Archive for the ‘மொழி இனம்’ Category

அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது – சீமானின்பேச்சு, எதிர்ப்பு, கண்டனம் மற்றும் மிரட்டல் (3)

ஓகஸ்ட் 4, 2023

அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டதுசீமானின் பேச்சு, எதிர்ப்பு, கண்டனம் மற்றும் மிரட்டல் (3)

சீமானின் விளக்கம்சாத்தானின் குழந்தைகள் என்று அனைத்து இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களையும் நான் கூறவில்லை: “சாத்தானின் குழந்தைகள் என்று அனைத்து இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களையும் நான் கூறவில்லை” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்துள்ளார்[1]. இது தொடர்பாக அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்[2], “இஸ்லாம், கிறிஸ்தவம் இரண்டும் அநீதிக்கு எதிராக பிறந்தவை[3]. அநீதிக்கு எதிரான புரட்சித் தீயை பற்ற வைக்கவே நான் வந்தேன் என்று இயேசு கூறினார்[4]. எங்கே அந்தத் தீ. இந்த நாட்டில் மாறி மாறி திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக ஆட்சி நடக்கிறது. இதை எப்படி சகித்து கொள்கிறீர்கள்? 58 நிமிடம் அக்கறையாக பேசினேன். 2 நிமிடம் பேசியது மட்டுமே தெரிகிறது. இதைப் பற்றி எல்லாம் கவலைப்பட முடியாது. என்னுடைய பேரன்பின் வெளிப்பாடுதான் இது. என்னுடைய பெரும் கோபத்தில் உள்ள பேரன்பினை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது? இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களுக்கு திமுக, காங்கிரஸ் செய்த ஒரு நன்மையை சொல்ல முடியுமா?

மதத்தை வைத்து மனிதர்களை கணக்கிடுவது என்பது உலக வரலாற்றில் இல்லை: தொடர்ந்து சீமான் பேசியது, “தவறு என்று தெரிந்தால், சுட்டிக்காட்டுவது எனது கடமை. சாத்தான் என்பது குர்ஆன் மற்றும் பைபிலில் உள்ளது. இதை நான் கூறவில்லை. நபிகள், இயேசு கூறியுள்ளனர். சாத்தானின் செயல்களை இந்த ஆட்சியாளர்கள் செய்கின்றனர். அநீதி இழைப்பவர்களுக்கு ஆதரவாக இருப்பது யார்? குர்ஆன் சாத்தானின் நண்பர்கள் என்று கூறுகிறது. நான் சாத்தானின் குழந்தைகள் என்று கூறிவிட்டேன். இதை வேண்டும் என்றால் தவறு என்று கூறலாம். மதத்தை வைத்து மனிதர்களை கணக்கிடுவது என்பது உலக வரலாற்றில் இல்லை. எல்லாவற்றையும் விட பெரியது மொழி, இனம்தான். இங்கு உள்ள கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தமிழர்கள். சிறுபான்மை என்று கூறினால் நான் வெறிகொண்டு விடுவேன். யார் சிறுபான்மை? சிறுபான்மை என்று எப்படி கூறுகிறார்கள். மதம் மாறிக் கொள்ளலாம். மொழி, இனத்தை மாற்றிக்கொள்ள முடியாது. அநீதிக்கு துணை நிற்பர்களை கூறினேன்[5]. மொத்தமாக அனைத்து இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களையும் கூறவில்லை[6]. அவர்கள் சாத்தானின் குழந்தைகள் என்று கூறவில்லை. சாத்தானின் குழந்தைகளாக மாறி வீட்டீர்களே என்று ஆதங்கப்படுகிறேன். அநீதிக்கு தொடர்ந்து துணை நின்று கொண்டுள்ளீர்கள். எனக்கு பதில் சொல்ல வேண்டாம். இறைவனுக்கு பதில் கூறியே ஆக வேண்டும்,” என்று சீமான் கூறினார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அண்மையில் இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்துவர்கள் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையானது. இந்த நிலையில், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி சென்னை பத்திரிகையாளர் சங்கத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது சீமான் கருத்து தொடர்பாகப் பேசிய திருமுருகன் காந்தி[7], “நாம் தமிழர் கட்சி சார்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில், `இஸ்லாமியர்களும் கிறிஸ்துவர்களும் சாத்தானின் பிள்ளைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டனஎன்று சிறுபான்மை மக்களைக் கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார் சீமான். மேலும், `இந்த நாட்டில் நடைபெற்றிருக்கும் அநீதி அக்கிரமங்களுக்குப் பெரிய பொறுப்பேற்க வேண்டியது இஸ்லாமியகிறிஸ்துவ மக்கள்தான்என நாட்டில் நெருக்கடியைச் சந்தித்துவரும் சிறுபான்மை சமூகத்தவர்கள்மீது அபாண்டமாகக் குற்றம்சாட்டியிருக்கிறார். சீமானின் இந்தப் பேச்சு, நாட்டில் சிறுபான்மை சமூகத்தவர்களை ஒடுக்கிவரும் பாசிச பா..ஆர்.எஸ்.எஸ் குரலாக ஒலிக்கிறது. இதை மே 17 இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. தனக்கு வாக்கு செலுத்தாத இஸ்லாமியர்களையும் கிறிஸ்துவர்களையும் சாத்தானின் பிள்ளை எனக் கூறும் சீமான், தனக்கு வாக்களிக்காத இந்து மக்களை எதனின் பிள்ளை என்று அழைப்பார்?,” என்று கேள்வி எழுப்பினார்[8]. மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில்,  “மணிப்பூரில் சிறுபான்மை பழங்குடி கிறிஸ்துவர்கள் மீதும், ஹரியானாவில் சிறுபான்மை இஸ்லாமியர்கள் மீதும் ஆளும் ஒன்றியமாநில பா.. அரசுகளின் ஒத்துழைப்புடன் ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகள் வன்முறைகளை நிகழ்த்தி வரும் இந்த வேளையில், ஒடுக்கும் பாசிச பயங்கரவாதிகளைக் கண்டித்தும் ஒடுக்கப்படும் சிறுபான்மை சமூகத்தவர்களுக்கு ஆதரவாகவும் பேசக்கூடிய நேரத்தில் பாதிக்கப்பட்ட சமூகங்களே குற்றவாளியாக்கிய சீமானின் பேச்சு அரசியல் நாகரிகமற்ற செயலாகும்,” என்றார்.

தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அதரித்தது: இந்து கடவுள்களை சாத்தான் என கூறும் போது வேடிக்கைப் பார்த்து விட்டு தற்போது சீமான் கூறியதைக் கண்டிப்பது நியாமற்ற, நேர்மையற்ற செயலாகும் என தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ’நாம் தமிழர்’ கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்[9]. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி[10], “இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் தமிழ்நாட்டில் இருப்பது மாதிரி சாத்தானுடைய அரங்கு கிடையாது. ஏன் தமிழ்நாட்டைக் குறிவைத்து சாத்தான் ஸ்டாக் பண்ணியிருக்கிறான்?” என்றும் தமிழகத்தில் உள்ள ஹிந்து கோவில்களை… சாத்தானுடைய அரங்கு என்றும், ஹிந்து கடவுள்களை சாத்தான் என்றும் மோகன் சி லாசரஸ் குறிப்பிட்ட போது இதே ஜவாஹிருல்லா எங்கு போயிருந்தார்? தொடர்ந்து ஹிந்து கடவுள்களை சாத்தான் என்று பல்வேறு இஸ்லாமிய பேச்சாளர்கள் பேசும் போதேல்லாம் என்ன செய்து கொண்டிருந்தார் ஜவாஹிருல்லா? ஹிந்து கடவுள்களை சாத்தான் என்று வர்ணிப்பது நாகரீகமானதா? அருவருப்பானது இல்லையா? ஹிந்து கடவுள்களை விமர்சித்த போதெல்லாம் அமைதியாக இருந்து விட்டு இப்போது கண்டிப்பது தானே நியாயமற்ற, நேர்மையற்ற செயலாகும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிஜேபிஎதிர் பிஜேபி என்றெல்லாம் சொல்வது: ஆர்எஸ்எஸின் முகமாக சீமான் இருக்கிறார் என திமுக கூட்டணி கட்சியினர் குற்றம்சாட்டி வரும் நிலையில், பாஜகவினர் சீமானின் கருத்தை ஆதரிப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாட்டை துரைமுருகன் என்பவரும், சீமான் சொல்லியதில் எந்த தவறும் இல்லை[11], ஆனால், மக்களுக்குப் புரியும் அகையில், தெளிவாக கூறியிருக்க வேண்டும் என்று கிட்டதட்ட இதே கருத்தை வெளியிட்டுள்ளார்[12]. கம்யூனிஸ்டுகளும் இதே கோணத்தில் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதை மேலே குற்ப்பிடப் பட்டது. இப்படி பிரச்சினைகளை பிஜேபி-எதிர் பிஜேபி என்றெல்லாம் விவரித்து, விவாதித்தாலும், அதிகமாக இந்துமதம் தாக்கப் பட்டு வந்த நிலையில், இப்பொழுது, கிறிஸ்தவர்-முஸ்லிம்கள் நேரிடையாக விமர்சிக்கப் பட்டுள்ளனர். விமர்சித்தவர் “செபாஸ்டியன் சைமன்” என்று சொல்லப் படுகின்ற சீமான் என்பதால், எதிர்ப்பு இந்த அளவில் இருக்கிறது. இதே, ஒரு இந்து சொல்லியிருந்தால் கைது செய்யப் பட்டிருப்பர்.

© வேதபிரகாஷ்

04-08-2023


[1] தமிழ்.இந்து, அனைத்து இஸ்லாமிய, கிறிஸ்தவ மக்களையும் நான் அப்படிச் சொல்லவில்லை” – சீமான், செய்திப்பிரிவு, Published : 03 Aug 2023 01:21 PM; Last Updated : 03 Aug 2023 01:21 PM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/1079267-seeman-said-that-i-am-not-saying-that-all-muslim-and-christian.html

[3] கல்கி.ஆன்.லைன், கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் சாத்தான் என கூறியது ஏன்? சீமான் விளக்கம்!, விஜி, Published on : 03 Aug 2023, 6:05 pm

[4] https://kalkionline.com/news/politics/naam-tamilar-seeman-pressmeet-about-saathan-word-issue

[5] விகடன், `அநீதிக்குத் துணை நின்றவர்களைத்தான் சாத்தானின் குழந்தைகள் என்றேன்!’ – சீமான் VM மன்சூர் கைரி, Published: 03-08-2023 Yesterday at 2 PM; Updated:Yesterday at 3 PM.

[6] https://www.vikatan.com/government-and-politics/politics/ntk-chief-seeman-clarification-regarding-his-speech-about-minorities

[7] விகடன், சீமானின் இந்தப் பேச்சு, பாசிச பாஜகஆர்எஸ்எஸ் குரலாக ஒலிக்கிறது” – திருமுருகன் காந்தி காட்டம், சா.முஹம்மது முஸம்மில், Published: 03-08-2023 at 6 PM; Updated: August 3, 2023 at 6 PM.

[8] https://www.vikatan.com/government-and-politics/politics/may-17-organization-coordinator-thirumurugan-gandhi-slams-seeman

[9] காமதேனு, தமிழக அரசியலில் பரபரப்புசீமானுக்கு ஆதரவாக களமிறங்கிய பாஜக!, Updated on : 03 Aug 2023, 12:55 pm

[10] https://kamadenu.hindutamil.in/politics/bjp-came-out-in-support-of-seeman

[11] தமிழ்.ஏபிபிலைவ், சாத்தானின் பிள்ளைகள் என சீமான் கூறியதில் தவறு இல்லை.. சப்போர்டுக்கு வந்த சாட்டை துரைமுருகன், By: அப்ரின் | Updated at : 02 Aug 2023 05:19 PM (IST);   Published at : 02 Aug 2023 05:17 PM (IST) 

[12] https://tamil.abplive.com/news/tamil-nadu/seeman-controversy-saathan-speech-sattai-durai-murugan-support-to-him-132611

அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகி விட்டது – சீமானின் பேச்சு, எதிர்ப்பு, கண்டனம் மற்றும் மிரட்டல் (1)

ஓகஸ்ட் 4, 2023

அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டதுசீமானின் பேச்சு, எதிர்ப்பு, கண்டனம் மற்றும் மிரட்டல் (1)

தமிழக அரசியல்வாதிகளின் முரண்பட்ட சித்தாந்தங்கள்: தேர்தல் வருகின்றது என்றால் அரசியல்வாதிகள் என்னவேண்டுமாலும், எப்படி வேண்டுமானாலும் பேசுவார்கள். ஒரு கொள்கைப் பிடிப்பற்ற, ஏன் கொள்கையற்ற, சித்தாந்த உதறல்களாகக் கூட பேச்சுகள் இருக்கும். கூட்டணி மயக்கம், போதை, பேரம் என்றெல்லாம் வந்து விட்டால், இப்பேச்சுகள் இன்னும் அதிகமாகி விடும். தமிழக, திராவிட, திராவிடத்துவ அரசியலில் பிரிவினைவாதம், திராவிடஸ்தான், திராவிடநாடு, தமிழ்நாடு, மாநில சுயயாட்சி, தமிழ் தேசியம், திராவிட தேசியம், மொழிபேசும் தேசிய இனங்கள், ஆரியன்,திராவிடன், வடுகண், வந்தேறி, குந்தேறி என்று விரிந்து கொண்டே போகும். மேனாட்டு பிரஹஸ்பதிகள் அவ்வப்பொழுது தங்களது தேவைக்கு ஏற்ப, இத்தகைய சித்தாந்தங்களை கருத்தியல், கருதுகோள், மாதிரி, உத்தேச வடிவம் என்ற ரீதியில் முன்வைப்பர், மற்றவர் மூலம் கருத்து பெற முயற்சிப்பர். பிறகு அவை தமக்கு உபயோகப் படும், லாபம் கிடைக்கும் என்றால், விஞ்ஞான முறையில் மெய்ப்பிக்கப் பட்டது என்று முலாம் பேசி  சுற்றில் விட்டு ஒத்திகைப் பார்ப்பர்.

மதஆதரவும், ஓட்டு வங்கியும், அரசியலும்: மணிப்பூர் கலவரத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் ஜூலை 30-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய சீமான்[1], “ஒவ்வொரு கலவரத்தின் பின்னணியிலும் பண வேட்டை இருக்கும். மணிப்பூர் கலவரத்திற்கும் அது தான் காரணம். ஆழ்ந்து பார்த்தால், மலைகளில், காடுகளில் வாழ்கிற பழங்குடி மக்கள் கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பா..விற்கு வாக்கு செலுத்த மாட்டார்கள். தரை தளத்தில் வாழும் மெய்த்தி இன மக்கள், இந்துத்துவ கோட்பாட்டை ஏற்கும் மக்களாக இருக்கிறார்கள். அதனால், அங்கே பழங்குடி இன மக்கள் சாவதைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை. நமக்கும் இது நடந்துள்ளது. ஒகி புயலில் மீன் பிடிக்கச் சென்ற 200-க்கும் மேற்பட்டோர் இறந்து போய்விட்டனர். வலிமை மிக்க கடற்படையை வைத்திருக்கும் நம் நாடு, அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று எண்ணவே இல்லை. மக்கள் போராடியும் எந்த மதிப்பும் அதற்கு தரவில்லை. கடைசியாக, ‘உயிரற்ற உடலையாவது ஒப்படையுங்கள், மரியாதையான நல்லடக்கம் செய்கிறோம்என்று கூட போராடினார்கள். அப்போது கண்டுகொள்ளவில்லை. அதற்கு காரணம், அவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள், அவர்கள் வாக்கு நமக்கு வரப்போவதில்லை என்பதால் கண்டுகொள்ளவில்லை.

திராவிட அரசியல், தேசிய அரசியல், கலவரங்கள்: சீமான் தொடர்ந்து பேசியது[2],தேச ஒற்றுமையை பேச வக்கற்ற, தகுதியற்றவர்கள் தான் திரும்ப திரும்ப தேச ஒற்றுமை பற்றி பேசுகிறார்கள். திடீரென இவர்கள் புனிதர்களாகிவிடுவார்கள். அதை நாம் நம்ப வேண்டும். குஜராத் கலவரத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்து பேசியவர்கள் தி.மு..வினர். இவர்கள் மணிப்பூர் கலவரத்தைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? 76-வது நாளில் பேசுகிறீர்கள். 76 நாளில் என்ன செய்தீர்கள்? தேர்தல் வருகிறது, அதனால் பேசுகிறீர்கள். அங்கு பாதிக்கப்படும் கிறிஸ்தவர்களை வைத்து, இங்குள்ள கிறிஸ்தவர்களிடம்உனக்காக பேசுகிறோம்என்பதை காட்டுவதற்காக பேசுகிறார்கள். நான் ஈழத்தைப் பற்றி பேசிய போது, ‘அரசியலுக்காக பேசுகிறார்கள்என்று கூறியவர்கள் தான், இன்று மணிப்பூர் கலவரத்தைப் பற்றி பேசுகிறார்கள். தேர்தல் ஆதாயத்திற்காக இவர்கள் பேசுகிறார்கள். ஆஊனா கட்டுச்சோறு கட்டிக்கிட்டு நடைபயணம் கிளம்பிவிடுகிறார்கள். குஜராத் மாடல் மாதிரி, திராவிட மாடல் மாதிரி நடைபயணம் ஓல்டு மாடல். ராகுல் காந்தி, நடையா நடந்தார், ஒன்னும் நடக்கல போய்ட்டார். 9 ஆண்டுகள் ஆட்சி செய்துவிட்டு இப்ப தான் என்ன பிரச்னை என்று கேட்க வருகிறார்கள். பிரச்னையே நீங்க தானே!

மதரீதியிலான ஓட்டு வங்கி நிரந்தரமல்ல?: சீமான் தொடர்ந்து பேசியது, மணிப்பூர் விவகாரத்தை நாம் பேசுவதால், நமக்கு அங்குள்ள மக்கள் ஓட்டுப் போடப்போவதில்லை. இங்குள்ள கிறிஸ்தவர்களும் நமக்கு ஓட்டுப் போடப் போவதில்லை. நாம நினைத்துக் கொண்டிருக்கிறாமே், இஸ்லாமையும், கிறிஸ்துவத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று. ஆனால் அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது[3]. சும்மா தேவாலயத்திற்கு போய்தேவனே வாரீர்.. வாரீர்னு,’ பாடிட்டு, எவனிடமோ நாட்டை கொடுத்துவிட்டார்கள்[4]. இந்த நாட்டில் நடந்த அநீதிக்கு பெரிய பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தான். தொடர்ச்சியாக பல ஆண்டுகுள் 18 சதவீதம் வாக்குகளை தி.மு..வுக்கும், காங்கிரஸிற்கும் போட்டு போட்டு நாட்டை தெருவில் போட்டவர்கள் இவர்கள் தான். சலிக்க முடியாத ஊழல், லஞ்சம், சீர்கேடான நிர்வாகம், காரணம் இவர்கள் தான். இவர்கள் பாவம் கேட்கிறார்கள். பெரும்பாவமே அவர்கள் தான், அவர்களுக்கு எப்படி மன்னிப்பு கிடைக்கும். இன்னும் பாருங்கள், இவர்கள் தான் எங்களை பாதுகாப்பார்கள் என்று நம்புகிறார்கள். இஸ்லாமியர்களுக்கு தி.மு. தான் பாதுகாப்பு. ஆமாம், சிறையில் வைத்து பல ஆண்டுகளாக பாதுகாப்பது எவ்வளவு பெரிய பாதுகாப்பு? மீண்டும் இதே இஸ்லாமியர்களிடம் அவர்கள் ஓட்டு கேட்பார்கள். இந்த முறையும் அதே பொய்யை சொல்லி ஓட்டு கேட்பார்கள்[5]. நீங்கள் அவவர்களை விடுதலை செய்யுங்கள், நாம் தமிழர் கட்சியும் உங்களுக்கு வாக்களிக்கும்,என்று அந்த ஆர்பாட்டத்தில் சீமான் பேசினார்[6].

சீமான் பேசிற்கு ஊடகங்கள் இப்பொழுது அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது: சீமான் பேசும் பேச்சுகளில் பெரும்பாலாக லாஜிக், விசயம் இருக்கும் என்பது போல இருக்கும். இருப்பினும், சில நேரங்களில் தாராளமாக தமாஷான பேச்சு போல சிலவற்றை எடுத்து விடுவார். அந்த பேச்சுகளில் உள்நோக்கம் இருக்கிறதா-இல்லையா என்பது ஆராய வேண்டிய நிலையில் தான் உளளது. போதாகுறைக்கு யூ-டியூபாக மாறும் அல்லது சுற்றுக்கு வரும் பேச்சுகளில் உண்மைத் தன்மை 30-50% கூட இருப்பதில்லை. ஒரு சிறிய விசயம் கிடைத்தால், அதை ஊதி பெரிதாக்கி, தமக்குத் தான் எல்லாம் தெரியும் என்ற ரீதியில், வீடியோக்கள் தயாரித்து சுற்றில் விடுகின்றனர். பொழுது போக வேண்டும் என்று ஆயிரக்கணக்கில் மக்கள் பார்க்கின்றனர். அவர்களுக்கு உண்மை, உண்மைத் தன்மை, அதாரம் பற்றியெல்லாம் கவலையில்லை. சில நேரங்களில் அரசியல், வெறுப்புப் பேச்சு, காழ்ப்பு-வெறுப்பு போன்றவை சேரும் பொழுது விப்ரீதமாகிறது. எல்லா பேச்சுகளையும், எல்லோரும், ஒரே மாதிரியாக எடுத்துக் கொள்வ்தில்லை முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சமூக ஊடக பதிவுகளை வைத்து செய்திகளைத் தயாரிப்பது என்பது இக்கால செய்தி தயாரிப்பு முறையாக உள்ளது. அவ்விதத்தில், சீமான் பேசிற்கு ஊடகங்கள் இப்பொழுது அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளன என்று தெரிகிறது.

இஸ்லாமையும், கிறிஸ்துவத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள்  –ஜவாஹிருல்லா கண்டனம்: இந்த ஆர்ப்பட்டத்தில்,இஸ்லாமையும், கிறிஸ்துவத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று. ஆனால் அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது.” என்று சீமான் பேசியது தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையானது. .. பொதுச் செயலாளர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்ததோடு சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், “இந்த கயமைத்தனமான பேச்சு வன்மையான கண்டனத்துக்கு உரியது. தன் கட்சிக்கு வாக்களிக்காத காரணத்தினாலேயே கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் சாத்தானின் பிள்ளைகள் என்று வர்ணிப்பது அநாகரிகமானது, அருவருப்பானது, என்பதோடு அரசியல் நேர்மையற்ற செயலுமாகும். இதை வன்மையாக கண்டிக்கிறோம்,” என்று ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்தார்.

© வேதபிரகாஷ்

04-08-2023


[1] தமிழ்.ஒன்.இந்தியா, காலை காட்டி சொன்னஅந்தவார்த்தை.. சீமான் அரசியலுக்கு என்னாச்சு? கொதித்து போன இஸ்லாமியர்கள்! திடுக், By Shyamsundar I Published: Thursday, August 3, 2023, 14:20 [IST]

[2] https://tamil.oneindia.com/news/chennai/why-naam-tamilar-party-seeman-attack-muslims-and-christians-all-of-a-sudden-526569.html

[3] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Seeman Speech: ‘இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சாத்தானின் குழந்தைகள்சீமான் பகீர் பேச்சு!  , Stalin Navaneethakrishnan • HT Tamil, Jul 31, 2023 09:21 AM IST

[4] https://tamil.hindustantimes.com/tamilnadu/ntk-chief-coordinator-seeman-talks-about-muslims-and-christians-131690773683412.html

[5] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், சாத்தானின் குழந்தைகள் என பேசியது ஏன்? சீமான் விளக்கம், Written by WebDesk, August 3, 2023 01:18 IST.

[6] https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-electricity-employees-have-done-electricity-calculations-without-going-to-homes-734464/