Posts Tagged ‘என்.சி.பி’

ஜாபர் சாதிக் விவகாரம் – சகோதரர்கள் தலைமறைவாக உள்ள நிலை, தொடரும் விசாரணை (7)

மார்ச் 25, 2024

ஜாபர் சாதிக் விவகாரம்சகோதரர்கள் தலைமறைவாக உள்ள நிலை, தொடரும் விசாரணை (7)

ஜாபர் சாதிக்கின் வீட்டின் சீல் நீக்க போட்ட மனு: முன்னர் நோட்டீஸ் ஒட்டியதை, சாத்தின் தாய் கிழித்துப் போட்டாள் என்ற செய்தி வந்தது[1]. அதே போல, இப்பொழுதும் ஏதாவது ஏற்படுமோ என்று தெரியவில்லை[2]. வீட்டில் சோதனை நடந்த போது, சாட்சிகளுடன் தான் அதிகாரிகள் நடத்துவர். பிறகு, அப்பொழுது யார் இருந்தது என்ற கேள்வி எழுகிறது. இதற்கிடையே, ஜாபர் சாதிக் வீட்டில் போடப்பட்டுள்ள சீலை அகற்றக்கோரி டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக்கின் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது[3].  முக்கியமான விசயத்தை விட்டு, எப்படியெல்லாம், இடையில் திசைத் திருப்பப் படுகிறது என்பதையும் கவனிக்கலாம். உண்மையில், இவ்வாறெல்லாம் சட்டமீறல் காரியங்கள் எல்லாம் செய்யாமல், தாய் தடுத்திருக்கலாம். ஆனால், இப்பொழுது, தெரிந்தும், சட்டத்தை மதிக்காமல், நோட்டீஸைக் கிழித்து எறிகிறாள் என்றால், அவர்கள் ஏதோ இந்திய சட்டங்கள் எல்லாம் தமக்கு அமூலாகாது என்று சொல்லுவது போல உள்ளது.

சதானந்தம் என்ற கூட்டாளி: இதற்கிடையில், சென்னையில் விசாரணை நடத்திய போது, ஜாபர் சாதிக் அளித்துள்ள வாக்குமூலம்: “சென்னை பெருங்குடியில், நானும் என் நண்பரான சதானந்தமும் நடத்தி வந்த, போதைப்பொருள் தயாரிப்பு தொழிற்சாலையில், வெளிநாடுகளுக்கு உணவு பொருட்கள் அனுப்பியது தொடர்பாக, ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ரசீதுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை உணவு பொருட்கள் அல்ல; போதை பொருள் கடத்தியதற்கான ரசீதுகள். எங்கள் கூட்டாளிகள், திருச்சி மற்றும் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளை சேர்ந்த இவர்கள் தான், எங்கள் தொழிலை விரிவுபடுத்தியவர்கள். வெளிநாடுகளுக்கு போதை பொருள் கடத்தியதில், என்னை விட என் சகோதரர் முகமது சலீம் தான் மூளையாக செயல்பட்டு வந்தார். மலேஷியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா என, வெளிநாட்டு தொடர்புகள் அனைத்தையும், முகமது சலீமே கவனித்து வந்தார். வி.சி., நிர்வாகியாக இருந்த அவருக்கு, தமிழகத்தில் செயல்படும் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. “

பேரீச்சம் பழமும், போதைப் பொருளும்: ஜாபர் சாதிக் தன்னுடைய வாக்குமூலத்தில் தொடர்ந்து கூறியது,  “அந்த வகையில், சென்னை அண்ணா நகரில் மிகவும் முக்கியமான நபர்களின் பின்னணியில் போதைப்பொருள் கடத்தல் நடக்கிறது. இவர்களுடன் என் தம்பிக்கு தொடர்பு உள்ளது. மற்றொரு தம்பி மைதீன், சினிமாவில் நடித்து வருகிறார். அவர் வாயிலாக, கோலிவுட்டில் போதை பொருள்சப்ளைசெய்துள்ளோம். எங்களின் வாடிக்கையாளர்களாக சில நடிகர், நடிகையர், கல்லுாரி மாணவர்கள், .டி., நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பல தரப்பினர் உள்ளனர். அவர்களுக்கு எல்லாம் பேரீச்சம் பழத்தில் வைத்து போதை பொருட்களை விற்பனை செய்தோம்[4]. இதுபற்றி வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக, பேரீச்சம் பழம் இறக்குமதி தொழிலும் செய்து வந்தோம்[5]….”

கோலிவுட் தொடர்பு: ஜாபர் சாதிக் தன்னுடைய வாக்குமூலத்தில் தொடர்ந்து கூறியது,  ‘இதற்கு கோலிவுட்டில் எங்களுடன் நெருக்கமான தொடர்பில் இருந்த முக்கிய நபர் தான், ‘ஐடியா’ கொடுத்தார். பேரீச்சம் பழம் வியாபாரத்திலும் நல்ல லாபம் கிடைத்தது. இவ்வாறு வாக்குமூலத்தில் ஜாபர் சாதிக் தெரிவித்துள்ளார். ஜாபர் சாதிக்கின் சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க, அவர்களுக்கு எதிராக, ‘லுக் அவுட்’ நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அடிக்கடி செல்லும் இடங்கள் குறித்து, அதிகாரிகளிடம் ஜாபர் சாதிக் தெரிவித்துள்ளார். இருவரும் விரைவில் சிக்குவர் என, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். பலமுறை வாக்குமூலம் கொடுத்து, தங்களை வற்புருத்தி அவ்வாறு வாங்கிக் கொண்டனர் என்று, மனு தாக்குதல் செய்வதும் உண்டு. இதெல்லாம், வழக்கமாக, வழக்கறிஞர்கள் செய்யும் வேலைகள் தான். அரசு அதிகாரிகள் எந்த அளவுக்கு கஷ்டப் பட்டு, வழக்கை நிலைநிறுத்த, ஆதாரங்களை சேகரித்து வலுசேர்க்கும் நிலையில், சிறிய விசயங்களை வைத்து, முக்கியமான விசயத்தையே மறக்கும் படி அல்லது ஓரங்கட்டும் முறையில், வேறு பிரச்சினையைக் கொண்டு வரும் சாதுர்யமும், வக்கீல்களில் உண்டு.

பேரீச்சம் பழம் மற்றும் போதை மருந்து வியாபாரம் சேர்ந்து நடந்தது: பேரீச்சம் பழம் வியாபாரம் மற்றும் அப்பழங்களில் போதை மருந்து வைத்து விற்பனை செய்யப்பட்டது எல்லாம் திகைப்பாக இருக்கிறது. பழங்கள் விற்ப்பது மற்றும் பழங்கள் உள்ளேன் போதை மருந்து விற்பனை, ஆக இரண்டு வகை முறைகளும் நடந்து வந்ததும் அதிர்ச்சியாக இருக்கிறது. இவ்வாறு, இவையெல்லாம் மக்களுக்கு சென்று அடைவது, அதைவிட மிக கொடுமையான சமூகத்தை பாதிக்கும் காரியம் என்று சொல்ல வேண்டி இருக்கிறது. மாணவர்கள் படிப்பது, முன்னேற மற்ற பரீட்சைகளை எழுதுவது போன்றவற்றில் எல்லாம் கவனம் செலுத்தாமல், இவ்வரான விவகாரங்களில் சிக்கிக் கொள்வது மிகவும் வருத்துவமாக உள்ளது. இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டு இந்த போதை பொருள் விற்கும் காரியம் அதர்மம், தனிமனிதனை, குடும்பத்தை, சமூகத்தை சீரழிக்கும் கயமைத் தனம் என்றே அடையாளம் காணவேண்டியுள்ளது.

போதை மருந்து வியாபார யுக்தி என்ன?: போதை மருந்து மனிதனை, குடும்பத்தை, சமூகத்தை, ஏன் பல சமூகங்களை சீரழக்கிறது என்பது தெரிந்தும், அது ஏன் ஊக்குவிக்கப்படுகிறது, பல முறைகளில் மறைத்து வியாபாரம் செய்யப்படுகிறது, அத்தகைய முறைகளை கையாளுபவர்கள் எப்படி தொழில் நுட்பங்களை கூறுகின்றனர் என்பதெல்லாம் கூட கவனிக்க வேண்டிய விஷயங்களாக இருக்கின்றன. ஏனெனில் இக்காலத்தில் இவ்வாறு எந்த பொருளையும் விற்க்க வேண்டும் என்றால், அதற்கு ஏதோ ஒரு வகையில் விளம்பரம் தேவைப்படுகிறது. ஆனால் போதை மருந்து விவகாரம் என்பது, அவ்வாறு விளம்பரத்துடன் செய்யப்படும் வியாபாரம் அல்ல. மிகவும் ரகசியமாக அதனை உபயோகிப்பவர்கள் யார் என்று கண்டறிந்து அல்லது தொடர்ந்து அதன் உபயோகத்தில் கட்டுண்டுக் கிடக்கும் அடிமைகளை கண்டறிந்த வியாபாரம் செய்பவர்கள் தான் அதிகமாக உள்ளனர். ஏதோ ஒரு வகையில் பாதைக்கு உட்பவர்கள் தான் இதனை விற்பவர்களாகவும் மாறுகின்றனர். அனைவரும் கண்காணித்து, அவ்வாறான போதைப் பொருளை கையாள்கிறார்கள் என்றறிந்து, அவர்களையே ஏஜென்டுகளக்கி விடுகின்றனர். அதனால் அத்தகைய வியாபாரம் செய்யும் போதை மருந்துஜஏஜென்டுகளை, மிகவும் அக்கறையாக அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு வேண்டியவை எல்லாம் கொடுக்கிறார்கள். ஆகையால் தான் இவ்வியாபாரத்தை, மிகவும் ரகசியமாக செய்து வருகிறார்கள், அதே நேரத்தில் தீவிரமாகவும் நடைபெற்று வருகிறது.

இந்தியாவை குறிவைக்கும் போதை மருந்து சக்திகல்கூட்டங்கள்: இந்தியா 140 கோடி மக்கள் தொகையை கொண்ட நாடாகும் பலவித பொருளாதார பிரச்சனைகள் கொண்டிருக்கும் நாடு. இன்றைய அளவில் எல்லாவித பிரச்சனைகளையும் தாங்கிக் கொண்டுதான் தொடர்ந்து முன்னேறி வருகிறது. சுதந்திரத்திற்கு பிறகு எல்லைப் பகுதியில் அதிகமான ஊடுருவங்கள் குறிப்பாக பாகிஸ்தான் சைனா என்று ஆரம்பித்து இப்பொழுது பர்மாவிலிருந்து அகதிகள் போர்வையில் முஸ்லிம்கள் ஊடுருவி வருகிறார்கள். அதே போன்ற ஊடுருவல்கள் வடகிழக்கிலும் இருக்கின்றன. ஆனால் அவற்றுடன் போதைப் பொருளும் சேர்ந்து இருக்கிறது. அதுதான் பிரச்சினை. வடமேற்கில் இருந்து வரும் ஊடுருவல்கள் தான் மற்றும் வட பாகிஸ்தான் பகுதிகளில் போதை மருந்து உற்பத்தி, கடத்தல், விநியோகம், வியாபாரம், என்றெல்லாம் செய்து வரும் கூட்டங்களும் ஊடுருவல்கார்களுடன் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். இதனால் தான் பல விஷயங்கள் பொதுப்படையாக பேச முடிவதில்லை. நாட்டு நலன் கருதாமல், விரோதத்துடன் செயல்படுபவர்கள் இவ்விவகாரங்களில் ஒன்றாகிறார்கள். சமூகத்தைச் சீரழிப்பது என்பது தான் அவர்களது குறிக்கோளாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

20-03-2024


[1] குமுதம்,சென்னை வீட்டிற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக் மனுத்தாக்கல்,  Mar 19, 2024 – 20:10

[2] https://kumudam.com/Jaffer-Sadiq-Remanded-To-14-Days-Custody – google_vignette

[3]  https://www.maalaimalar.com/news/national/zafar-sadiq-remanded-to-14-days-court-custody-in-drug-trafficking-case-708748

[4] மாலைமலர், கோடி கோடியாக கொட்டிய பணத்தை ஓட்டல்சினிமாவில் முதலீடு செய்த ஜாபர் சாதிக், Byமாலை மலர்19 மார்ச் 2024 3:53 PM

[5] https://www.maalaimalar.com/news/state/jaffer-sadiq-invested-money-hotel-and-cinema-708725

ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்தலில் மாட்டிக் கொண்டது – கைதில் உள்ள புதிர்கள் மர்மங்கள், விடுபடுமா, இந்தியா போதை மருந்து கூட்டங்களினின்று விடுபடுமா? (4)

மார்ச் 11, 2024

ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்தலில் மாட்டிக் கொண்டதுகைதில் உள்ள புதிர்கள் மர்மங்கள், விடுபடுமா, இந்தியா போதை மருந்து கூட்டங்களினின்று விடுபடுமா? (4)

15-02024 அன்று தில்லியில் சோதனை: ஜாபர் சாதிக்கின் போதை மருந்து விவகாரம் திகைப்பாக இருக்கிறது. இதுவரை கிடைத்துள்ள விவரங்களை வைத்து ஆராய்ந்தால், நிச்சயமாக அத்தகைய வேலைகளை, சாதாரணமாக செய்து விடமுடியாது. பலர் அதன் பின்னணியில், ஒருமித்து, தீவிரமாக வேலை செய்திருக்க வேண்டும். அனைத்துலக போதைதடுப்பு துறைகளின் கவனத்திற்கு சென்றிருக்கிறது என்றால், எல்லாவற்றையும் அறிந்து, அவற்றையும் மீறித்தான் இக்காரியங்கள் நடைபெற்று வருகின்றன. போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய பொருட்களை தேங்காய் பவுடர் மற்றும் சத்து மாவு பாக்கெட்களில் மறைத்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது[1]. இதையடுத்து, டெல்லி போலீஸ் மற்றும் போதைப் பொருள் தடுப்புபிரிவு அதிகாரிகள் மேற்கு டெல்லி உள்ள கைலாஸ் பார்க் பகுதியில் கடந்த மாதம் 15 ஆம் அதிரடி சோதனை நடத்தினர்[2].

15-02-2024ல் தில்லியில் மூவர் கைது: இதில் அங்குள்ள குடோன் ஒன்றில் இருந்த கடத்தல் கும்பல் கிலோ எடை கொண்ட சுமார் 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆபத்து மிக்க போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்[3]. மேலும் அந்த குடோனில் இருந்து தமிழகத்தை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர்[4]. இவர்கள், சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர் ரஹ்மான் மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக் குமார் என்பது தெரியவந்துள்ளது. ஜாஃபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர்கள்தான் இந்தக் கடத்தலுக்கு மூளையாக இருந்ததாகக் கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளார்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த போதை பொருள் கடத்தல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது சென்னையை சேர்ந்த ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது[5]. மேலும் அவர் தனது சகோதரர்கள் மைதீன் மற்றும் சலீம் ஆகியோருடன் சேர்ந்து இந்த போதை பொருள் கடத்தல் தொழிலை செய்து வந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது[6].

25-02-2024 – திமுகவிலிருந்து ஜாபர் சாதிக்கை நிரந்தரமாக நீக்கியது:  ஜாபர் சாதிக் சென்னையில் சினிமா தயாரிப்பாளராகவும் திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமாக இருந்து வந்துள்ளார்[7]. அவரது சகோதரர் மைதீன் நடிகராக உள்ளார்[8]. மற்றொரு சகோதரரான சலீம் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருப்பதும் தெரியவந்தது[9]. போதைப் பொருள் விவகாரம் வெளியானதும் ஜாபர் சாதிக் திமுகவிலிருந்து நிரந்தமாக நீக்கப்பட்டார்[10]. இதையடுத்து ஜாபர் சாதிக் விசாரணைக்கு ஆஜராகுமாறு என்சிபி போலீசார் சம்மன் அனுப்பினர்[11]. சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் சம்மனை ஒட்டினர். ஆனால் ஜாபர் சாதிக் குடும்பத்துடன் தலைமறைவானார்[12]. ஜாபர் சாதிக்கின் வீட்டில் சம்மனை ஒட்டிய என்சிபி போலீசார், அவரது வீட்டின் பூட்டை உடைத்து முக்கிய ஆவணங்களை அள்ளிச்சென்றனர்[13]. அவரது வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய என்சிபி போலீசார், வீட்டிற்கும் சீல் வைத்தனர்[14]. இருப்பினும் ஜாபர் சாதிக் பற்றி எந்த துப்பும் கிடைக்காமல் இருந்தது.

22-02-2024 அன்று படப்பிடிப்பு நிறுத்தப் பட்டது – 26-02-2024 அன்று தனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என்று அறிக்கை விட்டது: அமீர்[15], “கடந்த 22-ம் தேதி நான்இறைவன் மிகப் பெரியவன்திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்த போது, திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஏன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது? என்னைச் சுற்றி என்ன நடக்கிறது? என்பதை ஊடகங்கள் வாயிலாகவே நான் அறிந்து கொண்டேன். உண்மை எதுவென்று இப்போது வரை எனக்குத் தெரியவில்லை……. எதுவாயினும், செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமேயானால், அது கண்டிக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுமே.! அந்த வகையில், சட்டவிரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்…….” என்று அறிக்கை விட்டார்[16]. இவருக்கும் ஜாபர் சாதிக்கும் வியாபார ரீதியில் நிறைய தொடர்புகள் இருப்பதாக சொல்லப் படுகிறது.

15-02-2024 அன்றே என்.சி.பி, லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது: அவர் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும் ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் 15-02-2024 அன்றே கொடுக்கப்பட்டது[17]. அவரது 8 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன[18]. மேலும் அவரது சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோரையும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தேடி வருகின்றனர்[19]. இப்படியெல்லாம் செய்திகள் வந்தாலும், அவன் எங்கிருக்கிறான் என்று தெரியாமல் இருந்தது விசித்திரமான விசயம் தான். இந்தியாவில் அவ்வாறு ஒரு நபர் தலைமறைவாக எளிதில் இருக்கலாம், சுற்றி வரலாம் என்று தெரிகிறது. தன்னுடைய சொந்த பெயரில் பயணத்தில் தான், ரெயில் அல்லது விமானங்களில் தெரிந்து விடும். மற்றபடி பயணத்தால் யாராலும் கண்டுபிடிக்க முடியாது போலிருக்கிறது. ஜாபர் சாதிக்கை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவரது கூட்டாளிகள் கொடுத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ராஜஸ்தான் மாநில ஜெய்ப்பூரில் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஜாபர் சாதிக்கை இன்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்[20].

09-03-2024 அன்று ஜெய்ப்பூரில் பிடிக்கப் பட்டு, தில்லியில் கைது: 15-02-2924 [வியாழக்கிழமை] முதல் 09-03-2024 [சனிக்கிழமை] வரை எங்கிருந்தான் என்று தெரியாத நிலையில், 23 நாட்கள் கழித்து கண்டுபிடிக்கப் படுகிறான். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கை 7 நாட்களில் காவலில் வைத்து விசாரிக்க பாட்டியாலா உயர் நீதிமன்றம் என்.சி.பி-க்கு சனிக்கிழமை (09.03.2024) அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கில் ஏராளமானோர் சம்பந்தப்பட்டிருப்பதால் ஜாபர் சாதிக்கை போலீஸ் காவலில் விசாரிக்கவும் அனுமதி கோரினர். இதனை விசாரித்த நீதிபதி, ஜாபர் சாதிக்கை ஏழு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கிய நிலையில், அவரை என்.சி.பி அலுவலகத்திற்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, ஜாபர் சாதிக்கை சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ள அதிகாரிகள், விரைவில் அவரை சென்னை அழைத்து வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

© வேதபிரகாஷ்

10-03-2024


[1] தமிழ்.இந்து, தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் கைதுபோதைப்பொருள் கடத்தல் வழக்கில் நடவடிக்கை, செய்திப்பிரிவு, Published : 09 Mar 2024 12:08 PM; Last Updated : 09 Mar 2024 12:08 PM.

[2] https://www.hindutamil.in/news/tamilnadu/1212770-drug-trafficking-absconding-jaffer-sadiq-arrested.html

[3] தினமலர், போதைப்பொருள் கடத்தல் விவகாரம்: ஜாபர் சாதிக் கைது!, மாற்றம் செய்த நாள்: மார் 09,2024 12:32,

[4] https://m.dinamalar.com/detail.php?id=3571503

[5] மாலைமலர், போதைப்பொருள் கடத்தல் வழக்குஜாபர் சாதிக் கைது, By மாலை மலர், 9 மார்ச் 2024 12:02 PM; (Updated: 9 மார்ச் 2024 12:38 PM),

[6] https://www.maalaimalar.com/news/state/tamil-news-jaffer-sadiq-arrested-707000

[7] தமிழ்.நியூஸ்.7, போதைப் பொருள் வழக்கில் தேடப்படு வந்த ஜாபர் சாதிக் கைது!, by Web EditorMarch 9, 2024,

[8] https://news7tamil.live/jaber-sadiq-who-was-wanted-in-a-drug-case-was-arrested.html

[9] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், போதைப் பொருள் கடத்தல் வழக்கு; முன்னாள் தி.மு.. நிர்வாகி ஜாபர் சாதிக் கைது, WebDesk, 09 Mar 2024 12:45 IST,

[10] https://tamil.indianexpress.com/tamilnadu/drug-case-former-dmk-functionary-jaffer-sadiq-arrested-by-ncb-tamil-news-4318592

[11] தமிழ்.ஒன்.இந்தியா, ரூ 2000 கோடி போதை பொருள் கடத்தல் வழக்கு.. ராஜஸ்தானில் ஜாபர் சாதிக் கைது, By Vishnupriya R Published: Saturday, March 9, 2024, 12:37 [IST]

[12] https://tamil.oneindia.com/news/delhi/drug-smuggler-jaffer-sadiq-arrested-at-jaipur-rajasthan-589585.html

[13] தினகரன், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக் கைது..!!, March 9, 2024, 12:07 pm,

[14] https://www.dinakaran.com/drug-smuggling-jaber-sadiq-arrested/

[15]  தினமணி, போதைப்பொருள் வழக்கில் தயாரிப்பாளர்.. அறிக்கை வெளியிட்ட அமீர்!, Published on:  27 பிப்ரவரி 2024, 12:56 pm; Updated on: 27 பிப்ரவரி 2024, 12:56 pm

[16] https://www.dinamani.com/cinema/cinema-news/2024/Feb/27/iraivan-migaperiyavan-ameer

[17] நக்கீரன், ‘ஜாபர் சாதிக் கைது‘- போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிரடி, நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 09/03/2024 | Edited on 09/03/2024,

[18] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/jaber-sadiq-arrested-narcotics-unit-action

[19] சமயம், போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் கைது.. ஜெய்ப்பூரில் பதுங்கியிருந்தவை சுத்துப்போட்ட போலீஸ்!, Authored By பஹன்யா ராமமூர்த்தி | Samayam Tamil | 9 Mar 2024, 12:29 pm,

[20] https://tamil.samayam.com/latest-news/crime/drugs-smuggler-jaffer-sadiq-aressted-in-jaipur-by-ncb-police/articleshow/108345319.cms