Posts Tagged ‘கூட்டாளிகள்’

வில் ஹியூம், ரப்பி ஆலன் ஜே, மஹாபலிபுரம் காட்டும் உண்மைகள் என்ன?

பிப்ரவரி 20, 2010

வில் ஹியூம், ரப்பி ஆலன் ஜே, மஹாபலிபுரம் காட்டும் உண்மைகள் என்ன?

வேதபிரகாஷ்

அனைதுலக “தப்பியோடும் தண்டனைக் குற்றாவாளி” இந்தியாவில் நுழைந்ததிலிருந்து வெளியேற்றப்பட்ட வரை பதிலளிக்கப்படாத பல வினாக்கள்: ஆங்கிலத்தில் “fugitive” எனக் குறிப்பிடப்படும் “தப்பியோடும் தண்டனைக் குற்றாவாளி”யைப் பற்றி பரவலாக எல்லா விமானநிலையங்களிலும் அவனைப்பற்றிய விவரங்கள், புகைப்படங்கள் எல்லமே இருக்கும்[1]. ஆகையால் அவன் சென்னை அனைத்துலக விமான நிலையித்தின் வழியாக உள்ளே நுழைந்திருக்கிறான் என்றாலே அதில் மர்மம் உள்ளது[2]. அதாவது அவன் எப்படி தப்பித்து உள்ளே நுழைந்தான் என்பதே! பிறகு தாராளமாக மஹாபலிபுரத்திற்குச் சென்று அங்கு ஒரு “ரிஸார்ட்”டில் ஒருவருடம் வரைத் தங்கியுள்ளான் என்றால், நிச்சயமாக உள்ளூர் போலீஸார் ஒன்றும் கண்டு கொள்ளாமல் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகின்றது[3]. அதுமட்டுமல்லாது அவனுக்குத் தேவையான தினசரி பொருட்கள், உணவு இத்யாதிகளை எடுத்துக் கொண்டு வந்து வழங்கியவர்களுக்கும் தெரியாமல் இருந்தது / வாழ்ந்தது[4] விந்தையிலும் பெரிய விந்தையே!

Horowitz_Alan-India2007 

Horowitz_Alan-India2007

ரப்பி ஆலன் ஜே என்ற குழந்தை-பாலியல் குற்றவாளி: ரப்பி என்றால் யூதமதகுரு, சந்நியாசி, துறவி, குருக்கள், பூஜாரி, இமாம், காஜி, அர்ச்சகர் என்றெல்லாம் பொருள் கொள்ளலாம். கிருத்துவத்தில் பிஷப், பாஸ்டர், பிரீஸ்ட், பிரீச்சர்,…………………….என்றெல்லாம் அவரது இறையியல் தகுதி / நிலைக்கேற்ற அழைக்கப்படுவர். சில நேரங்களில் யூத்-கிருத்துவ-முஸ்லிம் மதங்கள் இந்த வார்த்தையை “மரியாதைக்குரிய” என்ற நிலையில் உபயோகிக்கின்றனர். உதாரணத்திற்கு ஒரு முஸ்லிம் நடத்திவருகின்ற[5], “ரப்பானி மருத்துவமனை”! இந்த ரப்பி ஆலன் ஜே “ஸ்னெயூர்” ஹொரோவிட்ஸ் என்பவர் ஒரு குழந்தை மனோத்ததுவ மருத்துவர். ஸ்னேயோர் ஆல்டர், மைக் சோங்கின், ஆலன் ஹொரோவிட்ஸ், ஸ்னெயூர் ஹொரோவிட்ஸ், எலிஸா ஹொரோவிட்ஸ், நம்பலா ரப்பி என்று பலபெயர்களில் அழைக்கப்பட்ட இவன் ஒரு பெரிய குழந்தை பாலியல்-குற்றாவாளியும் கூட. இவனுடைய சரித்திரம் பாலியலாகத்தான் உள்ளது[6]:

1964-1968 ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில், பாஸ்டனில் படித்து முதுகலைப் பட்டம் பெறுகிறான்.
1971 வடக்கு கரோலினாவிலுள்ள, டுயூக் பல்கலைகழகத்தில் மனோத்ததுவம், குழந்தை மனோதத்துவயியல் படித்து எம்.டி, பி. எச்.டி பட்டங்கள் பெறுகிறான்.
1973-76 அகஸ்டாவிலுள்ள ஜியார்ஜியா மருத்துவமனை கல்லூரியில் மனோதத்துவ மருத்துவராக வேலைப் பார்க்கிறான்.
1976-78 வுட்வார்ட் என்ற இடத்திலுள்ள அயோவா பல்கலைகழகத்தில் குழந்தை மனோதத்துவியல், துணை பேராசியராகப் பணியாற்றுகிறான்.
1983 யாகட்வொர்த்டவுன், அரிஜோனா – எம்.டி யாகப் பணிபுரிகிறான்.
1983-85 மோசெய், நியூயார்க்
1985-1990 ஜெருஸலேம் மற்றும் மேற்குகரை, இஸ்ரேல்
1990-91 ஸ்கெனெக்டாடி, நியூயார்க்
1991 வுட்வார்ட், அமெரிக்கா
1991-2004 குழந்தை பாலியல் குற்றங்களில் ஈடுபடுதல், சிக்குதல், கைது செய்யப்படுதல்
2004-2006 ஒனெய்டா ஜெயில், நியூயார்க்
2006 பரோலில் விடிவிக்கப்பட்டு அல்பேனி, நியூயார்க்
2006 பரோலில் விடிவிக்கப்பட்டு டெல் அவிவ், இஸ்ரேலுக்குத் தப்பிச் செல்கிறான்.
2006 ஜப்பான்
2006 தார்லாந்து
2006 ஹாங்காங், சைனா நாடுகள்
2007 ஸ்ரீலங்கா
2007 மஹாபலிபுரம், இந்தியா

மே 22, 2007 அன்று காஞ்சிபுரம் போலீஸாரால் கைது செய்யப்படுகிறான். அதாவது 2006 முதல் மே 2007 வரை அவன் மஹாபலிபுரம் ரிஸார்டில் தங்கியுள்ளான்.

Horowitz_Alan-Interpol-1 

Horowitz_Alan-Interpol-1
Horowitz_Alan-Interpol-2 

Horowitz_Alan-Interpol-2

வி ஹியூம் மற்றும் இந்த ரப்பி ஆலன் ஜேவிற்கு தொடர்பு இருந்ததா? இருவருமே குழந்தை செக்ஸ்-விவகாரத்தில் வல்லுனர்களாக இருந்துள்ளார்கள். முன்னவன் படிக்காமலேயே, தனது அனுபவத்தின் மீதாக வல்லுனனாக இருந்திருக்கிறான், பின்னவனோ படித்து பி.எச்.டி பெற்று மருத்துவம்-மனோதத்துவம் படித்தே எப்படி குழந்தைகளை பக்குவமாகத் தமது காம இச்சைக்குட்படுத்துவது என்று அறிந்து, செயல்படுத்தி, அனுபவித்து சுவைத்துவந்துள்ளான். அந்த விஷயத்தில் இருவருமே ஒத்துப் போகின்றனர். பிறகு மஹாபலிபுரம்[7], புருவங்களை உயர்த்துகின்றன. ஏன் மற்ற இடத்திற்கு செல்லாமல், மஹபலிபுரத்தைத் தேர்ந்தெடுக்கிறான்? கோவா[8], புவனேஸ்வர்[9], பூரி[10] இப்படி அருமையான இடங்களை விடுத்து ஏன் இங்கு வருகிறான்? ஒரு அயல்நாட்டவன், குறிப்பாக சட்டப்பிடியிலிருந்துத் தப்பியோடி திருட்டுத்தனமாக பல நாடுகளில் ஓடித்திரிந்து மறைய வருகிறன் என்றல் அவனுக்கு அங்கு ஒரு “தொடர்பு” இல்லாமல் வரமாட்டான், வரமுடியாது. விசா, பாஸ்போர்ட் முதலியவை இருக்கவேண்டும். ஆகவே, நிச்சயமாக அவனுக்கு உதவிய “தொடர்பாளிகள்”, கூட்டாளிகள், சம்பந்தப்பட்டோர் இருந்திருக்கிறார்கள். வில் ஹியூமோ தனது குடும்பம் சகிதமாக இருந்து தனது செக்ஸ்-தொழிலை செய்து வந்துள்ளன். ஆகவே, ஒருவேளை அவர்கள் சந்தித்து இருக்கலாம் அல்லது உதவியிருக்கலாம். மே 2002ல் கைது செய்யப்பட்ட வில் ஹியூம் பிறகு பிணையில் வந்து மறைந்து போகிறான். நவம்பர் 2009ல்தான் சூளைமேட்டில் கைது செய்யப்படுகிறான். ஆகவே அத்தகைய ரகசிய வாழக்கை வாழ்ந்த காலத்தில் யாருடன் இருந்தான், யேரெல்லாம் அவனை சந்தித்துள்ளனர் அல்லது இவன் சந்தித்தான் என்ற விவரங்கள் ரகசியமாகவே, மர்மமாகவே இருந்துள்ளன. ஆகவே இவனுக்கும் பல உதவியுள்ளார்கள் என்பதெல்லாம் முன்னமே எடுத்துக் காட்டப்பட்டுள்ளது[11].

வேதபிரகாஷ்

20-02-2010


[1] அவன் ஒரு குழந்தை பாலியல் குற்றவாளி என்பதால் அமெரிக்கா மற்றும் இன்டர்போல் எச்சரிக்கைகள் அனுப்பப்படுள்ளன.

 

[2] அதாவது பாஸ்போர்ட் சரிபார்த்தல், வெளிநாட்டவர் உள்நுழைய அனுமதிக்கும் அதிகாரியின் (Immigration officer) ஒப்புதல் அளித்தல், அத்தகைய அறிவிப்பை “சாஸ்திரி வவனில்” உள்ள அதிகாரிக்கு / அலுவலகத்திற்கு அறிவிக்காமல் இருந்தது என பல சட்டமீறல்கள் அடுக்கப்படும். அந்நிலையில் அதற்காகத் துணைபோன அதிகாரிகளின் பட்டியலும் நீள்கின்றது.

[3] காரில் சென்றிருந்தால், அந்த டிரைவர் நன்றாகவே பார்த்திருப்பான். தினமும் வெளிநாட்டவட் வந்து தங்கும்போது ஹோட்டல் மற்றும் ரிஸார்ட் காரர்கள் அருகிலுள்ள போலீஸாரிடம் வந்துள்ளவர்கள் பற்றி அறிவிக்கவேண்டும் மற்றும் போலீஸாரே வந்து அதற்கான ரிஜிஸ்டரைப் பார்த்துத் தெரிந்து கொள்ளவேண்டும். தின-அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும்.

[4] ஏனெனில் இங்கு பணம் வருகின்றது. சாதாரணமாக வெளிநாட்டவர்களிடத்திலே அவ்வாறு பணம் இருக்கிறது அல்லது இல்லாத நிலையிலும் உள்ளூர்வாசிகள் அல்லது சென்னையிலிருந்து உதவுகின்றனர் என்றால் அவன் வருகை அந்த உள்ளூர்வாசிகளுக்கு / தொடர்பாளிகளுக்குத் தெரியாமலில்லை.

[5] தொலைக்காட்சிக்களில் அதிகமாக விளம்பரங்கள் கொடுக்கப்படுகின்றன. அந்த மருத்துவர் முந்தைய ஜனாதிபதி அப்துல்கலாமுடன் கூட சேர்ந்து நிற்கும் புகைப்படங்கள் எல்லாம் கூட நடுநடுவே காட்டுவர்.

[6] கீழ்காணும் இணைதளத்தில் அவனைப் பற்றிய மேலும் பல  விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்: http://www.theawarenesscenter.org/Horowitz_Alan.html

[7] வேதபிரகாஷ், ,சென்னைசெக்ஸ் நகரமாகமாறுகிறதா?, மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும்:

https://socialterrorism.wordpress.com/2009/11/30/சென்னை-செக்ஸ்-நகரமாக-மாற/

வேதபிரகாஷ், குழந்தை விபச்சாரம்: பாலியல் வன்முறைக் கொடுமைகள், மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்: http://womanissues.wordpress.com/2009/11/13/குழந்தை-விபச்சாரம்-பாலி/

வேதபிரகாஷ், வில் ஹியூம்குழந்தைக் கற்ப்பழிப்பாளி! ,மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்: http://womanissues.wordpress.com/2009/11/17/வில்-ஹியூம்-குழந்தைக்-கற/

[8] கோவாவில் எல்லாவிதமான விபச்சாரமும் சாதாரணமானது, சகஜமானது. பணம் வருகிறது, உள்ள பல்நாட்டு முதலாளிகளை சந்தோஷப்படுத்துகிறது என்பதனால் அரசாங்கள் கண்களைமூடிக்கொண்டு இருக்கிறது.

[9] புவனேஸ்வரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்மான ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் முதலியன பிரமிப்பாக இருக்கிறது. வெளிநாட்டவர்கள் அங்கு அதிகமாக வந்து செல்வதும் மர்மமாக உள்ளது. கடந்த வருடங்களில் பல ஃபிடோஃபைல்கள் / குழந்தை பாலியல் வன்முறையாளர்கள் இங்கு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

[10] பூரியும் இதே நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. வந்துள்ள வெளிநாட்டுக் குழுக்களிடம் இதைப் பற்ரியேல்லாம் கேட்கிறர்களா இல்லையா என்றதெல்லாம் தெரிவவில்லை.

[11] வேதபிரகாஷ், வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன் I – IV பார்க்கவும்.

வேதபிரகாஷ், வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள்!, https://socialterrorism.wordpress.com/2009/11/20/வில்-ஹியூம்-புவனேஸ்வரி-த /