Posts Tagged ‘கற்பழிப்பு வழக்கு’

05-12-2022 அன்று 5-க்கும் மேற்பட்ட பசுமாடுகளை வடமாநிலத் தொழிலாளர்கள் சேர்ந்து பாலியல் ரீதியான வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளது!

திசெம்பர் 14, 2022

05-12-2022 அன்று 5-க்கும் மேற்பட்ட பசு மாடுகளை வடமாநிலத் தொழிலாளர்கள் சேர்ந்து பாலியல் ரீதியான வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளது!

பசு மாடுகளை வடமாநிலத் தொழிலாளர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது: பவானி அருகே மேய்ச்சலுக்கு சென்ற பசுக்களை பாலியல் வன்கொடுமையில் வட மாநில தொழிலாளர்கள் தொந்தரவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, என்று “தமிழ் முரசு,” என்ற மாலை நாளிதழில் செய்தி 10-12-2022 அன்று வெளிவந்தது[1]. மற்ற பிரபல நாளிதழ்களில் தேடிப் பார்த்தபோது வந்ததாகத் தெரியவில்லை. ஒரே ஒரு இணைதளத்தில் “தமிழ் முரசு,” நாளிதழில் வந்துள்ள செய்தியை அப்படியே, அது வெளியிட்டுள்ளது[2]. பவானி – மேட்டூர் ரோடு பகுதியில் ஜீவா நகர் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வந்தனர்[3]. கடந்த சில மாதங்களாக இந்நிறுவனத்தில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர். அவர்கள் தங்கியிருந்த குடியிருப்புக்கு அருகாமையில் விவசாய நிலங்கள் உள்ளதால் அவ்வப்போது கால்நடைகள் மேய்ச்சலுக்கு வந்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில், விவசாய நிலத்துக்கு மேய்ச்சலுக்கு வந்த 5-க்கும் மேற்பட்ட பசு மாடுகளை வடமாநிலத் தொழிலாளர்கள் சேர்ந்து பாலியல் ரீதியான வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளதோடு, பசுக்களைக் கடித்தும் காயப்படுத்தியுள்ளனர். இத்தகைய முறையற்ற கற்பழிப்புகள் மற்ற மாநிலங்களிலும் நடந்துள்ளதாகத் தெரிகிறது[4].

களவியலாகற்பியலா, மிருகங்களுடன் புனைவது தமிழர்களின் கலாச்சாரமா?: மிருகங்களுடன் புனைவது, உடலுறவு வைத்துக் கொள்வது, “சங்க காலத்திலிருந்து உள்ளது,” என்று ஏதாவது ஆதாம் உள்ளதா, “கீழடியில்” ஏதாவது கண்டு பிடிக்கப் பட்டதா, அதனால், போற்ற வேண்டும், ஆதரிக்க வேண்டும், “களவு” முறையில் மறைக்க வேண்டும் என்று, ஏதாவது “களவியல்” சித்தாந்தம் உளளதா? பசுக்கள் தான் பாலியல் வன்புணர்ச்சிகளுக்கு உட்பட்டுள்ளது, அதனால், “சனாதனிகள்,” சங்கிகள் தான் கவலைப் படவேண்டும், மற்ற தமிழர்கள் கவலைப் படவேண்டாம் என்றெல்லாம் உள்ளதா? சரி, அந்த பசுக்கள் கொடுக்கும் பாலை இனி மனிதகள் உட்கொள்ளலாமா, எந்த பிரச்சினையும் வராதா, என்றெல்லாம் பற்றி யாராவது விளக்க முடியுமா?  “களவியலா-கற்பியலா” என்று டிவி தொலைக்காட்சிகளில் வாத-இவாதம், பட்டி மன்றங்கள் நடட்துவார்களா?

இக்கொடூரத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அனைவரும் வாகனம் மூலம் அங்கிருந்து உடனடியாக உடமைகளுடன் வெளியேற்றப்பட்டது: இத்துணிகர வன்கொடுமை சம்பவம் கடந்த 5-ம் தேதி [05-12-2022 அன்று] அரங்கேறியுள்ளது. மேய்ச்சலுக்கு சென்ற பசுக்கள் காயங்களுடன் திரும்பியதைக் கண்ட உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் விசாரணையில் வடமாநிலத் தொழிலாளர்கள் சேர்ந்து பசுக்களை வன்புணர்வில் ஈடுபட்டது தெரியவந்தது. இத்தகவலறிந்த, பவானி வருவாய்த் துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அனைவரும் வாகனம் மூலம் அங்கிருந்து உடனடியாக உடமைகளுடன் வெளியேற்றப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து, பவானி போலீசாரும் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணை தொடர்பான அறிக்கை பவானி வருவாய்த்துறை மூலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வேலைக்கு வந்த வடமாநிலத் தொழிலாளர்கள் கும்பலாக சேர்ந்து மேய்ச்சலுக்கு வந்த பசுக்களிடம் வரம்புமீறி பாலியல் கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள்என்று குறிபிடப் பட்டு, அடையாளம் மறைக்கப் படுவது: ஆனால், தொடர்ந்து,“வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள்’ என்று குறிபிடப் பட்டு, அவர்களின் பெயர்களைக் கூட தெரிவிக்காமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. போக்சோ சட்டத்தில் கூட பாதிக்கப் பட்ட பெண்களின் அடையாளத்தைத் தான் வெளியிடக் கூடாது என்றுள்ளது. இங்கு பாலியல் ரீதியில் பாதிக்கப் பட்டவை பசுக்கள் என்று தெரியப் படுத்தப் பட்டுள்ளது. பிறகு, வரம்புமீறி பாலியல் கொடுமையில் ஈடுபட்டது – வந்த 5-க்கும் மேற்பட்ட பசு மாடுகளை வடமாநிலத் தொழிலாளர்கள் சேர்ந்து பாலியல் ரீதியான வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளதோடு, பசுக்களைக் கடித்தும் காயப்படுத்தியுள்ளது முதலிய கொடிய-குரூர-பயங்கரமான குற்றங்களை, குற்றம் புரிந்தவர்களை ஏன் மறைக்க வேண்டும்?

 யார் அந்தவடமாநிலத் தொழிலாளர்கள்” ?: “இக்கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் அனைவரும் வாகனம் மூலம் அங்கிருந்து உடனடியாக உடமைகளுடன் வெளியேற்றப்பட்டது தெரியவந்தது,” எனும் போது, அவ்வாறு ஏன் செய்யப் பட்டது என்று திகைப்பாக இருக்கிறது. குற்றம் செய்தவர்கள், அதிலும் இத்தகைய, இயற்கைக்கு மாறான “பசுக்களை வன்புணர்வில் ஈடுபட்டது” தெரிய வந்துள்ள போது, அதை மறைக்கும் முயற்சி எதைக் காட்டுகிறது என்று தெரியவில்லை. ஏற்கெனவே தமிழகத்தில், “வடமாநிலத் தொழிலாளர்கள்” அதிகம் வருவதால், வந்து பல இடங்களில் வேலை செய்வதால், தமிழர்களின் வேலை வாய்ப்பு பறிபோகிறது, குறைகிறது என்று பரவலாக, வெளிப்படையாக எல்லோராலும் பேசப் பட்டு வருகிறது. அரசியல் ரீதியாகவும் வெறுப்பு, காழ்ப்பு போன்றவை வெளிப்படுத்தப் பட்டு வருகின்றன. குற்றங்களில் அவர்கள் தாம் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் சொல்லப் படுகிறது. அந்நிலையில், அவர்கள் யார் என்று சொல்லப் பட வேண்டும்.

பங்களாதேசத்தவர், முஸ்லிம்கள் என்றாலும் தெரிவிக்கப் பட வேண்டும்: பங்களாதேசத்தவர், அவர்கள் முஸ்லிம்களாகத் தான் இருக்கின்றனர், ஆனால், தங்களது அடையாளங்களை மறைத்து, ஏன் “இந்துக்கள்” போர்வையிலும் வேலை செய்து வருகின்றனர். பங்களாதேசத்திலிருந்து, எவ்வாறு, இத்தனை தூரம் வரமுடிகிறது, அவர்களை எவ்வாறு  யார் எப்படி வேலைகளுக்கு வைக்கிறார்கள் என்பது தெரியவில்லை என்பது இல்லை. பெரும்பாலான கட்டிட வேலை நடக்கும் இடங்களில் இவர்கள் தான், ஆயிரக் கணக்கில் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். அங்கு வேலை செய்யும் மேஸ்திரிகளுக்கு, மேற்பார்வையாளர்களுக்கு, இஞ்சினியர்களுக்கு, பில்டர்களுக்கும் தெரிந்து தான் உள்ளது. ஆனால், யாரும் கண்டுகொள்வதில்லை என்றே தெரிகிறது. ஏற்கெனவே, கோவையில் “காஸ்-குண்டு வெடிப்பு,” முயற்சி நடந்திருக்கிறது. அது மங்களூரு “ஆட்டோ-குண்டு வெடிப்பு,”டன் தொடர்பு படுத்தி செய்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன. தமிழக-கர்நாடக இணைப்புகள் வெளிப்படுகின்றன. பிறகு, பங்களாதேச இணைப்பு என்ன என்று ஆராய வேண்டியுள்ளது.

அடையாளம் மறைப்பது எக்யூலரிஸமா அல்லது கம்யூனலிஸமா?: பீஹார், உத்திரபிரதேசம் என்றால் தூற்றவேண்டும், மற்ற “வடமாநிலத் தொழிலாளர்கள்” என்றால் அமைதியாக இருக்க வேண்டும், “பங்களாதேசத்தவர்” என்றால் இன்னும் அமுக்கி வாசிக்க வேண்டும், அதிலும் “முஸ்லிம்கள்” என்றால், மூச்சே விடக் கூடாது என்று ஏதாவது சம்பிரதாயம், தீர்மானம், கட்டுப்பாடு, என்று இருக்கிறதா என்று தெரியவில்லை. மேற்கு வங்காளம் மூலம் வருவதால், “கூட்டணி தர்மம்” ஏதாவது தடுக்கிறதா என்று தெரியவில்லை. அல்லது அவர்களுக்கும், இங்குள்ளவர்களுக்கும் ஏதாவது சம்பந்தம், தொடர்பு, இணைப்பு என்று உள்ளதா என்றும் தெரியவில்லை. “செக்யூலரிஸம்” அதசார்பற்ற நிலை, சமதர்மம்,  என்றெல்லாம் பேசிக் கொண்டு, கடைசியாக, “ஓட்டு வங்கி அரசியல்” எனும் போது, “கம்யூனலிஸமாகி” அதை  சித்தாந்தங்கள் மூலம் முலாம் பேசி, போற்றிக் கொன்டாடும் விதத்தை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

பவானி போலீசார் அறிக்கை பெற்ற மாவட்ட என்ன செய்வார்?: ஆட்சியர் இதுகுறித்து, பவானி போலீசாரும் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணை தொடர்பான அறிக்கை பவானி வருவாய்த்துறை மூலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, என்று செய்தி கூறுகிறது. சரி, அறிக்கை பெற்ற, வாங்கிக் கொண்ட மாவட்ட ஆட்சியாளர், படித்தப் பிறகு, என்ன நடவடிக்கை எடுத்தார்? இன்று 11-12-2022 ஆகிறது, ஆறு நாட்களாகியும் ஒன்றும் செய்யவில்லையா? அந்த “வடமாநிலத் தொழிலாளர்கள்”  வசதியாக அனுப்பப் பட்டு மறைந்து விட்டனரா?

© வேதபிரகாஷ்

14-12-2022.


[1]  தமிழ் முரசு, பசுக்களிடம் அத்துமீறிய வடமாநில தொழிலாளர்கள் விரட்டியடிப்பு சென்னை, 10-12-2022, பக்கம்.4.,

[2] லோகல்.அப்.தமிழ், பசுக்களுக்கு பாலியல் தொல்லை: வடமாநிலத்தவர்கள் அட்டகாசம், சக்கரவர்த்தி, By சக்கரவர்த்தி, Dec 10, 2022, 09:12 IST

[3] https://tamil.getlokalapp.com/tamilnadu-news/erode/anthiyur/sexual-harassment-of-cows-northerners-are-outraged-8542211

[4] தமிழ்.சமயம், உத்தர பிரதேசத்தில் பசுக்களை கற்பழித்த நபா் கைது, Samayam TamilUpdated: 22 May 2019, 11:12 pm

https://tamil.samayam.com/latest-news/india-news/man-held-for-raping-cows-at-shelter-in-ayodhya-up/articleshow/69450193.cms

தெய்வத்தின் சொந்த தேசத்தில், அதிகம் எழுத்தறிவு கொண்ட மாநிலத்தில் நிர்வாண பூஜை,  நரபலி முதலிய குரூர குற்றங்கள் எப்படி நடந்தேறின? (3)

ஒக்ரோபர் 15, 2022

தெய்வத்தின் சொந்த தேசத்தில், அதிகம் எழுத்தறிவு கொண்ட மாநிலத்தில் நிர்வாண பூஜை,  நரபலி முதலிய குரூர குற்றங்கள் எப்படி நடந்தேறின? (3)

ஷபி ஒத்துழைக்கவில்லை என்று போலீஸார் கூறுவது: கொச்சி நகர சட்டம் ஒழுங்கு பிரிவு துணை ஆணையர் சசிதரன் கூறுகையில், “ஆரம்பத்தில் தமது குற்றத்தை ஒப்புக் கொள்ளாதவராகவே ஷாஃபி காணப்பட்டார். எதையும் வெளிப்படுத்தாமல் இருந்தார். கடைசியில் அவரை ஒப்புக் கொள்ள வைக்க அறிவியல்பூர்வ விசாரணை முறைகளையும் பிற நுட்பங்களையும் பயன்படுத்த வேண்டியிருந்தது. கடவந்திராவிற்கும் திருவல்லாவிற்கும் இடையே உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் காணாமல் போன பத்மாவுடன் ஷாஃபி ஒரு வாகனத்தில் நுழைந்த மங்கலான காட்சி மூலம் அவர்களின் அடையாளத்தை மீட்பது சவாலாக இருந்தது. அதன் பிறகே இந்த வழக்கில் துப்பு துலங்கியது,” என்று தெரிவித்தார். இந்த வழக்கில் கண்காணிப்பு கேமரா பதிவு மூலமாகவே துப்புதுலங்கியது[1]. கொலை செய்யப்பட்ட பெண்களில் ஒருவரை முகமது சஃபி தனது காரில் ஏற்றுவது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த ஆதாரத்தை வைத்து காவல் துறையினா் மேற்கொண்ட தொடா் விசாரணையில், இந்த கொலை சம்பவத்தின் முழு விவரமும் வெளிவந்தன.

கடந்த சில மாதங்களில் 12 பெண்கள் காணாமல் போனது கேரள போலீசார் விசாரணை:  “பதினோரம் வகுப்பு தேர்ச்சி பெறாத அவர் தமது 16-17ஆவது வயதில் வீட்டை விட்டு ஓடி வந்து விட்டார். மாநிலத்தின் கிட்டத்தட்ட எல்லா மாநிலங்களிலும் அவர் சுற்றியிருக்கிறார். கிடைத்த வேலைகளை செய்திருக்கிறார். கடைசியில் தமது நரபலி திட்டத்தை நிறைவேற்றும் நோக்கில் லாட்டரி சீட்டுகளை விற்கும் வெளி மாநில பெண்களை நோட்டம் பார்த்து அவர்களுக்கு புதிய வேலை ஆசை காட்சி தமது சதியை செயல்படுத்தியிருக்கிறார்,” என்று புலனாய்வாளர்கள் நம்மிடையே தெரிவித்தனர். இதற்கிடையே, ஷாஃபியிடமிருந்து தப்பிய பெண் என தன்னை அழைத்துக் கொள்ளும் ஒருவர், தன்னுடைய அடையாளத்தை மறைத்துக் கொண்டு அளித்த பேட்டியில், “ஷாஃபி மீது கொச்சி களமசேரி காவல் நிலையத்தில் ஒரு பெண்ணை மிதித்துக்கொன்றதாக வழக்கு உள்ளது. நான் அதிர்ஷ்டவசமாக அவரிடம் இருந்து தப்பித்தேன்,” என்று தெரிவித்தார்.  மேலும் பல பெண்கள் சபியிடம் சிக்கியிருக்கலாம், நிறைய பெண்கள் காணாமல் போயிருக்கிறார்கள் போன்ற செய்திகளும் வெளிவருகின்றன. கடந்த சில மாதங்களில் 12 பெண்கள் காணாமல் போனது கேரள போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது[2].  எனவே அந்த பெண்களும் நரபலிக்கு கொடுக்கப்பட்டிருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்[3].

தமிழகத்தைச் சேர்ந்தவர் உட்பட இரண்டு பெண்களை நரபலி கொடுத்த கேரள தம்பதி: தமிழகத்தைச் சேர்ந்தவர் உட்பட இரண்டு பெண்களை நரபலி கொடுத்த கேரள தம்பதி உட்பட மூன்று பேரை, 12 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு கொச்சி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இவர்களிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில், விரைவில் பணக்காரராகும் ஆசையில், இந்த தம்பதி நரபலி கொடுத்ததும், அதற்கான ஆலோசனை வழங்கியதில் இருந்து நரபலி கொடுக்க இரண்டு பெண்களை அழைத்து வந்தது என, பல வகையில் முகமது ஷபி உதவியுள்ளதும் தெரியவந்துள்ளது. தமிழகத்தின் தர்மபுரியைச் சேர்ந்த பத்மா, கேரள மாநிலம் காலடியைச் சேர்ந்த ரோஸ்லின் ஆகியோர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதுடன், அவர்களுடைய உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டுஉள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதுவரை 61 பாக்கெட்டுகளையில் மனித உடல் பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஒரே குழியில் இருந்து 56 பாக்கெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. மற்றொரு குழியில் எலும்பு உள்ளிட்ட 5 பாகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அனைத்தும் டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  நிர்வாண பூஜை செய்ததுடன், கொல்லப்பட்ட பெண்களின் உடல் பாகங்களை, தம்பதி சமைத்து சாப்பிட்டதும் தெரியவந்து உள்ளது[4]. நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியம் கிடைக்கும் என கூறி முகமது ஷாஃபி இதை செய்ய வைத்துள்ளார்[5]. அந்த மாமிசத்தில் சிறிது சாப்பிட வேண்டும்” என முகமது ஷாஃபி கூறியுள்ளார். பகவல் சிங்கும், லைலாவும் முதலில் மறுத்துள்ளனர்.

ஹீலிங் செய்யும் மருத்துவருக்கு, மலையாள மாந்திரீகர் உதவ முன்வந்தது: முன்னதாக பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டது குறித்து கொச்சி போலீஸ் கமிஷனர் சி.எச்.நாகராஜு கூறியது: கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் பகவால் சிங். இவரிடம் வரும் நோயாளிகளின் நோய்களை குணமாக்கி வந்தார். ஆனால், இவரது “பணக்கார பேராசை” நோயை நீக்க ஒரு அலையாள மாந்திரீகன் தான் வர வேண்டிய நிலை போலும். இவரது மனைவி லைலா. ஹீலிங் எனப்படும் இந்தத் தொழிலை இவர்கள் பரம்பரை, பரம்பரையாக செய்து வருகின்றனர். இந்நிலையில், பகவால் சிங்குக்கு பணம் செழிப்பதற்காகவும், வளத்தைப் பெருக்குவதற்காகவும் 2 பெண்களை அழைத்து வந்து நரபலி கொடுத்த விவரம் எங்களுக்குத் தெரியவந்தது. இதற்கு உடந்தையாக இருந்த பெரும்பாவூர் ஷபி (எ) ரஷீத் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்திய நிலை: கைது செய்யப்பட்ட மூவரும், கொச்சி நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜர்படுத்தப்பட்டனர்[6]. இது குறித்து அம்மாநில உயர் நீதிமன்றம் அதிர்ச்சியையும், அவநம்பிக்கையையும் வெளிப்படுத்தியிருக்கிறது[7]. கேரள உயர் நீதிமன்ற நீதிபதி தேவன் ராமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை 11-10-2022 அன்று வேறு ஒரு வழக்கை விசாரித்துக் கொண்டிருக்கும்போது நரபலி குறித்த தனது அதிர்ச்சியையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தினார். இதுகுறித்து நீதிபதி ராமசந்திரன் கூறுகையில்[8], “அரசின் கவனக்குறைவையும், மக்களின் விசித்திரமான நடவடிக்கைகளையும் நீதிமன்றம் கவனித்து வருகிறது. கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கேள்விப்படும் செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது என்பது மனித பகுத்தறிவை மீறிய செயல். இந்தச் செயல்களால் கேரளா எதை நோக்கிச் செல்கிறது என்ற ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது,” என்று தெரிவித்தார்[9]. அவர்களை, 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில், அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி போலீஸ் தரப்பில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது[10]. இதை ஏற்ற நீதிமன்றம், 12-10-2022 புதன்கிழமை 12 நாள்  அக்டோபர் 26ஆம் தேதி வரை போலீஸ் காவலுக்கு அனுமதி அளித்துள்ளது[11].

© வேதபிரகாஷ்

14-10-2022.


[1] தினத்தந்தி.டிவி, நாட்டையே உலுக்கிய கேரள நரபலி சம்பவம்.. கேரள போலீஸ் அதிரடி, By தந்தி டிவி, அக்டோபர் 2022 11:08 AM

[2] தமிழ்.ஏசியாநெட்.நியூஸ், கேரளா நரபலி கொடூரம்..! கொலையாளிகள் போலீசில் சிக்கியது எப்படி..? மேலும் 12 பெண்களில் நிலை என்ன..?, Ajmal Khan, First Published Oct 13, 2022, 10:44 AM IST; Last Updated Oct 13, 2022, 10:44 AM IST

[3] https://tamil.asianetnews.com/crime/police-identify-killers-involved-in-human-sacrifice-in-kerala-through-cctv-rjoejp

[4] நியூஸ்.18.தமிழ், நரபலி கொடுத்த உடலை சாப்பிட்ட தம்பதி.. கேரளாவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்நடந்தது என்ன?, NEWS18 TAMIL, LAST UPDATED : OCTOBER 12, 2022, 11:53 IST.

[5] https://tamil.news18.com/news/national/kerala-2-lady-human-sacrifice-lot-of-startling-information-was-revealed-in-investigation-817644.html

[6] மாலைமலர், கேரளா நரபலி வழக்குகைது செய்யப்பட்ட 3 பேரையும் 12 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி, By மாலை மலர்13 அக்டோபர் 2022 4:29 PM

[7] https://www.maalaimalar.com/news/national/kerala-human-sacrifice-case-all-3-accused-sent-to-12-day-police-custody-523933

[8] தமிழ்.இந்து, கேரளா எதை நோக்கி செல்கிறது?” – 2 பெண்கள் நரபலி சம்பவத்தில் உயர் நீதிமன்றம் அதிர்ச்சி, செய்திப்பிரிவு, Published : 12 Oct 2022 01:42 PM; Last Updated : 12 Oct 2022 01:42 PM

[9] https://www.hindutamil.in/news/india/881847-kerala-human-sacrifice-high-court-expresses-its-shock-disbelief-1.html

[10] தினமலர், கேரள நரபலி கொடூரர்களுக்கு 1 2 நாள் போலீஸ்சாட்டை!’, Added : அக் 14, 2022  02:10

[11] https://www.dinamalar.com/news_detail.asp?id=3145306

செங்கல்பட்டு குழந்தைகள் காப்பகம், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர், பெண்-குழந்தைகளைக் கற்ப்ழிப்பது, புகார் மற்றும் வழக்குகள் (2)

திசெம்பர் 25, 2020

செங்கல்பட்டு குழந்தைகள் காப்பகம்குழந்தைகள் நலக்குழு உறுப்பினர், பெண்குழந்தைகளைக் கற்ப்ழிப்பது, புகார் மற்றும் வழக்குகள் (2)

மணிகண்டனுக்கு நீதிமன்ற தண்டனை வழங்கியது (டிசம்பர் 2017): நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், செங்கல்பட்டு குழந்தைகள் நலக்குழுத் தலைவருக்கு, இரண்டு மாத சிறைதண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பரங்கிமலையில் புனித ஜோசப் பிரான்சிஸன் சகோதரிகள் அமைப்புக்கு சொந்தமான குழந்தைகள் காப்பகம், பதிவு செய்யப்படாததால் செங்கல்பட்டு குழந்தைகள் நலக் குழு, காப்பகத்தில் இருந்து ஐந்து சிறார்களை அழைத்துச் சென்று தனியார் மையத்தில் தங்கவைத்தது. ஐந்து குழந்தைகளையும் மீட்டுத் தரக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, உயர்நீதிமன்றம் ஐந்து சிறார்களையும் உடனடியாக மீண்டும் அதே இல்லத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தாததை அடுத்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி துரைசாமி, செங்கல்பட்டு குழந்தைகள் நலக்குழுத் தலைவர் மணிகண்டனுக்கு 2 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்[1]. நீதிமன்ற உத்தரவை பின்பற்றாதது மட்டுமல்லாமல், மன்னிப்பு கேட்க கூட அவர் முன் வரவில்லை. இது போன்ற நடவடிக்கைகளை அனுமதித்தால் ஒரு தவறான முன்னுதாரணம் ஆகி விடும் எனக் கூறி மணிகண்டனுக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்[2]. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற மணிகண்டன் தரப்பு கோரிக்கையை ஏற்ற நீதிபதி, தண்டனை 2 வாரங்களுக்கு நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.

குழந்தைகளை சீரழிக்கும் காமுகர்கள்: குழந்தை என்றால் 18 வயதிற்கு கிழேயுள்ள சிறுமி அல்லது சிறுவன் ஆகும். இதில், 3 முதல் 17 வரையுள்ள சிருமிகள், டீன் ஏஜில் உள்ள, வயதுக்கு வந்த இளம்பெண்கள் ஆவர். ஆகவே, இவர்களைத்தான், காமுகர்கள், தங்களது இச்சைக்கு சதாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை, கிருத்துவ பிடோபல் / சிறுவர் கற்ப்பழிப்பாளிகள் பற்றிதான், அதிகமாக செய்திகள் வந்துள்ளன. எப்பொழுதுவது, கூலிக் காரன், கிழவன், சிறுமியர்களிடம் சில்மிஷம் செய்ததாக, செய்திகள் வந்ததுண்டு. அவர்கள் தண்டனை பெற்ற / பெறு செய்த செய்திகளும் வந்துள்ளன / வருகின்றன. ஆனால், இந்த அரசு காப்பக கற்பழிப்புகள், பாலியல் குற்றங்கள் பற்றி விவரங்கள் வெளி வராமல் இருக்கின்றன. ஆகவே, இது பற்றிய விழிப்புணர்வு தேவை என்று தெரிகிறது. அனாதை இல்லங்களில் நடக்கும் அக்கிரமங்களைக் கண்காணிக்கப் படவேண்டும். ஏற்கெனவே அக்குழந்தைகள் பெற்றோர் அறியாமல், மற்றவர்களின் ஆதரவுடன் வளர்ந்து வரும் நிலையில், அவர்களை பாலியல் ரீதியில் பலாத்காரம் செய்வது, கற்பழிப்பது என்பது நினைத்துப் பார்க்க முடியாத காரியமாக, குற்றமாகத் தெரிகிறது. அதை செய்யத் துணியும் மற்றும் செய்து வரும் கயவர்கள், எத்தகைய கொடிய அரக்கர்களாக இருப்பர் என்பதனை அறிந்து கொள்ளலாம். ஆகவே, அவர்களுக்குக் கடுமையான தண்டனை அளிக்கப் படவேண்டும்.

காப்பகங்களில் உள்ள அதிகாரி போதை மருந்து வியாபாரத்தில் ஈடுபட்டதால் சஸ்பெண்ட் செய்யப் பட்டது (2018)[3]: தாஸ் என்கின்ற துணை தலைமை அதிகாரி (Das, assistant superintendent at the special home for children at Chengalpet) போதை மருந்து வியாபாரத்தில் ஈடுபட்டதாதத் தெரிந்தது. காப்பகத்திற்கு குழந்தைகளைப் பார்க்க வருபவர்கள் மூலம் கஞ்சா/கன்னபீஸ் போன்ற போதைப் பொருட்களை கொண்டு வருவதாகத் தெரிந்தது. இதனால், சிவகுமார், சூப்பிரென்டென்டுக்கு ஒரு மெமோவும் அனுப்பப் பட்டது. ஒரு முறை அங்கிருக்கும் சிறுவர்கள், போதையில் சிறைக் காவலரைத் தாக்கிய போது, விவகாரம் தெரிய வந்தது. அப்பொழுது அவர்களிடமிருந்து, போதைப் பொட்டலங்கள், செல்போன், சிம்கள் முதலியன பறிமுதல் செய்யப் பட்டன. காப்பகத்தில், அவையெல்லாம் தடை செய்யப் பட்டவை ஆகும். காப்பகத்தில் இருக்கும் உயர் அதிகாரிகளே, வரும் பார்வையாளர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு, இத்தகைய வேலையை செய்து வருகின்றனர் என்று “டைம்ஸ் ஆப் இந்தியா,” செய்தி வெளியிட்டது. பார்வையாளர்கள், சாப்பாடு கொண்டு தரும் சாக்கில், உணவு டப்பாக்களில், இந்த போதைப் பொருட்களை, மறைத்து வைத்து, கொடுத்து விட்டுச் செல்வதாக, அங்குள்ளவர்கள் அறிவித்தனர். இதனால், நிலைமையை விசாரிக்க ஒரு குழு வந்து விவரங்களை அறிந்தது, ஒரு அறிக்கைக் கொடுத்தது. அதன் படி, சில குறிப்பிட்ட அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தது[4].

காப்பகங்களின் அவலநிலை (மார்ச்.2016): காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில், அரசு அனுமதியின்றி, ஏராளமான காப்பகங்கள் முளைத்து வருகின்றன; அவற்றில், ஏராளமான குழந்தைகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்[5]. அந்த, ‘காப்பகங்களில்’ எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி, மோசமான நிலை உள்ளது. அங்கு பராமரிக்கப்படும் குழந்தைகள், வேலைக்கு அனுப்பப்படுவதாகவும் கூறப்படுகிறது[6]. மேலும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்; அதற்கு, அரசு அனுமதியில்லை. எனினும், முறைகேடாக, பச்சிளம் குழந்தைகள் அங்கு பராமரிக்கப்படுகின்றன.கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் 2013ல், மாவட்டம் முழுவதும், 53 அனுமதியற்ற குழந்தைகள் காப்பகங்கள் மூடப்பட்டன. மாவட்ட நிர்வாகத்தின் கண்களை மறைத்து, சில அதிகாரிகள் துணையுடன், காப்பங்கங்கள் மீண்டும் முளைத்து வருகின்றன. அதாவது, அவ்வாறு காப்பகங்களை வைப்பதால், யாருக்கு லாபம் என்று கவனிக்க வேண்டும். காப்பகங்களை வைத்து, நிதியுதவி பெறுகின்றனர், மற்றும், செலவழித்தலும், அதிகமாக பணம் மிஞ்சுகிறது, அதனை, தமது விருப்பகங்களுக்கு ஏற்றபடி உபயோகப் படுத்துகின்றன என்று தெரிகிறது. இந்த காப்பகங்கள் மீது, மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்டு செயல்படும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

© வேதபிரகாஷ்

19-12-2020 / 25-12-2020


[1] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ். செங்கல்பட்டு குழந்தைகள் நலக்குழு தலைவருக்கு 2 மாத ஜெயில் : ஐகோர்ட் உத்தரவுBy: WebDesk, December 13, 2017, 7:14:17 PM.

[2]  https://tamil.indianexpress.com/tamilnadu/chengalpattu-children-welfare-officer-2-months-jail-chennai-high-court-order/

[3] An official from the state social defence department has been suspended for his alleged involvement in drug trade at a government juvenile home. Das, assistant superintendent at the special home for children at Chengalpet, allegedly colluded with visitors to smuggle ganja (cannabis) into the home, a senior official from the department told TOI. Another official, Selvakumar, who works as the superintendent, has received a memo seeking an explanation. Last week, a group of boys attacked a guard allegedly under the influence of ganja. Sachets of the contraband, beedis, mobile phones and SIM cards – all banned items at the correctional facility – were seized by authorities. TOI reported the incident on October 3. 2018.

Times of India, Official suspended for aiding drug trade at juvenile home, Ram Sundaram | TNN | Oct 9, 2018, 05:53 IST.

[4] Insiders said higher-ups at the home colluded with visitors – families and friends of inmates – to smuggle in ganja by concealing them in bread packets and lunch boxes. Ganja addiction was common among inmates, they said. Based on the news report, a team inspected the home on October 4 and submitted a report. Disciplinary proceedings have been initiated against two officials based on the team’s report which confirmed that ganja was sneaked into the home, the official said.

https://timesofindia.indiatimes.com/city/chennai/official-suspended-for-aiding-drug-trade-at-juvenile-home/articleshow/66127333.cms

[5] தினமலர்,குழந்தைகள் காப்பகங்களில் நடக்கும் முறைகேடுகள் அம்பலம்! நிர்வாகிகளின் பணத்தாசைக்கு இரையாகும் பிஞ்சுகள் , Added : மார் 02, 2016  05:35

[6] https://www.dinamalar.com/news_detail.asp?id=1469508&Print=1

செங்கல்பட்டு குழந்தைகள் காப்பகம், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர், பெண்-குழந்தைகளைக் கற்ப்ழிப்பது, புகார் மற்றும் வழக்குகள் (1)

திசெம்பர் 25, 2020

செங்கல்பட்டு குழந்தைகள் காப்பகம்குழந்தைகள் நலக்குழு உறுப்பினர், பெண்குழந்தைகளைக் கற்ப்ழிப்பது, புகார் மற்றும் வழக்குகள் (1)

செங்கல்பட்டில் உள்ள குழந்தைகள் காப்பகம் தொடர்ந்து பாலியல் குற்றங்களில் சம்பந்தப் பட்டுள்ளது: செங்கல்பட்டில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில்[1] உள்ள சிறுமிகளைக் கற்பழிப்பது, கர்ப்பமாக்கியது போன்ற விவகாரங்கள் நீதிமன்றம் வரைச் சென்றுள்ளன[2].  14 வயதான டீன் ஏஜ் சிறுமியை, ஒருவன் கற்பழித்ததால், கர்ப்பமடைந்தால். அந்த கர்ப்பத்தைக் கலைப்பது பற்றி நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளார்கள்[3]. “இந்தியா டுடேவிலும்” இதைப் பற்றி விவரமாக அலசப் பட்டது[4]. காப்பகங்களில் பெண்-குழந்தைகள் தொடர்ந்து இவ்வாறான பாலியல், செக்ஸ் தொல்லைகளுக்கு உட்படுத்தப் பட்டுள்ளார்கள்[5]. காப்பகத்தைச் சேர்ந்தவர்கள், பாதுகாவலர்கள் தான் அத்தகைய வேலைகளை செய்துள்ளனர். ஆனால், அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது, தண்டனை கொடுக்கப் பட்டது போன்ற விவரங்கள் தெரியவில்லை. நீதிமன்றத் தீர்ப்புகள் இருந்தாலும், குற்றாவாளிகள் தண்டனையைப் பற்றி தெரியவில்லை, அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மற்றவர்கள் இவற்றில் ஈடுபட்டுள்ளதால், இத்தகைய விவரங்கள் பெரும்பாலும், மறைக்கப் பட்டு வருகின்றன. இந்நிலையில் தான், குழந்தைகள் நலக்குழுவில் உள்ள உறுப்பினர்கள், இன்னொரு உறுப்பினருக்கு எதிராக மனு/வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் தாமோதரனை நீக்க வழக்கு: செங்கல்பட்டு குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து, தாமோதரன் என்பவரை நீக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது[6]. மனுவுக்கு பதில் அளிக்க, அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[7]. செங்கல்பட்டு மாவட்ட சிறப்பு முகாம் உறுப்பினர்கள், செங்கல்பட்டு அரசு சிறப்பு முகாமில் உள்ள, குழந்தைகள் நல குழு உறுப்பினர்கள் குளோரி ஆனி, மணிகண்டன், முகமது சகாருதீன் ஆகியோர் உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்த மனுவில், ‘குழந்தைகள் நல குழுவில், உறுப்பினராக இருக்கும் தாமோதரன், சிறார் நீதி சட்டத்தை மீறி செயல்படுகிறார். ‘இவர், இந்த பொறுப்பில் தொடர்வது, காப்பகத்தில் உள்ள பெண் குழந்தைகளின் நலனுக்கு உகந்ததாக இல்லை[8]. எனவே, இவரை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும்’ என, கூறப்பட்டுள்ளது[9]. குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்களே, இன்னொரு குழு-உறுப்பினர் மீது குற்றஞ்சாட்டி வழக்குத் தொடர்ந்துள்ளாதால், இது முக்கியமாகிறது. இருப்பினும், சில ஊடகங்களே, இச்செய்தியை வெளியிட்டுள்ளன..

வேலியே பயிரை மேய்க்கும் வேலையில் ஈடுபட்டுள்ள தாமோதரன்: அவர்கள் தாக்கல் செய்த மனுவில், “குழந்தைகள் நலக் குழுவில் உறுப்பினராக இருக்கும் தாமோதரன், சிறார் நீதிச் சட்டத்தை மீறிச் செயல்படுகிறார். பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு சிரமங்களிலிருந்து மீட்கப்படும் குழந்தைகளை குழுவின் முன் ஆஜர்படுத்தாமல் மறைக்கிறார்[10]. இது குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பாக அமைந்துவிடும். குழுவால் விசாரிக்கப்பட்ட சிறுமியிடம் நூறு ரூபாயைக் காண்பித்து, தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி உறுப்பினர் தாமோதரன் வற்புறுத்தியுள்ளது ஆபத்தைத் தருகிறது[11]. ஆபாசப் படங்கள் பார்க்கும் பழக்கம் கொண்ட அவரால், காப்பகக் குழந்தைகளுக்கு ஆபத்தான சூழல் நிலவுகிறது. இதுகுறித்து அரசிடம் புகார் அளித்த எங்களைத் தாக்கினார். உறுப்பினர் தாமோதரனைப் பதவியிலிருந்து நீக்கும்படி தமிழக சமூக நலத்துறை செயலாளர் மற்றும் சமூகப் பாதுகாப்பு இயக்குனரக ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளனர். தாமோதரன் என்ற உறு[ப்பினர், உள்ளே இருந்து கொண்டு, இத்தனையும் செய்து வருவதே திகைப்பாக இருக்கிறது.

பிப்ரவரி 2021க்குத் தள்ளி வைக்கப் பட்ட வழக்கு: இம்மனு, நீதிபதி, புஷ்பா சத்தியநாராயணா முன் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்கும்படி, சமூக நலத்துறை மற்றும் சமூக பாதுகாப்பு இயக்குனரகத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை, 2021, பிப்., 2ம் தேதிக்கு, நீதிபதி தள்ளி வைத்தார். இப்பொழுது வந்துள்ள செய்திகளிலிருந்து இவ்வாளவு தான் தெரிய வந்துள்ளது. நாளிதழ்கள், மேலும் விவரங்கள் கொடுக்குமா, கடைசி வரையில் என்னவாயிற்று, என்று தெரிவிப்பார்களா அல்லது, மேற்குறிப்பிட்ட வழக்குகளைப் போல, மறைத்து விடுவார்களா என்று தெரியவில்லை.

கடந்த இரு ஆண்டுகளில் 1,345 ஆதரவற்ற குழந்தைகள் கண்டறியப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றனர்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளில் 1,345 ஆதரவற்ற குழந்தைகள் கண்டறியப்பட்டு அவா்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக மாவட்டக் குழந்தைகள் நலக் குழுமத்தின் தலைவா் என்.ராமச்சந்திரன் வியாழக்கிழமை தெரிவித்தார். இது குறித்து அவா் மேலும் கூறியது: “காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியாா் மற்றும் அரசு சாா்பில் 120 குழந்தைகள் காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. இக்காப்பகங்களில் பராமரிக்கப்பட்டு வந்த 817 குழந்தைகள் 18 வயதைக் கடந்த பிறகு அவா்களது பெற்றோர்கள், உறவினா்கள் அல்லது காப்பாளா்களிடம் உறுதிமொழியின் பேரில் ஒப்படைக்கப்பட்டு வருகின்றனா். ஆதரவற்ற குழந்தைகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகள் என பலரையும் கண்டறிந்து கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் 1,345 குழந்தைகள் காப்பகங்களில் சோ்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனா். தெருக்களில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 5 பெண் குழந்தைகள் பள்ளியில் சோ்க்கப்பட்டு படித்து வருகின்றனா். காணாமல் போனதாக தெரிய வந்த 15 குழந்தைகள் கண்டு பிடிக்கப்பட்டு அவா்களது பெற்றோா்களிடமும், காப்பாளா்களிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளனா். 8 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் பா.பொன்னையா தலைமையில் நடந்த மீளாய்வுக் கூட்டத்தில் இவ்விவரங்களைத் தெரிவித்திருக்கிறோம்”.

டிசம்பர் 2010ல் குழந்தைகள் பாதுகாப்பு, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி என்று விழிப்புணா்வு முகாம்களை நடத்தியது[12]: குழந்தைகள் நலக் குழுமத்தின் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி என விழிப்புணா்வு முகாம்களை நடத்தி வருவதாகவும் அவா் தெரிவித்தார். குழந்தைகள் நலக்குழு உறுப்பினா்கள் எஸ்.சக்திவேல், சா.நிர்மலா, குளோரி ஆனி, கே.தாமோதரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனா்[13]. இதில் தாமோதரனும் இருப்பது நோக்கத் தக்கது. இவ்வாறு ஒன்றாக வேலை செய்த குளோரி ஆனி தான், இப்பொழுது வழக்குத் தொடுத்துள்ள மூவரில் ஒருவர் என்று குறிப்பிடத் தக்கது. அதனால், ஒருவேளை, எல்லைகளை மீறி, தாமோதரன் செயல்பட்டிருக்கக் கூடும் என்று தெரிகிறது. ஒரு வருடத்தில், அத்தகைய பாலியல் தொந்தரவுகளை என்ன, எப்படி, ஏன் செய்தார் என்ற விவரங்கள் தெரியவில்லை. ஊடகங்களிலும் வரவில்லை போலும். செங்கல்பட்டு குழந்தைகள் நலக்குழுவில் இருப்பவர்கள் எல்லோருமே, ஒருமாதிரியாக நடந்து கொள்வதும் விசித்திரமாக உள்ளது.

© வேதபிரகாஷ்

19-12-2020 / 25-12-2020


[1] Govt Children Home for Boys, Taluk Office Compound, Chengalpettu, Kancheepuram  District,  Tamil Nadu – 603002. Phone – 27424458.

[2] IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS DATED : 28.04.2018, CORAM, THE HONOURABLE MR.JUSTICE T.RAJA, W.P.No.10155 of 2018

Child Welfare Committee,

represented by its

Chairperson and Members, Govt.Children Home for Boys, GST Road, Chengalpattu 603 002.

Kancheepuram District.                                                                                                                   …               Petitioner

vs-

1.The Principal Secretary,

   Health and Family Welfare Department,    Secretariat, Chennai 600 009.

2.The District Collector,    Collectorate Campus, Kancheepuram,    Kancheepuram District.

3.The Dean    Chengalpet Medical College Hosptial,    Chengalpet,    Kancheepuram District.

4.The HOD ,    Department of Obstetrics and Gynecology, Chengalpattu Medical College and Hospital,    Chengalpattu.

5.The Inspector of Police,    Uthiramerur Police Station,    Uthiramerur, Kancheepuram District.                                                                                                     …                Respondents

[3] https://indiankanoon.org/doc/2585106/

[4] India Today, Rape, abuse, torture: Why Tamil Nadu’s care homes for children are more like ‘scare’ homes, July 29, 2016, UPDATED: October 10, 2016 13:37 IST.

[5] https://www.indiatoday.in/india/story/tamil-nadu-care-homes-for-children-are-more-like-scare-homes-332042-2016-07-29

[6] தினகரன், செங்கல்பட்டு குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் தாமோதரனை பதவி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு, 2020-12-19@ 15:04:40.

[7] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=640175

[8] தினமலர், குழந்தைகள் நலக் குழு உறுப்பினரை நீக்க வழக்கு, Added : டிச 19, 2020 22:59.

[9]  https://www.dinamalar.com/news_detail.asp?id=2674337

[10] தமிழ்.இந்து,  பயிரை மேயும் வேலி; குழந்தைகள் நலக்குழு உறுப்பினரின் தவறான நடத்தை: நடவடிக்கை கோரிய வழக்கில் அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ், செய்திப்பிரிவு, Published : 19 Dec 2020 02:44 PM Last Updated : 19 Dec 2020 02:44 PM.

[11] https://www.hindutamil.in/news/tamilnadu/613420-crop-grazing-fence-misconduct-of-a-child-welfare-committee-member-high-court-notice-to-the-state-in-a-case-seeking-action.html

[12] தினமணி, இரு ஆண்டுகளில் 1,345 குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைப்பு, By DIN | Published on : 19th December 2019 11:32 PM.

[13]https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/dec/19/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1345-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3310408.html

வட்டிக்கு பணம் கொடுத்து, கற்பை சூரையாடிய கொடூரன் தண்டனை பெற்றதால் பெண்கள் பாதிப்பு நிவர்த்தியாகி விடுமா!

ஜனவரி 20, 2017

வட்டிக்கு பணம் கொடுத்து, கற்பை சூரையாடிய கொடூரன் தண்டனை பெற்றதால் பெண்கள் பாதிப்பு நிவர்த்தியாகி விடுமா!

dharmapuri-financier-jailed-19-01-2017-dailt-thanthi

சிவராஜின் செயல்திட்டமுறையும், காம-கொக்கோகமும், வீடியோ-சிடி விவகாரங்களும்: சிவராஜ் மீதான புகாரை பலப்படுத்த அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும், புகார் கொடுக்கும் பெண்களின் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் சிவராஜால் பாதிக்கப்பட்ட மூன்று பெண்கள்  2014 அக்டோபர் 6ஆம் தேதி பாலக்கோடு போலீசில் புகார் கொடுத்துள்ளனர். அதில், “கடன் கொடுத்த நிதி நிறுவன அதிபர் சிவராஜ் எங்களின் வறுமை நிலையை சாதகமாக பயன்படுத்தி உல்லாசத்திற்கு அழைத்தார். வர மறுத்தபோது அதிக வட்டி தரவேண்டும் என்று கூறி மிரட்டினார். இதனால் பயந்து போன நாங்கள் அவரது பண்ணை வீட்டிற்கு சென்றோம். அங்கு சிவராஜ் எங்களை மிரட்டி உல்லாசமாக இருந்தார். இதனையடுத்து அவர் தனது செல்போனில் எடுத்த ஆபாச காட்சிகளை எங்களின் குடும்பத்தினருக்கு காட்டி விடுவதாக மிரட்டி, பலமுறை பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்று கற்பழித்தார்,” என்று கூறியுள்ளனர். தங்களை போல் இன்னும் ஏராளமான பெண்கள் சிவராஜால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

dharmapuri-financier-jailed-19-01-2017-vedaprakashபெண்மையை சுற்றியுள்ள சமுதாய-சட்டப் பிரச்சினைகள்: இதனையடுத்து புகார் கொடுத்த பெண்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், விசாரணை முழுவதையும் கேமராவில் பதிவு செய்துள்ளனர். புகாரின்பேரில் போலீஸார் நடத்திய புலன் விசாரணையில் சிவராஜ், அப் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் உள்பட 26-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. பெண்களுக்கு முறைப்படி சட்டரீதியில் பாதுகாப்பு கொடுத்தல் போன்ற விவரங்கள்தெரியவில்லை. தற்போது போலீசார் நிதி நிறுவன அதிபர் சிவராஜ் மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், சிவராஜால் பாதிக்கப்பட்ட பெண்கள் அவர் மீது தைரியமாக புகார் கொடுக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். மூன்று பெண்களின் புகாரையடுத்து இந்த வழக்கு சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனால் சிவராஜை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்குள், இவ்வழக்கு முறையாக நடத்தப்படுமா என்ற சதேகம் வந்ததால், சிலர், பெரிய அளவில் விசாரணை தேவை என்று நினைத்தனர். இதை அரசியலாக்கும் விதத்தில், உள்ளூர் எம்.எல்.ஏ, தில்லி பாபு [சிபிஎம்] மற்றும் மகில இந்திய பெண்கள் இயக்கமும் சேர்ந்து ஆர்பாட்டம் நடத்தி, சிபி-சி.ஐ.டி விசாரணை தேவை என்று வற்புறுத்தினர்[1]. சிவராஜின் சொத்துகளும் பறிமுதல் செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்[2].

dharmapuri-financier-jailed-19-01-2017-sexபாதகர்கள் தண்டனை பெற்ற விவரங்கள்: இந்த வழக்கு தருமபுரி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞர் ஆர். உமா மகேஸ்வரி ஆஜரானார். இந்த வழக்கில் மாவட்ட மகளிர் நீதிபதி எம். மீரா சுமதி 8-01-2017 [புதன்கிழமை] தீர்ப்பு வழங்கினார். முதல் குற்றவாளியான வட்டிக் கடைக்காரர் சிவராஜுக்கு பாலியல் பலாத்கார சட்டப்பிரிவில் நான்கு ஆயுள் தண்டனைகள் மற்றும் ரூ. 4,000 அபராதம் விதிக்கப்பட்டது[3].  மேலும், 67ஏ தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவின் கீழ் 12 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 2 லட்சம் அபராதமும், 66இ தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவின் கீழ் 8 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 40 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது[4]. அபராதத் தொகை மொத்தம் ரூ. 2.44 லட்சம்[5]. இச்சம்பவத்தில் செல்லிடப்பேசியில் இருந்த விடியோக்கள் வெளியே உலவக் காரணமாக இருந்தவன் அதே பகுதியைச் சேர்ந்த செல்லிடப்பேசி பழுதுபார்க்கும் தொழில் செய்து வந்தவன் மா. முன்னா[6]. அவனுக்கு பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் மொத்தம் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 61 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது[7]. இரு குற்றவாளிகளின் கோரிக்கைகளை ஏற்று சிறைத் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கலாம் என்றும் நீதிபதி எம். மீரா சுமதி உத்தரவிட்டார்[8].

dharmapuri-financier-jailed-19-01-2017-video-1கற்பை சூரையாடிய கொடூரன் தண்டனை பெற்றதால் பெண்கள் பாதிப்பு நிவர்த்தியாகி விடுமா!: பாதகர்கள் தண்டனை பெற்றது சட்டப்படி நடந்துள்ளது என்றாலும், பெண்கள் பாதிப்பு சரிசெய்யமுடியாதது ஆகும். மனம் மற்றும் உடல் ரீதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கஷ்டங்களை, உபாதைகளை யார் சரிசெய்ய முடியும்? நடந்தது மாற்ற முடியும், சீர்செய்யமுடியும் என்ற நிலையாகாது.

  • ஒரு பெண் சீரழிந்தால், ஒரு குடும்பம் சீரழிகிறது;
  • ஒரு குடும்பம் சீரழிந்தால், ஒரு சமுதாயம் சீரழிகிறது;
  • ஒரு சமுதாயம் சீரழிந்தால், ஒரு தேசம் / நாடு சீரழிகிறது;

ஆகவே, குறிப்பிட்ட நாட்டின் மீது நடத்தப்படும் கலாச்சார தாக்குதல், இவ்வாறு பலநிலைகளில் பாதித்து, சீரழித்து வருவதை பொறுப்புள்ளவர்கள் மிக்க அக்கரையுடன் கவனிக்க வேண்டும். இன்றளவில், சினிமாநடிகைகளிடம் கற்பு, கலாச்சாரம், குடும்பம் முதலியவற்றைப் பற்றி கருத்து கேட்டு, விளம்பரம் செய்கிறார்கள். இதனால், அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவது போன்ற தோற்றத்தையும் ஏற்படுத்துகின்றார்கள். நிர்வாணமாக நடிப்பேன் என்று உரிமைகள் பேசி, அவ்வாறே தொழில் செய்யும் நடிகைகள் எப்படி முன்னுதாரணமாக இருக்க முடியும்?

© வேதபிரகாஷ்

20-01-2017

dharmapuri-financier-jailed-19-01-2017-video-2

[1] The Hindu, Plea for CB-CID probe , DHARMAPURI: OCTOBER 16, 2014 00:00 IST UPDATED: MAY 24, 2016 13:53 IST.

[2]The Communist Party of India (Marxist) staged a demonstration here at Palacode demanding CB-CID probe into the case of a local financier who was involved in sexual harassment of women. The financier Sivaraj was arrested last week [17-05-2016] on the charges of sexually harassing women. The demonstration was led by CPI (M) MLA Dilli Babu. Members of the All India Democratic Women’s Association also took part in the demonstration. The CPI (M) also demanded confiscation of the property belonging to Sivaraj.

 http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/plea-for-cbcid-probe/article6504755.ece

[3] தினமணி, பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து விடியோ எடுத்த வழக்கில் வட்டிக் கடைக்காரருக்கு 4 ஆயுள் தண்டனை, By தருமபுரி,  |   Published on : 19th January 2017 08:44 AM.

[4] http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2017/jan/19/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-4-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88-2634850.html

[5] தினகரன், பெண்களை ஆபாச வீடியோ எடுத்து பலாத்காரம், பாலக்கோடு பைனான்சியருக்கு 4 ஆயுள் தண்டனை : தர்மபுரி கோர்ட் தீர்ப்பு, 2017-01-19@ 01:05:08

[6] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=273446

[7] The Hindu, Financier gets four life sentences for sexual abuse, DHARMAPURI: JANUARY 19, 2017 00:00 IST; UPDATED: JANUARY 19, 2017 04:00 IST.

[8] The District Mahila Court here on Wednesday [18-01-2017] convicted financier M. Sivaraj (44) of Palacode to four life sentences and imposed a fine of Rs. 2.44 lakh on him for sexually abusing women. The life sentences are to run concurrently. According to prosecution, Sivaraj sexually abused women who had availed themselves of loans from his firm, but could not repay the dues in time. He videographed the act on his mobile phone and used this to threaten them into submitting to sexual abuse again. The entire scandal came to light when Sivaraj gave his mobile phone to a local service centre to set right a snag. Munna, the owner of the service centre, after witnessing the obscene videos spread them in social media. On a complaint preferred by Vijana, village administrative officer, the Palacode Police arrested Sivaraj and M. Munna in October 2014 and filed a case in the District Mahila Court. The Mahila Court Judge M. Meera Sumathi found both the accused guilty of the charges. The Judge convicted Sivaraj to four life sentences and a fine of Rs. 4,000, eight years imprisonment and a fine of Rs. 40,000 under Section 66-E of the Information Technology Act 2000 (violation of privacy) and another 12 years imprisonment with a fine of Rs. 2 lakh under Section 67-A (publishing or transmitting obscene material in electronic form). The Judge sentenced Munna to three years imprisonment and a fine of Rs. 50,000 under Section 67-A of IT Act, two years and a fine of Rs. 10,000 under 66-B of IT Act and one year imprisonment and a fine of Rs. 1,000 under Section 292 IPC (publicly exhibiting or circulating obscene material). Munna’s prison terms will run concurrently.

http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/Financier-gets-four-life-sentences-for-sexual-abuse/article17057897.ece

எரிக் மார்டினின் காமலீலைகள்: ஒன்பது இளம்பெண்களை கற்பழித்தான்!

நவம்பர் 18, 2010

எரிக் மார்டினின் காமலீலைகள்: ஒன்பது இளம்பெண்களை கற்பழித்தான்!

பிரெஞ்சு நாட்டு சல்லாபம், கொக்கோகம்: பிரெஞ்சு நாட்டுக் காரர்கள் செக்ஸ் விஷயத்தில் கொஞ்சம் வீக்குதான்! பிரபல எழுத்தாளரான அலெக்ஸண்டர் டூமாஸ் என்பவர் எப்பொழுதும் ஐந்தாறு பெண்களுடன் சல்லாபித்தவண்ணம் தான் இருப்பார் என்று தெரிகிறது. சென்னையில் ஈகா தியேட்டரில் “ஸ்பானிஸ் ஃபளை” என்ற படம் 1978ல் திரையிடப்பட்டது. அந்த ஸ்பானிஸ் பூச்சிற்கு ஒரு சக்தி இருக்கிறது. அதனை சாப்பிட்டால் அசாத்யமான செக்ஸ் வந்துவிடுமாம். அவ்வளவுதான் கண்ணில் படும் பெண்களுடன் உடனடியாக உடலுறவு கொள்ள ஆரம்பித்து விடுவார்களாம். ஒருவேளை, எரிக் மார்ட்டினும் அத்தகைய சக்தியைப் பெற்றானா என்று தெரியவில்லை. எரிக் மார்டின் கல்யாணம் செய்து கொண்டான், ஆனால், வாழ்க்கை கசந்தது. விவாக ரத்தானது.

இல்வாழ்க்கை கசந்ததால், அனாதை இல்லம், கொக்கோகம் பிரான்ஸ் நாட்டில் புரூசல்ஸ் பகுதியைச் சேர்ந்த எரிக் மார்டின் (54) புரூசல்ஸ் பகுதியில் ஆதரவற்ற சிறுவர்-சிறுமிகள் காப்பகம் நடத்தி வந்தான். அங்கு சுமார் 50க்கும் மேற்பட்ட சிறுவர்-சிறுமிகள் தங்கி இருந்தனர். அதாவது இந்த ஃபெடோஃபைல்கள் எல்லோருமே ஒரே மாதிரித்தான் இருக்கிறார்கள். ஒன்று தேவையானதைத் தேடி செல்வது அல்லது இப்படி காப்பகம் வைத்து நடத்துவது, வளர்ப்பது, அனுபவிப்பது.  அங்கு இருந்த 15 வயது நிரம்பிய இளம் சிறுமிகளைப் பார்த்தப்போது காம இச்சைக் கொண்டான்.  தாங்கமுடியாமல், இளம் மொட்டுகளை தொட்டே விட்டான். ஒன்று, இரண்டு என்று ஒன்பது சிறுமிகளை ஆசைதீரக் கற்பழித்தான். இதனால் புகார் கொடுக்கப்பட்டு, வழக்கு தொடர்ந்து, நீதிமன்|ற தீர்ப்பில் 15 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆனால், முன்னமே குறிப்பிட்டப்படி[1], சிறையிலிருந்து தப்பி, சென்னைக்கு வந்து விட்டான்.

சிங்காரச் சென்னையில் மறைந்து வாழ்தல்: சென்னை, தமிழகம் இப்படி செக்ஸ் கூடாரமாகி வருவது வேடிக்கையாக இருக்கிறது. தமிழ் மக்கள் என்றுமே விருந்தோம்புவதில் வல்லவர்கள். வெள்ளைத் தோலைக் கண்டால் கேட்கவே வேண்டாம், சரண்டர் தான். அதிலும் அதிகமாக காசு வரும் என்றல், கேட்கவே வேண்டாம். இவ்வாறுதான், எரிக் மார்டின் எண்.14, நடேசன் தெரு மாதவரத்தில் வீடு வாடகைக்கு எடுத்தான். அந்த பிரெஞ்சுக்காரருடன் ஒத்துப்போக அண்டைவீட்டுக்காரர்களுக்கு நிறையவே பிரச்சினைகள் இருந்தன[2]. சாமியார் மாதிரி தனித்த வாழ்க்கை வாழ்ந்துவந்ததாக கூறுகின்றனர். “அந்த இடத்தையே எங்களுக்குப் பிடிக்கவில்லை. அந்த ஆளுக்கு ஆங்கிலம் கூட அவ்வளவாகத் தெரியவில்லை, பிரெஞ்சு மொழியிலேயே பேசிவந்தான்”, என்று ஒரு பெண்மணி கூறினார். இன்னொரு காரணம், “அவன் என்றுமே நேருக்கு நேராக கண்களைப் பார்த்து எங்களுடன் பேசியது கிடையாது. கிருஸ்துமஸ் அன்று தான், “ஹலோ” என்று கூறுவான்”, மற்றபடி யாருடன் பேசமாட்டான்.. எண்.14, நடேசன் தெருவில் இருந்த அவனுக்கு செடி-கொடிகள் மீட்து மட்டும் அலாதியான காதலாம்.

வீட்டைச் சுற்றி செடி-கொடிகளை வளர்த்து மர்ம வீட்டில் வாழ்ந்த காமுகன்: வாடகைக்கு எடுத்ததும் வீட்டைச் சுற்றி பல செடி-கொடிகளை வளர்க்க ஆரம்பித்தான். அவன் தங்கியிருந்த வீடு முழுவதும் செடி-கொடிகள் மண்டி கிடந்தன. அண்டை வீட்டார் கண்டபடி வளர்ந்திருந்த அந்த செடி-கொடிகளைப் பற்றி பலதடவை புகார் செய்துள்ளனர்.  ஆனால், அவற்றை வெட்ட அவன் அனுமதிப்பது இல்லை. வேலைக்காரப் பையனுக்கு சொன்னாலும், அவனை செய்ய விடுவதில்லை. “அவங்க கைகளை வெட்டிக் கொள்ளுங்கள் என்றால் அவர்கள் என்ன நினைப்பார்கள்”, என்று அந்த பையனிடம் சொல்வானாம். பானைகளில்பலவித செடிகள், தூண்கள், சுவர்கள் கூட கொடிகளால் பின்னப்பட்ட நிலையில் இருந்தன. வரண்டா மட்டுமல்லாது, மேலும், மாடியிலும் கூட கொடிகளை வளர்த்து படரவிட்டிருந்தான்.

மாடிவீட்டு கொட்டாயில் அயல்நாட்டவர்களுக்கு விருந்து; மாடியில் ஒரு ஓலைக்கொட்டாய் போட்டிருந்தான். அதில்தான் தன்னுடைய அயல்நாட்டு விருந்தாளிகளை உட்காரவைத்து காபி கொடுப்பான். அயல்நாட்டு விருந்தாளிகள் அவன் வீட்டிற்கு, குறிப்பாக கிருஸ்துமஸ் சமயத்தில் அதிகமாகவே வருவார்கள். அதென்ன கிருஸ்துமஸ் கூட்டம்? ஒருவேளை டான் பரவுன் எழுதியுள்ளது போல யாதாவது நடக்குமோ என்னமோ? மற்றபடி, அந்த வீட்டில் யாருமே இல்லாது போல இருக்கும். விளக்குகள் இப்பொழுதும் எரிந்து கொண்டே இருக்கும். அவை எப்பொழுதாவது தான் அணைக்கப்படும் அல்லது அணைக்கப்பட்டதே கிடையாது எனலாம்.

வெளியே சென்று வேலை செய்தல்; மற்றவர்களைப்போல இல்லாமல், இந்த காமுகன், காலை 11 மணிக்கு வெளியில் செல்வான், பிறகு மாலை தான் வருவான். அடிக்கடி தான் வைத்திருக்கும் பிரிமியர் காரில் எங்கோ சென்று வருவான். அயல்நாட்டு பயணிகளுக்கு, குறிப்பாக பிரெஞ்சுநாட்டவருக்கு கெயிடாகவும், பிரெஞ்சு மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்தும் சம்பாதித்து வந்தான். அவன் ஒரு வேலைக்கரப் பையனையும், பெண்ணையும் வைத்திருந்தான்[3]. அதைத்தவிர அடையாளம் இல்லாத / பெயர் சொல்லப்படாத ஒரு அண்டைவீட்டுக்காரரும் உதவி வந்ததாகத் தெரிகிறது. வீட்டின் சாவிகளை தானே வைத்துக் கொள்வான். கேட்டின் சாவிகளை மட்டும் பணிப்பெண், வேலைக்காரப் பையனிடம் தந்துவந்தான். குழந்தைகளுடன் பேசியதையோ, நட்பாக இருப்பதையோ அண்டையார் என்றும் பார்த்ததில்லை[4].

வேதபிரகாஷ்

© 18-11-2010


[1] வேதபிரகாஷ், சிங்கார செக்ஸ் சென்னையில் இன்னுமொரு காமக்கொடூர செக்ஸ் வெறியன் கைது: மாதவரத்தில் மறைந்து வாழ்ந்த எரிக் மார்டின்!, https://socialterrorism.wordpress.com/2010/11/17/chennai-becomes-haven-for-fugitives-eric-martin/

[3] Cerise Negulici, Child sex abuser of France apprehended in Chennai,  Wed, 11/17/2010 – 05:28

http://frenchtribune.com/teneur/101981-child-sex-abuser-france-apprehended-chennai

கற்பழிப்பு பாதிரி, முல்லா, சாமி வரிசையில் ஒரு அமைச்சர்!

மே 3, 2010

கற்பழிப்பு பாதிரி, முல்லா, சாமி வரிசையில் ஒரு அமைச்சர்!

பாலியல் புகாரால் கர்நாடக உணவு மந்திரி ராஜினாமா: சர்ச்சையை தவிர்க்க முதல்வர் அதிரடி முடிவு
மே 03,2010,00:00  IST

http://www.dinamalar.com/Political_detail.asp?news_id=18098

Latest indian and world political news information

ஹாலப்பாவின் “ஹால்”-நிலை மோசம்தான்: பெங்களூரு:நண்பரின் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு வெளியானதையடுத்து, கர்நாடகா உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சர் ஹர்தாலு ஹாலப்பா, தன் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்ததாக ஊராட்சித் தேர்தலை கட்சி சந்திக்க வேண்டியிருப்பதால், மேலும் சர்ச்சை வேண்டாம் என்ற கருத்தில் அமைச்சர் ராஜினாமா முடிவு வேகமாக எடுக்கப்பட்டது.கர்நாடகா உணவு மற்றும் பொது வினியோகத் துறை அமைச்சராக இருந்தவர் ஹாலப்பா. முதல்வர் எடியூரப்பாவின் நெருங்கிய ஆதரவாளர். முதல்வரின் சொந்த மாவட்டமான ஷிமோகாவை சேர்ந்தவர். இவர், பாலியல் புகாரில் சிக்கியதாக, கன்னட நாளிதழ் ஒன்றில் முதல் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்த செய்தியை படித்தவுடன் ஹாலப்பா, தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, முதல்வர் எடியூரப்பா அலுவலகத்திற்கு தகவலை அனுப்பி வைத்துள்ளார்.

ஹாலப்பாவின் நெஞ்சுவலி நாடகம், கற்பழிப்பு, பத்திரிகையில் வெளியான தகவல்: ஹாலப்பா அமைச்சராக இருந்த போது, ஷிமோகாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். தனது பயணத்தை முடித்துக் கொண்டு, நண்பரின் வீட்டிற்கு சென்றார். அங்கு, சாப்பிட்டு விட்டு அங்கேயே தங்கியிருந்தார். அப்போது தனக்கு நெஞ்சு வலிப்பதாகவும், மாத்திரை வாங்கி வருமாறும் தனது நண்பரிடம் கூறினார். நண்பரும் மாத்திரைகளை வாங்கி விட்டு வீட்டுக்கு வந்தாராம். அப்போது நண்பரின் மனைவி, ஆடைகள் கலைந்த நிலையில் அழுது கொண்டிருந்தார். இச்சம்பவம் நடந்தவுடன் நண்பரின் மனைவி, தற்கொலைக்கும் முயற்சித்துள்ளார். இந்த பாலியல் பலாத்கார விவகாரம் வெளிவந்தால், தனது பதவிக்கு ஆபத்து என்பதை அறிந்த அமைச்சர் ஹாலப்பா, இந்த விவகாரத்தை வெளியில் கூறாத வகையில் நண்பர் குடும்பத்தை மிரட்டி வைத்திருந்தார். இச்சம்பவம், கடந்த நவம்பரில் நடந்துள்ளது. இவ்வாறு பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.ஹாலப்பா விவகாரம், கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தலைவர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தினரும் ஆவேச அறிக்கை, பேட்டி வெளியிட்டுள்ளனர்.

வழக்கம் போல மறுப்பு, பேட்டி, ராஜினாமா: ராஜினாமாவுக்கு பின், நிருபர்களிடம் ஹாலப்பா கூறுகையில், ”என் மீதான குற்றச்சாட் டுகள் ஆதாரமற்றவை, ஜோடிக்கப்பட்டவை. கட்சிக்கும், அரசுக்கும் எவ்வித சங்கடமும் வரக்கூடாது என்பதற்காக, அமைச்சர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்தேன். முதல்வர் வெளியூரில் இருப்பதால் அவருடனும், கட்சித் தலைவர் ஈஸ்வரப்பாவுடனும் தொலைபேசியில் பேசி, ராஜினாமா முடிவு குறித்து தெரிவித்தேன். முதல்வர் எடியூரப்பா பெங்களூரு வந்தவுடன், அவரை சந்திப்பேன். இந்த விவகாரம் அரசியல் உள்நோக்கம் கொண்டது. பல மாதங் களாக திட்டமிட்டு, சிருஷ்டிக்கப் பட்டுள் ளது. விசாரணைக்கு பின்னர், உண்மை வெளிவரும்.  இதன் பின்னணியில், பாரதிய ஜனதாவைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ.,க்கள், எதிர்க்கட்சி பிரமுகர்களுக்கும் தொடர்பு உள்ளது. யார், யார் உள்ளனர் என்பதை தக்க நேரத்தில் தெரிவிப்பேன். பொது வாழ்க்கையில், ஆரம்பம் முதலே, நேர்மை, நெறிமுறைகளை பின்பற்றி வந்துள்ளேன். குற்றச்சாட்டு குறித்து, பத்திரிகையில் செய்தியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன். கிராம ஊராட்சி தேர்தல் நடக்கும் சூழ்நிலையில், அரசுக்கு சிக்கல் ஏற்படுத்த என்னை பலிகடாவாக்க முயற்சி நடக்கிறது. ராஜினாமா செய்துள்ளதால் எனக்கு எவ்வித மன வருத்தமும் இல்லை. அரசியலில் தொடர எனக்கு வயது இன்னமும் இருக்கிறது. புகழுக்கு களங்கம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே, ராஜினாமா செய்தேன். ராஜினாமா செய்யும்படி யாரும் வற்புறுத்தவில்லை. எனது சொந்த முடிவு. இதன் பின்னணியில், பா.ஜ., எம்.எல்.ஏ., ஒருவர் உள்ளார். நான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி கெடு விதித்திருந்தார். இவ்விஷயங்கள் குறித்தும் முதல்வர், கட்சித் தலைவருடன் ஆலோசிப்பேன்.இவ்வாறு ஹாலப்பா கூறினார்.

எதிர்கட்சிகள் சூழ்ச்சியா, ஹாலப்பாவின் வீழ்ச்சியா: ஹாலப்பாவின் ராஜினாமா கடிதத்தை முதல்வர் எடியூரப்பா ஏற்றுக்கொண்டு, கவர்னருக்கு அனுப்பி வைத்தார். முதல்வர் எடியூரப்பா கூறுகையில், ”ஹாலப்பா விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் நடத்துகின்றன. பாரதிய ஜனதாவுக்கு எதிராக, எதிர்க்கட்சியினர் சதி செய்துள்ளனர். ஹாலப்பாவின் ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,” என்றார்.அடுத்ததாக ஊராட்சி தேர்தல் வரும் நேரத்தில் சர்ச்சை ஏற்படுவதைத் தடுக்க முதல்வர் எடியூரப்பா, அமைச்சரின் ராஜினாமாவை உடனடியாக ஏற்றார். ஹாலப்பா மீதான புகாரினால், முதல்வர் எடியூரப்பா ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, அவரது ரேஸ் கோர்ஸ் ரோடு இல்லத்தின் முன், பெங்களூரு நகர இளைஞர் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்; 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

மொபைலில் படம் பிடித்தார் நண்பர்: அமைச்சர் ஹாலப்பாவின் நண்பர், ஷிமோகா வினோபா நகரில் வசிக்கிறார். பைனான்சியர் தொழில் செய்து வருகிறார். வினோபா நகர் வீட்டிலேயே இச்சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.அமைச்சர் ஹாலப்பா சம்பந்தமான விவகாரங்களை, அவரது நண்பரே மொபைலில் படம் பிடித்ததாகவும், 40 வினாடிகள் இந்த படம் ஓடுவதாகவும், ஹாலப்பா, தனது நண்பர் மனைவியின் காலில் விழுவதும், அதன் பின், தனது பேன்டை போடுவதாகவும், அந்த துணிகளுடன் ஹாலப்பா இருப்பது போன்றும் காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளன. இந்த துணிகள் தற்போது, ‘டி.என்.ஏ.,’ டெஸ்டுக்கு அனுப்பப்படவுள்ளதாக கூறப்படுகிறது.இச்சம்பவம் நவம்பர் 27ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கு நடந்துள்ளது. மொபைலில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் விரைவில் வெளியாகுமா என்ற பரபரப்பும் மக்களிடம் உருவாகியுள்ளது. இச்சம்பவத்தை அடுத்து, ஹாலப்பாவின் நண்பருக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது.

பாலியல் புகாரில் சிக்கிய அமைச்சர் மீது வழக்குப்பதிவு: டி.ஜி.பி.,யை சந்தித்து பாதிக்கப்பட்ட பெண் புகார்
மே 03,2010,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=18288

கணவரே எடுத்த வீடியோ காட்சிகள்: பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஹாலப்பா தொடர்பாக, மொபைலில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் ‘டிவி’யில் ஒளிபரப்பப்பட்டன. ஹாலப்பா மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.கர்நாடக அமைச்சர் ஹாலப்பா, தன் நீண்டகால நண்பர் வெங்கடேச மூர்த்தியின் மனைவி சந்திராவதியை கடந்த நவம்பர் 26ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மனைவி கற்பழிக்கப்பட்டதை அறிந்ததும், வெங்கடேச மூர்த்தி ஆத்திரத்துடன் மொபைல் மூலம் படம் பிடித்துள்ளார். இந்த விவகாரம் நேற்று கன்னட நாளிதழில் வெளியானது. இதனால், தனது அமைச்சர் பதவியை ஹாலப்பா ராஜினாமா செய்தார்.வெங்கடேச மூர்த்தி மொபைலில் படம் பிடித்த காட்சிகளும் நேற்றிரவு’ டிவி’க்களில் ஒளிபரப்பாகின. அந்த காட்சியில், சந்திராவதி அலங்கோல நிலையில் காணப்படுகிறார். அறையிலிருந்த ஹாலப்பாவிடம் தகாத வார்த்தைகளால் சண்டை போடுகிறார்.

ஹாலப்பாவின் ஆட்கள் மிரட்டுதல்: அப்போது, ஹாலப்பா கறுப்புச் சட்டையில் காணப்படுகிறார்.சந்திராவதி பெண்கள் அணியும் அரைக்கை சட்டையும், இடுப்புக்கு கீழ் கவுனும் அணிந்துள்ளார். இந்த காட்சியில் ஹாலப்பாவின் முகம் தெரியவில்லை. ஒரு கட்டத்தில், என்னை அடிக்கிறாயா என்று சந்திராவதி, கோபமாக கூறுவது மட்டும் கேட்கிறது.

இந்த சம்பவத்திற்குப் பின், அமைச்சர் ஹாலப்பாவின் அடியாட்கள், வெங்கடேச மூர்த்தியின் வீட்டிற்கு வந்து அவரையும், அவரது குடும்பத்தினரையும் அடிக்கடி மிரட்டி வந்துள்ளனர். கோபமடைந்த வெங்கடேச மூர்த்தி, ஹாலப்பாவிற்கு போன் செய்து, ‘ஷிமோகாவில் நான் மரியாதையாக வாழ்ந்து வந்தேன். நான் உண்டு, எனது மனைவி, மக்கள் உண்டு என்று வாழ்ந்து வந்தேன். எனது குடும்பத்தை பாழடித்து விட்டாய். எனது மனைவியை கற்பழித்தது மட்டுமின்றி, எனது பிள்ளைகளையும் இம்சை படுத்துகிறாய். உன்னை சும்மா விடமாட்டேன். எனது மனைவியை கற்பழித்ததற்கான வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. அதை வெளியிட்டு, உன்னை ஒரு வழி செய்வேன்’ என்றார்.அதற்கு ஹாலப்பா, ‘உன்னை யாராவது மிரட்டினால், அவர்கள் வந்திருந்த கார் எண்ணை பதிவு செய்து, போலீசில் புகார் கொடுக்க வேண்டியது தானே. என்னிடம் ஏன் சொல்கிறாய். எனக்கும், இந்த சம்பவத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை’ என, கூறியுள்ளார்.

நண்பர்களிடையே மோதல்: அப்போது வெங்கடேச மூர்த்தி கூறுகையில், ‘தப்பு செய்தவன் நீ. உன் மீது தான் புகார் செய்ய வேண்டும். எனது பிள்ளைகளை கொடுமைப்படுத்துகிறாய். அவர்கள் மன வேதனையில் உள்ளனர்’ என்றார்.நடந்த சம்பவங்கள் குறித்து, கர்நாடகா போலீஸ் டி.ஜி.பி., அஜய்குமார் சிங்கை, வெங்கடேச மூர்த்தியும், அவரது மனைவி சந்திராவதியும் நேரில் சந்தித்து கூறினர். அப்போது, ‘அமைச்சராக இருந்த ஹாலப்பா தன்னை கற்பழித்து விட்டதாக’ சந்திராவதி அழுது கொண்டே புகார் கூறினார். ‘தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று டி.ஜி.பி., அஜய்குமார் சிங் தெரிவித்தார்.இதையடுத்து, ஹைகிரவுண்ட் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, முன்னாள் அமைச்சர் ஹாலப்பா மீது இருவரும் புகார் செய்தனர். அவர் மீது 376வது பிரிவின் கீழ் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்த நேரமும் ஹாலப்பா கைது செய்யப்படலாம்.

ஹாலப்பாவின் மீது பெங்களூரில் புகார்: இதை எதிர்பார்த்த ஹாலப்பா, தனது வக்கீல்களுடன் கலந்து ஆலோசித்து, முன்ஜாமீன் பெற திட்டமிட்டுள்ளார்.வெங்கடேச மூர்த்தியும், அவரது மனைவி சந்திராவதியும், ராஜ் பவனில் கவர்னர் பரத்வாஜை சந்திக்க சென்றனர். அங்கு அவர் இல்லாததால், ராஜ்பவன் அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்தனர். கவர்னரை சந்திப்பதற்காக பெங்களூரில் தங்கியுள்ளனர்.இச்சம்பவம் குறித்து வெங்கடேச மூர்த்தி கூறுகையில், ”ஹாலப்பா மீது ஷிமோகா போலீசாரிடம் புகார் செய்தால், அவர்கள் புகாரை ஏற்க மறுக்கின்றனர். எனவே தான் பெங்களூரு வந்து, ஹைகிரவுண்ட் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளோம். எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த வீடியோ காட்சியை நானே தான் படம் பிடித்தேன்,” என்றார்.

சந்திராவதி கூறுவது: சந்திராவதி கூறுகையில், ”கடந்த நவம்பர் 26ம் தேதி, 2009 எனது வீட்டிற்கு சாப்பிட வருகிறேன் என்று ஹாலப்பா கூறினார். எனது கணவரும் சரி என்று கூறினார். அன்று இரவில் சாப்பிட்டு விட்டு, எனக்கு தூக்கம் வருகிறது என்று கூறினார். மாடி அறையில் அவர் தூங்குவதற்கு சென்றார். எனக்கு உடல் நலம் சரியில்லை. எனவே, மாத்திரை வாங்கி வா, என்று எனது கணவரிடம் கூறினார். எனது கணவரும் மாத்திரை வாங்குவதற்காக சென்றார்.  கணவர் வெளியே சென்றவுடன், நான் படுத்திருக்கும் இடத்திற்கு வந்து, என்னிடம் பலாத்காரத்தில் ஈடுபட்டார். எனது கணவர், சந்தேகமடைந்து திரும்பி வந்தார். வரும் போதே, மொபைல் வீடியோவை ஆன் செய்தே வந்தார். ஹாலப்பா தவறாக நடக்க முயற்சித்ததை படம் பிடித்தார். நானும், எனது கணவரும் ஹாலப்பாவை செருப்பால் அடித்து விரட்டினோம். அதன் பிறகு அவர், அடிக்கடி எங்களை மிரட்டி வந்தார்,” என்றார்.

பங்காரப்பா தாக்கு: ஹாலப்பா மீது கற்பழிப்பு புகார் பதிவான பிறகு, பல புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இச்சம்பவம் வெளி வருவதற்கு மூல காரணம் முன்னாள் முதல்வர் பங்காரப்பா என்று, முன்னாள் அமைச்சர் ஹாலப்பா புகார் கூறியிருந்தார்.  இதற்கு பதிலளித்து கர்நாடகா முன்னாள் முதல்வர் பங்காரப்பா கூறுகையில், ”எனது மைத்துனர் நடவடிக்கை துவக்கத்திலிருந்தே தவறாக தான் இருந்தது. பெண்கள் விஷயத்தில் அவர் மிகவும் வீக்கானவர். என்னுடன் கட்சியில் இருந்த போது, அவர் மீது ஏராளமான புகார்கள் வந்தன. குறிப்பாக பெண்களுடன் அதிக தொடர்பு வைத்திருந்தவர் என்று கூறப்பட்டது.இந்த அளவிற்கு அவர் கீழ்தரமாக செயல்படுவார் என்று நினைக்க வில்லை. அரசியல் காரணமாக, அவர் என் மீது வீண் புகார் சுமத்தியுள்ளார்.