Archive for the ‘உதயநிதி’ Category

ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்தலில் மாட்டிக் கொண்டது–சகாக்கள் கைதானது, இவன் தலை மறைவானது–தேடும் படலம் ஆரம்பித்தது (2)

மார்ச் 3, 2024

ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்தலில் மாட்டிக் கொண்டது சகாக்கள் கைதானது, இவன் தலைமறைவானது தேடும் படலம் ஆரம்பித்தது (2)

பதுங்கியது, பதுங்கியிருப்பது ஏன்?: ஒரு பிரபலமான மனிதர், அதிலும் ஆளும் கட்சியின் பிரமுகர், பெரிய பணக்காரர், சினிமா அதிபர், பலகோடி வியாபாரங்களின் அதிபர் என்றெல்லாம் இருக்கின்ற ஒரு நபர் திடீரென்று காணாமல் போய் விட முடியாது. ஆகவே நிச்சயமாக மாட்டிக் கொண்டு விடுவோம் என்ற நிலையில் தான், காணாமல் போய்விட்டார் என்றால், இந்தியாவிலேயே இருக்கிறார் என்றால், மறைந்து எங்கே ஒரு இடத்தில் வாழலாம். அல்லது நாட்டை விட்டு வெளியேறி விட்டார் என்றால்[1], நிச்சயமாக வேற எந்த நாட்டிலேயோ பதுங்கி இருக்கிறார் என்று தெரிகிறது[2]. எது எப்படி இருந்தும் சட்டப்படி,போதை கட்டுப்பாடு துறை லுக் அவுட் நோட்டீஸ்கள் அனுப்பி விட்டது என்பதால், நிச்சயமாக வெளிவந்தால் மாட்டிக் கொள்வார்[3]. இவ்வாறெல்லாம் மறைந்து வாழலாம் போன்ற விவகாரங்கள் எல்லாம் அசாதாரண விவகாரங்கள் ஆகும். இருப்பினும் அத்தகைய முடிவை மேற்கொண்டது ஏன் என்பது கவனிக்கத் தக்கது[4].

யார் இந்த ஜாபர் சாதிக்? – ஜாபர் சாதிக் பின்னணி: குற்றச்சாட்டுக்கு உள்ளான ஜாபர் சாதிக்கின் பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி.  பல ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்புக்காக சென்னை வந்தவர், சொந்தமாக தங்கும் விடுதி, ஓட்டல், ஏற்றுமதி நிறுவனம், உணவு பதப்படுத்தும் நிறுவனம் என குறுகிய காலத்தில் உச்சம் தொட்டார். இவர், சென்னை புரசைவாக்கத்தில் விடுதி வைத்து நடத்துகிறார். பிரபல அசைவ ஹோட்டல் ஒன்றின் புரசைவாக்கம் கிளையையும் எடுத்து நடத்தும் சாதிக், தி.மு.க., முக்கிய தலைவர்கள் பலருடன் நெருக்கமான நட்பில் இருந்தார். சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க.,வின் முக்கிய புள்ளி வாயிலாக, கட்சியின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணியின் துணை அமைப்பாளர் பதவியை பெற்ற சாதிக், கட்சி மேலிடத்தில் இருப்போர் பலருடனும் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். ஒரு கட்டத்தில் திரைத் துறையில் காலடி எடுத்து வைத்த சாதிக், அங்கிருக்கும் பிரபலமான நபர்களுடனும் நெருக்கமான நட்பை வளர்த்துக் கொண்டார்; திரைப்படம் தயாரிக்கும் பணியிலும் இறங்கினார். மங்கை என்ற திரைப்படம் எடுத்து வரும் அவர், படத்துக்கான முதல் பாடல் வெளியீட்டு விழாவுக்கு, இயக்குனர் கிருத்திகா உதயநிதி உள்ளிட்ட தி.மு.க., பிரபலங்களையும் அழைத்திருந்தார்[5]. கட்சிக்கும், ஆட்சிக்கும் பல கட்டங்களில் தாராளமாக நிதி வழங்கியதால், ஜாபர் சாதிக்குக்கு அனைத்து மட்டங்களிலும் தொடர் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது[6].

சட்டமீறல் செயல்களில் எப்படி முஸ்லீம்கள் தைரியமாக ஈடுபடுகின்றனர்?: பொதுவாக திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முஸ்லிம்களுக்கு அதிக சலுகைகள் கொடுக்கப்படும் என்பது தெரிந்த விஷயமாக இருக்கிறது. எல்லோரும் காலமாக சிறையில் இருப்பவர்களை விடுவிப்பது பிறகு ரம்ஜான் மாதத்திற்கு அரிசி கொடுப்பது, சந்தனக்கூடு பண்டிகைக்கு சந்தனம் கொடுப்பது, தாராளமாக நிதி உதவி அளிப்பது என்றெல்லாம் நடந்து வருகின்றன. இப்பொழுது கூட சமீபத்தில் அவர்களுக்கு பல சலுகைகள் கொடுப்பதாக திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆகவே ஆன்மீகம் என்று சொல்லிக் கொண்டு இந்து மதத்தினரை வசை படுவது, சமதர்மம், செக்யூலரிஸம், பெரியாரிஸம் என்று சொல்லிக்கொண்டு, முஸ்லிம்களுக்கு தாஜா செய்வது என்பது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் தான் அவர்கள் ஒருவேளை தைரியமாக இத்தகைய வேலைகளில் ஈடுபட்டு உள்ளனர் என்பது தெரிகிறது

போதை மருந்து கும்பல்களுடன் தொடர்பு, வேலை ஆரம்பம்: இன்றைக்கு அரசியல்-வியாபாரம் என்பதெல்லாம் பணம் சம்பாதிக்கத் தான். பொது மக்களின் பணத்தை எப்படியாவது கொள்ளையடிப்பது தான், இவர்களின் வேலை. அதற்கு, சினிமா, குடி, கிரிக்கெட், விபச்சாரம் முதலியவை உபயோக படுத்துவது போன்ற, போதை மருந்தும் சேர்ந்து விட்டது. இவ்விதமாக, ஜாபர் சாதிக் தனது வியாபாரங்களை விஸ்தரித்த போது, அரசியல் லாபமும் கிட்டியது. அப்போதுதான் அவருக்கு சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே ஹெராயின் வகை போதைப் பொருட்கள் கடத்தலில், வெளிநாட்டு கும்பல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அந்த போதைப் பொருளுக்கு நிகராக போதை தரக்கூடியது மெத்தாம் பெட்டமைன் வகை போதைப் பொருள் ஆகும். இதற்கு ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிக தேவை ஏற்பட்டுள்ளது. இந்த போதைப் பொருளைத் தயாரிக்க சூடோபெட்ரின் என்ற மூலப்பொருள் அவசியம். இதன் விலை ஒரு கிலோ ரூ.1.50 கோடி ஆகும். இந்த சூடோபெட்ரினை கடத்தியதாக ஜாபர் சாதிக் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

போலீஸார் மூலம் அறியப் படும் விவகாரங்கள்: 3,500 கிலோ சூடோபெட்ரின்: இவரது கூட்டாளிகள் 450 முறை, 3,500 கிலோவுக்கும் அதிகமான சூடோபெட்ரினை பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி, கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளனர். இதன்மூலம் கோடிகளில் புரண்ட ஜாபர் சாதிக், தனது செல்வாக்கை பயன்படுத்தி அரசியல் மற்றும் சினிமா துறைக்குள் நுழைந்துள்ளார். மேலும், அதிகாரிகளுடன் நட்பு கொண்டுள்ளார். இதுதவிர, ஹவாலா (ஆவணம் இல்லா பணம்) தொழிலையும் இவர் கையாண்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான தகவல்களை போலீஸார் சேகரித்து வருகின்றனர். மேலும், ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் உள்ளவர்கள், அவரது பினாமிகள், அவரால் ஆதாயம் அடைந்தவர்கள் குறித்தும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் விவரங்களை சேகரித்து வருகின்றனர். விரைவில் அடுத்தடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15-02-2024-லிருந்து ஆள் இருப்பது தெரியவில்லை: இரண்டு வாரங்கள் ஆகியும் ஜாபர் சாதிக் இருக்கும் இடம் தெரியாதலால், விசாரணை தொடரும் நிலையில், “லுக்-அவுட்-நோட்டீஸ்” விடப் பட்டுள்ளது. போதை மருந்து கடத்தல்காரர்கள், எந்த நிலைக்கும் தயாராக இருப்பார்கள். ஆகவே, இத்தனை நாட்களில் என்கு சென்றிருப்பான் என்று தெரியவில்லை. இந்நிலையில், அவர் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்கும்வகையில், ஜாபர் சாதிக்குக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் போலீஸார் ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் கொடுத்துள்ளனர்[7]. இனி அவர் எந்த விமானநிலையத்துக்கு சென்றாலும், உடனடியாக அங்குள்ள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்படுவார்[8]. இதற்காக அனைத்து விமான நிலைய அதிகாரிகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கடல், தரை மார்க்கமாக அவர் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்கவும் போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்ச் இத்தனை சீரியஸான விசயத்தை ஏன் தமிழகத்தில் ஒன்றுமே நடக்காதது போல காட்டிக் கொள்கின்றனர் என்பதும் விசித்திரமாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

03-03-2024


[1] தமிழ்.ஒன்.இந்தியா, வெளிநாடு தப்ப முயலும் ஜாபர் சாதிக்? போதைப்பொருள் தடுப்புத்துறை வைத்த செக்.. லுக் அவுட்நோட்டீஸ், By Nantha Kumar R, Published: Friday, March 1, 2024, 22:37 [IST]

[2] https://tamil.oneindia.com/news/chennai/drug-smuggling-case-look-out-notice-issued-against-dmk-s-nri-wing-ex-functionary-jaffer-sadiq-587579.html

[3] இ.டிவி.பாரத், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக்கிற்கு லுக் அவுட் நோட்டீஸ்!, By ETV Bharat Tamil Nadu Desk, Published : Mar 1, 2024, 6:21 PM IST.

[4] https://www.etvbharat.com/ta/!state/central-narcotics-control-unit-officials-issued-a-lookout-notice-to-jaffer-sadiq-regards-drug-smuggling-tns24030104898

[5] தினமலர், .யார் இந்த ஜாபர் சாதிக்?, பதிவு செய்த நாள்: பிப் 26,2024 02:22

[6] https://m.dinamalar.com/detail.php?id=3560719

[7] தமிழ்.இந்து, வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்க ஜாபர் சாதிக்குக்கு எதிராகலுக்அவுட்நோட்டீஸ், செய்திப்பிரிவு, Published : 02 Mar 2024 04:37 AM; Last Updated : 02 Mar 2024 04:37 AM.

[8] https://www.hindutamil.in/news/crime/1209268-look-out-notice-against-jaffer-sadiq-to-prevent-him-from-fleeing-abroad.html

ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்தலில் மாட்டிக் கொண்டது–சகாக்கள் கைதானது, இவன் தலைமறைவானது (1)

மார்ச் 3, 2024

ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்தலில் மாட்டிக் கொண்டது சகாக்கள் கைதானது, இவன் தலைமறைவானது (1)

போதை மருந்து கடத்தலில் இந்தியா வழியாகச் சிக்கிக் கொண்டிருத்தல்: உலக நாடுகளில் போதை மருந்து பிரச்சினை தீவிரமாக இருக்கிறது. இதில், இந்தியா சிக்கிக் கொண்டு தவிக்கிறது எனலாம். போதை மருந்து கடத்தலில், இந்தியா ஒரு பாதையாக அமைத்துக் கொண்டு, அந்த கடத்தல்காரர்கள் செயல்பட்டு வருவதால், அடிக்கடி அவை பிடிக்கப் படுகின்றன. ஆனால், பிடிபடாமல் தப்பிச் செல்லும்சரக்குகள் பற்றி தெரிவதில்லை. போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப் பொருட்களை (சூடோபெட்ரின்), தேங்காய் பவுடர் மற்றும் ஹெல்த் மிக்ஸ் (சத்து மாவு) பாக்கெட்களில் மறைத்து வைத்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. டெல்லியில் கடந்த சில நாட்களாக போதைப்பொருள் கும்பல்களை கைது செய்யும் நடவடிக்கையும் அது தொடர்பான சோதனைகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது[1]. கடந்த வாரம் தெற்கு டெல்லியில் இரண்டு போதைப் பொருள் குடோனை சோதனை நடத்தியதில் சுமார் 1700 கிலோ போதைப் பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்[2].

எல்லைத் தாண்டி நடக்கும் தீவிரவாதங்களில் போதை மருந்தும் முக்கியப் பங்கு வகிக்கிறது: 40 கோடி ஜனத்தொகை கொண்ட இந்திய என்று உலக அளவில் ஒரு பொருளாதார ரீதியில் முன்னேறி வருகின்ற நாடாக அமைகிறது. இத்தனை ஜனத்தொகை இருந்தாலும் ஓரளவுக்கு அக்களுக்கு உணவு, சுகாதாரம், மருத்துவம், இருப்பிடம், போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு, மக்கள் திருப்தியாக இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. இது மற்ற நாடுகளை ஒப்பிட்டு பார்க்கும்போதும், இந்த உண்மை தெரிகிறது. கொரோனா காலத்தைய துன்பங்களையும் மீண்டு, பழைய நிலைக்கு வந்திருப்பது எல்லாருக்கும் மகிழ்ச்சிகரமான செய்தி. இருப்பினும் எல்லைகளில் ஆப்கானிஸ்தானம், பாகிஸ்தான், சைனா மற்றும் மியான்மர் போன்ற நாடுகள் வழியாக, நமக்கு எல்லை தாண்டிய பயங்கரவாதம், பொருளாதார தாக்குதல், ஊடுருவல், போதை மருந்து கடத்தல் என்றெல்லாம் நடந்து கொண்டு இருக்கின்றன. இதனால் அவை உள்ளூர் பிரச்சனையாகவும் மாறும்பொழுது பாதிப்பு அதிகம் ஆகிறது.

15-02-2024 அன்று தமிழக கும்பல் டில்லியில் சிக்கிக் கொண்டது: இதுதொடர்பாக, டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில், கடத்தல் கும்பல், மேற்கு டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள கிடங்கில் பதுங்கியிருந்தது தெரியவந்தது. கடந்த பிப்ரவரி 15-ம் தேதி 2024 அங்கு நுழைந்த போலீஸார், அங்கிருந்த சென்னை முகேஷ், முஜிபுர், விழுப்புரம் அசோக்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதைப் பொருட்கள் தயாரிக்க பயன்படும் 50 கிலோ வேதிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் சர்வதேச மதிப்பு ரூ.2,000 கோடி.கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது தமிழ் சினிமா திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் என்று குற்றம் சாட்டப்பட்டது. இதனால், பிரச்சினை தீவிரமாகியது. இடையில் சுமார் 10 நாட்கள் என்னவாயிற்று என்று தெரியவில்லை.

25-02-2024 – திமுகவிலிருந்து ஜாபர் சாதிக்கை நிரந்தரமாக நீக்கியது:  திமுகவில் ஸ்டாலின் முதல் மற்ற தலைவர்களுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வெளியாகி வருவதாலும், பிரச்சினை போதைமருந்து விவகாரமாக இருப்பதாலும், திமுக இவரை கைக்கழுவத் தீர்மானித்தது போலும். இதையடுத்து, திமுகவில் இருந்து அவர் நிரந்தமாக நீக்கப்பட்டார்[3]என்ற செய்தி வந்துள்ளது. கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால்[4], அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் அ.ஜாபர் சாதிக்கை நிரந்தரமாக நீக்கி திமுக பொதுச் செயலாளர்  துரைமுருகன் உத்தரவிட்டு இருந்தார்[5]. “அயலகம்,” என்ற ரீதியில், வெளிநாட்டு தொடர்புகள் இனி எதை வெளிகாட்டும் என்றும் கவனிக்கலாம்[6]. திமுக என்றாலே, பொதுவாக “சிறுபான்மையினர்” அதிலும் முஸ்லிம்களுக்கு சாதகமாக இருக்கும் கட்சி என்று அறியப் படுகிறது. கோயம்புத்தூர் காஸ்-சிலின்டர்-குண்டுவெடிப்பில் “விபத்து” என்று ஆரம்பத்தில் பாட்டுப் பாடியது. அதுபோல இல்லாமல், மருந்து என்பதால், நடவடிக்கை எடுத்திருப்பது புரிகிறது.

இறைவன் மிகப்பெரியன்தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் குறித்து அமீர் அறிக்கை: இறைவன் மிகப் பெரியவன் திரைப்படத்தின் ஜாபர் சாதிக் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமானால்[7], அது கண்டிக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுமே.! என இயக்குநர் அமீர் அறிக்கை வெளியிட்டுள்ளார்[8]. “ஜாபர் சாதிக் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமானால்,” என்றால், இவ்வளவு நடந்ததும் பொய்யா அல்லது இவர் நம்பவில்லையா என்று தெரியவில்லை. மேலும் தான் விசாரணைக்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்[9]. இதைப் பற்றி ஒரு வீடியோவையும் வெளியிட்டிருப்பது தெரிகிறது[10]. சினிமாவில் செக்யூலார் போர்வையில் இவர்கள் கம்யூனலாக வேலை செய்வதும், அரசியல் ஆதரவு இருப்பதும் தெரிகிறது. பொதுவாக ஊருக்கு உபதேசம் என்ற பெயரில், வன்முறைக் காட்சிகளை வைத்துக் கொண்டு தான், இவர்கள் படங்களை எடுத்து வருகிறார்கள்.

26-02-2024 நேரில் ஆஜராகும் படி ஜாபர் ஜாதிக்கு நோட்டீஸ்: இந்நிலையில், போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக, தங்கள் அலுவலகத்தில் பிப்ரவரி 26-ம் தேதி 2024 அன்று நேரில் ஆஜராகுமாறு டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார், கடந்த 23-ம் தேதி பிப்ரவரி, ஜாபர் சாதிக் சாந்தோம் அருளானந்தம் தெருவில் உள்ள வீட்டில் சம்மன் (அழைப்பாணை) ஒட்டினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவரையும், அவரது கூட்டாளிகளையும் பிடிக்கதனிப்படை அமைக்கப்பட்டது. அவர்களை தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். வீட்டில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வீட்டை பூட்டிவிட்டு ஜாபர் சாதிக் தலைமறைவாக இருக்கும் நிலையில் பூட்டை உடைத்துக் கொண்டு அதிகாரிகள் வீட்டுக்குள் புகுந்தனர்[11]. பின்னர் அங்கு சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களை கைப்பற்றினார்கள்[12]. நேற்று பகல் 12 மணி அளவில் தொடங்கிய இந்த சோதனை இரவு 8 மணி வரை நீடித்துள்ளது. இந்த சோதனையின்போது போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சோதனை முடிந்து வீட்டைவிட்டு வெளியேறிய அதிகாரிகள் அதிரடியாக வீட்டுக்கு சீல் வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்[13]. இதற்கிடையே தலைமறைவாக உள்ள ஜாபர் சாதிக் எங்கிருக்கிறார்? என்பது தெரியவில்லை[14].

© வேதபிரகாஷ்

03-03-2024


[1] விகடன், ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கும் திமுகவிலிருந்து ஜாபர் சாதிக் நீக்கமும்!, எஸ்.மகேஷ், Published:25 Feb 2024 9 PM; Updated: 25 Feb 2024 9 PM

[2] https://www.vikatan.com/crime/drug-trafficking-case-zafar-sadiq-permanently-expelled-from-dmk

[3] ஜீ.நியூஸ், போதைப்பொருள் விவகாரம்: ஜாபர் சாதிக் திமுகவில் இருந்து டிஸ்மிஸ்துரைமுருகன் அதிரடி!, Written by – S.Karthikeyan | Last Updated : Feb 25, 2024, 04:41 PM IST.

[4] https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-expels-film-producer-jaffer-sadiq-over-drug-smuggling-allegations-490451

[5] நக்கீரன், ஜாபர் சாதிக் திமுகவில் இருந்து நீக்கம்‘-துரைமுருகன் அதிரடி நக்கீரன் செய்திப்பிரிவு, Published on 25/02/2024 | Edited on 25/02/2024

[6] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/removal-jaber-sadiq-dmk-duraimurugan-takes-action

[7] புதியதலைமுறை, தண்டிக்கப்பட வேண்டியதுதான்”-’இறைவன் மிகப்பெரியன்தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் குறித்து அமீர் அறிக்கை!, Angeshwar G, Published on: 26 Feb 2024, 11:11 pm

[8] https://www.puthiyathalaimurai.com/cinema/director-ameer-states-on-accused-jaffer-sadiq

[9] தந்திடிவி, வசமாய் சிக்கிய ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் விவகாரம்நான் விசாரணைக்கு தயார்..” இயக்குநர் அமீர் வெளியிட்ட வீடியோ, By தந்தி டிவி 1 மார்ச் 2024 10:45 AM

[10] https://www.thanthitv.com/News/TamilNadu/ameer-dirctor-249422

[11] மாலைமலர், ஜாபர் சாதிக் வீட்டுக்கு சீல் வைப்பு  By மாலை மலர், 29 பிப்ரவரி 2024 8:40 AM; (Updated: 29 பிப்ரவரி 2024 11:37 AM).

[12] https://www.maalaimalar.com/news/state/jaffer-sadiq-house-sealed-705520

[13] தமிழ்.இந்து, திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கின் சென்னை வீட்டுக்கு `சீல்வைப்பு, செய்திப்பிரிவு, Published : 01 Mar 2024 04:56 AM; Last Updated : 01 Mar 2024 04:56 AM

[14] https://www.hindutamil.in/news/crime/1208658-former-dmk-executive-jaffer-sadiq-s-chennai-house-sealed-by-delhi-police.html

அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது – சீமானின் பேச்சு, எதிர்ப்பு, கண்டனம் மற்றும் மிரட்டல் (2)

ஓகஸ்ட் 4, 2023

அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டதுசீமானின் பேச்சு, எதிர்ப்பு, கண்டனம் மற்றும் மிரட்டல் (2)

சீமான்இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் தி.மு.. செய்த ஒரு நன்மையைச் சொல்லுங்கள். நான் கட்சியை கலைத்துவிட்டுப் போகிறேன்: இதற்குப் பிறகு, சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தபோது பேசியதாவது: “தொடர்ச்சியாக 18% வாக்கை தி.மு.. காங்கிரசிற்குப் போடுகிறார்கள். பிறகு மாற்றம் எப்படி வரும்? எதிர்க்கட்சியாக இருக்கும்போது இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்வதாகச் சொல்வார்கள். ஆட்சிக்கு வந்த பிறகு செய்ய மாட்டார்கள். எங்களுக்கு உரிமை இருக்கிறது, ஆதங்கம் இருக்கிறது என்பதால் சொல்கிறோம். இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் தி.மு.. செய்த ஒரு நன்மையைச் சொல்லுங்கள். நான் கட்சியை கலைத்துவிட்டுப் போகிறேன். நான் எவ்வளவோ பேசியிருக்கிறேன், அதையெல்லாம் விட்டுவிட்டு, சாத்தானின் பிள்ளைகள் என்று பேசிவிட்டாரே என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள்,என்று குறிப்பிட்டார்.

சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தொடர்ந்து பேசியதாவது: மணிப்பூரில் இருந்து வந்து நமக்கு யாரும் ஓட்டு போடப்போவதும் இல்லை. அதை பற்றி நாம் ஏன் பேச வேண்டும். இங்கு இருக்கக்கூடிய கிறிஸ்துவர்களும் நமக்காக வாக்களிக்கப்போவது கிடையாது. நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம், இஸ்லாத்தையும் கிறிஸ்துவத்தையும் ஏற்றுக்கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று. அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகளாகிவிட்டது, என்று கூறி இருந்தார். அதோடு நிற்காமல், சும்மா போய் தேவாலயத்தில் தேவரே வாரீர் வாரீர் என்று பாடிவிட்டு, கடைசியில் யார் யாருக்கோ நாட்டை கொடுத்து இருக்கிறார்கள். இந்த நாட்டில் நடந்திருக்கும் அநீதி அக்கிரமங்களுக்கு பெரிய பொறுப்பு,” என்றும் கூறி சர்ச்சையை கிளப்பி இருந்தார். அவரின் இந்த பேச்சு பெரிய சர்ச்சையான நிலையில் சீமானின் பேச்சுக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் விமர்சனங்களை வைத்தன. அதேபோல் சில இஸ்லாமிய அமைப்புகள் சீமானுக்கு எதிராக காவல் நிலையத்திலும் புகார் வைத்தன.

சீமான் மன்னிப்பு கேட்டால் என்ன ஓட்டா கிடைக்கும்?: இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம் செய்தியாளர்கள் இந்த பேச்சு குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான், ”மன்னிப்பு கேட்டுவிட்டேன் என்றால் எனக்கு ஓட்டு போட்டுவிடுவார்களா? வருத்தம் தெரிவிக்க வேண்டியது எனது மக்கள்தான். என்னைப் போன்று நிற்போரை ஆதரிக்காமல் நடுத்தெருவில் போராட விட்டது யாரு? அநீதிக்கு எதிராக போராடிய ஒரே ஒருவர் பழனிபாபாதான். அவரையே நீங்கள் மதிப்பதில்லையே. அவரையே அநியாயமாக சாக விட்டவர்கள்தானே. மானமுள்ள தமிழன் திமுகவிற்கு ஓட்டு போடுவானா என கேட்டவர் பழனி பாபா. அதனால் அவரைப்பற்றி பேச மாட்டார்கள். அவரை விடவா நான் பேசிவிடப் போகிறேன். அவரே உங்களுக்கு ஒரு பொருட்டல்ல நானெல்லாம் ஒரு பொருட்டா? முதலில் அண்ணன் ஜவாஹிருல்லா கலைஞரைப் பற்றி பேசியதை கேட்டுள்ளீர்களா? முதுகில் குத்திய துரோகி எனக் கலைஞரை பேசியுள்ளார்[1]. ஆனால் இப்பொழுது அங்கு ஒரு சீட்டுக்காக நிற்கிறீர்கள்” என்றார். சீமானின் பேச்சு சர்ச்சையான நிலையில் மதக் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் திராவிட நட்பு கழகம் அமைப்பு சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது[2].

மதம், சாதியை விட எல்லா அடையாளங்களையும் விட மொழி இனம் தான் பெரியது: சீமான் தொடர்ந்து பேசியது ‛‛மதம், சாதியை விட எல்லா அடையாளங்களையும் விட மொழி இனம் தான் பெரியது. முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் தமிழன். பெரும்பான்மை தேசிய இனத்தின் மகன். வந்தவன், போனவன் எல்லாம் சிறுபான்மையினர்சிறுபான்மையினர்என சொல்பவர்களை செருப்பால் அடிப்பேன்,” என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்[3]. சென்னையில் நிருபர்களை சந்தித்த சீமான் கூறியதாவது[4]: முஸ்லீம்கள், கிறிஸ்தவர்களுக்கு காங்கிரஸ், தி.மு.க., ஏதாவது நல்லது செய்தது உண்டா? மதத்தை வைத்து மனித கூட்டத்தை கணக்கிட்டது எங்கேயாவது உள்ளதா? ஐரோப்பிய யூனியன் முழுவதும் கிறிஸ்தவர்கள் இருந்தாலும், பல நாடுகள் இருப்பதற்கு காரணம் மொழி வாரியாக தேசிய இனங்கள், நிலங்கள் உள்ளது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்ததற்கு காரணம் மதம். பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் பிரிந்ததற்கு காரணம் மொழி. மதம், சாதியை விட எல்லா அடையாளங்களையும் விட மொழி இனம் தான் பெரியது. இங்குள்ள கிறிஸ்தவனும், இஸ்லாமியனும் தமிழன்.. பெரும்பான்மையான தமிழ் தேசிய இனத்தின் மகன். வந்தவன், போனவன் எல்லாம் சிறுபான்மையினர்… சிறுபான்மையினர்… எனக்கூறினால் செருப்ப கழட்டி அடிப்பேன். வெறி கொண்டு இருக்கேன். மதத்தின் அடிப்படையில் மனிதர்களை பிரிப்பதை ஏற்க முடியாது. ஸ்டாலின் முதல்வர். உதயநிதி அமைச்சர். இன்பநிதிக்கு, அரசு விழாவில் என்ன வேலை. தலைதலைமுறையாக ஆட்சி செய்து கொண்டுள்ளீர்கள். உங்கள் குடும்பத்திற்கு என் நாடு பட்டா போட்டு கொடுக்கப்பட்டு உள்ளதா. மக்கள் உங்களுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்து உள்ளனரா? இவ்வாறு சீமான் கூறினார்.

சீமான் எழுப்பியுள்ள சில கேள்விகள்: ஊடகக்காரர்களைப் பார்த்டு நேரிடையாக சீமான் எழுப்பியுள்ள கேள்விகள்…தேசம், நாடு, மொழி, இனம், மதம், என்ற காரணிகளில் இந்த சித்தாந்திகளுக்கு எழுப்பப் பட்ட கேள்விகள்:

  1. காஷ்மீரில் இஸ்லிமிய பெரும்பான்மை தானே, ஆனால், ஒட்டுமொத்தமாக முஸ்லிம்களை சிறுபான்மையினர் என்று எப்படி சொல்ல முடியும்?
  2. மனிதன் தன்னுடைய மூலத்தை, மதம் மாற்றிக் கொள்ளக் கூடியது மொழியை, மொழி இனத்தை  மாற்றிக் கொள்ளமுடியாது.
  3. நேற்றைக்கு திலீப், இன்று ஏ.ஆர்.ரஹ்மான்; நேற்றைக்கு பெரும்பான்மை, இன்றைக்கு சிறுபான்மையா? கேவலமாக இல்லை.
  4. என்னுடைய அப்பா இளையராஜா பெருபான்மை, யுவன் ஷங்கர் ராஜா சிறுபான்மை;  போனவாரம் அவர் பெரும்பான்மை, இந்த வாரம் அவர் சிறுபான்மை;
  5. இந்த மாதிரியான உலக பைத்தியக்காரத்தனம் எங்கேயாவது இருக்கிறதா தம்பி?

ஒருவேளை, மதமாற்றத்தை எதிர்க்கிறாரா என்றும் யோசிக்க வேண்டியுள்ளது. இருப்பினும், சீமான் தமிழ்-தமிழர்-தமிழர் சயம் என்றால் எல்லாமே ஒன்று என்று விளக்கம் கொடுத்து விடுவார்.

கம்யூனிஸ்டுகளின் எதிர்ப்பு திகைப்பாக இருக்கிறது: சீமான் குறிப்பிட்டதைப் போலவே, அவர் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பேராசிரியர் அருணன், க. உதயகுமார் ஒருங்கிணைப்பில் ஹிந்து என். ராம், டி.எம். கிருஷ்ணா, பேராசிரியர் வசந்தி தேவி, திரைப்படக் கலைஞர் ரோஹிணி ஆகியோரை உள்ளடக்கிய தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சீமானின் இந்தப் பேச்சைக் கண்டித்துள்ளது[5]. “இவரின் நோக்கம் தெளிவானது. பா... எதிர்ப்பு வாக்குகள் சிதற வேண்டும். அதன் மூலம் பா... அணி வெற்றிபெற வேண்டும் என்பது. இந்தச் சதி வேலைக்கு இணங்காமல் சிறுபான்மையினர் தி.மு.. அணிக்கு வாக்களிப்பதே இவரது ஆத்திரத்திற்குக் காரணம். அதனால்தான் சாத்தானின் பிள்ளைகள் என்று படுமோசமான வசவு மொழியை உதிர்த்திருக்கிறார்,” என அந்த அமைப்புச் சுட்டிக்காட்டியுள்ளது[6]. மொழி,இனம், நாடு, தேசம், மொழி-இனம், தேசிய-இனம் போன்ற அவர்களது விருப்பமான விசயங்களை விடுத்து, அவற்றையும் மீறி சீமானை அரசியல் தேர்தல், ஓட்டு என்ற ரீதியில் விளக்கம் கொடுத்து எதிர்த்திருப்பது கவனிக்கத் தக்கது.

© வேதபிரகாஷ்

04-08-2023


[1] நக்கீரன், சீமான் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார், Published on 02/08/2023 (18:59) | Edited on 03/08/2023 (07:35)

[2] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/complaint-against-seeman-police-commissioners-office

[3] தினமலர், சிறுபான்மையினர் என சொல்பவர்களை செருப்பால் அடிப்பேன்: சீமான், பதிவு செய்த நாள்: ஆக 03,2023 14:00

[4] https://m.dinamalar.com/detail.php?id=3394025

[5] பிபிசி, கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை சாத்தானின் குழந்தைகள் எனக் கூறியது ஏன்? சீமான் விளக்கம், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர், 2 ஆகஸ்ட் 2023; புதுப்பிக்கப்பட்டது 3 ஆகஸ்ட் 2023; https://www.bbc.com/tamil/articles/clewz1d27nno

[6] https://www.bbc.com/tamil/articles/clewz1d27nno

அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகி விட்டது – சீமானின் பேச்சு, எதிர்ப்பு, கண்டனம் மற்றும் மிரட்டல் (1)

ஓகஸ்ட் 4, 2023

அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டதுசீமானின் பேச்சு, எதிர்ப்பு, கண்டனம் மற்றும் மிரட்டல் (1)

தமிழக அரசியல்வாதிகளின் முரண்பட்ட சித்தாந்தங்கள்: தேர்தல் வருகின்றது என்றால் அரசியல்வாதிகள் என்னவேண்டுமாலும், எப்படி வேண்டுமானாலும் பேசுவார்கள். ஒரு கொள்கைப் பிடிப்பற்ற, ஏன் கொள்கையற்ற, சித்தாந்த உதறல்களாகக் கூட பேச்சுகள் இருக்கும். கூட்டணி மயக்கம், போதை, பேரம் என்றெல்லாம் வந்து விட்டால், இப்பேச்சுகள் இன்னும் அதிகமாகி விடும். தமிழக, திராவிட, திராவிடத்துவ அரசியலில் பிரிவினைவாதம், திராவிடஸ்தான், திராவிடநாடு, தமிழ்நாடு, மாநில சுயயாட்சி, தமிழ் தேசியம், திராவிட தேசியம், மொழிபேசும் தேசிய இனங்கள், ஆரியன்,திராவிடன், வடுகண், வந்தேறி, குந்தேறி என்று விரிந்து கொண்டே போகும். மேனாட்டு பிரஹஸ்பதிகள் அவ்வப்பொழுது தங்களது தேவைக்கு ஏற்ப, இத்தகைய சித்தாந்தங்களை கருத்தியல், கருதுகோள், மாதிரி, உத்தேச வடிவம் என்ற ரீதியில் முன்வைப்பர், மற்றவர் மூலம் கருத்து பெற முயற்சிப்பர். பிறகு அவை தமக்கு உபயோகப் படும், லாபம் கிடைக்கும் என்றால், விஞ்ஞான முறையில் மெய்ப்பிக்கப் பட்டது என்று முலாம் பேசி  சுற்றில் விட்டு ஒத்திகைப் பார்ப்பர்.

மதஆதரவும், ஓட்டு வங்கியும், அரசியலும்: மணிப்பூர் கலவரத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் ஜூலை 30-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய சீமான்[1], “ஒவ்வொரு கலவரத்தின் பின்னணியிலும் பண வேட்டை இருக்கும். மணிப்பூர் கலவரத்திற்கும் அது தான் காரணம். ஆழ்ந்து பார்த்தால், மலைகளில், காடுகளில் வாழ்கிற பழங்குடி மக்கள் கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பா..விற்கு வாக்கு செலுத்த மாட்டார்கள். தரை தளத்தில் வாழும் மெய்த்தி இன மக்கள், இந்துத்துவ கோட்பாட்டை ஏற்கும் மக்களாக இருக்கிறார்கள். அதனால், அங்கே பழங்குடி இன மக்கள் சாவதைப் பற்றி அவர்களுக்கு கவலையில்லை. நமக்கும் இது நடந்துள்ளது. ஒகி புயலில் மீன் பிடிக்கச் சென்ற 200-க்கும் மேற்பட்டோர் இறந்து போய்விட்டனர். வலிமை மிக்க கடற்படையை வைத்திருக்கும் நம் நாடு, அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று எண்ணவே இல்லை. மக்கள் போராடியும் எந்த மதிப்பும் அதற்கு தரவில்லை. கடைசியாக, ‘உயிரற்ற உடலையாவது ஒப்படையுங்கள், மரியாதையான நல்லடக்கம் செய்கிறோம்என்று கூட போராடினார்கள். அப்போது கண்டுகொள்ளவில்லை. அதற்கு காரணம், அவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள், அவர்கள் வாக்கு நமக்கு வரப்போவதில்லை என்பதால் கண்டுகொள்ளவில்லை.

திராவிட அரசியல், தேசிய அரசியல், கலவரங்கள்: சீமான் தொடர்ந்து பேசியது[2],தேச ஒற்றுமையை பேச வக்கற்ற, தகுதியற்றவர்கள் தான் திரும்ப திரும்ப தேச ஒற்றுமை பற்றி பேசுகிறார்கள். திடீரென இவர்கள் புனிதர்களாகிவிடுவார்கள். அதை நாம் நம்ப வேண்டும். குஜராத் கலவரத்தை நாடாளுமன்றத்தில் ஆதரித்து பேசியவர்கள் தி.மு..வினர். இவர்கள் மணிப்பூர் கலவரத்தைப் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? 76-வது நாளில் பேசுகிறீர்கள். 76 நாளில் என்ன செய்தீர்கள்? தேர்தல் வருகிறது, அதனால் பேசுகிறீர்கள். அங்கு பாதிக்கப்படும் கிறிஸ்தவர்களை வைத்து, இங்குள்ள கிறிஸ்தவர்களிடம்உனக்காக பேசுகிறோம்என்பதை காட்டுவதற்காக பேசுகிறார்கள். நான் ஈழத்தைப் பற்றி பேசிய போது, ‘அரசியலுக்காக பேசுகிறார்கள்என்று கூறியவர்கள் தான், இன்று மணிப்பூர் கலவரத்தைப் பற்றி பேசுகிறார்கள். தேர்தல் ஆதாயத்திற்காக இவர்கள் பேசுகிறார்கள். ஆஊனா கட்டுச்சோறு கட்டிக்கிட்டு நடைபயணம் கிளம்பிவிடுகிறார்கள். குஜராத் மாடல் மாதிரி, திராவிட மாடல் மாதிரி நடைபயணம் ஓல்டு மாடல். ராகுல் காந்தி, நடையா நடந்தார், ஒன்னும் நடக்கல போய்ட்டார். 9 ஆண்டுகள் ஆட்சி செய்துவிட்டு இப்ப தான் என்ன பிரச்னை என்று கேட்க வருகிறார்கள். பிரச்னையே நீங்க தானே!

மதரீதியிலான ஓட்டு வங்கி நிரந்தரமல்ல?: சீமான் தொடர்ந்து பேசியது, மணிப்பூர் விவகாரத்தை நாம் பேசுவதால், நமக்கு அங்குள்ள மக்கள் ஓட்டுப் போடப்போவதில்லை. இங்குள்ள கிறிஸ்தவர்களும் நமக்கு ஓட்டுப் போடப் போவதில்லை. நாம நினைத்துக் கொண்டிருக்கிறாமே், இஸ்லாமையும், கிறிஸ்துவத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று. ஆனால் அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது[3]. சும்மா தேவாலயத்திற்கு போய்தேவனே வாரீர்.. வாரீர்னு,’ பாடிட்டு, எவனிடமோ நாட்டை கொடுத்துவிட்டார்கள்[4]. இந்த நாட்டில் நடந்த அநீதிக்கு பெரிய பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் தான். தொடர்ச்சியாக பல ஆண்டுகுள் 18 சதவீதம் வாக்குகளை தி.மு..வுக்கும், காங்கிரஸிற்கும் போட்டு போட்டு நாட்டை தெருவில் போட்டவர்கள் இவர்கள் தான். சலிக்க முடியாத ஊழல், லஞ்சம், சீர்கேடான நிர்வாகம், காரணம் இவர்கள் தான். இவர்கள் பாவம் கேட்கிறார்கள். பெரும்பாவமே அவர்கள் தான், அவர்களுக்கு எப்படி மன்னிப்பு கிடைக்கும். இன்னும் பாருங்கள், இவர்கள் தான் எங்களை பாதுகாப்பார்கள் என்று நம்புகிறார்கள். இஸ்லாமியர்களுக்கு தி.மு. தான் பாதுகாப்பு. ஆமாம், சிறையில் வைத்து பல ஆண்டுகளாக பாதுகாப்பது எவ்வளவு பெரிய பாதுகாப்பு? மீண்டும் இதே இஸ்லாமியர்களிடம் அவர்கள் ஓட்டு கேட்பார்கள். இந்த முறையும் அதே பொய்யை சொல்லி ஓட்டு கேட்பார்கள்[5]. நீங்கள் அவவர்களை விடுதலை செய்யுங்கள், நாம் தமிழர் கட்சியும் உங்களுக்கு வாக்களிக்கும்,என்று அந்த ஆர்பாட்டத்தில் சீமான் பேசினார்[6].

சீமான் பேசிற்கு ஊடகங்கள் இப்பொழுது அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது: சீமான் பேசும் பேச்சுகளில் பெரும்பாலாக லாஜிக், விசயம் இருக்கும் என்பது போல இருக்கும். இருப்பினும், சில நேரங்களில் தாராளமாக தமாஷான பேச்சு போல சிலவற்றை எடுத்து விடுவார். அந்த பேச்சுகளில் உள்நோக்கம் இருக்கிறதா-இல்லையா என்பது ஆராய வேண்டிய நிலையில் தான் உளளது. போதாகுறைக்கு யூ-டியூபாக மாறும் அல்லது சுற்றுக்கு வரும் பேச்சுகளில் உண்மைத் தன்மை 30-50% கூட இருப்பதில்லை. ஒரு சிறிய விசயம் கிடைத்தால், அதை ஊதி பெரிதாக்கி, தமக்குத் தான் எல்லாம் தெரியும் என்ற ரீதியில், வீடியோக்கள் தயாரித்து சுற்றில் விடுகின்றனர். பொழுது போக வேண்டும் என்று ஆயிரக்கணக்கில் மக்கள் பார்க்கின்றனர். அவர்களுக்கு உண்மை, உண்மைத் தன்மை, அதாரம் பற்றியெல்லாம் கவலையில்லை. சில நேரங்களில் அரசியல், வெறுப்புப் பேச்சு, காழ்ப்பு-வெறுப்பு போன்றவை சேரும் பொழுது விப்ரீதமாகிறது. எல்லா பேச்சுகளையும், எல்லோரும், ஒரே மாதிரியாக எடுத்துக் கொள்வ்தில்லை முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சமூக ஊடக பதிவுகளை வைத்து செய்திகளைத் தயாரிப்பது என்பது இக்கால செய்தி தயாரிப்பு முறையாக உள்ளது. அவ்விதத்தில், சீமான் பேசிற்கு ஊடகங்கள் இப்பொழுது அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளன என்று தெரிகிறது.

இஸ்லாமையும், கிறிஸ்துவத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள்  –ஜவாஹிருல்லா கண்டனம்: இந்த ஆர்ப்பட்டத்தில்,இஸ்லாமையும், கிறிஸ்துவத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று. ஆனால் அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது.” என்று சீமான் பேசியது தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையானது. .. பொதுச் செயலாளர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்ததோடு சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், “இந்த கயமைத்தனமான பேச்சு வன்மையான கண்டனத்துக்கு உரியது. தன் கட்சிக்கு வாக்களிக்காத காரணத்தினாலேயே கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் சாத்தானின் பிள்ளைகள் என்று வர்ணிப்பது அநாகரிகமானது, அருவருப்பானது, என்பதோடு அரசியல் நேர்மையற்ற செயலுமாகும். இதை வன்மையாக கண்டிக்கிறோம்,” என்று ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்தார்.

© வேதபிரகாஷ்

04-08-2023


[1] தமிழ்.ஒன்.இந்தியா, காலை காட்டி சொன்னஅந்தவார்த்தை.. சீமான் அரசியலுக்கு என்னாச்சு? கொதித்து போன இஸ்லாமியர்கள்! திடுக், By Shyamsundar I Published: Thursday, August 3, 2023, 14:20 [IST]

[2] https://tamil.oneindia.com/news/chennai/why-naam-tamilar-party-seeman-attack-muslims-and-christians-all-of-a-sudden-526569.html

[3] தமிழ்.ஹிந்துஸ்தான்.டைம்ஸ், Seeman Speech: ‘இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சாத்தானின் குழந்தைகள்சீமான் பகீர் பேச்சு!  , Stalin Navaneethakrishnan • HT Tamil, Jul 31, 2023 09:21 AM IST

[4] https://tamil.hindustantimes.com/tamilnadu/ntk-chief-coordinator-seeman-talks-about-muslims-and-christians-131690773683412.html

[5] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், சாத்தானின் குழந்தைகள் என பேசியது ஏன்? சீமான் விளக்கம், Written by WebDesk, August 3, 2023 01:18 IST.

[6] https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-electricity-employees-have-done-electricity-calculations-without-going-to-homes-734464/

திராவிட மேடைப் பேச்சாளர்களின் நாரசார அநாகரீக வார்த்தைப் பிரயோகம், பெண்மையைத் தூற்றும் போக்கு, மரத்துப் போன அல்லது சொரணையற்ற வசனங்கள் ஏற்றுக் கொள்ளப் படும் விதம்!

ஒக்ரோபர் 28, 2022

திராவிட மேடைப் பேச்சாளர்களின் நாரசார அநாகரீக வார்த்தைப் பிரயோகம், பெண்மையைத் தூற்றும் போக்கு, மரத்துப் போன அல்லது சொரணையற்ற வசனங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் விதம்!

திராவிட மேடைகளில், திராவிட பாரம்பரியங்களில் இப்பேச்சுகள் எல்லாம் சகஜமப்பா தான்: திமுக மேடைப் பேச்சாளிகள் 1960களிலிருந்து, இப்பொழுது வரை ஆபாசமாக, கொச்சையாக, மோசமாக பேசிவருவது ஒன்றும் புதியதல்ல. இரட்டை அர்த்தங்களில், பொருட்களில், சைகைகளில் பேசுவது-பாடுவதும் திராவிட மேடைகளில் சகஜமானதே. கவிதை நடையில், யதுகை-மோனைகளுடன், சில நேரங்களில் பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும் கூட அத்தகைய பேச்சுகளைப் பேசுவது வழக்கமே. பெரியார் முதல் அண்ணன் வரை, அண்ணா தொடர்ந்து தம்பி வரை, அறிஞர் முதல் கலைஞர் வரை இதெல்லாம் சகஜமப்பா என்று தான் ஓடிக் கொண்டிருக்கின்றன. இப்பொழுது இந்த சாதிக உருவாகிருப்பதில் என்ற கழக சாதனையும் குறைந்து வி,டப் போவதில்லை. பிறகு, கொஞ்சம் நாகரிகம் கருதி, குறைத்துக் கொண்டாலும், வழக்கமான வார்த்தைகள் வெளிவந்து விடும். இப்பொழுது இதையெல்லாம் 60-70 வயதானவர்களுக்குத் தான் தெரியும். மற்றவர்கள் மறந்திருப்பார்கள்.

அநாகரிகமான, ஒழுங்கீன பேச்சாளர்கள் திமுகவில் உருவாகுவது எப்படி?: திமுக நிர்வாகி ஒருவர் பெண்கள் குறித்து சர்ச்சையாக பேசிய வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்கு குஷ்பு  கண்டனம் தெரிவித்திருந்தார்[1].  இந்நிலையில், இச்சம்பவத்திற்கு திமுக துணை பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி வருத்தம் தெரிவித்துள்ளார்[2]. திமுகவை சேர்ந்த நிர்வாகி ஒருவர் –  பிரபல பேச்சாளரான சைதை சாதிக் பொதுமேடையில் பெண்கள் குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது[3].  விமர்சனங்களும் எழுந்துள்ளன[4]. உண்மையில் திராவிட மாடலில், இந்த திராவிடியன் ஸ்டாக்குகள் மாறிவிட்டன என்றால், இத்தகைய ஒழுன்கீனமான, கொச்சையான, தரமில்லாத பேச்சுகள் வராது, வந்திருக்காது. ஆனால், ஊக்குவிப்பதால் தான், தொடர்ந்து அத்தகைய பேச்சாளர்கள் வளர்ந்து . வளார்க்கப் பட்டு வருகிறார்கள்.

ஆர்.கே.நகரில் திமுக பொதுக்கூட்டமும், சாதிக் பேசியதும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2வது முறையாக திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து சென்னை ஆர்.கே.நகரில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் உரையாற்றி திமுக பேச்சாளர் சைதை சாதிக், பாஜகவில் 4 நடிகைகள் இருக்கிறார்கள் என்று குஷ்பு, நமிதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோரை குறிப்பிட்டு ஒருமையில் பேசினார்[5]. “நாங்கள் வட சென்னையில் கட்சியை வளர்த்தோம். அந்த காலத்திலிருந்து அண்ணன் சீதாபதியில் இருந்து, டி.ஆர்.பாலுவிலிருந்து, பலராமனில் இருந்து, இளைய அருணா வரை திமுகவில் வளர்த்து உள்ளார். இன்னும் வளர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், பாஜகவில் இருக்கும் தலைவர்களை பொறுத்தவரை 4 பேருமே ****.” என்று ஆங்கிலத்தில் தவறான அர்த்தம் தரும் வார்த்தையை பயன்படுத்தினார்[6].  “இந்தியா டுடே” இதை வெளியிட்டுள்ளது[7]. சமீபத்தில் பெண்ணை “ஐட்டம்” என்று ஒரு தொழிலதிபர் சொன்னதற்கு, மும்பை நீதிமன்றம் ஒன்றரை ஆண்டு சிறைத்தண்டனை அளித்துள்ளது. ஆனால், இங்கோ மேடையில் ஒருவர் பேசுகிறார், வீடியோ சுற்றில் உள்ளது. சட்டப் படி எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.

அமித் ஷா தலையில் மயிர் முளைத்தாலும் முளைக்கும், ஆனால், தமிழகத்தில்………: தொடர்ந்து ஆதிக், “குஷ்பு தாமரை மலர்ந்தே தீரும் என்று தலை மேல் கையை உயர்த்தி சொல்கிறார்.” என்று ஒருமையில் பேசிய சாதிக், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தலைமுடி பற்றியும், “அமித் ஷா தலையில் மயிர் முளைத்தாலும் முளைக்கும், ஆனால், தமிழகத்தில்……….,” என விமர்சித்து பேசியுள்ளார். இதனை தொடர்ந்து குஷ்பு திமுகவில் இருக்கும்போது அவரை வைத்து இளைய அருணா கூட்டம் கூட்டியதை இரட்டை அர்த்தத்தில் சைதை சாதிக் பேச அங்கு சிரிப்பலை எழுந்தது. சுதாரித்துக்கொண்ட அவர் நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை, வம்பில் மாட்டிவிடாதீர்கள் என்று கூறி அங்கிருந்தவர்களை பார்த்து சிரித்தார். அக்டோபர் 4ஆம் தேதி, 2022 அன்று, திமுக கட்சிக் கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வார்த்தைகள் அல்லது செயலில் ஈடுபடும் கட்சித் தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்[8]. இது ராஜா முதல் சாதிக் வரை அனைவருக்கும் பொறுந்தும் என திமுகவினருக்குத் தெரிந்திருக்கும்[9]..

குஷ்பு எதிர்ப்புத் தெரிவித்தது: இந்நிலையில், நடிகை குஷ்பு இது தொடர்பாக தனது எதிர்ப்பை பதிவு செய்தார்[10]. ட்விட்டரில் அவர், ஆண்கள் பெண்களை துஷ்பிரயோகம் செய்தால், அது அவர்கள் வளர்த்த விதமான வளர்ப்பையும், அவர்கள் வளர்ந்த நச்சு சூழலையும் காட்டுகிறது[11]. இந்த ஆண்கள் ஒரு பெண்ணின் கருப்பையை அவமதிக்கிறார்கள்[12]. அத்தகைய ஆண்கள் தங்களை #கலைஞரின் பின்பற்றுபவர்கள் என்று அழைக்கிறார்கள்[13]. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் இதுதான் புதிய திராவிடமா” என்று கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், கனிமொழியையும் அவர் டேக் செய்திருந்தார். டுவிட்டரில் இது பற்றி நூற்றுக்கணக்கில் கருத்துகள் பதிவாகின. பொதுவாக அவை திமுகவினரை விமர்சித்தன.

கனிமொழி மன்னிப்புக் கேட்டது: இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மன்னிப்பு கேட்டுள்ள கனிமொழி, ‘ஒரு பெண்ணாகவும், மனிதனாகவும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். யார் செய்தாலும், சொல்லப்பட்ட இடம் அல்லது அவர்கள் கடைபிடிக்கும் கட்சி எதுவாக இருந்தாலும் இதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. திமுக இதை பொறுத்துக்கொள்ளாது. எனது தலைவர் ஸ்டாலினின் காரணமாக இச்சம்பவத்திற்கு என்னால் வெளிப்படையாக மன்னிப்புக் கோர முடியும்’ என பதிவிட்டுள்ளார். இந்நிலையில்,  வருத்தம் தெரிவித்த கனிமொழிக்கு குஷ்பூ நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மிக்க நன்றி கனி. உங்கள் நிலைப்பாட்டையும் ஆதரவையும் உண்மையிலேயே பாராட்டுகிறேன். ஆனால் நீங்கள்  பெண்களின் கண்ணியம் மற்றும் சுயமரியாதைக்காக எப்போதும் துணை நிற்கும் ஒருவராக இருந்திருக்கிறீர்கள்” என பாராட்டியுள்ளார்.

திராவிட மேடைப் பேச்சாளர்களின் நாரசார அநாகரீக வார்த்தைப் பிரயோகம், பெண்மையைத் தூற்றும் போக்கு, மரத்துப் போன அல்லது சொரணையற்ற வசனங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் விதம்: இதை மனோதத்துவ ரீதியில் அலசினால், தொடர்ந்து ஒரு செயலைச் செய்து கொண்டிருந்தால், அது கெட்டதாக இருந்தாலும், யாரும் தடுக்காமல், கண்டிக்காமல் இருந்தால், அச்செயல் ஏற்றுக் கொள்ளப் படும் செயலாகி விடும்[14]. உதாரணத்திற்கு, பேரூந்துகளில் படிகட்டுகளில் பிரயாணம் செய்வது போன்றவை. அதே போல, பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலை மாணவர்களே, கெட்ட வார்த்தைகளை சகஜமாக உபயோகப் படுத்தி வருகிறார்கள்.  மாணவிகளும், பெண்களும் கூட அவ்வாறே பேசி வருவதை பார்க்கலாம். ஒரு நிலையில் அது “புதிய நாகரிக” அடையாளமாகக் கூட தகவமைக்கப் படுகிறது. ஆனால், நிச்சயமாக அவை சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டவையோ, அங்கீகரிக்கப் பட்டவையோ கிடையாது. “மாப் மென்டாலிடி” போன்ற கூட்டமாக சேரும் போது, அத்தகைய மீறல்கள் ஏற்படுகின்றன. இவர்களே பல நேரங்களில், நிலைகளில் இரட்டை வேடம் போடுவதை கவனிக்கலாம்.

திராவிட பாரம்பரிய கெட்ட வார்த்தை பேச்சுகள்: ஆனால், திராவிடக் கட்சி மேடைப் பேச்சு பாரம்பரியத்தில், அத்தகைய அசிங்கமான-ஆபாசப் பேச்சுகள் கடந்த ஒரு நூற்றாண்டாக சாதாரணமாகி விட்டது[15]. சில கெட்ட வார்த்தைகள் பிரயோகிப்பாதை ரசிக்கவும் செய்கின்றனர். அதனால், அவை ஊக்குவிக்கப் பட்டு, அத்தகைய பேச்சாளர்கள் தயார் செய்யப் படுகிறார்கள். அதனால், மரத்துப் போன நிலை அதாவது, ஏற்றுக் கொண்ட நிலையில் அங்கீகாரம் கிடைத்ததாகி விடுகிறது. திராவிட கழகத்தினர் பேசும் பொழுது,பெண்கள் அங்கு நிற்கக் கூட முடியாமல், காதுகளை ஒப்பித்திக் கொண்டு ஓடிய நிலையையும் தமிழகத்தில், ஏன் சென்னையிலேயே பலர் பார்த்திருக்ககலாம். இப்பொழுது, விழிப்புணர்வு ஏர்பட்டுள்ளதால், பொது கூட்டங்களில் அத்தகைய நாரசாரத்தைக் குறைத்துக் கொன்டுள்ளார்கள். ஆகவே, இத்தகைய மனப்பாங்கு மாற வேண்டும். ஏனெனில், இதுவும் வார்த்தை தீவிரவாதம், பேச்சு பயங்கரவாதம் என்றாகி விடும். “தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு….,” என்பது தமிழர்களுக்கு, திராவிடர்களுக்கு,திராவிடத்துவவாதிகளுக்கு, திராவிட ஸ்டாக்கிஸ்டுகளுக்கு, திராவிட மாடல் பேச்சாளர்களுக்குத் தெரிந்திருக்கும்.

© வேதபிரகாஷ்

28-10-2022.


[1] தமிழ்.நியூஸ்.18, பெண்கள் குறித்து இழிவாக பேசிய திமுகவினர்குஷ்பூ முறையீடுமன்னிப்புக் கேட்ட கனிமொழி, Published by:Murugesh M, First published: October 27, 2022, 18:12 IST, LAST UPDATED : OCTOBER 27, 2022, 19:49 IST.

[2] https://tamil.news18.com/news/tamil-nadu/kanimozhi-apologies-to-bjp-kusboo-for-dmk-cadre-speech-826091.html

[3] தினத்தந்தி, குஷ்பு குறித்து திமுக நிர்வாகி ஆபாச பேச்சுமன்னிப்பு கேட்ட கனிமொழி எம்பி , By தந்தி டிவி 28 அக்டோபர் 2022 7:35 AM.

[4] https://www.thanthitv.com/latest-news/kanimozhi-apologize-kushboo-tweet-dmk-meeting-145059

[5] தமிழ்.ஒன்.இந்தியா, டபுள் மீனிங்”.. பாஜகவில் 4 நடிகைகள்.. திமுக பேச்சாளரால் குஷ்புவிடம் மன்னிப்பு கேட்ட கனிமொழி,  By Noorul Ahamed Jahaber Ali, Updated: Thursday, October 27, 2022, 22:31. IST.

[6] https://tamil.oneindia.com/news/chennai/kanimozhi-apologises-kushbu-for-dmk-executives-speech-482520.html

[7] While addressing a public meeting, Sadiq said, “All four leaders are items. Khushbu says that lotus will bloom in Tamil Nadu. I say that even hair will grow back in Amit Shah’s head, but lotus has no chance of blooming in Tamil Nadu.” He further said, “Do you all know how many times my brother Ilaya Aruna did Kushbu? I mean he had done meetings with her when she was in DMK. Nearly six times, he took Kushbu and had meetings in RA Puram.”

https://www.indiatoday.in/india/story/misinterpreted-says-dmk-leader-saidai-sadiq-apologises-derogatory-remarks-bjp-leader-khushbu-2290428-2022-10-28

[8] பிபிசி.தமிழ், குஷ்புவிடம் கனிமொழி கேட்ட மன்னிப்புதிமுக பிரமுகரின் சர்ச்சை பேச்சு விவகாரத்தில் நடந்தது என்ன?, 27 அக்டோபர் 2022.

[9] https://www.bbc.com/tamil/india-63416365

[10] தினமலர், குஷ்பு பற்றி தரக்குறைவாக பேச்சு: மன்னிப்பு கேட்டார் கனிமொழி, Added : அக் 28, 2022  07:37.

[11] https://www.dinamalar.com/news_detail.asp?id=3156293

[12] தமிழ்.ஏசியாநெட்.லைவ், ஆபாசமாக பேசிய திமுக பேச்சாளர்.. கண்டனம் தெரிவித்த குஷ்பு.. மன்னிப்பு கேட்ட கனிமொழி.. நடந்தது என்ன?, vinoth kumar, First Published Oct 28, 2022, 7:19 AM IST,

Last Updated Oct 28, 2022, 7:21 AM IST

[13] https://tamil.asianetnews.com/politics/dmk-cadre-controversy-speech-kanimozhi-apologies-to-bjp-kushboo-rkfx1u

[14]   திரைப் படங்களில் இத்தகைய ஒழிங்கீனங்கள் நாகரிகமாக அல்லது ஏதோ ஏற்றுக் கொள்ள்ப் பட்டவை போல காட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதனை, மக்கள் ரசிக்கும் வரையில் சென்றடைந்து உள்ளன.

[15]  இது பெரியார் முதல் இக்காலம் வரையில் காணலாம்…….உடன் பிறவா சகோதரர்களே, ரத்தத்தின் ரத்தமே, போன்றவை உதாரணத்திற்கு சொல்லலாம்.

ஒன்றிய அரசு என்று ஆரம்பித்து, அறநிலைத்துறை வழியாக நீட்டாக பயணித்து, துணைவேந்தர் பதிவுக்கு வந்து, கவர்னரை ராஜினாமா செய் என்று முடிந்துள்ள திமுக-ஆட்சி – விளம்பர அரசியலா, உண்மையான மோதலா? (2)

ஜனவரி 7, 2022

ஒன்றிய அரசு என்று ஆரம்பித்து, அறநிலைத்துறை வழியாக நீட்டாக பயணித்து, துணைவேந்தர் பதிவுக்கு வந்து, கவர்னரை ராஜினாமா செய் என்று முடிந்துள்ள திமுகஆட்சி விளம்பர அரசியலா, உண்மையான மோதலா? (2)

இடையிடையே சூர்யா வெற்றிகொண்டானின் நாகரிகமற்ற பேச்சுகள்: டிவி விவாதங்களில் கலந்து கொள்ளும் சூயா வெற்றிகொண்டான் என்பவரின் பேச்சை, வார்த்தைகளை, முகபாவங்களை கூர்ந்து கவனித்தால், அவரது அநாகரிகமான வார்த்தைப் பிரயோகங்களைக் கவனிக்கலாம். ஒருமையில் தலைவர்களைக் குறிப்பிடுவது முதலியன சரியாக இல்லை என்று சுருக்கமாக சொல்லலாம். ஜெயலலிதா பற்றி வரும் போது, அந்த பேச்சுகள் கொடுமையாக இருக்கின்றன.  ஏதோ அதிமுககாரர்கள் தான் அவரைக் கொன்று விட்டனர் என்பது போல பேசியது திகைப்பாக இருந்தது. ஜெயலலிதா என்ன புரட்சி செய்தார், ரஜினி ஆட்சி மாற்றம் வேண்டும் என்றா, ஆனால் கிட்னியைத்தான் மாற்றினார், என்றெல்லாம் பேசியுள்ளதை கவனிக்கலாம்.

1950-70கள் பேச்சுகள் 2022ல் தொடரகின்றனவா?: 1950-70களில்தமிழகத்தை பொறுத்த வரையில், ஈவேரா, அண்ணா, கருணாநிதி போன்ற திராவிடத்துவத் தலைவர்கள் மற்றும், அணுகுண்டு ஆறுமுகம், இரா. வெற்றிக் கொண்டான், தீப்பொறி சண்முகம் என்ற அடுத்த கட்ட மேடைப் பேச்சாளர்கள், 1950களிலிருந்தே, ஆபாசமாக, அருவருப்பாக, இரட்டை அர்த்தத்தில் செக்ஸ் தொணியில் பேசுவது வழக்கமாக, வாடிக்கையாக இருந்து வந்தது. இன்னொரு பக்கம் எதிர்கட்சித் தலைவர்களை கேவலமாகப் பேசுவர். அப்பொழுதெல்லாம், இரவு 10-11 மணிக்கு மேல், காலை 2 மணி வரை நடக்கும், இத்தகைய கூட்டங்களுக்கு பிரத்யேக கூட்டம் இருக்கும். நடுவில் ஜனரஞ்சகமாக இருக்க எஸ்.ஏ. அசோகன் போன்றோரையும்  பேச வைப்பது உண்டு. அவர் பேசிக் கொண்டே நடித்துக் காட்டுவார், நடித்துக் கொண்டே கிண்டலாக பேசுவார். இதற்ககென்றே தனிக் கூட்டம் வரும். உடன்பிறப்புகளே, ஒரு தாய் மக்களே, போன்றவற்றிற்கு சிறப்பான விளக்கமுமளிக்கப் படும். பிறகு திரைப்படம், திரைப்பட பாடல்கள், நாடகம், சினிமா என்று டிவி வந்தது. இவற்றிலும் அந்த ஆபாச-நகச்சுவை தொடர்ந்தது. பிறகு பட்டிப் பன்ற கலாச்சாரத்திலும் புகுந்தது.

1980-90களில் டிவி-பட்டிமன்றம்   மக்களின் நேரவிரயத்திற்கு அதிகமாகப் பயன் பட்டது. அந்நிலையில், பாப்பையா, லியோனி போன்றோர் பிரபலமாகினர். ஆபாச-கொக்கோக பேச்சுகளுக்கு லியோனி, தனி பிரான்ட் தான்! இப்பொழுது இரா வெற்றிகொண்டான் மகன் அதே பாதையைப் பின்பற்றுவது தெரிகிறது! 2016ல் “தீப்பொறி ஆறுமுகத்தை தாக்கி நாக்கை அறுக்க முயற்சித்தனர்…,” என்று ஸ்டாலின் நினைவு கூர்ந்ததை கவனிக்கலாம்[1]. நினைவஞ்சலியில் இது நினைவு வந்ததையும் கவனிக்கலாம்[2]. அதாவது அந்த அளவுக்கு தூண்டும் வகையில் கலவரத்தை உண்டாக்கும் வகையில் வன்மத்துடன் பேசுவர். இருப்பினும், பொதுமக்கள் இவர்களது குணாதசியங்களைக் கண்டு, ஒதுங்கி சென்று விடுவர்.

மறுபடியும் கோவில்கள் பிரச்சினைஸ்டாலின் தலைமையில் குழு: தமிழகத்தில் கோயில்களின் பராமரிப்பை செம்மைப்படுத்த, பக்தர்களின் வசதியை மேம்படுத்த முதல்வர் ஸ்டாலின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது[3]. திமுக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு அறநிலையத்துறையில் பல்வேறு முக்கிய நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது[4]. அதன்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகர், தமிழில் அர்ச்சனை, கோயில்களின் பராமரிப்பு செலவிற்கு நிதி ஒதுக்கீடு உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளது[5]. இந்த நிலையில் கோவில்களை மேம்படுத்த உயர்நிலை ஆலோசனைக் குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது[6]. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 17 பேர்கள் கொண்ட இந்த குழுவின் துணை தலைவராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நியமிக்கப்பட்டுள்ளார்[7].  மேலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அறநிலையத்துறை செயலாளர், இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் ஆகியோர் பதவி வழி அலுவல் சார் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர். அலுவல் சாரா உறுப்பினர்கள் அடங்கிய குழுவில், கீழ்கண்டவாறு இடம்பெற்றுள்ளனர்[8].

  1. ஸ்டாலின், முதலமைச்சர்.
  2. சேகர் பாபு, அறநிலையதுறை அமைச்சர்.
  3. அறநிலையத்துறை செயலாளர்,
  4. இந்துசமய அறநிலையத்துறை ஆணையர்
  5. தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்,
  6. ஶ்ரீமத் வராக மகாதேசிகன்,
  7. ஶ்ரீலஶ்ரீ அம்பலவாண தேசிய பரமாச்சாரிய சுவாமிகள்,
  8. சாந்தலிங்க மருதாசல அடிகளார்,
  9. நீதியரசர் டி.மதிவாணன் (ஓய்வு),
  10. சு.கி.சிவம்,
  11. கருமுத்து கண்ணன்,
  12. சத்தியவேல் முருகனார்ர்,
  13. இராமசுப்பிரமணியன்,
  14. தரணிபதி ராஜ்குமார்,
  15. மல்லிகார்ஜூன் சந்தான கிருஷ்ணன்,
  16. ஶ்ரீமதி சிவசங்கர்,
  17. தேச மங்கையர்க்கரசி

ஜெயா பாதையில் மோதலா, கூட்டணிக்கு பேரமா?: ஆளுநருக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை எடுத்த ஜெயலலிதா மீது 1995-ல் ஜெயலலிதா மீது ஊழல் வழக்கை பதிய ஆளுநர் அனுமதி அளித்து அதிர்ச்சியூட்டினார். இதற்கு ஜெயலலிதா தரப்பில் பதிலடி தொடர்ந்தது. அதில் ஒன்றாக, பல்கலைக்கழகங்களில் வேந்தரின் அதிகாரத்தை ஆளுநரிடமிருந்து மாநில முதல்வருக்கு மாற்றி சட்டத் திருத்தம் கொண்டுவந்தார் ஜெயலலிதா. அந்த சட்டத் திருத்தத்துக்கு ஆளுநரின் அனுமதி தேவைப்பட்டது. ஆனால், ஆளுநர் கையெழுத்திடவில்லை. 1996-இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, அந்த மசோதா மீது அன்றைய திமுக அரசு ஆர்வம் காட்டவில்லை[9]. அதனால், அந்த சட்ட மசோதா செயல்பாட்டுக்கு வரவில்லை. ஆனால், அதிரடியாக ஜெயலலிதா எடுத்த நடவடிக்கை பெரும் விவாதமானது. இன்று ஸ்டாலினும் ஜெயலலிதா எடுத்த அதேபோன்ற முடிவைதான் எடுத்துள்ளார்[10]. மார்ச் மாதத்தில் திமுக அரசு, சட்டத் திருத்தம் கொண்டு வந்தாலும், அதற்கு ஆளுநரின் ஒப்புதல் தேவை[11].  தன் அதிகாரங்களைக் குறைத்துக்கொள்ள ஆளுநரே ஒப்புக்கொள்வாரா, மத்திய அரசின் பிரதிநிதியாகச் செயல்படும் ஆளுநர் அதற்கு இணங்குவாரா  என்ற கேள்வியும் இதில் அடங்கியுள்ளது[12]. அப்படி ஆளுநர் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டால்தான், அது செல்லுபடியாகும். எனவே, இந்த விவகாரத்தில் வெல்லப்போவது யார் என்பதை அறிய பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

© வேதபிரகாஷ்

07-01-2022


[1] தமிழ்.ஒன்.இந்தியா, தீப்பொறி ஆறுமுகத்தை தாக்கி நாக்கை அறுக்க முயற்சித்தனர்…. மு..ஸ்டாலின் நினைவஞ்சலி, By Mayura Akilan Published: Monday, November 7, 2016, 8:44 [IST]

[2] https://tamil.oneindia.com/news/tamilnadu/mk-stalin-pays-tribute-theepori-arumugam-266542.html?story=3

[3] தினகரன், தமிழகத்தில் கோவில்கள் பராமரிப்பை மேம்படுத்த முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 17 பேர் குழு அமைப்பு!!, 2022-01-07@ 08:56:19.

[4] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=733312

[5] புதியதலைமுறை, கோயில்களை மேம்படுத்த முதல்வர் ஸ்டாலின் தலைமையில் குழு அமைப்பு, தமிழ்நாடு, Jnivetha, Published : 07,Jan 2022 08:10 AM

[6] https://www.puthiyathalaimurai.com/newsview/126529/Committee-arranged-by-Chief-Minister-Stalin-to-improve-temples

[7] தினத்தந்தி, கோவில்களை மேம்படுத்த முதல்அமைச்சர் மு..ஸ்டாலின் தலைமையில் குழு அமைப்பு, பதிவு: ஜனவரி 07,  2022 09:45 AM

[8]  https://www.dailythanthi.com/News/State/2022/01/07094531/Committee-structure-headed-by-ChiefMinister-MK-Stalin.vpf

[9] ஏசியாநெட்நியூஸ், தமிழக ஆளுநருக்கு செக்.. ஜெயலலிதாவின் அஸ்திரத்தையே கையில் எடுக்கும் ஸ்டாலின்ஜெயிக்கப் போவது யார்..?,  Asianet Tamil Chennai, First Published Jan 6, 2022, 9:38 PM IST   Last Updated Jan 6, 2022, 9:44 PM IST

[10] https://tamil.asianetnews.com/politics/check-to-the-governor-of-tamil-nadu-stalin-who-will-take-jayalalithaa-s-ashes-in-his-hand-who-is-going-to-win–r5aq6i

[11] டாப்.டமிள்.நியூஸ்,  “அப்போ ஜெயலலிதா; இப்போ ஸ்டாலின்” – ஆளுநரின் அதிகாரத்தை பறிக்க மசோதா விரைவில்…!, By MATHIPRAKASH R Thu, 6 Jan 20222:40:48 PM.

[12] https://www.toptamilnews.com/politics/mk-stalin-about-new-bill-on-appointment-of-v-c-of/cid6181620.htm


ஒன்றிய அரசு என்று ஆரம்பித்து, அறநிலைத்துறை வழியாக நீட்டாக பயணித்து, துணைவேந்தர் பதிவுக்கு வந்து, கவர்னரை ராஜினாமா செய் என்று முடிந்துள்ள திமுக-ஆட்சி (1)

ஜனவரி 7, 2022

ஒன்றிய அரசு என்று ஆரம்பித்து, அறநிலைத்துறை வழியாக நீட்டாக பயணித்து, துணைவேந்தர் பதிவுக்கு வந்து, கவர்னரை ராஜினாமா செய் என்று முடிந்துள்ள திமுகஆட்சி (1)

இந்துவிரோத ஸ்டாலினை வைத்து கோவிலுக்கு விளம்பரம்: இந்து அறநிலையத் துறையை வைத்துக் கொண்டு, திமுக தினம்-தினம்யாரசியல் செய்து செய்திகளை வெளியிட்டு வருகிறது. முரசொலியிலேயே அத்தகைய விளம்படங்க்ளக் காணலாம். உதாரணத்திற்கு, இந்த படம் கொடுக்கப் படுகிறது.

  • மேகங்கள் சூழ ஆகாயம், வானளாவ இரண்டு கோபுரங்கள், நடுவில் ஸ்டாலின் உதயமாவது போல, ஏதோ ஆவி திடீரென்று தோன்றுவதுபோல, சிரித்த முக்த்துடன் ஸ்டாலின் உருவம் மங்கலாகக் காணப்படுகிறது.
  • இது காத்து-கருப்பு வேலையா, கருப்பர் கூட்டம் திட்டமா, கருப்பு-சிவப்பு கூட்டணி யுக்தியா…….இது கோவில்களை எப்படி. எவ்வாறு பாதிக்கும் என்று தெரியவில்லை.
  • ஒரு நாத்தினுக்கு, பெரியாரிஸ்டுக்கு, இந்துவிரோதிக்கே எந்த மாதிரியான ஆசை எல்லாம் வருகிறது?
  • பிறகு இல்லை என்றால், அவ்வாறு படம் போடாதே என்று ஆணை இட்டுயிருக்க வேண்டும்!
  • குங்குமம், விபூதி, சந்தனம் துடைத்தெறிந்தது போல, செய்தியிருக்க வேண்டும் ஆனால், செய்யவில்லையே?

இந்து அறநிலையத் துறையை வைத்து திமுக விளம்பரம்: இன்னொரு விளம்பரத்தில் கோவில் நிர்வாகிகளை வைத்து, ஒரு விளம்பரத்தை கொடுத்துள்ளது. அதில், கோவிலுக்கு தண்ணிர் குழாய் வைத்துத் தர கோரியுள்ளது.

 மக்கள் தான் தண்ணீர் குழாய் அமைத்துக் கொடுக்க வேண்டுமா?

  • இந்து அறநிலையத் துறை செய்யாதா?
  • அந்த எம்.எல்.ஏ கருணாநிதி தொகுதி நிதியிலிருந்து எடுத்து பணி செய்யலாமே?
  • பிறகு எதற்கு “ சில கஷ்டங்கள்” உள்ளன என்று கூற வேண்டும்?
  • கருணாநிதி, ஸ்டான் படங்கள் போடும் போது அவர்கள் தானம் கொடுக்கலாமே?
  • துர்கா ஸ்டாலினும் செய்யலாமே?

இவ்வாறு, விளம்பர அரசியல், இந்து அறநிலைத் துறையை பீடித்துள்ளது. சேகர்பாபு சொல்லி வைத்தால் போல, ஒருநாள் அது, அடுத்த நாள் இது, இன்னொரு நாள் எது என்ற “அது-இது-எது” பாணியில் வலம் வந்து கொண்டிருக்கிறார். ஊடகங்களும் செய்திகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றன.

நீட் அரசியலும், மட்திய அரசு எதிர்ப்பும்கவர்னர் ராஜினாமா செய்ய வேண்டுமாம்: நீட்டை ஒழிப்போம் என்று தேர்தல் வாக்குருதி கொடுத்து அரசியலை ஆரம்பித்தது. ராஜன் கமிட்டி அமைத்து கருத்தைத் திணித்தது. ஆனால், நீட் நடந்தது, மருத்துவ அனுமதியும் முடிந்து விட்டது. அந்நிலையில், மறுபடியும் அரசியல் செய்ய, தீர்மானம் பெயரில் கலாட்டா செய்கிறது. இதுபற்றி பேசிய டி.ஆர்.பாலு, நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதா நிலுவையில் இருப்பதற்கு ஆளுநர் தான் பொறுப்பு. எனவே, சட்டத்தை மதிக்காத ஆளுநர் உடனே பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்[1]. உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்திக்க 3வது முறையாக அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், உள்துறை அமைச்சகத்தில் மீண்டும் மனு அளிக்கப்பட்டுள்ளது என்றும் டி.ஆர்.பாலு கூறினார்[2]. எந்த மசோதாவும் கவர்னர் மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். அது சட்டம்-நீதிட்துறையில் அலசப் பட்டு, பிறகு பாராளுமன்றத்திற்கு வரும். விவாதித்து, முடிவெடிக்கப் படும்.  எல்லைகளில் சீனப்படைகளின் அட்டூழியம், எல்லைமீறல்கள், காஷ்மீரத்தில் தினம்-தினம் தீவிரவாதிகளின் கொட்டம், மும்பையில் தொற்று நுழைவுகள், வடகிழக்கு மாநிலங்களில் உள்நுழைவு பிரச்சினைகள், இவற்றையெல்லாம் விடுத்து, எங்களை பார்க்கவில்லை என்பது நிச்சயமாக இல்லாததை இருப்பது போல காட்டிக் கொள்ளும் பாவம் தான்.

கனிமொழிக்கு வாழ்த்து சொன்ன அமித் ஷா: கனிமொழி பிறந்த நாளுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் ஆகியோர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர் என்று தமிழ் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன[3]. திடீரென்று இதற்கு முக்கியத்துவம் கொடுப்பது விசித்திரம்மாக உள்ளது[4]. இருப்பினும், திராவிடத்துவ தலைவர்களுக்கு அத்தகைய நாகரிகம் உள்ளதா என்று தெரியவில்லை. இதே கனிமொழி மோடி, அமித் ஷா பற்றிப் பேசியுள்ளதை கவனித்தால் தெரியும். இப்பொழுதும், மோடி வருகைப் பற்றி ஒரு “தாக்குதல்-எதிர்ப்பு” ரீதியில் தான் பேச்சுகள் உள்ளன. கனிமொழிக்கு வாழ்த்து சொல்ல நேரம் இருக்கும் பொழுது, திமுகவினரை சந்திக்க நேரமில்லையா என்று கேட்பார்கள் போலிருக்கிறது.

மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு ஸ்டாலின் கண்டனம்: நீட் தேர்வுக்கு விலக்கு மசோதா பற்றி கடிதம் கொடுக்க மத்திய அமைச்சர் அமித்ஷா நேரம் கொடுக்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்[5]. அப்போது, நீட் தேர்வுக்கு விலக்கு மசோதா பற்றி கடிதம் கொடுக்க அனைத்து கட்சி எம்.பி.க்களை சந்திக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரம் கொடுக்கவில்லை. இது மக்களாட்சி தத்துவத்துக்கு எதிரானது. நீட் தேர்வு விலக்கு மசோதா ஆளுநரால் இன்னும் குடியரசுத் தலைவருக்கும் அனுப்பப்படவில்லை[6]. இதனால் இது குறித்து பேச  கடந்த பத்து நாட்களாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க தமிழக அனைத்து கட்சி எம்பிக்கள் முயற்சி செய்து வந்தனர்.   நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா நிலுவையில் இருப்பதற்கு ஆளுநர் தான் பொறுப்பு.  இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கச் சென்றார்கள்.   மூன்று முறை அனுமதி கேட்டும் மூன்று முறை அனுமதி ரத்து செய்யப்பட்டிருக்கிறது.  நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி மீண்டும் மீண்டும் மனு அளிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிப்பதற்கான தீர்மானம்: இவ்வாறு வருகிற மார்ச் மாதம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்[7]. மசோதா முலம் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்றார்[8].  எதிர்க்கட்சிகள் ஆளும் சில மாநிலங்களில் ஆளுநர்களுக்கும் முதல்வர்களுக்கும் இடையே சமீபகாலமாக மோதல் ஏற்பட்டிருப்பதற்கு பல்கலைக்கழகங்கள் தொடர்பான விவகாரங்கள் முக்கியக் காரணமாக இருக்கின்றன[9]. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், ஆளுநர் ஜகதீப் தங்கருக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவிவருகிறது. மகாராஷ்டிராவிலும் கேரளாவிலும், அரசுக்கும் ஆளுநர்களுக்கும் இடையிலான மோதல் தற்போது தீவிரடைந்திருக்கிறது. மாநிலத்தில் பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர்கள் வேந்தர்களாக இருப்பதால், துணைவேந்தர்கள் நியமனம் போன்றவை இவர்களின் மோதலுக்கு முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. மத்திய அரசின் பிரதிநிதிகளாக மாநில ஆளுநர்கள் நியமிக்கப்படும் நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளுகிற மாநிலங்களில் மாநில அரசுக்கும், ஆளுநர்களுக்கும் நல்ல புரிதல் இருக்கும் பட்சத்தில், இரு தரப்புக்கும் இடையே சுமுகமான உறவு நிலவும். அப்படியான சுமுகநிலையை ஒருசில மாநிலங்களில் பார்க்க முடியும். ஆனால், எதிர்க்கட்சிகள் ஆளுகிற மாநிலங்கள் பலவற்றில் இரு தரப்புக்கும் இடையே முட்டலும் மோதலும் இருப்பதையே பார்க்க முடிகிறது[10].

© வேதபிரகாஷ்

07-01-2022


[1] தினத்தந்தி, தமிழக கவர்னர் ராஜினாமா செய்ய வேண்டும்திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, ஜனவரி 05, 07:00 PM

[2] https://www.dailythanthi.com/amp/News/State/2022/01/05190004/Governor-of-Tamil-Nadu-should-resign.vpf

[3] தினமலர், கனிமொழி பிறந்த நாள்: அமித் ஷா வாழ்த்து, Added : ஜன 06, 2022  01:53; https://www.dinamalar.com/news_detail.asp?id=2930583

[4] https://www.dinamalar.com/news_detail.asp?id=2930583

[5] தினமணி, நீட் தேர்வுக்கு விலக்கு மசோதா: அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம், By DIN  |   Published on : 06th January 2022 11:54 AM.

[6] https://www.dinamani.com/tamilnadu/2022/jan/06/exemption-bill-for-neet-exam-chief-minister-stalins-condemnation-of-amit-shah-3769086.html

[7] தினகரன், பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் தீர்மானம்: சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் என முதல்வர் மு..ஸ்டாலின் உறுதி, 2022-01-07@ 00:14:52.

[8] https://www.dinakaran.com/news_detail.asp?Nid=733222

[9] விகடன், முதல்வர் Vs ஆளுநர்வேந்தர், துணைவேந்தர் பதவிகள்அதிகார மோதல் எதற்காக?!, ஆ.பழனியப்பன், Published:Yesterday at 11 AMUpdated:Yesterday at 11 AM.

[10] https://www.vikatan.com/government-and-politics/education/tussle-between-governor-and-chief-ministers-over-appointments-of-vice-chancellors

திராவிட 2.0 போர்வையில் திராவிடத்துவ மாயைகளின் மீது அதாரமாக, புதிய திராவிடத்துவ மாயைகளை உண்டாக்கும் யுக்தி! திமுகவுக்கு வக்காலத்து வாங்கும் மெய்கீர்த்தி! (1)

ஒக்ரோபர் 15, 2021

திராவிட 2.0 போர்வையில் திராவிடத்துவ மாயைகளின் மீது அதாரமாக, புதிய திராவிடத்துவ மாயைகளை உண்டாக்கும் யுக்தி! திமுகவுக்கு வக்காலத்து வாங்கும் மெய்கீர்த்தி! (1)

திமுகவைத் தூக்கிப் பிடிக்க மெய்கீர்த்தி போல பாடிய பொருளாதார பாட்டு: ஒவ்வொரு கட்சிக்குக் ஆஸ்தான வித்வான்கள் போல, நிபுணர்கள், விற்பனர்கள், பண்டிதர்கள், கவிக்கள், கவிக்கோக்கள், கலைமாமணிகள் என்றெல்லாம் இருப்பார்கள். பணம், பதவி, விருது, அந்தஸ்து கொடுக்கும் நிலையில், அவர்கள் ஆட்சியாளர்களை அவ்வாறு பலன்களைக் கொடுப்பவர்களை வாழ்த்தித் தான் பாடுவார்கள். தொழிற்துறை மற்றும் வல்லுனத்திற்கு சிறிதும் தொடர்பில்லாமல் இருந்தாலும், எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் மீறி, கிண்டி இஞ்சினியரிங் காலேஜுக்கு அண்ணா பெயரை வைத்தனர். ஈவேராவுக்கும் வானியலுக்கும் சம்பந்தமே இல்லையென்றாலும், “பெரியார் கோளரங்கம்,” என்று வலுக்கட்டாயமாக பெயரை வைத்தார்கள். அதுபோல, இப்பொழுது, “டிராவிடியன் மாடல்,” என்றாலோ, “திராவிடன் 2.0” என்றாலோ, யாரும் கவலைப்படப் போவதில்லை. பணம், பதவி, விருது, அந்தஸ்து என்று கொடுப்பதால் அல்லது கிடப்பதால், இதைப் பற்றி படித்தவர்கள் திரித்து எழுதுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. மேலும், அந்த கட்டுரைகளைப் படித்துப் பார்த்தால், திமுகவிற்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு, வலுக் கட்டாயமாகத் திரித்து எழுதப் பட்டுள்ளவை என்றும் தெரிகிறது. கலையரசன் கட்டுரை பத்திகளுக்கு, கீழே தலைப்புகள் மூலமே பதில் சொல்லப் பட்டுள்ளன. அவற்றை விரித்தால், விளக்கம் கொடுக்கும்.

திராவிடம் 2.0 – கலையரசன்: சில மாதங்களுக்கு முன்பு ஆங்கிலத்தில் வெளியான ‘திராவிட மாடல்’ (Dravidian Model) எனும் புத்தகம் தமிழ் வாசகப் பரப்பில் பெரும் அதிர்வை உண்டாக்கியது[1]. இதன் ஆசிரியர்களில் ஒருவர் கலையரசன். சென்னையில் உள்ள எம்.ஐ.டி.எஸ் (MIDS) எனும் வளர்ச்சிக்கான ஆய்வு நிறுவனத்தில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணிபுரிந்த இவர், இப்போது உலகப் பல்கலைக்கழகங்களில் சிறப்பு ஆய்வாளராக இருக்கிறார். சமீபத்தில் ‘தி இந்து’ ஆங்கிலப் பத்திரிகையில் ஒரு முக்கியமான கட்டுரையை எழுதியிருந்தார். ‘திராவிடம் 2.0: எதிர்கால செயலுக்காக சிந்திப்பதற்கான நேரம்’ என்பது அதன் தலைப்பு. அந்தக் கட்டுரையின் சாராம்சத்தைப் பார்ப்போம்[2], என்று  இப்பொழுது அக்டோபர் 2021ல் குமுதம் வெளியிட்டுள்ளது[3].

ஈவேராஅண்ணாகருணாநிதி மாயை: தமிழகத்தை ஆளும் திமுக அரசு, பெரியார் ஈ.வெ.ராமசாமி, சி.என்.அண்ணாதுரை, மு.கருணாநிதி போன்ற திராவிட இயக்கத் திருவுருவங்களைப் புத்தூக்கத்துடன் கொண்டாடிக்கொண்டிருக்கிறது[4]. இந்நிலையில், தமிழ்நாடு மாநிலத்தையே மாற்றத்துக்குள்ளாக்கிய திராவிட இயக்கக் கொள்கைகளைத் திரும்பச் சென்று பார்க்கும் தேவையும் உள்ளது[5]. ஆற்றல் மிக்க உற்பத்தித்திறன் கொண்ட பொருளாதாரமாக முன்னிறுத்துவதோடு, குடிமக்களுக்கு அருமையான நலத்திட்டங்களையும் சேர்த்துத் தமிழ்நாடு மிக முன்னேறிய நவீன மாநிலமாக இன்று திகழ்கிறது[6]. அமைப்புரீதியாக அது அடைந்த மாறுதல் கணிசமானது. உழைப்பு ஆற்றல் சார்ந்து 30%-க்குக் குறைவானவர்களே விவசாயத்தில் இருக்க, உச்சபட்சமாக நகர்மயமான, மிகப் பெரிய தொழில்துறை உழைப்பு ஆற்றலைக் கொண்டிருக்கும் மாநிலம் இது. இந்த மாறுதல் நிச்சயமாக புதிய வாய்ப்புகளையும், குறிப்பாக அடிநிலை சாதிகள், பட்டியலினத்தோர் மற்றும் பெண்களையும் உள்ளடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் புதியதொரு சவால்களையும் உருவாக்கியுள்ளன. இது ‘இரண்டாம் தலைமுறை’ சந்திக்கும் சவால்கள்.

உழைப்பு திராவிடத்துவத்தால் வரவில்லை, அது திராடத்துவ ஊழலை வென்று நடந்த நிலை: முதல் தலைமுறை திராவிடக் கொள்கைகள், அனைவருக்குமான நீதியை உறுதிப்படுத்தும் செயல்பாட்டில் காட்டிய புதுமையான அணுகுமுறையின் மூலம் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கல்வி மற்றும் ஆரோக்கிய சேவைகள் சென்று சேரும் வண்ணம் அளவீட்டுரீதியான அணுகுமுறைகளைக் கையாண்டது. அத்துடன் சாதிரீதியான உழைப்பாளர்களைக் கூலிரீதியான உழைப்பாளர்களாக மாற்றியது[7]. இரண்டாம் தலைமுறை திராவிடக் கொள்கையாளர்கள் கல்வி, ஆரோக்கியம், சாதி மற்றும் பாலினப் பிரச்சினைகள் தொடர்பில் தரம் தொடர்பான அணுகுமுறைகளைக் கையாள வேண்டியிருக்கிறது. அத்துடன் அதிகாரப்பரவலாக்கம் கொண்ட நிர்வாகத்தையும் அவர்கள் கைக்கொள்ள வேண்டும்.

முடிவுகளை தேர்ந்தெடுத்து செய்யப் படும் ஆய்வுகளினால் எந்த பலனும் இல்லை: ஒரு சாதியினர் இந்தத் தொழில்தான் செய்யவேண்டுமென்ற அடிப்படையை, தொழில்துறை சார்ந்து உருவான, பரவலான மாற்றம் உடைத்துவிட்டது. ஆனால், இந்த மாற்றத்தினால் தரமான வேலைகள் போதுமான அளவு உருவாகவில்லை. விவசாயத்துக்கு வெளியே நிலையில்லாத, உத்தரவாதமற்ற வேலைகள்தான் இருக்கின்றன. சமீபத்தில் வெளிவந்த பீரியாடிக் லேபர் ஃபோர்ஸ் சர்வேஸ் (2018-2019) ஆய்வு விவரங்களின் அடிப்படையில் பார்த்தால், அமைப்புசாரா துறைகளில் 62% பணியாளர்கள் இருப்பதாகவும் 82% உழைப்பாளர்கள் எந்தச் சமூகப் பாதுகாப்பும் இல்லாமல் இருப்பதாகவும் தெரிகிறது. நிலையான வேலை, நிலைத்த வருவாயில் உள்ளவர்களிலும் 75.2% பேரிடம் எழுத்துரீதியான பணி ஒப்பந்தம் இல்லை. தமிழ்நாடு கடந்த மூன்று தசாப்தங்களில் உருவாக்கிய மோசமான கல்விச்சூழலின் விளைவுதான், இந்த முறையில்லாத நிலையும் அதன் விளைவாக ஏற்பட்ட கூலி சமனின்மையும் என்றே சொல்லலாம்[8].

கல்வித் திறன் புள்ளிவிவரங்களினால் தீர்மானிக்கப் படுவது இல்லை, படிப்புத் திறனை வைத்து வருவது: இந்தியக் கல்வி முறையில் இருந்த உயர் வர்க்கத்தினரின் ஆதிக்க நிலைமைக்குச் சவால்விடுத்து, அனைவருக்குமான பள்ளிக்கல்வியில் தமிழ்நாடு முன்னோடியாக விளங்கினாலும், அதிலும் பிரச்சினைகள் இல்லாமல் இல்லை. ஒன்றியக் கல்வி அமைச்சகம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, கற்றல்ரீதியான பலன் அடிப்படையில் ஆய்வு செய்தபோது, தென்மாநிலங்களில் கடைசி நிலையில் தமிழகம் உள்ளது. செயல்திறன் மதிப்பீட்டுக் குறியீடு – 2019-20 அறிக்கை இது. எட்டாம் வகுப்பு படிப்பவர்களில் நான்கில் ஒரு மாணாக்கருக்கு இரண்டாம் வகுப்புப் பாடப் புத்தகத்தை வாசிக்கத் தெரியவில்லை. சாதாரண வகுத்தல் கணக்கு போட 50% மாணவர்களால் இயலவில்லை. கற்றலின் தாக்கத்தின் அடிப்படையில் கல்லூரிக்குச் செல்வது நிர்ணயிக்கப்படும் நிலையில், அது வேலைச் சந்தையிலும் பிரதிபலிக்கிறது. மொத்த சேர்க்கை விகிதத்தில் உயர் கல்விக்குச் செல்லும் தமிழ்நாட்டின் சாதனை 51.4% ஆகும். அகில இந்திய சராசரி 27.1%-தான். ஆனாலும், வேலைச் சந்தையில் தரத்தை எட்டுவதற்குத் தமிழ்நாட்டின் இந்தச் சாதனை உதவவில்லை[9].

© வேதபிரகாஷ்

15-10-2021


[1] இப்படி தனக்குத் தானே ஜால்றா போட்டுக் கொள்வதால் எந்த பிரயோஜனமும் இல்லை. வியாபார மற்றும் குடும்ப ரீதியில் “தி ஹிந்து” மற்றும் கருணாநிதி-தயாநிதி-கலாநிதி குழுமங்கள் இணைந்துள்ளதால், அவ்வாறு வக்காலத்து வாங்குவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை.

[2]  குமுதம், திராவிடம் 2.0, – ஏ.கலையரசன், பொருளியல் ஆய்வு அறிஞர், ‘தி இந்து’, தமிழில் : ஷங்கர்

[3] http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=18606&id1=4&issue=20211010

[4] தமிழ்.இந்து, திராவிடம் 2.0 – பரிசீலனைக்கும் நடவடிக்கைக்குமான வேளை, செய்திப்பிரிவு, Published : 04 Oct 2021 03:11 AM; Last Updated : 04 Oct 2021 06:38 AM.

[5] https://www.hindutamil.in/news/opinion/columns/722758-dravidian-movement-2.html

[6]  இதற்கும் திராவிடத்துவத்திற்கும், திராவிடத் தலைவர்களுக்கும் சம்பந்தம் இல்லை. இருக்கும் தொழிற்சாலை, மற்ற வியாபார-வணிக, தொழிற்நுட்ப காரணங்களினால், சென்னையில் தொழிற்சாலைகளை வைத்துள்ளான. குறிப்பாக துறமுகம்-விமானநிலையங்கள் அருகில் உள்ளன, தென்கிழக்காசிய நாடுகளுடன் தொடர்புகள் எளிதில் வைத்துக் கொள்ளலாம்.,

[7] இறகு வியாபாரங்களை ஜாதிகளால் கட்டுண்டு கிடக்கும் செய்த நிலையில், தொழிலாளர்கள் சுரண்டும் நிலைகளில் தான் முடிந்துள்ளது. இப்பொழுதுள்ள முஸ்லிம்கள், நாடார்கள், செட்டியார்கள், முதலியார்கள், கவுண்டர்கள், வன்னியர்கள் என்றுள்ளவர்கள் தான் வியாபாரம்-வணிகங்களை ஒட்டு மொத்தமாக நடத்தி வருகிறார்கள்.

[8]  இப்படி ஒருபக்கம் கல்வியைக் குறை கூறிக்கொண்டு, இன்னொரு பக்கம் அதைத் தூக்கிப் பிடித்து விளக்க கொடுப்பது தமாஷாக இருக்கிறது. “மூன்று தசாப்தங்களில் உருவாக்கிய மோசமான கல்விச்சூழலின் விளைவு என்றால் அதற்கு பொறுப்பு திராவிடத்துவ அணுகுமுறைதான். நன்றாகப் படித்து, திறமையுடன் தேர்வுகள், போட்டித் தேர்வுகள் என்றிருக்கும் போது, பாடதிட்டங்களிலேயே பின்தங்கி இருந்தால், மற்றவர்களுக்கு சரியாக எப்படி போட்டி போட முடியும்?

[9]  இந்த முரண்பாட்டினை ஏற்கெனெவே எடுத்துக் காட்டியாகி விட்டது. அரசியலை நுழைத்து, பாடதிட்டங்களைக் கெடுத்து, திராவிடத்துவ அரசியல்வாதிகள், சினிமா போன்றவற்றை மட்டும் அறிந்து கொண்டுள்ள தமிழக மாணவ-மாணவிகள் என்ன செய்ய முடியும்?