Posts Tagged ‘மொபைல் மூலம் படம்’

கற்பழிப்பு பாதிரி, முல்லா, சாமி வரிசையில் ஒரு அமைச்சர்!

மே 3, 2010

கற்பழிப்பு பாதிரி, முல்லா, சாமி வரிசையில் ஒரு அமைச்சர்!

பாலியல் புகாரால் கர்நாடக உணவு மந்திரி ராஜினாமா: சர்ச்சையை தவிர்க்க முதல்வர் அதிரடி முடிவு
மே 03,2010,00:00  IST

http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=18098

Latest indian and world political news information

ஹாலப்பாவின் “ஹால்”-நிலை மோசம்தான்: பெங்களூரு:நண்பரின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு வெளியானதையடுத்து, கர்நாடகா உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சர் ஹர்தாலு ஹாலப்பா, தன் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்ததாக ஊராட்சித் தேர்தலை கட்சி சந்திக்க வேண்டியிருப்பதால், மேலும் சர்ச்சை வேண்டாம் என்ற கருத்தில் அமைச்சர் ராஜினாமா முடிவு வேகமாக எடுக்கப்பட்டது.கர்நாடகா உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சராக இருந்தவர் ஹாலப்பா. முதல்வர் எடியூரப்பாவின் நெருங்கிய ஆதரவாளர். முதல்வரின் சொந்த மாவட்டமான ஷிமோகாவை சேர்ந்தவர். இவர், பாலியல் புகாரில் சிக்கியதாக, கன்னட நாளிதழ் ஒன்றில் முதல் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்த செய்தியை படித்தவுடன் ஹாலப்பா, தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, முதல்வர் எடியூரப்பா அலுவலகத்திற்கு தகவலை அனுப்பி வைத்துள்ளார்.

ஹாலப்பாவின் நெஞ்சுவலி நாடகம், கற்பழிப்பு, பத்திரிகையில் வெளியான தகவல்: ஹாலப்பா அமைச்சராக இருந்த போது, ஷிமோகாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். தனது பயணத்தை முடித்துக் கொண்டு, நண்பரின் வீட்டிற்கு சென்றார். அங்கு, சாப்பிட்டு விட்டு அங்கேயே தங்கியிருந்தார். அப்போது தனக்கு நெஞ்சு வலிப்பதாகவும், மாத்திரை வாங்கி வருமாறும் தனது நண்பரிடம் கூறினார். நண்பரும் மாத்திரைகளை வாங்கி விட்டு வீட்டுக்கு வந்தாராம். அப்போது நண்பரின் மனைவி, ஆடைகள் கலைந்த நிலையில் அழுது கொண்டிருந்தார். இச்சம்பவம் நடந்தவுடன் நண்பரின் மனைவி, தற்கொலைக்கும் முயற்சித்துள்ளார். இந்த பாலியல் பலாத்கார விவகாரம் வெளிவந்தால், தனது பதவிக்கு ஆபத்து என்பதை அறிந்த அமைச்சர் ஹாலப்பா, இந்த விவகாரத்தை வெளியில் கூறாத வகையில் நண்பர் குடும்பத்தை மிரட்டி வைத்திருந்தார். இச்சம்பவம், கடந்த நவம்பரில் நடந்துள்ளது. இவ்வாறு பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.ஹாலப்பா விவகாரம், கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தலைவர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தினரும் ஆவேச அறிக்கை, பேட்டி வெளியிட்டுள்ளனர்.

வழக்கம் போல மறுப்பு, பேட்டி, ராஜினாமா: ராஜினாமாவுக்கு பின், நிருபர்களிடம் ஹாலப்பா கூறுகையில், ”என் மீதான குற்றச்சாட் டுகள் ஆதாரமற்றவை, ஜோடிக்கப்பட்டவை. கட்சிக்கும், அரசுக்கும் எவ்வித சங்கடமும் வரக்கூடாது என்பதற்காக, அமைச்சர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்தேன். முதல்வர் வெளியூரில் இருப்பதால் அவருடனும், கட்சித் தலைவர் ஈஸ்வரப்பாவுடனும் தொலைபேசியில் பேசி, ராஜினாமா முடிவு குறித்து தெரிவித்தேன். முதல்வர் எடியூரப்பா பெங்களூரு வந்தவுடன், அவரை சந்திப்பேன். இந்த விவகாரம் அரசியல் உள்நோக்கம் கொண்டது. பல மாதங் களாக திட்டமிட்டு, சிருஷ்டிக்கப் பட்டுள் ளது. விசாரணைக்கு பின்னர், உண்மை வெளிவரும்.  இதன் பின்னணியில், பாரதிய ஜனதாவைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ.,க்கள், எதிர்க்கட்சி பிரமுகர்களுக்கும் தொடர்பு உள்ளது. யார், யார் உள்ளனர் என்பதை தக்க நேரத்தில் தெரிவிப்பேன். பொது வாழ்க்கையில், ஆரம்பம் முதலே, நேர்மை, நெறிமுறைகளை பின்பற்றி வந்துள்ளேன். குற்றச்சாட்டு குறித்து, பத்திரிகையில் செய்தியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன். கிராம ஊராட்சி தேர்தல் நடக்கும் சூழ்நிலையில், அரசுக்கு சிக்கல் ஏற்படுத்த என்னை பலிகடாவாக்க முயற்சி நடக்கிறது. ராஜினாமா செய்துள்ளதால் எனக்கு எவ்வித மன வருத்தமும் இல்லை. அரசியலில் தொடர எனக்கு வயது இன்னமும் இருக்கிறது. புகழுக்கு களங்கம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே, ராஜினாமா செய்தேன். ராஜினாமா செய்யும்படி யாரும் வற்புறுத்தவில்லை. எனது சொந்த முடிவு. இதன் பின்னணியில், பா.ஜ., எம்.எல்.ஏ., ஒருவர் உள்ளார். நான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி கெடு விதித்திருந்தார். இவ்விஷயங்கள் குறித்தும் முதல்வர், கட்சித் தலைவருடன் ஆலோசிப்பேன்.இவ்வாறு ஹாலப்பா கூறினார்.

எதிர்கட்சிகள் சூழ்ச்சியா, ஹாலப்பாவின் வீழ்ச்சியா: ஹாலப்பாவின் ராஜினாமா கடிதத்தை முதல்வர் எடியூரப்பா ஏற்றுக்கொண்டு, கவர்னருக்கு அனுப்பி வைத்தார். முதல்வர் எடியூரப்பா கூறுகையில், ”ஹாலப்பா விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் நடத்துகின்றன. பாரதிய ஜனதாவுக்கு எதிராக, எதிர்க்கட்சியினர் சதி செய்துள்ளனர். ஹாலப்பாவின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,” என்றார்.அடுத்ததாக ஊராட்சி தேர்தல் வரும் நேரத்தில் சர்ச்சை ஏற்படுவதைத் தடுக்க முதல்வர் எடியூரப்பா, அமைச்சரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்றார். ஹாலப்பா மீதான புகாரினால், முதல்வர் எடியூரப்பா ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, அவரது ரேஸ் கோர்ஸ் ரோடு இல்லத்தின் முன், பெங்களூரு நகர இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்; 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

மொபைலில் படம் பிடித்தார் நண்பர்: அமைச்சர் ஹாலப்பாவின் நண்பர், ஷிமோகா வினோபா நகரில் வசிக்கிறார். பைனான்சியர் தொழில் செய்து வருகிறார். வினோபா நகர் வீட்டிலேயே இச்சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.அமைச்சர் ஹாலப்பா சம்பந்தமான விவகாரங்களை, அவரது நண்பரே மொபைலில் படம் பிடித்ததாகவும், 40 வினாடிகள் இந்த படம் ஓடுவதாகவும், ஹாலப்பா, தனது நண்பர் மனைவியின் காலில் விழுவதும், அதன் பின், தனது பேன்டை போடுவதாகவும், அந்த துணிகளுடன் ஹாலப்பா இருப்பது போன்றும் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன. இந்த துணிகள் தற்போது, ‘டி.என்.ஏ.,’ டெஸ்டுக்கு அனுப்பப்படவுள்ளதாக கூறப்படுகிறது.இச்சம்பவம் நவம்பர் 27ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு நடந்துள்ளது. மொபைலில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் விரைவில் வெளியாகுமா என்ற பரபரப்பும் மக்களிடம் உருவாகியுள்ளது. இச்சம்பவத்தை அடுத்து, ஹாலப்பாவின் நண்பருக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது.

பாலியல் புகாரில் சிக்கிய அமைச்சர் மீது வழக்குப்பதிவு: டி.ஜி.பி.,யை சந்தித்து பாதிக்கப்பட்ட பெண் புகார்
மே 03,2010,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=18288

கணவரே எடுத்த வீடியோ காட்சிகள்: பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஹாலப்பா தொடர்பாக, மொபைலில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் ‘டிவி’யில் ஒளிபரப்பப்பட்டன. ஹாலப்பா மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.கர்நாடக அமைச்சர் ஹாலப்பா, தன் நீண்டகால நண்பர் வெங்கடேச மூர்த்தியின் மனைவி சந்திராவதியை கடந்த நவம்பர் 26ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மனைவி கற்பழிக்கப்பட்டதை அறிந்ததும், வெங்கடேச மூர்த்தி ஆத்திரத்துடன் மொபைல் மூலம் படம் பிடித்துள்ளார். இந்த விவகாரம் நேற்று கன்னட நாளிதழில் வெளியானது. இதனால், தனது அமைச்சர் பதவியை ஹாலப்பா ராஜினாமா செய்தார்.வெங்கடேச மூர்த்தி மொபைலில் படம் பிடித்த காட்சிகளும் நேற்றிரவு’ டிவி’க்களில் ஒளிபரப்பாகின. அந்த காட்சியில், சந்திராவதி அலங்கோல நிலையில் காணப்படுகிறார். அறையிலிருந்த ஹாலப்பாவிடம் தகாத வார்த்தைகளால் சண்டை போடுகிறார்.

ஹாலப்பாவின் ஆட்கள் மிரட்டுதல்: அப்போது, ஹாலப்பா கறுப்புச் சட்டையில் காணப்படுகிறார்.சந்திராவதி பெண்கள் அணியும் அரைக்கை சட்டையும், இடுப்புக்கு கீழ் கவுனும் அணிந்துள்ளார். இந்த காட்சியில் ஹாலப்பாவின் முகம் தெரியவில்லை. ஒரு கட்டத்தில், என்னை அடிக்கிறாயா என்று சந்திராவதி, கோபமாக கூறுவது மட்டும் கேட்கிறது.

இந்த சம்பவத்திற்குப் பின், அமைச்சர் ஹாலப்பாவின் அடியாட்கள், வெங்கடேச மூர்த்தியின் வீட்டிற்கு வந்து அவரையும், அவரது குடும்பத்தினரையும் அடிக்கடி மிரட்டி வந்துள்ளனர். கோபமடைந்த வெங்கடேச மூர்த்தி, ஹாலப்பாவிற்கு போன் செய்து, ‘ஷிமோகாவில் நான் மரியாதையாக வாழ்ந்து வந்தேன். நான் உண்டு, எனது மனைவி, மக்கள் உண்டு என்று வாழ்ந்து வந்தேன். எனது குடும்பத்தை பாழடித்து விட்டாய். எனது மனைவியை கற்பழித்தது மட்டுமின்றி, எனது பிள்ளைகளையும் இம்சை படுத்துகிறாய். உன்னை சும்மா விடமாட்டேன். எனது மனைவியை கற்பழித்ததற்கான வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. அதை வெளியிட்டு, உன்னை ஒரு வழி செய்வேன்’ என்றார்.அதற்கு ஹாலப்பா, ‘உன்னை யாராவது மிரட்டினால், அவர்கள் வந்திருந்த கார் எண்ணை பதிவு செய்து, போலீசில் புகார் கொடுக்க வேண்டியது தானே. என்னிடம் ஏன் சொல்கிறாய். எனக்கும், இந்த சம்பவத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை’ என, கூறியுள்ளார்.

நண்பர்களிடையே மோதல்: அப்போது வெங்கடேச மூர்த்தி கூறுகையில், ‘தப்பு செய்தவன் நீ. உன் மீது தான் புகார் செய்ய வேண்டும். எனது பிள்ளைகளை கொடுமைப்படுத்துகிறாய். அவர்கள் மன வேதனையில் உள்ளனர்’ என்றார்.நடந்த சம்பவங்கள் குறித்து, கர்நாடகா போலீஸ் டி.ஜி.பி., அஜய்குமார் சிங்கை, வெங்கடேச மூர்த்தியும், அவரது மனைவி சந்திராவதியும் நேரில் சந்தித்து கூறினர். அப்போது, ‘அமைச்சராக இருந்த ஹாலப்பா தன்னை கற்பழித்து விட்டதாக’ சந்திராவதி அழுது கொண்டே புகார் கூறினார். ‘தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று டி.ஜி.பி., அஜய்குமார் சிங் தெரிவித்தார்.இதையடுத்து, ஹைகிரவுண்ட் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, முன்னாள் அமைச்சர் ஹாலப்பா மீது இருவரும் புகார் செய்தனர். அவர் மீது 376வது பிரிவின் கீழ் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்த நேரமும் ஹாலப்பா கைது செய்யப்படலாம்.

ஹாலப்பாவின் மீது பெங்களூரில் புகார்: இதை எதிர்பார்த்த ஹாலப்பா, தனது வக்கீல்களுடன் கலந்து ஆலோசித்து, முன்ஜாமீன் பெற திட்டமிட்டுள்ளார்.வெங்கடேச மூர்த்தியும், அவரது மனைவி சந்திராவதியும், ராஜ் பவனில் கவர்னர் பரத்வாஜை சந்திக்க சென்றனர். அங்கு அவர் இல்லாததால், ராஜ்பவன் அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தனர். கவர்னரை சந்திப்பதற்காக பெங்களூரில் தங்கியுள்ளனர்.இச்சம்பவம் குறித்து வெங்கடேச மூர்த்தி கூறுகையில், ”ஹாலப்பா மீது ஷிமோகா போலீசாரிடம் புகார் செய்தால், அவர்கள் புகாரை ஏற்க மறுக்கின்றனர். எனவே தான் பெங்களூரு வந்து, ஹைகிரவுண்ட் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளோம். எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த வீடியோ காட்சியை நானே தான் படம் பிடித்தேன்,” என்றார்.

சந்திராவதி கூறுவது: சந்திராவதி கூறுகையில், ”கடந்த நவம்பர் 26ம் தேதி, 2009 எனது வீட்டிற்கு சாப்பிட வருகிறேன் என்று ஹாலப்பா கூறினார். எனது கணவரும் சரி என்று கூறினார். அன்று இரவில் சாப்பிட்டு விட்டு, எனக்கு தூக்கம் வருகிறது என்று கூறினார். மாடி அறையில் அவர் தூங்குவதற்கு சென்றார். எனக்கு உடல் நலம் சரியில்லை. எனவே, மாத்திரை வாங்கி வா, என்று எனது கணவரிடம் கூறினார். எனது கணவரும் மாத்திரை வாங்குவதற்காக சென்றார்.  கணவர் வெளியே சென்றவுடன், நான் படுத்திருக்கும் இடத்திற்கு வந்து, என்னிடம் பலாத்காரத்தில் ஈடுபட்டார். எனது கணவர், சந்தேகமடைந்து திரும்பி வந்தார். வரும் போதே, மொபைல் வீடியோவை ஆன் செய்தே வந்தார். ஹாலப்பா தவறாக நடக்க முயற்சித்ததை படம் பிடித்தார். நானும், எனது கணவரும் ஹாலப்பாவை செருப்பால் அடித்து விரட்டினோம். அதன் பிறகு அவர், அடிக்கடி எங்களை மிரட்டி வந்தார்,” என்றார்.

பங்காரப்பா தாக்கு: ஹாலப்பா மீது கற்பழிப்பு புகார் பதிவான பிறகு, பல புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இச்சம்பவம் வெளி வருவதற்கு மூல காரணம் முன்னாள் முதல்வர் பங்காரப்பா என்று, முன்னாள் அமைச்சர் ஹாலப்பா புகார் கூறியிருந்தார்.  இதற்கு பதிலளித்து கர்நாடகா முன்னாள் முதல்வர் பங்காரப்பா கூறுகையில், ”எனது மைத்துனர் நடவடிக்கை துவக்கத்திலிருந்தே தவறாக தான் இருந்தது. பெண்கள் விஷயத்தில் அவர் மிகவும் வீக்கானவர். என்னுடன் கட்சியில் இருந்த போது, அவர் மீது ஏராளமான புகார்கள் வந்தன. குறிப்பாக பெண்களுடன் அதிக தொடர்பு வைத்திருந்தவர் என்று கூறப்பட்டது.இந்த அளவிற்கு அவர் கீழ்தரமாக செயல்படுவார் என்று நினைக்க வில்லை. அரசியல் காரணமாக, அவர் என் மீது வீண் புகார் சுமத்தியுள்ளார்.