Archive for the ‘மயிர்’ Category

திராவிட மேடைப் பேச்சாளர்களின் நாரசார அநாகரீக வார்த்தைப் பிரயோகம், பெண்மையைத் தூற்றும் போக்கு, மரத்துப் போன அல்லது சொரணையற்ற வசனங்கள் ஏற்றுக் கொள்ளப் படும் விதம்!

ஒக்ரோபர் 28, 2022

திராவிட மேடைப் பேச்சாளர்களின் நாரசார அநாகரீக வார்த்தைப் பிரயோகம், பெண்மையைத் தூற்றும் போக்கு, மரத்துப் போன அல்லது சொரணையற்ற வசனங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் விதம்!

திராவிட மேடைகளில், திராவிட பாரம்பரியங்களில் இப்பேச்சுகள் எல்லாம் சகஜமப்பா தான்: திமுக மேடைப் பேச்சாளிகள் 1960களிலிருந்து, இப்பொழுது வரை ஆபாசமாக, கொச்சையாக, மோசமாக பேசிவருவது ஒன்றும் புதியதல்ல. இரட்டை அர்த்தங்களில், பொருட்களில், சைகைகளில் பேசுவது-பாடுவதும் திராவிட மேடைகளில் சகஜமானதே. கவிதை நடையில், யதுகை-மோனைகளுடன், சில நேரங்களில் பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும் கூட அத்தகைய பேச்சுகளைப் பேசுவது வழக்கமே. பெரியார் முதல் அண்ணன் வரை, அண்ணா தொடர்ந்து தம்பி வரை, அறிஞர் முதல் கலைஞர் வரை இதெல்லாம் சகஜமப்பா என்று தான் ஓடிக் கொண்டிருக்கின்றன. இப்பொழுது இந்த சாதிக உருவாகிருப்பதில் என்ற கழக சாதனையும் குறைந்து வி,டப் போவதில்லை. பிறகு, கொஞ்சம் நாகரிகம் கருதி, குறைத்துக் கொண்டாலும், வழக்கமான வார்த்தைகள் வெளிவந்து விடும். இப்பொழுது இதையெல்லாம் 60-70 வயதானவர்களுக்குத் தான் தெரியும். மற்றவர்கள் மறந்திருப்பார்கள்.

அநாகரிகமான, ஒழுங்கீன பேச்சாளர்கள் திமுகவில் உருவாகுவது எப்படி?: திமுக நிர்வாகி ஒருவர் பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்கு குஷ்பு  கண்டனம் தெரிவித்திருந்தார்[1].  இந்நிலையில், இச்சம்பவத்திற்கு திமுக துணை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி வருத்தம் தெரிவித்துள்ளார்[2]. திமுகவை சேர்ந்த நிர்வாகி ஒருவர் –  பிரபல பேச்சாளரான சைதை சாதிக் பொதுமேடையில் பெண்கள் குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது[3].  விமர்சனங்களும் எழுந்துள்ளன[4]. உண்மையில் திராவிட மாடலில், இந்த திராவிடியன் ஸ்டாக்குகள் மாறிவிட்டன என்றால், இத்தகைய ஒழுன்கீனமான, கொச்சையான, தரமில்லாத பேச்சுகள் வராது, வந்திருக்காது. ஆனால், ஊக்குவிப்பதால் தான், தொடர்ந்து அத்தகைய பேச்சாளர்கள் வளர்ந்து . வளார்க்கப் பட்டு வருகிறார்கள்.

ஆர்.கே.நகரில் திமுக பொதுக்கூட்டமும், சாதிக் பேசியதும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2வது முறையாக திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து சென்னை ஆர்.கே.நகரில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் உரையாற்றி திமுக பேச்சாளர் சைதை சாதிக், பாஜகவில் 4 நடிகைகள் இருக்கிறார்கள் என்று குஷ்பு, நமிதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோரை குறிப்பிட்டு ஒருமையில் பேசினார்[5]. “நாங்கள் வட சென்னையில் கட்சியை வளர்த்தோம். அந்த காலத்திலிருந்து அண்ணன் சீதாபதியில் இருந்து, டி.ஆர்.பாலுவிலிருந்து, பலராமனில் இருந்து, இளைய அருணா வரை திமுகவில் வளர்த்து உள்ளார். இன்னும் வளர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், பாஜகவில் இருக்கும் தலைவர்களை பொறுத்தவரை 4 பேருமே ****.” என்று ஆங்கிலத்தில் தவறான அர்த்தம் தரும் வார்த்தையை பயன்படுத்தினார்[6].  “இந்தியா டுடே” இதை வெளியிட்டுள்ளது[7]. சமீபத்தில் பெண்ணை “ஐட்டம்” என்று ஒரு தொழிலதிபர் சொன்னதற்கு, மும்பை நீதிமன்றம் ஒன்றரை ஆண்டு சிறைத்தண்டனை அளித்துள்ளது. ஆனால், இங்கோ மேடையில் ஒருவர் பேசுகிறார், வீடியோ சுற்றில் உள்ளது. சட்டப் படி எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.

அமித் ஷா தலையில் மயிர் முளைத்தாலும் முளைக்கும், ஆனால், தமிழகத்தில்………: தொடர்ந்து ஆதிக், “குஷ்பு தாமரை மலர்ந்தே தீரும் என்று தலை மேல் கையை உயர்த்தி சொல்கிறார்.” என்று ஒருமையில் பேசிய சாதிக், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தலைமுடி பற்றியும், “அமித் ஷா தலையில் மயிர் முளைத்தாலும் முளைக்கும், ஆனால், தமிழகத்தில்……….,” என விமர்சித்து பேசியுள்ளார். இதனை தொடர்ந்து குஷ்பு திமுகவில் இருக்கும்போது அவரை வைத்து இளைய அருணா கூட்டம் கூட்டியதை இரட்டை அர்த்தத்தில் சைதை சாதிக் பேச அங்கு சிரிப்பலை எழுந்தது. சுதாரித்துக்கொண்ட அவர் நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை, வம்பில் மாட்டிவிடாதீர்கள் என்று கூறி அங்கிருந்தவர்களை பார்த்து சிரித்தார். அக்டோபர் 4ஆம் தேதி, 2022 அன்று, திமுக கட்சிக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வார்த்தைகள் அல்லது செயலில் ஈடுபடும் கட்சித் தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்[8]. இது ராஜா முதல் சாதிக் வரை அனைவருக்கும் பொறுந்தும் என திமுகவினருக்குத் தெரிந்திருக்கும்[9]..

குஷ்பு எதிர்ப்புத் தெரிவித்தது: இந்நிலையில், நடிகை குஷ்பு இது தொடர்பாக தனது எதிர்ப்பை பதிவு செய்தார்[10]. ட்விட்டரில் அவர், ஆண்கள் பெண்களை துஷ்பிரயோகம் செய்தால், அது அவர்கள் வளர்த்த விதமான வளர்ப்பையும், அவர்கள் வளர்ந்த நச்சு சூழலையும் காட்டுகிறது[11]. இந்த ஆண்கள் ஒரு பெண்ணின் கருப்பையை அவமதிக்கிறார்கள்[12]. அத்தகைய ஆண்கள் தங்களை #கலைஞரின் பின்பற்றுபவர்கள் என்று அழைக்கிறார்கள்[13]. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் இதுதான் புதிய திராவிடமா” என்று கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், கனிமொழியையும் அவர் டேக் செய்திருந்தார். டுவிட்டரில் இது பற்றி நூற்றுக்கணக்கில் கருத்துகள் பதிவாகின. பொதுவாக அவை திமுகவினரை விமர்சித்தன.

கனிமொழி மன்னிப்புக் கேட்டது: இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மன்னிப்பு கேட்டுள்ள கனிமொழி, ‘ஒரு பெண்ணாகவும், மனிதனாகவும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். யார் செய்தாலும், சொல்லப்பட்ட இடம் அல்லது அவர்கள் கடைபிடிக்கும் கட்சி எதுவாக இருந்தாலும் இதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. திமுக இதை பொறுத்துக்கொள்ளாது. எனது தலைவர் ஸ்டாலினின் காரணமாக இச்சம்பவத்திற்கு என்னால் வெளிப்படையாக மன்னிப்புக் கோர முடியும்’ என பதிவிட்டுள்ளார். இந்நிலையில்,  வருத்தம் தெரிவித்த கனிமொழிக்கு குஷ்பூ நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மிக்க நன்றி கனி. உங்கள் நிலைப்பாட்டையும் ஆதரவையும் உண்மையிலேயே பாராட்டுகிறேன். ஆனால் நீங்கள்  பெண்களின் கண்ணியம் மற்றும் சுயமரியாதைக்காக எப்போதும் துணை நிற்கும் ஒருவராக இருந்திருக்கிறீர்கள்” என பாராட்டியுள்ளார்.

திராவிட மேடைப் பேச்சாளர்களின் நாரசார அநாகரீக வார்த்தைப் பிரயோகம், பெண்மையைத் தூற்றும் போக்கு, மரத்துப் போன அல்லது சொரணையற்ற வசனங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் விதம்: இதை மனோதத்துவ ரீதியில் அலசினால், தொடர்ந்து ஒரு செயலைச் செய்து கொண்டிருந்தால், அது கெட்டதாக இருந்தாலும், யாரும் தடுக்காமல், கண்டிக்காமல் இருந்தால், அச்செயல் ஏற்றுக் கொள்ளப் படும் செயலாகி விடும்[14]. உதாரணத்திற்கு, பேரூந்துகளில் படிகட்டுகளில் பிரயாணம் செய்வது போன்றவை. அதே போல, பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலை மாணவர்களே, கெட்ட வார்த்தைகளை சகஜமாக உபயோகப் படுத்தி வருகிறார்கள்.  மாணவிகளும், பெண்களும் கூட அவ்வாறே பேசி வருவதை பார்க்கலாம். ஒரு நிலையில் அது “புதிய நாகரிக” அடையாளமாகக் கூட தகவமைக்கப் படுகிறது. ஆனால், நிச்சயமாக அவை சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டவையோ, அங்கீகரிக்கப் பட்டவையோ கிடையாது. “மாப் மென்டாலிடி” போன்ற கூட்டமாக சேரும் போது, அத்தகைய மீறல்கள் ஏற்படுகின்றன. இவர்களே பல நேரங்களில், நிலைகளில் இரட்டை வேடம் போடுவதை கவனிக்கலாம்.

திராவிட பாரம்பரிய கெட்ட வார்த்தை பேச்சுகள்: ஆனால், திராவிடக் கட்சி மேடைப் பேச்சு பாரம்பரியத்தில், அத்தகைய அசிங்கமான-ஆபாசப் பேச்சுகள் கடந்த ஒரு நூற்றாண்டாக சாதாரணமாகி விட்டது[15]. சில கெட்ட வார்த்தைகள் பிரயோகிப்பாதை ரசிக்கவும் செய்கின்றனர். அதனால், அவை ஊக்குவிக்கப் பட்டு, அத்தகைய பேச்சாளர்கள் தயார் செய்யப் படுகிறார்கள். அதனால், மரத்துப் போன நிலை அதாவது, ஏற்றுக் கொண்ட நிலையில் அங்கீகாரம் கிடைத்ததாகி விடுகிறது. திராவிட கழகத்தினர் பேசும் பொழுது,பெண்கள் அங்கு நிற்கக் கூட முடியாமல், காதுகளை ஒப்பித்திக் கொண்டு ஓடிய நிலையையும் தமிழகத்தில், ஏன் சென்னையிலேயே பலர் பார்த்திருக்ககலாம். இப்பொழுது, விழிப்புணர்வு ஏர்பட்டுள்ளதால், பொது கூட்டங்களில் அத்தகைய நாரசாரத்தைக் குறைத்துக் கொன்டுள்ளார்கள். ஆகவே, இத்தகைய மனப்பாங்கு மாற வேண்டும். ஏனெனில், இதுவும் வார்த்தை தீவிரவாதம், பேச்சு பயங்கரவாதம் என்றாகி விடும். “தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு….,” என்பது தமிழர்களுக்கு, திராவிடர்களுக்கு,திராவிடத்துவவாதிகளுக்கு, திராவிட ஸ்டாக்கிஸ்டுகளுக்கு, திராவிட மாடல் பேச்சாளர்களுக்குத் தெரிந்திருக்கும்.

© வேதபிரகாஷ்

28-10-2022.


[1] தமிழ்.நியூஸ்.18, பெண்கள் குறித்து இழிவாக பேசிய திமுகவினர்குஷ்பூ முறையீடுமன்னிப்புக் கேட்ட கனிமொழி, Published by:Murugesh M, First published: October 27, 2022, 18:12 IST, LAST UPDATED : OCTOBER 27, 2022, 19:49 IST.

[2] https://tamil.news18.com/news/tamil-nadu/kanimozhi-apologies-to-bjp-kusboo-for-dmk-cadre-speech-826091.html

[3] தினத்தந்தி, குஷ்பு குறித்து திமுக நிர்வாகி ஆபாச பேச்சுமன்னிப்பு கேட்ட கனிமொழி எம்பி , By தந்தி டிவி 28 அக்டோபர் 2022 7:35 AM.

[4] https://www.thanthitv.com/latest-news/kanimozhi-apologize-kushboo-tweet-dmk-meeting-145059

[5] தமிழ்.ஒன்.இந்தியா, டபுள் மீனிங்”.. பாஜகவில் 4 நடிகைகள்.. திமுக பேச்சாளரால் குஷ்புவிடம் மன்னிப்பு கேட்ட கனிமொழி,  By Noorul Ahamed Jahaber Ali, Updated: Thursday, October 27, 2022, 22:31. IST.

[6] https://tamil.oneindia.com/news/chennai/kanimozhi-apologises-kushbu-for-dmk-executives-speech-482520.html

[7] While addressing a public meeting, Sadiq said, “All four leaders are items. Khushbu says that lotus will bloom in Tamil Nadu. I say that even hair will grow back in Amit Shah’s head, but lotus has no chance of blooming in Tamil Nadu.” He further said, “Do you all know how many times my brother Ilaya Aruna did Kushbu? I mean he had done meetings with her when she was in DMK. Nearly six times, he took Kushbu and had meetings in RA Puram.”

https://www.indiatoday.in/india/story/misinterpreted-says-dmk-leader-saidai-sadiq-apologises-derogatory-remarks-bjp-leader-khushbu-2290428-2022-10-28

[8] பிபிசி.தமிழ், குஷ்புவிடம் கனிமொழி கேட்ட மன்னிப்புதிமுக பிரமுகரின் சர்ச்சை பேச்சு விவகாரத்தில் நடந்தது என்ன?, 27 அக்டோபர் 2022.

[9] https://www.bbc.com/tamil/india-63416365

[10] தினமலர், குஷ்பு பற்றி தரக்குறைவாக பேச்சு: மன்னிப்பு கேட்டார் கனிமொழி, Added : அக் 28, 2022  07:37.

[11] https://www.dinamalar.com/news_detail.asp?id=3156293

[12] தமிழ்.ஏசியாநெட்.லைவ், ஆபாசமாக பேசிய திமுக பேச்சாளர்.. கண்டனம் தெரிவித்த குஷ்பு.. மன்னிப்பு கேட்ட கனிமொழி.. நடந்தது என்ன?, vinoth kumar, First Published Oct 28, 2022, 7:19 AM IST,

Last Updated Oct 28, 2022, 7:21 AM IST

[13] https://tamil.asianetnews.com/politics/dmk-cadre-controversy-speech-kanimozhi-apologies-to-bjp-kushboo-rkfx1u

[14]   திரைப் படங்களில் இத்தகைய ஒழிங்கீனங்கள் நாகரிகமாக அல்லது ஏதோ ஏற்றுக் கொள்ள்ப் பட்டவை போல காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதனை, மக்கள் ரசிக்கும் வரையில் சென்றடைந்து உள்ளன.

[15]  இது பெரியார் முதல் இக்காலம் வரையில் காணலாம்…….உடன் பிறவா சகோதரர்களே, ரத்தத்தின் ரத்தமே, போன்றவை உதாரணத்திற்கு சொல்லலாம்.