Archive for the ‘காமம்’ Category

சித்த மருத்துவர் பாலியல் சிகிச்சை கொடுத்தது- ஓரின சேர்க்கையில் ஈடுபட்டது, நோயாளியைக் கொன்றது, மனித மாமிசம் சாப்பிட்டது, உடல் பாகங்களைப் புதைத்தது! (2)

நவம்பர் 25, 2023

சித்த மருத்துவர் பாலியல் சிகிச்சை கொடுத்ததுஓரின சேர்க்கையில் ஈடுபட்டது, நோயாளியைக் கொன்றது, மனித மாமிசம் சாப்பிட்டது, உடல் பாகங்களைப் புதைத்தது!  (2)

கேசவமூர்த்தி அசோக்ராஜை கொலை செய்தது; இதுகுறித்து குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில் சோழபுரம் போலீஸார் விசாரித்து வந்தனர்[1]. அப்பொழுது அவர் “ஏதோ” சிகிச்சைக்கு கும்பகோணம் சென்றது தெரிந்தது. இது பற்றிய விவரங்களை ஊடகங்கள் தெளிவாக வெளியிடவில்லை. இவரை கும்பகோணம் சோழபுரம் கிழக்குத் தெருவை சேர்ந்த சித்த மருத்துவர் கேசவமூர்த்தி என்பவர் ஓரினசேர்கைக்கு அழைத்து சென்று அப்போது ஏற்பட்ட தகராறில் வெட்டி கொலை செய்தார்[2] என்று தெரிய வந்தது. அவரது உடலை கேசவ மூர்த்தி தனது வீட்டில் புதைத்தார். போலீசார் அசோக்ராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்[3]. மேலும் அங்கு தோண்டும் போது மற்றொரு மனித தாடை எலும்பு கூடு சிக்கியது[4]. இதுபற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

13-11-2023 அன்று அசோக்ராஜ் சிகிச்சைப் பெற்றது, கொலையுண்டானது: இந்த சம்பவம் குறித்து போலீ ஸார் கூறியதாவது[5]: “கைது செய்யப்பட்டுள்ள கேசவமூர்த்தி, அந்தப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்டோருக்கு சுன்னத்செய்துள்ளார். அசோக் ராஜனுக்குஅண்மையில் செய்ததில், அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதுகுறித்து கேசவமூர்த்தியை தொடர்பு கொண்டு அசோக் ராஜன் கேட்டதற்கு, தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு வரும்போது தன்னிடம் வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு கேசவமூர்த்தி கூறியுள்ளார். அதன்படி, கடந்த 13-ம் தேதி கேசவமூர்த்தியை அசோக் ராஜன் சந்திக்கச் சென்றுள்ளார். அப்போது, தவறான சிகிச்சையால் அசோக் ராஜன் பாதிக்கப்பட்டதால், தான் போலி மருத்துவர் என்பது வெளியில் தெரிந்துவிடும் எனக் கருதி, அசோக் ராஜனை கொலை செய்ததாக கேசவமூர்த்தி கூறினார்,” இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்[6].

விசாரணையில் அசோக்ராஜை கொலை செய்ததை ஒப்புக் கொண்டது: இது குறித்து சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கேசவமூர்த்தியை கைது செய்து கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைந்தனர். கேசவமூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, வருகிற டிசம்பர் 4ஆம் தேதி திங்கட்கிழமை வரை நீதிமன்ற காவலுக்குட்படுத்தி, சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். அநிநிலையில், விசாரணையின்போது, தான் அசோக்ராஜைக் கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளான், மேலும், உடல் பாகங்கள் கொண்டு மருந்து தயாரித்ததை கூறியுள்ளான். எலும்பு பாகங்கள் புதைத்தாகச் சொன்னான். இதனால், போலீஸார் அவன் வீட்டில் தோண்டி பார்த்தனர். தொடர்ந்து அங்கே 3 அடி அளவிற்கு மட்டும் பள்ளம் தோண்டி பார்த்தபோது 30க்கும் மேற்பட்ட துண்டுகளாக விரல் அளவிலான எலும்புகள் கிடைத்தது[7]. அந்த எலும்புகள் பார்ப்பதற்கு ஒரு நாயின் மண்டை ஓடு மற்றும் அதன் எலும்புகள் போல இருந்தது. இதில் சேகரிக்கப்பட்ட எலும்புகள் மனித எலும்புகளா அல்லது முகமதுஅனஸ் உடல் பாகங்களா என்று அறிய ஆய்வகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர்[8]. பின்னர் தோண்டி எடுக்கப்பட்ட எலும்புகள், கேசவமூர்த்தி வீட்டில் இருந்த மருந்து மாத்திரைகள், மூலிகை பொடிகள், பெண்கள் பயன்படுத்தும் நகைகள், நைட்டி, ஆடைகள், பயன்படுத்தாத பொருட்களை 10க்கும் மேற்பட்ட பெட்டைகளில் போலீசார் எடுத்து சென்றனர்.

19-11-2023 அன்று அசோக்ராஜின் உடல் பாகங்கள் தோண்டி எடுத்தது: கடந்த 19ஆம் தேதி அசோக்ராஜின் உடல் பாகங்களைத் தோண்டி எடுக்கும் போது, அதில் மேலும் ஒரு மண்டை ஓடு கிடைத்துள்ளது[9]. அதனால் அது 2021ஆம் ஆண்டு மர்மமான முறையில் மாயமாகி இதுவரை கண்டுபிடிக்க முடியாத நிலையில் இருக்கும், கேசவமூர்த்தியின் மற்றொரு நண்பரான முகமது அனாஸ் உடையதாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது[10]. இருப்பினும் தடய அறிவியல்துறையினர் ஆய்வின் முடிவிற்கு பிறகே அது உறுதி செய்யப்படும்[11]. தற்போது வரை கேசவமூர்த்தி சத்தமில்லாமல் இரு கொலைகளை அரங்கேற்றி அது வெளியே தெரியாமல் மறைக்க, ஆடு வெட்டும் பெரிய கத்தியை கொண்டு உடலில் இருந்து தலையை துண்டித்தும், உடல் பாகங்கள் விரைவாக மண்னோடு மண்ணாவதற்காக தோலை உரித்தும், சதை பாகங்களை தனியாக வெட்டி எடுத்தும் புதைத்திருப்பது தெரிய வந்துள்ளது[12].

கத்திகள், பிளேடுகள், அரிவாள்கள் போன்ற உபகரணங்கள் கிடைத்தது: இதனை இவர் தனித்து தான் செய்தாரா? அல்லது பின்னணியில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், கேசவமூர்த்தியில் வீட்டில் இருந்து மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் கத்திகள், பிளேடுகள், அரிவாள்கள் போன்ற உபகரணங்களையும், நாட்டு மருந்து பொடிகள், மருந்து வகைகள், வீட்டில் வளர்த்த மூலிகை செடிகளையும் பறிமுதல் செய்து அதன் தன்மை, பயன்கள் குறித்து ஆய்வு செய்ய போலீசார் மருத்துவ ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்[13]. இதனிடையே கேசவமூர்த்தி பயன்படுத்திய டைரி ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பெயர்கள் இருந்ததால் இதில் யாரையேனும் கேசவமூர்த்தி கொலை செய்திருக்க கூடுமா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[14].

சித்தாயுனானி போன்ற முறைகளைக் கடைப்பிடித்தானா?: மேலும், கொலை செய்யப்பட்ட அசோக் ராஜன் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டப்பட்டதில் சில உடல் பாகத்தை கேசவமூர்த்தி சமைத்து சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், “நரமாமிசம்” எப்படி சாப்பிட முடியும், ஒருவேளை அதை வைத்து, மருந்து தயாரிக்க முயன்றானா போன்ற கேள்விகளும் எழுகின்றன. சித்தா முறையில்லாமல் யுனானி போன்ற முறைகளில் பூச்சிகள், புழுக்கள், பறவைகள், விலங்குகள் ஏன் மனிதர்கள் முதலியவற்றின் சதை, ரத்தம் முதலியவை மருந்து தயாரிக்க உபயோகப் படுத்தப் படுவதாக உள்ளது. ஒருவேளை அம்முறைகளில் ஈடுபட்டான் என்ற கேள்வியும் எழுகிறது. கேசவமூர்த்தி இந்த இரண்டு கொலைகளை தான் செய்தாரா? அல்லது தனக்கு இணங்காத வேறு யாரையானும் இப்படி கொடூரமாக கொன்றுள்ளாரா என்பது முழுமையான விசாரணைக்கு பிறகே தெரியவரும். இந்நிலையில் நேற்று இரவு சம்பவ இடத்தை ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத், இன்று மீண்டும் சம்பவ இடத்திற்கு வருகை தந்து ஆய்வு செய்தார்.

கேசமூர்த்தியின் வீட்டில் தோண்டி ஆய்வு செயந்து: கும்பகோணம் அருகே சோழபுரத்தில் ஓரின சேர்க்கை விவகாரத்தில் ஒருவரை கொலை செய்து புதைத்த வழக்கில் கைதான கேசமூர்த்தியில் வீட்டில் தோண்டி ஆய்வு செய்த போது மற்றொரு தலை கிடைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன், ஆசிஸ் ராவத் முன்னிலையில் முதற்கட்டமாக வீட்டின் பின்பக்கம் உள்ள பகுதிகளை தோண்டும் பணி நடைபெறுகிறது. மேலும், தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் சோழா வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷித்ராவத் தலைமையில் திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாபர்சித்திக் முன்னிலையில் இன்று மாலை ஜேசிபி எந்திரம் மூலம் கேசவமூர்த்தியின் வீட்டை சுற்றி மீண்டும் தோண்ட தொடங்கி உள்ளனர்[15]. இதனால் இந்த கொலை வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது[16].

© வேதபிரகாஷ்

25-11-2023.


[1] புதியதலைமுறை, கும்பகோணம் | இளைஞரைக் கொலை செய்து வீட்டுக்குள்ளேயே புதைத்த சித்த வைத்தியர்சிக்கியது எப்படி?, PT WEB, Published on : 20 Nov 2023, 3:38 pm.

[2] https://www.puthiyathalaimurai.com/tamilnadu/kumbakonam-siddha-doctor-brutally-murdered-young-man

[3] ஐபிசி.தமிழ்நாடு, தன்பாலின உறவுக்கு மறுப்பு‘ – இளைஞரை துண்டு துண்டாக வெட்டி புதைத்த சித்த வைத்தியர்!, By Jiyath, அவம்பர் 20, 2023.

[4] https://ibctamilnadu.com/article/siddha-doctor-arrested-younster-murder-case-1700466369

[5] தமிழ்.இந்து, செய்திப்பிரிவு, கும்பகோணம் | இளைஞர் கொலை வழக்கில் கைதான சித்த வைத்தியர் வீட்டை சுற்றிலும் ஏராளமான எலும்புகள் கண்டெடுப்பு, Published : 22 Nov 2023 05:42 AM, Last Updated : 22 Nov 2023 05:42 AM.

[6] https://www.hindutamil.in/news/crime/1157269-bones-were-found-around-the-house-of-siddha-doctor-who-was-arrested-in-the-case-of-youth-murder.html

[7] தினகரன், வாலிபர்களை கொன்று உடலை சமைத்து சாப்பிட்ட விவகாரம் போலி சித்த மருத்துவர் வீட்டில் தோண்ட, தோண்ட எலும்புகள்: 10 பெட்டிகளில் போலீசார் எடுத்து சென்றனர், November 25, 2023, 1:16 am

[8] https://www.dinakaran.com/teenagers_killed_fakepsychiatrist_bones_10boxes_police/ – google_vignette

[9] தினத்தந்தி, சிகிச்சைக்கு வந்த இளைஞர் உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டில் சமாதி.. பிரபல டாக்டர் பகீர் காரியம், By தந்தி டிவி 20 நவம்பர் 2023 12:45 PM

[10] https://www.thanthitv.com/News/TamilNadu/the-body-of-the-young-man-who-came-for-treatment-was-cut-into-pieces-and-buried-at-home-227777

[11] இ.டிவி.பாரத், நாட்டு வைத்தியர் வீட்டில் தோண்ட தோண்ட எலும்பு கூடு..! மற்றொரு மண்டை ஓடு கிடைத்ததால் பதற்றம்!,

[12] https://www.etvbharat.com/tamil/tamil-nadu/state/thanjavur/skeleton-dug-up-from-the-siddha-vaidyar-house-who-was-arrested-in-the-youth-murder-case-near-kumbakonam/tamil-nadu20231124145055912912639

[13] காமதேனு, சிகிச்சைக்கு வந்தவர் கொலை! வீட்டைச் சுற்றி மனித எலும்புகள்சித்த வைத்தியரின் அதிர்ச்சி மறுபக்கம்!, Updated on : 22 Nov 2023, 3:15 pm

[14] https://kamadenu.hindutamil.in/crime-corner/human-bones-around-the-house-of-chitta-vaidyar-who-was-arrested-in-the-youth-murder

[15] மாலைமலர், சித்த வைத்தியர் வீட்டை மீண்டும் தோண்டும் போலீசார், By மாலை மலர், 24 நவம்பர் 2023, 3:32 PM.

[16] https://www.maalaimalar.com/news/district/police-re-excavate-siddha-vaidiyars-house-689114


சித்த மருத்துவர் பாலியல் சிகிச்சை கொடுத்தது- ஓரின சேர்க்கையில் ஈடுபட்டது, நோயாளியைக் கொன்றது, மனித மாமிசம் சாப்பிட்டது! (1)

நவம்பர் 25, 2023

சித்த மருத்துவர் பாலியல் சிகிச்சை கொடுத்ததுஓரின சேர்க்கையில் ஈடுபட்டது, நோயாளியைக் கொன்றது, மனித மாமிசம் சாப்பிட்டது!  (1)

வியாபாரமாகும் மருத்துவம்: இந்திய மக்கட்தொகை அதிகமாக-அதிகமாக, மக்களின் நோய்-சிகிச்சைக்கு மருத்துவர், மருத்துவமனை, மருந்து என்று எல்லாவற்றிற்கும் தேவை அத்கமாகிக் கொண்டிருக்கிறது. அந்நிலையில், இன்னொரு பக்கம் மருத்துவம், மருத்துவப் படிப்பு, மருத்துவமனை-சிகிச்சை என்று எல்லாமே வியாபாரமயமாக்கப் பட்டு விட்டது. இந்தியாவில் சிறந்த சிகிச்சைப் பெற குறைந்த அளவில் பணம் செலவழித்தால் போதும் என்ற நிலையும் அமெரிக்கர்-ஐரோப்பியர்களுக்குத் தெரிந்துள்ளது. குறிப்பாக “பை-பாஸ் சர்ஜரி” இந்தியாவில் செய்து கொள்வது மிகவும் அமெரிக்க-ஐரோப்பியர்களுக்குத் மலிவாக உள்ளது. தவிர வளைகுடா நாட்டு மக்களும் வந்து சிகிச்சை பெறுகின்றனர். இதனால், மருத்துவ வியாபாரம் நன்றாகவே நடந்து வருகிறது. அவர்கள் மூலம் வருமானமும் நன்றாகக் கிடைக்கிறது. அதனால், இத்தகைய மருத்துவ மனைகள் இந்தியர்களுக்கு சிகிச்சை அளிக்க விரும்பவதில்லை என்ற நிலைக்கே வந்து விட்டது எனலாம். ஆக இந்தியர்கள் சிகிச்சைப் பெரவேண்டும் என்றால், குறைந்தது ஒரு லட்ச ரூபாய் வைத்துக் கொண்டுதான் ஆச்பத்திரிக்குச் செல்லவேண்டியுள்ளது.

மருத்துவ வசதி சேவைசேவைத் தன்மையினை இழந்து விட்டது: அரசு ஆஸ்பத்திரிகளில் எல்லா வசதிகள் இருந்தாலும், தெரிந்தவர்கள் இல்லை என்றால், கவனிக்கப் படுவதில்லை. இல்லை, எல்லா இடங்களிலும், நிலைகளிலும் லஞ்சம் கொடுக்க வேண்டும், இல்லையென்றால், வேலை நடக்காது. ஒரு நாளில் நடப்பதை ஒரு மாதம் இழுத்து விடுவர். பொதுவாக, “அட்மிஸன்” ஆனால் தான் சிகிச்சை, இன்சூரன்ஸ் கிடைக்கும் போன்ற கன்டிஸன்களாலும், ஆஸ்பத்திரிகள் இந்த போக்கைக் கடைபிடித்து வருகிறார்கள். மேலும், “அட்மிஸன்” என்றால், குடும்பம் பாதிக்கப் படும். நோயாளியைப் பார்த்துக் கொள்ள ஒருவர் வேண்டும் என்றால், வீட்டில் சமைக்க, குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள, மேலும் வேலைக்குச் செல்ல என்று எல்லாவற்றையும் கவனிக்க முடியாது. இந்நிலைகளில் தான், சுயமருத்துவம், எளிதான சிகிச்சை அல்லது மாற்று முறையில் ஏதாவது கிடைக்குமா என்று நடுத்தர மக்கள் நினைக்கிறார்கள். அப்பொழுது தான் “போலி மருத்துவர்கள்” எனப் படுகின்ற மற்ற அலோபதி-அல்லாத மருத்துவர், நாட்டு மருத்துவர் முதலியோர் வருகின்றனர். முதலில் ஓரளவுக்கு நம்பிக்கைப் பெற்றதும், உள்ளூரில் மருத்துவர் என்ற பெயரைப் பெற்று விடுகின்றனர். பணம் வரவர கிளினிக்  வளர்ந்து, ஆஸ்பத்திரி ஆகிவிடுகிறது. இப்படித்தான், இந்த சித்த மருத்துவரும் இருந்துள்ளார்.

50 பேருக்கு சுன்னத் செய்தார்: என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுன்னத் என்பது முஸ்லிம்கள் கட்டாயமாக செய்து கொள்ள வேண்டிய ஒரு சடங்கு ஆகும். 50 பேருக்கு இவர் சொன்னது செய்துள்ளார் என்றால் நிச்சயமாக அவர்கள் முஸ்லிம்களாக தான் இருக்க வேண்டும். இல்லை அதில் சிலர் இந்துக்கள் இருக்கிறார்கள் என்றால் அது நிச்சயமாக செக்ஸ் ரீதியில் தான் அவர் அத்தகைய சுன்னத் செய்திருக்க வேண்டும். ஏனெனில், உடலுறவு இன்பம் நீட்டிக்க மற்றவர்களும் சுன்னத் செய்து கொள்வதாகத் தெரிகிறது. மேலும் இங்கு பாலியல் ரீதியில் பிரச்சினைகள் உள்ள ஒருவர் இவரிடம் சிசிச்சைக்கிற்காக வந்தது, அவருக்கு அதிகமாக மருந்து கொடுத்தது மற்றும் உடலுறவு கொண்டது போன்ற விவகாரங்கள் வெளிப்பட்டுள்ளதால், ஒருவேளை இவர் பாலியல் ரீதியிலாக மருத்துவ சிகிச்சை கொடுக்க முயற்சித்துள்ளார் அல்லது அதில் தான் ஒரு தெரிந்த மருத்துவர் என்ற நிலையில் புகழ விரும்பு அத்தகைய நடவடிக்கைகள் ஈடுபட்டுள்ளார் என்றும் கருத முடிகிறது.

செக்ஸ் மருத்துவத்தில் ஈடுபட்டாரா?: ஏனெனில் அவர் தயாரித்ததாக சொல்லப்படுகின்ற அந்த உணவு, அல்லது மனித மாமிசம் கொண்ட மருந்து, அல்லது அத்தகைய ஒரு மருத்துவ கலப்பு, என்றெல்லாம் சொன்னாலும், அத்தகைய மருந்தை தயாரித்து யாராவது ஒரு நோயாளிக்கு கொடுத்து, அதன் விளைவை சரிபார்த்து அதன் மூலமாக அத்தகைய பாலியல் நோய் தீர்க்க முடியும் என்ற முடிவுக்கு வருவதற்காக எத்தகைய பரிசோதனையை, அதாவது “கிளினிக்கல் டெஸ்டிங்” என்று சொல்வார்கள், கையாண்டார் என்பதற்கு சந்தேகம் வலிக்கிறது. கேரளாவில் அத்தகைய முறைகள் கையாளப்படுகின்றன, அதற்கு நரபலிம் கொடுக்கப்படுகிறது போன்ற செய்திகள் வந்துள்ளன. ஒருவேளை இவரும் அத்தகைய சிகிச்சையில் ஈடுபட்டாரா என்ற சந்தேகம் எழுகிறது.  நிச்சயமாக சமூகத்தில் இத்தகைய “போலி மருத்துவர்களிடம் ”மற்றவர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தீபாவளிக்குச் சென்றவர் காணாமல் போனது: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே மணல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்ராஜன் (வயது 27)[1]. சென்னையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இவர், தீபாவளிக்கு ஊருக்கு வந்துவிட்டு, திரும்பிய போது மாயமானார்[2]. அசோக்ராஜனுக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு வந்தவர், கடந்த 13-ம் தேதி சிதம்பரத்துக்குச் சென்று நண்பரைப் பார்த்துவிட்டு மீண்டும் சென்னைக்குச் செல்வதாகத் தன்னுடைய பாட்டி பத்மினியிடம் சொல்லிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பியிருக்கிறார். அசோக்ராஜன் சென்னைக்கு சென்று சேர்ந்துவிட்டாரா எனக் கேட்பதற்காக, பாட்டி பத்மினி அவரது மொபைலுக்கு உறவினர் ஒருவர் மூலம் தொடர்புகொண்டுள்ளார். ஆனால், அசோக்ராஜன் மொபைல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. ஊருக்கு போன அசதியில் உறங்கிக்கொண்டிருப்பார் என நினைத்த பாட்டி, சிறிது நேரம் கழித்து மீண்டும் உறவினர் மூலம் அசோக்ராஜ் எண்ணுக்கு தொடர்புகொண்டுள்ளார். அப்போதும், அவரது எண் ஸ்விட்ச் ஆஃப்பிலேயே இருந்துள்ளது. அதன் பிறகு அசோக்ராஜனிடமிருந்து எந்தத் தொடர்பும் இல்லை.

15-11-2023 அன்று பாட்டி போலீஸாரிடம் புகார் கொடுத்தது: இதனால், பயந்துபோன பாட்டி பத்மினி சோழபுரம் போலீசில் கடந்த 15 ஆம் தேதி புகார் அளித்துள்ளார். பாட்டி பத்மினி கொடுத்த புகாரின் பேரில், போலீஸார் சோழபுரம் கடைத் தெருவில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது அசோக்ராஜன் கீழத்தெரு வழியாக சென்றவர், மீண்டும் திரும்பாதது தெரியவந்தது. இதற்கிடையில், அசோக்ராஜன் வீட்டிற்கு ஒரு கடிதம் ஒன்று வந்தது. அதில், தனக்கு ஆண்மை இல்லாமல் இருப்பதால் வாழப் பிடிக்கவில்லை என அசோக்ராஜன் எழுதியதாக இருந்தது. இதுவரை இதுபோன்ற சிக்கல்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை எனக் கூறிய குடும்பத்தாரும் நண்பர்களும், அசோக்ராஜன் ஊருக்கு வந்தபோது சோழபுரம் கீழத்தெருவைச் சேர்ந்த நாட்டு வைத்தியரான கேசவமூர்த்தி என்பவரிடம் சிகிச்சை பெற்றதாக போலீசாரிடம் கூறியுள்ளனர். 

17-11-2023 அன்று கேசமூர்த்தியை கைது செய்த போலீஸ்: இதன் அடிப்படையில், போலீசார் மற்றும் உறவினர்கள் அப்பகுதியில் விசாரணை நடத்தியபோது, நாட்டு வைத்தியர் கேசவமூர்த்திக்கும் அசோக்ராஜனுக்கும் பழக்கம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் கடந்த 17ம் தேதி, கேசவமூர்த்தியை அழைத்துச் சென்று இரண்டு நாட்களாக விசாரணை நடத்தினர். விசாரணையில், அசோக்ராஜன் தனக்கு ஆண்மை இல்லை என்றும் அதனால்  தனக்கு வாழப் பிடிக்கவில்லை எனக் கூறி என்னிடம் அழுதார். பின்னர், நான் தஞ்சாவூரில் உள்ள ஒரு டாக்டரிடம் சிகிச்சை பெற அறிவுறுத்தினேன். இதுதான் நடந்தது எனத் திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்து சலித்துப்போன போலீசார், தங்கள் பாணியில் விசாரணையைத் துவக்கியுள்ளனர். அப்போது, பொலபொலவென நடந்ததை கொட்டி போலீசாருக்கே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் நாட்டு வைத்தியர் கேசவமூர்த்தி. அவர் சொல்வதைக் கேட்கும்போதே குமட்டும் அளவுக்கு கொடூரம் வெளிப்பட்டுள்ளது. 

விசாரணையில் வெளிவந்த விவகாரங்கள்: கேசவமூர்த்தியிடம் போலீஸ் நடத்திய விசாரணையில், ஆண்மை குறைபாட்டைப் போக்க மருந்து கொடுத்து வந்துள்ளார். இதற்காக அவர் கஞ்சா செடிகள் மற்றும் பலவித மூலிகை இலைகளை கொண்டு பொடி செய்து மாத்திரைகளாக தயாரித்து விற்பனை செய்திருக்கிறார். மூலிகை செடிகளை வைத்து ‘கிறுக்கி முறுக்கி’ என்ற மருந்தைத் தயாரித்து, அதை தனது இச்சைக்கு இணங்குபவர்களிடம் கொடுத்து ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்தநிலையில், அசோக்ராஜன் தனக்கு ஆண்மை இல்லை என்றும் அதனால் தனக்கு வாழ பிடிக்கவில்லை என்றும் கேசவமூர்த்தியிடம் அழுதார். தஞ்சாவூரில் உள்ள ஒரு டாக்டரிடம் சிகிச்சை பெற அறிவுறுத்திய கேசவமூர்த்தி, இதையே காரணமாக வைத்து அவரை மசியவைத்து ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தி வந்துள்ளார். ஆனால், அசோக்ராஜன் இதை மறுத்துள்ளார். இந்த நிலையில் தீபாவளிக்கு ஊருக்கு வந்திருந்த அசோக்ராஜன், நாட்டு மருத்துவர் கேசவமூர்த்தியை சந்தித்துள்ளார். அப்போது, அசோக்ராஜனுக்கு ஆண்மை வீரியம் அதிகரிக்கும் மருந்து கொடுத்த கேசவமூர்த்தி, அந்த மருந்தை சாப்பிட வைத்துள்ளார். அதன் பிறகு, அசோக்ராஜனுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். பிறகு அசோக்ராஜன் நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார். இதில், எங்கே நாம் சிக்கிக்கொள்வோமோ என அஞ்சிய கேசவமூர்த்தி, அசோக்ராஜின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி, வீட்டின் உள்ளே புதைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல், அசோக்ராஜனின் பிறப்புறுப்பை வெட்டி தனியாகப் புதைத்துள்ளார்[3]. மேலும், அவரது உடலில் இருந்த இதயம், நுரையீரல், கல்லீரல் உள்ளிட்டவற்றை வெளியே எடுத்து அதனை சமைத்து சாப்பிட்டும், தான் வளர்க்கும் நாய்க்கும் விருந்தாகப் படைத்துள்ளார் கேசவமூர்த்தி[4]. இதனை எல்லாம் எந்தவிதப் பதற்றமும் இல்லாமல் கேசவமூர்த்தி சொன்னதைக் கேட்டு போலீஸார் அதிர்ந்துள்ளனர். 

© வேதபிரகாஷ்

22-11-2023.


[1] தமிழ்.ஒன்.இந்தியா, கும்பகோணம் சித்த வைத்தியர் வீட்டை சுற்றி தோண்ட தோண்ட எலும்புகள்.. திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சி, By Velmurugan P Updated: Wednesday, November 22, 2023, 16:21 [IST].

[2] https://tamil.oneindia.com/news/thanjavur/police-searching-chitta-vaidyar-house-who-arrested-in-youth-murder-case-near-kumbakonam-559131.html

[3] நக்கீரன், நரமாமிசம் சாப்பிட்ட வைத்தியர்! – லிஸ்டில் இருக்கும் 190 பேர்!,  செல்வகுமார், Published on 24/11/2023 (15:21) | Edited on 24/11/2023 (16:00).

[4] https://www.nakkheeran.in/special-articles/special-article/kumbakonam-doctor-kesavamoorthy-issue

05-12-2022 அன்று 5-க்கும் மேற்பட்ட பசுமாடுகளை வடமாநிலத் தொழிலாளர்கள் சேர்ந்து பாலியல் ரீதியான வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளது!

திசெம்பர் 14, 2022

05-12-2022 அன்று 5-க்கும் மேற்பட்ட பசு மாடுகளை வடமாநிலத் தொழிலாளர்கள் சேர்ந்து பாலியல் ரீதியான வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளது!

பசு மாடுகளை வடமாநிலத் தொழிலாளர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது: பவானி அருகே மேய்ச்சலுக்கு சென்ற பசுக்களை பாலியல் வன்கொடுமையில் வட மாநில தொழிலாளர்கள் தொந்தரவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, என்று “தமிழ் முரசு,” என்ற மாலை நாளிதழில் செய்தி 10-12-2022 அன்று வெளிவந்தது[1]. மற்ற பிரபல நாளிதழ்களில் தேடிப் பார்த்தபோது வந்ததாகத் தெரியவில்லை. ஒரே ஒரு இணைதளத்தில் “தமிழ் முரசு,” நாளிதழில் வந்துள்ள செய்தியை அப்படியே, அது வெளியிட்டுள்ளது[2]. பவானி – மேட்டூர் ரோடு பகுதியில் ஜீவா நகர் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர்[3]. கடந்த சில மாதங்களாக இந்நிறுவனத்தில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர். அவர்கள் தங்கியிருந்த குடியிருப்புக்கு அருகாமையில் விவசாய நிலங்கள் உள்ளதால் அவ்வப்போது கால்நடைகள் மேய்ச்சலுக்கு வந்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில், விவசாய நிலத்துக்கு மேய்ச்சலுக்கு வந்த 5-க்கும் மேற்பட்ட பசு மாடுகளை வடமாநிலத் தொழிலாளர்கள் சேர்ந்து பாலியல் ரீதியான வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளதோடு, பசுக்களைக் கடித்தும் காயப்படுத்தியுள்ளனர். இத்தகைய முறையற்ற கற்பழிப்புகள் மற்ற மாநிலங்களிலும் நடந்துள்ளதாகத் தெரிகிறது[4].

களவியலாகற்பியலா, மிருகங்களுடன் புனைவது தமிழர்களின் கலாச்சாரமா?: மிருகங்களுடன் புனைவது, உடலுறவு வைத்துக் கொள்வது, “சங்க காலத்திலிருந்து உள்ளது,” என்று ஏதாவது ஆதாம் உள்ளதா, “கீழடியில்” ஏதாவது கண்டு பிடிக்கப் பட்டதா, அதனால், போற்ற வேண்டும், ஆதரிக்க வேண்டும், “களவு” முறையில் மறைக்க வேண்டும் என்று, ஏதாவது “களவியல்” சித்தாந்தம் உளளதா? பசுக்கள் தான் பாலியல் வன்புணர்ச்சிகளுக்கு உட்பட்டுள்ளது, அதனால், “சனாதனிகள்,” சங்கிகள் தான் கவலைப் படவேண்டும், மற்ற தமிழர்கள் கவலைப் படவேண்டாம் என்றெல்லாம் உள்ளதா? சரி, அந்த பசுக்கள் கொடுக்கும் பாலை இனி மனிதகள் உட்கொள்ளலாமா, எந்த பிரச்சினையும் வராதா, என்றெல்லாம் பற்றி யாராவது விளக்க முடியுமா?  “களவியலா-கற்பியலா” என்று டிவி தொலைக்காட்சிகளில் வாத-இவாதம், பட்டி மன்றங்கள் நடட்துவார்களா?

இக்கொடூரத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அனைவரும் வாகனம் மூலம் அங்கிருந்து உடனடியாக உடமைகளுடன் வெளியேற்றப்பட்டது: இத்துணிகர வன்கொடுமை சம்பவம் கடந்த 5-ம் தேதி [05-12-2022 அன்று] அரங்கேறியுள்ளது. மேய்ச்சலுக்கு சென்ற பசுக்கள் காயங்களுடன் திரும்பியதைக் கண்ட உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் விசாரணையில் வடமாநிலத் தொழிலாளர்கள் சேர்ந்து பசுக்களை வன்புணர்வில் ஈடுபட்டது தெரியவந்தது. இத்தகவலறிந்த, பவானி வருவாய்த் துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அனைவரும் வாகனம் மூலம் அங்கிருந்து உடனடியாக உடமைகளுடன் வெளியேற்றப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து, பவானி போலீசாரும் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணை தொடர்பான அறிக்கை பவானி வருவாய்த்துறை மூலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வேலைக்கு வந்த வடமாநிலத் தொழிலாளர்கள் கும்பலாக சேர்ந்து மேய்ச்சலுக்கு வந்த பசுக்களிடம் வரம்புமீறி பாலியல் கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள்என்று குறிபிடப் பட்டு, அடையாளம் மறைக்கப் படுவது: ஆனால், தொடர்ந்து,“வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள்’ என்று குறிபிடப் பட்டு, அவர்களின் பெயர்களைக் கூட தெரிவிக்காமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. போக்சோ சட்டத்தில் கூட பாதிக்கப் பட்ட பெண்களின் அடையாளத்தைத் தான் வெளியிடக் கூடாது என்றுள்ளது. இங்கு பாலியல் ரீதியில் பாதிக்கப் பட்டவை பசுக்கள் என்று தெரியப் படுத்தப் பட்டுள்ளது. பிறகு, வரம்புமீறி பாலியல் கொடுமையில் ஈடுபட்டது – வந்த 5-க்கும் மேற்பட்ட பசு மாடுகளை வடமாநிலத் தொழிலாளர்கள் சேர்ந்து பாலியல் ரீதியான வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளதோடு, பசுக்களைக் கடித்தும் காயப்படுத்தியுள்ளது முதலிய கொடிய-குரூர-பயங்கரமான குற்றங்களை, குற்றம் புரிந்தவர்களை ஏன் மறைக்க வேண்டும்?

 யார் அந்தவடமாநிலத் தொழிலாளர்கள்” ?: “இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அனைவரும் வாகனம் மூலம் அங்கிருந்து உடனடியாக உடமைகளுடன் வெளியேற்றப்பட்டது தெரியவந்தது,” எனும் போது, அவ்வாறு ஏன் செய்யப் பட்டது என்று திகைப்பாக இருக்கிறது. குற்றம் செய்தவர்கள், அதிலும் இத்தகைய, இயற்கைக்கு மாறான “பசுக்களை வன்புணர்வில் ஈடுபட்டது” தெரிய வந்துள்ள போது, அதை மறைக்கும் முயற்சி எதைக் காட்டுகிறது என்று தெரியவில்லை. ஏற்கெனவே தமிழகத்தில், “வடமாநிலத் தொழிலாளர்கள்” அதிகம் வருவதால், வந்து பல இடங்களில் வேலை செய்வதால், தமிழர்களின் வேலை வாய்ப்பு பறிபோகிறது, குறைகிறது என்று பரவலாக, வெளிப்படையாக எல்லோராலும் பேசப் பட்டு வருகிறது. அரசியல் ரீதியாகவும் வெறுப்பு, காழ்ப்பு போன்றவை வெளிப்படுத்தப் பட்டு வருகின்றன. குற்றங்களில் அவர்கள் தாம் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் சொல்லப் படுகிறது. அந்நிலையில், அவர்கள் யார் என்று சொல்லப் பட வேண்டும்.

பங்களாதேசத்தவர், முஸ்லிம்கள் என்றாலும் தெரிவிக்கப் பட வேண்டும்: பங்களாதேசத்தவர், அவர்கள் முஸ்லிம்களாகத் தான் இருக்கின்றனர், ஆனால், தங்களது அடையாளங்களை மறைத்து, ஏன் “இந்துக்கள்” போர்வையிலும் வேலை செய்து வருகின்றனர். பங்களாதேசத்திலிருந்து, எவ்வாறு, இத்தனை தூரம் வரமுடிகிறது, அவர்களை எவ்வாறு  யார் எப்படி வேலைகளுக்கு வைக்கிறார்கள் என்பது தெரியவில்லை என்பது இல்லை. பெரும்பாலான கட்டிட வேலை நடக்கும் இடங்களில் இவர்கள் தான், ஆயிரக் கணக்கில் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். அங்கு வேலை செய்யும் மேஸ்திரிகளுக்கு, மேற்பார்வையாளர்களுக்கு, இஞ்சினியர்களுக்கு, பில்டர்களுக்கும் தெரிந்து தான் உள்ளது. ஆனால், யாரும் கண்டுகொள்வதில்லை என்றே தெரிகிறது. ஏற்கெனவே, கோவையில் “காஸ்-குண்டு வெடிப்பு,” முயற்சி நடந்திருக்கிறது. அது மங்களூரு “ஆட்டோ-குண்டு வெடிப்பு,”டன் தொடர்பு படுத்தி செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன. தமிழக-கர்நாடக இணைப்புகள் வெளிப்படுகின்றன. பிறகு, பங்களாதேச இணைப்பு என்ன என்று ஆராய வேண்டியுள்ளது.

அடையாளம் மறைப்பது எக்யூலரிஸமா அல்லது கம்யூனலிஸமா?: பீஹார், உத்திரபிரதேசம் என்றால் தூற்றவேண்டும், மற்ற “வடமாநிலத் தொழிலாளர்கள்” என்றால் அமைதியாக இருக்க வேண்டும், “பங்களாதேசத்தவர்” என்றால் இன்னும் அமுக்கி வாசிக்க வேண்டும், அதிலும் “முஸ்லிம்கள்” என்றால், மூச்சே விடக் கூடாது என்று ஏதாவது சம்பிரதாயம், தீர்மானம், கட்டுப்பாடு, என்று இருக்கிறதா என்று தெரியவில்லை. மேற்கு வங்காளம் மூலம் வருவதால், “கூட்டணி தர்மம்” ஏதாவது தடுக்கிறதா என்று தெரியவில்லை. அல்லது அவர்களுக்கும், இங்குள்ளவர்களுக்கும் ஏதாவது சம்பந்தம், தொடர்பு, இணைப்பு என்று உள்ளதா என்றும் தெரியவில்லை. “செக்யூலரிஸம்” அதசார்பற்ற நிலை, சமதர்மம்,  என்றெல்லாம் பேசிக் கொண்டு, கடைசியாக, “ஓட்டு வங்கி அரசியல்” எனும் போது, “கம்யூனலிஸமாகி” அதை  சித்தாந்தங்கள் மூலம் முலாம் பேசி, போற்றிக் கொன்டாடும் விதத்தை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

பவானி போலீசார் அறிக்கை பெற்ற மாவட்ட என்ன செய்வார்?: ஆட்சியர் இதுகுறித்து, பவானி போலீசாரும் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணை தொடர்பான அறிக்கை பவானி வருவாய்த்துறை மூலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, என்று செய்தி கூறுகிறது. சரி, அறிக்கை பெற்ற, வாங்கிக் கொண்ட மாவட்ட ஆட்சியாளர், படித்தப் பிறகு, என்ன நடவடிக்கை எடுத்தார்? இன்று 11-12-2022 ஆகிறது, ஆறு நாட்களாகியும் ஒன்றும் செய்யவில்லையா? அந்த “வடமாநிலத் தொழிலாளர்கள்”  வசதியாக அனுப்பப் பட்டு மறைந்து விட்டனரா?

© வேதபிரகாஷ்

14-12-2022.


[1]  தமிழ் முரசு, பசுக்களிடம் அத்துமீறிய வடமாநில தொழிலாளர்கள் விரட்டியடிப்பு சென்னை, 10-12-2022, பக்கம்.4.,

[2] லோகல்.அப்.தமிழ், பசுக்களுக்கு பாலியல் தொல்லை: வடமாநிலத்தவர்கள் அட்டகாசம், சக்கரவர்த்தி, By சக்கரவர்த்தி, Dec 10, 2022, 09:12 IST

[3] https://tamil.getlokalapp.com/tamilnadu-news/erode/anthiyur/sexual-harassment-of-cows-northerners-are-outraged-8542211

[4] தமிழ்.சமயம், உத்தர பிரதேசத்தில் பசுக்களை கற்பழித்த நபா் கைது, Samayam TamilUpdated: 22 May 2019, 11:12 pm

https://tamil.samayam.com/latest-news/india-news/man-held-for-raping-cows-at-shelter-in-ayodhya-up/articleshow/69450193.cms

திராவிட மேடைப் பேச்சாளர்களின் நாரசார அநாகரீக வார்த்தைப் பிரயோகம், பெண்மையைத் தூற்றும் போக்கு, மரத்துப் போன அல்லது சொரணையற்ற வசனங்கள் ஏற்றுக் கொள்ளப் படும் விதம்!

ஒக்ரோபர் 28, 2022

திராவிட மேடைப் பேச்சாளர்களின் நாரசார அநாகரீக வார்த்தைப் பிரயோகம், பெண்மையைத் தூற்றும் போக்கு, மரத்துப் போன அல்லது சொரணையற்ற வசனங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் விதம்!

திராவிட மேடைகளில், திராவிட பாரம்பரியங்களில் இப்பேச்சுகள் எல்லாம் சகஜமப்பா தான்: திமுக மேடைப் பேச்சாளிகள் 1960களிலிருந்து, இப்பொழுது வரை ஆபாசமாக, கொச்சையாக, மோசமாக பேசிவருவது ஒன்றும் புதியதல்ல. இரட்டை அர்த்தங்களில், பொருட்களில், சைகைகளில் பேசுவது-பாடுவதும் திராவிட மேடைகளில் சகஜமானதே. கவிதை நடையில், யதுகை-மோனைகளுடன், சில நேரங்களில் பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும் கூட அத்தகைய பேச்சுகளைப் பேசுவது வழக்கமே. பெரியார் முதல் அண்ணன் வரை, அண்ணா தொடர்ந்து தம்பி வரை, அறிஞர் முதல் கலைஞர் வரை இதெல்லாம் சகஜமப்பா என்று தான் ஓடிக் கொண்டிருக்கின்றன. இப்பொழுது இந்த சாதிக உருவாகிருப்பதில் என்ற கழக சாதனையும் குறைந்து வி,டப் போவதில்லை. பிறகு, கொஞ்சம் நாகரிகம் கருதி, குறைத்துக் கொண்டாலும், வழக்கமான வார்த்தைகள் வெளிவந்து விடும். இப்பொழுது இதையெல்லாம் 60-70 வயதானவர்களுக்குத் தான் தெரியும். மற்றவர்கள் மறந்திருப்பார்கள்.

அநாகரிகமான, ஒழுங்கீன பேச்சாளர்கள் திமுகவில் உருவாகுவது எப்படி?: திமுக நிர்வாகி ஒருவர் பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்கு குஷ்பு  கண்டனம் தெரிவித்திருந்தார்[1].  இந்நிலையில், இச்சம்பவத்திற்கு திமுக துணை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி வருத்தம் தெரிவித்துள்ளார்[2]. திமுகவை சேர்ந்த நிர்வாகி ஒருவர் –  பிரபல பேச்சாளரான சைதை சாதிக் பொதுமேடையில் பெண்கள் குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது[3].  விமர்சனங்களும் எழுந்துள்ளன[4]. உண்மையில் திராவிட மாடலில், இந்த திராவிடியன் ஸ்டாக்குகள் மாறிவிட்டன என்றால், இத்தகைய ஒழுன்கீனமான, கொச்சையான, தரமில்லாத பேச்சுகள் வராது, வந்திருக்காது. ஆனால், ஊக்குவிப்பதால் தான், தொடர்ந்து அத்தகைய பேச்சாளர்கள் வளர்ந்து . வளார்க்கப் பட்டு வருகிறார்கள்.

ஆர்.கே.நகரில் திமுக பொதுக்கூட்டமும், சாதிக் பேசியதும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2வது முறையாக திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து சென்னை ஆர்.கே.நகரில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் உரையாற்றி திமுக பேச்சாளர் சைதை சாதிக், பாஜகவில் 4 நடிகைகள் இருக்கிறார்கள் என்று குஷ்பு, நமிதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோரை குறிப்பிட்டு ஒருமையில் பேசினார்[5]. “நாங்கள் வட சென்னையில் கட்சியை வளர்த்தோம். அந்த காலத்திலிருந்து அண்ணன் சீதாபதியில் இருந்து, டி.ஆர்.பாலுவிலிருந்து, பலராமனில் இருந்து, இளைய அருணா வரை திமுகவில் வளர்த்து உள்ளார். இன்னும் வளர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், பாஜகவில் இருக்கும் தலைவர்களை பொறுத்தவரை 4 பேருமே ****.” என்று ஆங்கிலத்தில் தவறான அர்த்தம் தரும் வார்த்தையை பயன்படுத்தினார்[6].  “இந்தியா டுடே” இதை வெளியிட்டுள்ளது[7]. சமீபத்தில் பெண்ணை “ஐட்டம்” என்று ஒரு தொழிலதிபர் சொன்னதற்கு, மும்பை நீதிமன்றம் ஒன்றரை ஆண்டு சிறைத்தண்டனை அளித்துள்ளது. ஆனால், இங்கோ மேடையில் ஒருவர் பேசுகிறார், வீடியோ சுற்றில் உள்ளது. சட்டப் படி எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.

அமித் ஷா தலையில் மயிர் முளைத்தாலும் முளைக்கும், ஆனால், தமிழகத்தில்………: தொடர்ந்து ஆதிக், “குஷ்பு தாமரை மலர்ந்தே தீரும் என்று தலை மேல் கையை உயர்த்தி சொல்கிறார்.” என்று ஒருமையில் பேசிய சாதிக், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தலைமுடி பற்றியும், “அமித் ஷா தலையில் மயிர் முளைத்தாலும் முளைக்கும், ஆனால், தமிழகத்தில்……….,” என விமர்சித்து பேசியுள்ளார். இதனை தொடர்ந்து குஷ்பு திமுகவில் இருக்கும்போது அவரை வைத்து இளைய அருணா கூட்டம் கூட்டியதை இரட்டை அர்த்தத்தில் சைதை சாதிக் பேச அங்கு சிரிப்பலை எழுந்தது. சுதாரித்துக்கொண்ட அவர் நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை, வம்பில் மாட்டிவிடாதீர்கள் என்று கூறி அங்கிருந்தவர்களை பார்த்து சிரித்தார். அக்டோபர் 4ஆம் தேதி, 2022 அன்று, திமுக கட்சிக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வார்த்தைகள் அல்லது செயலில் ஈடுபடும் கட்சித் தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்[8]. இது ராஜா முதல் சாதிக் வரை அனைவருக்கும் பொறுந்தும் என திமுகவினருக்குத் தெரிந்திருக்கும்[9]..

குஷ்பு எதிர்ப்புத் தெரிவித்தது: இந்நிலையில், நடிகை குஷ்பு இது தொடர்பாக தனது எதிர்ப்பை பதிவு செய்தார்[10]. ட்விட்டரில் அவர், ஆண்கள் பெண்களை துஷ்பிரயோகம் செய்தால், அது அவர்கள் வளர்த்த விதமான வளர்ப்பையும், அவர்கள் வளர்ந்த நச்சு சூழலையும் காட்டுகிறது[11]. இந்த ஆண்கள் ஒரு பெண்ணின் கருப்பையை அவமதிக்கிறார்கள்[12]. அத்தகைய ஆண்கள் தங்களை #கலைஞரின் பின்பற்றுபவர்கள் என்று அழைக்கிறார்கள்[13]. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் இதுதான் புதிய திராவிடமா” என்று கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், கனிமொழியையும் அவர் டேக் செய்திருந்தார். டுவிட்டரில் இது பற்றி நூற்றுக்கணக்கில் கருத்துகள் பதிவாகின. பொதுவாக அவை திமுகவினரை விமர்சித்தன.

கனிமொழி மன்னிப்புக் கேட்டது: இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மன்னிப்பு கேட்டுள்ள கனிமொழி, ‘ஒரு பெண்ணாகவும், மனிதனாகவும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். யார் செய்தாலும், சொல்லப்பட்ட இடம் அல்லது அவர்கள் கடைபிடிக்கும் கட்சி எதுவாக இருந்தாலும் இதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. திமுக இதை பொறுத்துக்கொள்ளாது. எனது தலைவர் ஸ்டாலினின் காரணமாக இச்சம்பவத்திற்கு என்னால் வெளிப்படையாக மன்னிப்புக் கோர முடியும்’ என பதிவிட்டுள்ளார். இந்நிலையில்,  வருத்தம் தெரிவித்த கனிமொழிக்கு குஷ்பூ நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மிக்க நன்றி கனி. உங்கள் நிலைப்பாட்டையும் ஆதரவையும் உண்மையிலேயே பாராட்டுகிறேன். ஆனால் நீங்கள்  பெண்களின் கண்ணியம் மற்றும் சுயமரியாதைக்காக எப்போதும் துணை நிற்கும் ஒருவராக இருந்திருக்கிறீர்கள்” என பாராட்டியுள்ளார்.

திராவிட மேடைப் பேச்சாளர்களின் நாரசார அநாகரீக வார்த்தைப் பிரயோகம், பெண்மையைத் தூற்றும் போக்கு, மரத்துப் போன அல்லது சொரணையற்ற வசனங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் விதம்: இதை மனோதத்துவ ரீதியில் அலசினால், தொடர்ந்து ஒரு செயலைச் செய்து கொண்டிருந்தால், அது கெட்டதாக இருந்தாலும், யாரும் தடுக்காமல், கண்டிக்காமல் இருந்தால், அச்செயல் ஏற்றுக் கொள்ளப் படும் செயலாகி விடும்[14]. உதாரணத்திற்கு, பேரூந்துகளில் படிகட்டுகளில் பிரயாணம் செய்வது போன்றவை. அதே போல, பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலை மாணவர்களே, கெட்ட வார்த்தைகளை சகஜமாக உபயோகப் படுத்தி வருகிறார்கள்.  மாணவிகளும், பெண்களும் கூட அவ்வாறே பேசி வருவதை பார்க்கலாம். ஒரு நிலையில் அது “புதிய நாகரிக” அடையாளமாகக் கூட தகவமைக்கப் படுகிறது. ஆனால், நிச்சயமாக அவை சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டவையோ, அங்கீகரிக்கப் பட்டவையோ கிடையாது. “மாப் மென்டாலிடி” போன்ற கூட்டமாக சேரும் போது, அத்தகைய மீறல்கள் ஏற்படுகின்றன. இவர்களே பல நேரங்களில், நிலைகளில் இரட்டை வேடம் போடுவதை கவனிக்கலாம்.

திராவிட பாரம்பரிய கெட்ட வார்த்தை பேச்சுகள்: ஆனால், திராவிடக் கட்சி மேடைப் பேச்சு பாரம்பரியத்தில், அத்தகைய அசிங்கமான-ஆபாசப் பேச்சுகள் கடந்த ஒரு நூற்றாண்டாக சாதாரணமாகி விட்டது[15]. சில கெட்ட வார்த்தைகள் பிரயோகிப்பாதை ரசிக்கவும் செய்கின்றனர். அதனால், அவை ஊக்குவிக்கப் பட்டு, அத்தகைய பேச்சாளர்கள் தயார் செய்யப் படுகிறார்கள். அதனால், மரத்துப் போன நிலை அதாவது, ஏற்றுக் கொண்ட நிலையில் அங்கீகாரம் கிடைத்ததாகி விடுகிறது. திராவிட கழகத்தினர் பேசும் பொழுது,பெண்கள் அங்கு நிற்கக் கூட முடியாமல், காதுகளை ஒப்பித்திக் கொண்டு ஓடிய நிலையையும் தமிழகத்தில், ஏன் சென்னையிலேயே பலர் பார்த்திருக்ககலாம். இப்பொழுது, விழிப்புணர்வு ஏர்பட்டுள்ளதால், பொது கூட்டங்களில் அத்தகைய நாரசாரத்தைக் குறைத்துக் கொன்டுள்ளார்கள். ஆகவே, இத்தகைய மனப்பாங்கு மாற வேண்டும். ஏனெனில், இதுவும் வார்த்தை தீவிரவாதம், பேச்சு பயங்கரவாதம் என்றாகி விடும். “தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு….,” என்பது தமிழர்களுக்கு, திராவிடர்களுக்கு,திராவிடத்துவவாதிகளுக்கு, திராவிட ஸ்டாக்கிஸ்டுகளுக்கு, திராவிட மாடல் பேச்சாளர்களுக்குத் தெரிந்திருக்கும்.

© வேதபிரகாஷ்

28-10-2022.


[1] தமிழ்.நியூஸ்.18, பெண்கள் குறித்து இழிவாக பேசிய திமுகவினர்குஷ்பூ முறையீடுமன்னிப்புக் கேட்ட கனிமொழி, Published by:Murugesh M, First published: October 27, 2022, 18:12 IST, LAST UPDATED : OCTOBER 27, 2022, 19:49 IST.

[2] https://tamil.news18.com/news/tamil-nadu/kanimozhi-apologies-to-bjp-kusboo-for-dmk-cadre-speech-826091.html

[3] தினத்தந்தி, குஷ்பு குறித்து திமுக நிர்வாகி ஆபாச பேச்சுமன்னிப்பு கேட்ட கனிமொழி எம்பி , By தந்தி டிவி 28 அக்டோபர் 2022 7:35 AM.

[4] https://www.thanthitv.com/latest-news/kanimozhi-apologize-kushboo-tweet-dmk-meeting-145059

[5] தமிழ்.ஒன்.இந்தியா, டபுள் மீனிங்”.. பாஜகவில் 4 நடிகைகள்.. திமுக பேச்சாளரால் குஷ்புவிடம் மன்னிப்பு கேட்ட கனிமொழி,  By Noorul Ahamed Jahaber Ali, Updated: Thursday, October 27, 2022, 22:31. IST.

[6] https://tamil.oneindia.com/news/chennai/kanimozhi-apologises-kushbu-for-dmk-executives-speech-482520.html

[7] While addressing a public meeting, Sadiq said, “All four leaders are items. Khushbu says that lotus will bloom in Tamil Nadu. I say that even hair will grow back in Amit Shah’s head, but lotus has no chance of blooming in Tamil Nadu.” He further said, “Do you all know how many times my brother Ilaya Aruna did Kushbu? I mean he had done meetings with her when she was in DMK. Nearly six times, he took Kushbu and had meetings in RA Puram.”

https://www.indiatoday.in/india/story/misinterpreted-says-dmk-leader-saidai-sadiq-apologises-derogatory-remarks-bjp-leader-khushbu-2290428-2022-10-28

[8] பிபிசி.தமிழ், குஷ்புவிடம் கனிமொழி கேட்ட மன்னிப்புதிமுக பிரமுகரின் சர்ச்சை பேச்சு விவகாரத்தில் நடந்தது என்ன?, 27 அக்டோபர் 2022.

[9] https://www.bbc.com/tamil/india-63416365

[10] தினமலர், குஷ்பு பற்றி தரக்குறைவாக பேச்சு: மன்னிப்பு கேட்டார் கனிமொழி, Added : அக் 28, 2022  07:37.

[11] https://www.dinamalar.com/news_detail.asp?id=3156293

[12] தமிழ்.ஏசியாநெட்.லைவ், ஆபாசமாக பேசிய திமுக பேச்சாளர்.. கண்டனம் தெரிவித்த குஷ்பு.. மன்னிப்பு கேட்ட கனிமொழி.. நடந்தது என்ன?, vinoth kumar, First Published Oct 28, 2022, 7:19 AM IST,

Last Updated Oct 28, 2022, 7:21 AM IST

[13] https://tamil.asianetnews.com/politics/dmk-cadre-controversy-speech-kanimozhi-apologies-to-bjp-kushboo-rkfx1u

[14]   திரைப் படங்களில் இத்தகைய ஒழிங்கீனங்கள் நாகரிகமாக அல்லது ஏதோ ஏற்றுக் கொள்ள்ப் பட்டவை போல காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதனை, மக்கள் ரசிக்கும் வரையில் சென்றடைந்து உள்ளன.

[15]  இது பெரியார் முதல் இக்காலம் வரையில் காணலாம்…….உடன் பிறவா சகோதரர்களே, ரத்தத்தின் ரத்தமே, போன்றவை உதாரணத்திற்கு சொல்லலாம்.

செங்கல்பட்டு குழந்தைகள் காப்பகம், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர், பெண்-குழந்தைகளைக் கற்ப்ழிப்பது, புகார் மற்றும் வழக்குகள் (2)

திசெம்பர் 25, 2020

செங்கல்பட்டு குழந்தைகள் காப்பகம்குழந்தைகள் நலக்குழு உறுப்பினர், பெண்குழந்தைகளைக் கற்ப்ழிப்பது, புகார் மற்றும் வழக்குகள் (2)

மணிகண்டனுக்கு நீதிமன்ற தண்டனை வழங்கியது (டிசம்பர் 2017): நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், செங்கல்பட்டு குழந்தைகள் நலக்குழுத் தலைவருக்கு, இரண்டு மாத சிறைதண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பரங்கிமலையில் புனித ஜோசப் பிரான்சிஸன் சகோதரிகள் அமைப்புக்கு சொந்தமான குழந்தைகள் காப்பகம், பதிவு செய்யப்படாததால் செங்கல்பட்டு குழந்தைகள் நலக் குழு, காப்பகத்தில் இருந்து ஐந்து சிறார்களை அழைத்துச் சென்று தனியார் மையத்தில் தங்கவைத்தது. ஐந்து குழந்தைகளையும் மீட்டுத் தரக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, உயர்நீதிமன்றம் ஐந்து சிறார்களையும் உடனடியாக மீண்டும் அதே இல்லத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தாததை அடுத்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி துரைசாமி, செங்கல்பட்டு குழந்தைகள் நலக்குழுத் தலைவர் மணிகண்டனுக்கு 2 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்[1]. நீதிமன்ற உத்தரவை பின்பற்றாதது மட்டுமல்லாமல், மன்னிப்பு கேட்க கூட அவர் முன் வரவில்லை. இது போன்ற நடவடிக்கைகளை அனுமதித்தால் ஒரு தவறான முன்னுதாரணம் ஆகி விடும் எனக் கூறி மணிகண்டனுக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்[2]. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற மணிகண்டன் தரப்பு கோரிக்கையை ஏற்ற நீதிபதி, தண்டனை 2 வாரங்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.

குழந்தைகளை சீரழிக்கும் காமுகர்கள்: குழந்தை என்றால் 18 வயதிற்கு கிழேயுள்ள சிறுமி அல்லது சிறுவன் ஆகும். இதில், 3 முதல் 17 வரையுள்ள சிருமிகள், டீன் ஏஜில் உள்ள, வயதுக்கு வந்த இளம்பெண்கள் ஆவர். ஆகவே, இவர்களைத்தான், காமுகர்கள், தங்களது இச்சைக்கு சதாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை, கிருத்துவ பிடோபல் / சிறுவர் கற்ப்பழிப்பாளிகள் பற்றிதான், அதிகமாக செய்திகள் வந்துள்ளன. எப்பொழுதுவது, கூலிக் காரன், கிழவன், சிறுமியர்களிடம் சில்மிஷம் செய்ததாக, செய்திகள் வந்ததுண்டு. அவர்கள் தண்டனை பெற்ற / பெறு செய்த செய்திகளும் வந்துள்ளன / வருகின்றன. ஆனால், இந்த அரசு காப்பக கற்பழிப்புகள், பாலியல் குற்றங்கள் பற்றி விவரங்கள் வெளி வராமல் இருக்கின்றன. ஆகவே, இது பற்றிய விழிப்புணர்வு தேவை என்று தெரிகிறது. அனாதை இல்லங்களில் நடக்கும் அக்கிரமங்களைக் கண்காணிக்கப் படவேண்டும். ஏற்கெனவே அக்குழந்தைகள் பெற்றோர் அறியாமல், மற்றவர்களின் ஆதரவுடன் வளர்ந்து வரும் நிலையில், அவர்களை பாலியல் ரீதியில் பலாத்காரம் செய்வது, கற்பழிப்பது என்பது நினைத்துப் பார்க்க முடியாத காரியமாக, குற்றமாகத் தெரிகிறது. அதை செய்யத் துணியும் மற்றும் செய்து வரும் கயவர்கள், எத்தகைய கொடிய அரக்கர்களாக இருப்பர் என்பதனை அறிந்து கொள்ளலாம். ஆகவே, அவர்களுக்குக் கடுமையான தண்டனை அளிக்கப் படவேண்டும்.

காப்பகங்களில் உள்ள அதிகாரி போதை மருந்து வியாபாரத்தில் ஈடுபட்டதால் சஸ்பெண்ட் செய்யப் பட்டது (2018)[3]: தாஸ் என்கின்ற துணை தலைமை அதிகாரி (Das, assistant superintendent at the special home for children at Chengalpet) போதை மருந்து வியாபாரத்தில் ஈடுபட்டதாதத் தெரிந்தது. காப்பகத்திற்கு குழந்தைகளைப் பார்க்க வருபவர்கள் மூலம் கஞ்சா/கன்னபீஸ் போன்ற போதைப் பொருட்களை கொண்டு வருவதாகத் தெரிந்தது. இதனால், சிவகுமார், சூப்பிரென்டென்டுக்கு ஒரு மெமோவும் அனுப்பப் பட்டது. ஒரு முறை அங்கிருக்கும் சிறுவர்கள், போதையில் சிறைக் காவலரைத் தாக்கிய போது, விவகாரம் தெரிய வந்தது. அப்பொழுது அவர்களிடமிருந்து, போதைப் பொட்டலங்கள், செல்போன், சிம்கள் முதலியன பறிமுதல் செய்யப் பட்டன. காப்பகத்தில், அவையெல்லாம் தடை செய்யப் பட்டவை ஆகும். காப்பகத்தில் இருக்கும் உயர் அதிகாரிகளே, வரும் பார்வையாளர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு, இத்தகைய வேலையை செய்து வருகின்றனர் என்று “டைம்ஸ் ஆப் இந்தியா,” செய்தி வெளியிட்டது. பார்வையாளர்கள், சாப்பாடு கொண்டு தரும் சாக்கில், உணவு டப்பாக்களில், இந்த போதைப் பொருட்களை, மறைத்து வைத்து, கொடுத்து விட்டுச் செல்வதாக, அங்குள்ளவர்கள் அறிவித்தனர். இதனால், நிலைமையை விசாரிக்க ஒரு குழு வந்து விவரங்களை அறிந்தது, ஒரு அறிக்கைக் கொடுத்தது. அதன் படி, சில குறிப்பிட்ட அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தது[4].

காப்பகங்களின் அவலநிலை (மார்ச்.2016): காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில், அரசு அனுமதியின்றி, ஏராளமான காப்பகங்கள் முளைத்து வருகின்றன; அவற்றில், ஏராளமான குழந்தைகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்[5]. அந்த, ‘காப்பகங்களில்’ எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி, மோசமான நிலை உள்ளது. அங்கு பராமரிக்கப்படும் குழந்தைகள், வேலைக்கு அனுப்பப்படுவதாகவும் கூறப்படுகிறது[6]. மேலும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்; அதற்கு, அரசு அனுமதியில்லை. எனினும், முறைகேடாக, பச்சிளம் குழந்தைகள் அங்கு பராமரிக்கப்படுகின்றன.கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் 2013ல், மாவட்டம் முழுவதும், 53 அனுமதியற்ற குழந்தைகள் காப்பகங்கள் மூடப்பட்டன. மாவட்ட நிர்வாகத்தின் கண்களை மறைத்து, சில அதிகாரிகள் துணையுடன், காப்பங்கங்கள் மீண்டும் முளைத்து வருகின்றன. அதாவது, அவ்வாறு காப்பகங்களை வைப்பதால், யாருக்கு லாபம் என்று கவனிக்க வேண்டும். காப்பகங்களை வைத்து, நிதியுதவி பெறுகின்றனர், மற்றும், செலவழித்தலும், அதிகமாக பணம் மிஞ்சுகிறது, அதனை, தமது விருப்பகங்களுக்கு ஏற்றபடி உபயோகப் படுத்துகின்றன என்று தெரிகிறது. இந்த காப்பகங்கள் மீது, மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்டு செயல்படும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

© வேதபிரகாஷ்

19-12-2020 / 25-12-2020


[1] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ். செங்கல்பட்டு குழந்தைகள் நலக்குழு தலைவருக்கு 2 மாத ஜெயில் : ஐகோர்ட் உத்தரவுBy: WebDesk, December 13, 2017, 7:14:17 PM.

[2]  https://tamil.indianexpress.com/tamilnadu/chengalpattu-children-welfare-officer-2-months-jail-chennai-high-court-order/

[3] An official from the state social defence department has been suspended for his alleged involvement in drug trade at a government juvenile home. Das, assistant superintendent at the special home for children at Chengalpet, allegedly colluded with visitors to smuggle ganja (cannabis) into the home, a senior official from the department told TOI. Another official, Selvakumar, who works as the superintendent, has received a memo seeking an explanation. Last week, a group of boys attacked a guard allegedly under the influence of ganja. Sachets of the contraband, beedis, mobile phones and SIM cards – all banned items at the correctional facility – were seized by authorities. TOI reported the incident on October 3. 2018.

Times of India, Official suspended for aiding drug trade at juvenile home, Ram Sundaram | TNN | Oct 9, 2018, 05:53 IST.

[4] Insiders said higher-ups at the home colluded with visitors – families and friends of inmates – to smuggle in ganja by concealing them in bread packets and lunch boxes. Ganja addiction was common among inmates, they said. Based on the news report, a team inspected the home on October 4 and submitted a report. Disciplinary proceedings have been initiated against two officials based on the team’s report which confirmed that ganja was sneaked into the home, the official said.

https://timesofindia.indiatimes.com/city/chennai/official-suspended-for-aiding-drug-trade-at-juvenile-home/articleshow/66127333.cms

[5] தினமலர்,குழந்தைகள் காப்பகங்களில் நடக்கும் முறைகேடுகள் அம்பலம்! நிர்வாகிகளின் பணத்தாசைக்கு இரையாகும் பிஞ்சுகள் , Added : மார் 02, 2016  05:35

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=1469508&Print=1

தமிழகத்தில் ரேவ் பார்ட்டி – போதை, மது, மாது குத்தாட்டம் பார்ட்டி – ஐடி.எஞ்சினியர்கள், மாணவ-மாணவியர் கைது [2]

மே 9, 2019

தமிழகத்தில் ரேவ் பார்ட்டிபோதை, மது, மாது குத்தாட்டம் பார்ட்டிஐடி.எஞ்சினியர்கள், மாணவமாணவியர் கைது [2]

Pattipulam resort rave prty

பௌன்ஸர்கள் மூலம்தான் போதை பொருள்கள் தங்களுக்குக் கிடைத்ததாகத் தகவல்[1]: சோதனையில் ரிசார்ட்டுக்குள் கஞ்சா பொட்டலங்கள், அபின், போதை மாத்திரைகள், மது பாட்டில்கள் சிக்கின. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்[2]. மதுவிருந்தில் பிடிப்பட்டவர்களை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர்[3]. அவர்களில் சிலருக்கு போதையில் என்ன நடக்கிறது என்றுகூட தெரியவில்லை. பிடிபட்டவர்களின் விவரங்களை போலீஸார் சேகரித்துவருகின்றனர். மேலும் சட்டவிரோதமாக போதை பொருள் மற்றும் மதுவிருந்தை நடத்திய ரிசார்ட் ஊழியர்களிடமும் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்[4]. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “சம்பந்தப்பட்ட ரிசார்ட்டில் வார விடுமுறை நாள்களில் மதுவிருந்து நடப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்ததும் அங்கு சென்றோம். அப்போது நாங்கள் நடத்திய சோதனையில் மதுபாட்டில்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் சிக்கின. இந்த விருந்தில் பங்கேற்க ஆன் லைன் மூலம் முன்பதிவு நடந்துள்ளது. .டி. நிறுவனங்களில் பணியாற்றும் இன்ஜினீயர்கள், கல்லூரி மாணவர்கள், மாணவிகள், பெண் இன்ஜினீயர்கள் இந்த விருந்தில் கலந்துகொண்டுள்ளனர். அவர்களில் சிலரின் கார்களிலிருந்து கஞ்சா பொட்டலங்கள், போதை மாத்திரைகளையும் கைப்பற்றியுள்ளோம். மதுவிருந்தில் பங்கேற்க வந்தவர்களின் கார், பைக்குகளையும் பறிமுதல் செய்துள்ளோம். கேளிக்கை விருந்தில் பங்கேற்றவர்களிடம் விசாரித்தபோது பௌன்ஸர்கள் மூலம்தான் போதை பொருள்கள் தங்களுக்குக் கிடைத்ததாகத் தகவல் கிடைத்துள்ளது. இதனால் 11 பௌன்ஸர்களைப் பிடித்து விசாரித்துவருகிறோம்” என்றனர்[5].

Odour resort, Mamallapuram, villa-seized items

ஓடர் ரிஸார்டுக்கு சீல் வைக்கப் பட்டது[6]: இவ்வாறு எல்லாம் நடந்து முடிந்தது. இந்த நிலையில் லைசென்ஸ் இல்லாமல் சட்டவிரோத செயல்கள், போதை வஸ்த்துக்களுடன் கூடிய கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தியதாக கூறி, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவின்பேரில், செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. முத்துவடிவேல் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் அந்த தனியார் கேளிக்கை விடுதிக்கு நுழைவு வாயில் கேட்டை மூடி சீல் வைத்தனர்[7]. இதெல்லாம், நெறிமுறை-வழக்கத்துடன் செய்யும் செயலாகத் தெரிகிறது. முன்னரே, கண்காணிக்கப் பட்டிருந்தால், நடவடிக்கை எடுத்திருந்தால், இத்தகைய நிலைமையே வந்திருக்காதே. தொடர்ந்து, அத்தகைய குற்றங்கள் நடந்து கொண்டிருப்பதால், போலீஸார் மெத்தனமாகத் தான் இருக்கிறாற்கள், செயல்படுகிறார்கள் என்று தெரிகிறது.இந்த ரிசார்ட்டுகளில் சொந்தக்காரர்களின் பின்னணியை கவனித்தால் அவர்களில் பெரும்பாலோர் அரசியல் அரசியல் அதிகாரம் பணபலம் முதலியவற்றை பெற்றுள்ளதாக தெரிகிறது. தவிர உள்ளூர் போலீசாருக்கு இங்கு நடைபெறும் இத்தகைய சட்டமீறல்கள் பற்றி தெரிந்து இருக்கின்றது. ஆனால் மாதந்தோறும் அல்லது அவ்வப்போது அவர்களுக்கு சில பலன்கள், ஆதாயங்கள் மற்றும் பணமும் கொடுக்கப்படுவதால், அவர்கள் சட்டத்திற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்கின்றனர்.

Odour resort, Mamallapuram, off ECR-arrested-5

ஐடிடெக்கீஸ்களின் போதை, மது, மாது இரவு கேளிக்கைகள், சீரழியும் தமிழகம், சமூகம், இந்தியா!:  25 பேர் ஐடியில் வேலை செய்கிறார்கள், 31 அருகிலுள்ள இஞ்சினியர் கல்லூரியில் படிக்கிறார்கள், என்றால், படிக்க, வேலைக்கு என்று பெண்களை வெளியே அனுப்பும் பெற்றோரின் நிலை இனி என்ன? ஐடியில் வேலை செய்யும் ஆட்களுக்கும், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும் என்ன தொடர்பு? பெற்றோர் கஷ்டப் பட்டு படிக்க வைப்பது இதற்குத் தானா? போலீஸாரும் இந்த போதை-மது-மாது பார்ட்டியில் கலந்து கொண்டவர்கள் வயது 18 -25, பெரும்பாலோர் கல்லூரி மாணவர்கள். .., ரூ.3,000/- செல்லுத்தி வந்துள்ளார்கள். ..என்கிறார்கள். அப்படியென்றால், யார் அந்த பணத்தைக் கொடுத்தது? பெற்றோர்கள் வந்த பிறகே, அவர்களை அனுப்பி வைத்ததாக போலீஸார் கூறுகின்றனர். அப்படியென்றால், அவர்களுக்குத் தெரிந்துள்ளது / தெரிகிறது[8]. வழக்கம் போல ஊடகங்கள் மாறுபட்ட செய்திகளை போட்டு, வழக்கைக் குழப்பும் என்று தெரிகிறது.

Odour resort, Mamallapuram, off ECR-arrested-4

இந்திய பெண்மையை குறி வைத்து தான், இத்தகைய தாக்குதல்கள் நடக்கின்றன. உலக அழகிப் போட்டிகளிலிருந்தே, அத்தாக்குதல்கள் ஆரம்பித்து விட்டன. ஏனெனில், திடீரென்று, இந்தியாவில் அழகிகள் இருக்கிறார்கள் என்று அமெரிக்கர்கள் கண்டு பிடிக்க வேண்டிய தேவையில்லை. மத்திய அமெரிக்க மற்றும் தென்னமெரிக்க நாடுகளில் “அழகிகள்” கண்டுபிடிக்கப் பட்டார்கள். அந்நாடுகள் நான், போதை மருந்து உற்பத்தி மற்றும் உபயோகங்களுக்கு அதிகமாக பாதிக்கப் பட்டது. அமெரிக்க சமூகம் ஏற்கெனவே அழிவில் உள்ளதால், அதைப் பற்றி அவர்கள் கவலைப் படாமல், மற்ற சமூகங்களை கெடுக்கவே திட்டம் போட்டு வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பொருளாதார சதி திட்டத்தில் முக்கியமான குறி -இந்திய பெண்களும் சிறுவர்களும் தான். அவர்களை நோக்கி தங்களுடைய பொருட்களை விற்பதற்காக பலவிதமான விளம்பர யுக்திகளை கையாண்டு வருகிறார்கள். அலங்காரப் பொருட்கள் என்ற ரீதியில் உண்மைகள் தோல், தலைமுடி, கண்கள், பற்கள் இவற்றை பாதிக்கும் வகையில் உள்ள அலங்காரப் பொருட்கள்தான் அதிரடி விளம்பரங்கள் மூலம் விற்கப்படுகின்றன. அதற்கு துணையாக போகவேண்டும் என்ற ரீதியில் அழகுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இது திருமணமான தம்பதியர்களுக்கும் நடத்தப்படுவது தான், அந்த சதிதிட்டத்தில் ஒரு அங்கம் என்று கொள்ளலாம். ஏனெனில் திருமணமாகி குழந்தைகள் கொண்ட ஒரு பெண்மணி நூற்றுக்கணக்கானவர்கள் முன்பாக, தனது அழகை வெளிப்படுத்த முன்னும் பின்னும் ஆட்டிக் கொண்டும், நடந்து கொண்டும், போட்டி போட்டு, மேடை மீது வந்து செல்ல மனம் வராது. ஆனால் இப்பொழுது அந்த நிலை உருவாகியுள்ளது சீரழிவுதான் என்பதை நன்றாக தெரிந்து கொள்ளலாம்.

Odour resort, Mamallapuram, things

பெண்மை சக்தியாக, கடவுளாக பாவிக்கப் படுவதால், பெண்மை போற்றப் பட வேண்டும்: மறந்து வாழும் இந்துக்கள் – என்று நான் ஏன் குறிப்பிட்டேன் என்றால், பெரும்பான்மையினர் இந்துக்கள் எனும் போது, அதில் 50% ஆவது, ஒழுக்கமாக இருந்தாலே, இந்திய சமூகம் ஒழுக்கமாக இருக்கும். எந்தவித மேனாட்டு மோகத்தையும் எதிர்க்கலாம். பகவத் கீதையில் நுணுக்கமாக சொல்லப் பட்டுள்ள விசயங்களை நாம் கவனிக்க வேண்டும், “பெண் குணங்களில் புகழ், உயர்ந்த வாக்கு, ஞாபக சக்தி, மேதமை, உறுதி,பொறுமை, இவை அனைத்தும் நான்,” என்கிறது கீதை 10.34.குலநாசத்தால் என்றுமுள்ள குலதர்மங்கள் அழிகின்றன.  தர்மம் அழிவதனால் குலமுழுவதையும் அதர்மம் சூழ்கிறதன்றே? கீதை.1.40,” என்று குறிப்பிட்டு,கண்ணா, அதர்மம் சூழ்வதனால் குல ஸ்திரீகள் கெட்டுப் போகிறார்கள். விருஷ்ணி குலத் தோன்றலே, மாதர் கெடுவதனால் வர்ணக் குழப்பமுண்டாகிறது,” என்றும் சொல்லப்பட்டுள்ளது.

अधर्माभिभवात्कृष्ण प्रदुष्यन्ति कुलस्त्रियः।

स्त्रीषु दुष्टासु वार्ष्णेय जायते वर्णसङ्करः॥1.41, ४१॥

அதனால், இவ்வுண்மையினை அறிந்து பெண்மையினை போற்ற வேண்டும்.

© வேதபிரகாஷ்

09-05-2019

Odour resort- lady

[1] விகடன்,  ஸ்கெட்ச் போட்டது ரவுடிகளுக்கு; சிக்கியதோ..?! மாமல்லபுரம் நள்ளிரவு ரிசார்ட் நிலவரம், எஸ்.மகேஷ் வெளியிடப்பட்ட நேரம்: 13:52 (06/05/2019) கடைசி தொடர்பு:14:21 (06/05/2019).

[2] மாலைமலர், மாமல்லபுரம் சொகுசு விடுதியில் மதுவிருந்து கொண்டாட்டம் – 160 பேர் கைது, பதிவு: மே 06, 2019 10:35, மாற்றம்: மே 06, 2019 11:53.

[3] https://www.maalaimalar.com/News/District/2019/05/06103538/1240225/Mamallapuram-Luxury-Hotel-wine-party-celebration-160.vpf

[4] நியூஸ்.7.செய்தி, மாமல்லபுரம் தனியார் விடுதியில், போதை பொருள் மற்றும் மது விருந்தில் ஈடுபட்ட 153 பேர் கைது!, May 06, 2019,Posted By : Niruban

http://www.ns7.tv/ta/tamil-news/tamilnadu/6/5/2019/omr

[5] https://www.vikatan.com/news/tamilnadu/156765-160-persons-arrested-for-party.html

[6] தினத்தந்தி, போதை வஸ்த்துக்களுடன் விருந்து நடத்திய விவகாரம் : அனுமதியின்றி மதுவிருந்து நடந்திய கேளிக்கை விடுதிக்கு சீல், பதிவு : மே 07, 2019, 12:19 AM.

[7] https://www.thanthitv.com/News/TamilNadu/2019/05/07001930/1034446/police–arrested-brewing-private-hotel-mamallapuram.vpf

[8] Police said that the participants were in the age group of 18 to 25. Most of them were college students although a few IT professionals were also at the party. The participants had paid close to Rs 3,000 for entry, police added. “We could recover only a small amount of drugs and alcohol as the party was almost over. Except for the 16 organisers of the party, others were let off on station bail for the consumption of banned drugs and their parents were called. Only after their parents arrived were they allowed to go home. Some students are still at the marriage hall where they were detained as their parents are coming from other southern states,” said Ravikumar.

வட்டிக்கு பணம் கொடுத்து, கற்பை சூரையாடிய கொடூரன் தண்டனை பெற்றதால் பெண்கள் பாதிப்பு நிவர்த்தியாகி விடுமா!

ஜனவரி 20, 2017

வட்டிக்கு பணம் கொடுத்து, கற்பை சூரையாடிய கொடூரன் தண்டனை பெற்றதால் பெண்கள் பாதிப்பு நிவர்த்தியாகி விடுமா!

dharmapuri-financier-jailed-19-01-2017-dailt-thanthi

சிவராஜின் செயல்திட்டமுறையும், காம-கொக்கோகமும், வீடியோ-சிடி விவகாரங்களும்: சிவராஜ் மீதான புகாரை பலப்படுத்த அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும், புகார் கொடுக்கும் பெண்களின் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் சிவராஜால் பாதிக்கப்பட்ட மூன்று பெண்கள்  2014 அக்டோபர் 6ஆம் தேதி பாலக்கோடு போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அதில், “கடன் கொடுத்த நிதி நிறுவன அதிபர் சிவராஜ் எங்களின் வறுமை நிலையை சாதகமாக பயன்படுத்தி உல்லாசத்திற்கு அழைத்தார். வர மறுத்தபோது அதிக வட்டி தரவேண்டும் என்று கூறி மிரட்டினார். இதனால் பயந்து போன நாங்கள் அவரது பண்ணை வீட்டிற்கு சென்றோம். அங்கு சிவராஜ் எங்களை மிரட்டி உல்லாசமாக இருந்தார். இதனையடுத்து அவர் தனது செல்போனில் எடுத்த ஆபாச காட்சிகளை எங்களின் குடும்பத்தினருக்கு காட்டி விடுவதாக மிரட்டி, பலமுறை பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்று கற்பழித்தார்,” என்று கூறியுள்ளனர். தங்களை போல் இன்னும் ஏராளமான பெண்கள் சிவராஜால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

dharmapuri-financier-jailed-19-01-2017-vedaprakashபெண்மையை சுற்றியுள்ள சமுதாய-சட்டப் பிரச்சினைகள்: இதனையடுத்து புகார் கொடுத்த பெண்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், விசாரணை முழுவதையும் கேமராவில் பதிவு செய்துள்ளனர். புகாரின்பேரில் போலீஸார் நடத்திய புலன் விசாரணையில் சிவராஜ், அப் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் உள்பட 26-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. பெண்களுக்கு முறைப்படி சட்டரீதியில் பாதுகாப்பு கொடுத்தல் போன்ற விவரங்கள்தெரியவில்லை. தற்போது போலீசார் நிதி நிறுவன அதிபர் சிவராஜ் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், சிவராஜால் பாதிக்கப்பட்ட பெண்கள் அவர் மீது தைரியமாக புகார் கொடுக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். மூன்று பெண்களின் புகாரையடுத்து இந்த வழக்கு சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனால் சிவராஜை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்குள், இவ்வழக்கு முறையாக நடத்தப்படுமா என்ற சதேகம் வந்ததால், சிலர், பெரிய அளவில் விசாரணை தேவை என்று நினைத்தனர். இதை அரசியலாக்கும் விதத்தில், உள்ளூர் எம்.எல்.ஏ, தில்லி பாபு [சிபிஎம்] மற்றும் மகில இந்திய பெண்கள் இயக்கமும் சேர்ந்து ஆர்பாட்டம் நடத்தி, சிபி-சி.ஐ.டி விசாரணை தேவை என்று வற்புறுத்தினர்[1]. சிவராஜின் சொத்துகளும் பறிமுதல் செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்[2].

dharmapuri-financier-jailed-19-01-2017-sexபாதகர்கள் தண்டனை பெற்ற விவரங்கள்: இந்த வழக்கு தருமபுரி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞர் ஆர். உமா மகேஸ்வரி ஆஜரானார். இந்த வழக்கில் மாவட்ட மகளிர் நீதிபதி எம். மீரா சுமதி 8-01-2017 [புதன்கிழமை] தீர்ப்பு வழங்கினார். முதல் குற்றவாளியான வட்டிக் கடைக்காரர் சிவராஜுக்கு பாலியல் பலாத்கார சட்டப்பிரிவில் நான்கு ஆயுள் தண்டனைகள் மற்றும் ரூ. 4,000 அபராதம் விதிக்கப்பட்டது[3].  மேலும், 67ஏ தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவின் கீழ் 12 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 2 லட்சம் அபராதமும், 66இ தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவின் கீழ் 8 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 40 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது[4]. அபராதத் தொகை மொத்தம் ரூ. 2.44 லட்சம்[5]. இச்சம்பவத்தில் செல்லிடப்பேசியில் இருந்த விடியோக்கள் வெளியே உலவக் காரணமாக இருந்தவன் அதே பகுதியைச் சேர்ந்த செல்லிடப்பேசி பழுதுபார்க்கும் தொழில் செய்து வந்தவன் மா. முன்னா[6]. அவனுக்கு பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் மொத்தம் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 61 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது[7]. இரு குற்றவாளிகளின் கோரிக்கைகளை ஏற்று சிறைத் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கலாம் என்றும் நீதிபதி எம். மீரா சுமதி உத்தரவிட்டார்[8].

dharmapuri-financier-jailed-19-01-2017-video-1கற்பை சூரையாடிய கொடூரன் தண்டனை பெற்றதால் பெண்கள் பாதிப்பு நிவர்த்தியாகி விடுமா!: பாதகர்கள் தண்டனை பெற்றது சட்டப்படி நடந்துள்ளது என்றாலும், பெண்கள் பாதிப்பு சரிசெய்யமுடியாதது ஆகும். மனம் மற்றும் உடல் ரீதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கஷ்டங்களை, உபாதைகளை யார் சரிசெய்ய முடியும்? நடந்தது மாற்ற முடியும், சீர்செய்யமுடியும் என்ற நிலையாகாது.

  • ஒரு பெண் சீரழிந்தால், ஒரு குடும்பம் சீரழிகிறது;
  • ஒரு குடும்பம் சீரழிந்தால், ஒரு சமுதாயம் சீரழிகிறது;
  • ஒரு சமுதாயம் சீரழிந்தால், ஒரு தேசம் / நாடு சீரழிகிறது;

ஆகவே, குறிப்பிட்ட நாட்டின் மீது நடத்தப்படும் கலாச்சார தாக்குதல், இவ்வாறு பலநிலைகளில் பாதித்து, சீரழித்து வருவதை பொறுப்புள்ளவர்கள் மிக்க அக்கரையுடன் கவனிக்க வேண்டும். இன்றளவில், சினிமாநடிகைகளிடம் கற்பு, கலாச்சாரம், குடும்பம் முதலியவற்றைப் பற்றி கருத்து கேட்டு, விளம்பரம் செய்கிறார்கள். இதனால், அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது போன்ற தோற்றத்தையும் ஏற்படுத்துகின்றார்கள். நிர்வாணமாக நடிப்பேன் என்று உரிமைகள் பேசி, அவ்வாறே தொழில் செய்யும் நடிகைகள் எப்படி முன்னுதாரணமாக இருக்க முடியும்?

© வேதபிரகாஷ்

20-01-2017

dharmapuri-financier-jailed-19-01-2017-video-2

[1] The Hindu, Plea for CB-CID probe , DHARMAPURI: OCTOBER 16, 2014 00:00 IST UPDATED: MAY 24, 2016 13:53 IST.

[2]The Communist Party of India (Marxist) staged a demonstration here at Palacode demanding CB-CID probe into the case of a local financier who was involved in sexual harassment of women. The financier Sivaraj was arrested last week [17-05-2016] on the charges of sexually harassing women. The demonstration was led by CPI (M) MLA Dilli Babu. Members of the All India Democratic Women’s Association also took part in the demonstration. The CPI (M) also demanded confiscation of the property belonging to Sivaraj.

 http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/plea-for-cbcid-probe/article6504755.ece

[3] தினமணி, பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து விடியோ எடுத்த வழக்கில் வட்டிக் கடைக்காரருக்கு 4 ஆயுள் தண்டனை, By தருமபுரி,  |   Published on : 19th January 2017 08:44 AM.

[4] http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2017/jan/19/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-4-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-2634850.html

[5] தினகரன், பெண்களை ஆபாச வீடியோ எடுத்து பலாத்காரம், பாலக்கோடு பைனான்சியருக்கு 4 ஆயுள் தண்டனை : தர்மபுரி கோர்ட் தீர்ப்பு, 2017-01-19@ 01:05:08

[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=273446

[7] The Hindu, Financier gets four life sentences for sexual abuse, DHARMAPURI: JANUARY 19, 2017 00:00 IST; UPDATED: JANUARY 19, 2017 04:00 IST.

[8] The District Mahila Court here on Wednesday [18-01-2017] convicted financier M. Sivaraj (44) of Palacode to four life sentences and imposed a fine of Rs. 2.44 lakh on him for sexually abusing women. The life sentences are to run concurrently. According to prosecution, Sivaraj sexually abused women who had availed themselves of loans from his firm, but could not repay the dues in time. He videographed the act on his mobile phone and used this to threaten them into submitting to sexual abuse again. The entire scandal came to light when Sivaraj gave his mobile phone to a local service centre to set right a snag. Munna, the owner of the service centre, after witnessing the obscene videos spread them in social media. On a complaint preferred by Vijana, village administrative officer, the Palacode Police arrested Sivaraj and M. Munna in October 2014 and filed a case in the District Mahila Court. The Mahila Court Judge M. Meera Sumathi found both the accused guilty of the charges. The Judge convicted Sivaraj to four life sentences and a fine of Rs. 4,000, eight years imprisonment and a fine of Rs. 40,000 under Section 66-E of the Information Technology Act 2000 (violation of privacy) and another 12 years imprisonment with a fine of Rs. 2 lakh under Section 67-A (publishing or transmitting obscene material in electronic form). The Judge sentenced Munna to three years imprisonment and a fine of Rs. 50,000 under Section 67-A of IT Act, two years and a fine of Rs. 10,000 under 66-B of IT Act and one year imprisonment and a fine of Rs. 1,000 under Section 292 IPC (publicly exhibiting or circulating obscene material). Munna’s prison terms will run concurrently.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Financier-gets-four-life-sentences-for-sexual-abuse/article17057897.ece

நவநாகரிகமான வேலை பார்த்த அரசு அதிகாரியான மனைவி, கம்ப்யூட்டர் இஞ்சினியர் கணவர், இரு குழந்தைகளை விட்டு கள்ள உறவில் ஈடுப்பட்டது, இறந்தது!

ஜனவரி 17, 2017

நவநாகரிகமான வேலை பார்த்த அரசு அதிகாரியான மனைவி, கம்ப்யூட்டர் இஞ்சினியர் கணவர், இரு குழந்தைகளை விட்டு கள்ள உறவில் ஈடுப்பட்டது, இறந்தது!

sruti-rajesh

மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வழக்கறிஞரை சுட்டு கொன்று தன் தந்தையுடன் போலீசில் சரணடைந்த கணவர்: மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த வழக்கறிஞரை சுட்டு கொன்ற ரியல் எஸ்டேட் அதிபர், தன் தந்தையுடன் போலீசில் சரணடைந்தார். கள்ளக்காதலனை இழந்த துக்கத்தில் அந்த பெண்ணும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்[1]. பெங்களூருவில், கள்ளத்தொடர்பு விவகாரத்தில் வக்கீலை சுட்டுக்கொன்ற வழக்கில் கள்ளக்காதலியின் கணவர்-மாமனார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர், என்று சாதாரணமாக செய்திகள் வந்தாலும், திருமண பந்தத்திற்கு அப்பால், பெண்கள் உறவு வைத்துக் கொள்வது கேபவலமாக இருக்கிறது. நவயுக நாகரிக கலாச்சாரத்தின் தாக்கத்தினால், இவ்வாறு பெண்கள் சீரழிவது, சமூகத்தையே சீரழிக்கும் செயலாக மாறி வருகிறது. பெண்கள் இவ்வாறு கள்ள உறவு வைத்திருப்பதும், குடும்பங்கள் சீரழிவதும் கவலைக்குரியதாக உள்ளது.

amit-sruti-gowdaரெயில்வேயில் பஞ்சாயத்து மேம்பாட்டு அதிகாரியாக வேலை செய்யும் பெண்ணிற்கு கள்ள உறவு தேவையா?: கைதானவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பெங்களூரு புறநகர் நெலமங்களாவை சேர்ந்தவர் கேசவ மூர்த்தி. சமீபத்தில் இவர் ஜனதா தள் (எஸ்)சிலிருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தார். இவருடைய மகன் அமித் (Amith Keshavamurthy, வயது.35)[2]. திருமணம் ஆன இவர் ராஜேஷ் கவுடாவின் தந்தையும், ரியல் எஸ்டேட் அதிபருமான கோபால கிருஷ்ணாவுக்கு, 78, வக்கீலாக பணியாற்றி வந்தார். அலுவலகத்தில் பேசிவந்தது, நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியது. இவருக்கும், அரசு அதிகாரியாக [panchayat development officer in Railway Gollahalli] பணியாற்றி வந்த ஸ்ருதி (29) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது[3]. ஸ்ருதி, ராஜேஷ் (35) என்பவரின் மனைவி ஆவார். ராஜேஷ், கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆவார்[4]. ஆக கணவன் – மனைவி படித்திருந்தும், பணமிருந்தும், பெண் படிதாண்டியுள்ளாள் என்றால், அது பெண்ணின் உரிமைகளைக் காட்டுகிறது.

amit-shot-sruti-for-extramarital-relationship-17_01_2017_013_009கணவனுக்கு விவகாரம் தெரிய வந்தது, துப்பாக்கி சூட்டில் முடிந்தது: இந்த நிலையில், கள்ளத்தொடர்பு விவகாரம் கணவன் ராஜேசுக்கு தெரியவந்துள்ளது[5]. இதையறிந்த ராஜேஷ், ஸ்ருதியை எச்சரித்து, கண்டித்துள்ளார்[6]. இதையடுத்து கள்ளத்தொடர்பை கைவிடும்படியும் ஸ்ருதியிடம், ராஜேஷ் கூறியுள்ளார். இருப்பினும், ஸ்ருதி தனது கள்ளத்தொடர்பை கைவிடவில்லை என கூறப்படுகிறது. இருவரையும் கையும், களவுமாக பிடித்தார்.  இது குறித்து ராம்நகரில் வசிக்கும் ஸ்ருதியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். அமித்தை சந்திப்பதில்லை என்று ஸ்ருதி உறுதியளித்தார். ஆனாலும் அது காற்றில் பறந்தது. இதையடுத்து ராஜேஷ், ஸ்ருதியின் காரில் ஜி.பி.எஸ்., கருவியை பொருத்தி, கண்காணிக்க துவங்கினார். பல முறை ஸ்ருதியின் கார், பெங்களூரை தாண்டி சென்றதை ராஜேஷ் அறிந்தார் கடந்த, ஜனவரி 13ம் தேதி 2017 மதியம், வீட்டிலிருந்து ஸ்ருதி கிளம்பிய போது, சந்தேகமடைந்த ராஜேஷ், தந்தை கோபால கிருஷ்ணாவுடன், ஸ்ருதியின் காரை, மற்றொரு காரில் பின் தொடர்ந்தார். வழியில் மதனநாயக்கனஹள்ளி ஜங்ஷனில் அமித்தை ஏற்றிக்கொண்டு, ஹெசர்கட்டா பிரதான சாலை, ஆச்சார்யா கல்லுாரி அருகில் ஸ்ருதி, அமித் சென்றனர். அங்கு காரினுள் அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். பின் தொடர்ந்து வந்த ராஜேஷ், ஸ்ருதியின் கார் அருகே சென்று, கதவை திறக்கும்படி கோபத்துடன் கூறினார். இருவரும் இறங்க மறுத்தனர். ஆத்திரமடைந்த அவர்களில் ஒருவர், அமித்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்[7]. போலீஸ் விசாரணையில் யார் சுட்டது என்று தெளிவாக தெரியவில்லை. தந்தை, மகனை காப்பாற்றுவதற்காக தான் சுட்டதாகவும் தெரிகிறது. ஏனெனில், எப்படி சுட்டார் என்று செய்து காட்ட சொன்னபோது, அவரால், சரிவர செய்ய முடியவில்லை[8].

raj-vista-hotel-where-sruti-committed-suicideசுடபட்ட கணவனை மருத்துமனைக்குக் கூட்டிச் சென்றது, இறந்தது, தற்கொலை செய்து கொண்டது: ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவரை காப்பாற்ற, அருகிலிருந்த சப்தகிரி மருத்துவமனைக்கு ஸ்ருதி காரில் சென்றார். மருத்துவமனையில் அமித் இறந்து விட்டார்[9]. இதற்கிடையில், ராஜேஷும், கோபால கிருஷ்ணாவும், சோழதேவனஹள்ளி காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அதிர்ச்சியடைந்த ஸ்ருதி, மருத்துவமனையிலிருந்து வெளியேறி, அருகிலுள்ள, ‘ராஜ்விஸ்டா’ ஓட்டலில் அறை எடுத்து, தன் சகோதரர் கீர்த்தி கவுடாவுக்கு போன் செய்து, நடந்த விஷயங்களை கூறினார்[10]. தான் வாழ விரும்பவில்லை என்றவாறு, போனை துண்டித்தார். உடனடியாக ஓட்டலுக்கு வந்த கீர்த்தி கவுடா, மாற்று சாவி மூலம், கதவை திறந்து பார்த்தபோது, ஸ்ருதி, மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்திருப்பது தெரிந்தது.கொலை, தற்கொலை குறித்து, சோழதேவனஹள்ளி போலீசார் விசாரித்தனர்.

போலீஸ் விசாரணையில் தெரிந்த விவரம் வருமாறு: கடந்த சில மாதங்களாக ஸ்ருதியின் நடத்தையில் அவருடைய கணவர் ராஜேசுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஸ்ருதியின் நடவடிக்கையை கண்காணிக்க கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருடைய காரில் ராஜேஷ் ஜி.பி.எஸ். கருவி பொருத்தியுள்ளார். சம்பவத்தன்று ரெயில்வே கொல்லஹள்ளியில் நடைபெறும் அதிகாரிகளின் கூட்டத்திற்கு செல்வதாக கூறி ஸ்ருதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால், ஸ்ருதியின் கார் எசருகட்டா ரோட்டில் சென்றுள்ளது. இதை காரில் உள்ள ஜி.பி.எஸ். கருவி மூலம் ராஜேஷ் அறிந்து கொண்டார். மேலும், ஸ்ருதி தனது கள்ளக்காதலனை சந்திக்க செல்வதை ராஜேஷ் உறுதியாக நம்பினார். இதுபற்றி அவர் தனது தந்தை கோபால கிருஷ்ணாவிடம் கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் அங்கு சென்றுள்ளனர். அப்போது, காரின் உள்ளே ஸ்ருதியும், அமித்தும் இருந்துள்ளனர். அப்போது, ஆத்திரமடைந்த ராஜேஷ் துப்பாக்கியால் அமித்தை சுட்டு கொலை செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ருதி தனியார் தங்கும் விடுதிக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும், சோழதேவனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து அமித்தை கொலை செய்ததாக ஸ்ருதியின் கணவர் ராஜேசையும், கொலைக்கு உடந்தையாக செயல்பட்டதாக ஸ்ருதியின் மாமனார் கோபால கிருஷ்ணாவையும் கைது செய்தனர்.

sruti-gowda-amitவயதான பாசக்கார தந்தை, மகனை காப்பாற்ற தான் சுட்டதாக கூறிக்கொண்டது: முன்னதாக ‘தனக்கு வயது அதிகம் என்பதால் கொலையை தான் செய்ததாக கூறி போலீசில் சரண் அடைகிறேன். நீ உனது இரு குழந்தைகளையும் நன்றாக வளர்க்க வேண்டும்‘ என கோபால கிருஷ்ணா தனது மகன் ராஜேசிடம் கூறி போலீசில் சரண் அடைய முயன்றதும் தெரியவந்தது[11]. ஆனால், அவரிடம் வேலை பார்த்த அமித்திற்கும் அந்த எண்ணம் இல்லை, படி தாண்டிய ஸ்ருதியிடமும் இல்லை. ருந்திருந்தால், இரு உயிர்கள் போயிருக்காது, இருவர் ஜெயிலுக்கு ஆக வேண்டாம். இரு குடும்பங்களும் இத்தகைய நிலையை அடைந்திருக்க வேண்டாம். கைதான இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்[12].

© வேதபிரகாஷ்

17-01-2017

amti-shot-sruti-17_01_2017_013_013

[1] தினமலர், கள்ளக்காதலன் சுட்டுக்கொலைபெண் தற்கொலை : கணவர், மாமனார் போலீசில் சரண், பதிவு செய்த நாள். ஜனவரி.16, 2017.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1691887&Print=1

[2] Times of India, woman ends life after boyfriend is shot dead, TNN | Jan 14, 2017, 11.35 AM IST.

[3] http://timesofindia.indiatimes.com/city/bengaluru/bengaluru-woman-ends-life-after-boyfriend-is-shot-dead/articleshow/56533149.cms

[4] தினத்தந்தி, கள்ளத்தொடர்பு விவகாரத்தில் வக்கீல் சுட்டுக்கொலை கள்ளக்காதலியின் கணவர்மாமனார் கைது திடுக்கிடும் தகவல்கள், மாற்றம் செய்த நாள்: செவ்வாய், ஜனவரி 17,2017, 3:50 AM IST; பதிவு செய்த நாள்: செவ்வாய், ஜனவரி 17,2017, 3:50 AM IST

[5] http://www.dailythanthi.com/News/Karnataka/Bangalore/2017/01/17035002/Clandestine-dealingsIn-the-case-ofLawyer-shot-dead.vpf

[6] http://www.dinamalar.com/news_detail.asp?id=1691887&Print=1

[7] Police said Gopalkrishna used his licensed revolver to shoot at Amith but they said it’s not clear who exactly pulled the trigger. One bullet landed on the left side of Amith’s chest and another in his right shoulder.

http://timesofindia.indiatimes.com/city/bengaluru/bengaluru-woman-ends-life-after-boyfriend-is-shot-dead/articleshow/56533149.cms

[8] According to an investigating officer, Gopalakrishna was vehemently claiming that he shot the victim in an attempt to save his son, but when the police asked him to give a demonstration of how he fired the gun by giving him an empty pistol, he was not able to do it. After that, he agreed that he tried to save his son. Meanwhile, the cops found remains of gun powder on Rajesh’s hand. But, by then Rajesh had also claimed that he was the one who killed Amith.

http://bangaloremirror.indiatimes.com/bangalore/crime/murder-of-his-wifes-lover-rajesh-now-in-police-custody/articleshow/56575827.cms

[9] Bangalore Mirror, MURDER OF HIS WIFE’S LOVER: RAJESH NOW IN POLICE CUSTODY, Bangalore Mirror Bureau | Jan 16, 2017, 04.00 AM IST

[10] http://bangaloremirror.indiatimes.com/bangalore/crime/murder-of-his-wifes-lover-rajesh-now-in-police-custody/articleshow/56575827.cms

[11] Deccan Herald, Woman ends life after kin of husband shoots dead her lover, Bengaluru, Jan 14, 2017, DHNS Tuesday 17 January 2017, News updated at 3:57 PM IST.

[12] http://www.deccanherald.com/content/591420/woman-ends-life-kin-husband.html

18-பெண்களைக் கற்பழித்த சாமுவேலும், அமைதியாக இருக்கும் பெண்ணியப் போராளிகளும், சமூக ஆர்வலர்களும், சட்ட நிபுணர்களும் (தொடரும் செக்ஸ் குற்றங்கள்-3)!

ஒக்ரோபர் 12, 2016

18-பெண்களைக் கற்பழித்த சாமுவேலும், அமைதியாக இருக்கும் பெண்ணியப் போராளிகளும், சமூக ஆர்வலர்களும், சட்ட நிபுணர்களும் (தொடரும் செக்ஸ் குற்றங்கள்-3)!

samuel-facebook-love-photos-removed-from-the-website

சாமுவேலிடம் மாட்டிக் கொண்ட பெண்களைப் பற்றிய விசாரணை: போலீசார் சாமுவேலுவை கைது செய்த பிறகு அவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்ந்து ரகசியமாக காவல் நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர். குறிப்பாக உல்லாசமாக இருக்கும் வீடியோவை காட்டி மிரட்டியதால் பல லட்சம் ரூபாய் பறிகொடுத்த பெண்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் புகார் அளித்து வருகின்றனர். சாமுவேலுக்கு உடந்தையாக இருந்த நெருங்கிய நண்பர்கள் இரண்டு பேருக்கு இந்த மோசடியில் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் போலீசார் கையில் சிக்கி உள்ளது. இதனால் ஓரிரு நாளில் இரண்டு பேரையும் பிடித்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும், சாமுவேலுவால் பாதிக்கப்பட்ட பெண்கள் யார் யார் என்ற பட்டியலை போலீசார் சேகரித்து வருகின்றனர். பணத்தை இழந்த பெண்கள் எத்தனை பேர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாமுவேல் மீது புகார்கள் குவிந்து வருவதால் அவனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

samuel-sex-case-beauty-parlour-nexus

சாமுவேலின் மீது குவிந்த புகார்கள்: முன்னர் பாதிக்கப் பட்ட பெண்கள் யாரும் புகார் கொடுக்கவில்லை[1]. ஆனால், சிந்தாதிரிபேட்டை பெண் புகார் கொடுத்த பிறகு, மற்ற பெண்களும் புகார் கொடுக்க முன்வந்தனர். இதற்கிடையில் அவரால் பாதிக்கப்பட்ட சென்னை அண்ணாநகரை சேர்ந்த இளம்பெண் ஒருவரும் சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். சாமுவேலிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவரது வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டது. காதல் மன்னன் சாமுவேல் 27-09-2016 அன்று மாலை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 v-samuel-with-a-girl-9

இளம்பெண்களை வளைத்து தனது காதல் வலையில் விழ வைத்தது எப்படி?: கொக்கோக சாமுவேல் – காதல் மன்னன் சாமுவேல் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்து உள்ளார். வாக்குமூலம் விவரம் வருமாறு[2]: “கடந்த 2 வருடங்களாக நான் பெண்களோடு பழக ஆரம்பித்தேன். ‘முகநூல்மூலம் தான் பெண்களோடு எனக்கு பழக்கம் ஏற்பட்டது. ‘முகநூல்மூலமே எனது காதலை பெண்களிடம் தெரிவித்தேன். காதலில் பெண்கள் விழுந்ததும், அடுத்து திருமண ஆசை காட்டுவேன். திருமண ஆசை காட்டியதும், பெண்கள் என்னோடு நெருக்கமாக பழகுவார்கள்இதை பயன்படுத்தி எனது இதய ராணிகளை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகளுக்கு அழைத்து செல்வேன். அங்கே கடலில் குளிக்க வைத்து பெண்கள் அழகை ரசித்தேன்இவ்வாறு பெண்களை வளைத்து அடுத்தகட்டமாக உல்லாசத்தில் ஈடுபடுவேன். ரகசியமாக செல்போன்கள் மூலம் உல்லாச காட்சிகளை படம்பிடிப்பேன்.

  1. முதலில் எனது வலையில் விழுந்தது வேலூரை சேர்ந்த அழகான பட்டதாரி பெண் ஆவார்.
  2. அடுத்து மயிலாப்பூரை சேர்ந்த கோடீஸ்வரரின் மகளும் எனக்கு இன்ப விருந்து அளித்தார்.
  3. 4 பெண்களிடம் மட்டுமே நான் தவறாக நடந்து உள்ளேன். அந்த காட்சிகளை தான் ஆபாச படங்களாக இணையதளங்களில் எனது எதிரிகள் வெளியிட்டு விட்டனர்.
  4. ஆனால் 10–க்கும் மேற்பட்ட பெண்களிடம் நான் பழகி இருக்கிறேன்.
  5. ஆனால் என்னோடு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்த மாணவியை உயிருக்கு உயிராக காதலித்தேன்

அந்த மாணவியையே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தேன். அந்த கனவு இனிமேல் நிறைவேறாது. பெண்களோடு ஏற்பட்ட பழக்கத்தால் படிப்பில் கோட்டை விட்டு, என்ஜினீயரிங் படிப்பை என்னால் நிறைவு செய்ய முடியவில்லை. என்னோடு நெருக்கமாக பழகிய பெண்கள் அனைவரும் தானாக விரும்பியே என்னோடு படுக்கையை பகிர்ந்து கொண்டனர். நான் யாரையும் வற்புறுத்தவோ, கட்டாயப்படுத்தவோ இல்லை”, இவ்வாறு சாமுவேல் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்[3].

v-samuel-with-a-girl-10

என்னோடு நெருக்கமாக பழகிய பெண்கள் அனைவரும் தானாக விரும்பியே என்னோடு படுக்கையை பகிர்ந்து கொண்டனர்: “பெண்களோடு ஏற்பட்ட பழக்கத்தால் படிப்பில் கோட்டை விட்டு, என்ஜினீயரிங் படிப்பை என்னால் நிறைவு செய்ய முடியவில்லை. என்னோடு நெருக்கமாக பழகிய பெண்கள் அனைவரும் தானாக விரும்பியே என்னோடு படுக்கையை பகிர்ந்து கொண்டனர். நான் யாரையும் வற்புறுத்தவோ, கட்டாயப்படுத்தவோ இல்லை”, இவ்வாறு சாமுவேல் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்[4] என்பதே வேடிக்கையாக இருக்கிறது.  “தானாக விரும்பியே என்னோடு படுக்கையை பகிர்ந்து கொண்டனர்”, என்பது மிகவும் அபத்தமானது. இது பெண்களையே கேவலப்படுத்துவதாகும். பணக்காரப் பிள்ளை, கார்-சொத்து எல்லாம் இருக்கிறது என்று தன்னைப் பற்றி விளம்பரப் படுத்தி, பெண்ணின் மனதில் ஆசையை வளர்த்து, “உன்னையே கல்யாணம் செய்து கொள்கிறேன்”, என்று பேராசையை ஊட்டி, பிறகு, லாட்ஜுக்குக் கூட்டிச் சென்று கற்பழித்தது, சாதாரணமான விசயம் அல்ல. உண்மையில் 18-பெண்களை கற்பழித்தான் என்றுதான் அவன் மீது வழக்குப் போடவேண்டும். இத்தகைய காமக்கொடூரனைப் பற்றி, ஊடகங்கள் அமுக்கி வாசிப்பதே பெரிய பாவம் ஆகும். அதனை ஆண்டவன் நிச்சயம் மன்னிக்க மாட்டான்.

v-samuel-with-a-girl-11

தவறான பிள்ளையை நாங்கள் பெற்றுவிட்டோம். எனது பிள்ளை செய்த தவறுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுங்கள்’’: சாமுவேல் மீது பெண்களை மானபங்க படுத்துதல், ஆபாச படங்கள் எடுத்தல் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய 3 சட்டப்பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்கு போட்டு உள்ளனர். சாமுவேலின் பெற்றோர், ‘‘தவறான பிள்ளையை நாங்கள் பெற்றுவிட்டோம். எனது பிள்ளை செய்த தவறுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுங்கள்’’ என்று தெரிவித்ததாக பெண் போலீசார் தெரிவித்தனர். அவர்களே அவனது செயல்களுக்கு ஒத்துழைத்த பிறகு, இவ்வாறு சொல்வதில் என்ன பிரயோஜனம்? இதனால், போன மானம் பெண்களுக்கு திரும்ப வருமா? இப்படித்தானே, அவர்கள் யோசித்திருக்க வேண்டும். போலீசாரின் விசாரணைக்கு சாமுவேல் முழு ஒத்துழைப்பு கொடுத்தார், என்று ஊடகங்கள் இப்பொழுது கூறின. அப்படியென்றால், புகார் கொடுத்தவுடன் மறைந்திருக்க வேண்டாமே? நான்கு பெண்களுடன் அவர் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் ‘வாட்ஸ்–அப்’பில் வெளியாகி உள்ளது, அவரது செல்போனிலும், அந்த காட்சிகள் பதிவாகி உள்ளன, முதலியவற்றை போலீசார் ஆதாரமாக வைத்துள்ளனர்.

v-samuel-with-a-girl-12

2014லிலிருந்து சமூக ஊடகங்கள் மூலம் பெண்களை ஏமாற்றி சீரழித்து வந்த சாமுவேல்[5]: கடந்த இரண்டு ஆண்டுகளாக இவ்வாறு பேஸ்புக், வாட்ஸ்-அப் முதலியவற்றின் மூலம் ஏமாற்றி வந்துள்ளான். பெற்றோர் வளர்த்த விதம், பியூட்டி பார்லர் வைத்து தாய் வியாபாரம் செய்து வரும் போது, அங்கு சாமுவேல் வந்து, பெண்களை பார்த்து வந்தது, பழகியது, பிறகு படிப்படியாக அவர்களை காமவலையில் விழ வைத்தது, முதலியவை திட்டமிட்ட செயலாக இருக்கிறது[6]. அத்தாய் நினைத்திருந்தால், அங்கேயே தடுத்திருக்கலாம். ஒரு பெண்ணாக, பெண்களை அவ்வாறு தன் மகனே கற்பழிக்கிறான் எனும்போது, சும்மா இருக்க மாட்டாள். ஆனால், அவர் அவ்வாறு இருந்தது, பல கேள்விகளை எழுப்புகின்றன. பெற்றோர் உடந்தையாக இருந்ததும் அதிர்ச்சியாக இருக்கிறது. தறுதலை பிள்ளையைப் பெற்றோம் என்று பிறகு வருந்தினாலும்[7], நடந்தவற்றை மாற்ற முடியாது. ECR / OMR பண்ணை வீட்டில், கேமராக்கள் வைத்து, அவ்வாறு செய்துள்ளான் என்றால், அதற்கும் தொடர்பு இருக்கின்றது. ஏதோ ஒரு பரஸ்பர உடன்பாட்டோடு செய்யப்பட்டு வந்தது என்று தெரிகிறது. இணைதளங்களில் உள்ள வீடியோக்களும், அவனது “செய்முறை திட்டத்தை” நன்றாகவே விளக்குகின்றன[8].

© வேதபிரகாஷ்

12-10-2016

v-samuel-with-a-girl-13

[1] New Indian Express, Chennai engineering student held for circulating obscene pictures of women, By Express News Service  |   Published: 28th September 2016 12:11 AM Last Updated: 28th September 2016 12:12 AM

[2] தினத்தந்தி, சென்னையில், காதல் மன்னன் கைது பெண்களின் ஆபாச படங்களை முகநூலில் வெளியிட்டு லீலையில் ஈடுபட்டது அம்பலம் , பதிவு செய்த நாள்: புதன், செப்டம்பர் 28,2016, 1:33 AM IST; மாற்றம் செய்த நாள்: புதன், செப்டம்பர் 28,2016, 5:15 AM IST.

[3] http://www.dailythanthi.com/News/Districts/Chennai/2016/09/28013336/in-ChennaiKing-of-RomanceArrested.vpf

[4] http://www.dailythanthi.com/News/Districts/Chennai/2016/09/28013336/in-ChennaiKing-of-RomanceArrested.vpf

[5] NewsGlitz – Next Generation Tamil News Channel – https://www.youtube.com/watch?v=qIh-72-SyiM

[6] ராஜ் டிவியின் கோப்பியம் – https://www.youtube.com/watch?v=eyFWJJkKA3A

[7] இளம்பெண்களுடன் ஆபாசமாக படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய இன்ஜினியரிங் மாணவர் சாமுவேல். எச்சை பையன் – https://www.youtube.com/watch?v=kbg7NrhGXhI

[8] Leaked: Samuel chennai engineer scandal | cheated more then 15 girls – https://www.youtube.com/watch?v=ccJ1R8V-gUg

 

18-பெண்களைக் கற்பழித்த சாமுவேலுக்கு ஒத்துழைத்த பெற்றோர், உற்றோர், மற்றோர் – பிறகு வருந்தியதால், இதெல்லாம் திரும்பப் பெறும் விவகாரங்களா என்ன? (தொடரும் செக்ஸ் குற்றங்கள்-2)

ஒக்ரோபர் 12, 2016

18-பெண்களைக் கற்பழித்த சாமுவேலுக்கு ஒத்துழைத்த பெற்றோர், உற்றோர், மற்றோர் – பிறகு வருந்தியதால், இதெல்லாம் திரும்பப் பெறும் விவகாரங்களா என்ன? (தொடரும் செக்ஸ் குற்றங்கள்-2)

v-samuel-with-a-girl-3

பிளேட் நாடகம் ஆடி அனைத்தையும் சாதித்தான்[1]: சாமுவேல் காதல் வலையில் சிக்காத இளம் பெண்களிடம் பிளேடால் கையை கிழித்து தற்கொலை செய்து கொள்வது போல் நடித்து அவர்களை தன் வலையில் சிக்கவைத்ததும் தற்போது தெரியவந்துள்ளது. பல முறை பல காரணங்களுக்காக சாமுவேலை பெற்றோர் கண்டித்தபோது அவர்களிடலும் இதே பாணியை அவன் கடைபிடித்துள்ளான். அவனது பெற்றோருக்கு திருமணம் நடந்து 10 ஆண்டுகள் குழந்தை இல்லையாம். பல கோயில்கள் ஏறி இறங்கி பிறந்த குழந்தை என்பதால், அவன் செய்த தவறுகளை பெற்றோர் கண்டுகொள்ளாமல் இருந்ததும் தற்போது தெரியவந்துள்ளது[2]. திருமணம் ஆகி, பத்தாண்டுகள் குழந்தை இல்லை, பிறகு பிறந்தது என்றால், அவனை ஒழுங்காக வளர்த்திருக்க வேண்டும். ஆனால், தந்தையும், தாயாரும் இப்படி பியூட்டி பார்லர்-கார் விற்பனை என்று வைத்துக் கொண்டு, அவனுக்கு உடந்தையாக இருந்தது, 18-பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கியுள்ளது. இனி அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் நிலை எப்படி இருக்குமோ?

v-samuel-with-a-girl-4சாமுவேலும், அவனது பெற்றோரும் ஓடி மறைந்தது: 25-09-2016 அன்று புகார் கொடுத்ததுமே, சாமுவேல் பெங்களூருக்கு ஓடிவிட்டான். பிறகு, அவனது பெற்றோரும் வீட்டைப் பூட்டி விட்டு மறைந்து விட்டனர். அவர் வசித்த மயிலாப்பூர் வீட்டில் போய் பெண் போலீசார் தேடியபோது, அவரது வீடு பூட்டிக்கிடந்தது[3]. விசாரித்த போது, போலீசார் தன்னை தேடுவதை அறிந்ததும், தனது நண்பர்களோடு பெங்களூருவுக்கு தப்பி ஓடிவிட்டார் என்று தெரியவந்தது[4]. அவரது பெற்றோரும் வீட்டின் கதவை பூட்டிவிட்டு தலைமறைவு ஆகிவிட்டனர்[5]. ஆக பெற்றோரும், ஒத்துழைக்கின்றனர் என்று தெரிகிறது. இதனால், போலீஸார் அவர்களை வலைவீசி தேடி வந்தனர்[6]. “இதற்கிடையே சாமுவேல் விஷயத்தில் உயர் அதிகாரி ஒருவர் நெருக்கடி கொடுத்ததால் மகளிர் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காமல் அவரை விடுவித்து விட்டனர். இதையடுத்து சாமுவேல் தலைமறைவாகி விட்டார்”, என்று “தமிழ் முரசு” எடுத்துக் காட்டியது. ஆக, அந்த உயர் அதிகாரியே, ஒருவேளை அப்படி ஐடியா கொடுத்து ஓடச்சொன்னார் போலும்.

v-samuel-with-a-girl-5சாமுவேல் மீது பல வழக்குகள் இருந்தன[7]: கடந்த ஒரு மாதத்திற்கு முன் ஆகஸ்ட்.2016 மயிலாப்பூரில் உள்ள கல்லூரி மாணவியை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் அந்த கல்லூரி மாணவியின் பெற்றோர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் சாமுவேல் மீது புகார் அளித்ததும் விசாரணையில் தெரியவந்தது.  மேலும், சாமுவேல் இரவு நேரத்தில் நண்பர்களுடன் ரேஸ் பைக் வீரராகவும் திகழ்ந்துள்ளார். கடந்த ஆண்டு கவர்னர் கான்வாய் செல்லும் போது அதிவேகமாக பைக் ஓட்டி கைதாகியிருக்கிறார். பேஸ்புக் மூலம் மற்றும் பள்ளியில் இருந்து கல்லூரிக்கு செல்லும் வசதிப்படைத்த மாணவிகளையே குறிவைத்து காதலிப்பது போல் நடித்து உல்லாசமாக இருந்து படம் எடுத்து மிரட்டி பணம் பறிப்பு செயலில் ஈடுபட்டதும், மிரட்டி பறிக்கப்பட்ட பணத்தை வைத்து கொண்டு நண்பர்களுடன் வெளிமாநிலங்களுக்கு சுற்றுலா சென்று வந்ததும் தெரியவந்தது. பெண்ணுடன் ஜல்ஸா முடிந்தவுடன், “வழக்கு எண் 18/9” படத்தில் வரும் காட்சியை போட்டுக் காட்டி மிரட்டி பணம் கேட்பது வாடிக்கையாக இருந்தது[8]. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். சாமுவேலுடன் அவரது நெருங்கிய நண்பர்கள் இரண்டு பேர் மோசடிகளில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இரண்டு பேரிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்[9]. இத்தகைய தொடர்புள்ள குற்றங்களை, ஒரு குழுவாக செய்வது, திட்டமிட்டு செய்ததே ஆகும். போலீஸ் அதிகாரி மற்ற தொடர்புகள் இருந்ததால், தப்பித்துக் கொள்ளலாம் என்ற மனப்பாங்கும், குற்றங்களைத் தொடர்ந்து செய்ய ஊக்குவி்த்துள்ளது.

v-samuel-with-a-girl-627-09-2016 செவ்வாய்கிழமை சாமுவேல் கைது[10]: சாமுவேலின் நெருங்கிய உறவினர் ஒருவர் தமிழக போலீஸ் துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றுகிறார்[11]. அவர் சாமுவேலை காப்பாற்றுவதற்கு முயற்சித்து உள்ளார்[12]. சாமுவேலை விசாரணைக்கு ஆஜராக சொல்லுங்கள், விசாரணை நடத்திவிட்டு அவரை விட்டுவிடுகிறோம் என்று சிந்தாதிரிப்பேட்டை பெண் போலீசார் உறுதி அளித்துள்ளனர். இதை நம்பிய போலீஸ் அதிகாரி 27-09-2016 அன்று இரவு சாமுவேலை பெங்களூரிலிருந்து சென்னைக்கு வரவழைத்து உள்ளார். “புகார் கொடுத்த பெண் அழைத்ததால், மைலாப்பூரில் ஒரு கோவிலுக்கு சாமுவேல் வந்தபோது பிடிபட்டான்னென்று இந்தியன் எக்ஸ்பிரஸ் எடுத்துக்க் காட்டியது[13]. சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சாமுவேல் விசாரணைக்கு ஆஜரானார். போலீசார் சாமுவேலிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் 10 பெண்களோடு உல்லாசத்தில் ஈடுபட்டு, அவர்களின் ஆபாச படங்களை ‘பேஸ்-புக்’கில் வெளியிட்டிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பான ஆதாரங்களையும் போலீசார் கைப்பற்றினர். வலுவான ஆதாரங்கள் இருந்ததால் சாமுவேல் நேற்று கைது செய்யப்பட்டார்.

v-samuel-with-a-girl-7சாமுவேலுக்கு உதவிய போலீஸ் அதிகாரி: ஊடகங்கள், “சாமுவேலின் நெருங்கிய உறவினர் ஒருவர் தமிழக போலீஸ் துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றுகிறார்[14]. அவர் சாமுவேலை காப்பாற்றுவதற்கு முயற்சித்து உள்ளார்[15]. சாமுவேலை விசாரணைக்கு ஆஜராக சொல்லுங்கள், விசாரணை நடத்திவிட்டு அவரை விட்டுவிடுகிறோம் என்று சிந்தாதிரிப்பேட்டை பெண் போலீசார் உறுதி அளித்துள்ளனர்”, என்று குறிப்பிட்டாலும், அவர் யார் என்று தெரியவில்லை. 18-பெண்களை கற்பழித்த, வாழ்க்கையினை சீரழித்த அவனை எப்படி காப்பாற்ற நினைத்தார் என்று தெரியவில்லை. சட்டத்தை மீறியவனுக்கு துணை போவது, எந்த விதத்தில் நியாமானது என்று தெரியவில்லை. ஒருவேளை தனது பெண்ணை ஒருவன் அப்படி செய்திருந்தால், விட்டு வைப்பாரா? பிறகு, இக்காலத்தில், இத்தகைய பாரபட்ச மன்ப்பாங்கு எப்படி உருவாகிறது என்று தெரியவில்லை.

© வேதபிரகாஷ்

12-10-2016

v-samuel-with-a-girl-8

[1] தினகரன், பெண்களை காதல் வலையில் வீழ்த்தியது எப்படி?, Date: 2016-09-29@ 00:24:28.

[2] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=248899

[3] தமிழ்.ஒன்.இந்தியா, 10 பெண்களை ஏமாற்றி காதலித்த காதல் மன்னன்: காதலிக்க மறுத்தால் ஆபாச புகைப்படம் பதிவு, By: Mayura Akilan, Published: Tuesday, September 27, 2016, 13:21 [IST].

[4] http://tamil.oneindia.com/news/tamilnadu/police-search-love-fraud-263779.html

[5] தமிழ்.வெப்துனியா, காதல், உல்லாசம், ஆபாச புகைப்படம் வெளியீடு: காதல் மன்னனுக்கு வலை வீச்சு!, Last Modified: செவ்வாய், 27 செப்டம்பர் 2016 (13:22 IST).

[6] http://tamil.webdunia.com/article/regional-tamil-news/love-airily-obscene-photo-released-police-searching-the-cheating-man-116092700008_1.html

[7] தமிழ்.முரசு, பேஸ்புக் மூலம் பழகி இளம்பெண்களை படம் எடுத்து மிரட்டிய இன்ஜினியர் கைது, 9/27/2016, 3:25:14 PM

[8] Once the relationship is established, he would pull off the scene from Vazhakku Enn 18/9 in which the unsuspecting girl believes that her boyfriend was concerned about her getting wet in the beach and that was the reason he had booked a room for her to change her dress.

http://www.deccanchronicle.com/nation/crime/280916/chennai-facebook-lover-held-for-cheating.html

[9] http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=98448

[10] An engineering student of a private college was arrested for sharing nude pictures of a woman with his friends through his mobile phone on Tuesday (27-09-2016). A senior police officer said the woman, who was working as an accountant in a petrol bunk, had stayed with her friend V. Samuel at a hotel in ECR last year 2015. During their stay, the accused Samuel had taken pictures of her changing clothes, without her knowledge. He had shared these pictures with his friends through his mobile phone. When she came to know about it, the 21-year-old woman filed a complaint at the Egmore All Women Police Station. The police arrested the accused when he came to meet her in Mylapore. The accused was produced before a Judicial magistrate and sent to Puzhal prison.

http://www.thehindu.com/news/cities/chennai/engineering-student-arrested-for-sharing-nude-photos-of-woman/article9155957.ece

[11] தினத்தந்தி, 10 பெண்களை ஏமாற்றிய காதல் மன்னன் கைது பேஸ்புக்கில் பெண்களின் ஆபாச படங்களை வெளியீட்டு மிரட்டல், பதிவு செய்த நாள்: செவ்வாய், செப்டம்பர் 27, 2016, 4:35 PM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், செப்டம்பர் 27,2016, 4:35 PM IST.

[12] http://www.dailythanthi.com/News/India/2016/09/27163524/10-women-for-cheating-King-of-romance-arrested.vpf

[13] On the advice of the police officials, she had asked Samuel to meet her at a temple in Mylapore, where a trap was laid and he was caught red handed.

http://www.newindianexpress.com/cities/chennai/2016/sep/28/Chennai-engineering-student-held-for-circulating-obscene-pix-of-women-1523606.html

[14] தினத்தந்தி, 10 பெண்களை ஏமாற்றிய காதல் மன்னன் கைது பேஸ்புக்கில் பெண்களின் ஆபாச படங்களை வெளியீட்டு மிரட்டல், பதிவு செய்த நாள்: செவ்வாய், செப்டம்பர் 27, 2016, 4:35 PM IST; மாற்றம் செய்த நாள்: செவ்வாய், செப்டம்பர் 27,2016, 4:35 PM IST.

[15] http://www.dailythanthi.com/News/India/2016/09/27163524/10-women-for-cheating-King-of-romance-arrested.vpf