Posts Tagged ‘பிணை’

தேவநாதனுக்கும் பிணை-விடுதலை!

பிப்ரவரி 19, 2010

தேவநாதனும், குஷியில் திளைக்கும் நிருபர்களும்! தேவநாதன் என்றாலே நிருபர்களுக்குக் குஷிதான்! பிளந்துக் கட்டுகிறர்கள். இதோ தலைப்புகள்:

·         தட் ஈஸ் தமிள் கூறுவதென்றால்[1], அசிங்க அர்ச்சகர் தேவநாதனுக்கு நிபந்தனை ஜாமீன்

·         தினத்தந்தி சொல்வது[2], “செக்ஸ் அர்ச்சகர் தேவநாதன் நிபந்தனை ஜாமீனில் விடுதலை …”!

·         தினகரன் சொல்வது[3], “அர்ச்சகர் தேவநாதன் ஜாமீனில் விடுதலை”!

பெண்களுடன் அசிங்கமாக நடந்து கொண்டு சிக்கினார்[4]: வெளியே, தலைப்பில் சொல்வது, “அசிங்க அர்ச்சகர் தேவநாதனுக்கு நிபந்தனை ஜாமீன்”! உள்ளேச் சொல்வதோ, “பெண்களுடன் அசிங்கமாக நடந்து கொண்டு…..”! தினத்தந்தி “செக்ஸ் அர்ச்சகர்” என்ற பட்டத்துடன் விளக்குகிறது! தினகரனோ, “அர்ச்சகர்” என்றே நிறுத்திக் கொள்கிறது!! இத்தகைய “ஊடக மரியாதை நிமித்தங்கள், வழக்குகள், பாரம்பரியங்கள்” முதலியவற்றை என்னுடைய முந்தைய கட்டுரைகளில் காணவும்[5]. ஊடகக்காரர்களின் செம்மொழி பாதிப்பு அதிகமாகவே உள்ளது [செம்மொழி = செம்மை + மொழி, செம் +மொழி, செ + மொழி, எனக்கொண்டால், தமிழ் புலவர்கள் அதற்கு என்ன அர்த்தம் என்று சொல்வார்கள்!]

ஜாமீனில் வெளியே வந்தால் தாக்கப்படலாம்: கோவில் கருவறையில் அசிங்கமாக நடந்து கொண்ட அர்ச்சகர் தேவநாதனுக்கு காஞ்சிபுரம் ஜுடிஸியல் மாஜிஸ்டிரேட் கோர்ட்- I நிபந்தனை ஜாமீன் அளித்துள்ளது. காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் கருவறைக்குள் பெண்களுடன் அசிங்கமாக நடந்து கொண்டு சிக்கினார் தேவநாதன். தற்போது வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீனில் வெளியே வந்தால் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் அவர் ஜாமீன் கோராமலேயே இருந்து வந்தார். தமிழ்நாட்டுக் காமக் கொடூர எதிர்ப்பின் மகிமையே அலாதிதான்!

“கற்பழிக்கப்பட்ட பெண்களின்” பரிசோதனை என்னவாயிற்று? தன்னைக் கற்பழித்து விட்டதாக புகார் கொடுத்த பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை நடந்து விட்டது என்றெல்லாம் செய்தி வந்ததே என்னவாயிற்று? ஹேமலதா மாதிரி அமுக்கிவிட்டார்களா?  அத்தகைய பரிசோதனைகளில் என்னத்தான் தெரியவரும்? தேவநாதன் உடலுறவு கொண்டிருந்தால் உண்மை தெரியவரும். மற்றவர் புனைத்திருந்தால் அந்த உண்மைகளும் வெளிவரத்தானே செய்யும்? இதில் ஒருத்தி விபச்சாரி என்று வேறு சொல்கிறார்கள்! அந்த விஷயம்தான் மறைக்கப்படுகிறதா?

இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை! பெண்களுடன் தகாத முறையில் நடந்து கொண்டதற்காக இந்திய குற்றாவியல் சட்டத்தின் பிரிவுகள் 295; 153-A மற்றும் 506 (ii) பிரிவுகளில் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குப் போடப்பட்டது[6]. இந்த நிலையில், நேற்று அவரை காஞ்சிபுரம் முதலாவது நீதித்துறை நடுவர் சுதா முன்பு போலீஸார் ஆஜர்படுத்தினர். அப்போது தேவநாதனின் காவலை மார்ச் 3ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். அப்போது தேவநாதனின் சார்பில் ஆஜரான வக்கீல், தேவநாதன் கைது செய்யப்பட்டு 90 நாட்களாகி விட்டது. இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே அவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதைப் பரிசீலித்த நீதிபதி, நிபந்தனை ஜாமீனில் – 2 நபர் ஜாமீனும், தலா ரூ. 5 ஆயிரம் சித்து பத்திரம் தாக்கல் செய்து விதலையாகலாம், அத்துடன் அவர் தினசரி காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும், வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். வெளியூர் செல்லக்ககடாது, என்ற நிபந்தனைகாளுடன் – தேவநாதனை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

தேவநாதன் வழக்கை விசாரித்து வந்த டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் திடீர் மாற்றம்[7]: இதென்ன கலாட்டா? தேவநாதன் வழக்கை விசாரித்து வந்த டி.எஸ்.பி. மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் திடீரென மாற்றப்பட்டு விட்டனர். இவர் குறித்த புகாரின் பேரில் சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன் அவர் மீது வழக்கு பதிவு செய்தார். கோர்ட்டில் சரண் அடைந்த தேவநாதனை காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினார். இந்த வழக்கு மாவட்ட குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. போலீஸ் டி.எஸ்.பி. விஜயராகவன் விசாரணையை தொடர்ந்தார். இந்நிலையில் தேவநாதன் வழக்கை முதலில் விசாரித்த இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன் திடீரென வேலூர் சரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அது போல் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. விஜயராகவன், கிருஷ்ணகிரிக்கு மாற்றப்பட்டுள்ளார். தற்போது சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பணியை கூடுதலாக மாவட்ட குற்ற ஆவணப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் கவனித்து வருகிறார். தாலுகா இன்ஸ்பெக்டராக சம்பத் நியமிக்கப்பட்டு இருக்கிறார்[8]. இதிலும், நிருபர்களின் தலைப்புகள் இதோ:

அப்படியென்ன, இதில் பிரச்சினை?

நவம்பர் 2009 கைதுகள், பிப்ரவரி 2010 விடுதலைகள்!: புவனேஸ்வரி பிரச்சினையைத் தொடர்ந்ததுதான் இப்பிரச்சினைகள்-விவகாரங்கள்!

  • வில் ஹியூம் 07-11-2009 அன்று கைது செய்யப்படுகிறான்.
  • 08-02-2010 அன்று விடுதலை செய்யப்படுகிறான்!
  • தேவநாதன் 16-11-2009 அன்று கைது செய்யப்படுகிறான்.
  • 18-02-2010 அன்று[10] விடுதலை செய்யப்படுகிறான்!
தேவநாதனுக்கு-விடுதலை-பிணை

தேவநாதனுக்கு-விடுதலை-பிணை

குற்றவாளிகள் தண்டிக்கப் படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால், அவர்களை சாக்காக / முன்னுதாரணமாக வைத்துக் கொண்டு, பெரிய குற்றவாளிகள் தப்பித்துக் கொள்வதுதான் இப்பொழுதைய “modus operandi” யாகத் தெரிகிறது!

  • நிச்சயமாக புவனேஸ்வரி விசயத்தில் தப்பித்துக் கொண்டது மற்றவர்கள்தாம், பலிகடா ஆக்கப்பட்டது புவனேஸ்வரியும், பத்திரிக்கையாளர்களும்.
  • வில் ஹியூமை காப்பாற்றத் துடிப்பதிலும் பெரியவர்கள் உள்ளார்கள், இங்கு பலிகடா ஆக்கப்பட்டது பல பெண்களும், ஆண்களும்!
  • ஆனால், தேவநாதன் விஷயத்தில் மறைக்கப்படுபர்கள் வீடியோ-மாஃபியாவும், சம்பந்தப்பட்ட பெண்களும்தான், அதாவது பலிகடா ஆக்கப்பட்டது தேவநாதன்!

பின்னப்பட்டுள்ளப் புதிர்களை மக்கள்தாம் விடிவிக்கவேண்டும். மக்கள் ரசிப்பது உண்மைகளா அல்லது காமலீலைகளா என்ற விஷயம் வேறு! அதில்தான் உண்மைகள் ஊமையாகின்றன.


[1] தட் ஈஸ் தமிள், அசிங்க அர்ச்சகர் தேவநாதனுக்கு நிபந்தனை ஜாமீன், வியாழக்கிழமை, பிப்ரவரி 18, 2010

http://thatstamil.oneindia.in/news/2010/02/18/conditional-bail-archakar-devanatha.html

[2] தினத்தந்தி, http://www.dailythanthi.com/article.asp?NewsID=548145&disdate=2/19/2010

[3] தினகரன், http://www.dinakaran.com/nagaramdetail.aspx?id=5948

[4] தட் ஈஸ் தமிள், அசிங்க அர்ச்சகர் தேவநாதனுக்கு நிபந்தனை ஜாமீன், வியாழக்கிழமை, பிப்ரவரி 18, 2010

http://thatstamil.oneindia.in/news/2010/02/18/conditional-bail-archakar-devanatha.html

[5] வேதபிரகாஷ், வில் ஹியூம், புவனேஸ்வரி, தேவநாதன்: தமிழ் ஊடகங்கள்!, https://socialterrorism.wordpress.com/2009/11/20/வில்-ஹியூம்-புவனேஸ்வரி-த /

[6] http://www.thehindu.com/2010/02/19/stories/2010021959450200.htm

[7] தட் ஈஸ் தமிள், தேவநாதன் வழக்கை விசாரித்து வந்த டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர் திடீர் மாற்றம், புதன்கிழமை, பிப்ரவரி 17, 2010

http://thatstamil.oneindia.in/news/2010/02/17/dsp-inspector-devanathan-case-shifted.html

[8]தினத்தந்தி,  http://www.dailythanthi.com/article.asp?NewsID=547691&disdate=2/17/2010

[9] நியூ இன்டியன் நியூஸ், ஆபாச ஐயர் தேவநாதன் வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரிகள் திடீர் மாற்றம் , வியாழக்கிழமை, 18 பெப்ரவரி 2010

http://www.newindianews.com/view.php?2beffmA4ddc23QQAK334aaCe0AAad0e0xXO4Yccd24mmlRH22eecK466dce03OmM0o44b4cYYDD700

[10] தினமலர், குறிப்பிடுவது 19-02-2010 அன்று பிணையில் விடுதலைச் செய்யப்படுவான் என்பதாகும், சென்னைப் பதிப்பு, ப.14