Posts Tagged ‘தமிழ்நாடு விடுதலைப்படை’

அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது – சீமானின் பேச்சு, எதிர்ப்பு, கண்டனம் மற்றும் மிரட்டல் (2)

ஓகஸ்ட் 4, 2023

அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டதுசீமானின் பேச்சு, எதிர்ப்பு, கண்டனம் மற்றும் மிரட்டல் (2)

சீமான்இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் தி.மு.. செய்த ஒரு நன்மையைச் சொல்லுங்கள். நான் கட்சியை கலைத்துவிட்டுப் போகிறேன்: இதற்குப் பிறகு, சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தபோது பேசியதாவது: “தொடர்ச்சியாக 18% வாக்கை தி.மு.. காங்கிரசிற்குப் போடுகிறார்கள். பிறகு மாற்றம் எப்படி வரும்? எதிர்க்கட்சியாக இருக்கும்போது இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்வதாகச் சொல்வார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு செய்ய மாட்டார்கள். எங்களுக்கு உரிமை இருக்கிறது, ஆதங்கம் இருக்கிறது என்பதால் சொல்கிறோம். இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் தி.மு.. செய்த ஒரு நன்மையைச் சொல்லுங்கள். நான் கட்சியை கலைத்துவிட்டுப் போகிறேன். நான் எவ்வளவோ பேசியிருக்கிறேன், அதையெல்லாம் விட்டுவிட்டு, சாத்தானின் பிள்ளைகள் என்று பேசிவிட்டாரே என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள்,என்று குறிப்பிட்டார்.

சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தொடர்ந்து பேசியதாவது: மணிப்பூரில் இருந்து வந்து நமக்கு யாரும் ஓட்டு போடப்போவதும் இல்லை. அதை பற்றி நாம் ஏன் பேச வேண்டும். இங்கு இருக்கக்கூடிய கிறிஸ்துவர்களும் நமக்காக வாக்களிக்கப்போவது கிடையாது. நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம், இஸ்லாத்தையும் கிறிஸ்துவத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று. அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகளாகிவிட்டது, என்று கூறி இருந்தார். அதோடு நிற்காமல், சும்மா போய் தேவாலயத்தில் தேவரே வாரீர் வாரீர் என்று பாடிவிட்டு, கடைசியில் யார் யாருக்கோ நாட்டை கொடுத்து இருக்கிறார்கள். இந்த நாட்டில் நடந்திருக்கும் அநீதி அக்கிரமங்களுக்கு பெரிய பொறுப்பு,” என்றும் கூறி சர்ச்சையை கிளப்பி இருந்தார். அவரின் இந்த பேச்சு பெரிய சர்ச்சையான நிலையில் சீமானின் பேச்சுக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் விமர்சனங்களை வைத்தன. அதேபோல் சில இஸ்லாமிய அமைப்புகள் சீமானுக்கு எதிராக காவல் நிலையத்திலும் புகார் வைத்தன.

சீமான் மன்னிப்பு கேட்டால் என்ன ஓட்டா கிடைக்கும்?: இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம் செய்தியாளர்கள் இந்த பேச்சு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான், ”மன்னிப்பு கேட்டுவிட்டேன் என்றால் எனக்கு ஓட்டு போட்டுவிடுவார்களா? வருத்தம் தெரிவிக்க வேண்டியது எனது மக்கள்தான். என்னைப் போன்று நிற்போரை ஆதரிக்காமல் நடுத்தெருவில் போராட விட்டது யாரு? அநீதிக்கு எதிராக போராடிய ஒரே ஒருவர் பழனிபாபாதான். அவரையே நீங்கள் மதிப்பதில்லையே. அவரையே அநியாயமாக சாக விட்டவர்கள்தானே. மானமுள்ள தமிழன் திமுகவிற்கு ஓட்டு போடுவானா என கேட்டவர் பழனி பாபா. அதனால் அவரைப்பற்றி பேச மாட்டார்கள். அவரை விடவா நான் பேசிவிடப் போகிறேன். அவரே உங்களுக்கு ஒரு பொருட்டல்ல நானெல்லாம் ஒரு பொருட்டா? முதலில் அண்ணன் ஜவாஹிருல்லா கலைஞரைப் பற்றி பேசியதை கேட்டுள்ளீர்களா? முதுகில் குத்திய துரோகி எனக் கலைஞரை பேசியுள்ளார்[1]. ஆனால் இப்பொழுது அங்கு ஒரு சீட்டுக்காக நிற்கிறீர்கள்” என்றார். சீமானின் பேச்சு சர்ச்சையான நிலையில் மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திராவிட நட்பு கழகம் அமைப்பு சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது[2].

மதம், சாதியை விட எல்லா அடையாளங்களையும் விட மொழி இனம் தான் பெரியது: சீமான் தொடர்ந்து பேசியது ‛‛மதம், சாதியை விட எல்லா அடையாளங்களையும் விட மொழி இனம் தான் பெரியது. முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் தமிழன். பெரும்பான்மை தேசிய இனத்தின் மகன். வந்தவன், போனவன் எல்லாம் சிறுபான்மையினர்சிறுபான்மையினர்என சொல்பவர்களை செருப்பால் அடிப்பேன்,” என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்[3]. சென்னையில் நிருபர்களை சந்தித்த சீமான் கூறியதாவது[4]: முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களுக்கு காங்கிரஸ், தி.மு.க., ஏதாவது நல்லது செய்தது உண்டா? மதத்தை வைத்து மனித கூட்டத்தை கணக்கிட்டது எங்கேயாவது உள்ளதா? ஐரோப்பிய யூனியன் முழுவதும் கிறிஸ்தவர்கள் இருந்தாலும், பல நாடுகள் இருப்பதற்கு காரணம் மொழி வாரியாக தேசிய இனங்கள், நிலங்கள் உள்ளது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்ததற்கு காரணம் மதம். பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிந்ததற்கு காரணம் மொழி. மதம், சாதியை விட எல்லா அடையாளங்களையும் விட மொழி இனம் தான் பெரியது. இங்குள்ள கிறிஸ்தவனும், இஸ்லாமியனும் தமிழன்.. பெரும்பான்மையான தமிழ் தேசிய இனத்தின் மகன். வந்தவன், போனவன் எல்லாம் சிறுபான்மையினர்… சிறுபான்மையினர்… எனக்கூறினால் செருப்ப கழட்டி அடிப்பேன். வெறி கொண்டு இருக்கேன். மதத்தின் அடிப்படையில் மனிதர்களை பிரிப்பதை ஏற்க முடியாது. ஸ்டாலின் முதல்வர். உதயநிதி அமைச்சர். இன்பநிதிக்கு, அரசு விழாவில் என்ன வேலை. தலைதலைமுறையாக ஆட்சி செய்து கொண்டுள்ளீர்கள். உங்கள் குடும்பத்திற்கு என் நாடு பட்டா போட்டு கொடுக்கப்பட்டு உள்ளதா. மக்கள் உங்களுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்து உள்ளனரா? இவ்வாறு சீமான் கூறினார்.

சீமான் எழுப்பியுள்ள சில கேள்விகள்: ஊடகக்காரர்களைப் பார்த்டு நேரிடையாக சீமான் எழுப்பியுள்ள கேள்விகள்…தேசம், நாடு, மொழி, இனம், மதம், என்ற காரணிகளில் இந்த சித்தாந்திகளுக்கு எழுப்பப் பட்ட கேள்விகள்:

  1. காஷ்மீரில் இஸ்லிமிய பெரும்பான்மை தானே, ஆனால், ஒட்டுமொத்தமாக முஸ்லிம்களை சிறுபான்மையினர் என்று எப்படி சொல்ல முடியும்?
  2. மனிதன் தன்னுடைய மூலத்தை, மதம் மாற்றிக் கொள்ளக் கூடியது மொழியை, மொழி இனத்தை  மாற்றிக் கொள்ளமுடியாது.
  3. நேற்றைக்கு திலீப், இன்று ஏ.ஆர்.ரஹ்மான்; நேற்றைக்கு பெரும்பான்மை, இன்றைக்கு சிறுபான்மையா? கேவலமாக இல்லை.
  4. என்னுடைய அப்பா இளையராஜா பெருபான்மை, யுவன் ஷங்கர் ராஜா சிறுபான்மை;  போனவாரம் அவர் பெரும்பான்மை, இந்த வாரம் அவர் சிறுபான்மை;
  5. இந்த மாதிரியான உலக பைத்தியக்காரத்தனம் எங்கேயாவது இருக்கிறதா தம்பி?

ஒருவேளை, மதமாற்றத்தை எதிர்க்கிறாரா என்றும் யோசிக்க வேண்டியுள்ளது. இருப்பினும், சீமான் தமிழ்-தமிழர்-தமிழர் சயம் என்றால் எல்லாமே ஒன்று என்று விளக்கம் கொடுத்து விடுவார்.

கம்யூனிஸ்டுகளின் எதிர்ப்பு திகைப்பாக இருக்கிறது: சீமான் குறிப்பிட்டதைப் போலவே, அவர் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பேராசிரியர் அருணன், க. உதயகுமார் ஒருங்கிணைப்பில் ஹிந்து என். ராம், டி.எம். கிருஷ்ணா, பேராசிரியர் வசந்தி தேவி, திரைப்படக் கலைஞர் ரோஹிணி ஆகியோரை உள்ளடக்கிய தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சீமானின் இந்தப் பேச்சைக் கண்டித்துள்ளது[5]. “இவரின் நோக்கம் தெளிவானது. பா... எதிர்ப்பு வாக்குகள் சிதற வேண்டும். அதன் மூலம் பா... அணி வெற்றிபெற வேண்டும் என்பது. இந்தச் சதி வேலைக்கு இணங்காமல் சிறுபான்மையினர் தி.மு.. அணிக்கு வாக்களிப்பதே இவரது ஆத்திரத்திற்குக் காரணம். அதனால்தான் சாத்தானின் பிள்ளைகள் என்று படுமோசமான வசவு மொழியை உதிர்த்திருக்கிறார்,” என அந்த அமைப்புச் சுட்டிக்காட்டியுள்ளது[6]. மொழி,இனம், நாடு, தேசம், மொழி-இனம், தேசிய-இனம் போன்ற அவர்களது விருப்பமான விசயங்களை விடுத்து, அவற்றையும் மீறி சீமானை அரசியல் தேர்தல், ஓட்டு என்ற ரீதியில் விளக்கம் கொடுத்து எதிர்த்திருப்பது கவனிக்கத் தக்கது.

© வேதபிரகாஷ்

04-08-2023


[1] நக்கீரன், சீமான் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார், Published on 02/08/2023 (18:59) | Edited on 03/08/2023 (07:35)

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/complaint-against-seeman-police-commissioners-office

[3] தினமலர், சிறுபான்மையினர் என சொல்பவர்களை செருப்பால் அடிப்பேன்: சீமான், பதிவு செய்த நாள்: ஆக 03,2023 14:00

[4] https://m.dinamalar.com/detail.php?id=3394025

[5] பிபிசி, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை சாத்தானின் குழந்தைகள் எனக் கூறியது ஏன்? சீமான் விளக்கம், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர், 2 ஆகஸ்ட் 2023; புதுப்பிக்கப்பட்டது 3 ஆகஸ்ட் 2023; https://www.bbc.com/tamil/articles/clewz1d27nno

[6] https://www.bbc.com/tamil/articles/clewz1d27nno

அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகி விட்டது – சீமானின் பேச்சு, எதிர்ப்பு, கண்டனம் மற்றும் மிரட்டல் (1)

ஓகஸ்ட் 4, 2023

அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டதுசீமானின் பேச்சு, எதிர்ப்பு, கண்டனம் மற்றும் மிரட்டல் (1)

தமிழக அரசியல்வாதிகளின் முரண்பட்ட சித்தாந்தங்கள்: தேர்தல் வருகின்றது என்றால் அரசியல்வாதிகள் என்னவேண்டுமாலும், எப்படி வேண்டுமானாலும் பேசுவார்கள். ஒரு கொள்கைப் பிடிப்பற்ற, ஏன் கொள்கையற்ற, சித்தாந்த உதறல்களாகக் கூட பேச்சுகள் இருக்கும். கூட்டணி மயக்கம், போதை, பேரம் என்றெல்லாம் வந்து விட்டால், இப்பேச்சுகள் இன்னும் அதிகமாகி விடும். தமிழக, திராவிட, திராவிடத்துவ அரசியலில் பிரிவினைவாதம், திராவிடஸ்தான், திராவிடநாடு, தமிழ்நாடு, மாநில சுயயாட்சி, தமிழ் தேசியம், திராவிட தேசியம், மொழிபேசும் தேசிய இனங்கள், ஆரியன்,திராவிடன், வடுகண், வந்தேறி, குந்தேறி என்று விரிந்து கொண்டே போகும். மேனாட்டு பிரஹஸ்பதிகள் அவ்வப்பொழுது தங்களது தேவைக்கு ஏற்ப, இத்தகைய சித்தாந்தங்களை கருத்தியல், கருதுகோள், மாதிரி, உத்தேச வடிவம் என்ற ரீதியில் முன்வைப்பர், மற்றவர் மூலம் கருத்து பெற முயற்சிப்பர். பிறகு அவை தமக்கு உபயோகப் படும், லாபம் கிடைக்கும் என்றால், விஞ்ஞான முறையில் மெய்ப்பிக்கப் பட்டது என்று முலாம் பேசி  சுற்றில் விட்டு ஒத்திகைப் பார்ப்பர்.

மதஆதரவும், ஓட்டு வங்கியும், அரசியலும்: மணிப்பூர் கலவரத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் ஜூலை 30-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய சீமான்[1], “ஒவ்வொரு கலவரத்தின் பின்னணியிலும் பண வேட்டை இருக்கும். மணிப்பூர் கலவரத்திற்கும் அது தான் காரணம். ஆழ்ந்து பார்த்தால், மலைகளில், காடுகளில் வாழ்கிற பழங்குடி மக்கள் கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பா..விற்கு வாக்கு செலுத்த மாட்டார்கள். தரை தளத்தில் வாழும் மெய்த்தி இன மக்கள், இந்துத்துவ கோட்பாட்டை ஏற்கும் மக்களாக இருக்கிறார்கள். அதனால், அங்கே பழங்குடி இன மக்கள் சாவதைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை. நமக்கும் இது நடந்துள்ளது. ஒகி புயலில் மீன் பிடிக்கச் சென்ற 200-க்கும் மேற்பட்டோர் இறந்து போய்விட்டனர். வலிமை மிக்க கடற்படையை வைத்திருக்கும் நம் நாடு, அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று எண்ணவே இல்லை. மக்கள் போராடியும் எந்த மதிப்பும் அதற்கு தரவில்லை. கடைசியாக, ‘உயிரற்ற உடலையாவது ஒப்படையுங்கள், மரியாதையான நல்லடக்கம் செய்கிறோம்என்று கூட போராடினார்கள். அப்போது கண்டுகொள்ளவில்லை. அதற்கு காரணம், அவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள், அவர்கள் வாக்கு நமக்கு வரப்போவதில்லை என்பதால் கண்டுகொள்ளவில்லை.

திராவிட அரசியல், தேசிய அரசியல், கலவரங்கள்: சீமான் தொடர்ந்து பேசியது[2],தேச ஒற்றுமையை பேச வக்கற்ற, தகுதியற்றவர்கள் தான் திரும்ப திரும்ப தேச ஒற்றுமை பற்றி பேசுகிறார்கள். திடீரென இவர்கள் புனிதர்களாகிவிடுவார்கள். அதை நாம் நம்ப வேண்டும். குஜராத் கலவரத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்து பேசியவர்கள் தி.மு..வினர். இவர்கள் மணிப்பூர் கலவரத்தைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? 76-வது நாளில் பேசுகிறீர்கள். 76 நாளில் என்ன செய்தீர்கள்? தேர்தல் வருகிறது, அதனால் பேசுகிறீர்கள். அங்கு பாதிக்கப்படும் கிறிஸ்தவர்களை வைத்து, இங்குள்ள கிறிஸ்தவர்களிடம்உனக்காக பேசுகிறோம்என்பதை காட்டுவதற்காக பேசுகிறார்கள். நான் ஈழத்தைப் பற்றி பேசிய போது, ‘அரசியலுக்காக பேசுகிறார்கள்என்று கூறியவர்கள் தான், இன்று மணிப்பூர் கலவரத்தைப் பற்றி பேசுகிறார்கள். தேர்தல் ஆதாயத்திற்காக இவர்கள் பேசுகிறார்கள். ஆஊனா கட்டுச்சோறு கட்டிக்கிட்டு நடைபயணம் கிளம்பிவிடுகிறார்கள். குஜராத் மாடல் மாதிரி, திராவிட மாடல் மாதிரி நடைபயணம் ஓல்டு மாடல். ராகுல் காந்தி, நடையா நடந்தார், ஒன்னும் நடக்கல போய்ட்டார். 9 ஆண்டுகள் ஆட்சி செய்துவிட்டு இப்ப தான் என்ன பிரச்னை என்று கேட்க வருகிறார்கள். பிரச்னையே நீங்க தானே!

மதரீதியிலான ஓட்டு வங்கி நிரந்தரமல்ல?: சீமான் தொடர்ந்து பேசியது, மணிப்பூர் விவகாரத்தை நாம் பேசுவதால், நமக்கு அங்குள்ள மக்கள் ஓட்டுப் போடப்போவதில்லை. இங்குள்ள கிறிஸ்தவர்களும் நமக்கு ஓட்டுப் போடப் போவதில்லை. நாம நினைத்துக் கொண்டிருக்கிறாமே், இஸ்லாமையும், கிறிஸ்துவத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று. ஆனால் அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது[3]. சும்மா தேவாலயத்திற்கு போய்தேவனே வாரீர்.. வாரீர்னு,’ பாடிட்டு, எவனிடமோ நாட்டை கொடுத்துவிட்டார்கள்[4]. இந்த நாட்டில் நடந்த அநீதிக்கு பெரிய பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தான். தொடர்ச்சியாக பல ஆண்டுகுள் 18 சதவீதம் வாக்குகளை தி.மு..வுக்கும், காங்கிரஸிற்கும் போட்டு போட்டு நாட்டை தெருவில் போட்டவர்கள் இவர்கள் தான். சலிக்க முடியாத ஊழல், லஞ்சம், சீர்கேடான நிர்வாகம், காரணம் இவர்கள் தான். இவர்கள் பாவம் கேட்கிறார்கள். பெரும்பாவமே அவர்கள் தான், அவர்களுக்கு எப்படி மன்னிப்பு கிடைக்கும். இன்னும் பாருங்கள், இவர்கள் தான் எங்களை பாதுகாப்பார்கள் என்று நம்புகிறார்கள். இஸ்லாமியர்களுக்கு தி.மு. தான் பாதுகாப்பு. ஆமாம், சிறையில் வைத்து பல ஆண்டுகளாக பாதுகாப்பது எவ்வளவு பெரிய பாதுகாப்பு? மீண்டும் இதே இஸ்லாமியர்களிடம் அவர்கள் ஓட்டு கேட்பார்கள். இந்த முறையும் அதே பொய்யை சொல்லி ஓட்டு கேட்பார்கள்[5]. நீங்கள் அவவர்களை விடுதலை செய்யுங்கள், நாம் தமிழர் கட்சியும் உங்களுக்கு வாக்களிக்கும்,என்று அந்த ஆர்பாட்டத்தில் சீமான் பேசினார்[6].

சீமான் பேசிற்கு ஊடகங்கள் இப்பொழுது அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது: சீமான் பேசும் பேச்சுகளில் பெரும்பாலாக லாஜிக், விசயம் இருக்கும் என்பது போல இருக்கும். இருப்பினும், சில நேரங்களில் தாராளமாக தமாஷான பேச்சு போல சிலவற்றை எடுத்து விடுவார். அந்த பேச்சுகளில் உள்நோக்கம் இருக்கிறதா-இல்லையா என்பது ஆராய வேண்டிய நிலையில் தான் உளளது. போதாகுறைக்கு யூ-டியூபாக மாறும் அல்லது சுற்றுக்கு வரும் பேச்சுகளில் உண்மைத் தன்மை 30-50% கூட இருப்பதில்லை. ஒரு சிறிய விசயம் கிடைத்தால், அதை ஊதி பெரிதாக்கி, தமக்குத் தான் எல்லாம் தெரியும் என்ற ரீதியில், வீடியோக்கள் தயாரித்து சுற்றில் விடுகின்றனர். பொழுது போக வேண்டும் என்று ஆயிரக்கணக்கில் மக்கள் பார்க்கின்றனர். அவர்களுக்கு உண்மை, உண்மைத் தன்மை, அதாரம் பற்றியெல்லாம் கவலையில்லை. சில நேரங்களில் அரசியல், வெறுப்புப் பேச்சு, காழ்ப்பு-வெறுப்பு போன்றவை சேரும் பொழுது விப்ரீதமாகிறது. எல்லா பேச்சுகளையும், எல்லோரும், ஒரே மாதிரியாக எடுத்துக் கொள்வ்தில்லை முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சமூக ஊடக பதிவுகளை வைத்து செய்திகளைத் தயாரிப்பது என்பது இக்கால செய்தி தயாரிப்பு முறையாக உள்ளது. அவ்விதத்தில், சீமான் பேசிற்கு ஊடகங்கள் இப்பொழுது அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளன என்று தெரிகிறது.

இஸ்லாமையும், கிறிஸ்துவத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள்  –ஜவாஹிருல்லா கண்டனம்: இந்த ஆர்ப்பட்டத்தில்,இஸ்லாமையும், கிறிஸ்துவத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று. ஆனால் அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது.” என்று சீமான் பேசியது தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையானது. .. பொதுச் செயலாளர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்ததோடு சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், “இந்த கயமைத்தனமான பேச்சு வன்மையான கண்டனத்துக்கு உரியது. தன் கட்சிக்கு வாக்களிக்காத காரணத்தினாலேயே கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் சாத்தானின் பிள்ளைகள் என்று வர்ணிப்பது அநாகரிகமானது, அருவருப்பானது, என்பதோடு அரசியல் நேர்மையற்ற செயலுமாகும். இதை வன்மையாக கண்டிக்கிறோம்,” என்று ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்தார்.

© வேதபிரகாஷ்

04-08-2023


[1] தமிழ்.ஒன்.இந்தியா, காலை காட்டி சொன்னஅந்தவார்த்தை.. சீமான் அரசியலுக்கு என்னாச்சு? கொதித்து போன இஸ்லாமியர்கள்! திடுக், By Shyamsundar I Published: Thursday, August 3, 2023, 14:20 [IST]

[2] https://tamil.oneindia.com/news/chennai/why-naam-tamilar-party-seeman-attack-muslims-and-christians-all-of-a-sudden-526569.html

[3] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Seeman Speech: ‘இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சாத்தானின் குழந்தைகள்சீமான் பகீர் பேச்சு!  , Stalin Navaneethakrishnan • HT Tamil, Jul 31, 2023 09:21 AM IST

[4] https://tamil.hindustantimes.com/tamilnadu/ntk-chief-coordinator-seeman-talks-about-muslims-and-christians-131690773683412.html

[5] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், சாத்தானின் குழந்தைகள் என பேசியது ஏன்? சீமான் விளக்கம், Written by WebDesk, August 3, 2023 01:18 IST.

[6] https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-electricity-employees-have-done-electricity-calculations-without-going-to-homes-734464/

தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பெருகி வரும் நிலை – திட்டமிட்டு வெடிக்கும் தீவிரவாதிகள் முதல் சிறார்கள் வரை! (2)

ஜனவரி 12, 2023

தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பெருகி வரும் நிலைதிட்டமிட்டு வெடிக்கும் தீவிரவாதிகள் முதல் சிறார்கள் வரை! (2)

வன்முறை வளர்ந்தவளர்த்த விதம்: இவையெல்லாம் எதேச்சையாக நடந்திருந்தாலும், பள்ளி மாணவர்கள் ஈடுபட்டிருப்பது வருத்தத்தையும், திகைப்பையும் ஏற்படச் செய்துள்ளன. 18-வயது கீழான சிறுவர்கள், இவ்வாறு உழப்பத்தனமாக, சிதைந்த அல்லது குழம்பிய நிலையில், வன்முறைத் தூண்டும் காரியங்களில் ஈடுபடுவது, வக்கிரத் தன்மையினைத் தான் வெளிப்படுத்தியுள்ளது. அறிந்து புரிந்து, இத்தகைய காரியங்களில் ஈடுபட முடியாது. ஆனால், இப்பொழுதுள்ள வன்முறை கலாச்சாரம், பெட்ரோல் குண்டு வீச்சு, தீவிரவாதச் செயல்கள், குண்டு வெடிப்புகள், முதலியவை, நிச்சயமாக, தமிழகத்திற்கு ஒவ்வாத நிகழ்வுகளைக் காட்டுகின்றன.  தமிழகம் சங்க இலக்கியம், நீதி நூல்களைப் படித்துக் கொண்டிருந்தால், இந்நிலை ஏற்பட்டிருக்காது. ஆனால், திராவிடத்துவ சித்தாந்திகள், தனிநாடு கோரிக்கை, பிரிவினைவாத அரசியல், இனவாத வன்முறை, பழி பற்றற்ற மொழிவெறி முதலியவற்றால் வன்முறைகளை வளர்த்துள்ளனர். இப்பொழுது அவை வெடிகுண்டு கலாச்சாரமாகவும் மாறி விட்டது. சில முக்கியமான குண்டு வெடிப்புகளை ஆராயலாம்.  ஏற்கெனவே இதைப் பற்றி இங்கு அலசியுள்ளேன்[1].

மார்ச் 1987 – அரியலூர் குண்டு வெடிப்பு: 1987-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ந் தேதி இரவு 10 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சி நோக்கி மலைக்கோட்டை விரைவு ரெயில் புறப்பட்டது. அரியலூருக்கு மறுநாள்(15-ந் தேதி) அதிகாலை 4 மணிக்கு அந்த ரெயில் வந்து நின்றது. ரெயில் நிலையத்தில் இருந்து ஏராளமான பயணிகள் அந்த ரெயிலில் ஏறிக்கொண்டும், ரெயிலில் வந்த பயணிகள் இறங்கிக்கொண்டும் இருந்தனர். நாசகாரர்கள்[2] ஞாயிற்றுக்கிழமை தென்னிந்தியாவில் ரயில் பாலத்தை வெடிக்கச் செய்தனர், எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது மற்றும் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடித்த வெடிகுண்டு, ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரஸ் இன்ஜினை தண்டவாளத்தில் இருந்து வெடிக்கச் செய்து, என்ஜினையும் எட்டு கார்களையும் அனுப்பியது, அவற்றில் பெரும்பாலானவை பயணிகளை ஏற்றிக்கொண்டு, சென்னைக்கு தெற்கே 160 மைல் தொலைவில் உள்ள அரியிலார் அருகே வறண்ட ஆற்றுப்படுகையில் மோதின. ஒன்பது கார்கள் பாதையில் இருந்தன, அவற்றில் மூன்று பாலத்திலிருந்து தொங்கின, அதில் மூன்றில் ஒரு பங்கு இடிந்து விழுந்தது.

ஆகஸ்ட் 8, 1993 – ஆர்.எஸ்.எஸ் குண்டுவெடிப்பு: சென்னை சேத்துப்பட்டு ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் வெடிகுண்டு வெடித்ததில் 11 பேர் கொல்லப்பட்டனர். எஸ்.ஏ.பாஷா மற்றும் 15 பேர் குண்டுவெடிப்பில் ஈடுபட்டதாகவும், பயங்கர ஆயுதங்களை வைத்திருந்ததற்காகவும் பயங்கரவாத மற்றும் சீர்குலைக்கும் நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மற்ற ஹார்ட்கோர் அல்-உம்மா செயல்பாட்டாளர்களில் அதன் தீக்குழம்பு மாநில செயலாளர் எம். முகமது அன்சாரி, முஜிபுர் ரஹ்மான், ஓஜிர், முகமது அஸ்லாம், சிராஜ் என்ற ஆட்டோ சிராஜ் மற்றும் அகமது பாஷா ஆகியோர் அடங்குவர். இதைத் தொடர்ந்து பாபர் மசூதி இடிக்கப்பட்ட முதல் ஆண்டு நினைவு தினமான டிசம்பரில் இந்துக்களுக்கு எதிரான கலவரம் நடந்தது.

பிப்ரவரி 14, 1998 – கோயம்புத்தூர் குண்டுவெடிப்பு: இஸ்லாமிய முன்னணி பாஜகவுக்கு எதிராக ஒரு பெரிய சதியை நடத்தியது, இதன் காரணமாக பல அப்பாவிகள் கொல்லப்பட்டனர். கோவையில் பாஜக தலைவர் அத்வானியை குறிவைத்து நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் 60 பேர் கொல்லப்பட்டனர். 1988 கோயம்புத்தூர் வெடிகுண்டு, கலவரம். மதுரை வ‌ந்த பா.ஜ.க. மூ‌த்த தலைவ‌ர் எ‌ல்.கே.அ‌த்வா‌னியை வெடிகு‌ண்டு வை‌த்து கொ‌ல்ல முய‌ன்றது, அ‌ண்மை‌யி‌ல் செ‌ன்னை‌யி‌ல் நா‌ட்டு வெடிகு‌ண்டு வெடி‌த்து 2 பே‌‌‌ரி‌ன் கைக‌ள் து‌ண்டி‌ப்பு, த‌ற்போது மதுரை‌யி‌ல் இ‌ந்து கோ‌விலை தக‌ர்‌க்க முய‌ன்றது.

மே 2012ல் நடந்த வெடிகுண்டு சம்பவங்கள்: 2012ல் செ‌ன்னை ‌கீ‌ழ்‌ப்பா‌க்க‌த்‌தி‌ல் உ‌ள்ள ‌வீ‌ட்டு வச‌தி வா‌ரிய குடி‌யி‌ரு‌ப்‌பி‌ல் நா‌ட்டு வெடிகு‌ண்டு வெடி‌த்த‌தி‌ல் 2 பே‌‌ரி‌ன் கைக‌ள், ‌விர‌‌ல்க‌ள் து‌ண்டி‌க்க‌ப்ப‌ட்டது. ந‌ள்‌ளிரவு 1.30 ம‌ணி‌க்கு நட‌ந்த கு‌ண்டுவெடி‌ப்பை போ‌லீஸா‌ர் க‌சிய‌விடாம‌ல் இரு‌ந்தன‌ர். ‌பி‌ன்ன‌ர் காலை‌யி‌ல்தா‌ன், வெடி‌த்தது நா‌ட்டு வெடிகு‌ண்டுதா‌ன், தூ‌‌த்து‌க்குடியை சே‌ர்‌ந்த இர‌ண்டு ரவுடிக‌ள் வை‌த்‌திரு‌ந்த கு‌ண்டுதா‌ன் வெடி‌த்தது எ‌ன்று‌ செ‌ன்னை மாநகர காவ‌ல்துறை ஆணைய‌ர் ‌தி‌ரிபா‌தி கூ‌றினா‌ர். இ‌ந்த கு‌ண்டுவெடி‌ப்பு ‌ச‌ம்பவ‌ம் அ‌ட‌ங்குவத‌ற்கு‌ள் மதுரையில் ராம‌ர் கோ‌‌யிலு‌க்கு அரு‌கி‌ல் சைக்கிளில் வைக்கப்பட்டு இருந்த டைம்பாம் குண்டு வெடித்து ‌சித‌றியது. அ‌தி‌ர்‌ஷ்டவசமாக எ‌ந்த உ‌யி‌‌ர் சேத‌ம் ஏ‌ற்பட‌வி‌ல்லை. மதுரை அண்ணாநகர் பகுதியில் தனியார் டிரஸ்ட்டுக்கு சொந்தமான ஸ்ரீராம் கோவில் பகுதியில் மே 1, 2012 அன்று அதிகாலை 3 மணிக்கு பயங்கர சத்தம் கேட்டது. அப்போது அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளிகள் இது குறித்து அண்ணாநகர் போலீசுருக்கு தகவல் கொடுத்தனர். உதவி ஆணைய‌ர் வெள்ளத்துரை தலைமை‌யி‌ல் ‌விரை‌ந்து வ‌ந்த போ‌‌லீசா‌ர் ‌விசா‌ரி‌‌த்தன‌ர். ராமர் கோவிலை சுற்றி அமைக்கப்பட்ட கம்பி வேலியின் அருகே ஒரு சைக்கிள் நின்றிருந்தது. அதன் கேரியர் மேல் வைத்திருந்த பாக்சில் இருந்த குண்டு தான் வெடித்தது என்று தெரியவந்தது. அதுவும் அது குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்குமாறு செய்து வைக்கப்பட்டிருந்த டைம்பாம் என்பதும் தெரியவந்தது. இதனால் சைக்கிளில் இருந்த பாக்ஸ், போக்கஸ் கம்பிகள் சேதம் அடைந்தன. அருகில் உள்ள சுவரிலும் சிறிது சேதம் ஏற்பட்டது.

மே 1, 2014- சென்ட்ரல் குண்டுவெடிப்பு: தீவிரவாதிகள் சதி…! இன்று காலை சுமார் 7.15 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 9 ம் நடைமேடையில் நின்றிருந்த பெங்களுரூவிலிருந்து கவுகாத்தி செல்லும் ரயிலில் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தது. S – 4 பெட்டியில் ஒரு குண்டும், S – 5 பெட்டியில் மற்றொரு குண்டும் வெடித்துள்ளது. ரயிலின் S-4 மற்றும் S-5 பெட்டிகள் சேதம். 10 பேர் படுகாயம். ஸ்வாதி என்ற 22 வயது பெண் பலி. இவர் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர்.

2022 குண்டுவெடிப்பு சம்பவங்கள்: இ‌ப்படி த‌மிழக‌த்‌தி‌ல் அ‌ண்மை காலமாக வெடிகு‌ண்டு கலா‌ச்சார‌ம் அர‌ங்கே‌றி வரு‌கிறது. 2022ல் கோவை, திருப்பூர், சேலம், மதுரை, தாம்பரம் உள்ளிட்ட பல இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்படுகின்றன.  செப்டம்பர் 2022ல் மூன்று நாட்களில் 15 பெட்ரோல் வெடிகுண்டுகள் வெடித்துள்ளன. இப்பொழுது, பள்ளி மாணவர்கள் விளையாட்டாக, குண்டு தயாரித்து வெடித்துள்ளனர். இதெல்லாம் நல்லதிற்கு இல்லை. திக-திமுகவினர், கம்யூனிஸ்டுகள் அரசியல் ரீதியில், சித்தாந்த ரீதியில் ஆதரித்து வன்முறைகளைவளர்ப்பதை விடுத்து, உண்மையிலேயே அமைதி காக்க வேண்டிய கடமையை ச்ய்ய வேண்டும். வெற்றுப் பேச்சுகள், வாய் சவடால் முதலியவை உதவாது.

© வேதபிரகாஷ்

09-01-2022


[1] வேதபிரகாஷ், தமிழகத்தில் வெடிகுண்டு தயாரிப்பு, வெடிப்பொருட்கள் உபயோகம், வெடிகுண்டு கலாச்சாரம் (1), 29-10-2011.

[2] அரியலூர் பகுதியில் 1980-ம் ஆண்டில் நக்சலைட் இயக்க பயங்ரவாதிகளில் அதிகமானவர்கள் தமிழர் விடுதலை படை என்ற அமைப்பை உருவாக்கினர். அதற்கு தமிழரசன் தலைமை தாங்கினார். இந்த இயக்கத்தினர் தீவிரமாக செயல்பட்ட நிலையில், கர்நாடகாவில் இருந்து காவிரியில் தண்ணீர் வழங்க மறுத்ததை கண்டித்தும், இதனால் கர்நாடகாவிற்கு மின்சாரம் வழங்கக்கூடாது, தமிழர்களை தமிழர்களே ஆள வேண்டும், எனவே தனித் தமிழ்நாடு வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், தங்கள் இயக்கம் மற்றும் கோரிக்கையின்மீது அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வெடிகுண்டு வைத்து ரெயிலை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டினர். அதன்படி தங்கள் திட்டத்தை நிறைவேற்றும் நோக்கில் 1987-ம் ஆண்டு மார்ச் 14-ந் தேதி நள்ளிரவில் அரியலூர் -சில்லக்குடி இடையே மருதையாற்று ரெயில் பாலத்தில் பயங்கரவாதிகள் வெடிகுண்டு வைத்தனர். அங்கிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு மின்வயரை இணைத்து, தங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வெடிகுண்டை வெடிக்கச்செய்ய காத்திருந்தனர்.

https://www.dailythanthi.com/News/Districts/2022/03/15010133/Rail-blast-kills-more-than-50.vpf