Posts Tagged ‘பேய்’

அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகி விட்டது – சீமானின் பேச்சு, எதிர்ப்பு, கண்டனம் மற்றும் மிரட்டல் (1)

ஓகஸ்ட் 4, 2023

அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டதுசீமானின் பேச்சு, எதிர்ப்பு, கண்டனம் மற்றும் மிரட்டல் (1)

தமிழக அரசியல்வாதிகளின் முரண்பட்ட சித்தாந்தங்கள்: தேர்தல் வருகின்றது என்றால் அரசியல்வாதிகள் என்னவேண்டுமாலும், எப்படி வேண்டுமானாலும் பேசுவார்கள். ஒரு கொள்கைப் பிடிப்பற்ற, ஏன் கொள்கையற்ற, சித்தாந்த உதறல்களாகக் கூட பேச்சுகள் இருக்கும். கூட்டணி மயக்கம், போதை, பேரம் என்றெல்லாம் வந்து விட்டால், இப்பேச்சுகள் இன்னும் அதிகமாகி விடும். தமிழக, திராவிட, திராவிடத்துவ அரசியலில் பிரிவினைவாதம், திராவிடஸ்தான், திராவிடநாடு, தமிழ்நாடு, மாநில சுயயாட்சி, தமிழ் தேசியம், திராவிட தேசியம், மொழிபேசும் தேசிய இனங்கள், ஆரியன்,திராவிடன், வடுகண், வந்தேறி, குந்தேறி என்று விரிந்து கொண்டே போகும். மேனாட்டு பிரஹஸ்பதிகள் அவ்வப்பொழுது தங்களது தேவைக்கு ஏற்ப, இத்தகைய சித்தாந்தங்களை கருத்தியல், கருதுகோள், மாதிரி, உத்தேச வடிவம் என்ற ரீதியில் முன்வைப்பர், மற்றவர் மூலம் கருத்து பெற முயற்சிப்பர். பிறகு அவை தமக்கு உபயோகப் படும், லாபம் கிடைக்கும் என்றால், விஞ்ஞான முறையில் மெய்ப்பிக்கப் பட்டது என்று முலாம் பேசி  சுற்றில் விட்டு ஒத்திகைப் பார்ப்பர்.

மதஆதரவும், ஓட்டு வங்கியும், அரசியலும்: மணிப்பூர் கலவரத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் ஜூலை 30-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய சீமான்[1], “ஒவ்வொரு கலவரத்தின் பின்னணியிலும் பண வேட்டை இருக்கும். மணிப்பூர் கலவரத்திற்கும் அது தான் காரணம். ஆழ்ந்து பார்த்தால், மலைகளில், காடுகளில் வாழ்கிற பழங்குடி மக்கள் கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பா..விற்கு வாக்கு செலுத்த மாட்டார்கள். தரை தளத்தில் வாழும் மெய்த்தி இன மக்கள், இந்துத்துவ கோட்பாட்டை ஏற்கும் மக்களாக இருக்கிறார்கள். அதனால், அங்கே பழங்குடி இன மக்கள் சாவதைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை. நமக்கும் இது நடந்துள்ளது. ஒகி புயலில் மீன் பிடிக்கச் சென்ற 200-க்கும் மேற்பட்டோர் இறந்து போய்விட்டனர். வலிமை மிக்க கடற்படையை வைத்திருக்கும் நம் நாடு, அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று எண்ணவே இல்லை. மக்கள் போராடியும் எந்த மதிப்பும் அதற்கு தரவில்லை. கடைசியாக, ‘உயிரற்ற உடலையாவது ஒப்படையுங்கள், மரியாதையான நல்லடக்கம் செய்கிறோம்என்று கூட போராடினார்கள். அப்போது கண்டுகொள்ளவில்லை. அதற்கு காரணம், அவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள், அவர்கள் வாக்கு நமக்கு வரப்போவதில்லை என்பதால் கண்டுகொள்ளவில்லை.

திராவிட அரசியல், தேசிய அரசியல், கலவரங்கள்: சீமான் தொடர்ந்து பேசியது[2],தேச ஒற்றுமையை பேச வக்கற்ற, தகுதியற்றவர்கள் தான் திரும்ப திரும்ப தேச ஒற்றுமை பற்றி பேசுகிறார்கள். திடீரென இவர்கள் புனிதர்களாகிவிடுவார்கள். அதை நாம் நம்ப வேண்டும். குஜராத் கலவரத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்து பேசியவர்கள் தி.மு..வினர். இவர்கள் மணிப்பூர் கலவரத்தைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? 76-வது நாளில் பேசுகிறீர்கள். 76 நாளில் என்ன செய்தீர்கள்? தேர்தல் வருகிறது, அதனால் பேசுகிறீர்கள். அங்கு பாதிக்கப்படும் கிறிஸ்தவர்களை வைத்து, இங்குள்ள கிறிஸ்தவர்களிடம்உனக்காக பேசுகிறோம்என்பதை காட்டுவதற்காக பேசுகிறார்கள். நான் ஈழத்தைப் பற்றி பேசிய போது, ‘அரசியலுக்காக பேசுகிறார்கள்என்று கூறியவர்கள் தான், இன்று மணிப்பூர் கலவரத்தைப் பற்றி பேசுகிறார்கள். தேர்தல் ஆதாயத்திற்காக இவர்கள் பேசுகிறார்கள். ஆஊனா கட்டுச்சோறு கட்டிக்கிட்டு நடைபயணம் கிளம்பிவிடுகிறார்கள். குஜராத் மாடல் மாதிரி, திராவிட மாடல் மாதிரி நடைபயணம் ஓல்டு மாடல். ராகுல் காந்தி, நடையா நடந்தார், ஒன்னும் நடக்கல போய்ட்டார். 9 ஆண்டுகள் ஆட்சி செய்துவிட்டு இப்ப தான் என்ன பிரச்னை என்று கேட்க வருகிறார்கள். பிரச்னையே நீங்க தானே!

மதரீதியிலான ஓட்டு வங்கி நிரந்தரமல்ல?: சீமான் தொடர்ந்து பேசியது, மணிப்பூர் விவகாரத்தை நாம் பேசுவதால், நமக்கு அங்குள்ள மக்கள் ஓட்டுப் போடப்போவதில்லை. இங்குள்ள கிறிஸ்தவர்களும் நமக்கு ஓட்டுப் போடப் போவதில்லை. நாம நினைத்துக் கொண்டிருக்கிறாமே், இஸ்லாமையும், கிறிஸ்துவத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று. ஆனால் அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது[3]. சும்மா தேவாலயத்திற்கு போய்தேவனே வாரீர்.. வாரீர்னு,’ பாடிட்டு, எவனிடமோ நாட்டை கொடுத்துவிட்டார்கள்[4]. இந்த நாட்டில் நடந்த அநீதிக்கு பெரிய பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தான். தொடர்ச்சியாக பல ஆண்டுகுள் 18 சதவீதம் வாக்குகளை தி.மு..வுக்கும், காங்கிரஸிற்கும் போட்டு போட்டு நாட்டை தெருவில் போட்டவர்கள் இவர்கள் தான். சலிக்க முடியாத ஊழல், லஞ்சம், சீர்கேடான நிர்வாகம், காரணம் இவர்கள் தான். இவர்கள் பாவம் கேட்கிறார்கள். பெரும்பாவமே அவர்கள் தான், அவர்களுக்கு எப்படி மன்னிப்பு கிடைக்கும். இன்னும் பாருங்கள், இவர்கள் தான் எங்களை பாதுகாப்பார்கள் என்று நம்புகிறார்கள். இஸ்லாமியர்களுக்கு தி.மு. தான் பாதுகாப்பு. ஆமாம், சிறையில் வைத்து பல ஆண்டுகளாக பாதுகாப்பது எவ்வளவு பெரிய பாதுகாப்பு? மீண்டும் இதே இஸ்லாமியர்களிடம் அவர்கள் ஓட்டு கேட்பார்கள். இந்த முறையும் அதே பொய்யை சொல்லி ஓட்டு கேட்பார்கள்[5]. நீங்கள் அவவர்களை விடுதலை செய்யுங்கள், நாம் தமிழர் கட்சியும் உங்களுக்கு வாக்களிக்கும்,என்று அந்த ஆர்பாட்டத்தில் சீமான் பேசினார்[6].

சீமான் பேசிற்கு ஊடகங்கள் இப்பொழுது அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது: சீமான் பேசும் பேச்சுகளில் பெரும்பாலாக லாஜிக், விசயம் இருக்கும் என்பது போல இருக்கும். இருப்பினும், சில நேரங்களில் தாராளமாக தமாஷான பேச்சு போல சிலவற்றை எடுத்து விடுவார். அந்த பேச்சுகளில் உள்நோக்கம் இருக்கிறதா-இல்லையா என்பது ஆராய வேண்டிய நிலையில் தான் உளளது. போதாகுறைக்கு யூ-டியூபாக மாறும் அல்லது சுற்றுக்கு வரும் பேச்சுகளில் உண்மைத் தன்மை 30-50% கூட இருப்பதில்லை. ஒரு சிறிய விசயம் கிடைத்தால், அதை ஊதி பெரிதாக்கி, தமக்குத் தான் எல்லாம் தெரியும் என்ற ரீதியில், வீடியோக்கள் தயாரித்து சுற்றில் விடுகின்றனர். பொழுது போக வேண்டும் என்று ஆயிரக்கணக்கில் மக்கள் பார்க்கின்றனர். அவர்களுக்கு உண்மை, உண்மைத் தன்மை, அதாரம் பற்றியெல்லாம் கவலையில்லை. சில நேரங்களில் அரசியல், வெறுப்புப் பேச்சு, காழ்ப்பு-வெறுப்பு போன்றவை சேரும் பொழுது விப்ரீதமாகிறது. எல்லா பேச்சுகளையும், எல்லோரும், ஒரே மாதிரியாக எடுத்துக் கொள்வ்தில்லை முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சமூக ஊடக பதிவுகளை வைத்து செய்திகளைத் தயாரிப்பது என்பது இக்கால செய்தி தயாரிப்பு முறையாக உள்ளது. அவ்விதத்தில், சீமான் பேசிற்கு ஊடகங்கள் இப்பொழுது அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளன என்று தெரிகிறது.

இஸ்லாமையும், கிறிஸ்துவத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள்  –ஜவாஹிருல்லா கண்டனம்: இந்த ஆர்ப்பட்டத்தில்,இஸ்லாமையும், கிறிஸ்துவத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று. ஆனால் அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது.” என்று சீமான் பேசியது தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையானது. .. பொதுச் செயலாளர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்ததோடு சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், “இந்த கயமைத்தனமான பேச்சு வன்மையான கண்டனத்துக்கு உரியது. தன் கட்சிக்கு வாக்களிக்காத காரணத்தினாலேயே கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் சாத்தானின் பிள்ளைகள் என்று வர்ணிப்பது அநாகரிகமானது, அருவருப்பானது, என்பதோடு அரசியல் நேர்மையற்ற செயலுமாகும். இதை வன்மையாக கண்டிக்கிறோம்,” என்று ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்தார்.

© வேதபிரகாஷ்

04-08-2023


[1] தமிழ்.ஒன்.இந்தியா, காலை காட்டி சொன்னஅந்தவார்த்தை.. சீமான் அரசியலுக்கு என்னாச்சு? கொதித்து போன இஸ்லாமியர்கள்! திடுக், By Shyamsundar I Published: Thursday, August 3, 2023, 14:20 [IST]

[2] https://tamil.oneindia.com/news/chennai/why-naam-tamilar-party-seeman-attack-muslims-and-christians-all-of-a-sudden-526569.html

[3] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Seeman Speech: ‘இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சாத்தானின் குழந்தைகள்சீமான் பகீர் பேச்சு!  , Stalin Navaneethakrishnan • HT Tamil, Jul 31, 2023 09:21 AM IST

[4] https://tamil.hindustantimes.com/tamilnadu/ntk-chief-coordinator-seeman-talks-about-muslims-and-christians-131690773683412.html

[5] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், சாத்தானின் குழந்தைகள் என பேசியது ஏன்? சீமான் விளக்கம், Written by WebDesk, August 3, 2023 01:18 IST.

[6] https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-electricity-employees-have-done-electricity-calculations-without-going-to-homes-734464/