Posts Tagged ‘செல்போன்’

செங்கல்பட்டு குழந்தைகள் காப்பகம், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர், பெண்-குழந்தைகளைக் கற்ப்ழிப்பது, புகார் மற்றும் வழக்குகள் (1)

திசெம்பர் 25, 2020

செங்கல்பட்டு குழந்தைகள் காப்பகம்குழந்தைகள் நலக்குழு உறுப்பினர், பெண்குழந்தைகளைக் கற்ப்ழிப்பது, புகார் மற்றும் வழக்குகள் (1)

செங்கல்பட்டில் உள்ள குழந்தைகள் காப்பகம் தொடர்ந்து பாலியல் குற்றங்களில் சம்பந்தப் பட்டுள்ளது: செங்கல்பட்டில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில்[1] உள்ள சிறுமிகளைக் கற்பழிப்பது, கர்ப்பமாக்கியது போன்ற விவகாரங்கள் நீதிமன்றம் வரைச் சென்றுள்ளன[2].  14 வயதான டீன் ஏஜ் சிறுமியை, ஒருவன் கற்பழித்ததால், கர்ப்பமடைந்தால். அந்த கர்ப்பத்தைக் கலைப்பது பற்றி நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளார்கள்[3]. “இந்தியா டுடேவிலும்” இதைப் பற்றி விவரமாக அலசப் பட்டது[4]. காப்பகங்களில் பெண்-குழந்தைகள் தொடர்ந்து இவ்வாறான பாலியல், செக்ஸ் தொல்லைகளுக்கு உட்படுத்தப் பட்டுள்ளார்கள்[5]. காப்பகத்தைச் சேர்ந்தவர்கள், பாதுகாவலர்கள் தான் அத்தகைய வேலைகளை செய்துள்ளனர். ஆனால், அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது, தண்டனை கொடுக்கப் பட்டது போன்ற விவரங்கள் தெரியவில்லை. நீதிமன்றத் தீர்ப்புகள் இருந்தாலும், குற்றாவாளிகள் தண்டனையைப் பற்றி தெரியவில்லை, அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மற்றவர்கள் இவற்றில் ஈடுபட்டுள்ளதால், இத்தகைய விவரங்கள் பெரும்பாலும், மறைக்கப் பட்டு வருகின்றன. இந்நிலையில் தான், குழந்தைகள் நலக்குழுவில் உள்ள உறுப்பினர்கள், இன்னொரு உறுப்பினருக்கு எதிராக மனு/வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் தாமோதரனை நீக்க வழக்கு: செங்கல்பட்டு குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து, தாமோதரன் என்பவரை நீக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது[6]. மனுவுக்கு பதில் அளிக்க, அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது[7]. செங்கல்பட்டு மாவட்ட சிறப்பு முகாம் உறுப்பினர்கள், செங்கல்பட்டு அரசு சிறப்பு முகாமில் உள்ள, குழந்தைகள் நல குழு உறுப்பினர்கள் குளோரி ஆனி, மணிகண்டன், முகமது சகாருதீன் ஆகியோர் உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்த மனுவில், ‘குழந்தைகள் நல குழுவில், உறுப்பினராக இருக்கும் தாமோதரன், சிறார் நீதி சட்டத்தை மீறி செயல்படுகிறார். ‘இவர், இந்த பொறுப்பில் தொடர்வது, காப்பகத்தில் உள்ள பெண் குழந்தைகளின் நலனுக்கு உகந்ததாக இல்லை[8]. எனவே, இவரை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும்’ என, கூறப்பட்டுள்ளது[9]. குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்களே, இன்னொரு குழு-உறுப்பினர் மீது குற்றஞ்சாட்டி வழக்குத் தொடர்ந்துள்ளாதால், இது முக்கியமாகிறது. இருப்பினும், சில ஊடகங்களே, இச்செய்தியை வெளியிட்டுள்ளன..

வேலியே பயிரை மேய்க்கும் வேலையில் ஈடுபட்டுள்ள தாமோதரன்: அவர்கள் தாக்கல் செய்த மனுவில், “குழந்தைகள் நலக் குழுவில் உறுப்பினராக இருக்கும் தாமோதரன், சிறார் நீதிச் சட்டத்தை மீறிச் செயல்படுகிறார். பாலியல் தொல்லை உள்ளிட்ட பல்வேறு சிரமங்களிலிருந்து மீட்கப்படும் குழந்தைகளை குழுவின் முன் ஆஜர்படுத்தாமல் மறைக்கிறார்[10]. இது குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பாக அமைந்துவிடும். குழுவால் விசாரிக்கப்பட்ட சிறுமியிடம் நூறு ரூபாயைக் காண்பித்து, தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி உறுப்பினர் தாமோதரன் வற்புறுத்தியுள்ளது ஆபத்தைத் தருகிறது[11]. ஆபாசப் படங்கள் பார்க்கும் பழக்கம் கொண்ட அவரால், காப்பகக் குழந்தைகளுக்கு ஆபத்தான சூழல் நிலவுகிறது. இதுகுறித்து அரசிடம் புகார் அளித்த எங்களைத் தாக்கினார். உறுப்பினர் தாமோதரனைப் பதவியிலிருந்து நீக்கும்படி தமிழக சமூக நலத்துறை செயலாளர் மற்றும் சமூகப் பாதுகாப்பு இயக்குனரக ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரிக்கை வைத்துள்ளனர். தாமோதரன் என்ற உறு[ப்பினர், உள்ளே இருந்து கொண்டு, இத்தனையும் செய்து வருவதே திகைப்பாக இருக்கிறது.

பிப்ரவரி 2021க்குத் தள்ளி வைக்கப் பட்ட வழக்கு: இம்மனு, நீதிபதி, புஷ்பா சத்தியநாராயணா முன் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்கும்படி, சமூக நலத்துறை மற்றும் சமூக பாதுகாப்பு இயக்குனரகத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை, 2021, பிப்., 2ம் தேதிக்கு, நீதிபதி தள்ளி வைத்தார். இப்பொழுது வந்துள்ள செய்திகளிலிருந்து இவ்வாளவு தான் தெரிய வந்துள்ளது. நாளிதழ்கள், மேலும் விவரங்கள் கொடுக்குமா, கடைசி வரையில் என்னவாயிற்று, என்று தெரிவிப்பார்களா அல்லது, மேற்குறிப்பிட்ட வழக்குகளைப் போல, மறைத்து விடுவார்களா என்று தெரியவில்லை.

கடந்த இரு ஆண்டுகளில் 1,345 ஆதரவற்ற குழந்தைகள் கண்டறியப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றனர்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரு ஆண்டுகளில் 1,345 ஆதரவற்ற குழந்தைகள் கண்டறியப்பட்டு அவா்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக மாவட்டக் குழந்தைகள் நலக் குழுமத்தின் தலைவா் என்.ராமச்சந்திரன் வியாழக்கிழமை தெரிவித்தார். இது குறித்து அவா் மேலும் கூறியது: “காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியாா் மற்றும் அரசு சாா்பில் 120 குழந்தைகள் காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. இக்காப்பகங்களில் பராமரிக்கப்பட்டு வந்த 817 குழந்தைகள் 18 வயதைக் கடந்த பிறகு அவா்களது பெற்றோர்கள், உறவினா்கள் அல்லது காப்பாளா்களிடம் உறுதிமொழியின் பேரில் ஒப்படைக்கப்பட்டு வருகின்றனா். ஆதரவற்ற குழந்தைகள், பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகள் என பலரையும் கண்டறிந்து கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் 1,345 குழந்தைகள் காப்பகங்களில் சோ்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனா். தெருக்களில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 5 பெண் குழந்தைகள் பள்ளியில் சோ்க்கப்பட்டு படித்து வருகின்றனா். காணாமல் போனதாக தெரிய வந்த 15 குழந்தைகள் கண்டு பிடிக்கப்பட்டு அவா்களது பெற்றோா்களிடமும், காப்பாளா்களிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளனா். 8 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் பா.பொன்னையா தலைமையில் நடந்த மீளாய்வுக் கூட்டத்தில் இவ்விவரங்களைத் தெரிவித்திருக்கிறோம்”.

டிசம்பர் 2010ல் குழந்தைகள் பாதுகாப்பு, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி என்று விழிப்புணா்வு முகாம்களை நடத்தியது[12]: குழந்தைகள் நலக் குழுமத்தின் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பது எப்படி என விழிப்புணா்வு முகாம்களை நடத்தி வருவதாகவும் அவா் தெரிவித்தார். குழந்தைகள் நலக்குழு உறுப்பினா்கள் எஸ்.சக்திவேல், சா.நிர்மலா, குளோரி ஆனி, கே.தாமோதரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனா்[13]. இதில் தாமோதரனும் இருப்பது நோக்கத் தக்கது. இவ்வாறு ஒன்றாக வேலை செய்த குளோரி ஆனி தான், இப்பொழுது வழக்குத் தொடுத்துள்ள மூவரில் ஒருவர் என்று குறிப்பிடத் தக்கது. அதனால், ஒருவேளை, எல்லைகளை மீறி, தாமோதரன் செயல்பட்டிருக்கக் கூடும் என்று தெரிகிறது. ஒரு வருடத்தில், அத்தகைய பாலியல் தொந்தரவுகளை என்ன, எப்படி, ஏன் செய்தார் என்ற விவரங்கள் தெரியவில்லை. ஊடகங்களிலும் வரவில்லை போலும். செங்கல்பட்டு குழந்தைகள் நலக்குழுவில் இருப்பவர்கள் எல்லோருமே, ஒருமாதிரியாக நடந்து கொள்வதும் விசித்திரமாக உள்ளது.

© வேதபிரகாஷ்

19-12-2020 / 25-12-2020


[1] Govt Children Home for Boys, Taluk Office Compound, Chengalpettu, Kancheepuram  District,  Tamil Nadu – 603002. Phone – 27424458.

[2] IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS DATED : 28.04.2018, CORAM, THE HONOURABLE MR.JUSTICE T.RAJA, W.P.No.10155 of 2018

Child Welfare Committee,

represented by its

Chairperson and Members, Govt.Children Home for Boys, GST Road, Chengalpattu 603 002.

Kancheepuram District.                                                                                                                   …               Petitioner

vs-

1.The Principal Secretary,

   Health and Family Welfare Department,    Secretariat, Chennai 600 009.

2.The District Collector,    Collectorate Campus, Kancheepuram,    Kancheepuram District.

3.The Dean    Chengalpet Medical College Hosptial,    Chengalpet,    Kancheepuram District.

4.The HOD ,    Department of Obstetrics and Gynecology, Chengalpattu Medical College and Hospital,    Chengalpattu.

5.The Inspector of Police,    Uthiramerur Police Station,    Uthiramerur, Kancheepuram District.                                                                                                     …                Respondents

[3] https://indiankanoon.org/doc/2585106/

[4] India Today, Rape, abuse, torture: Why Tamil Nadu’s care homes for children are more like ‘scare’ homes, July 29, 2016, UPDATED: October 10, 2016 13:37 IST.

[5] https://www.indiatoday.in/india/story/tamil-nadu-care-homes-for-children-are-more-like-scare-homes-332042-2016-07-29

[6] தினகரன், செங்கல்பட்டு குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் தாமோதரனை பதவி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு, 2020-12-19@ 15:04:40.

[7] https://www.dinakaran.com/News_Detail.asp?Nid=640175

[8] தினமலர், குழந்தைகள் நலக் குழு உறுப்பினரை நீக்க வழக்கு, Added : டிச 19, 2020 22:59.

[9]  https://www.dinamalar.com/news_detail.asp?id=2674337

[10] தமிழ்.இந்து,  பயிரை மேயும் வேலி; குழந்தைகள் நலக்குழு உறுப்பினரின் தவறான நடத்தை: நடவடிக்கை கோரிய வழக்கில் அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ், செய்திப்பிரிவு, Published : 19 Dec 2020 02:44 PM Last Updated : 19 Dec 2020 02:44 PM.

[11] https://www.hindutamil.in/news/tamilnadu/613420-crop-grazing-fence-misconduct-of-a-child-welfare-committee-member-high-court-notice-to-the-state-in-a-case-seeking-action.html

[12] தினமணி, இரு ஆண்டுகளில் 1,345 குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைப்பு, By DIN | Published on : 19th December 2019 11:32 PM.

[13]https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/dec/19/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1345-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3310408.html