Posts Tagged ‘அமீர்’

ஜாபர் சாதிக் விவகாரம் – சகோதரர்கள் தலைமறைவாக உள்ள நிலை, தொடரும் விசாரணை (7)

மார்ச் 25, 2024

ஜாபர் சாதிக் விவகாரம்சகோதரர்கள் தலைமறைவாக உள்ள நிலை, தொடரும் விசாரணை (7)

ஜாபர் சாதிக்கின் வீட்டின் சீல் நீக்க போட்ட மனு: முன்னர் நோட்டீஸ் ஒட்டியதை, சாத்தின் தாய் கிழித்துப் போட்டாள் என்ற செய்தி வந்தது[1]. அதே போல, இப்பொழுதும் ஏதாவது ஏற்படுமோ என்று தெரியவில்லை[2]. வீட்டில் சோதனை நடந்த போது, சாட்சிகளுடன் தான் அதிகாரிகள் நடத்துவர். பிறகு, அப்பொழுது யார் இருந்தது என்ற கேள்வி எழுகிறது. இதற்கிடையே, ஜாபர் சாதிக் வீட்டில் போடப்பட்டுள்ள சீலை அகற்றக்கோரி டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக்கின் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது[3].  முக்கியமான விசயத்தை விட்டு, எப்படியெல்லாம், இடையில் திசைத் திருப்பப் படுகிறது என்பதையும் கவனிக்கலாம். உண்மையில், இவ்வாறெல்லாம் சட்டமீறல் காரியங்கள் எல்லாம் செய்யாமல், தாய் தடுத்திருக்கலாம். ஆனால், இப்பொழுது, தெரிந்தும், சட்டத்தை மதிக்காமல், நோட்டீஸைக் கிழித்து எறிகிறாள் என்றால், அவர்கள் ஏதோ இந்திய சட்டங்கள் எல்லாம் தமக்கு அமூலாகாது என்று சொல்லுவது போல உள்ளது.

சதானந்தம் என்ற கூட்டாளி: இதற்கிடையில், சென்னையில் விசாரணை நடத்திய போது, ஜாபர் சாதிக் அளித்துள்ள வாக்குமூலம்: “சென்னை பெருங்குடியில், நானும் என் நண்பரான சதானந்தமும் நடத்தி வந்த, போதைப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலையில், வெளிநாடுகளுக்கு உணவு பொருட்கள் அனுப்பியது தொடர்பாக, ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ரசீதுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை உணவு பொருட்கள் அல்ல; போதை பொருள் கடத்தியதற்கான ரசீதுகள். எங்கள் கூட்டாளிகள், திருச்சி மற்றும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளை சேர்ந்த இவர்கள் தான், எங்கள் தொழிலை விரிவுபடுத்தியவர்கள். வெளிநாடுகளுக்கு போதை பொருள் கடத்தியதில், என்னை விட என் சகோதரர் முகமது சலீம் தான் மூளையாக செயல்பட்டு வந்தார். மலேஷியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா என, வெளிநாட்டு தொடர்புகள் அனைத்தையும், முகமது சலீமே கவனித்து வந்தார். வி.சி., நிர்வாகியாக இருந்த அவருக்கு, தமிழகத்தில் செயல்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. “

பேரீச்சம் பழமும், போதைப் பொருளும்: ஜாபர் சாதிக் தன்னுடைய வாக்குமூலத்தில் தொடர்ந்து கூறியது,  “அந்த வகையில், சென்னை அண்ணா நகரில் மிகவும் முக்கியமான நபர்களின் பின்னணியில் போதைப்பொருள் கடத்தல் நடக்கிறது. இவர்களுடன் என் தம்பிக்கு தொடர்பு உள்ளது. மற்றொரு தம்பி மைதீன், சினிமாவில் நடித்து வருகிறார். அவர் வாயிலாக, கோலிவுட்டில் போதை பொருள்சப்ளைசெய்துள்ளோம். எங்களின் வாடிக்கையாளர்களாக சில நடிகர், நடிகையர், கல்லுாரி மாணவர்கள், .டி., நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் உள்ளனர். அவர்களுக்கு எல்லாம் பேரீச்சம் பழத்தில் வைத்து போதை பொருட்களை விற்பனை செய்தோம்[4]. இதுபற்றி வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக, பேரீச்சம் பழம் இறக்குமதி தொழிலும் செய்து வந்தோம்[5]….”

கோலிவுட் தொடர்பு: ஜாபர் சாதிக் தன்னுடைய வாக்குமூலத்தில் தொடர்ந்து கூறியது,  ‘இதற்கு கோலிவுட்டில் எங்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்த முக்கிய நபர் தான், ‘ஐடியா’ கொடுத்தார். பேரீச்சம் பழம் வியாபாரத்திலும் நல்ல லாபம் கிடைத்தது. இவ்வாறு வாக்குமூலத்தில் ஜாபர் சாதிக் தெரிவித்துள்ளார். ஜாபர் சாதிக்கின் சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க, அவர்களுக்கு எதிராக, ‘லுக் அவுட்’ நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அடிக்கடி செல்லும் இடங்கள் குறித்து, அதிகாரிகளிடம் ஜாபர் சாதிக் தெரிவித்துள்ளார். இருவரும் விரைவில் சிக்குவர் என, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். பலமுறை வாக்குமூலம் கொடுத்து, தங்களை வற்புருத்தி அவ்வாறு வாங்கிக் கொண்டனர் என்று, மனு தாக்குதல் செய்வதும் உண்டு. இதெல்லாம், வழக்கமாக, வழக்கறிஞர்கள் செய்யும் வேலைகள் தான். அரசு அதிகாரிகள் எந்த அளவுக்கு கஷ்டப் பட்டு, வழக்கை நிலைநிறுத்த, ஆதாரங்களை சேகரித்து வலுசேர்க்கும் நிலையில், சிறிய விசயங்களை வைத்து, முக்கியமான விசயத்தையே மறக்கும் படி அல்லது ஓரங்கட்டும் முறையில், வேறு பிரச்சினையைக் கொண்டு வரும் சாதுர்யமும், வக்கீல்களில் உண்டு.

பேரீச்சம் பழம் மற்றும் போதை மருந்து வியாபாரம் சேர்ந்து நடந்தது: பேரீச்சம் பழம் வியாபாரம் மற்றும் அப்பழங்களில் போதை மருந்து வைத்து விற்பனை செய்யப்பட்டது எல்லாம் திகைப்பாக இருக்கிறது. பழங்கள் விற்ப்பது மற்றும் பழங்கள் உள்ளேன் போதை மருந்து விற்பனை, ஆக இரண்டு வகை முறைகளும் நடந்து வந்ததும் அதிர்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு, இவையெல்லாம் மக்களுக்கு சென்று அடைவது, அதைவிட மிக கொடுமையான சமூகத்தை பாதிக்கும் காரியம் என்று சொல்ல வேண்டி இருக்கிறது. மாணவர்கள் படிப்பது, முன்னேற மற்ற பரீட்சைகளை எழுதுவது போன்றவற்றில் எல்லாம் கவனம் செலுத்தாமல், இவ்வரான விவகாரங்களில் சிக்கிக் கொள்வது மிகவும் வருத்துவமாக உள்ளது. இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு இந்த போதை பொருள் விற்கும் காரியம் அதர்மம், தனிமனிதனை, குடும்பத்தை, சமூகத்தை சீரழிக்கும் கயமைத் தனம் என்றே அடையாளம் காணவேண்டியுள்ளது.

போதை மருந்து வியாபார யுக்தி என்ன?: போதை மருந்து மனிதனை, குடும்பத்தை, சமூகத்தை, ஏன் பல சமூகங்களை சீரழக்கிறது என்பது தெரிந்தும், அது ஏன் ஊக்குவிக்கப்படுகிறது, பல முறைகளில் மறைத்து வியாபாரம் செய்யப்படுகிறது, அத்தகைய முறைகளை கையாளுபவர்கள் எப்படி தொழில் நுட்பங்களை கூறுகின்றனர் என்பதெல்லாம் கூட கவனிக்க வேண்டிய விஷயங்களாக இருக்கின்றன. ஏனெனில் இக்காலத்தில் இவ்வாறு எந்த பொருளையும் விற்க்க வேண்டும் என்றால், அதற்கு ஏதோ ஒரு வகையில் விளம்பரம் தேவைப்படுகிறது. ஆனால் போதை மருந்து விவகாரம் என்பது, அவ்வாறு விளம்பரத்துடன் செய்யப்படும் வியாபாரம் அல்ல. மிகவும் ரகசியமாக அதனை உபயோகிப்பவர்கள் யார் என்று கண்டறிந்து அல்லது தொடர்ந்து அதன் உபயோகத்தில் கட்டுண்டுக் கிடக்கும் அடிமைகளை கண்டறிந்த வியாபாரம் செய்பவர்கள் தான் அதிகமாக உள்ளனர். ஏதோ ஒரு வகையில் பாதைக்கு உட்பவர்கள் தான் இதனை விற்பவர்களாகவும் மாறுகின்றனர். அனைவரும் கண்காணித்து, அவ்வாறான போதைப் பொருளை கையாள்கிறார்கள் என்றறிந்து, அவர்களையே ஏஜென்டுகளக்கி விடுகின்றனர். அதனால் அத்தகைய வியாபாரம் செய்யும் போதை மருந்துஜஏஜென்டுகளை, மிகவும் அக்கறையாக அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு வேண்டியவை எல்லாம் கொடுக்கிறார்கள். ஆகையால் தான் இவ்வியாபாரத்தை, மிகவும் ரகசியமாக செய்து வருகிறார்கள், அதே நேரத்தில் தீவிரமாகவும் நடைபெற்று வருகிறது.

இந்தியாவை குறிவைக்கும் போதை மருந்து சக்திகல்கூட்டங்கள்: இந்தியா 140 கோடி மக்கள் தொகையை கொண்ட நாடாகும் பலவித பொருளாதார பிரச்சனைகள் கொண்டிருக்கும் நாடு. இன்றைய அளவில் எல்லாவித பிரச்சனைகளையும் தாங்கிக் கொண்டுதான் தொடர்ந்து முன்னேறி வருகிறது. சுதந்திரத்திற்கு பிறகு எல்லைப் பகுதியில் அதிகமான ஊடுருவங்கள் குறிப்பாக பாகிஸ்தான் சைனா என்று ஆரம்பித்து இப்பொழுது பர்மாவிலிருந்து அகதிகள் போர்வையில் முஸ்லிம்கள் ஊடுருவி வருகிறார்கள். அதே போன்ற ஊடுருவல்கள் வடகிழக்கிலும் இருக்கின்றன. ஆனால் அவற்றுடன் போதைப் பொருளும் சேர்ந்து இருக்கிறது. அதுதான் பிரச்சினை. வடமேற்கில் இருந்து வரும் ஊடுருவல்கள் தான் மற்றும் வட பாகிஸ்தான் பகுதிகளில் போதை மருந்து உற்பத்தி, கடத்தல், விநியோகம், வியாபாரம், என்றெல்லாம் செய்து வரும் கூட்டங்களும் ஊடுருவல்கார்களுடன் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். இதனால் தான் பல விஷயங்கள் பொதுப்படையாக பேச முடிவதில்லை. நாட்டு நலன் கருதாமல், விரோதத்துடன் செயல்படுபவர்கள் இவ்விவகாரங்களில் ஒன்றாகிறார்கள். சமூகத்தைச் சீரழிப்பது என்பது தான் அவர்களது குறிக்கோளாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

20-03-2024


[1] குமுதம்,சென்னை வீட்டிற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக் மனுத்தாக்கல்,  Mar 19, 2024 – 20:10

[2] https://kumudam.com/Jaffer-Sadiq-Remanded-To-14-Days-Custody – google_vignette

[3]  https://www.maalaimalar.com/news/national/zafar-sadiq-remanded-to-14-days-court-custody-in-drug-trafficking-case-708748

[4] மாலைமலர், கோடி கோடியாக கொட்டிய பணத்தை ஓட்டல்சினிமாவில் முதலீடு செய்த ஜாபர் சாதிக், Byமாலை மலர்19 மார்ச் 2024 3:53 PM

[5] https://www.maalaimalar.com/news/state/jaffer-sadiq-invested-money-hotel-and-cinema-708725

ஜாபர் சாதிக் விவகாரம் – சகோதரர்கள் தலைமறைவாக உள்ள நிலை, தொடரும் விசாரணை (6)

மார்ச் 25, 2024

ஜாபர் சாதிக் விவகாரம்சகோதரர்கள் தலைமறைவாக உள்ள நிலை, தொடரும் விசாரணை (6)

04-02-2024 முதல் 20-03-2024 வரை நடந்தது என்ன?:  போதை மருந்து விவகாரங்களில் நடவடிக்கைகள் வேகமாக நடக்கின்றனவா அல்லது வேகம் குறைவா போன்றவை நடவடிக்கைகள் வைத்து தீர்மானிக்கலாம்.

04-02-2024 போதை மருந்து தில்லியில் 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

15-02-2024ல் தில்லியில் மூவர் கைது, ஜாபர் சாதிக் தலைமறைவு; லுக்-அவுட் நோட்டீஸ் கொடுக்கப் பட்டது.

22-02-2024 – படப்பிடிப்பு நிறுத்தப் பட்டது.

25-02-2024 – திமுகவில் இருந்து நீக்கப் பட்டது.

26-02-2024 – என்.சி.பி அலுவலத்தில் ஆஜராகும் படி ஆணை.

08-03-2024 – வெள்ளிக்கிழமை – ஜெய்பூர்

பிறகு 09-03-2024 சனிக்கிழமை அன்று ஜாபர் சாதிக் கைது செய்யப் பட்டான்.  ஒரு வாரம்காவல்.

சதானந்தன் கைது

16-03-2024 காவல் செவ்வாய்கிழமை வரை நீட்டிக்கப் பட்டது.

17-03-2024 ஞாயிறு – சென்னைக்கு கொண்டு செல்லுதல்

18-09-2024 திங்கட்கிழமை அன்று காலை விமானம் மூலம், சென்னைக்கு அழைத்து வரப்பட்டான்.

19-03-2024  செவ்வாய்கிழமை – தில்லிக்குத் திரும்ப அழைத்துச் செல்லப் பட்டான்.

20-03-2024  புதன் கிழமை– 14 நாட்கள் காவல்

ஜாபர் சாத்திக் சகோதரர்கள் தலைமறைவாக உள்ள நிலை; ஜாபர் சாதிக் காணாமல் இருந்தது போல, அவனது சகோதரர்களும் மறைந்து வாழ்கின்றனர். இந்த நவநாகரிக காலத்தில் எப்படி மறைந்து வாழ முடியும் என்பதே திகைப்பாக இருக்கிறது. பணம், பலம், ஆட்கள், இருக்க இடம் என்று பல இல்லாமல், ஒரு நாள் கூட இருந்துவிட முடியாது. அந்நிலையில் பல நாட்கள் மறைந்து வாழ்வது எப்படி சாத்தியம் ஆகும். அப்ப்டியென்றால், இவர்களுக்கு எல்லாம் உதவ பல இடங்களில் ஆட்கள் இருக்கிறார்க்ச்ௐ என்றே தெரிகிறது. இதெல்லாம் நேரத்தை பயன் படுத்தி, ஆதாரங்களை மறைக்கவா அல்லது நடவடிக்கை நேரத்தை விரயமாக்கவா என்று தெரியவில்லை. ஜாபர் சாதிக்கின் சகோதரரும், வி.சி., முன்னாள் நிர்வாகியுமான முகமது சலீம், 28, மற்றொரு சகோதரரும், அமீர் இயக்கி வரும், இறைவன் மிகப்பெரியவன் என்ற படத்தின் நடிகருமான மைதீன், 23, ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வருகின்றனர். குடியுரிமை அதிகாரிகள் வாயிலாக இருவரும் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்லவில்லை என, உறுதி செய்யப்பட்டு உள்ளது. எனினும், விமான நிலையங்களுக்கு, ‘லுக் அவுட்’ நோட்டீசும் வழங்கப்பட்டுள்ளது.

NCB அதிகாரிகள் சொல்லும் விவரங்கள்; NCB அதிகாரிகள் முகமது சலீம், மைதீன் ஆகியோர் பதுங்கி இருக்கும் இடங்கள் குறித்து ரகசிய தகவல்கள் கிடைத்துள்ளன மற்றும் அவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன, என்கின்றனர். இவர்களுக்கு அடைக்கலம் தருவோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்படும். முகமது சலீம் நெருங்கிய நட்பு வட்டத்தில், சென்னையைச் சேர்ந்த வி.வி.ஐ.பி.,யின் மகன் இருப்பதும், அவரும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அதுபற்றியும் ரகசிய விசாரணை நடக்கிறது. முகமது சலீம், மைதீன் ஆகியோர் விரைவில் சிக்குவர். இவ்வாறு அவர்கள் கூறினர்[1]. திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் சகோதரர்களுக்கு அடைக்கலம் தருவோர் மீது, வழக்குப்பதிவு செய்யப்படும்’ என, போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்[2]. ‘வெளிநாடுகளுக்கு உணவு பொருட்கள் அனுப்புவது போல, போதைப்பொருள் கடத்தியதில், என் சகோதரர் முகமது சலீமுக்கு தான் முக்கிய பங்கு உள்ளது’ என, ஜாபர் சாதிக் வாக்குமூலம் அளித்துள்ளார். தி.மு.க., அயலக பிரிவு முன்னாள் நிர்வாகியும், சர்வதேச போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவனுமான ஜாபர் சாதிக், 35, டில்லியில் 09-03-2024 அன்று, கைதாகி, மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின், 10 நாள் காவலில் விசாரிக்கப்பட்டார்[3].

18-03-2024 – சென்னையில் விசாரணை: பின், அவரை 18-09-2024 அன்று காலை விமானம் மூலம், சென்னைக்கு அழைத்து வந்து விசாரித்த அதிகாரிகள் மீண்டும் டில்லியில், போதை பொருள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் 20-03-2024 அன்று ஆஜர்படுத்தினர்[4]. என்.சி.பி இவ்வளவு கஷ்டப் பட்டு சட்டரீதியில் செயல்பட வேண்டியுள்ளது. அதிலும், போதை மருந்து விவகாரங்களில் மிகவும் எச்சரிக்கையுடன், ஜாக்கிரதையாக செயல்பட வேண்டியுள்ளது. இந்த விசாரணையில் ஜாபர் சாதிக்கிற்கு யார் யாருடன் தொடர்பு, போதைப்பொருள் கடத்தலுக்கு உதவி செய்வது யார் என என்சிபி துருவிதுருவி விசாரணை நடத்தியது. மேலும் அவரிடம் கைப்பற்றப்பட்ட 7 செல்போன்களை ஆய்வு செய்யும் பணியும் நடக்கிறது[5]. யார் யாரிடம் பேசியுள்ளார் என்பது குறித்து சைபர் கிரைம் தடயவியல் நிபுணர்களின் உதவியும் நாடப்பட்டுள்ளது[6]. இக்காலத்தில், சைபர் தொழிற்நுட்பம் மூலம், பல விசயங்களைத் தெரிந்து கொள்ளலாம். ஆனால், சம்பந்தப் பட்டவர்கள் எந்த அளவுக்கு நாணயமாக நடந்து கொள்வர் என்று கவனிக்க வேண்டும்.

என்.சி.பி அலுவலகத்தில் விசாரணை; பின்னர் அயப்பாக்கத்தில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதெல்லாம் துறை முறையில், சட்டப் படி, நடத்தப் படும் விசாரணை ஆகும். சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக்கின் வீடு, பெருங்குடியில் உள்ள குடோன் ஆகியவற்றுக்கும் ஜாபர் சாதிக்கை அழைத்துச் சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்[7]. இங்கெல்லாம் என்ன நடந்தது, என்ன பேசினார்கள் என்பனவெல்லாம் அரசுமூறையில் காக்கப் படுகிறது எனலாம். எல்லாம் விசயங்களையும் பொதுவில் தெரியப் படுத்த முடியாது, செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. சுமார் 13 மணி நேர விசாரணைக்கு பிறகு ஜாபர் சாதிக் நேற்று இரவு சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்[8]. இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்[9]. ஜாபர் சாதிக்கை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி சுதீர் குமார் சிரோஹி உத்தரவிட்டார்[10]. இதையடுத்து, ஜாபர் சாதிக், திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்[11].

© வேதபிரகாஷ்

20-03-2024


[1] தினமலர், ஜாபர் சாதிக் தம்பிகளுக்கு அடைக்கலம் தந்தால் வழக்கு என்.சி.பி., அதிகாரிகள் எச்சரிக்கை, மாற்றம் செய்த நாள்: மார் 21,2024 03:24

[2] https://m.dinamalar.com/detail.php?id=3581149

[3] தினமலர், போதை கடத்தலில் தம்பி தான் மெயின் ரோல் :ஜாபர் சாதிக் அதிர்ச்சி வாக்குமூலம், பதிவு செய்த நாள்: மார் 19,2024 23:53; https://m.dinamalar.com/detail.php?id=3580226

[4] https://m.dinamalar.com/detail.php?id=3580226

[5] ஏசியாநெட்.நியூஸ், jaffer sadiq : சென்னைக்கு அழைத்து வரப்பட்ட ஜாபர் சாதிக்.. அடுத்து சிக்குப்போகுவது யார்?, vinoth kumar, First Published Mar 18, 2024, 9:18 AM IST; Last Updated Mar 18, 2024, 10:07 AM IST

[6] https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/jaffer-sadiq-brought-to-chennai-tvk-saiyks

[7] நக்கீரன், ஜாபர் சாதிக்கிற்கு நீதிமன்றக் காவல் விதிப்பு!,  நக்கீரன் செய்திப்பிரிவு,  Published on 19/03/2024 | Edited on 19/03/2024

[8] https://www.nakkheeran.in/24-by-7-news/india/jaber-sadiq-sentenced-court-custody

[9]தினகரன், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கிற்கு 14 நாள் நீதிமன்ற காவல்!, March 19, 2024, 5:03 pm

[10]  https://www.dinakaran.com/14dayscourtcustody-zafarsadiq-arrested-casedrugtrafficking/ – google_vignette

[11] மாலைமுரசு, போதைப் பொருள் கடத்தல் வழக்கு- ஜாபர் சாதிக்கிற்கு 14 நாள் நீதிமன்ற காவல், By மாலை மலர்19 மார்ச் 2024 5:48 PM

ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்தலில் மாட்டிக் கொண்டது – 15-02-2924 முதல் 09-03-2024  வரை எங்கிருந்தான்?இந்தியா போதை மருந்து கூட்டங்களினின்று விடுபடுமா? (5)

மார்ச் 11, 2024

ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்தலில் மாட்டிக் கொண்டது – 15-02-2924 முதல் 09-03-2024  வரை எங்கிருந்தான்? இந்தியா போதை மருந்து கூட்டங்களினின்று விடுபடுமா? (5)

15-02-2924 [வியாழக்கிழமை] முதல் 09-03-2024 [சனிக்கிழமை] வரை எங்கிருந்தான்?: சாதாரணமாக குற்றவாளிகளுக்கு ஒரு மணி நேரம் அவகாசம் கொடுத்தாலே அவர்கள் தமக்கு எதிராக உள்ள அத்தனை ஆதாரங்களையும் அழித்துவிட்டு தப்பித்துக் கொள்ளத் தான் மிக வேகமாக செயல்படுவர் என்பது பொதுவாக குற்றவியல் வல்லுநர்கள் தெரிந்த விஷயமாக எடுத்துக் காட்டுகின்றனர்ர். அந்நிலையில் இப்பொழுது இந்தியாவில் மின்னணு யுகத்தில் எல்லா உபகரணங்களும் வைத்துள்ள நிலையில். இத்தனை நாட்கள் இவன் ரகசியமாக இருந்துள்ளாரன் என்பது திகைப்பாகத்தான் இருக்கிறது. ஆகவே அந்த குறிப்பிட்ட இடங்களில் எல்லாமே இவனுக்கு உதவியாளர்கள் அல்லது அவ்வாறு ரகசியமாக தங்க வைத்து அனுப்பி வைக்கக்கூடிய நண்பர்கள் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. அதனால் தான் எத்தனை நாட்கள் அவன் தாராளமாக தங்கி இருந்து, தமிழகத்திலிருந்து ஜெய்பூர் வரைக்கும் சென்று இருக்கிறான். பிறகு தான் ஏதோ தகவல் கிடைத்த பிறகு, அவனை அங்கு சென்று பிடித்துள்ளனர்.

என்.சி.பி. அதிகாரி  கொடுத்த விவரங்கள்: இது குறித்து ஞானேஸ்வர்சிங் என்.சி.பி. அதிகாரி  நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு[1] : போதைப்பொருள் கடத்தலை தடுக்க முழு வீச்சில் நடவடிக்கை எடுத்துள்ளோம்[2]. திருவனந்தபுரம், மும்பை, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் பதுங்கி இருந்துள்ளார். பங்களா ஒன்றில் பதுங்கியிருந்த ஜாபர் சாதிக்கை டில்லியில் கைது செய்தோம். சர்வதேச போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். டில்லி மற்றும் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் மலேசியாவுக்கு ஜாபர் சாதிக் கடத்தி வந்தார். சினிமா, கட்டுமானத்துறையில் முதலீடு: போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு சம்பாதித்த பணத்தை சினிமா, ரியல் எஸ்டேட், கட்டுமானத்துறையில் ஜாபர் சாதிக் முதலீடு செய்துள்ளார். போதைப் பொருள் சம்பந்தப்பட்ட பணம் எங்கெங்கு முதலீடு செய்யப்பட்டதோ அது குறித்து விசாரிக்கப்படும். 3,500 கிலோ வரையிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜாபர் சாதிக்கிற்கு முக்கிய பிரமுகர்கள் பலருடன் தொடர்பு உள்ளது. உணவுப்பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் போதைப்பொருட்களை பல்வேறு நாடுகளுக்கு ஜாபர் சாதிக் கடத்தி உள்ளார்.

தொடர்புடைய அரசியல்வாதிகள் யார்?: அரசியல் கட்சிகளுக்கு போதைப்பொருட்கள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தை வழங்கி உள்ளார். மங்கை என்ற பெயரில் தமிழ் திரைப்படம் ஒன்றை ஜாபர் சாதிக் தயாரித்துள்ளார். சென்னையில் ஓட்டல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். தமிழகத்தில் சில திரைப்பிரபலங்கள் உடன் தொடர்பு இருப்பதாக ஜாபர் சாதிக் வாக்குமூலம் அளித்துள்ளார். விசாரணைக்குப்பின் ஜாபருடன் தொடர்புடையவர்கள் பெயர்களை வெளியிடுவோம். கடந்த 25ம் தேதி கைது செய்யப்பட்ட போதை கடத்தல் நபர்கள் 3 பேர் கொடுத்த தகவலின் படி ஜாபர் சாதிக் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளில் 3,500 கிலோ சூடோபெட்ரின் போதைப்பொருட்களை ஜாபர் சாதிக் கடத்தியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

ஜாபர் சாதிக் நிரபராதி என்று வாதிடும் அவனது வக்கீல்: இந்நிலையில், ஜாபர் சாதிக்கின் வழக்கறிஞர்கள் தந்தி டிவி-க்கு அளித்த பேட்டியில், போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் நிரபராதி என்றும், அவரது குடும்பத்தினர் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்[3]. ஜாபர் சாதிக்கின் வழக்கறிஞர் டி.ஆர். பிரபாகரன் தந்தி டிவி-க்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது[4]: “15.02.2024 அன்று கிட்டத்தட்ட 50 கிலோ சூடோபெட்ரைன் என்கிற போதை பொருளை டெல்லி என்.சி.பி பறிமுதல் செய்திருக்கிறார்கள். அது தொடர்பாக 3 பேர்களை கைது செய்து இருக்கிறார்கள். அந்த 3 பேரிடம் வாக்குமூலம் பெற்று அதன் அடிப்படையில் இன்று (09.03.2024) ஜாபர் சாதிக்கை கைது செய்திருக்கிறார்கள்[5]. அவரை பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினார்கள்[6]. அப்படி ஆஜர்படுத்தும் போது நாங்கள் அவருடைய வழக்கறிஞர்களாக நீதிபதியிடம் இந்த 50 கிலோ சூடோபெட்ரைன் என்.சி.பி சட்டத்தில் வரவில்லை, அது போதைப் பொருள் இல்லை என்று கூறி அவருக்கு உடனே ஜாமீன் கொடுக்க வேண்டும் என்று வாதிட்டோம். இதற்கு நீதிபதி, என்.சி.பி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார். இந்த வழக்கில் கைதானவர்களிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்திருக்கிறார்கள். ஜாபர் சாதிக்கிடம் இருந்து எந்த ஒரு போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்படவில்லை என்பதை நாங்கள் அழுத்தமாக கூறினோம்.”

என்.சி.பி 15 நாள் காவல் கேட்டதற்கு  7 நாட்கள் கொடுக்கப் பட்டது:என்.சி.பி நீதிபதி இல்லாததால், இந்த வாழ்க்கை விசாரித்த நீதிபதி பொறுப்பு நீதிபதி என்பதால், அவரை நாங்கள் இப்போதைக்கு நீதிமன்ற காவலில் வைக்கிறோம். நீங்கள் உங்களுடைய எந்த வாதமாக இருந்தாலும் ஜாமீன் கோரும்போது வாதிடுங்கள். அதற்குப் பிறகு நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் கொடுக்கலாமா வேண்டாமா என்று பரிசீலனை செய்யும் என்று கூறினார். அது இல்லாமல் என்.சி.பி தரப்பில் 15 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டார்கள். நாங்கள் அனுமதி அளிக்கக் கூடாது என்று கூறினோம். அவரிடம் விசாரிப்பதற்கு எதுவுமே இல்லை, அவர் நிரபராதி என்று நாங்கள் கூறினோம். அப்போது நீதிபதி, நீங்கள் ஏழு நாள் காவல் வைத்துக் கொள்ளலாம் என்று என்.சி.பி போலீசிடம் கூறி உத்தரவிட்டார். என்.சி.பி அதிகாரிகள், ஜாபர் சாதிக்கின் அடிப்படை உரிமைகளை மீறி இருக்கிறார்கள். அவருடைய குடும்பத்தினர் வயதான பாட்டி, அவருடைய மனைவி, அவருடைய 2 மைனர் மகள்கள், ஒரு மகன் என அனைவரையும் சட்டவிரோதமாக பிடித்து வைத்திருக்கிறார்கள்,” என்று ஜாபர் சாதிக்கின் வழக்கறிஞர் டி.ஆர். பிரபாகர் கூறினார்.

புதிர்களும், கேள்விகளும்: சாதாரணமான, இந்தியர்களுக்கு, இத்தனை புதிர்களும், மர்மங்களும் வேண்டாம். சமூகத்தை சீரழிக்கும் போதை மருந்து வேண்டாம். அத்தகைய சமூக தீவிரவாதிகளும் தேவையில்லை:

  1. தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் கைது – போதைப்பொருள் கடத்தல் வழக்கில் நடவடிக்கை, விவரம் அறிவிக்கப் படவில்லை!
  2. ஜெய்பூரில் கைதான ஜாபர் சாதிக் டில்லி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப் பட்டு, பிறகு சென்னைக்குக் கொண்டு வர உறைப்படி, நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
  3. ஞானேஸ்வர்சிங் என்.சி.பி. அதிகாரி பங்களா ஒன்றில் பதுங்கியிருந்த ஜாபர் சாதிக்கை டில்லியில் கைது செய்தோம்.
  4. திருவனந்தபுரம், மும்பை, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் பதுங்கி இருந்து, தில்லியில் மறைந்திருந்த போது கைது செய்யப் பட்டான்!
  5. தமிழகத்தின் சில திரைப்பிரபலங்கள் உடன் தொடர்பு இருப்பதாக ஜாபர் சாதிக் என்.சி.பியிடம் வாக்குமூலம் அளித்துள்ளாதாகத் தெரிகிறது.
  6. போதைப் பொருட் வருமானத்தை சினிமா, ஓட்டல், ரியல் எஸ்டேட், கட்டுமானத்துறைகளில் முதலீடு செய்யப் பட்டுள்ளது.
  7. இவனது போதை மருந்து வியாபாரம் தில்லி, தமிழகம் வழியாக மற்ற இடங்களுக்குப் பரவி, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா நாடுகளுக்குப் பாரவியது.
  8. திருவனந்தபுரம், மும்பை, புனே, ஹைதரபாத் சென்று ஜெய்ப்பூர் வந்துள்ளான். அங்கு பிடிக்கப் பட்டு, தில்லியில் கைது செய்யப்பட்டான்!
  9. ஆக, இவ்விடங்களில் இருந்த தொடர்புகள், எல்லாம் உதவி செய்தவர்கள் முதலியவர் மூலம் மேலும் விவரங்கள் வெளிவரலாம்.
  10. போதை சமுதாயத்தை சீரழிப்பது, நாசமாக்குவது, அத்தகையதை வியாபாரமாக்கிய இவர்கள்முறையாக தண்டிக்கப் படவேண்டும்.

© வேதபிரகாஷ்

10-03-2024


[1] தினமலர், ஜாபர் சாதிக் கைது ஆனது எப்படி?: அரசியல்வாதிகளும் சிக்குவர் ! என்.சி.பி. அதிகாரி பேட்டி, மாற்றம் செய்த நாள்: மார் 09,2024 15:57.

[2] https://m.dinamalar.com/detail.php?id=3571516

[3] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், வேறொரு குற்றவாளி வாக்குமூலம் அடிப்படையில் ஜாபர் சாதிக் கைது: வழக்கறிஞர்கள் பேட்டி, WebDesk, 10 Mar 2024 03:39 IST

[4] https://tamil.indianexpress.com/tamilnadu/jaffer-sadiq-advocate-speech-on-drug-case-and-argument-in-patiala-court-4320228

[5] தினத்தந்தி, ஜாபர் சாதிக் ஒரு நிரபராதி..கோர்ட்டில் நடந்தது இதுதான்..” – வழக்கறிஞர் சொன்ன தகவல், By தந்தி டிவி 9 மார்ச் 2024 10:15 PM.

[6] https://www.thanthitv.com/News/India/jabarsadhik-advocate-speech-thanthitv-251339?infinitescroll=1

ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்தலில் மாட்டிக் கொண்டது–சகாக்கள் கைதானது, இவன் தலை மறைவானது–தேடும் படலம் ஆரம்பித்தது (2)

மார்ச் 3, 2024

ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்தலில் மாட்டிக் கொண்டது சகாக்கள் கைதானது, இவன் தலைமறைவானது தேடும் படலம் ஆரம்பித்தது (2)

பதுங்கியது, பதுங்கியிருப்பது ஏன்?: ஒரு பிரபலமான மனிதர், அதிலும் ஆளும் கட்சியின் பிரமுகர், பெரிய பணக்காரர், சினிமா அதிபர், பலகோடி வியாபாரங்களின் அதிபர் என்றெல்லாம் இருக்கின்ற ஒரு நபர் திடீரென்று காணாமல் போய் விட முடியாது. ஆகவே நிச்சயமாக மாட்டிக் கொண்டு விடுவோம் என்ற நிலையில் தான், காணாமல் போய்விட்டார் என்றால், இந்தியாவிலேயே இருக்கிறார் என்றால், மறைந்து எங்கே ஒரு இடத்தில் வாழலாம். அல்லது நாட்டை விட்டு வெளியேறி விட்டார் என்றால்[1], நிச்சயமாக வேற எந்த நாட்டிலேயோ பதுங்கி இருக்கிறார் என்று தெரிகிறது[2]. எது எப்படி இருந்தும் சட்டப்படி,போதை கட்டுப்பாடு துறை லுக் அவுட் நோட்டீஸ்கள் அனுப்பி விட்டது என்பதால், நிச்சயமாக வெளிவந்தால் மாட்டிக் கொள்வார்[3]. இவ்வாறெல்லாம் மறைந்து வாழலாம் போன்ற விவகாரங்கள் எல்லாம் அசாதாரண விவகாரங்கள் ஆகும். இருப்பினும் அத்தகைய முடிவை மேற்கொண்டது ஏன் என்பது கவனிக்கத் தக்கது[4].

யார் இந்த ஜாபர் சாதிக்? – ஜாபர் சாதிக் பின்னணி: குற்றச்சாட்டுக்கு உள்ளான ஜாபர் சாதிக்கின் பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி.  பல ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்புக்காக சென்னை வந்தவர், சொந்தமாக தங்கும் விடுதி, ஓட்டல், ஏற்றுமதி நிறுவனம், உணவு பதப்படுத்தும் நிறுவனம் என குறுகிய காலத்தில் உச்சம் தொட்டார். இவர், சென்னை புரசைவாக்கத்தில் விடுதி வைத்து நடத்துகிறார். பிரபல அசைவ ஹோட்டல் ஒன்றின் புரசைவாக்கம் கிளையையும் எடுத்து நடத்தும் சாதிக், தி.மு.க., முக்கிய தலைவர்கள் பலருடன் நெருக்கமான நட்பில் இருந்தார். சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க.,வின் முக்கிய புள்ளி வாயிலாக, கட்சியின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளர் பதவியை பெற்ற சாதிக், கட்சி மேலிடத்தில் இருப்போர் பலருடனும் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். ஒரு கட்டத்தில் திரைத் துறையில் காலடி எடுத்து வைத்த சாதிக், அங்கிருக்கும் பிரபலமான நபர்களுடனும் நெருக்கமான நட்பை வளர்த்துக் கொண்டார்; திரைப்படம் தயாரிக்கும் பணியிலும் இறங்கினார். மங்கை என்ற திரைப்படம் எடுத்து வரும் அவர், படத்துக்கான முதல் பாடல் வெளியீட்டு விழாவுக்கு, இயக்குனர் கிருத்திகா உதயநிதி உள்ளிட்ட தி.மு.க., பிரபலங்களையும் அழைத்திருந்தார்[5]. கட்சிக்கும், ஆட்சிக்கும் பல கட்டங்களில் தாராளமாக நிதி வழங்கியதால், ஜாபர் சாதிக்குக்கு அனைத்து மட்டங்களிலும் தொடர் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது[6].

சட்டமீறல் செயல்களில் எப்படி முஸ்லீம்கள் தைரியமாக ஈடுபடுகின்றனர்?: பொதுவாக திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முஸ்லிம்களுக்கு அதிக சலுகைகள் கொடுக்கப்படும் என்பது தெரிந்த விஷயமாக இருக்கிறது. எல்லோரும் காலமாக சிறையில் இருப்பவர்களை விடுவிப்பது பிறகு ரம்ஜான் மாதத்திற்கு அரிசி கொடுப்பது, சந்தனக்கூடு பண்டிகைக்கு சந்தனம் கொடுப்பது, தாராளமாக நிதி உதவி அளிப்பது என்றெல்லாம் நடந்து வருகின்றன. இப்பொழுது கூட சமீபத்தில் அவர்களுக்கு பல சலுகைகள் கொடுப்பதாக திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆகவே ஆன்மீகம் என்று சொல்லிக் கொண்டு இந்து மதத்தினரை வசை படுவது, சமதர்மம், செக்யூலரிஸம், பெரியாரிஸம் என்று சொல்லிக்கொண்டு, முஸ்லிம்களுக்கு தாஜா செய்வது என்பது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் தான் அவர்கள் ஒருவேளை தைரியமாக இத்தகைய வேலைகளில் ஈடுபட்டு உள்ளனர் என்பது தெரிகிறது

போதை மருந்து கும்பல்களுடன் தொடர்பு, வேலை ஆரம்பம்: இன்றைக்கு அரசியல்-வியாபாரம் என்பதெல்லாம் பணம் சம்பாதிக்கத் தான். பொது மக்களின் பணத்தை எப்படியாவது கொள்ளையடிப்பது தான், இவர்களின் வேலை. அதற்கு, சினிமா, குடி, கிரிக்கெட், விபச்சாரம் முதலியவை உபயோக படுத்துவது போன்ற, போதை மருந்தும் சேர்ந்து விட்டது. இவ்விதமாக, ஜாபர் சாதிக் தனது வியாபாரங்களை விஸ்தரித்த போது, அரசியல் லாபமும் கிட்டியது. அப்போதுதான் அவருக்கு சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே ஹெராயின் வகை போதைப் பொருட்கள் கடத்தலில், வெளிநாட்டு கும்பல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த போதைப் பொருளுக்கு நிகராக போதை தரக்கூடியது மெத்தாம் பெட்டமைன் வகை போதைப் பொருள் ஆகும். இதற்கு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிக தேவை ஏற்பட்டுள்ளது. இந்த போதைப் பொருளைத் தயாரிக்க சூடோபெட்ரின் என்ற மூலப்பொருள் அவசியம். இதன் விலை ஒரு கிலோ ரூ.1.50 கோடி ஆகும். இந்த சூடோபெட்ரினை கடத்தியதாக ஜாபர் சாதிக் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

போலீஸார் மூலம் அறியப் படும் விவகாரங்கள்: 3,500 கிலோ சூடோபெட்ரின்: இவரது கூட்டாளிகள் 450 முறை, 3,500 கிலோவுக்கும் அதிகமான சூடோபெட்ரினை பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி, கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளனர். இதன்மூலம் கோடிகளில் புரண்ட ஜாபர் சாதிக், தனது செல்வாக்கை பயன்படுத்தி அரசியல் மற்றும் சினிமா துறைக்குள் நுழைந்துள்ளார். மேலும், அதிகாரிகளுடன் நட்பு கொண்டுள்ளார். இதுதவிர, ஹவாலா (ஆவணம் இல்லா பணம்) தொழிலையும் இவர் கையாண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல்களை போலீஸார் சேகரித்து வருகின்றனர். மேலும், ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் உள்ளவர்கள், அவரது பினாமிகள், அவரால் ஆதாயம் அடைந்தவர்கள் குறித்தும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் விவரங்களை சேகரித்து வருகின்றனர். விரைவில் அடுத்தடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15-02-2024-லிருந்து ஆள் இருப்பது தெரியவில்லை: இரண்டு வாரங்கள் ஆகியும் ஜாபர் சாதிக் இருக்கும் இடம் தெரியாதலால், விசாரணை தொடரும் நிலையில், “லுக்-அவுட்-நோட்டீஸ்” விடப் பட்டுள்ளது. போதை மருந்து கடத்தல்காரர்கள், எந்த நிலைக்கும் தயாராக இருப்பார்கள். ஆகவே, இத்தனை நாட்களில் என்கு சென்றிருப்பான் என்று தெரியவில்லை. இந்நிலையில், அவர் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்கும்வகையில், ஜாபர் சாதிக்குக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் போலீஸார் ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் கொடுத்துள்ளனர்[7]. இனி அவர் எந்த விமானநிலையத்துக்கு சென்றாலும், உடனடியாக அங்குள்ள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்படுவார்[8]. இதற்காக அனைத்து விமான நிலைய அதிகாரிகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கடல், தரை மார்க்கமாக அவர் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்கவும் போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்ச் இத்தனை சீரியஸான விசயத்தை ஏன் தமிழகத்தில் ஒன்றுமே நடக்காதது போல காட்டிக் கொள்கின்றனர் என்பதும் விசித்திரமாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

03-03-2024


[1] தமிழ்.ஒன்.இந்தியா, வெளிநாடு தப்ப முயலும் ஜாபர் சாதிக்? போதைப்பொருள் தடுப்புத்துறை வைத்த செக்.. லுக் அவுட்நோட்டீஸ், By Nantha Kumar R, Published: Friday, March 1, 2024, 22:37 [IST]

[2] https://tamil.oneindia.com/news/chennai/drug-smuggling-case-look-out-notice-issued-against-dmk-s-nri-wing-ex-functionary-jaffer-sadiq-587579.html

[3] இ.டிவி.பாரத், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ்!, By ETV Bharat Tamil Nadu Desk, Published : Mar 1, 2024, 6:21 PM IST.

[4] https://www.etvbharat.com/ta/!state/central-narcotics-control-unit-officials-issued-a-lookout-notice-to-jaffer-sadiq-regards-drug-smuggling-tns24030104898

[5] தினமலர், .யார் இந்த ஜாபர் சாதிக்?, பதிவு செய்த நாள்: பிப் 26,2024 02:22

[6] https://m.dinamalar.com/detail.php?id=3560719

[7] தமிழ்.இந்து, வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்க ஜாபர் சாதிக்குக்கு எதிராகலுக்அவுட்நோட்டீஸ், செய்திப்பிரிவு, Published : 02 Mar 2024 04:37 AM; Last Updated : 02 Mar 2024 04:37 AM.

[8] https://www.hindutamil.in/news/crime/1209268-look-out-notice-against-jaffer-sadiq-to-prevent-him-from-fleeing-abroad.html