்பி போ” என்றெல்லாம் கத்துவது, மிக்க அநாகரிகமான, ஜனநாயகமில்லாத, காட்டுமிராண்டித் தனமானது.
  • இருப்பினும், இவையெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன, போலீஸாரும் அனுமதித்து, வேடிக்கைப் பார்ப்பது போல விடியோக்கள் / செய்திகள் காண்பிக்கப் படுகின்றன.
  • கொம்புகள் முதலியவை கொண்டுவருவதைத் தடுக்காமல், அவற்றை தூக்கியெறியும் போது,  பிடித்துக் கொள்வது, கீழே விழுந்ததைக் கொண்டு வருவது முதலியனவும், மிக்க அவமரியாதையான, கீழ்த்தரமான செயலை செய்வது போலிருக்கிறது.
  • ஒரு படி சென்றால், அடிக்க செல்வார்கள், அதுவும் நிகழ்வேறும் என்ற நிலை உருவாகிறது.
  • கடந்த 50-60 வருடங்களாக திராவிட பாரம்பரியம், திராவிடம், தமிழ் என்றெல்லாம் பேசி வருகின்ற திக-திமுக போன்ற திராவிடக் கட்சியினர்களிடமிருந்து தான் இவை வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
  • அதே போல, மாணவ-மாணவியர்களின் ஒழுங்கினங்களும் வீடியோக்கள் மூலம் வெளிப் பட்டுக் கொண்டிருக்கின்றன.
  • ஒரு பக்கம், திருவள்ளுவர், திருக்குறள் என்றெல்லாம் பேசி ஆர்பாட்டம் செய்து வரும் பொழுது, குறளைப் போற்றும் இவர்கள் இத்தகைய குற்றங்கள், அநாகரிகங்கள் முத்லியவற்றில் எவ்வாறு ஈடுபடுவர் என்று தெரியவில்லை.
  • முதலில், இவர்களையெல்லாம், மனோதத்துவ முறையில் சோதித்து, ஒழுங்காகும் வரையில், விலக்கி வைக்க வேண்டும், அப்பொழுது தான் சமுதாயம் உருப்படும். இல்லையென்றால், இவற்றைப் பார்த்து, மற்றவர்களும் இதே மாதிரியான ஒழுங்கீனங்களில் ஈடுபடுவர், அவற்றைப் பெருமையாகவும் நினைத்துக் கொள்ளலாம்.

© வேதபிரகாஷ்

23-04-2022


[1] The first PM welcomed by DMK’s black flags was Nehru in 1953. It was the Dravidian party’s response to Nehru’s remark that the anti-Hindi agitations were “non-sense” protests. An executive committee meeting of DMK party on July 13,  1953, resolved that the party would block trains to protest Nehru’s “derogatory” remarks against the anti-Hindi protests and wave black flags to Nehru when he next visits Tamil Nadu. Many DMK leaders and cadre were arrested and jailed when they blocked trains on July 15, 1953. M Karunanidhi, who reportedly blocked a train at Dalmiapuram in Tiruchy district, was among them. When Nehru visited Tamil Nadu a few months later, there were only very less number of DMK cadre outside the prisons and they managed to wave black flags to Nehru and get arrested. 

[2] தினத்தந்தி, அ.தி.ம.மு.க. பொதுச்செயலாளர் கைது செய்யப்பட்டார், ஏப்ரல் 23, 11:35 PM.

[3] https://www.dailythanthi.com/amp/News/Districts/2022/04/23233537/arrest.vpf

[4] விகடன், பிரதமருக்குக் கறுப்புக்கொடி காட்டுவதாக அறிவித்த பசும்பொன் பாண்டியன் கைது!, செ.சல்மான் பாரிஸ், Published:26 Jan 2019 7 PM; Updated:26 Jan 2019 7 PM. https://www.vikatan.com/news/policies/148092-pasumpon-pandiyan-arrested-in-madurai

[5] https://www.vikatan.com/news/policies/148092-pasumpon-pandiyan-arrested-in-madurai

[6] Advocate S Pasumpon for Pandian, general secretary of Anna Dravida Makkal Munnetra Kazhagam, was arrested by police in Madurai his alleged provocative speech and derogatory comments against governor RN Ravi in a YouTube video. Police said that in a video interview to a private media channel on February 4, 2022 and uploaded in YouTube, the Dravidian outfit leader made several unsavoury, obscene and insulting remarks and threats against governor R N Ravi. He targeted the governor for returning the anti-NEET bill seeking exemption for Tamil Nadu from the test. It was also alleged to be provocative with intent to promote enmity and creating disharmony among the public. A case was registered at Karimedu police station against Pandian under IPC sections 294 (b), 504, 505 (2), and 153 (A). Condemning the arrest VCK leader Thol Thirumavalavan and INL have asked the government to release him. “Various BJP and right wing leaders have been making comments with the intent to promote enmity between religious groups but no action has been taken against any of them,” alleged INL state secretary Haji Rafeeq.

Times of Indiia, Dravidian outfit leader arrested in Madurai for provocative speech, remarks against TN governor, Sukshma Ramakrishnan / TNN / Apr 24, 2022, 20:00 IST.

https://timesofindia.indiatimes.com/city/madurai/dravidian-outfit-leader-arrested-in-madurai-for-provocative-speech-remarks-against-tn-governor/articleshow/91054086.cms

கருப்புக் கொடி போராட்டமும் – வன்முறையும் – கவர்னரைக் கேவலமாகத் திட்டுவது, வார்த்தை-வன்முறைகளால் தாக்குவது, ஒருமையில் பேசித் திட்டுவது முதலியன வள்ளுவர் போற்றும் நெறிகள் ஆகுமா? தமிழ் கலாச்சாரத்திற்கு தகுமா? நடப்பது எதைக் காட்டுகிறது? (2)

ஏப்ரல் 28, 2022

கருப்புக் கொடி போராட்டமும் – வன்முறையும் – கவர்னரைக் கேவலமாகத் திட்டுவது, வார்த்தை-வன்முறைகளால் தாக்குவது, ஒருமையில் பேசித் திட்டுவது முதலியன வள்ளுவர் போற்றும் நெறிகள் ஆகுமா? தமிழ் கலாச்சாரத்திற்கு தகுமா? நடப்பது எதைக் காட்டுகிறது? (2)

கவர்னர்கான்வாய்வாகனங்கள் அனைத்தும் சென்ற பின், காவல் துறை வாகனங்கள் மீது தான் சில கொடிகள் விழுந்தன: திருவாரூர் மாவட்ட எஸ்.பி., தலைமையில், அங்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கவர்னரின் பாதுகாப்பு வாகனங்கள் மற்றும் மற்ற வாகனங்கள், காலை 9:50க்கு ஏ.வி.சி., கல்லுாரியை கடந்து சென்றன. அப்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர், கவர்னரின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை என, போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். சிலர் கொடிகளை சாலையில் வீசினர். கவர்னர் ‘கான்வாய்’ வாகனங்கள் அனைத்தும் சென்ற பின், காவல் துறை வாகனங்கள் மீது தான் சில கொடிகள் விழுந்தன. உடனடியாக கொடிகள் அகற்றப்பட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டனர், என்று தமிழக போலீஸார் தரப்பில் கூறப்பட்டது. “கவர்னர் பாதுகாப்புக்கு, மத்திய மண்டல .ஜி., பாலகிருஷ்ணன் தலைமையில், இரண்டு டி..ஜி.,க்கள், ஆறு எஸ்.பி.,க்கள் என, 1,200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கவர்னரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது கற்கள், கொடிகள் வீசியதாக கூறப்படுவதில், எந்த உண்மையும் இல்லை. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், கவர்னரின் வாகனங்கள் சென்ற நிலையில், போலீசாருடன் வாக்குவாதம் செய்து, பிளாஸ்டிக் குழாய்களில் கட்டப்பட்டு இருந்த கொடிகளை வீசி எறிந்தனர் என்பது தான் உண்மை,” இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

20-04-2022 – நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது[1]: தாங்கள் அரசியல் செய்யவில்லை என்ற்ய் விளக்கம் அளித்தார்[2], “கவர்னரின் பாதுகாப்பு வாகனத்தில் கொடிகள் வீசப்பட்டனவா? இல்லையா? என்பது குறித்து எனது டுவிட்டர் பதிவில் நான் வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்தால் தெரியும்……… போராட்டக்காரர்களை கவர்னர் பயணித்த சாலையோரம் காவல்துறை அனுமதித்ததே தவறு. இதுகுறித்து காவல் துறையின் அதிகாரப்பூர்வ அறிக்கை மற்றும் சட்டசபையில் முதல்அமைச்சர் மு..ஸ்டாலினின் கருத்து ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை. வருகிற 24-ந் தேதி மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா புதுச்சேரி வருகிறார். அப்போது, கவர்னரின் பாதுகாப்பு குளறுபடிகள் குறித்த மனு அளிக்கப்படும்அண்ணாமலை, மேலும், “…… எனவே, ஆளுநரிடம் தமிழக முதல்வர் மன்னிப்புக் கேட்க வேண்டும். அல்லது பதவி விலக வேண்டும்…..,” என்றும் கூறியுள்ளார்[3]. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தருமபுரம் ஆதீனத்தைச் சந்திக்க சென்றபோது, மயிலாடுதுறையில் அவர் கார் மீதும், பாதுகாப்பு அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக தி.மு.க அரசு மீது எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்[4]. ஸ்டாலின்,

கொடி, கொடி கம்புகள் வீசியவர்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யக்கோரி தமிழ்நாடு ஆளுனரின் பாதுகாப்பு அதிகாரி தமிழ்நாடு டிஜிபியிடம் புகார்: மயிலாடுதுறையில் 19-04-2022 செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தின் போது ஆளுனரின் கான்வாய் மீது கொடி, கொடி கம்புகள் வீசியவர்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யக்கோரி தமிழ்நாடு ஆளுனரின் பாதுகாப்பு அதிகாரியான விஷ்வேஷ் பி. சாஸ்திரி, தமிழ்நாடு டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார்[5]. விஷ்வேஷ் பி. சாஸ்திரி கூற்றுப்படி, போராட்டக்காரர்களின் ஆக்ரோஷமான நடவடிக்கை ஆளுனரை பணி செய்ய விடாமல் தடுக்கும் நோக்கில் இருந்தது. இந்திய தண்டனை சட்டப்பிரிவு 124 இன்படி அதாவது உள்நோக்கத்துடன் குடியரசுத் தலைவர் அல்லது ஆளுனரை தாக்குதல் என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்[6]. எஸ்விசி கல்லூரி அருகே திரண்டிருந்த போராட்டக்காரர்கள், ஆளுனரின் கான்வாய் கடந்து செல்வதை கண்டு ஆக்ரோஷமடைந்து, காவல்துறையினர் தடுப்புகளை தாண்டி முன்னேறி முயன்றனர். ஆனால், காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால், ஆளுனர் கான்வாய் மீது கொடிகள், கொடி கம்புகள் போன்றவற்றை தூக்கியெறிய தொடங்கினர். ஆளுனர் மற்றும் அவர் கான்வாய் எந்த பாதிப்பும் இன்றி கடந்து சென்றுவிட்டது என தெரிவித்தார்[7]. “இந்த அரசு, ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை தடுத்திருக்கிறது. ஆளுநர் மீது சிறு தூசு கூட விழாதவாறு மிகவும் பாதுகாப்பாக அழைத்துச் சென்றிருக்கிறது[8]. அதுமல்லாமல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணையும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அரசியல் சட்ட பதவியில் இருப்பவர்களைக் காப்பாற்றிட, அவர்களுக்குரிய பாதுகாப்பை அளித்திட, இந்த அரசுக்கு பொறுப்பிருக்கிறது,” என்று கூறினார். ஸ்டாலின் விளக்கம் அளித்து அமையாக உள்ளது.

கருப்புக் கொடி காட்டுவது, கற்கள் வீசுவது, கொடி கொம்புக்கள் வைத்துத் தாக்குவது, வன்முறையில் ஈடுபடுவது: என்பதெல்லாம் 1950களிலிருந்து, திக-திமுகவினர், கம்யூனிஸ்டுகள் மற்ற கருப்பு-சிகப்பு பரிவாரங்கள் செய்து வருகின்றன. இப்பொழுது விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் பரிவாரங்கள், திக-உதிரிகள் என்று பற்பல கும்பல்கள் உள்ளன. ஆனால், போராட்டம், ஆர்பாட்டம் கலவரம் செய்ய வேண்டும் என்றால் கும்பலாக சேர்ந்து கொள்வர், வந்துவிடுவர். அந்த முறையினையும் கவனிக்க வேண்டும். இப்பொழுது திராவிட மாடல் பேசப் படுவதால், இதுவும் அதில் அடங்கும். வன்முறையினை உண்டாக்கி பலன் பெறுதல் என்பது அவர்களுக்கு கை வந்த கலை. இப்பொழுது, ஊடகங்களையும் அடிமையாக்கி, செய்திகளை பிரச்சாரங்களாக, விளம்பரங்களாக, சாதாரண அரைத்த மாவை அரைக்கும் போக்கிலகுள்ளன. ஸ்டாலினுக்கு முன்னுரிமை கொடுத்து, செய்திகள் வெளியிடுவது, மற்றபடி இந்தியாவில் என்ன முக்கியமான நிகழ்வு நடந்தாலும், அதப் பற்றி கண்டு கொள்ளாமல் இருப்பது என்ற ரீதியில் இயக்கப் பட்டு வருகின்றன. இங்கிலாந்து பிரதமரின் விஜயம் கூட அவர்களுக்கு முக்கியமாகத் தெரியவில்லை. துபாய் பயணத்தைப் பற்றி விவரித்து 24×7 முறையில் செயல்பட்டவை, இப்பொழுது தூங்கி விட்டன போலும்.

© வேதபிரகாஷ்

23-04-2022


[1] தினத்தந்தி, கவர்னர் பாதுகாப்பு வாகனங்கள் மீதான தாக்குதல் விவகாரத்தில் பா... அரசியல் செய்யவில்லை, ஏப்ரல் 21, 03:13 AM.

[2] https://www.dailythanthi.com/amp/News/State/2022/04/21031329/The-BJP-has-been-accused-of-attacking-the-governors.vpf

[3] தமிழ்.இந்து, ஆளுநர் கார் மீதான கல்வீச்சு தாக்குதலுக்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் மன்னிப்புக் கேட்க வேண்டும்: அண்ணாமலை, செய்திப்பிரிவு Published : 19 Apr 2022 04:49 PM; Last Updated : 19 Apr 2022 04:49 PM.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/789843-tamil-nadu-chief-minister-stalin-should-apologize-for-the-attack-on-the-governor-annamalai.html

[5] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், டி.ஜி.பியிடம் தமிழக ஆளுனர் தரப்பு புகார்: ‘கருப்புக் கொடி காட்டியோர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்க, Written by WebDesk, April 20, 2022 9:44:34 am

[6] இச்சட்டத்தை 1837-ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசியல்வாதியும் வரலாற்று ஆசிரியருமான தாமஸ் மெக்காலே உருவாக்கினார். 1860-ம் ஆண்டு, இந்திய தண்டனைச் சட்டம் இயற்றப்பட்ட போது, இந்தச் சட்டம் முதலில் அதில் சேர்க்கப்படவில்லை. பின்னர், 1870-ம் ஆண்டு சிறப்பு மசோதா இயற்றப்பட்டு, இந்திய தண்டனைச் சட்டத்தில் இது இணைக்கப்பட்டது. இச்சட்டத்தின்படி அரசுக்கு எதிராகப் பேசுதல், எழுதுதல், அரசை அவமதிக்கும விதத்தில் நடத்தல் அல்லது அவ்வாறு நடப்பவர்களை ஊக்குவித்தல் போன்ற செயல்கள் தேசத்துரோகமாகக் கருதப்படுகின்றன.

[7] https://tamil.indianexpress.com/tamilnadu/governor-aide-de-camp-complaint-dgp-regarding-convoy-attack-incident-443133/

[8] விகடன், `ஆளுநர் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறுவதில் எந்த உண்மையும் இல்லை!” – ஸ்டாலின் விளக்கம், சி. அர்ச்சுணன், Published:20 Apr 2022 1 PMUpdated:20 Apr 2022 1 PM.

கருப்புக் கொடி போராட்டமும் – வன்முறையும் – கவர்னரைக் கேவலமாகத் திட்டுவது, வார்த்தை-வன்முறைகளால் தாக்குவது, ஒருமையில் பேசித் திட்டுவது முதலியன வள்ளுவர் போற்றும் நெறிகள் ஆகுமா? தமிழ் கலாச்சாரத்திற்கு தகுமா? நடப்பது எதைக் காட்டுகிறது? (1)

ஏப்ரல் 28, 2022

கருப்புக் கொடி போராட்டமும் – வன்முறையும் – கவர்னரைக் கேவலமாகத் திட்டுவது, வார்த்தை-வன்முறைகளால் தாக்குவது, ஒருமையில் பேசித் திட்டுவது முதலியன வள்ளுவர் போற்றும் நெறிகள் ஆகுமா? தமிழ் கலாச்சாரத்திற்கு தகுமா? நடப்பது எதைக் காட்டுகிறது? (1)

மத்திய அரசியல்தலைவர்கள், பிரதமமந்திரி முதலியோரை எதிர்ப்பது, கொல்வது தமிழகத்தில் நடந்துள்ள செயல்களாக இருக்கின்றன: காமராஜரை மிரட்டியது, பக்தவட்சலத்தைத் தாக்க திட்டமிட்டது, இந்திரகாந்தியைத் தாக்கியது ( The attack on Indira Gandhi by DMK men during her visit to Madurai on October 29, 1977,  உண்மையில் கொலை செய்ய திட்டம் போட்டது[1]), எம்ஜிஆரை தூஷித்தது, ஜெயலலிதாவைத் தாக்கியது என்பதெல்லாம் தமிழகத்தில் நடந்த உண்மையான நிகழ்ச்சிகளாகும். எல்லாவற்றிற்கும் மேலாக, பிரதமந்திரியையே / . ராஜிவ் காந்தியை இங்குதான் குண்டுவெடித்து கொலைசெய்துள்ளனர். அந்த கொலையாளிகளுக்கும் வக்காலத்து வாங்கி வருகின்றனர். மோடி-எதிர்ப்பு, மோடி-துவேசம் என்பதனை கொள்கையாகக் கொண்டு, அதனை கருணாநிதி மூலமே வெளிப்படுத்தியுள்ளனர். இப்பொழுது, அதே மிரட்டும் வன்முறை மூலம் ஆளுனரை மிரட்டப் பார்க்கின்றனர். பிரதம மந்திரி படம் வைக்கக் கூடாது என்று திமுகவினர் வெளிப்படையாக தேசவிரோதத்தை வளர்த்து வருகிறார்கள். இதை ஏதோ பெரிய வீரதீர செயலாக நினைக்கின்றனர். ஏனெனில், போலீஸாரும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. முதலமைச்சரும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார். இவையெல்லாம் மேன்மேலும் வன்முறைக்குத் தான் வழி வகுக்கும்.

19-04-2022 கவர்னர் மயிலாடுதுறை வருகை: தெலங்கானாவில் நடைபெற உள்ள புஷ்கர விழாவுக்காக மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்தில் இருந்து ஞானரத யாத்திரை ஒன்று கடந்த 19 ஆம் தேதி கிளம்பியது[2]. இதனை தொடங்கி வைப்பதற்காக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்தார்[3]. அப்பொழுது திகவினர், ஆதீனம் அவரி வரழைக்கக் கூடாது என்று எதிர்த்து செய்திகள் வெளியிட்டு ஆர்பாட்டம் செய்தனர்[4]. மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்த இந்த அராஜகம் தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தி.க.,வை சேர்ந்தோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்[5]. சிதம்பரம் அண்ணாமலை பல்கலை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற கவர்னர் ரவி, நேற்று காலை, மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அபிராமி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார்[6]. அங்கிருந்து, தருமபுரம் ஆதின மடத்திற்கு வந்தார். தமிழக பா.ஜ., துணை தலைவர் முருகானந்தம் தலைமையில், அக்கட்சியினர் வரவேற்றனர்.

தருமபுரம் ஆதினம் விழாவில் கலந்து கொண்டது: தருமபுரம் ஆதினம் சார்பில், கவர்னருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர், தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளிடம், கவர்னர் ஆசி பெற்றார். மடத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை, கவர்னர் திறந்து வைத்தார். அங்கிருந்த பழங்கால ஓலைச்சுவடிகள், கலைப் பொருட்கள், இசைக் கருவிகளை பார்வையிட்டார். பின், தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லுாரியின் பவள விழா கலை அரங்கத்திற்கு அடிக்கல் நாட்டினார். ஆதீனம் சார்பில் அவருக்கு, நடராஜர் உருவச்சிலை நினைவு பரிசாக வழங்கப்பட்டது. விழாவில், தருமபுரம் ஆதீனம் பேசியதாவது: “கவர்னர் பெயர் ரவி. ரவி என்றால் சூரியன். தமிழகத்தை ஆள்பவர்களின் சின்னம் சூரியன். தமிழகத்தில் இரண்டு சூரியன்கள் உள்ளது தெய்வச் செயல். கால்நடைகளை சரியாக பராமரிக்காததால் தான் கொரோனா போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாகி உள்ளோம். பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகளை நீக்கியதால் தான் பண்பாடு மற்றும் கலாசாரம் சீர்கெட்டு உள்ளது. அதனால், கல்வி நிலையங்களில் மீண்டும் நீதி போதனை வகுப்புகளை துவங்க வேண்டும்,: இவ்வாறு ஆதீனம் பேசினார்.

கவர்னர் ரவி பேசியதாவது: “இந்த புனித இடத்திற்கு வர வாய்ப்பளித்த குருமகா சன்னிதானத்திற்கு நன்றி. இங்கு வந்த பின் தான், நான் உண்மையான இந்தியன் என்ற உணர்வு ஏற்படுகிறது. குருமகா சன்னிதானம் சமயம் சார்ந்த பல்வேறு பணிகள் மட்டுமன்றி, நாட்டு மக்களுக்கு பல்வேறு பணிகளையும் செய்து வருகிறார். கொரோனா, பூகம்பம், கார்கில் போர் போன்ற சமயங்களில் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் நிறைய உதவிகளை செய்துள்ளார். அடுத்த 25 ஆண்டுகளில் அதாவது 2047ல், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்ப துறைகளில் மட்டுமல்லாது, ஆன்மிக வளர்ச்சியிலும், இந்தியா முதலிடம் வகிக்கும். உலக மக்கள் மக்கள் அனைவரும், தினமும் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். நாகரிகம், கலாசாரம், கல்வி, நீதி போதனைகள், பண்பாடு ஆகியவற்றால் மட்டுமே, இதற்கு தீர்வு கிடைக்கும். மதத்தால், மொழியால், உணர்வால் இந்தியர்கள் பிரிந்து இருந்தாலும், அனைவரும் ஒரே குடும்பம்,” இவ்வாறு அவர் பேசினார். பின், தெலுங்கானாவில் நடக்கும் புஷ்கரம் விழாவுக்கு, தருமபுரம் ஆதீனம் மேற்கொள்ளும் ஞானரத யாத்திரையை, கவர்னர் ரவி கொடியசைத்து துவக்கி வைத்தார். கவர்னர் வருகையை ஒட்டி, ஐ.ஜி., பாலகிருஷ்ணன் தலைமையில், 2,௦௦௦ போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

கல் வீச்சு, கொடி கொம்புகள் வீச்சு: விழா முடிந்ததும், திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு சென்ற கவர்னர், 24வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். திருக்கடையூரில் இருந்து, தருமபுரம் ஆதீனத்திற்கு கவர்னர் ரவி சென்ற வழியில், மன்னம்பந்தல் கிராமத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம் மற்றும் பிற அமைப்புகளை சேர்ந்தவர்கள், கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கறுப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கவர்னர் பயணித்த கார் மீதும், உடன் சென்ற பாதுகாப்பு அதிகாரிகள் கார்கள் மீதும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், கறுப்பு கொடிகளையும், கற்களையும் வீசினர். இதனால், அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 96 பேரை, போலீசார் கைது செய்தனர்.

முரண்பட்ட அறிக்கைகள், புகார்கள்: கவர்னருக்கு எதிராக போராட நூற்றுக்கணக்கானோர் கூடியிருப்பது தெரிந்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதையும் போலீசார் எடுக்காமல், ஆர்ப்பாட்டத்திற்கு வழிவகுத்து கொடுத்தது, மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திரும்பினார். சிதம்பரம், திருக்கடையூர், தருமபுரம் என, மூன்று நாட்கள் (19, 20 மற்றும் 21-04-2022) பயணத்தை முடித்து, 21-04-2022 அன்று பகல், 2:௦௦ மணிக்கு, கவர்னர் சென்னை திரும்பினார். ‘கவர்னரின் பாதுகாப்பு வாகனங்கள் மீது கற்கள், கொடிகள் வீசியதாக கூறப்படுவதில் உண்மை இல்லை’ என, டி.ஜி.பி., தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, டி.ஜி.பி., அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: “கவர்னர் ரவி, நேற்று காலை, 7:50 மணிக்கு, கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு, 8:30 மணிக்கு மயிலாடுதுறை, ஆணைக்காரன் சத்திரம், கொள்ளிடம் சோதனை சாவடிக்கு வந்தடைந்தார். பின், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின், தருமபுரம் ஆதீனத்தை சந்திக்க புறப்பட்டார்.கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்க்சிஸ்ட் கம்யூ., மாவட்ட செயலர் சீனிவாசன் உள்ளிட்ட, 73 பேர், .வி.சி., கல்லுாரி எதிரே வடகரை சாலையில் கறுப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர்”.

© வேதபிரகாஷ்

23-04-2022


[1]   இந்திரா காந்தி சுப்ரீம் கோர்ட்டில் கருணாநிதி, மதுரைமுத்து என்று 9 பேர் மீது வழக்குத் தொடுத்து, பிறகு, அரசியல் கூட்டணி போன்ற விவகாரங்களால் 1977ல் அமுக்கப் பட்டு விட்டது.

[2] பிபிசி தமிழ், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தாக்குதல் நடத்தப்பட்டதா? போராட்டம் நடத்தியவர்கள் என்ன சொல்கிறார்கள்?, ஆ. விஜயானந்த், 20 ஏப்ரல் 2022

[3] https://www.bbc.com/tamil/india-61160300

[4] விடுதலையில் செய்தியைக் காணலாம். திகவினரின் போராட்டத்தையும் கவனித்திருக்கலாம். 

[5] தினமலர், கவர்னர் ரவி பாதுகாப்பு கார் மீது தாக்குதல்: மயிலாடுதுறையில் அராஜகம், Updated : ஏப் 20, 2022  10:11 |  Added : ஏப் 19, 2022  23:27.

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=3011204