Archive for the ‘சட்ட மீறல்கள்’ Category

ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்தலில் மாட்டிக் கொண்டது – கைதில் உள்ள புதிர்கள் மர்மங்கள், விடுபடுமா, இந்தியா போதை மருந்து கூட்டங்களினின்று விடுபடுமா? (4)

மார்ச் 11, 2024

ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்தலில் மாட்டிக் கொண்டதுகைதில் உள்ள புதிர்கள் மர்மங்கள், விடுபடுமா, இந்தியா போதை மருந்து கூட்டங்களினின்று விடுபடுமா? (4)

15-02024 அன்று தில்லியில் சோதனை: ஜாபர் சாதிக்கின் போதை மருந்து விவகாரம் திகைப்பாக இருக்கிறது. இதுவரை கிடைத்துள்ள விவரங்களை வைத்து ஆராய்ந்தால், நிச்சயமாக அத்தகைய வேலைகளை, சாதாரணமாக செய்து விடமுடியாது. பலர் அதன் பின்னணியில், ஒருமித்து, தீவிரமாக வேலை செய்திருக்க வேண்டும். அனைத்துலக போதைதடுப்பு துறைகளின் கவனத்திற்கு சென்றிருக்கிறது என்றால், எல்லாவற்றையும் அறிந்து, அவற்றையும் மீறித்தான் இக்காரியங்கள் நடைபெற்று வருகின்றன. போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய பொருட்களை தேங்காய் பவுடர் மற்றும் சத்து மாவு பாக்கெட்களில் மறைத்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது[1]. இதையடுத்து, டெல்லி போலீஸ் மற்றும் போதைப் பொருள் தடுப்புபிரிவு அதிகாரிகள் மேற்கு டெல்லி உள்ள கைலாஸ் பார்க் பகுதியில் கடந்த மாதம் 15 ஆம் அதிரடி சோதனை நடத்தினர்[2].

15-02-2024ல் தில்லியில் மூவர் கைது: இதில் அங்குள்ள குடோன் ஒன்றில் இருந்த கடத்தல் கும்பல் கிலோ எடை கொண்ட சுமார் 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆபத்து மிக்க போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்[3]. மேலும் அந்த குடோனில் இருந்து தமிழகத்தை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர்[4]. இவர்கள், சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர் ரஹ்மான் மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக் குமார் என்பது தெரியவந்துள்ளது. ஜாஃபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர்கள்தான் இந்தக் கடத்தலுக்கு மூளையாக இருந்ததாகக் கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளார்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த போதை பொருள் கடத்தல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது சென்னையை சேர்ந்த ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது[5]. மேலும் அவர் தனது சகோதரர்கள் மைதீன் மற்றும் சலீம் ஆகியோருடன் சேர்ந்து இந்த போதை பொருள் கடத்தல் தொழிலை செய்து வந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது[6].

25-02-2024 – திமுகவிலிருந்து ஜாபர் சாதிக்கை நிரந்தரமாக நீக்கியது:  ஜாபர் சாதிக் சென்னையில் சினிமா தயாரிப்பாளராகவும் திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமாக இருந்து வந்துள்ளார்[7]. அவரது சகோதரர் மைதீன் நடிகராக உள்ளார்[8]. மற்றொரு சகோதரரான சலீம் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பதும் தெரியவந்தது[9]. போதைப் பொருள் விவகாரம் வெளியானதும் ஜாபர் சாதிக் திமுகவிலிருந்து நிரந்தமாக நீக்கப்பட்டார்[10]. இதையடுத்து ஜாபர் சாதிக் விசாரணைக்கு ஆஜராகுமாறு என்சிபி போலீசார் சம்மன் அனுப்பினர்[11]. சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் சம்மனை ஒட்டினர். ஆனால் ஜாபர் சாதிக் குடும்பத்துடன் தலைமறைவானார்[12]. ஜாபர் சாதிக்கின் வீட்டில் சம்மனை ஒட்டிய என்சிபி போலீசார், அவரது வீட்டின் பூட்டை உடைத்து முக்கிய ஆவணங்களை அள்ளிச்சென்றனர்[13]. அவரது வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய என்சிபி போலீசார், வீட்டிற்கும் சீல் வைத்தனர்[14]. இருப்பினும் ஜாபர் சாதிக் பற்றி எந்த துப்பும் கிடைக்காமல் இருந்தது.

22-02-2024 அன்று படப்பிடிப்பு நிறுத்தப் பட்டது – 26-02-2024 அன்று தனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்று அறிக்கை விட்டது: அமீர்[15], “கடந்த 22-ம் தேதி நான்இறைவன் மிகப் பெரியவன்திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்த போது, திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஏன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது? என்னைச் சுற்றி என்ன நடக்கிறது? என்பதை ஊடகங்கள் வாயிலாகவே நான் அறிந்து கொண்டேன். உண்மை எதுவென்று இப்போது வரை எனக்குத் தெரியவில்லை……. எதுவாயினும், செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமேயானால், அது கண்டிக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுமே.! அந்த வகையில், சட்டவிரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்…….” என்று அறிக்கை விட்டார்[16]. இவருக்கும் ஜாபர் சாதிக்கும் வியாபார ரீதியில் நிறைய தொடர்புகள் இருப்பதாக சொல்லப் படுகிறது.

15-02-2024 அன்றே என்.சி.பி, லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது: அவர் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும் ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் 15-02-2024 அன்றே கொடுக்கப்பட்டது[17]. அவரது 8 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன[18]. மேலும் அவரது சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோரையும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வருகின்றனர்[19]. இப்படியெல்லாம் செய்திகள் வந்தாலும், அவன் எங்கிருக்கிறான் என்று தெரியாமல் இருந்தது விசித்திரமான விசயம் தான். இந்தியாவில் அவ்வாறு ஒரு நபர் தலைமறைவாக எளிதில் இருக்கலாம், சுற்றி வரலாம் என்று தெரிகிறது. தன்னுடைய சொந்த பெயரில் பயணத்தில் தான், ரெயில் அல்லது விமானங்களில் தெரிந்து விடும். மற்றபடி பயணத்தால் யாராலும் கண்டுபிடிக்க முடியாது போலிருக்கிறது. ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவரது கூட்டாளிகள் கொடுத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ராஜஸ்தான் மாநில ஜெய்ப்பூரில் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஜாபர் சாதிக்கை இன்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்[20].

09-03-2024 அன்று ஜெய்ப்பூரில் பிடிக்கப் பட்டு, தில்லியில் கைது: 15-02-2924 [வியாழக்கிழமை] முதல் 09-03-2024 [சனிக்கிழமை] வரை எங்கிருந்தான் என்று தெரியாத நிலையில், 23 நாட்கள் கழித்து கண்டுபிடிக்கப் படுகிறான். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கை 7 நாட்களில் காவலில் வைத்து விசாரிக்க பாட்டியாலா உயர் நீதிமன்றம் என்.சி.பி-க்கு சனிக்கிழமை (09.03.2024) அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் ஏராளமானோர் சம்பந்தப்பட்டிருப்பதால் ஜாபர் சாதிக்கை போலீஸ் காவலில் விசாரிக்கவும் அனுமதி கோரினர். இதனை விசாரித்த நீதிபதி, ஜாபர் சாதிக்கை ஏழு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கிய நிலையில், அவரை என்.சி.பி அலுவலகத்திற்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, ஜாபர் சாதிக்கை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ள அதிகாரிகள், விரைவில் அவரை சென்னை அழைத்து வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

© வேதபிரகாஷ்

10-03-2024


[1] தமிழ்.இந்து, தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் கைதுபோதைப்பொருள் கடத்தல் வழக்கில் நடவடிக்கை, செய்திப்பிரிவு, Published : 09 Mar 2024 12:08 PM; Last Updated : 09 Mar 2024 12:08 PM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/1212770-drug-trafficking-absconding-jaffer-sadiq-arrested.html

[3] தினமலர், போதைப்பொருள் கடத்தல் விவகாரம்: ஜாபர் சாதிக் கைது!, மாற்றம் செய்த நாள்: மார் 09,2024 12:32,

[4] https://m.dinamalar.com/detail.php?id=3571503

[5] மாலைமலர், போதைப்பொருள் கடத்தல் வழக்குஜாபர் சாதிக் கைது, By மாலை மலர், 9 மார்ச் 2024 12:02 PM; (Updated: 9 மார்ச் 2024 12:38 PM),

[6] https://www.maalaimalar.com/news/state/tamil-news-jaffer-sadiq-arrested-707000

[7] தமிழ்.நியூஸ்.7, போதைப் பொருள் வழக்கில் தேடப்படு வந்த ஜாபர் சாதிக் கைது!, by Web EditorMarch 9, 2024,

[8] https://news7tamil.live/jaber-sadiq-who-was-wanted-in-a-drug-case-was-arrested.html

[9] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், போதைப் பொருள் கடத்தல் வழக்கு; முன்னாள் தி.மு.. நிர்வாகி ஜாபர் சாதிக் கைது, WebDesk, 09 Mar 2024 12:45 IST,

[10] https://tamil.indianexpress.com/tamilnadu/drug-case-former-dmk-functionary-jaffer-sadiq-arrested-by-ncb-tamil-news-4318592

[11] தமிழ்.ஒன்.இந்தியா, ரூ 2000 கோடி போதை பொருள் கடத்தல் வழக்கு.. ராஜஸ்தானில் ஜாபர் சாதிக் கைது, By Vishnupriya R Published: Saturday, March 9, 2024, 12:37 [IST]

[12] https://tamil.oneindia.com/news/delhi/drug-smuggler-jaffer-sadiq-arrested-at-jaipur-rajasthan-589585.html

[13] தினகரன், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக் கைது..!!, March 9, 2024, 12:07 pm,

[14] https://www.dinakaran.com/drug-smuggling-jaber-sadiq-arrested/

[15]  தினமணி, போதைப்பொருள் வழக்கில் தயாரிப்பாளர்.. அறிக்கை வெளியிட்ட அமீர்!, Published on:  27 பிப்ரவரி 2024, 12:56 pm; Updated on: 27 பிப்ரவரி 2024, 12:56 pm

[16] https://www.dinamani.com/cinema/cinema-news/2024/Feb/27/iraivan-migaperiyavan-ameer

[17] நக்கீரன், ‘ஜாபர் சாதிக் கைது‘- போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிரடி, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 09/03/2024 | Edited on 09/03/2024,

[18] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/jaber-sadiq-arrested-narcotics-unit-action

[19] சமயம், போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் கைது.. ஜெய்ப்பூரில் பதுங்கியிருந்தவை சுத்துப்போட்ட போலீஸ்!, Authored By பஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil | 9 Mar 2024, 12:29 pm,

[20] https://tamil.samayam.com/latest-news/crime/drugs-smuggler-jaffer-sadiq-aressted-in-jaipur-by-ncb-police/articleshow/108345319.cms

2024ல் பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு – பெங்களூரில் தொடர்ந்து குண்டுகள் ஏன் வெடிக்கின்றன? இதன் பின்னணி என்ன, தடுக்க முடியாதா? (1)

மார்ச் 6, 2024

2024ல் பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்புபெங்களூரில் தொடர்ந்து குண்டுகள் ஏன் வெடிக்கின்றன? இதன் பின்னணி என்ன, தடுக்க முடியாதா? (1)

01-03-2024 வெள்ளிக்கிழமை குண்டு வெடித்தது: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒயிட் ஃபீல்டில் 500-க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்ப மற்றும் உயிரி தொழில்நுட்ப நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்குள்ள ‘ராமேஸ்வரம் கஃபே’ உணவகம் பிரபலமானது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் சாப்பிடுகின்றனர். இந்நிலையில், இங்கு 01-03-2024 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகலில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.  பெரிய சத்தத்துடன் வெடித்ததில் அப்பகுதியில் தீ மற்றும் புகை மூட்டம் ஏற்பட்டது. ஆனால் விரைவாக தீ பரவாமல் மட்டுப்படுத்தப்பட்டது.  இதில் உணவக பணியாளர்கள் 2 பேர் உட்பட 10 பேர் ப‌டுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 45 வயதான ஒரு பெண்மணிக்கு கிட்டத்தட்ட 40 சதவீத காயங்கள் ஏற்பட்டு ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிரவாதிகளின் வன்முறைக்கு அப்பாவி மக்கள் ஏன் பலிகடா ஆகவேண்டும்?: இவ்வாறு யாரோ தீவிரவாதம்-வன்முறை கைக்கொண்டு குண்டுவெடிப்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்ளலாம். அத்தகைய இளைஞர்கள் எவ்வாறு சமூகத்தில் ஆதரிக்கப்படலாம், பாதுகாப்புக் கொடுக்கலாம், பெற்றோர் எப்படி அவர்களை கவனிக்காமல் இருக்கிறார்கள்? அல்லது கவனித்தும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்களா? அல்லது, மதரீதியில் மகத்தாக காரியங்களில் ஈடுபட்டுள்ளான் என்று ஆதரவு தெரிவித்து, அமைதியாக இருக்கிறார்களா? இத்தகைய ஏகப் பட்ட கேள்விகள் எழுகின்றன. ஏனெனில், பெங்களூரில் குண்டுவெடிப்பது, ஒன்றும் புதியதல்ல. முன்பே, இவற்றையெல்லாம் அலசப் பட்டுள்ளன. ஆனால், இன்று மறக்கப் பட்டது போல, இதைப் பற்றி வேறுவிதமாக வாத-விவாதங்கள் திசைத் திரும்புகின்றன. தீவிரவாதம், பயங்கரவாஹம், குண்டுவெடிப்பு முதலியவை எக்காரணங்களினாலும் ஏற்றுக் கொள்ளமுடியாது. அத்தகையோர் மனிதகுலத்திற்கே எதிரானவர்கள் ஆவர்.

02-03-2024 முதலமைச்சர் ஆய்வு, பேட்டி முதலியன: முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் ஆகியோர் குண்டுவெடித்த உணவகத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் பரமேஷ்வர், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே, காவல் துறை உயர் அதிகாரிகளுடன் இந்த சம்பவம் குறித்து அவசர ஆலோசனை நடத்தினார். குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய யாரும் தப்ப முடியாது என சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார். மேலும், இதை அரசியலாக்கக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டார். இருப்பினும், முஸ்லிம் விசயம் வரும்பொழுது, ஏன் திப்பு ஜெயந்தி கூட எவ்வாறு அரசியலாக்கப்படுகிறது என்பதெல்லாம் தெரிந்த விசயம் தான். ஹிஜாப் போன்ற விவகாரங்கள் பற்றிக் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை.

பேருந்தில் வந்த மர்ம நபர்முதல்வர் சித்தராமையா கூறும்போது, ”விபத்து நடந்த உணவகம் மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டிடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவிகேமரா பதிவுகளின் மூலம் சந்தேகிக்கப்படும் குற்றவாளியின் முகம் அடையாளம் காணப்பட்டுள்ளது. சம்பவத்தன்று காலை 11.45 மணிக்கு வெள்ளை டி ஷர்ட், ஜீன்ஸ் பேன்ட் அணிந்த நபர் மாநகராட்சி பேருந்தில் உணவகத்துக்கு அருகே வந்து இறங்குகிறார். அவர் தொப்பி, முகக் கவசம், கண்ணாடி ஆகியவற்றை அணிந்துள்ளார். 12.35 மணியளவில் உணவகத்தில் ரவா இட்லி வாங்கி சாப்பிட்டுள்ளார். தான் கொண்டுவந்த பையை மேஜைக்குஅடியில் வைத்துவிட்டு வெளியேறுகிறார்[1]. அடுத்த சில நிமிடங்களில் பயங்கரசத்தத்துடன் குண்டுவெடித்து சிதறியது[2]. அவரது முகத்தை தகவல் தொழில் நுட்பத்தின் உதவியுடன் வடிவமைக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.இந்த விவகாரத்தில் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவர்”.

இதனை பாஜகவினர் அரசியலாக்கி ஆதாயம் தேடப் பார்க்கிறது[3]: சித்தராமையா தொடர்ந்து கூறியது, “இதனை பாஜகவினர் அரசியலாக்கி ஆதாயம் தேடப் பார்க்கின்றனர்” என்றார்[4]. பெங்களூரு மாநகர காவல் ஆணையர் தயானந்த் கூறும்போது, இந்த குண்டுவெடிப்பு வழக்கு மத்தியகுற்றப்பிரிவு போலீஸுக்கு மாற்றப்பட்டுள்ளது. 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. நன்கு பயிற்சி பெற்றவர் மூலமாக இந்த சதி செயல் அரங்கேற்றப் பட்டுள்ளது. சக்தி குறைந்த வெடிகுண்டாக இருப்பினும், டிஜிட்டல் டைமர் கருவி மூலம் இயக்கி வெடிக்கப் பட்டுள்ளது. டிபன்பாக்ஸ் மூலம் வெடிகுண்டு வைக்கப் பட்டுள்ளது. அதில் பல்ப் இழை டெட்டனேட்டராகச் செயல்பட்டதும் தெரிய வந்துள்ளது. இவ்வழக்கில் ஹூப்ளி, தார்வாட், பெங்களூரு ஆகிய இடங்களில் 4 பேரை பிடித்து விசாரித்து வருகிறோம். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பெங்களூரு விமான நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது,” என்றார். ஆக, வகை-வகையான குண்டுகளைத் தயாரிக்கும் முறையும் வளர்ந்து வருகிறது போலும். டிபன் – பாக்ஸ், காஸ் சிலின்டர், குக்கர் என்று மாறி வருகிறது.

தொழில் போட்டி காரணமா?கர்நாடக பாஜக தலைவர் விஜயேந்திரா கூறும்போது, ”இந்த குண்டுவெடிப்பு சம்பவம் பெங்களூருவாசிகளிடம் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் அரசு மக்களுக்கு பாதுகாப்பு வழங்க தவறிவிட்டது. தீவிரவாதிகள் விவகாரத்தில் காங்கிரஸ் அரசு அலட்சியமாக செயல்பட்டதால்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட ராமேஸ்வரம் கஃபே உணவகம் மாதந் தோறும் பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டுவதால், தொழில் ரீதியாக‌ ஏராளமான எதிரிகள் இருந்துள்ளனர். எனவே தொழில் போட்டி காரணமாக இந்த சதி செயல் நடந்தததா? என விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதுவும் பொறுப்பற்ற சிந்தனையாக இருக்கிறது எனலாம், ஏனெனில், தொழில் போட்டி இருந்தால், இவ்வாறு குண்டு வைத்து தான், வியாபாரத்தில் முன்னேறலாம் என்பது, எந்த கல்லூரியில் நிர்வாகப் படிப்பில் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை.

03-03-2024 வழக்கு என்...-யிடம் ஒப்படைத்துள்ளது: கர்நாடக மாநில போலீசாரின் தனிப்படை விசாரணை நடத்தி வரும் நிலையில், பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கை மத்திய உள்துறை அமைச்சகம் என்.ஐ.ஏ.-யிடம் ஒப்படைத்துள்ளது[5]. என்.ஐ.ஏ. குண்டு வெடிப்பு தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்[6].  தமிழகம் போலல்லாது, இங்கு, உடனடியாக என்.ஐ.ஏ.-யிடம் ஒப்படைத்துள்ளதை கவனிக்கலாம். கோயம்புத்தூர் குண்டுவெடிப்பின் போது, திமுக அரசு அதனை பலவழிகளில், விபத்து என்றெல்லாம் சொல்லி மறைக்கப் பார்த்தது. இதனைத் தொடர்ந்து இதுவரை நடைபெற்றுள்ள விசாரணைகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் கர்நாடகா மாநில அரசால் அமைக்கப்பட்டுள்ள தனிப்படை என்.ஐ.ஏ.-யிடம் ஒப்படைக்கும்[7]. பெங்களூரு அனைத்துலக வியாபார மையமாக இருப்பதினால், இங்கு மேலும் இத்தகைய வன்முறை வேலைகள் நடப்பதை யாரும் விரும்பவில்லை. இதனால், உள்ளூர் வியாபாரம் மட்டுமல்லாது, அயல்நாட்டு வியாபாரம் பாதிக்க வாய்ப்பு உள்ளது.  அந்த ஆள் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ 10 லட்சம் பரியும் அறிவிக்கப் பட்டுள்ளது[8].

© வேதபிரகாஷ்

06-03-2024


[1] தினத்தந்தி, பெங்களூரு ஓட்டல் குண்டுவெடிப்பு.. டைமரை ஆன் செய்வதற்கு முன்பாக ரவா இட்லி வாங்கிய குற்றவாளி, மார்ச் 3, 1:32 pm

[2] https://www.dailythanthi.com/News/India/bengaluru-rameshwaram-cafe-blast-accused-ordered-idly-before-setting-timer-on-siddaramaiah-1095928

[3] தமிழ்.இந்து, பெங்களூருராமேஸ்வரம் கஃபேஉணவகத்தில் வெடிகுண்டு வைத்த நபர் அடையாளம் காணப்பட்டார், இரா.வினோத், Published : 03 Mar 2024 06:55 AM; Last Updated : 03 Mar 2024 06:55 AM.

[4] https://www.hindutamil.in/news/india/1209807-bomber-identified-at-rameshwaram-cafe-in-bengaluru.html

[5] தினத்தந்தி, நாட்டை அதிரவைத்த குண்டு வெடிப்பு NIA கொடுத்த ரிப்போர்ட், By தந்தி டிவி, 6 மார்ச் 2024 9:25 AM.

[6] https://www.thanthitv.com/News/India/kerala-well-failed-woman-tamilnadu-thanthitv-250604?infinitescroll=1

[7] தமிழ்.இந்து, பெங்களூரு குண்டுவெடிப்பு: குற்றவாளிகள் தப்ப இடமளிக்கக் கூடாது, செய்திப்பிரிவு, Published : 06 Mar 2024 06:25 AM, Last Updated : 06 Mar 2024 06:25 AM.

https://www.hindutamil.in/news/opinion/editorial/1211372-bangalore-blast.html

[8] In the wake of the recent bombing incident at Rameshwaram Cafe in Kundalahalli, Bengaluru, the National Investigation Agency (NIA) has stepped up its efforts to bring the perpetrators to justice. The NIA, on Wednesday, released a photograph of the suspected bomber and declared a reward of Rs 10 lakhs for any vital information that could lead to the arrest of the suspect.In a bid to encourage cooperation from the public, the NIA assured that the identity of any informant providing crucial information regarding the suspect would be kept strictly confidential. This move aims to instil confidence among potential tipsters and facilitate a swift resolution to the case. The NIA has urged anyone with relevant information to come forward and assist in their investigation. Citizens can reach out to the authorities by calling the designated hotlines at 08029510900 or 8904241100.

ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்தலில் மாட்டிக் கொண்டது–சகாக்கள் கைதானது, தமிழகம் எதிர்க்க வேண்டிய முக்கியமான குற்றம் (3)

மார்ச் 3, 2024

ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்தலில் மாட்டிக் கொண்டது சகாக்கள் கைதானது, தமிழகம் எதிர்க்க வேண்டிய முக்கியமான குற்றம் (3)

ஜாபர் சாதிக் குறித்து செய்தி சேகரிக்க சென்ற சேனல் ரிப்போர்ட்டர் கொடூர தாக்குதல்.. பிடிபட்ட கட்சி நிர்வாகி:. போதை பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவான ஜாபர் சாதிக் குறித்து, செய்தி சேகரிக்க சென்ற தனியார் செய்தி தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில், ஒருவரை போலீசார் கைது செய்தனர். இதில், திமுக நிர்வாகிகளான கலைச்செல்வன் மற்றும் பச்சையம்மாள் ஆகியோர் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரை தாக்கி, அறைக்குள் அடைத்து கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது[1]. புகாரின் அடிப்படையில் இது குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார், ஆபாசமாக பேசுதல், சிறை வைத்து காயம் விளைவித்தல் என இருவர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்த நிலையில், கலைச்செல்வனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்[2]. ஊடகத்தினர் மீது தாக்குதல், ஊடகத்தின் குரல்வளை நெறிப்பு, கருத்து சுதந்திரம் பறிபோதல் என்றெல்லாம் போன்ற பேச்சும் இல்லை, விவாதமும் இல்லை. அரசியல் கூட்டணி பற்றிதான் தினம்-தினம் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

வங்கி கணக்குகள் முடக்கம்: பொதுவாக இத்தகையோரிடம் பலவித பெயர்களுடன், வங்கிக் கணக்குகள் பலவித காரியங்களுக்கு உபயோகமாக, செயல்படுத்த இருக்கும். வீட்டில் யாருமில்லாததாலும், விவரங்களை சொல்வதற்கும் ஆட்கள் இல்லாததாலும், இருக்கின்ற ஆதாரங்களை வைத்து, நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஆகிறது. அதிகாரிகள், போலீஸார் முதலியோருடன் ஒத்துழைப்புக் கொடுக்காமல் சதாய்த்து வருவதும் தெரிந்தது. மேலும், காலம் தாழ்த்தினால், வங்கிகளில் இருக்கும் பணமும் எடுக்கப் பட்டு, வேறு விவகாரங்களுக்கு உபயோகப் படும். ஜாபர் சாதிக் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் நிலம் மற்றும் வங்கி கணக்குகள் தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன[3]. இந்த நிலையில், அவர் தொடர்புடைய 8 வங்கி கணக்குகள் இருப்பதும் தெரிந்தது[4]. இதனால், அவற்றை முடக்க தீர்மானம் எடுக்கப் பட்டது[5]. இப்பொழுது, கணக்குகளை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது[6].

திரையுலக நிழல் தாதா[7]: ஒரு கட்டத்தில், தொழில் ரீதியாக சிலருடன் பிரச்னை உருவாகி, கடும் நெருக்கடி ஏற்பட்டது. வழக்குகளை எதிர்கொண்ட அவரும், அவரது சகோதரரும் அவற்றில் இருந்து விடுபட்டு, கொஞ்ச நாட்கள் அமைதியாக இருந்தனர். பின், சென்னை பர்மா பஜார் தொடர்பு ஏற்பட, அங்கிருந்தபடியே வெளிநாட்டு பொருட்களை இறக்குமதி செய்து வியாபாரத்தில் ஈடுபட்டனர். கடந்த, 2010 வரை இப்படி சென்று கொண்டிருந்த ஜாபர் சாதிக், அதே பர்மா பஜார் தொடர்பை பயன்படுத்தி, நடிகர் சரத்குமார் நடிப்பில் வெளியான, ஜக்குபாய் படத்தை, திருட்டு வி.சி.டி.,யில் தயாரித்து புழக்கத்தில் விட்டார். இது தொடர்பான பிரச்னையில், ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது, அவருக்கு பின்புலமாக இருந்து உதவியது, தற்போது திரையுலகில் இருக்கும் பிரபலமான இயக்குனர் ஒருவர் தான். இதையடுத்து, ஜாபர் சாதிக்கும், அவரின் சகோதரரும் வெளிநாடுகளில் இருந்து சட்ட அனுமதி பெறாத பொருட்களை எடுத்து வரும் ‘குருவி’யாக செயல்பட துவங்கினர். அப்போது அவர்களுக்கு, சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தும் நபர்களோடு தொடர்பு ஏற்பட்டது. அந்த தொடர்புகளை வைத்து, தமிழகம் வாயிலாக போதைப்பொருட்களை கடத்தி வந்தனர். அந்த வருமானத்தை வைத்து, சினிமாக்காரர்கள், போலீஸ் அதிகாரிகள், அரசியல் முக்கியஸ்தர்கள் என, பல தமிழக வி.ஐ.பி.,க்களுடன் நெருக்கமாகி விட்டனர்.

ரேவ் பார்டிகள் நடத்தப் பட்டது[8]: பணத்தை தண்ணீராக வாரி இரைத்து பலரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ஜாபர் சாதிக், ஒரு கட்டத்தில் கோயம்புத்துார் பகுதியில் பிரமாதமாக நடந்து வரும், ‘ரேவ் பார்ட்டி’ எனப்படும், போதைப்பொருள் பார்டியை சென்னையிலும் அறிமுகம் செய்து வைத்தார். கிழக்கு கடற்கரை சாலையில், பண்ணை வீடுகளில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட, ‘ரேவ் பார்ட்டி’கள் அடிக்கடி நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளுக்கு, தமிழக அரசியல், சினிமா, தொழில் அதிபர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் என, பலரும் சென்று வந்துள்ளனர். இதன் வாயிலாக, ஆளும் கட்சியில் மிக மிக முக்கியமான புள்ளிகளுடன் தன் செல்வாக்கை வளர்த்துக் கொண்டார். பல ஆளும் கட்சி பிரமுகர்கள், போலீஸ் உயரதிகாரிகளுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. தன்னை தேடி மத்திய போதை தடுப்பு பிரிவு அதிகாரிகள் வருவது தெரிந்ததும், ஜாபர் தலைமறைவாகி விட்டார். அவர் தலைமறைவாவதற்கு முன், யாருடன் போனில் பேசினார் என்ற தகவலை போலீசார் எடுத்துள்ளனர்.

செக்யூலரிஸ போர்வையில் அடிப்படைவாதம் முதலியன[9]: அதில், சினிமா பிரபலங்களும், போலீஸ் அதிகாரிகளும், ஆளும்கட்சி அரசியல் பிரமுகர்களும் தொடர்ச்சியாக, ஜாபரை தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்துள்ளது. குறிப்பாக, சென்னை கிரீன்வேஸ் சாலையில் இருந்து தொடர்ச்சியாக அழைப்புகள் வந்துள்ளதை, போலீசார் கண்டறிந்து உள்ளனர். ஜாபர் சாதிக், திரைப்பட இயக்குனர் அமீர் மற்றும் இஸ்லாமிய மார்க்க பேச்சாளர் அப்துல் பாஸித் புகாரி ஆகியோர் இணைந்து நடத்தி வரும், ‘லா கபே’ என்ற நிறுவனத்தை பற்றியும், பல தகவல்கள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பல்வேறு மட்டங்களில், பணத்தை வாரிக்கொடுத்து, தன் செல்வாக்கை வளர்த்துக்கொண்ட ஜாபர் சாதிக், மார்க்க போதகர்களிடமும் அணுக்கமாக இருந்தார். அவர்கள் வாயிலாக ஆயுத போராட்ட குழுக்களுக்கும், பண உதவி செய்திருக்கிறார் என்ற கோணத்தில் என்.ஐ.ஏ., விசாரிப்பதாக கூறப்படுகிறது. விசாரணையில் முன்னேற்றம் ஏற்படும் போது, மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லோருமே எதிர்க்க வேண்டிய போதை மருந்து: இன்று உலகம் முழுவதும் போதை மருந்துக்கு எதிராக எல்லா நாடுகளுமே மிகக்கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. மிகப்பெரிய குற்றம் என்பதனால், பைலில் வெளி வரமுடியாத குற்றம், உடனடியாக கைது, சிறை என்று கடினமான நிலைமை இதுதான் உலகமெங்கும் காணப்படுகிறது. ஏனெனில் இது மனிதனுடைய வாழ்க்கையை சீரழித்து, குடும்பங்களை சமூகங்களையும் சீரழித்து, இறுதியில் ஒட்டுமொத்த மனித இனத்தையே பாதிக்கின்ற ஒரு மிகப்பெரிய நோயாக அமைகிறது. கொரோனாவை பார்த்த பிறகு, அதைவிட இது மிகக் கொடுமையான நோய் என்று தோன்றுகிறது ஆகவே நிச்சயமாக எந்த சமூகமும் நாடும் இதனை எதிர்க்கும் என்பது நன்றாகவே புரிகிறது. ஆகவே, இத்தகைய காரியங்கள் தமிழகத்தில் நடப்பது என்பது மிகவும் வருத்தமான விஷயமாகும். ஆகவே எப்படியாவது இத்தகையை குற்றங்கள் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட வேண்டும்

© வேதபிரகாஷ்

03-03-2024


[1] தினத்தந்தி, ஜாபர் சாதிக் குறித்து செய்தி சேகரிக்க சென்ற சேனல் ரிப்போர்ட்டர் மீது கொடூர தாக்குதல்.. பிடிபட்ட.., Thanthi TV,  Uploaded On 01.03.2024

[2] https://www.youtube.com/watch?v=vAAcb1uO5SE

[3] குமுதம், ஜாஃபர் சாதிக் வங்கி கணக்குள் முடக்கம்போதைப் பொருள் தடுப்பு பிரிவினரின் அடுத்த ஸ்கெச், Mar 2, 2024 – 17:13

[4] https://kumudam.com/Zafar-Sadiq-Bank-Account-Freeze-Next-Sketch-of-Narcotics-Squad

[5] தமிழ்.இந்து, போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக்கின் 8 வங்கி கணக்குகள் முடக்கம், செய்திப்பிரிவு, Published : 03 Mar 2024 05:38 AM; Last Updated : 03 Mar 2024 05:38 AM.

[6] https://www.hindutamil.in/news/tamilnadu/1209795-jafar-sadiq-8-bank-accounts-frozen.html?frm=rss_more_article

[7] தினமலர், குருவி முதல்ரேவ் பார்ட்டிவரைஜாபர் சாதிக் சேட்டைகள் ஏராளம், Added : மார்ச் 03, 2024 02:30…; https://www.dinamalar.com/news_detail.asp?id=3566085

[8] தினமலர், குருவி முதல்ரேவ் பார்ட்டிவரைஜாபர் சாதிக் சேட்டைகள் ஏராளம், Added : மார்ச் 03, 2024 02:30…; https://www.dinamalar.com/news_detail.asp?id=3566085

[9] தினமலர், குருவி முதல்ரேவ் பார்ட்டிவரைஜாபர் சாதிக் சேட்டைகள் ஏராளம், Added : மார்ச் 03, 2024 02:30…; https://www.dinamalar.com/news_detail.asp?id=3566085

முதியோர் இல்லம், ஆதரவற்றோர் காப்பகம் என்று சொல்லி, கால் சென்டர் மூலம் கவர்ந்து பணம் ஏமாற்றும் ஐ-டெக் கும்பல்கள் (2)

ஜனவரி 26, 2024

முதியோர் இல்லம், ஆதரவற்றோர் காப்பகம் என்று சொல்லி, கால் சென்டர் மூலம் கவர்ந்து பணம் ஏமாற்றும் டெக் கும்பல்கள் (2)

2020 – மோசடி செயலில் ஈடுபட்டு, கைதாகி, ஜாமீனில் வெளிவந்து, மறுபடியு மோசடியில் ஈடுபட்டது: சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் கோபி என்ற கோபி கிருஷ்ணன் (வயது 30). பட்டதாரியான இவர் நூதனமான முறையில் மோசடி செயலில் ஈடுபட்டு, கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டியவர்[1]. இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர். குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்[2]. ஜாமீனில் வெளிவந்த இவர் மீண்டும் மோசடி தொழிலை தொடங்கி உள்ளார். சென்னை திருமுல்லைவாயலில் போலி கால் சென்டர் ஒன்றை தொடங்கி, அதில் ஏராளமான இளம்பெண்களை வேலைக்கு அமர்த்தினார். அந்த இளம்பெண்கள் பொதுமக்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசி, ஏதாவது ஒரு நிதி நிறுவனம் பெயரைச் சொல்லி, அந்த நிறுவனத்தில் குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி தருவதாக சொல்லி ஏமாற்றுவடு தான் அவர்கள்து வேலை. இது தொடர்பாக, செல்வராஜ் கொடுத்த புகார் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் நாகஜோதி மேற்பார்வையில், உதவி கமிஷனர் பிரபாகரன் தலைமையிலான தனிப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மோசடி மன்னன் கோபிகிருஷ்ணன், அவரது மேலாளர் வளர்மதி (30) உள்பட 12 பேர் நேற்று கைது செய்தனர். அவர்கள் நடத்திய போலி கால்சென்டரிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

2024 – அன்னை தெரசா முதியோர் இல்லம் மோசடி: இதே பாணியில், அனாதை இல்லம், முதியோர் இல்லம், ஆசிரமம் என்று சொல்லிக் கொண்டு, கும்பல்கள் கிளம்பியுள்ளன. கால் சென்டர்களிலிருந்து, தொடர்ந்து பெண்கள் தொடர்பு கொண்டு, டொனேஷன் கேட்டுத் தொல்லை செய்வர். யாராவது, இரக்கப் பட்டு, பணம் கொடுத்தால் அபகரித்து விடுவர். அத்போன்ற , அனாதை இல்லம், முதியோர் இல்லம், இருக்காது. ஒரே இல்லத்தை ஐத்துக் கொண்டு, பல பெயர் / போர்டுகளை வைத்தும் ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள். பொதுவாக உதவி செய்கிறவர்கள், பென்சனர், முதலியோர்களது செல்போன் நம்பர்களை வைத்துக் கொண்டு [மற்ற நிறுவனங்களிலிருந்து பெற்றுக் கொண்டு] இவ்வாறு ஏமாற்றுகின்றனர். அவகையில், பெரம்பூரில், அன்னை தெரசா முதியோர் இல்லம் / ஓல்ட் ஏஜ் ஹோம் என்ற பெயரில், கால் சென்டர்களை வைத்து, மோசடி செய்து வருகின்றனர். புகார்கள் கொடுக்கப் பட்டுள்ளன.

அனாதை இல்லம், முதியோர் இல்லம், வாழ்வற்ற பெண்களுக்கு பாதுகாப்பு இல்லம் நடக்கும்-நடத்தப் படும் விதம்: கிறிஸ்துவ நிறுவனங்கள் அனாதை இல்லம், முதியோர் இல்லம், வாழ்வற்ற பெண்களுக்கு பாதுகாப்பு இல்லம் என்றெல்லாம் நடத்தி மோசடி செய்து சிக்கிக் கொண்டுள்ள செய்திகள் பல வந்துள்ளன. இந்நிலையில் கால் சென்டர் நடத்தி இதே முறையில் அப்பாவி மக்களை ஏமாற்றும் கூட்டங்களை பற்றிய செய்திகளும் வந்து கொண்டே இருக்கின்றன. சில இடங்களில், முதியோர் இல்லங்கள் நல்ல முறையில் சகல வசதிகளுடன் பாதுகாப்பு கொண்ட முறையில் இயங்கி வருகின்றன. பெரும்பாலும், இவர்கள் ஒன்று தாமே முன்வந்து அங்கு சேர்ந்து விடுகின்றனர் அல்லது மகன் – மகள் வெளிநாடுகளில் வாழும் அல்லது நிரந்தரமாகத் தங்கி விடும் நிலையில் இத்தகைய இல்லங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் அதே நேரத்தில் சிறிய அளவில் நடத்தப்படுகின்ற முதியோர் இல்லங்களில் தான் நிறைய பிரச்சினைகள் உண்டாகின்றன.

சிறிய அளவில் நடக்கும்முதியோர் இல்லங்கள்: அதாவது அவர்கள் சேவையை முன்னிலைப் படுத்திக் கொண்டு அத்தகைய இல்லங்கள் ஆரம்பித்தாலும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற உள்நோக்கம் தான் அவர்களுக்கு அதிகமாக இருக்கிறது. இதனால் தான் கருணை இல்லம் என்ற பெயரில் அவர்கள் நடத்தி வரும் இடங்களில் சென்று பார்த்தாரல், ஒரு பெரிய ஹால், அதில் ஒரு 10-20 கட்டிலில் போடப்பட்டு, வயதானவர்கள் எல்லாம் படுக்க வைக்கப்பட்டு இருப்பார்கள். சாப்பாடு கூட, ஒரு எளிய முறையில் தான், கொஞ்சமாக கொடுப்பார்கள். கழிவறை போன்ற வசதிகளெல்லாம் கூட குறைவாகத் தான் இருக்கும். இந்த 10-20 அல்லது 50-100 முதியவர்களுக்கு ஒன்று முறையே  ஐந்து-பத்து அறைகள் கூட இருக்காது. இதனால் அவர்கள் அங்கேயே, எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு, பிறகு சாப்பிட்டு,, தங்க வேண்டிய நெருக்கடி உள்ளது. மேலும் பல நேரங்களில் சமைப்பது, அறைகளை சுத்தம் செய்வது, ஏன் இந்த கழிப்பிடங்களை கூட சுத்தம் செய்யும் பணிகளில் இந்த முதியவர்கள் பணிக்கப்படுகிறார்கள்.

போலி இல்லங்கள் உருவாகும் விதம்: பணம் தான் பிரதானம் எனும் பொழுது, பல நேரங்களில் அவர்கள் சட்டப்படி பதிவு கூட செய்யாமல் இல்லங்களை நடத்தி வருகிறார்கள். சில பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மேலும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கோணத்தில், இருக்கும் இடத்தையே இரண்டு மூன்று என்று பிரித்துக் காட்டி, வெவ்வேறு பெயர்களில் நடத்துவதாக பிரசாரம் செய்து இவர்கள் பண வசூல் நிலையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மத்திய-மாநில அரசு மானியங்கள் எல்லாம் கிடைக்கின்றன, வங்கிகளில் சில நிதி கிடைக்கின்றது போன்ற சலுகைகளை குறிவைத்து சம்பாதிக்க, இவர்கள் இத்தகைய வியாபாரத்தை செய்து வருகின்றனர். அயல்நாட்டு நிதியும் கிடைக்கும் பொழுது, மேன்மேலும் விசித்திரமான, குரூர கொடூரங்கள், குற்றங்களும் நடக்கின்றன. ஆனால், பல்வேறு காரணங்களுக்காக, அவை அமுக்கப்படுகின்றன, மறைக்கப் படுகின்றன.

கால்சென்டர் மூலம் முதியோர் இல்ல மோசடிகள்: மேன்மேலும் பணம் சம்பாதிப்பது எப்படி என்ற முறையில் தான் கால் சென்டர் வைத்துக் கொண்டு செய்யும் மோசடியும் இதில் சேர்ந்து உள்ளது. இருக்கின்ற ஆதரவு இல்லங்களில் நன்கொடை கொடுப்பவர்களின் விலாசம் செல்போன் நம்பரை எடுத்துக் கொண்டு, கால் சென்டர்கள் அமைத்து, அவற்ரிலிருந்து, அவர்களுக்கு அடிக்கடி தொடர்பு கொண்டு நன்கொடை கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவர்களும் ஒரு முறை செய்வது என்பது சாதாரண நிலையாக தான் இருக்கின்றது. ஆனால், மேன்மேலும் அவர்கள் தொந்தரவு செய்யப்படும்போது, அவர்களுக்கு ஒரு சந்தேகம் வருகிறது. அந்நிலையில் தான், அவர்கள் பணத்தை கொடுத்து, பிறகு நேரில் சென்று பார்க்கலாம், என்று சென்று பார்த்தால் அத்தகைய நிறுவனமே இல்லாதது கண்டு திகைக்கின்றனர், அப்பொழுது போலீஸிடம் புகார் கொடுக்கின்றனர். பிறகு விசாரணையில் உண்மை வெளிவருகிறது.

2024ல் பெரம்பூரில் தெரசா பெயரில் போலி இல்லம்: ஒரு நாளைக்கு குறைந்தது 100 பேரிடம் பேச வேண்டும் என டார்கெட் கொடுத்து அந்த பெண்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள். மாதம் ரூ.8,000 முதல் 15000 வரை சம்பளம் அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. மேலும் அவ்வாறு அந்த பெண்கள் பேசி அதன் மூலம் பணம் கிடைத்து விட்டால், அதற்கும் கூடுதல் கமிஷன் கொடுக்கப்படுகிறது. இவ்வாறு டார்கெட் அமைத்து பொதுமக்களை இவர்கள் ஏமாற்றி வருகின்றனர் அவ்வாறு வாங்கப்படும் பணம் உண்மையிலேயே முதியோர் இல்லங்கள் கருணை இல்லங்களுக்கு செலவிடப்படுகிறது என்று பார்த்தால், கண்டிப்பாக கிடையாது. குறிப்பிட்ட அட்ரெஸ் வைத்திருக்கும் நபர்கள் சொகுசு பங்களா, கார், வெளிநாட்டு சுற்றுலா என்று ராஜபோகம் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். இது அறியாத அப்பாவி பொதுமக்கள் ஏழைகளுக்காக பணம் கேட்கிறார்கள் என்று நினைத்து தங்களால் முடிந்த உதவிதைகளை செய்கின்றனர். பணக்காரர்களிடம் பணத்தைப் பெற்று அங்கு இருப்பவர்கள் அவர்களுக்காக வசூல் செய்கின்றனர். அந்த வகையில் சமீபத்தில் பெரம்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தை போலீசார் ஆய்வு செய்தபோது கார்ப்பரேட் கம்பெனி போல அந்த நிறுவனம் இயங்கி வந்தது தெரியவந்துள்ளது. பிறகு ஏமாந்தவர் கொடுத்த புகாரில் அங்கு சென்று சோதனை மேற்கொள்ளப்பட்ட போது அங்கு :மதர் தெரசா ஓல்ட் ஏஜ் ஹோம்” என்று ஒருவர் நடத்துவதாக தெரிந்தது. அதன் தலைவர் தலைமறைவாகி விட்டதால்,போலீசார் தேடி வருகின்றனர்.

© வேதபிரகாஷ்

26-01-2024


[1]  மாலைமலர், போலி கால் சென்டர் நடத்தி லட்சக்கணக்கில் பணம் சுருட்டல்மோசடி மன்னன் உள்பட 12 பேர் கைது, By மாலை மலர், 30 செப்டம்பர் 2020 7:57 AM (Updated: 30 செப்டம்பர்).

[2] https://www.maalaimalar.com/news/district/2020/09/30075722/1931037/Fake-CallCentre-conducting-Case-12-arrested-in-Chennai.vpf?infinitescroll=1

முதியோர் இல்லம், ஆதரவற்றோர் காப்பகம் மற்றும் கால் சென்டர் இவற்றிற்கு என்ன சம்மந்தம்? (1)

ஜனவரி 26, 2024

முதியோர் இல்லம், ஆதரவற்றோர் காப்பகம் மற்றும் கால் சென்டர் இவற்றிற்கு என்ன சம்மந்தம்? (1)

ஹை-டெக் பிரச்சாரம் மூலம் நன்கொடை வசூலிக்கும் மோசடி: ஏமாற்றுகிறவர்கள் இப்பொழுது எல்லாம் புது புது வழிகளை யுக்திகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். மொபைல் போன், கம்ப்யூட்டர் முதலியவை வந்த பிறகு, அதற்கு ஏற்றபடி தங்களது தொழிலையும் நவீனப்படுத்துகிறார்கள். அதாவது ஒரு கவர்ச்சிகரமான ஆபீஸ் போன்றவை வைத்துக்கொண்டு, அதில் பெண்களை வேலைக்கு அமைத்து, அவர்கள் மூலம் கால் சென்டர் போன்ற வைத்து, அதன் மூலமாக பலரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, வங்கியில் இருந்து கடன் வாங்கி தருகிறேன், இன்சூரன்ஸ் பாலிசிக்கு உதவுகிறேன், அனாதை இல்லங்கள் முதியோர்களுக்கு நன்கொடை கொடுங்கள், உதவி செய்யுங்கள் என்றெல்லாம் பிரச்சாரம் செய்து, தினமும் நூற்றுக்கணக்கான ஏன் ஆயிரக்கணக்கான மக்களிடம் தொடர்பு கொண்டு, எப்படியாவது ஒரு ஐந்து-பத்து பேர்களை வலையில் விழ வைத்து விடுகிறார்கள். அவர்கள் தான் ஏமாறுகிறார்கள், ஏமாளிகளாகி விடுகிறார்கள். இவ்வாறு தான் இப்பொழுது எல்லாம் நவீன முறையில் பணம் ஏமாற்றப்படக் வருகிறது.

2019 – அம்மா அறக்கட்டளை மோசடி: “அம்மா அறக்கட்டளை” என்று ஆதரவற்றோர் இல்லம் போல் போலியாக நடத்தி பழைய துணிகள், பொருட்கள், பணம் உள்ளிட்டவற்றை சேகரித்து அமைப்பின் பெண் பணியாளர் ஒருவீட்டில் 11.5 லட்சம் ரூபாய் பணத்தை திருடிவிட்டு தலை மறைவானார். அவரை கைது செய்த போலீஸார் அதன் உரிமையாளரான போலி பத்திரிகையாளர் ஒருவரை தேடி வருகின்றனர். அம்மா அறக்கட்டளை அரவிந்தன் என்பவரின் பெயரில் பதிவு செய்யபட்டுள்ளதையும், அந்த நபர் மக்கள் நம்பிக்கை என்ற வாரஇதழை நடத்தி வருவதையும் போலீஸார் கண்டுபிடித்தனர். அரவிந்தன் ஆரம்பத்தில் ஒரு தொலைக்காட்சியில் விளம்பரப்பிரிவில் வேலைப்பார்த்ததும், அங்கு அவரது நடத்தைச் சரி இல்லாததால் வெளியேற்றப்பட்டதும், பின்னர் தானே பத்திரிகை ஆரம்பித்து காவல் ஆணையர் அலுவலகம், டிஜிபி அலுவலகம், தலைமைச் செயலகம் போன்ற இடங்களில் நுழைந்து பலரது அறிமுகத்தை பெற்றுள்ளார். காவல் ஆணையர் உள்ளிட்ட பிரபலங்களுடன் நெருக்கமாக இருப்பது போல் புகைப்படம் எடுத்து வைத்துகொண்டு போலி அறக்கட்டளை நடத்தி பண வசூலில் ஈடுபட்டு பொதுமக்களிடம் மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது. ஆதரவற்றோருக்கு உதவ வேண்டும் என்கிற பொதுமக்களின் நல்ல எண்ணத்தை மூலதனமாக்கி மோசடியில் ஈடுபட்ட அரவிந்தன் முக்கியமாக நடுத்தர மக்கள் வசிக்கும் பகுதியிலேயே தனது ஆட்களை அனுப்பி வசூலில் ஈடுபட்டு வந்துள்ளார்[1]. மகாலட்சுமியை கைது செய்த தேனாம்பேட்டை போலீஸார் பணம் ரூ. 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள போலி பத்திரிகையாளர் அரவிந்தனைத் தேடி வருகின்றனர்[2].

2020 – தனிநபர் கடன் பெற்று தருவதாக மோசடி: ஒரு கும்பல் போலியான கால் சென்டர் மூலம் அப்பாவி மக்களை குறிவைத்து, இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும், தனிநபர் கடன் பெற்று தருவதாகவும் கூறி முன்பணம் பெற்று ஏமாற்றி வருவதாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. விசாரணையில் குற்றவாளிகள் 3 பேரும் திருவான்மியூர், எல்.பி. சாலை மற்றும் பெருங்குடி ஆகிய 2 இடங்களில் போலியான கால் சென்டர் நடத்தி, பொதுமக்களிடம் இன்சூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும், எங்களது இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பாலிசி எடுத்தால் தங்களுக்கு தனிநபர் கடன் பெற்று தருவதாகவும் அதற்கு முன்பணமாக இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணம் செலுத்த வேண்டும் என பொதுமக்களை தங்கள் வங்கிக்கணக்கில் பணத்தை போட வைத்துள்ளனர். மத்திய குற்றப்பிரிவு தனிப்படையினர் மேற்படி புகார்கள் மீது தீவிர விசாரணை மேற்கொண்டதில் பொதுமக்களிடம் தனிநபர் கடன் பெற்றுத் தருவதாக கூறி வந்த கும்பல் திருவான்மியூர் மற்றும் பெருங்குடியில் செயல்பட்டு வந்தது தெரியவந்தது[3]. அதனடிப்படையில், தனிப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு மேற்படி குற்றச்செயலில் ஈடுபட்ட சேலத்தை தியாகராஜன் (38), சைதாப்பேட்டையை சேர்ந்த கோபிநாத், (28), விழுப்புரத்தைச் சேர்ந்த மணிபாலா (220 ஆகிய 3 பேரை நேற்று (09.7.2020) கைது செய்தனர்[4].

2020- குறைந்த வட்டிக்கு வங்கியில் கடன் வாங்கி தருவேன் என்ற மோசடி: வங்கிகளில் கடன் வாங்கி தருவதாகவும், வேலை வாங்கி தருவதாகவும் கவர்ச்சியாக பேசி பொது மக்களிடம் இருந்து பணத்தை மோசடி கும்பல் பறித்து உள்ளது. இதில் உயர் அதிகாரிகள் முதல் சாதாரண தொழிலாளிகள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணத்தை பறிகொடுத்து உள்ளனர். அவர்களில் 400-க்கும் மேற்பட்டவர்கள் இந்த மோசடி குறித்து புகார் அளித்தனர். அதன்அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த மோசடி கும்பல் ஒரு பெரிய நெட்வொர்க் அமைத்து கோடிக்கணக்கில் பணத்தை பறித்தது தெரியவந்தது. மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் இந்த இளைஞர்களை தங்களது போலியான கால் சென்டர்களில் வேலைக்கு சேர்த்துள்ளனர். இந்த இளைஞர்கள் பொதுமக்களின் செல்போன் எண்களை சேகரித்து அவர்களுக்கு போனில் பேசுவார்கள். குறைந்த வட்டிக்கு வங்கியில் கடன் வாங்கி தருவதாக இவர்கள் சொல்வார்கள். இவர்களின் இனிப்பான பேச்சுக்கு மயங்கி, வங்கியில் கடன் வாங்க ஆசைப்படுபவர்களிடம், அவர்களின் ஆதார் எண், வங்கி ஏ.டி.எம். ரகசிய குறியீட்டு எண், வங்கி கணக்கு விவரம், பான் கார்டு விவரம் போன்றவற்றை சேகரித்து, அதன் மூலம் மோசடி வலையை வீசுவார்கள். பின்னர் வங்கி கடன் தொகைக்கு ஏற்ப வங்கியில் முதலில் முன்பணம் கட்ட வேண்டும், என்று இவர்கள் சொல்லுவார்கள். அந்த முன்பணத்தை தங்களது வங்கிக்கணக்கில் போடச்சொல்லுவார்கள். அந்த பண த்தை சுருட்டுவார்கள். பின்னர் அவர்களது ஓ.டி.பி. எண்ணை வாங்கி, அதன் மூலம், அவர்களது வங்கி கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் ஆன்லைன் மூலம் எடுத்து ஏப்பம் போட்டு விடுவார்கள். இது ஒருவகையான மோசடி[5]. இந்த வழக்கில், சென்னை பென்ஸ் கிளப் உரிமையாளர் பென்ஸ் சரவணன்(வயது 42), பிரபல அரசியல் கட்சி பிரமுகர் செல்வா என்ற செல்வகுமார் மற்றும் வேளச்சேரியைச் சேர்ந்த குமரன் (44), ராயப்பேட்டையைச் சேர்ந்த மிதுன்ராயன் (41) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்[6].

2021 – போலியான கால்சென்டரில் வேலை பார்த்த அனுபவத்தை வைத்து, மோசடி: குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி தருவதாக சொல்லி ரூ.10 ஆயிரம் வரை என்னிடமிருந்து பணத்தை ஆன்லைன் மூலம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக தெரிய வந்தது[7]. இதுபற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகார் கொடுக்கப் பட்டது[8]. .இதுதொடர்பாக அடையாறு சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தது[9]. திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியில் போலியாக கால்சென்டர் ஒன்றை நடத்தி, அதில் சிலரை வேலைக்கு அமர்த்தி, அவர்கள் மூலம் பொதுமக்களை செல்போனில் தொடர்பு கொண்டு, கடன் வாங்கி தருவதாக கூறி, கடன் வாங்கிக்கொடுக்காமல் இதுபோல் பண மோசடியில் ஈடுபடுவது தெரியவந்தது[10]. போலி கால்சென்டரை நடத்தி பண மோசடியில் ஈடுபட்டதாக, சென்னை நங்கநல்லூரைச்சேர்ந்த சண்முகப்பிரியா (வயது 24), செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த பிரேம்நாத் (30) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்[11]. இவர்கள் இருவரும், இதுபோல போலியான கால்சென்டரில் வேலை பார்த்த அனுபவத்தை வைத்து, மோசடி லீலைகளில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது[12]

2023 – ரிலையன்ஸ் லைப் இன்சூரன்ஸ் பெயர் சொல்லி மோசடி: ரிலையன்ஸ் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகக் கூறி தொடர்பு கொண்டு, பணமோசடி செய்ததாக புகார் செய்யப் பட்டது[13]. விசாரித்ததில், போலி கால் சென்டர் தொலைபேசி அழைப்புகள் அனைத்தும், துரைப்பாக்கம் பகுதியில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது[14]. தொடர் விசாரணையில், பெரும்பாக்கம் சேரன் நகரைச் சேர்ந்த முகமது ஜாவித், 33, என்பவரை போலீசார் கைது செய்தனர்[15]. இவர், துரைப்பாக்கம் பகுதியில், போலியான ‘டெலிகாலர்’ அலுவலகம் நடத்தி வந்தது தெரிந்தது. மேலும் அங்கிருந்து, போலி முகவரியில் பெறப்பட்ட தொலைபேசி எண்களில் இருந்து, பாதிக்கப்பட்டவர்களை தொடர்பு கொண்டு, இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது[16]. அவரிடம் இருந்து மடிக்கணினி, 12 தெலைபேசிகள், 3 மொபைல் போன், 15 சிம் கார்டுகளை பறிமுதல் செய்தனர்.

© வேதபிரகாஷ்

26-01-2024


[1]  தமிழ்.இந்து, போலி ஆதரவற்றோர் இல்லம் நடத்தி ரூ.11.5 லட்சம் திருட்டு: பெண் கைது, போலி நிருபர் தலைமறைவு, செய்திப்பிரிவு, Published : 17 Jun 2019 03:20 PM, Last Updated : 17 Jun 2019 03:20 PM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/171129-11-5-5.html

[3]  தமிழ்.இந்து, சென்னையில் போலி கால் சென்டர் நடத்தி பல லட்சம் மோசடி: 3 பேர் கைது, செய்திப்பிரிவு, Published : 10 Jul 2020 11:03 PM; Last Updated : 10 Jul 2020 11:03 PM.

[4] https://www.hindutamil.in/news/tamilnadu/563800-fraud-call-center-in-chennai-raided-1.html

[5] தினத்தந்தி, சென்னையில் போலி கால் சென்டர் நடத்தி கோடிக்கணக்கில் மோசடி, மார்ச் 12 2020, 4:00 am (Updated: மார்ச் 12, 3:49 am)

[6] https://www.dailythanthi.com/News/State/2020/03/12034942/Fraud-call-center-operating-in-Chennai.vpf

[7] புதியதலைமுறை, சென்னை: லோன் வாங்கி தருவதாகக் கூறி போலி கால்சென்டர் நடத்தி பண மோசடி – 2 பேர் கைது, Sinekadhara, Published on: , 10 Mar 2021, 6:25 pm

[8] https://www.puthiyathalaimurai.com/crime/2-arrested-for-running-fake-call-centre-in-chennai

[9] விகடன், சென்னை: லோன் தருவதாக போலி கால் சென்டர் நடத்தி மோசடிஆண் நண்பருடன் சிக்கிய பெண்!, எஸ்.மகேஷ், Published:10 Mar 2021 7 PM; Updated:10 Mar 2021 7 PM

[10] https://www.vikatan.com/crime/chennai-police-arrested-fake-call-centre-team

[11] தினத்தந்தி, போலி கால் சென்டர் நடத்தி மோசடி பெண் உள்பட 2 பேர் கைது, மார்ச் 11, 1:17 pm (Updated: மார்ச் 11, 1:17 pm)

[12] https://www.dailythanthi.com/News/Districts/2021/03/11131722/Fake-call-center-fraud-Two-people-including-a-woman.vpf

[13]  தினகரன், சென்னை துரைப்பாக்கத்தில் போலி கால் சென்டர் நடத்தி மோசடி செய்தவர் கைது..!!, August 1, 2023, 5:56 pm

[14] https://www.dinakaran.com/chennai-duraipakkam-fake-call-center-fraud-arrest/

[15] தினமலர், போலி கால் சென்டர் மோசடி பேர்வழி கைது, பதிவு செய்த நாள்: ஆக 02,2023 00:34.

[16] https://m.dinamalar.com/detail.php?id=3392450

சித்த மருத்துவர் பாலியல் சிகிச்சை கொடுத்தது- ஓரின சேர்க்கையில் ஈடுபட்டது, நோயாளியைக் கொன்றது, மனித மாமிசம் சாப்பிட்டது, உடல் பாகங்களைப் புதைத்தது! (2)

நவம்பர் 25, 2023

சித்த மருத்துவர் பாலியல் சிகிச்சை கொடுத்ததுஓரின சேர்க்கையில் ஈடுபட்டது, நோயாளியைக் கொன்றது, மனித மாமிசம் சாப்பிட்டது, உடல் பாகங்களைப் புதைத்தது!  (2)

கேசவமூர்த்தி அசோக்ராஜை கொலை செய்தது; இதுகுறித்து குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில் சோழபுரம் போலீஸார் விசாரித்து வந்தனர்[1]. அப்பொழுது அவர் “ஏதோ” சிகிச்சைக்கு கும்பகோணம் சென்றது தெரிந்தது. இது பற்றிய விவரங்களை ஊடகங்கள் தெளிவாக வெளியிடவில்லை. இவரை கும்பகோணம் சோழபுரம் கிழக்குத் தெருவை சேர்ந்த சித்த மருத்துவர் கேசவமூர்த்தி என்பவர் ஓரினசேர்கைக்கு அழைத்து சென்று அப்போது ஏற்பட்ட தகராறில் வெட்டி கொலை செய்தார்[2] என்று தெரிய வந்தது. அவரது உடலை கேசவ மூர்த்தி தனது வீட்டில் புதைத்தார். போலீசார் அசோக்ராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்[3]. மேலும் அங்கு தோண்டும் போது மற்றொரு மனித தாடை எலும்பு கூடு சிக்கியது[4]. இதுபற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

13-11-2023 அன்று அசோக்ராஜ் சிகிச்சைப் பெற்றது, கொலையுண்டானது: இந்த சம்பவம் குறித்து போலீ ஸார் கூறியதாவது[5]: “கைது செய்யப்பட்டுள்ள கேசவமூர்த்தி, அந்தப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்டோருக்கு சுன்னத்செய்துள்ளார். அசோக் ராஜனுக்குஅண்மையில் செய்ததில், அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதுகுறித்து கேசவமூர்த்தியை தொடர்பு கொண்டு அசோக் ராஜன் கேட்டதற்கு, தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு வரும்போது தன்னிடம் வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு கேசவமூர்த்தி கூறியுள்ளார். அதன்படி, கடந்த 13-ம் தேதி கேசவமூர்த்தியை அசோக் ராஜன் சந்திக்கச் சென்றுள்ளார். அப்போது, தவறான சிகிச்சையால் அசோக் ராஜன் பாதிக்கப்பட்டதால், தான் போலி மருத்துவர் என்பது வெளியில் தெரிந்துவிடும் எனக் கருதி, அசோக் ராஜனை கொலை செய்ததாக கேசவமூர்த்தி கூறினார்,” இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்[6].

விசாரணையில் அசோக்ராஜை கொலை செய்ததை ஒப்புக் கொண்டது: இது குறித்து சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கேசவமூர்த்தியை கைது செய்து கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைந்தனர். கேசவமூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, வருகிற டிசம்பர் 4ஆம் தேதி திங்கட்கிழமை வரை நீதிமன்ற காவலுக்குட்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். அநிநிலையில், விசாரணையின்போது, தான் அசோக்ராஜைக் கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளான், மேலும், உடல் பாகங்கள் கொண்டு மருந்து தயாரித்ததை கூறியுள்ளான். எலும்பு பாகங்கள் புதைத்தாகச் சொன்னான். இதனால், போலீஸார் அவன் வீட்டில் தோண்டி பார்த்தனர். தொடர்ந்து அங்கே 3 அடி அளவிற்கு மட்டும் பள்ளம் தோண்டி பார்த்தபோது 30க்கும் மேற்பட்ட துண்டுகளாக விரல் அளவிலான எலும்புகள் கிடைத்தது[7]. அந்த எலும்புகள் பார்ப்பதற்கு ஒரு நாயின் மண்டை ஓடு மற்றும் அதன் எலும்புகள் போல இருந்தது. இதில் சேகரிக்கப்பட்ட எலும்புகள் மனித எலும்புகளா அல்லது முகமதுஅனஸ் உடல் பாகங்களா என்று அறிய ஆய்வகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர்[8]. பின்னர் தோண்டி எடுக்கப்பட்ட எலும்புகள், கேசவமூர்த்தி வீட்டில் இருந்த மருந்து மாத்திரைகள், மூலிகை பொடிகள், பெண்கள் பயன்படுத்தும் நகைகள், நைட்டி, ஆடைகள், பயன்படுத்தாத பொருட்களை 10க்கும் மேற்பட்ட பெட்டைகளில் போலீசார் எடுத்து சென்றனர்.

19-11-2023 அன்று அசோக்ராஜின் உடல் பாகங்கள் தோண்டி எடுத்தது: கடந்த 19ஆம் தேதி அசோக்ராஜின் உடல் பாகங்களைத் தோண்டி எடுக்கும் போது, அதில் மேலும் ஒரு மண்டை ஓடு கிடைத்துள்ளது[9]. அதனால் அது 2021ஆம் ஆண்டு மர்மமான முறையில் மாயமாகி இதுவரை கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருக்கும், கேசவமூர்த்தியின் மற்றொரு நண்பரான முகமது அனாஸ் உடையதாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது[10]. இருப்பினும் தடய அறிவியல்துறையினர் ஆய்வின் முடிவிற்கு பிறகே அது உறுதி செய்யப்படும்[11]. தற்போது வரை கேசவமூர்த்தி சத்தமில்லாமல் இரு கொலைகளை அரங்கேற்றி அது வெளியே தெரியாமல் மறைக்க, ஆடு வெட்டும் பெரிய கத்தியை கொண்டு உடலில் இருந்து தலையை துண்டித்தும், உடல் பாகங்கள் விரைவாக மண்னோடு மண்ணாவதற்காக தோலை உரித்தும், சதை பாகங்களை தனியாக வெட்டி எடுத்தும் புதைத்திருப்பது தெரிய வந்துள்ளது[12].

கத்திகள், பிளேடுகள், அரிவாள்கள் போன்ற உபகரணங்கள் கிடைத்தது: இதனை இவர் தனித்து தான் செய்தாரா? அல்லது பின்னணியில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், கேசவமூர்த்தியில் வீட்டில் இருந்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் கத்திகள், பிளேடுகள், அரிவாள்கள் போன்ற உபகரணங்களையும், நாட்டு மருந்து பொடிகள், மருந்து வகைகள், வீட்டில் வளர்த்த மூலிகை செடிகளையும் பறிமுதல் செய்து அதன் தன்மை, பயன்கள் குறித்து ஆய்வு செய்ய போலீசார் மருத்துவ ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்[13]. இதனிடையே கேசவமூர்த்தி பயன்படுத்திய டைரி ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பெயர்கள் இருந்ததால் இதில் யாரையேனும் கேசவமூர்த்தி கொலை செய்திருக்க கூடுமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[14].

சித்தாயுனானி போன்ற முறைகளைக் கடைப்பிடித்தானா?: மேலும், கொலை செய்யப்பட்ட அசோக் ராஜன் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டப்பட்டதில் சில உடல் பாகத்தை கேசவமூர்த்தி சமைத்து சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், “நரமாமிசம்” எப்படி சாப்பிட முடியும், ஒருவேளை அதை வைத்து, மருந்து தயாரிக்க முயன்றானா போன்ற கேள்விகளும் எழுகின்றன. சித்தா முறையில்லாமல் யுனானி போன்ற முறைகளில் பூச்சிகள், புழுக்கள், பறவைகள், விலங்குகள் ஏன் மனிதர்கள் முதலியவற்றின் சதை, ரத்தம் முதலியவை மருந்து தயாரிக்க உபயோகப் படுத்தப் படுவதாக உள்ளது. ஒருவேளை அம்முறைகளில் ஈடுபட்டான் என்ற கேள்வியும் எழுகிறது. கேசவமூர்த்தி இந்த இரண்டு கொலைகளை தான் செய்தாரா? அல்லது தனக்கு இணங்காத வேறு யாரையானும் இப்படி கொடூரமாக கொன்றுள்ளாரா என்பது முழுமையான விசாரணைக்கு பிறகே தெரியவரும். இந்நிலையில் நேற்று இரவு சம்பவ இடத்தை ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத், இன்று மீண்டும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து ஆய்வு செய்தார்.

கேசமூர்த்தியின் வீட்டில் தோண்டி ஆய்வு செயந்து: கும்பகோணம் அருகே சோழபுரத்தில் ஓரின சேர்க்கை விவகாரத்தில் ஒருவரை கொலை செய்து புதைத்த வழக்கில் கைதான கேசமூர்த்தியில் வீட்டில் தோண்டி ஆய்வு செய்த போது மற்றொரு தலை கிடைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன், ஆசிஸ் ராவத் முன்னிலையில் முதற்கட்டமாக வீட்டின் பின்பக்கம் உள்ள பகுதிகளை தோண்டும் பணி நடைபெறுகிறது. மேலும், தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் சோழா வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷித்ராவத் தலைமையில் திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர்சித்திக் முன்னிலையில் இன்று மாலை ஜேசிபி எந்திரம் மூலம் கேசவமூர்த்தியின் வீட்டை சுற்றி மீண்டும் தோண்ட தொடங்கி உள்ளனர்[15]. இதனால் இந்த கொலை வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது[16].

© வேதபிரகாஷ்

25-11-2023.


[1] புதியதலைமுறை, கும்பகோணம் | இளைஞரைக் கொலை செய்து வீட்டுக்குள்ளேயே புதைத்த சித்த வைத்தியர்சிக்கியது எப்படி?, PT WEB, Published on : 20 Nov 2023, 3:38 pm.

[2] https://www.puthiyathalaimurai.com/tamilnadu/kumbakonam-siddha-doctor-brutally-murdered-young-man

[3] ஐபிசி.தமிழ்நாடு, தன்பாலின உறவுக்கு மறுப்பு‘ – இளைஞரை துண்டு துண்டாக வெட்டி புதைத்த சித்த வைத்தியர்!, By Jiyath, அவம்பர் 20, 2023.

[4] https://ibctamilnadu.com/article/siddha-doctor-arrested-younster-murder-case-1700466369

[5] தமிழ்.இந்து, செய்திப்பிரிவு, கும்பகோணம் | இளைஞர் கொலை வழக்கில் கைதான சித்த வைத்தியர் வீட்டை சுற்றிலும் ஏராளமான எலும்புகள் கண்டெடுப்பு, Published : 22 Nov 2023 05:42 AM, Last Updated : 22 Nov 2023 05:42 AM.

[6] https://www.hindutamil.in/news/crime/1157269-bones-were-found-around-the-house-of-siddha-doctor-who-was-arrested-in-the-case-of-youth-murder.html

[7] தினகரன், வாலிபர்களை கொன்று உடலை சமைத்து சாப்பிட்ட விவகாரம் போலி சித்த மருத்துவர் வீட்டில் தோண்ட, தோண்ட எலும்புகள்: 10 பெட்டிகளில் போலீசார் எடுத்து சென்றனர், November 25, 2023, 1:16 am

[8] https://www.dinakaran.com/teenagers_killed_fakepsychiatrist_bones_10boxes_police/ – google_vignette

[9] தினத்தந்தி, சிகிச்சைக்கு வந்த இளைஞர் உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டில் சமாதி.. பிரபல டாக்டர் பகீர் காரியம், By தந்தி டிவி 20 நவம்பர் 2023 12:45 PM

[10] https://www.thanthitv.com/News/TamilNadu/the-body-of-the-young-man-who-came-for-treatment-was-cut-into-pieces-and-buried-at-home-227777

[11] இ.டிவி.பாரத், நாட்டு வைத்தியர் வீட்டில் தோண்ட தோண்ட எலும்பு கூடு..! மற்றொரு மண்டை ஓடு கிடைத்ததால் பதற்றம்!,

[12] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/thanjavur/skeleton-dug-up-from-the-siddha-vaidyar-house-who-was-arrested-in-the-youth-murder-case-near-kumbakonam/tamil-nadu20231124145055912912639

[13] காமதேனு, சிகிச்சைக்கு வந்தவர் கொலை! வீட்டைச் சுற்றி மனித எலும்புகள்சித்த வைத்தியரின் அதிர்ச்சி மறுபக்கம்!, Updated on : 22 Nov 2023, 3:15 pm

[14] https://kamadenu.hindutamil.in/crime-corner/human-bones-around-the-house-of-chitta-vaidyar-who-was-arrested-in-the-youth-murder

[15] மாலைமலர், சித்த வைத்தியர் வீட்டை மீண்டும் தோண்டும் போலீசார், By மாலை மலர், 24 நவம்பர் 2023, 3:32 PM.

[16] https://www.maalaimalar.com/news/district/police-re-excavate-siddha-vaidiyars-house-689114


மது, கஞ்சா, சிகெரெட், குட்கா முதலிய போதைகளிலிருந்து விடுபட தேவை மறுவாழ்வு இல்லங்களா, ஒழுக்கமா?

ஒக்ரோபர் 5, 2023

மது, கஞ்சா, சிகெரெட், குட்கா முதலிய போதைகளிலிருந்து விடுபட தேவை மறுவாழ்வு இல்லங்களா, ஒழுக்கமா?

மது, கஞ்சா, சிகெரெட், குட்கா இவ்விவகாரங்களில் முரண்பட்ட நிலை: புழல், கதிர்வேடில் உள்ள மதுபோதை மறுவாழ்வு மையத்தை, சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த சீமான் தமிழ்வேந்தன் என்பவர் நடத்தி வருகிறார். இங்கு 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மது, கஞ்சா, சிகெரெட், குட்கா உள்ளிட்ட பல்வேறு வகையிலான போதை பொருட்களுக்கு அடிமையானவர்கள் இங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்[1]. இதில் பல்வேறு ஊர்களில் இருந்து வந்து தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்[2]. ஒரு பக்கம் மது, கஞ்சா, சிகெரெட், குட்கா போன்றவை கிடைப்பது என்பது, மறுபக்கம் அவற்றை உட்கொள்வதால்  தீங்கு விளையும் என்பதையும் அவையெல்லாம் குற்றம் என்பதை அறியாமல் செய்வது போன்ற தோற்றத்தையும் உருவாக்குகிறது. குடியைப் பொறுத்த வரையில், அரசே விற்று வருவது தான். பிரச்சினை. ஆனால், இதையும் பெரிதாக எடுத்துக் கொள்வதாக தெரியவில்லை. இக்கால நவீன காலத்தில் நல்லது-கெட்டது சேர்ந்து இருப்பது, செல்வது, செயல்படுவது முரண்ப்ட்டதாக இருக்கிறது.

இத்தகைய சீரழிவுகள் எருகுவது ஏன்?: போதை மருந்து உட்கொள்ளுதல், அதனால் பாதிப்பு போன்றவை முன்னர், பெரிய பணக்காரர்கள், மேனாட்டு நாகரிகம்-கலச்சாரம் கொண்ட சமூகத்தினரிடம் இருந்தது என்ற நிலை மாறி 1980களில் ஏழைகள், குறிப்பாக சேரிகள் போன்றவற்றில் பரவியது. அப்பொழுதெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை எனலாம். ஏதோ குடித்துவிட்டு கிடக்கிறான் போதையில் விழுந்து இடக்கிறான் என்று கடந்து சென்று விடுவர். 1990களில் போதை மருந்து மேனாட்டு முறைகளில் கிடைக்க ஆரம்பித்த்து. 2000களில் பள்ளிகள்-கல்லூரிகள் என்றும் பரவி விட்டது. பிறகு, “ரேவ் பார்ட்டி” என்ற ரீதியில், குறிப்பிட்டல் எலைட் / பெரிய பணக்கார ஆண்-பெண்களிடம் இருந்தது. இப்பொழுது, கீழ்தட்டு மக்களையும் அடையும் நிலைக்கு வந்து விட்டது. இதனால், போதை, போதை மருந்து-பொருள் விநியோகம், வியாபாரம் என்று ஒரு நிலையிலும், போதையால் எழும் குற்றங்கள், அவற்றைக் கட்டுப் படுத்தும் நிலை என்றும் மாறிவிட்டது.

புழல் மறுவாழ்வு மையத்தின் மீது புகார்: இவர் தமிழகத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையங்களின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். 135 மறுவாழ்வு மையங்கள் இவ்வமைப்பின் / சங்கத்தின் கீழ் உறுப்பினராக செயல்பட்டு வருகின்றன. இவர் நடத்தி வரும் மையத்தில் மது, போதை பழக்கத்துக்கு அடிமையானோருக்கு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவர், மனோதத்டுவ நிபுணர், ஆலோசனையாலர்கள், செவிலியர் என்று பலர் வேலை செய்வதாகத் தெரிகிறது. இந்நிலையில், ஒரு நோயாளியை துன்புருத்துவதாக புகார் எழுந்தது. இதனால், அவரது உறவினர் அங்கு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த மணலியைச் சேர்ந்த மதன் என்பவரை பார்க்க, அவரது குடும்பத்தினரை அனுமதிக்கவில்லை என கூறப்படுகிறது. சந்தேகத்தின் படி, அக்கம்பக்கத்தினரிடம் விசாரித்த போது, அங்கு சிகிச்சை பெறும் நபர்களை அடித்து, துன்புறுத்தி, சூடு வைப்பதாக தெரிவித்துள்ளனர். தொடந்து வற்புருத்தியும் ாார்க்க அனுமதி அளிக்கப் படவில்லை.

மறுவாழ்வு மையசோதனை, துன்புருத்தல் உறுதி, நடவடிக்கை எடுக்கப் படல்: இது குறித்து, போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. உரிய அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கப் பணிக்கப் பட்டனர். எம்.கே.பி நகரைச் சேர்ந்த சிவகுமார், 50 என்பவர், அங்கு சிகிச்சை பெற்ற போது கை, கால்களில் சூடு போட்டு சித்ரவதை செய்த வீடியோ, சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் பரவியது[3]. தொடர் புகார்களை அடுத்து, அந்த சிகிச்சை மையத்தில், ஓய்வு பெற்ற நீதிபதி மணிவாசகம் மற்றும் மனநல சுகாதார துறை அதிகாரிகள் சோதனையிட்டு, விசாரணை நடத்தினர்[4]. இதை முன்னிட்டு, அங்கு போலீசார் வரவழைக்கப்பட்டிருந்தனர்[5]. மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த 34 பேரிடமும் தனித்தனியே விசாரணை நடந்தது[6]. அங்கு போதை மறுவாழ்வு சிகிச்சைக்கு வருவோர் துன்புறுத்தப்படுவது உறுதியானதை அடுத்து, அங்கிருந்த குடிநோயாளிகள், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்[7].

சீமான் கைது, மறுவாழ்வு மையத்திற்கு சீல்: இதைத்தொடர்ந்து, சோதனைகள் முடிந்த பிறகு, நீதிபதி தலைமையிலான குழுவினர் அந்த போதை மறுவாழ்வு மையத்திற்கு சீல் வைத்து, உரிமையாளர் சீமான் தமிழ் வேந்தனை கைது செய்து விசாரிக்கின்றனர்[8]. அப்படியென்றால், எப்படி மருத்துவம், போதை-மது போன்றவற்றிலிருந்து மறுவாழ்வு கொடுக்கும் ஆலோசகர்கள் முறையாக செயல்படவில்லை என்றும் தெரிகிறது. 11-வருடங்களாக, இவரது இயக்கம் செயல்பட்டு வருகிறது என்றால், இம்மறுவாழ்வு முறைகளில் மேன்பட்டு சீரமைத்த நிலையில் சிறந்திருக்க வேண்டும். ஆனால், ஏதோ “மூன்றா-தர”துன்புருத்தும் வழிகள் பின்பற்றப் பட்டிருப்பது திகைப்பாக இருக்கிறது. ஆகவே, இது, மறுவாழ்வு மையத்தின் தலைவர் அனுமதி அல்லது ஒப்புதல் இல்லாமல் நடந்தேறி இருக்க முடியாது. பிறகு, இதற்கு யாரோ பொறுபேற்க வேண்டிய நிலை உள்ளது.

மறுவாழ்வு மையத்தில் குற்றங்கள் நடைபெறுவதில்லையா?: 135 மறுவாழ்வு மையங்கள் இவ்வமைப்பின் / சங்கத்தின் கீழ் உறுப்பினராக செயல்பட்டு வருகின்றன. உயர்நீதிமன்றம் 2008ல் அனுமதியற்ற மறுவாழ்வு மையம் நடத்த முடியாது என்று தீரிப்பு அளித்த நிலையில், இத்தகைய மறுவாழ்வு மையங்கள் சேர்ந்து சங்கம் அமைத்து, பதிவு செய்து கொள்ள ஆரம்பித்தன. இதைப் பற்றிய விவரங்களை அத்தலைவரே விவரித்துள்ள வீடியோவும் இருக்கிறது[9]. மறுவாழ்வு மையத்தில் அடிப்பார்கள்-உதைப்பார்கள் என்று ஒருவர் சொல்வதாக சீமானே குறிப்பிட்டுள்ளதை கவனிக்கலாம். நோயாளிகளிடம் அன்பாக இருக்க வேண்டும், அவர்களை அடிக்கக் கூடாது, துன்புருத்தக் கூடாது என்றெல்லாம் பேசுவதையும் கவனிக்கலாம். குற்றங்களை நோய் என்று குறிப்பிடும் போக்கும் திகைப்படைவதாக இருக்கிறது. ஏனெனில், அத்தகைய சமாளிப்பு, சமசரம் முதலியவை “பிடோபைல்” போன்ற கற்றங்களையும் மறைக்க “நோய்” என்று கூறுவதால், குற்றங்களை மறைக்க முடியாது.

சமூகம் சீரழிவுகளிலிருந்து மீள வழி என்ன?: இந்தியா போன்ற கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிகம் மிக்க சமுதாயம் சிறிது-சிறிதாக மேனாட்டு கலாச்சாரத் தாக்கம் மற்றும் தாக்குதல்களால் பாதிக்கப் பட்டு வருவதை கவனித்து வருகிறோம். தனிமனித ஒழுக்கம், குடும்பம்,  சமூகம் என்று பலநிலைகளில் பாதிப்புகள் இருந்து வருகின்றன. இப்பொழுது, ஐரோப்பிய நாடுகளின் கலாச்சார ஈர்ப்புகளைத் தாண்டி, அமெரிக்க கலாச்சார மோகங்களில் இந்திய இளைஞர்கள் சிக்கியுள்ளனர். சினிமா-கிரிக்கெட் என்று ஆரம்பித்து அவை இணைந்து பல்கோடி வியாபாரங்களாக மாறிவிட்டப் பிறகு, அக்கலவைகள் பல்வித சீரழிவுகளாக மாறி, ப்ரவ ஆரம்பித்து விட்டன. அதன் விளைவுதான்.. மது, கஞ்சா, சிகெரெட், குட்கா, போதை மருந்து, விபச்சாரம், ……..சீரழிவுகள்……போதாகுறைக்கு பல்வித குற்றச் செயல்களும் இவற்ருடன் கலந்து விட்டன. பள்ளி-கல்லூரி-பல்கலை வளாகங்களிலேயே தலை விரித்தாடி வருகின்றன. அந்நிலையில் குடும்பங்கள் காக்கப் படவேண்டும் என்றால், நிச்சயமாக, ஒழுக்கம், கட்டுப்பாடு, பெற்றோரை மதித்தல், ஆன்மீகம், மதநெறிமுறைகள் என்று பின்பற்ற வேண்டிய அத்தியாவசியம் எழுகின்றது. அவி போற்றப் படாமால், எல்லாவற்றிற்கும் ஆலோசககர்கள், மனோதத்துவ நிபுணர்கள் என்றெல்லாம் வந்து ஒன்றையும் செய்து விடமுடியாது.

© வேதபிரகாஷ்

05-19-2023


[1]  தமிழ்.கெட்.லோகல்.ஆப், போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்ட 30பேர் மீட்பு, By ஜீவன், Oct 01, 2023, 16:10 IST

[2] https://tamil.getlokalapp.com/tamilnadu-news/thiruvallur/madhavaram/recovery-of-30-people-admitted-to-drug-rehabilitation-center-11614781

[3] தினத்தந்திடிவி, போதை மறுவாழ்வு மையத்தில் …..நோயாளிகளை அடித்து சித்ரவதை………அதிரடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள், October 1, 2023. 02.04 PM.

[4] https://www.thanthitv.com/News/TamilNadu/in-drug-rehabilitation-center-beating-and-torturing-patients-officials-took-action-216237

[5] தினத்தந்தி, நோயாளிகளுக்கு சூடு வைத்து சித்ரவதை போதை மறுவாழ்வு மையத்துக்கு சீல்உரிமையாளர் கைது, October 1, 2023. 10.03 a.m.

[6] https://www.dailythanthi.com/News/State/torture-drug-rehabilitation-center-sealed-by-keeping-patients-warm-owner-arrested-1063921

[7] தினமலர், புழல் போதை மறுவாழ்வு மையத்தில் சித்ரவதைக்கு ஆளான 34 பேர் மீட்பு, பதிவு செய்த நாள்: அக் 01,2023 05:01.

[8] https://m.dinamalar.com/detail-amp.php?id=3445574

[9] குடி போதை நோய்யையாளிகளை சுலபமாக குணப்படுத்தலாம் Dr. சீமான் தமிழ்வேந்தன், Dec 21, 2018, https://www.youtube.com/watch?v=C868qrXay-Q

அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகி விட்டது – சீமானின் பேச்சு, எதிர்ப்பு, கண்டனம் மற்றும் மிரட்டல் (1)

ஓகஸ்ட் 4, 2023

அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டதுசீமானின் பேச்சு, எதிர்ப்பு, கண்டனம் மற்றும் மிரட்டல் (1)

தமிழக அரசியல்வாதிகளின் முரண்பட்ட சித்தாந்தங்கள்: தேர்தல் வருகின்றது என்றால் அரசியல்வாதிகள் என்னவேண்டுமாலும், எப்படி வேண்டுமானாலும் பேசுவார்கள். ஒரு கொள்கைப் பிடிப்பற்ற, ஏன் கொள்கையற்ற, சித்தாந்த உதறல்களாகக் கூட பேச்சுகள் இருக்கும். கூட்டணி மயக்கம், போதை, பேரம் என்றெல்லாம் வந்து விட்டால், இப்பேச்சுகள் இன்னும் அதிகமாகி விடும். தமிழக, திராவிட, திராவிடத்துவ அரசியலில் பிரிவினைவாதம், திராவிடஸ்தான், திராவிடநாடு, தமிழ்நாடு, மாநில சுயயாட்சி, தமிழ் தேசியம், திராவிட தேசியம், மொழிபேசும் தேசிய இனங்கள், ஆரியன்,திராவிடன், வடுகண், வந்தேறி, குந்தேறி என்று விரிந்து கொண்டே போகும். மேனாட்டு பிரஹஸ்பதிகள் அவ்வப்பொழுது தங்களது தேவைக்கு ஏற்ப, இத்தகைய சித்தாந்தங்களை கருத்தியல், கருதுகோள், மாதிரி, உத்தேச வடிவம் என்ற ரீதியில் முன்வைப்பர், மற்றவர் மூலம் கருத்து பெற முயற்சிப்பர். பிறகு அவை தமக்கு உபயோகப் படும், லாபம் கிடைக்கும் என்றால், விஞ்ஞான முறையில் மெய்ப்பிக்கப் பட்டது என்று முலாம் பேசி  சுற்றில் விட்டு ஒத்திகைப் பார்ப்பர்.

மதஆதரவும், ஓட்டு வங்கியும், அரசியலும்: மணிப்பூர் கலவரத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் ஜூலை 30-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய சீமான்[1], “ஒவ்வொரு கலவரத்தின் பின்னணியிலும் பண வேட்டை இருக்கும். மணிப்பூர் கலவரத்திற்கும் அது தான் காரணம். ஆழ்ந்து பார்த்தால், மலைகளில், காடுகளில் வாழ்கிற பழங்குடி மக்கள் கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பா..விற்கு வாக்கு செலுத்த மாட்டார்கள். தரை தளத்தில் வாழும் மெய்த்தி இன மக்கள், இந்துத்துவ கோட்பாட்டை ஏற்கும் மக்களாக இருக்கிறார்கள். அதனால், அங்கே பழங்குடி இன மக்கள் சாவதைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை. நமக்கும் இது நடந்துள்ளது. ஒகி புயலில் மீன் பிடிக்கச் சென்ற 200-க்கும் மேற்பட்டோர் இறந்து போய்விட்டனர். வலிமை மிக்க கடற்படையை வைத்திருக்கும் நம் நாடு, அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று எண்ணவே இல்லை. மக்கள் போராடியும் எந்த மதிப்பும் அதற்கு தரவில்லை. கடைசியாக, ‘உயிரற்ற உடலையாவது ஒப்படையுங்கள், மரியாதையான நல்லடக்கம் செய்கிறோம்என்று கூட போராடினார்கள். அப்போது கண்டுகொள்ளவில்லை. அதற்கு காரணம், அவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள், அவர்கள் வாக்கு நமக்கு வரப்போவதில்லை என்பதால் கண்டுகொள்ளவில்லை.

திராவிட அரசியல், தேசிய அரசியல், கலவரங்கள்: சீமான் தொடர்ந்து பேசியது[2],தேச ஒற்றுமையை பேச வக்கற்ற, தகுதியற்றவர்கள் தான் திரும்ப திரும்ப தேச ஒற்றுமை பற்றி பேசுகிறார்கள். திடீரென இவர்கள் புனிதர்களாகிவிடுவார்கள். அதை நாம் நம்ப வேண்டும். குஜராத் கலவரத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்து பேசியவர்கள் தி.மு..வினர். இவர்கள் மணிப்பூர் கலவரத்தைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? 76-வது நாளில் பேசுகிறீர்கள். 76 நாளில் என்ன செய்தீர்கள்? தேர்தல் வருகிறது, அதனால் பேசுகிறீர்கள். அங்கு பாதிக்கப்படும் கிறிஸ்தவர்களை வைத்து, இங்குள்ள கிறிஸ்தவர்களிடம்உனக்காக பேசுகிறோம்என்பதை காட்டுவதற்காக பேசுகிறார்கள். நான் ஈழத்தைப் பற்றி பேசிய போது, ‘அரசியலுக்காக பேசுகிறார்கள்என்று கூறியவர்கள் தான், இன்று மணிப்பூர் கலவரத்தைப் பற்றி பேசுகிறார்கள். தேர்தல் ஆதாயத்திற்காக இவர்கள் பேசுகிறார்கள். ஆஊனா கட்டுச்சோறு கட்டிக்கிட்டு நடைபயணம் கிளம்பிவிடுகிறார்கள். குஜராத் மாடல் மாதிரி, திராவிட மாடல் மாதிரி நடைபயணம் ஓல்டு மாடல். ராகுல் காந்தி, நடையா நடந்தார், ஒன்னும் நடக்கல போய்ட்டார். 9 ஆண்டுகள் ஆட்சி செய்துவிட்டு இப்ப தான் என்ன பிரச்னை என்று கேட்க வருகிறார்கள். பிரச்னையே நீங்க தானே!

மதரீதியிலான ஓட்டு வங்கி நிரந்தரமல்ல?: சீமான் தொடர்ந்து பேசியது, மணிப்பூர் விவகாரத்தை நாம் பேசுவதால், நமக்கு அங்குள்ள மக்கள் ஓட்டுப் போடப்போவதில்லை. இங்குள்ள கிறிஸ்தவர்களும் நமக்கு ஓட்டுப் போடப் போவதில்லை. நாம நினைத்துக் கொண்டிருக்கிறாமே், இஸ்லாமையும், கிறிஸ்துவத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று. ஆனால் அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது[3]. சும்மா தேவாலயத்திற்கு போய்தேவனே வாரீர்.. வாரீர்னு,’ பாடிட்டு, எவனிடமோ நாட்டை கொடுத்துவிட்டார்கள்[4]. இந்த நாட்டில் நடந்த அநீதிக்கு பெரிய பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தான். தொடர்ச்சியாக பல ஆண்டுகுள் 18 சதவீதம் வாக்குகளை தி.மு..வுக்கும், காங்கிரஸிற்கும் போட்டு போட்டு நாட்டை தெருவில் போட்டவர்கள் இவர்கள் தான். சலிக்க முடியாத ஊழல், லஞ்சம், சீர்கேடான நிர்வாகம், காரணம் இவர்கள் தான். இவர்கள் பாவம் கேட்கிறார்கள். பெரும்பாவமே அவர்கள் தான், அவர்களுக்கு எப்படி மன்னிப்பு கிடைக்கும். இன்னும் பாருங்கள், இவர்கள் தான் எங்களை பாதுகாப்பார்கள் என்று நம்புகிறார்கள். இஸ்லாமியர்களுக்கு தி.மு. தான் பாதுகாப்பு. ஆமாம், சிறையில் வைத்து பல ஆண்டுகளாக பாதுகாப்பது எவ்வளவு பெரிய பாதுகாப்பு? மீண்டும் இதே இஸ்லாமியர்களிடம் அவர்கள் ஓட்டு கேட்பார்கள். இந்த முறையும் அதே பொய்யை சொல்லி ஓட்டு கேட்பார்கள்[5]. நீங்கள் அவவர்களை விடுதலை செய்யுங்கள், நாம் தமிழர் கட்சியும் உங்களுக்கு வாக்களிக்கும்,என்று அந்த ஆர்பாட்டத்தில் சீமான் பேசினார்[6].

சீமான் பேசிற்கு ஊடகங்கள் இப்பொழுது அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது: சீமான் பேசும் பேச்சுகளில் பெரும்பாலாக லாஜிக், விசயம் இருக்கும் என்பது போல இருக்கும். இருப்பினும், சில நேரங்களில் தாராளமாக தமாஷான பேச்சு போல சிலவற்றை எடுத்து விடுவார். அந்த பேச்சுகளில் உள்நோக்கம் இருக்கிறதா-இல்லையா என்பது ஆராய வேண்டிய நிலையில் தான் உளளது. போதாகுறைக்கு யூ-டியூபாக மாறும் அல்லது சுற்றுக்கு வரும் பேச்சுகளில் உண்மைத் தன்மை 30-50% கூட இருப்பதில்லை. ஒரு சிறிய விசயம் கிடைத்தால், அதை ஊதி பெரிதாக்கி, தமக்குத் தான் எல்லாம் தெரியும் என்ற ரீதியில், வீடியோக்கள் தயாரித்து சுற்றில் விடுகின்றனர். பொழுது போக வேண்டும் என்று ஆயிரக்கணக்கில் மக்கள் பார்க்கின்றனர். அவர்களுக்கு உண்மை, உண்மைத் தன்மை, அதாரம் பற்றியெல்லாம் கவலையில்லை. சில நேரங்களில் அரசியல், வெறுப்புப் பேச்சு, காழ்ப்பு-வெறுப்பு போன்றவை சேரும் பொழுது விப்ரீதமாகிறது. எல்லா பேச்சுகளையும், எல்லோரும், ஒரே மாதிரியாக எடுத்துக் கொள்வ்தில்லை முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சமூக ஊடக பதிவுகளை வைத்து செய்திகளைத் தயாரிப்பது என்பது இக்கால செய்தி தயாரிப்பு முறையாக உள்ளது. அவ்விதத்தில், சீமான் பேசிற்கு ஊடகங்கள் இப்பொழுது அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளன என்று தெரிகிறது.

இஸ்லாமையும், கிறிஸ்துவத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள்  –ஜவாஹிருல்லா கண்டனம்: இந்த ஆர்ப்பட்டத்தில்,இஸ்லாமையும், கிறிஸ்துவத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று. ஆனால் அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது.” என்று சீமான் பேசியது தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையானது. .. பொதுச் செயலாளர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்ததோடு சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், “இந்த கயமைத்தனமான பேச்சு வன்மையான கண்டனத்துக்கு உரியது. தன் கட்சிக்கு வாக்களிக்காத காரணத்தினாலேயே கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் சாத்தானின் பிள்ளைகள் என்று வர்ணிப்பது அநாகரிகமானது, அருவருப்பானது, என்பதோடு அரசியல் நேர்மையற்ற செயலுமாகும். இதை வன்மையாக கண்டிக்கிறோம்,” என்று ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்தார்.

© வேதபிரகாஷ்

04-08-2023


[1] தமிழ்.ஒன்.இந்தியா, காலை காட்டி சொன்னஅந்தவார்த்தை.. சீமான் அரசியலுக்கு என்னாச்சு? கொதித்து போன இஸ்லாமியர்கள்! திடுக், By Shyamsundar I Published: Thursday, August 3, 2023, 14:20 [IST]

[2] https://tamil.oneindia.com/news/chennai/why-naam-tamilar-party-seeman-attack-muslims-and-christians-all-of-a-sudden-526569.html

[3] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Seeman Speech: ‘இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சாத்தானின் குழந்தைகள்சீமான் பகீர் பேச்சு!  , Stalin Navaneethakrishnan • HT Tamil, Jul 31, 2023 09:21 AM IST

[4] https://tamil.hindustantimes.com/tamilnadu/ntk-chief-coordinator-seeman-talks-about-muslims-and-christians-131690773683412.html

[5] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், சாத்தானின் குழந்தைகள் என பேசியது ஏன்? சீமான் விளக்கம், Written by WebDesk, August 3, 2023 01:18 IST.

[6] https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-electricity-employees-have-done-electricity-calculations-without-going-to-homes-734464/

திராவிட மேடைப் பேச்சாளர்களின் நாரசார அநாகரீக வார்த்தைப் பிரயோகம், பெண்மையைத் தூற்றும் போக்கு, மரத்துப் போன அல்லது சொரணையற்ற வசனங்கள் ஏற்றுக் கொள்ளப் படும் விதம்!

ஒக்ரோபர் 28, 2022

திராவிட மேடைப் பேச்சாளர்களின் நாரசார அநாகரீக வார்த்தைப் பிரயோகம், பெண்மையைத் தூற்றும் போக்கு, மரத்துப் போன அல்லது சொரணையற்ற வசனங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் விதம்!

திராவிட மேடைகளில், திராவிட பாரம்பரியங்களில் இப்பேச்சுகள் எல்லாம் சகஜமப்பா தான்: திமுக மேடைப் பேச்சாளிகள் 1960களிலிருந்து, இப்பொழுது வரை ஆபாசமாக, கொச்சையாக, மோசமாக பேசிவருவது ஒன்றும் புதியதல்ல. இரட்டை அர்த்தங்களில், பொருட்களில், சைகைகளில் பேசுவது-பாடுவதும் திராவிட மேடைகளில் சகஜமானதே. கவிதை நடையில், யதுகை-மோனைகளுடன், சில நேரங்களில் பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும் கூட அத்தகைய பேச்சுகளைப் பேசுவது வழக்கமே. பெரியார் முதல் அண்ணன் வரை, அண்ணா தொடர்ந்து தம்பி வரை, அறிஞர் முதல் கலைஞர் வரை இதெல்லாம் சகஜமப்பா என்று தான் ஓடிக் கொண்டிருக்கின்றன. இப்பொழுது இந்த சாதிக உருவாகிருப்பதில் என்ற கழக சாதனையும் குறைந்து வி,டப் போவதில்லை. பிறகு, கொஞ்சம் நாகரிகம் கருதி, குறைத்துக் கொண்டாலும், வழக்கமான வார்த்தைகள் வெளிவந்து விடும். இப்பொழுது இதையெல்லாம் 60-70 வயதானவர்களுக்குத் தான் தெரியும். மற்றவர்கள் மறந்திருப்பார்கள்.

அநாகரிகமான, ஒழுங்கீன பேச்சாளர்கள் திமுகவில் உருவாகுவது எப்படி?: திமுக நிர்வாகி ஒருவர் பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்கு குஷ்பு  கண்டனம் தெரிவித்திருந்தார்[1].  இந்நிலையில், இச்சம்பவத்திற்கு திமுக துணை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி வருத்தம் தெரிவித்துள்ளார்[2]. திமுகவை சேர்ந்த நிர்வாகி ஒருவர் –  பிரபல பேச்சாளரான சைதை சாதிக் பொதுமேடையில் பெண்கள் குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது[3].  விமர்சனங்களும் எழுந்துள்ளன[4]. உண்மையில் திராவிட மாடலில், இந்த திராவிடியன் ஸ்டாக்குகள் மாறிவிட்டன என்றால், இத்தகைய ஒழுன்கீனமான, கொச்சையான, தரமில்லாத பேச்சுகள் வராது, வந்திருக்காது. ஆனால், ஊக்குவிப்பதால் தான், தொடர்ந்து அத்தகைய பேச்சாளர்கள் வளர்ந்து . வளார்க்கப் பட்டு வருகிறார்கள்.

ஆர்.கே.நகரில் திமுக பொதுக்கூட்டமும், சாதிக் பேசியதும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2வது முறையாக திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து சென்னை ஆர்.கே.நகரில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் உரையாற்றி திமுக பேச்சாளர் சைதை சாதிக், பாஜகவில் 4 நடிகைகள் இருக்கிறார்கள் என்று குஷ்பு, நமிதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோரை குறிப்பிட்டு ஒருமையில் பேசினார்[5]. “நாங்கள் வட சென்னையில் கட்சியை வளர்த்தோம். அந்த காலத்திலிருந்து அண்ணன் சீதாபதியில் இருந்து, டி.ஆர்.பாலுவிலிருந்து, பலராமனில் இருந்து, இளைய அருணா வரை திமுகவில் வளர்த்து உள்ளார். இன்னும் வளர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், பாஜகவில் இருக்கும் தலைவர்களை பொறுத்தவரை 4 பேருமே ****.” என்று ஆங்கிலத்தில் தவறான அர்த்தம் தரும் வார்த்தையை பயன்படுத்தினார்[6].  “இந்தியா டுடே” இதை வெளியிட்டுள்ளது[7]. சமீபத்தில் பெண்ணை “ஐட்டம்” என்று ஒரு தொழிலதிபர் சொன்னதற்கு, மும்பை நீதிமன்றம் ஒன்றரை ஆண்டு சிறைத்தண்டனை அளித்துள்ளது. ஆனால், இங்கோ மேடையில் ஒருவர் பேசுகிறார், வீடியோ சுற்றில் உள்ளது. சட்டப் படி எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.

அமித் ஷா தலையில் மயிர் முளைத்தாலும் முளைக்கும், ஆனால், தமிழகத்தில்………: தொடர்ந்து ஆதிக், “குஷ்பு தாமரை மலர்ந்தே தீரும் என்று தலை மேல் கையை உயர்த்தி சொல்கிறார்.” என்று ஒருமையில் பேசிய சாதிக், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தலைமுடி பற்றியும், “அமித் ஷா தலையில் மயிர் முளைத்தாலும் முளைக்கும், ஆனால், தமிழகத்தில்……….,” என விமர்சித்து பேசியுள்ளார். இதனை தொடர்ந்து குஷ்பு திமுகவில் இருக்கும்போது அவரை வைத்து இளைய அருணா கூட்டம் கூட்டியதை இரட்டை அர்த்தத்தில் சைதை சாதிக் பேச அங்கு சிரிப்பலை எழுந்தது. சுதாரித்துக்கொண்ட அவர் நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை, வம்பில் மாட்டிவிடாதீர்கள் என்று கூறி அங்கிருந்தவர்களை பார்த்து சிரித்தார். அக்டோபர் 4ஆம் தேதி, 2022 அன்று, திமுக கட்சிக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வார்த்தைகள் அல்லது செயலில் ஈடுபடும் கட்சித் தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்[8]. இது ராஜா முதல் சாதிக் வரை அனைவருக்கும் பொறுந்தும் என திமுகவினருக்குத் தெரிந்திருக்கும்[9]..

குஷ்பு எதிர்ப்புத் தெரிவித்தது: இந்நிலையில், நடிகை குஷ்பு இது தொடர்பாக தனது எதிர்ப்பை பதிவு செய்தார்[10]. ட்விட்டரில் அவர், ஆண்கள் பெண்களை துஷ்பிரயோகம் செய்தால், அது அவர்கள் வளர்த்த விதமான வளர்ப்பையும், அவர்கள் வளர்ந்த நச்சு சூழலையும் காட்டுகிறது[11]. இந்த ஆண்கள் ஒரு பெண்ணின் கருப்பையை அவமதிக்கிறார்கள்[12]. அத்தகைய ஆண்கள் தங்களை #கலைஞரின் பின்பற்றுபவர்கள் என்று அழைக்கிறார்கள்[13]. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் இதுதான் புதிய திராவிடமா” என்று கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், கனிமொழியையும் அவர் டேக் செய்திருந்தார். டுவிட்டரில் இது பற்றி நூற்றுக்கணக்கில் கருத்துகள் பதிவாகின. பொதுவாக அவை திமுகவினரை விமர்சித்தன.

கனிமொழி மன்னிப்புக் கேட்டது: இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மன்னிப்பு கேட்டுள்ள கனிமொழி, ‘ஒரு பெண்ணாகவும், மனிதனாகவும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். யார் செய்தாலும், சொல்லப்பட்ட இடம் அல்லது அவர்கள் கடைபிடிக்கும் கட்சி எதுவாக இருந்தாலும் இதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. திமுக இதை பொறுத்துக்கொள்ளாது. எனது தலைவர் ஸ்டாலினின் காரணமாக இச்சம்பவத்திற்கு என்னால் வெளிப்படையாக மன்னிப்புக் கோர முடியும்’ என பதிவிட்டுள்ளார். இந்நிலையில்,  வருத்தம் தெரிவித்த கனிமொழிக்கு குஷ்பூ நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மிக்க நன்றி கனி. உங்கள் நிலைப்பாட்டையும் ஆதரவையும் உண்மையிலேயே பாராட்டுகிறேன். ஆனால் நீங்கள்  பெண்களின் கண்ணியம் மற்றும் சுயமரியாதைக்காக எப்போதும் துணை நிற்கும் ஒருவராக இருந்திருக்கிறீர்கள்” என பாராட்டியுள்ளார்.

திராவிட மேடைப் பேச்சாளர்களின் நாரசார அநாகரீக வார்த்தைப் பிரயோகம், பெண்மையைத் தூற்றும் போக்கு, மரத்துப் போன அல்லது சொரணையற்ற வசனங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் விதம்: இதை மனோதத்துவ ரீதியில் அலசினால், தொடர்ந்து ஒரு செயலைச் செய்து கொண்டிருந்தால், அது கெட்டதாக இருந்தாலும், யாரும் தடுக்காமல், கண்டிக்காமல் இருந்தால், அச்செயல் ஏற்றுக் கொள்ளப் படும் செயலாகி விடும்[14]. உதாரணத்திற்கு, பேரூந்துகளில் படிகட்டுகளில் பிரயாணம் செய்வது போன்றவை. அதே போல, பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலை மாணவர்களே, கெட்ட வார்த்தைகளை சகஜமாக உபயோகப் படுத்தி வருகிறார்கள்.  மாணவிகளும், பெண்களும் கூட அவ்வாறே பேசி வருவதை பார்க்கலாம். ஒரு நிலையில் அது “புதிய நாகரிக” அடையாளமாகக் கூட தகவமைக்கப் படுகிறது. ஆனால், நிச்சயமாக அவை சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டவையோ, அங்கீகரிக்கப் பட்டவையோ கிடையாது. “மாப் மென்டாலிடி” போன்ற கூட்டமாக சேரும் போது, அத்தகைய மீறல்கள் ஏற்படுகின்றன. இவர்களே பல நேரங்களில், நிலைகளில் இரட்டை வேடம் போடுவதை கவனிக்கலாம்.

திராவிட பாரம்பரிய கெட்ட வார்த்தை பேச்சுகள்: ஆனால், திராவிடக் கட்சி மேடைப் பேச்சு பாரம்பரியத்தில், அத்தகைய அசிங்கமான-ஆபாசப் பேச்சுகள் கடந்த ஒரு நூற்றாண்டாக சாதாரணமாகி விட்டது[15]. சில கெட்ட வார்த்தைகள் பிரயோகிப்பாதை ரசிக்கவும் செய்கின்றனர். அதனால், அவை ஊக்குவிக்கப் பட்டு, அத்தகைய பேச்சாளர்கள் தயார் செய்யப் படுகிறார்கள். அதனால், மரத்துப் போன நிலை அதாவது, ஏற்றுக் கொண்ட நிலையில் அங்கீகாரம் கிடைத்ததாகி விடுகிறது. திராவிட கழகத்தினர் பேசும் பொழுது,பெண்கள் அங்கு நிற்கக் கூட முடியாமல், காதுகளை ஒப்பித்திக் கொண்டு ஓடிய நிலையையும் தமிழகத்தில், ஏன் சென்னையிலேயே பலர் பார்த்திருக்ககலாம். இப்பொழுது, விழிப்புணர்வு ஏர்பட்டுள்ளதால், பொது கூட்டங்களில் அத்தகைய நாரசாரத்தைக் குறைத்துக் கொன்டுள்ளார்கள். ஆகவே, இத்தகைய மனப்பாங்கு மாற வேண்டும். ஏனெனில், இதுவும் வார்த்தை தீவிரவாதம், பேச்சு பயங்கரவாதம் என்றாகி விடும். “தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு….,” என்பது தமிழர்களுக்கு, திராவிடர்களுக்கு,திராவிடத்துவவாதிகளுக்கு, திராவிட ஸ்டாக்கிஸ்டுகளுக்கு, திராவிட மாடல் பேச்சாளர்களுக்குத் தெரிந்திருக்கும்.

© வேதபிரகாஷ்

28-10-2022.


[1] தமிழ்.நியூஸ்.18, பெண்கள் குறித்து இழிவாக பேசிய திமுகவினர்குஷ்பூ முறையீடுமன்னிப்புக் கேட்ட கனிமொழி, Published by:Murugesh M, First published: October 27, 2022, 18:12 IST, LAST UPDATED : OCTOBER 27, 2022, 19:49 IST.

[2] https://tamil.news18.com/news/tamil-nadu/kanimozhi-apologies-to-bjp-kusboo-for-dmk-cadre-speech-826091.html

[3] தினத்தந்தி, குஷ்பு குறித்து திமுக நிர்வாகி ஆபாச பேச்சுமன்னிப்பு கேட்ட கனிமொழி எம்பி , By தந்தி டிவி 28 அக்டோபர் 2022 7:35 AM.

[4] https://www.thanthitv.com/latest-news/kanimozhi-apologize-kushboo-tweet-dmk-meeting-145059

[5] தமிழ்.ஒன்.இந்தியா, டபுள் மீனிங்”.. பாஜகவில் 4 நடிகைகள்.. திமுக பேச்சாளரால் குஷ்புவிடம் மன்னிப்பு கேட்ட கனிமொழி,  By Noorul Ahamed Jahaber Ali, Updated: Thursday, October 27, 2022, 22:31. IST.

[6] https://tamil.oneindia.com/news/chennai/kanimozhi-apologises-kushbu-for-dmk-executives-speech-482520.html

[7] While addressing a public meeting, Sadiq said, “All four leaders are items. Khushbu says that lotus will bloom in Tamil Nadu. I say that even hair will grow back in Amit Shah’s head, but lotus has no chance of blooming in Tamil Nadu.” He further said, “Do you all know how many times my brother Ilaya Aruna did Kushbu? I mean he had done meetings with her when she was in DMK. Nearly six times, he took Kushbu and had meetings in RA Puram.”

https://www.indiatoday.in/india/story/misinterpreted-says-dmk-leader-saidai-sadiq-apologises-derogatory-remarks-bjp-leader-khushbu-2290428-2022-10-28

[8] பிபிசி.தமிழ், குஷ்புவிடம் கனிமொழி கேட்ட மன்னிப்புதிமுக பிரமுகரின் சர்ச்சை பேச்சு விவகாரத்தில் நடந்தது என்ன?, 27 அக்டோபர் 2022.

[9] https://www.bbc.com/tamil/india-63416365

[10] தினமலர், குஷ்பு பற்றி தரக்குறைவாக பேச்சு: மன்னிப்பு கேட்டார் கனிமொழி, Added : அக் 28, 2022  07:37.

[11] https://www.dinamalar.com/news_detail.asp?id=3156293

[12] தமிழ்.ஏசியாநெட்.லைவ், ஆபாசமாக பேசிய திமுக பேச்சாளர்.. கண்டனம் தெரிவித்த குஷ்பு.. மன்னிப்பு கேட்ட கனிமொழி.. நடந்தது என்ன?, vinoth kumar, First Published Oct 28, 2022, 7:19 AM IST,

Last Updated Oct 28, 2022, 7:21 AM IST

[13] https://tamil.asianetnews.com/politics/dmk-cadre-controversy-speech-kanimozhi-apologies-to-bjp-kushboo-rkfx1u

[14]   திரைப் படங்களில் இத்தகைய ஒழிங்கீனங்கள் நாகரிகமாக அல்லது ஏதோ ஏற்றுக் கொள்ள்ப் பட்டவை போல காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதனை, மக்கள் ரசிக்கும் வரையில் சென்றடைந்து உள்ளன.

[15]  இது பெரியார் முதல் இக்காலம் வரையில் காணலாம்…….உடன் பிறவா சகோதரர்களே, ரத்தத்தின் ரத்தமே, போன்றவை உதாரணத்திற்கு சொல்லலாம்.

தெய்வத்தின் சொந்த தேசத்தில், அதிகம் எழுத்தறிவு கொண்ட மாநிலத்தில் நிர்வாண பூஜை, நரபலி முதலியன குரூர குற்றங்கள் எப்படி நடக்கின்றன – தீர்வு என்ன? (4)

ஒக்ரோபர் 15, 2022

தெய்வத்தின் சொந்த தேசத்தில், அதிகம் எழுத்தறிவு கொண்ட மாநிலத்தில் நிர்வாண பூஜை, நரபலி முதலியன குரூர குற்றங்கள் எப்படி நடக்கின்றன – தீர்வு என்ன? (4)

கேரள அரசு மாந்திரீக நரபலி நிபுணன் பைத்தியம் என்றது: அரசின் மெத்தனத்தால் தான் இத்தகைய குற்றங்கள் நடந்துள்ளன, என்று நீதிமன்றம் முதல் மற்ற பொறுப்புள்ளவர்கள் வெளிப்படையாக சொல்ல ஆரம்பித்துள்ளதால், ஆளும் மார்க்சீய அம்யூனிஸ்ட் ஆட்சி, இதனை திசைத் திருப்பி, அமுக்கி வாசிக்க முயல்கிறது. முக்கிய குற்றவாளி ஒரு பைத்தியம், மனோநல வியாதி கொண்டவன், என்றெல்லாம் சித்தரிக்கப் பட்டு வருகிறான். இறகு, அதே காரணத்திற்காக அவன் குற்றத்திலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம். இதனால், அதே முறையில்[1], “உண்மையில் மனநிலை சரியில்லாதவர்களால் தான் இப்படி செய்ய முடியும். இது நவீன சமுதாயத்திற்கு சவாலாக உள்ளது. இதுபோன்ற தவறான எண்ணங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, அனைத்திலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இந்த தீமையை எதிர்த்துப் போராட வேண்டும்,” என்று முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது[2]. இவ்விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து கேரள மாநில காவல்துறை உத்தரவிட்டுள்ளது[3]. துணை ஆணையர் சசிதரன் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது[4].

கேரளாவும் ஆபாசப் படங்களும்: ஆபாசப் படம் / போர்ன் வீடியோ எடுப்பது, முதலியவை பல்லாண்டுகளாக கேரளாவில் நடந்து வருகின்றன என்று செய்திகள் மூலம் அறியப் படுகிறது. கேரள திரைப்படங்களே முன்பு 1960-70களில் பிரபலமாக இருந்தன. அத்தகைய காட்சிகள் வரும் என்று தியேட்டர்களுக்கு செல்லும் வழக்கமும் இருந்தது. பிறகு 1980களில் வீடியோ கேசட், சிடி என்று தொழிற்நுட்பமும் மாறி விட்டது. பிறகு இன்டெர்நெட் வந்ததிலிருந்து, செல்போன் போன்றவற்றால், தனிநபர் விருப்பங்களுக்கு ஏற்றபடி மாறின, மாறி விட்டன.  கேரளாவில் இதைப் பற்றிய செய்திகள் இன்றும் வரத்தான் செய்கிறது, சரிதா நாயர் விவகாரத்திலும் அப்பிரச்சினை உள்ளது. உதாரணத்திற்கு, இச்செய்தி கொடுக்கப் படுகிறது. கேரளாவில் 13 வயது சிறுமி ஒருவர், அவருடைய அண்ணனால் கர்ப்பமாகியுள்ளார். வயிற்றுவலி என சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றபோதுதான் 30 வார கர்ப்பமாக இருக்கிறார் என்பதே தெரியவந்துள்ளது[5]. இணையதளத்தில் ஆபாசப் படங்கள் எல்லா வயதினருக்கும் எளிதில் கிடைத்துவிடுகின்றன, இதனால், சமூக ஊடகங்கள் கட்டுப்படுத்தப் பட வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுருத்தியது.

கேரளாவில் சிறுவர், சிறுமியரின் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய விவகாரம்: கேரளாவில் சிறுவர், சிறுமியரின் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய 21 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்[6]. அவர்களிடம் இருந்து லேப்டாப்,  செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன[7]. கேரளாவில்  சமீப காலமாக வாட்ஸ்  அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் சிறுவர், சிறுமிகளின் ஆபாச   வீடியோக்கள் பரவி வருவதாக போலீசுக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இது   தொடர்பாக சர்வதேச  அளவிலும் புகார்கள் உள்ளன. சர்வதேச போலீசான   இன்டர்போலுக்கும் புகார்கள் வந்துள்ளன.இதையடுத்து சிறுவர், சிறுமியரின் ஆபாச வீடியோக்கள் வெளியிடுவதை தடுக்க இன்டர்போல் அழைப்பு  விடுத்துள்ளது. இதன்படி திருவனந்தபுரம்  சரக ஏடிஜிபி மனோஜ் ஆப்ரகாம்  தலைமையில் ‘பி-ஹண்ட்’ என்ற பெயரில்  ஒரு தனிப்படை  அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் கேரளா முழுவதும் 29 இடங்களில்  அதிரடி சோதனை நடத்தினர்.  இதில் சிறுவர், சிறுமியர் ஆபாச படங்களை பரப்பிய 21  பேர் கைது  செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்த லேப்டாப், செல்போன்கள், ஹார்ட்  டிஸ்க்,  யுஎஸ்பி டிரைவ் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. இதுகுறித்து ஏடிஜிபி   மனோஜ் ஆப்ரகாம் கூறியது: “சிறுவர், சிறுமியர் ஆபாச வீடியோ பரப்புகிறவர்களுக்கு 5 வருட சிறை தண்டனையும், 10 லட்சம் அபராதமும்  விதிக்கப்படும். பிஹண்ட் சோதனை மேலும் தீவிரப்படுத்தப்படும். கேரளா முழுவதும் 84 பேர் தீவிரமாக  கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். விரைவில்  மேலும் பலர் கைது  செய்யப்படுவார்கள். பல வாட்ஸ் அப், பேஸ்புக்  குரூப்புகள் கண்காணிக்கப்பட்டு  வருகின்றன,” இவ்வாறு  அவர் கூறினார்.

கேரள போர்ன், மாந்திரீகம், கொலை எல்லாம் திட்டமிட்டு நடக்கிறதா?: ஆபாசப் படங்கள் எடுக்க பெண்கள் தேவை, அதற்காக முறை தவறிய பெண்கள், அத்தகைய ஆண்களின் தொடர்புகளில் இருப்பார்கள். இது ஒரு “செக்சஸ்” என்பார்கள். அரசியல், சட்டம்-ஒழுங்கு அமூல் படுத்துகிறவர்களின் மறைமுக ஆதரவு என்றெல்லாம் இருந்து விட்டால், சாதாரண மக்கள் ஒன்றும் செய்ய முடியாது. பெரும்பாலான விவகாரங்கள், தெரியாமல், ரகசியமாகவே நடந்து கொன்டு இருக்கும். தினம் தினம் வேலை செய்து, வாழ்க்கை நடத்தும் மக்கள் இவற்றைப் பற்றி கவலைப் பட மாட்டார்கள், அதற்கு அவர்களுக்கு நேரமும் இல்லை, இருக்காது. ஆக, ஒருவேளை சம்பந்தப் பட்ட பெண்கள் ஏதோ காரணங்களுக்காக நச்சரித்துக் கொண்டே இருந்தால், ஆண்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு, எல்லைகளைக் கடக்கும் போது, தீர்த்துக் கட்டி விடலாம் என்ற முடிவுக்கும் வரலாம். அந்நிலையில், இத்தகைய பண ஆசை பிடித்த ஆட்கள் கிடைக்கும் போது, ஒரே கல்லால், இரு மாங்காய் அடிக்கும் விதத்தில், நரபலியும் கொடுத்து, பொஇரச்சினை செய்யும் பெண்ணையும் தீர்த்து கட்டுவார்களோ என்னமோ? இதெல்லாம் மற்றவர்களுக்கு தேவையில்லாத விசயங்கள். இருப்பினும், போலீஸார் அவ்வாறெல்லாம் கூட விசாரணை செய்யலாம். சாதாரண மக்கள் கடவுளை நம்பிக்கொண்டு, தெய்வ நம்பிக்கையுன், நிம்மதியாக வாழ்ந்தாலே போதும்.

தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வருபவனை சைக்கோ, மனநோயாளி, வக்கிரம் படித்தவன், அதனால் அப்படி செய்தான், செய்வான் என்று அமைதியாகி விடமுடியாது: அதிக படிப்பறிவு கொண்ட மாநிலம், முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள், மெத்தப் படித்தவர்கள், இந்திய அரசியலில் தொடர்ந்து தாக்கத்தை ஏர்படுத்தி வருகிறவர்கள், எல்லா துறைகளிலும், நிறுவனங்களிலும், இடங்களிலும் இருப்பவர்கள் என்றெல்லாம் இம்மாநிலத்தவர்கள் கருதப் பட்டு வருகிறார்கள். மதம், ஜாதி, சித்தாந்தம் போன்றவற்றால் வேறுபட்டிருந்தாலும், மலையாளத்தவர் என்று ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்று மற்ற மாநிலத்தவர்களால் அறியப் பட்டு வருகிறார்கள். அந்நிலையில், கேரளாவில் தொடர்ந்து இத்தகைய, குறிப்பாக பாலியல், செக்ஸ், காமம், கற்பழிப்பு, தகாத உறவுகள் என்று வக்கிரங்களாக, குற்றங்களாக, ஏன் கொலைகளாகக் கூட மாறி வருவதை பற்பல வழக்குகளில் தெரிந்து வருகிறது. அபயா கொலை, ஐஸ்கிரீம் பார்லர் செக்ஸ், மூலக்கல் பிஷப் கற்பழிப்பு என்று சமீபத்தைய விவகாரங்கள் அறியப் பட்டவையாக இருக்கின்றன. அந்த பட்டியலில் இதுவும் சேரலாம். கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப் படலாம். ஆனால், அத்தகைய சமூக சீரழிவுகள், வக்கிரங்கள், மனப்பாங்குகள் சட்டமீறல்கள் முறையாக ஆராயப் பட வேண்டியுள்ளது. தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வருபவனை சைக்கோ, மனநோயாளி, வக்கிரம் படித்தவன், அதனால் அப்படி செய்தான், செய்வான் என்று அமைதியாகி விடமுடியாது. கொலைகள் என்பது பெரிய குற்றம் தான். பல கொலைகள் செய்தால், குரூரமாக செய்தால், நோய் என்று வழக்குகளை மூடிவிட முடியாது.

© வேதபிரகாஷ்

14-10-2022.


[1] ஜீ.நியூஸ், கேரளா நரபலி: போலி சாமியார் முன் உடலுறவு! நரபலி கொடுக்க இதுதான் காரணமா?, Written by – Bhuvaneshwari P S | Edited by – Shiva Murugesan | Last Updated : Oct 12, 2022, 10:37 AM IST.

[2]  https://zeenews.india.com/tamil/india/sex-in-front-of-fake-preacher-this-reason-for-human-sacrifice-in-kerala-414483

[3] தினகரன், கேரளாவில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு..!!, 2022-10-13@ 10:46:16.

[4] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=806375

[5] ஹமிழ். ஏபிபி.லைவ், ஆபாசப்படம் ஈசியா கிடைக்குது.. சிறுமிகள் கருவுறுதல் குறித்த வழக்கில் கோர்ட் சொன்ன பல கருத்து!,By: ஜான் ஆகாஷ் | Updated at : 24 Jul 2022 01:49 PM (IST);  Published at : 24 Jul 2022 01:42 PM (IST)

https://tamil.abplive.com/news/india/teen-pregnancy-porn-spark-kerala-high-court-call-for-sex-ed-review-63331

[6] தினகரன், கேரளாவில் சிறுமிகள் ஆபாச வீடியோ பரப்பிய 21 பேர் அதிரடி கைது: லேப்டாப், செல்போன்கள் பறிமுதல், 2019-04-03@ 00:42:44

[7] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=485162