Posts Tagged ‘குழந்தைகள்’

இன்னுமொரு வில் ஹியூம்!

ஜனவரி 26, 2010

இன்னுமொரு வில் ஹியூம்!

காப்பகம் நடத்திய போதகர் ஓட்டம்

பதிவு செய்த நாள் 1/27/2010 12:43:07 AM: தினகரனில் இப்படியொரு புகைப்படம்! இதில் யார் ஷாஜி என்று தெரியவில்லை!

Swine Fluகளியக்காவிளை : குமரி மாவட்டத்தில் விதிகளை மீறி காப்பகம் நடத்தி வந்த கிறிஸ்தவ போதகர் தலைமறைவானார்.

“பெதெஸ்டா ஆசிர்வாத இல்லம்” ('Bethesda Blessing Home')

“பெதெஸ்டா ஆசிர்வாத இல்லம்” ('Bethesda Blessing Home')

அனுமதி பெறாத குழந்தை காப்பகத்திலிருந்து 76 குழந்தைகள் மீட்பு: கன்னியாகுமரி மாவட்டம் பலவிளையில் அனுமதியின்றி இயங்கிய குழந்தைகள் காப்பகத்தில் இருந்த மணிப்பூர், அசாம் மாநில குழந்தைகளை சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கேரளா காரகோணத்தைச் சேர்ந்தவர் ஷாஜி. கிறிஸ்தவ தொண்டு நிறுவனம் நடத்திவரும் இவர், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே, பலவிளையில் குழந்தைகளுக்கான காப்பகம் நடத்தி வந்தார்.

பெதெஸ்டா ஆசிர்வாத இல்லத்தில் அடைத்து வைத்து கொடுமைப் படுத்தப்பட்டது

பெதெஸ்டா ஆசிர்வாத இல்லத்தில் அடைத்து வைத்து கொடுமைப் படுத்தப்பட்டது

அங்கு, பெரும்பாலும் வெளிமாநில குழந்தைகள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை சிறுவர் கூர்நோக்கு இல்ல அதிகாரிகள் சோதனை நடத்தினர். சிறுவர் காப்பகம் நடத்த அரசிடம் அனுமதி பெறவில்லை. மேலும் 76 சிறுவர்களில் 22 பேர் அசாம், 54 பேர் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிந்தது. போலீஸ் உதவியுடன் அந்த சிறுவர்கள் நெல்லை அழைத்துவரப்பட்டனர். நெல்லை சரணாலயம் தொண்டு நிறுவனத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சிறுவர்கள் பெரும்பாலானோர், பெற்றோரை பிரிந்த ஏக்கத்தில் இருந்தனர். அவர்களை நெல்லை கலெக்டர் ஜெயராமன் நேற்று சந்தித்து பேசினார். அவர்களுக்கு உணவு, உடை, மருத்துவம் வழங்க உத்தரவிட்டார். மணிப்பூர், அசாம் மாநில அரசின் குழந்தைகள் நல அமைப்புடன் பேசி, அவர்களை அனுப்பிவைக்கும் வரை, கல்வி கற்பிக்க உள்ளதாக, சரணாலய இயக்குனர் ஜான்சன் கூறினார்.

200க்கும் மேற்பட்ட குழந்தைகள் / டீன்-ஏஜ் பெண்கள் உடபட இருந்தது

200க்கும் மேற்பட்ட குழந்தைகள் / டீன்-ஏஜ் பெண்கள் உடபட இருந்தது

நெல்லை சரணாலயம்: ஆதரவற்ற சிறுமிகள், சிறுவர்கள் பெண்களுக்கு மறுவாழ்வு கொடுத்து வரும் நெல்லை சரணலயம் 1993ம் ஆண்டு முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இன்றைய சூழலில் குடும்பங்களில் நிலவும் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் பொருளாதார காரணங்களிலும், நகர்மயமாக்கல், கிராமப்புறத்து மக்கள் நகரங்களை நோக்கி இடம் பெயர்தல் போன்றவையாலும் மாறிவரும் காலச் சூழலுக்கேற்ப சிறுவர், சிறுமியரின் தேவைகள், ஆசைகள், குழப்பங்கள் போன்வற்றில் பெற்றோரும், ஆசிரியரும் இச்சமுதாயமும் அவர்களுக்கு சரியான திசையில் வழிகாட்டுதலிலும், நியாயமான தேவைகளை நிறைவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகளாலும் பல சிறுவர் சிறுமியர் குடும்ப உறவுகளை இழந்து வீதிகளுக்கு வரும் நிலை ஏற்படுகிறது் இத்தகைய வீதியோர சிறார்கள் மேல் அக்கறை கொண்டு அவர்கள் மறுவாழ்வு பெறுவதற்காக சரணாலயம் பணியாற்றி வருகிறது. இத்தகைய சிறுவர்களின் அவலங்களைக் கண்ணுறும் பொதுமக்கள் இவர்களுக்கு உதவிடவும் சிறுவர் உரிமைகளைப் பேணிடவும் மத்திய அரசின் சமூக ­நீதி மற்றும் அதிகாரம் வழங்குதல் துறை மூலம் நிறுவப்பட்டது தான் சைல்டு லைன் 1098 இலவச தொலைபேசியாகும் நாடெங்கும் ஐம்பத்தைந்து மாநகரங்களில் நிறுவப்பட்டுள்ள இந்த தொலைபேசி வாயிலாக 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு சிறுவர் குறித்த தகவல்கள் தெரிவிக்கலாம் ஏன்? சம்பந்தப்பட்ட சிறுவர்களே ௯ட தங்கள் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் அவர்களுக்கு ஆலோசனைகளும், மருத்துவ உதவி, கல்வி உதவி, குடும்பங்களோடு ஒன்றினைத்தல், அ­திகளுக்கு பரிகாரம் காணுதல் போன்ற சேவைகளைப் பெற முடியும்.

இல்லத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை முதலிய விவரங்கள் இல்லை என்கிறார் ஜோஸப் ஜான்

இல்லத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை முதலிய விவரங்கள் இல்லை என்கிறார் ஜோஸப் ஜான்ஸன்

ஷாஜி யார், மதபோதகரா, மர்ம மனிதரா, இன்னொரு வில்-ஹியூமா? கேரள மாநிலம் காரகோணம் பகுதியை சேர்ந்தவர் ஷாஜி. மத-போதகரான இவர் குமரி மாவட்டம் பாலவிளை அருகே சொந்த கட்டடத்தில் “பெதெஸ்டா ஆசிர்வாத இல்லம்” (‘Bethesda Blessing Home’) என்ற பெயரில்[1] குழந்தைகள் காப்பகம் நடத்தி வந்தார்[2]. அங்கு ஜெப கூட்டமும் நடந்தது. இதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.ஷாஜி மீது இதுவரை எந்தப் புகாரும் இல்லை. எனினும் அவரை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்றார்[3]. ஷாஜியிடம் நடந்த விசாரணையில் பசியால் வாடிய வெளிமாநில குழந்தைகளை ஏஜெண்டுகள் மூலம் கொண்டு வந்ததாக தெரிவித்தார்[4]. சமூகநலத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஷாஜி நடத்திய காப்பகத்துக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால் இதுவரை அனுமதி கொடுக்கப்படவில்லை.

சட்டத்தை மீறி அடைத்து வைத்தது பற்றி விளக்குகிறர் - டைம்ஸ்-நௌ டிவி

சட்டத்தை மீறி அடைத்து வைத்தது பற்றி விளக்குகிறர் - டைம்ஸ்-நௌ டிவி

சிறுவர்களுக்கு மருத்துவ பரிசோதனை: சரணாலயத்தில் உள்ள சிறுவர்களை நெல்லை கலெக்டர் ஜெயராமன் நேற்று சந்தித்தார். அவர்களுக்கு அரசு டாக்டர்கள் மூலம் மருத்துவப் பரிசோதனை நடத்த உத்தரவிட்டார்[5]. சென்ற புதன்கிழமைதான் (20-01-2010) சோழங்கநல்லூரில் இருந்த ஒரு (Reach Home Children Foundation)[6] அனாதை இல்லத்திலிருந்து, மணிப்பூர், மாவட்டம், பிஷ்ணுபூரைச் சேர்ந்த 17 குழந்தைகள் (பெண் குழந்தைகளையும் சேர்த்து) விடுவிக்கப்பட்டனர். தமிழ்நாடு குழந்தைகள் நல்வாழ்வு கமிட்டியின் தலைவி டாக்டர் பி. மனோரமா குழந்தைகள் சரிவர பரமரிக்கப்படவில்லை மற்றும் அவர்கள்மீது அடித்ததாக அடையாளங்கள் காணப்படுகின்றன என்றார். பெண்-குழந்தைகள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப் பட்டிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது[7].

உட்கார்ந்திருக்கும் இரு இளம் பெண்கள், குழந்தைகள் அல்ல, முகம் மறைக்கப்பட்டுள்ளது!

உட்கார்ந்திருக்கும் இரு இளம் பெண்கள், குழந்தைகள் அல்ல, முகம் மறைக்கப்பட்டுள்ளது!

“சிறுவர்கள்” என்று கூறி, டீன்–ஏஜ் பெண்கள் இருந்ததை மறைக்கின்றனர்: முன்பு போலவே, இப்பொழுதும் “சிறுவர்கள்” என்று கூறி, டீன்–ஏஜ் பெண்கள் இருந்ததை மறைக்கின்றனர். நேற்று டிவி-செனல்கள் காண்பித்தபோது, இளம் பெண்கள் இருந்தது நன்றாகவே தெரிந்தது. ஆனால், அடையாலம் தெரியக்கூடாது என்று, ஏதோ மறைப்பு வைத்து படம் பிடித்துள்ளதால் தெளிவாக முகங்கள் தெரியவில்லை. ஜோஸப் ஜான்ஸன் என்ற சமூகநல அதிகாரி குறிப்பிடும்போது, அனாதை இல்லத்தில் / ஆஸ்ரமத்தில் எத்தனை குழந்தைகள் / பெண்கள் இருந்தனர் என்பதற்கான எந்த ஆவணங்களையும் வைத்திருக்கவில்லை என்று குறிப்பிட்டார். ஆகவே,, இவர்கள் எல்லாம், “சுற்றுலா விபசாரத்திற்கு” உபயோகப்பட்டிருந்தால், விவரங்கள், விசாரித்தால்தான் தெரியவரும். அப்பொழுது, அவர்கள். தாங்கள் அந்த இல்லத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்று சொல்லிவிட்டால், ஒன்றும் செய்யமுடியாது.

உட்கார்ந்திருக்கும் இரு இளம் பெண்கள், குழந்தைகள் அல்ல, முகம் மறைக்கப்பட்டுள்ளது! நடுவிலே வந்த இன்னொரு பெண்!

உட்கார்ந்திருக்கும் இரு இளம் பெண்கள், குழந்தைகள் அல்ல, முகம் மறைக்கப்பட்டுள்ளது! நடுவிலே வந்த இன்னொரு பெண்!

அனாதை இல்லங்களும், கொலைகளும், கற்பழிப்புகளும்: திருநெல்வேலியைச் சேர்ந்த, “புதிய வாழ்க்கை மையம்” (‘New Life Centre), என்ற இல்லத்தில், 2005ல் மணிப்பூரைச் சேர்ந்த ரிச்சர்ட் என்ற சிறுவன் மர்மமான முறையில் இறந்து கிடந்தான். அவன் மூழ்கி இறந்ததாகக் கூறப்பட்டது. அடுத்த வருடம் 2006ல் அதே இல்லத்தைச் சேர்ந்த, பில்கிரிம் நிகோபார் (Pilgrim Nicobar), என்ற இன்னொரு சிறுவனும் ஒரு குட்டையில் பிணமாக மிதந்தான். அந்த அனாதை இல்லத்தின் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், விசாரணை ஒன்றும் உண்மைகளை வெளிப்படுத்தவில்லை. அதேமாதிரி, சென்னை அனாதை இல்லத்தில் 2005ல், ஐந்து பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்குட்பட்டனர் என்று புகார் செய்தனர். போலீஸார் அதன் தலைவரை விசாரித்தனர், ஆனால் மேலே தொடராமல் அப்படியே விட்டுவிட்டனர்.

வேதபிரகாஷ்


[1] HNS, Authority caught in frenzy on rescue of state children in Chennai, Source: Hueiyen News Service / Thingnam Anjulika Samom, Imphal, January 25 2010

http://www.e-pao.net/GP.asp?src=10..260110.jan10

[2]தினமலர், ஜனவரி 26,2010

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=15699

[3] தினகரன், 24-01-2010

http://www.dinakaran.com/tamilnadudetail.aspx?id=4492

[4] http://thatstamil.oneindia.in/news/2010/01/25/76-other-state-kids-rescued-from.html

[5]தினகரன், 26-01-2010

http://www.dinakaran.com/highdetail.aspx?id=4566

[6] TIMES-NOW TV, Child trafficking racket exposed, 26 Jan 2010, 1326 hrs IST, for details, see at:

http://www.timesnow.tv/Child-trafficking-racket-exposed/articleshow/4337164.cms

[7] http://www.e-pao.net/GP.asp?src=10..260110.jan10