Posts Tagged ‘மருந்து’

சித்த மருத்துவர் பாலியல் சிகிச்சை கொடுத்தது- ஓரின சேர்க்கையில் ஈடுபட்டது, நோயாளியைக் கொன்றது, மனித மாமிசம் சாப்பிட்டது! (1)

நவம்பர் 25, 2023

சித்த மருத்துவர் பாலியல் சிகிச்சை கொடுத்ததுஓரின சேர்க்கையில் ஈடுபட்டது, நோயாளியைக் கொன்றது, மனித மாமிசம் சாப்பிட்டது!  (1)

வியாபாரமாகும் மருத்துவம்: இந்திய மக்கட்தொகை அதிகமாக-அதிகமாக, மக்களின் நோய்-சிகிச்சைக்கு மருத்துவர், மருத்துவமனை, மருந்து என்று எல்லாவற்றிற்கும் தேவை அத்கமாகிக் கொண்டிருக்கிறது. அந்நிலையில், இன்னொரு பக்கம் மருத்துவம், மருத்துவப் படிப்பு, மருத்துவமனை-சிகிச்சை என்று எல்லாமே வியாபாரமயமாக்கப் பட்டு விட்டது. இந்தியாவில் சிறந்த சிகிச்சைப் பெற குறைந்த அளவில் பணம் செலவழித்தால் போதும் என்ற நிலையும் அமெரிக்கர்-ஐரோப்பியர்களுக்குத் தெரிந்துள்ளது. குறிப்பாக “பை-பாஸ் சர்ஜரி” இந்தியாவில் செய்து கொள்வது மிகவும் அமெரிக்க-ஐரோப்பியர்களுக்குத் மலிவாக உள்ளது. தவிர வளைகுடா நாட்டு மக்களும் வந்து சிகிச்சை பெறுகின்றனர். இதனால், மருத்துவ வியாபாரம் நன்றாகவே நடந்து வருகிறது. அவர்கள் மூலம் வருமானமும் நன்றாகக் கிடைக்கிறது. அதனால், இத்தகைய மருத்துவ மனைகள் இந்தியர்களுக்கு சிகிச்சை அளிக்க விரும்பவதில்லை என்ற நிலைக்கே வந்து விட்டது எனலாம். ஆக இந்தியர்கள் சிகிச்சைப் பெரவேண்டும் என்றால், குறைந்தது ஒரு லட்ச ரூபாய் வைத்துக் கொண்டுதான் ஆச்பத்திரிக்குச் செல்லவேண்டியுள்ளது.

மருத்துவ வசதி சேவைசேவைத் தன்மையினை இழந்து விட்டது: அரசு ஆஸ்பத்திரிகளில் எல்லா வசதிகள் இருந்தாலும், தெரிந்தவர்கள் இல்லை என்றால், கவனிக்கப் படுவதில்லை. இல்லை, எல்லா இடங்களிலும், நிலைகளிலும் லஞ்சம் கொடுக்க வேண்டும், இல்லையென்றால், வேலை நடக்காது. ஒரு நாளில் நடப்பதை ஒரு மாதம் இழுத்து விடுவர். பொதுவாக, “அட்மிஸன்” ஆனால் தான் சிகிச்சை, இன்சூரன்ஸ் கிடைக்கும் போன்ற கன்டிஸன்களாலும், ஆஸ்பத்திரிகள் இந்த போக்கைக் கடைபிடித்து வருகிறார்கள். மேலும், “அட்மிஸன்” என்றால், குடும்பம் பாதிக்கப் படும். நோயாளியைப் பார்த்துக் கொள்ள ஒருவர் வேண்டும் என்றால், வீட்டில் சமைக்க, குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள, மேலும் வேலைக்குச் செல்ல என்று எல்லாவற்றையும் கவனிக்க முடியாது. இந்நிலைகளில் தான், சுயமருத்துவம், எளிதான சிகிச்சை அல்லது மாற்று முறையில் ஏதாவது கிடைக்குமா என்று நடுத்தர மக்கள் நினைக்கிறார்கள். அப்பொழுது தான் “போலி மருத்துவர்கள்” எனப் படுகின்ற மற்ற அலோபதி-அல்லாத மருத்துவர், நாட்டு மருத்துவர் முதலியோர் வருகின்றனர். முதலில் ஓரளவுக்கு நம்பிக்கைப் பெற்றதும், உள்ளூரில் மருத்துவர் என்ற பெயரைப் பெற்று விடுகின்றனர். பணம் வரவர கிளினிக்  வளர்ந்து, ஆஸ்பத்திரி ஆகிவிடுகிறது. இப்படித்தான், இந்த சித்த மருத்துவரும் இருந்துள்ளார்.

50 பேருக்கு சுன்னத் செய்தார்: என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுன்னத் என்பது முஸ்லிம்கள் கட்டாயமாக செய்து கொள்ள வேண்டிய ஒரு சடங்கு ஆகும். 50 பேருக்கு இவர் சொன்னது செய்துள்ளார் என்றால் நிச்சயமாக அவர்கள் முஸ்லிம்களாக தான் இருக்க வேண்டும். இல்லை அதில் சிலர் இந்துக்கள் இருக்கிறார்கள் என்றால் அது நிச்சயமாக செக்ஸ் ரீதியில் தான் அவர் அத்தகைய சுன்னத் செய்திருக்க வேண்டும். ஏனெனில், உடலுறவு இன்பம் நீட்டிக்க மற்றவர்களும் சுன்னத் செய்து கொள்வதாகத் தெரிகிறது. மேலும் இங்கு பாலியல் ரீதியில் பிரச்சினைகள் உள்ள ஒருவர் இவரிடம் சிசிச்சைக்கிற்காக வந்தது, அவருக்கு அதிகமாக மருந்து கொடுத்தது மற்றும் உடலுறவு கொண்டது போன்ற விவகாரங்கள் வெளிப்பட்டுள்ளதால், ஒருவேளை இவர் பாலியல் ரீதியிலாக மருத்துவ சிகிச்சை கொடுக்க முயற்சித்துள்ளார் அல்லது அதில் தான் ஒரு தெரிந்த மருத்துவர் என்ற நிலையில் புகழ விரும்பு அத்தகைய நடவடிக்கைகள் ஈடுபட்டுள்ளார் என்றும் கருத முடிகிறது.

செக்ஸ் மருத்துவத்தில் ஈடுபட்டாரா?: ஏனெனில் அவர் தயாரித்ததாக சொல்லப்படுகின்ற அந்த உணவு, அல்லது மனித மாமிசம் கொண்ட மருந்து, அல்லது அத்தகைய ஒரு மருத்துவ கலப்பு, என்றெல்லாம் சொன்னாலும், அத்தகைய மருந்தை தயாரித்து யாராவது ஒரு நோயாளிக்கு கொடுத்து, அதன் விளைவை சரிபார்த்து அதன் மூலமாக அத்தகைய பாலியல் நோய் தீர்க்க முடியும் என்ற முடிவுக்கு வருவதற்காக எத்தகைய பரிசோதனையை, அதாவது “கிளினிக்கல் டெஸ்டிங்” என்று சொல்வார்கள், கையாண்டார் என்பதற்கு சந்தேகம் வலிக்கிறது. கேரளாவில் அத்தகைய முறைகள் கையாளப்படுகின்றன, அதற்கு நரபலிம் கொடுக்கப்படுகிறது போன்ற செய்திகள் வந்துள்ளன. ஒருவேளை இவரும் அத்தகைய சிகிச்சையில் ஈடுபட்டாரா என்ற சந்தேகம் எழுகிறது.  நிச்சயமாக சமூகத்தில் இத்தகைய “போலி மருத்துவர்களிடம் ”மற்றவர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தீபாவளிக்குச் சென்றவர் காணாமல் போனது: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே மணல்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்ராஜன் (வயது 27)[1]. சென்னையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இவர், தீபாவளிக்கு ஊருக்கு வந்துவிட்டு, திரும்பிய போது மாயமானார்[2]. அசோக்ராஜனுக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில், தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு வந்தவர், கடந்த 13-ம் தேதி சிதம்பரத்துக்குச் சென்று நண்பரைப் பார்த்துவிட்டு மீண்டும் சென்னைக்குச் செல்வதாகத் தன்னுடைய பாட்டி பத்மினியிடம் சொல்லிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பியிருக்கிறார். அசோக்ராஜன் சென்னைக்கு சென்று சேர்ந்துவிட்டாரா எனக் கேட்பதற்காக, பாட்டி பத்மினி அவரது மொபைலுக்கு உறவினர் ஒருவர் மூலம் தொடர்புகொண்டுள்ளார். ஆனால், அசோக்ராஜன் மொபைல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. ஊருக்கு போன அசதியில் உறங்கிக்கொண்டிருப்பார் என நினைத்த பாட்டி, சிறிது நேரம் கழித்து மீண்டும் உறவினர் மூலம் அசோக்ராஜ் எண்ணுக்கு தொடர்புகொண்டுள்ளார். அப்போதும், அவரது எண் ஸ்விட்ச் ஆஃப்பிலேயே இருந்துள்ளது. அதன் பிறகு அசோக்ராஜனிடமிருந்து எந்தத் தொடர்பும் இல்லை.

15-11-2023 அன்று பாட்டி போலீஸாரிடம் புகார் கொடுத்தது: இதனால், பயந்துபோன பாட்டி பத்மினி சோழபுரம் போலீசில் கடந்த 15 ஆம் தேதி புகார் அளித்துள்ளார். பாட்டி பத்மினி கொடுத்த புகாரின் பேரில், போலீஸார் சோழபுரம் கடைத் தெருவில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது அசோக்ராஜன் கீழத்தெரு வழியாக சென்றவர், மீண்டும் திரும்பாதது தெரியவந்தது. இதற்கிடையில், அசோக்ராஜன் வீட்டிற்கு ஒரு கடிதம் ஒன்று வந்தது. அதில், தனக்கு ஆண்மை இல்லாமல் இருப்பதால் வாழப் பிடிக்கவில்லை என அசோக்ராஜன் எழுதியதாக இருந்தது. இதுவரை இதுபோன்ற சிக்கல்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை எனக் கூறிய குடும்பத்தாரும் நண்பர்களும், அசோக்ராஜன் ஊருக்கு வந்தபோது சோழபுரம் கீழத்தெருவைச் சேர்ந்த நாட்டு வைத்தியரான கேசவமூர்த்தி என்பவரிடம் சிகிச்சை பெற்றதாக போலீசாரிடம் கூறியுள்ளனர். 

17-11-2023 அன்று கேசமூர்த்தியை கைது செய்த போலீஸ்: இதன் அடிப்படையில், போலீசார் மற்றும் உறவினர்கள் அப்பகுதியில் விசாரணை நடத்தியபோது, நாட்டு வைத்தியர் கேசவமூர்த்திக்கும் அசோக்ராஜனுக்கும் பழக்கம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் கடந்த 17ம் தேதி, கேசவமூர்த்தியை அழைத்துச் சென்று இரண்டு நாட்களாக விசாரணை நடத்தினர். விசாரணையில், அசோக்ராஜன் தனக்கு ஆண்மை இல்லை என்றும் அதனால்  தனக்கு வாழப் பிடிக்கவில்லை எனக் கூறி என்னிடம் அழுதார். பின்னர், நான் தஞ்சாவூரில் உள்ள ஒரு டாக்டரிடம் சிகிச்சை பெற அறிவுறுத்தினேன். இதுதான் நடந்தது எனத் திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்து சலித்துப்போன போலீசார், தங்கள் பாணியில் விசாரணையைத் துவக்கியுள்ளனர். அப்போது, பொலபொலவென நடந்ததை கொட்டி போலீசாருக்கே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் நாட்டு வைத்தியர் கேசவமூர்த்தி. அவர் சொல்வதைக் கேட்கும்போதே குமட்டும் அளவுக்கு கொடூரம் வெளிப்பட்டுள்ளது. 

விசாரணையில் வெளிவந்த விவகாரங்கள்: கேசவமூர்த்தியிடம் போலீஸ் நடத்திய விசாரணையில், ஆண்மை குறைபாட்டைப் போக்க மருந்து கொடுத்து வந்துள்ளார். இதற்காக அவர் கஞ்சா செடிகள் மற்றும் பலவித மூலிகை இலைகளை கொண்டு பொடி செய்து மாத்திரைகளாக தயாரித்து விற்பனை செய்திருக்கிறார். மூலிகை செடிகளை வைத்து ‘கிறுக்கி முறுக்கி’ என்ற மருந்தைத் தயாரித்து, அதை தனது இச்சைக்கு இணங்குபவர்களிடம் கொடுத்து ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்தநிலையில், அசோக்ராஜன் தனக்கு ஆண்மை இல்லை என்றும் அதனால் தனக்கு வாழ பிடிக்கவில்லை என்றும் கேசவமூர்த்தியிடம் அழுதார். தஞ்சாவூரில் உள்ள ஒரு டாக்டரிடம் சிகிச்சை பெற அறிவுறுத்திய கேசவமூர்த்தி, இதையே காரணமாக வைத்து அவரை மசியவைத்து ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தி வந்துள்ளார். ஆனால், அசோக்ராஜன் இதை மறுத்துள்ளார். இந்த நிலையில் தீபாவளிக்கு ஊருக்கு வந்திருந்த அசோக்ராஜன், நாட்டு மருத்துவர் கேசவமூர்த்தியை சந்தித்துள்ளார். அப்போது, அசோக்ராஜனுக்கு ஆண்மை வீரியம் அதிகரிக்கும் மருந்து கொடுத்த கேசவமூர்த்தி, அந்த மருந்தை சாப்பிட வைத்துள்ளார். அதன் பிறகு, அசோக்ராஜனுடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். பிறகு அசோக்ராஜன் நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார். இதில், எங்கே நாம் சிக்கிக்கொள்வோமோ என அஞ்சிய கேசவமூர்த்தி, அசோக்ராஜின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி, வீட்டின் உள்ளே புதைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல், அசோக்ராஜனின் பிறப்புறுப்பை வெட்டி தனியாகப் புதைத்துள்ளார்[3]. மேலும், அவரது உடலில் இருந்த இதயம், நுரையீரல், கல்லீரல் உள்ளிட்டவற்றை வெளியே எடுத்து அதனை சமைத்து சாப்பிட்டும், தான் வளர்க்கும் நாய்க்கும் விருந்தாகப் படைத்துள்ளார் கேசவமூர்த்தி[4]. இதனை எல்லாம் எந்தவிதப் பதற்றமும் இல்லாமல் கேசவமூர்த்தி சொன்னதைக் கேட்டு போலீஸார் அதிர்ந்துள்ளனர். 

© வேதபிரகாஷ்

22-11-2023.


[1] தமிழ்.ஒன்.இந்தியா, கும்பகோணம் சித்த வைத்தியர் வீட்டை சுற்றி தோண்ட தோண்ட எலும்புகள்.. திடுக்கிடும் தகவலால் அதிர்ச்சி, By Velmurugan P Updated: Wednesday, November 22, 2023, 16:21 [IST].

[2] https://tamil.oneindia.com/news/thanjavur/police-searching-chitta-vaidyar-house-who-arrested-in-youth-murder-case-near-kumbakonam-559131.html

[3] நக்கீரன், நரமாமிசம் சாப்பிட்ட வைத்தியர்! – லிஸ்டில் இருக்கும் 190 பேர்!,  செல்வகுமார், Published on 24/11/2023 (15:21) | Edited on 24/11/2023 (16:00).

[4] https://www.nakkheeran.in/special-articles/special-article/kumbakonam-doctor-kesavamoorthy-issue